Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் கைதிகள் உருவாக அரசியல் தலைமைகளே காரணம் - பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவா்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகள் உருவாக அரசியல் தலைமைகளே காரணம் - பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவா்

09 ஜனவரி 2016

குளோபல் தமிழ் விசேட செய்தியாளா்

அரசியல் கைதிகள் உருவாக அரசியல் தலைமைகளே காரணம் - பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவா்

அரசியல் கைதிகள் உருவாக அரசியல் தலைமைகளே காரணம் - பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவா்
அரசியல் கைதிகள் உருவாக கடந்த கால அரசியல் தலைமைகளே காரணம். அரசியல் தலைமைகள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் அரசியல் கைதிகள் உருவாகி இருக்க மாட்டார்கள் என ஜனாதிபதியினால் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டு உள்ளவர் தெரிவித்து உள்ளார்.
 
ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் , அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரி புகையிரதம் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனான செந்தூரன் வீட்டிற்கு சென்று இன்றைய தினம் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
 
கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
 
குறித்த மாணவின் வீட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராக பதவிவகித்த போது 2006ஆம் ஆண்டு பொலன்னறுவையில் வைத்து அவரை கொலைசெய்ய முயன்றார் என குற்றம் சாட்டப்பட்ட நபரான  சிவராஜா ஜெனிகன் என்பவர் வெள்ளிக்கிழமை மாலை பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் இன்றைய தினம் சென்று மாணவனுக்கு அஞ்சலி செலுத்தினார்.
 
மாணவனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 
 
கடந்த ஆண்டு 8ம் திகதி நாட்டிற்கு மாற்றம் நடந்தது இந்த 8ம் திகதி என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது இந்த மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதிக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
 
இவ்வாறன மன்னிப்பை உலகில் எந்த தலைவரும் செய்ததாக எனக்கு தெரியாது போப் பாண்டவர் மாத்திரமே இவ்வாறு செய்தார் என கேள்விப்பட்டு இருக்கின்றேன் 
 
இந்த நாட்டிலே நான் பிறக்க முதல் இருந்தே, பிரச்சனை இருக்கின்றது.அதனாலையே நாங்கள்  அரசியல் கைதிகளாக இருக்கின்றோம். அதற்கு காரணம் அரசியல் தலைமைகள் தான்.
 
அவர்கள் அந்த நேரம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் நாம் இந்த நிலையில் இருந்து இருக்க மாட்டோம்.
 
அவர்கள் செய்த தவறே நாம் இவ்வாறு இருக்க காரணம் கடந்த 50 வருடத்தில் இன்றைய ஜனாதிபதி போன்ற ஜனாதிபதி நாட்டிற்கு கிடைத்து இருந்தால் இனங்களுக்கு  இடையில் முரண்பாடுகளும் அழிவுகளும் ஏற்பட்டு இருக்காது 
 
என்னை விடுவித்து போல ஏனையவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றேன். எல்லா மக்களாலும் நேசிக்க கூடிய தலைவராக இருக்கும் ஜனாதிபதி அவர்களது காலத்தில் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அவர் அரசியல் கைதிகளின்பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு கண்டு எல்லா இன மக்களுக்கும் தேச பிதாவாக இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127681/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சிவராஜா ஜெனிகன் அவர்களின் பிரார்த்தனை பலிக்கவேண்டும். இறைவனை நானும் பிரார்த்திக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் பெடியன் பிடிபட்டதாலை உயிர் தப்பீட்டான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாலி said:

நல்லகாலம் பெடியன் பிடிபட்டதாலை உயிர் தப்பீட்டான்!

2009 மே யில் முள்ளிவாய்க்காலில் பிடிபட்டிருந்தால் அல்லது சரணடைந்திருந்தால், ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த சிங்கள இராணுவத்தினர் என்ன செய்திருப்பார்கள் என்றும் உங்களுக்குத் தெரியும் வாலி.

  • கருத்துக்கள உறவுகள்

அதைத் தான் கிருபன் ஸார் நானும் சொன்னேன், முள்ளிவாய்க்காலில் பிடிபட்டிருந்தால் சிங்களம் மேலை அனுப்பியிருக்கும். கந்தகம் கட்டி வெடித்திருந்தாலும் மேலே போயிருப்பார். ஏதோ பெடியனோ அல்லது தாய் தகப்பன் செய்த புண்ணியமோ பெடியன் உயிரோட இண்டைக்கு இருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள சிறையில் 10 வருட காலம்...

