Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காலமாகி விட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இன்று வெரது இல்லத்தில் காலமாகி விட்டார். தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஒரு தூணாக, தேசியத் தலைவருக்கு பக்க பலமாக இருந்த பாலா அண்ணா அவர்களின் இறப்பு தமிழீழ மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  • Replies 93
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொடருகின்ற சோகங்களின் உச்சச் செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

கோரமான செய்தி இது விடுதலை போராட்டத்தின் ஒரு தூண் அவர்.

அன்னாரின் ஆத்த்மாசாந்திக்காக பிரார்திக்கின்றேன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் வெளிநாட்டில் பிறந்தும் எம் பிரச்சினைகளை புரிந்து கொண்ட அன்னாரின் மனைவிக்கும் ஆழந்த அனுதாபங்கள்

A highly intellectual man , whom cannot be replaced

Codolences to Mrs Bala

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அணுதாபங்கள்...தமிழினம் தமிழருக்காக நிறையவே செய்த உண்ணதமான ஆத்மா..

அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்

மலரும் ஈழத்தை தனது கண்ணால் பர்க்க கொடுத்து வக்கவில்லை.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிவர்த்தி செய்ய முடியாத ஓர் இழப்பு. பிரபாகரனின் 'வலது கை',

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!

உலகம் முழுவதும் எம்மைக் கைவிட்டு விட்ட இவ்வேளையில் அண்ணாவின் மறைவு சகித்துக்கொள்ள முடியாத ஒரு துக்கத்தை மனதில் விரவுகிறது.

மன உறுதியும் மதியுறுதியும் கொண்ட ஒரு தமிழ்ப்போராளிக்கு

அனைவரும் ஆர்ப்பாட்டமற்ற அமைதியான தியானமுறையிலான அஞ்சலிகளைச் செலுத்துவோம்.

கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்கு வீரவணக்கங்கள்.

நோயின் ஆழத்தின் காரணமாக ஒருவகையில் அவரின் இழப்பு எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் எல்லோரும் விளங்கிக் கொள்ளக் கூடிய காரணுங்களுக்காக அவ்வாறு சொல்லப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இவரின் இழப்பை வைத்து எதிரிகள் துரோகிகள் செய்யக் கூடிய பிரச்சாரத்தால் சோர்வடையாது போராட்டத்தை மூச்சுடன் தொடரவேண்டும். எல்லோரிற்குமே வயது அதிகரிக்க அதிகரிக்க இருதய நோய் உட்பட வேறுபல நோய்களிற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் 30 வருடங்களிற்கு மேலாக போராடும் தமிழரின் இந்த சந்ததியை பார்க்கும் பொழுது இயற்கைக் காரணங்களிற்காக எமது போராட்டத்தை ஒற்றுமையாக உறுதியாக காலம் தாழ்த்தாது வென்றெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வைக்கிறது.

தமிழீனம் ஓரு உண்ணத போராளியை புத்தி ஜீவியை இழந்துவிட்டது. பேச்சு மேசைகளில் எதிரிகளுக்கு ஓர் சிம்ம சொப்பனமாக இருந்தவர். இந்த சமயத்திலா இச் சோகம் தமிழருக்கு ஏற்பட வேண்டும். என் கண்ணீர் அஞ்சலிகள். ஈழத்தமிழனே உன் இழப்புகள் தொடர்கதையா?

ஆழ்ந்த துயருடன்

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஈழத்தமிழ் மக்களுக்கு..! எதிரியின் அகோரம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் சோகச் சூழலில்...மேலும் சோகங்கள்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலா அண்ணா என அன்பாக எல்லோராலும் அழைக்கப்படும் திரு.அன்ரன் பாலசிங்கம்

அவர்களுக்கு இதய அஞ்சலிகள். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன் !!!

ஈழத்தின் வரலாற்றில் ஆழப்பதிந்த அன்ரன் பாலாண்ணா அவர்களின் மறைவு ஈழத்தமிழினத்திற்கு மாபெரும் இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியுற அகத்தினில் பிரார்த்திக்கிறோம்.

