Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்களின் படகுகளை உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களின் படகுகளை உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை

[ Tuesday,12 January 2016, 05:26:45 ] 
borat1.jpg

ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கி உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க மீன்பிடித்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று திங்கட்கிழமை காரைநகர் மற்றும் காங்கேசன் துறை பகுதிக்குச் சென்று இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை பார்வையிட்டார்.

இதன் பின்னர் மீனவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் அரசு உடமையாக்கப்படும் இந்திய மீனவர்களின் படகுகள் தேவையேற்படும் பட்சத்தில் உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்கப்படும்.

மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க எதிர்வரும் வாரங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இந்திய அரசாங்கத்துடன் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

இதேவேளை, அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோரும் காரைநகர் மற்றும் காங்கேசன் துறை ஆகிய பகுதிகளுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/16825

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

சூப்பர்!

ஈழத்தமிழரையும் தமிழ்நாட்டுத் தமிழரையும் பிரிப்பதற்குச் சூழ்ச்சி நடப்பது சூப்பராகத் தெரிகிறதா.... ?? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கறுப்பி said:

இந்திய மீனவர்களின் படகுகள் தேவையேற்படும் பட்சத்தில் உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்கப்படும்.

உள்நாட்டு சிங்கள மீனவர்களுக்கா தமிழ் மீனவர்களுக்கா என்று தெளிவாக சொல்லியிருந்தால் நாங்களும் சூப்பர் என்று சொல்லியிருப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்

படகுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுவதோடு.. சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு.. சிங்கள இராணுவம் மற்றும் கடற்படையின் ஆதிக்கம் இல்லாமல் செய்யப்பட்டு தாயக தமிழக மீனவர்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன்.. தாங்களே நேரடியாகப் பேசி மீன்பிடித்துறையை இயற்கை வள.. மீன் வளச் சேதமின்றி கொண்டு செல்ல வேண்டும். வடக்கு கிழக்கு மாகாண அரசுகள் மற்றும் தமிழக அரசு.. இதில் தலையீடு செய்ய வேண்டும். சிங்கள அரசு.. ஹிந்திய அரசு இதில் தலையீடு செய்வதை தடுக்க வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Paanch said:

ஈழத்தமிழரையும் தமிழ்நாட்டுத் தமிழரையும் பிரிப்பதற்குச் சூழ்ச்சி நடப்பது சூப்பராகத் தெரிகிறதா.... ?? 

சும்மா நாடகம் ஆடவேண்டாம். எமது இன்றைய மற்றும் எதிர்கால மீனவரின் வாழ்வாதரத்தில் கையைவைக்கும் இவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். ஒற்றுமியாக இருக்கவேண்டுமென நினைத்தால் இந்தியர்கள் எமது வளங்களைச் சுரண்டுவதை தாமே நிற்பாட்டவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

சூப்பர்!

தெருத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு   உடைப்பது   சூப்பர் தானே

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, வாத்தியார் said:

தெருத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு   உடைப்பது   சூப்பர் தானே

இற்கு தெருத்தேங்காய் வழிப்பிள்ளையார் கதையில்லை. அடுத்தவன் சொத்தினை அபகரிக்க்கும் மொள்ளமாரித்தனம். எங்களின் கடல் வளத்தை அடுத்தவன் சுரண்டுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாலி said:

சும்மா நாடகம் ஆடவேண்டாம். எமது இன்றைய மற்றும் எதிர்கால மீனவரின் வாழ்வாதரத்தில் கையைவைக்கும் இவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். ஒற்றுமியாக இருக்கவேண்டுமென நினைத்தால் இந்தியர்கள் எமது வளங்களைச் சுரண்டுவதை தாமே நிற்பாட்டவேண்டும். 

இந்த விடயத்தில் மட்டும் நான் வாலியின் பக்கம். எமது தாயக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்ட யாரையும் அனுமதிக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, வாலி said:

இற்கு தெருத்தேங்காய் வழிப்பிள்ளையார் கதையில்லை. அடுத்தவன் சொத்தினை அபகரிக்க்கும் மொள்ளமாரித்தனம். எங்களின் கடல் வளத்தை அடுத்தவன் சுரண்டுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. 

உந்த சிவப்பு வசனத்துக்கு எனக்கு தகுந்த விளக்கம் வேணும்.
எங்களின் எண்டதை ஆரை சொல்ல வாறியள்?
அடுத்தவன் எண்டதை ஆரை குறிப்பிடுறியள்? ஏனெண்டால் கருத்துகள் சொல்லுவள் மாறேக்கை உங்களையும் பயங்கரவாதியாய் மாத்திப்போடுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

உந்த சிவப்பு வசனத்துக்கு எனக்கு தகுந்த விளக்கம் வேணும்.
எங்களின் எண்டதை ஆரை சொல்ல வாறியள்?
அடுத்தவன் எண்டதை ஆரை குறிப்பிடுறியள்? ஏனெண்டால் கருத்துகள் சொல்லுவள் மாறேக்கை உங்களையும் பயங்கரவாதியாய் மாத்திப்போடுவாங்கள்.