நிச்சயமாக தான் வெடித்திருக்கலாம் என நொந்திருப்பார்

குணா கவியழகனின்  

விடமேறிய கனவு வாசித்திருந்தால் தெரியும்.

2 minutes ago, விசுகு said:

சிங்கள சிறையில் 10 வருட காலம்...

நிச்சயமாக தான் வெடித்திருக்கலாம் என நொந்திருப்பார்

குணா கவியழகனின்  

விடமேறிய கனவு வாசித்திருந்தால் தெரியும்.

கேவலம் உங்களுக்கு இப்படி எழுத வெட்கமாக இல்லை .

உயிர் வாழ நாட்டை விட்டு ஓடிவந்து விட்டு உயிர் வாழ்தலின் அர்த்தம் தெரியாத மாதிரி எழுத உங்களால் தான் முடியும் .

குணா கவியழகன் சாக ஆயிரம் வழி இருந்தும் தப்ப ஏன் அவ்வளவு முயற்சித்தார் 

08a27b29-93e7-455b-9d37-320909da435a

(1)4

இந்த படங்களை பாருங்கள் .தயவு செய்து அப்படி எல்லாம் எழுதுவதை நிப்பாட்டுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, arjun said:

கேவலம் உங்களுக்கு இப்படி எழுத வெட்கமாக இல்லை .

உயிர் வாழ நாட்டை விட்டு ஓடிவந்து விட்டு உயிர் வாழ்தலின் அர்த்தம் தெரியாத மாதிரி எழுத உங்களால் தான் முடியும் .

குணா கவியழகன் சாக ஆயிரம் வழி இருந்தும் தப்ப ஏன் அவ்வளவு முயற்சித்தார் 

அவர்கள் பட்ட வேதனையைத்தான் சொன்னேன்

புலிகள் கழுத்தில் சயனற் கட்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அவர்கள் பட்ட வேதனையைத்தான் சொன்னேன்

புலிகள் கழுத்தில் சயனற் கட்டியவர்கள்.

அப்ப ஏன் சயனட் கட்டியவர்கள் சரணடைந்தார்கள்?

(இங்கு சயனைட் கட்டியவர்கள் அதைக் கடித்திருக்கவேண்டும் என்பது எனது கருத்தல்ல. நீங்கள் தப்புவதற்காக எதனையும் மாற்றி மாற்றிப் பேசுவீர்கள் என்பதால் இதை எழுதினேன்)

 முடிந்தால் நேர்மையோடு பதிலெழுதுங்கள்! இல்லாவிடில் வழமைபோல..

என்ன சொல்கிறார்கள் என்பதை விட யார் சொல்கிறார்கள் என்பதே இங்கை பிரச்சினையாக இருக்கு போல...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாலி said:

அப்ப ஏன் சயனட் கட்டியவர்கள் சரணடைந்தார்கள்?

(இங்கு சயனைட் கட்டியவர்கள் அதைக் கடித்திருக்கவேண்டும் என்பது எனது கருத்தல்ல. நீங்கள் தப்புவதற்காக எதனையும் மாற்றி மாற்றிப் பேசுவீர்கள் என்பதால் இதை எழுதினேன்)

 முடிந்தால் நேர்மையோடு பதிலெழுதுங்கள்! இல்லாவிடில் வழமைபோல..

நான் பேசுவது 2009க்கு முன்னர்

நீங்கள் பேசுவது 2009க்கு பின்னர்?

சரணடைதல் முடிவு சில சர்வதேச உத்தரவாதங்களுடன் எடுக்கப்பட்டது

சரணடைந்தவர்களுக்கு நடந்தவை உலகறியும்

அவர்களும் நிச்சயம் சரணடைந்ததற்காக வருந்தித்தான் இறந்திருப்பார்கள்.