மதியுரைஞரின் இல்லம்

லண்டன்

14.12.2006

ஊடக அறிக்கை

தனது சொல் வன்மையாலும், ராஜதந்திர மதியூகத்தாலும், அணையாத விடுதலை வேட்கையாலும், தமிழீழ மக்களையும், உலகத் தமிழர்களையும், ஆட்கொண்ட மதியுரைஞர், இன்று எம்மைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். எல்லோரது இதயத்திலும் இடியாக விழுந்துள்ள மதியுரைஞரின் பிரிவால் தமிழினம் துடித்து நிற்கின்றது.

சத்தியத்தை சாட்சியாக வரித்து, தணியாத விடுதலை வேட்கையுடன் வாழ்ந்து, வீறுகொண்ட விடுதலைப் போராட்டத்தை அடிநாதமாகக் கொண்டு, தமிழ் மக்களை ஆழமாக நேசித்து, தமிழீழத்தின் ராஜகுருவாக திகழ்ந்த மதியுரைஞரைப் பிரிந்து, தமிழினம் ஆற்றுப்படுத்த முடியாத துயரில் மூழ்கியுள்ளது. உயரிய சத்தியத்திற்காக வாழ்ந்து, விடுதலைக்கு விதையாகி வீழ்ந்த மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், என்றென்றும் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Edited by ஈழவன்85

நீங்களூம் எங்களை கை விடுகிறீர்களா?

போய் வாருங்கள்!

கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்கு வீரவணக்கங்கள்.

இடு செய்யப்பட முடியாத இழப்பு,.

"ஒன்றையே நினைத்திருந்து, ஒன்றுக்கே வாழ்ந்திருந்து உயிர் கொடுத்த உத்தமர்க்கு ஓர் ஆலயம்"

காற்றுள்ள வரையில், நிலம் உள்ளவரையில் உன் புகழ் தமிழர் நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும்.

சுதந்திர கீதம் இசைக்க தமிழர் மண்ணில் மீண்டும் வந்து பிறப்பாய்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரனண்ணாவின் இழப்புச் செய்தி எதிர்பார்க்கப் பட்டதாயினும் நிவர்த்தி செய்யமுடியாதது.

தலைமுறை தாண்டும் போராட்டத்தில் இயற்கைதரும் ஆரம்ப இழப்பு. இது நாங்கள் தாமதிக்கும் கணங்களை இயற்கை சுட்டிக் காட்ட ஆரம்பித்துவிட்டதையே உணர்த்துகிறது. தொடரவேண்டிய எங்கள் பயணத்தின் வேகமெடுப்பையும் அவசியத்தையும் சொல்கிறது.

அன்ரனண்ணாவின் இழப்புகளால் துயருற்ற அனைவருடனும் கலந்து நாங்களும் வணங்குகிறோம்.

ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலா அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கும் வேளையில் அவரின் குடும்பத்திற்கு எமது அனுதாபங்கள்.

தனது மரணத்தை எதிர்பார்த்திருந்த வேளையிலும் தமிழ் மக்களின்

வலியைவிட தனது நோயின் வலி சிறியதெனக்கூறிய பாலாண்ணாவும் ஒரு சிறந்த போராளியே.

தமிழர் மண் மீட்பு போராட்ட வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கு மேல் உழைத்த 'மாமனிதர் 'அன்ரன் பாலசிங்கத்தின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஆரம்ப காலங்களில் இவர் சோஷலிச அரசியல் பார்வையை கொண்டிருந்தாலும் புலிகளின் வளர்ச்சிக்காக மேற்குலகின் நலன்களுக்கு முரணாகாத வகையில் புலிகளின் அரசியலை முன்னெடுக்க புலிகளின் தலைமைக்கு உதவியவர்.

இவரது அரசியல் வரலாற்றில் இவரின் சாதனையாக நான் கருதுவது தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்ளக்கூடிய 'ஒஸ்லோ ஒப்பந்தம்' 2002 இல் உருவாக்க மிக கடினமாக உழைத்தது மட்டுமல்ல தனது இறுதிக்கால அரசியல் நம்பிக்கையில் மிக உறுதியாகவும் இருந்தார்.

அன்னாரின் மறைவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். அவரது துணைவியாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்க

கலாநிதி அன்ரன் பாலசிங்கம் ஐயாவிற்க்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலா அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.

தமிழீழ வரலாற்றின் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கின்ற இவ்வேளையில் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கின்றது. அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.