நான் எழுதியது 10 வருடத்தில் நிச்சயமாக இவர் வருந்தியிருப்பார்

சிறையிலிருந்து வந்த எல்லோரும் சொல்லும் விடயமிது.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

அப்ப 2009 இக்கு முதல் 2009 இக்கு பிறகு என்று இரு வேறுபட்ட காலங்கள் இருக்குது என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். ஆம் நான் பேசுவது 2009 இக்குப் பின்னர்தான். சரியாகச் சொன்னீர்கள். இதனடிப்படையில் சில வியயங்களைப் பேசலாம்,

எவரையுமே நம்பாத புலிகள் எவ்வாறு சர்வதேசத்தின் உத்தரவாதத்தை நம்பி சரணடைந்தார்கள்? சர்வதேசம் என்றால் யார்? அவர்கள் முகவரி என்ன? சர்வதேசம் வழங்கிய உத்தரவாதம் என்ன? யாருக்கு வழங்கப்படது? என்ற கேள்விகள் எழுந்து நிற்கின்றன. சரி அப்படிப் புலிகளுக்கு சர்வதேசம் உத்தரவாதம் வழங்கி ஏமாற்றி விட்டது என வைத்துக் கொண்டாலும், இப்ப எப்படி சர்வதேசத்தின் உதவியுடன் வரும் ஒரு தீர்வுத்திட்டத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம். ஏனெனில் சிங்களம் தீர்வு தராது இந்தியா தீர்வு தராது கூட்டமைப்பினால் தீர்வு வராது என்றால் எவ்வாறு கழுத்தறுத்த சர்வதேசத்தின் உதவியுடன் எவ்வாறு உதவி வரும்? இல்லாவிட்டால் எந்த வகையில் தீர்வு வரும் என்ற நம்பிக்கை உள்ளது? 

சரணடைந்தவர்கள் தொடர்பில் அவர்களும் வருந்தித்தான் இருப்பார்கள் என்று ஊகமாகச் சொல்லுகின்றீர்களே தவிர உறுதியாக சொல்லமுடியவில்லை. ஆனால் தமிழினி போன்றவர்கள் சொல்லும் கருத்துக்கள் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சிங்கள சிறையில் 10 வருட காலம்...

நிச்சயமாக தான் வெடித்திருக்கலாம் என நொந்திருப்பார்

குணா கவியழகனின்  

விடமேறிய கனவு வாசித்திருந்தால் தெரியும்.

இப்படி எழுதுவது தவறு அண்ணா,
நீங்கள் வேறு எதையோ ஒன்றை மனதில் வைத்து எழுதி இருக்கலாம். அதை விடுவோம்.
ஒருவர் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து எப்படி தப்பி இருந்தாலும் எல்லோருக்கும் சந்தோசமே.

Edited by Sasi_varnam

58 minutes ago, வாலி said:

அப்ப 2009 இக்கு முதல் 2009 இக்கு பிறகு என்று இரு வேறுபட்ட காலங்கள் இருக்குது என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். ஆம் நான் பேசுவது 2009 இக்குப் பின்னர்தான். சரியாகச் சொன்னீர்கள். இதனடிப்படையில் சில வியயங்களைப் பேசலாம்,

எவரையுமே நம்பாத புலிகள் எவ்வாறு சர்வதேசத்தின் உத்தரவாதத்தை நம்பி சரணடைந்தார்கள்? சர்வதேசம் என்றால் யார்? அவர்கள் முகவரி என்ன? சர்வதேசம் வழங்கிய உத்தரவாதம் என்ன? யாருக்கு வழங்கப்படது? என்ற கேள்விகள் எழுந்து நிற்கின்றன. சரி அப்படிப் புலிகளுக்கு சர்வதேசம் உத்தரவாதம் வழங்கி ஏமாற்றி விட்டது என வைத்துக் கொண்டாலும், இப்ப எப்படி சர்வதேசத்தின் உதவியுடன் வரும் ஒரு தீர்வுத்திட்டத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம். ஏனெனில் சிங்களம் தீர்வு தராது இந்தியா தீர்வு தராது கூட்டமைப்பினால் தீர்வு வராது என்றால் எவ்வாறு கழுத்தறுத்த சர்வதேசத்தின் உதவியுடன் எவ்வாறு உதவி வரும்? இல்லாவிட்டால் எந்த வகையில் தீர்வு வரும் என்ற நம்பிக்கை உள்ளது? 

சரணடைந்தவர்கள் தொடர்பில் அவர்களும் வருந்தித்தான் இருப்பார்கள் என்று ஊகமாகச் சொல்லுகின்றீர்களே தவிர உறுதியாக சொல்லமுடியவில்லை. ஆனால் தமிழினி போன்றவர்கள் சொல்லும் கருத்துக்கள் வேறு.

தமிழருக்கு உரிய நீதியான தீர்வு கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நீங்களும் நாங்களும் எமது சந்ததியும் தொழுதுண்டு வாழ எம்மை தயார் செய்ய பண்ணுவதே தற்போதய நிகழ்ச்சி நிரல். அது  மிவும் செம்மையாக நடக்கிறது. இதை 1956 ம் ஆண்டே இந்த தமிழரசு கட்சி கிழடுகள் செய்திருந்தால் எல்லாம் நல்லபடி நடந்திருக்கும். என்ன செய்ய மக்களை உணர்ச்சியூட்டி பதவி பெற அப்போது அது தேவைப்பட்டது. விடுங்க சார். விழுந்து கும்பிட உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். நம்ம பிள்ளைகளுகுகும் அதை பழக்கிவிட்டால் ஜாலியா இந்ந உலகில் வாழலாம். இதை சொல்ல சம்பந்தர் சுமந்திர்ர் போன்ற புறோக்கர்கள் தேவையா என்ன. அப்ப உணர்ச்சியூட்டி பதவிபெற்றவர்களுக்கு இப்ப அந்த உணர்சியை அடக்கி விழுந்து கும்பிட பண்ண பெற்ற தரகு பணத்திற்கு அவர்களும் வேலை செய்ய தானே வேண்டும். இன்று சனிக்கிழமை வாங்க நாங்க ஜாலியா டிஸ்கோவுக்கு போவம்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

வந்தது தான் வந்திட்டீங்க.. நாட்டை விட்டு வெளியேறிற வழியைப் பாருங்க. இல்லை நாளை பார ஊர்தி மோதி.. விடுவிக்கப்பட்ட.. அரசியல் கைதி பலி.. முன்னாள் போராளி பலி.. முன்னாள்..போராளி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு.. முன்னாள் போராளி வெட்டிக்கொலை.. முன்னாள் போராளி எரிந்து சாவு.. முன்னாள் போராளி கடத்தல்... இப்படி ஆகக் கூடாது என்று பிரார்த்திக்கிறோம்.

அமெரிக்க இராணுவ வரலாற்றில் வியட்நாம் கிளர்ச்சிக்காரர்களிடம் சரணடைந்து பின் விடுவிக்கப்பட்டு வந்தவர்கள் எல்லாம் மகத்தான கீரோக்களாக போற்றப்பட்டார்கள்.

அதேபோல் ஒரு அரசியல் கைதியின் விடுதலை என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

இவர் ஒரு சந்தேக நபர் மட்டுமே. போராளி என்ற செய்தியைச் சொல்வது சிங்களம். அந்த வகையில் ஒரு அரசியல் கைதியாக தன் விடுதலையை போற்றும் இவர்.. மற்றவர்களையும் அதே போல் நடத்தக் கோருவது பெருந்தன்மை.

அத்தோடு கடந்த கால அரசியல் தலைவர்கள் விட்ட தவறை சம் சும் கும்பலும் இன்றைய சிங்களத் தலைமைகளும் விடக்கூடாது என்று வினையமாகக் கோரி உள்ளார். ஆனால்.. இதை எல்லாம் யாரும் கவனத்தில் எடுக்க வாய்ப்பிருக்கா.. என்பது இன்னும் 51 கிழமைகளில் தெரியும். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎9‎/‎2016 at 9:05 PM, வாலி said:

அப்ப ஏன் சயனட் கட்டியவர்கள் சரணடைந்தார்கள்?

(இங்கு சயனைட் கட்டியவர்கள் அதைக் கடித்திருக்கவேண்டும் என்பது எனது கருத்தல்ல. நீங்கள் தப்புவதற்காக எதனையும் மாற்றி மாற்றிப் பேசுவீர்கள் என்பதால் இதை எழுதினேன்)

 முடிந்தால் நேர்மையோடு பதிலெழுதுங்கள்! இல்லாவிடில் வழமைபோல..

போராட்டம் ஒன்று நடக்கும்போது அதில் உள்ளவர் பிடிபட்டால் போராட்ட ரகசியங்கள் எதிரிக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே சயனைட் குப்பி போராளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. போராட்டம் முடிவுக்கு வந்து ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டபின் சரணடைவு என்பது இயல்பானதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.