கீழ்வரும் எனது முந்தைய பதிவில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் பொதிந்துள்ளன. இதுவும் விளங்காட்டி என்னால ஒண்டும் செய்ய முடியாது. <_<

10 hours ago, வாலி said:

சும்மா நாடகம் ஆடவேண்டாம். எமது இன்றைய மற்றும் எதிர்கால மீனவரின் வாழ்வாதரத்தில் கையைவைக்கும் இவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். ஒற்றுமியாக இருக்கவேண்டுமென நினைத்தால் இந்தியர்கள் எமது வளங்களைச் சுரண்டுவதை தாமே நிற்பாட்டவேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, வாலி said:

கீழ்வரும் எனது முந்தைய பதிவில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் பொதிந்துள்ளன. இதுவும் விளங்காட்டி என்னால ஒண்டும் செய்ய முடியாது. <_<

நன்றாக வாசித்துவிட்டுத்தான் எழுதினேன்.

தடிமல் காய்ச்சல் வந்தாலும் இந்தியாவுக்கு ஓடும் சம்பந்தன் ஐயாவாலை ஏன் இது சம்பந்தமாய் ஒண்டும் செய்யேலாமல் கிடக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

நன்றாக வாசித்துவிட்டுத்தான் எழுதினேன்.

தடிமல் காய்ச்சல் வந்தாலும் இந்தியாவுக்கு ஓடும் சம்பந்தன் ஐயாவாலை ஏன் இது சம்பந்தமாய் ஒண்டும் செய்யேலாமல் கிடக்கு?

அதைப்போய் சம்பந்தன் அய்யாவிடம் தான் நீங்கள் கேட்கவேணும்.

அடுத்தது அடாத்தாக எங்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன் வளத்தினைக் கொள்ளையடிக்கும் இந்தியனை அடிச்சு விரட்டவேண்டுமே தவிர அவனோட என்ன பேச்சு வேண்டியிருக்கு. இது வீட்டை உடைச்சுத் திருட வரும் திருடனோட பேச்சு நடத்தி மாசத்துக்கு 2 தரம் வந்து திருடிவிட்டுப் போங்கோ (மருவாதை) எண்டு சொல்லுற சமாச்சாரம் இல்லை.  இலங்கையின் கடல் எல்லைக்குள் இலங்கை நாட்டைச் சேர்ந்த எந்த்வொரு மீனவனும் மீன்பிடிக்கலாம். அல்லது இலங்கை அரசு அனுமதி கொடுக்கும் எவரும் மீன்பிடிக்கலாம்! 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, வாலி said:

சும்மா நாடகம் ஆடவேண்டாம். எமது இன்றைய மற்றும் எதிர்கால மீனவரின் வாழ்வாதரத்தில் கையைவைக்கும் இவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். ஒற்றுமியாக இருக்கவேண்டுமென நினைத்தால் இந்தியர்கள் எமது வளங்களைச் சுரண்டுவதை தாமே நிற்பாட்டவேண்டும். 

வாலி அவர்களே! தமிழகத்திற்குச் சொந்தமான தீவு ஒன்றைத் தமிழகத் தமிழரின் ஒப்புதல் இன்றியே இந்திய அரசு சிறீலங்காவுக்கு வழங்கியதுதான் நாடகம். இந்த நாடகம் அரங்கேறும்வரையில் தமிழகத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் மீன்பிடிப்பதில் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டதில்லை.

இலங்கையில் சிலாபம் தொடங்கி மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஈறாக பொத்துவில் வரையில் உள்ள கடல் தமிழர்களுக்குச் சொந்தமானது. இன்று அங்கெல்லாம் தமிழரா மீன்பிடிக்கிறார்கள். காலி, மாத்தறை, கம்பாந்தோட்டைக் கடலில் தமிழ்மீனவர்கள் சென்று மீன்பிடிக்க முடியுமா...? இதற்குள் அடுத்தவன் சொத்தினை அபகரிக்கும் மொள்ளமாரித்தனம் பற்றி வீராப்பு. 
 
இலங்கை ஒரு நாடு, இங்கு யாரும் எங்கும் வசிக்கலாம், மீன் பிடிக்கலாம். ஆனால் அது அரச ஆதரவுடன் நடப்பதைத்தான் நான் எதிர்க்கின்றேன். இப்போது யாழில் பண்டிகைக் காலங்களில் சிங்களவர்கள் பாதையோரம் கடை திறந்து புடவை வியாபாரம் செய்கிறார்கள், கட்டிட நிர்மாணத்திற்காக பல சிஙகளவர்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். அதே போன்று அவர்கள் தனிப்பட்ட முறையில் இஙகு மீன் பிடிப்பதில் எந்த தப்பும் இல்லை. ஆனால் இந்தியர்கள் பிடிப்பது என்பது - களவு+கொள்ளை.

இந்திய மீனவர்கள் இலங்கையின் மேற்குப்பகுதியில் மட்டுமில்லை வடக்கு கடலிலும் கைவரிசையைக் காட்டி இப்போது கிழக்கிற்கும் வந்துவிட்டார்கள். இறுதியாக கைது செய்ப்பட்டவர்கள் முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். விட்டால் இலங்கையே தங்கடை என்பார்கள். அடித்துத் துரத்த வேண்டும்.

பாஞ்ச். புலிகள் இருந்து, தமிழீழமும் கிடைத்திருந்தால் இவ்வாறு எமது வளங்களைக் கொள்ளை அடிப்பவர்களைக் கூப்பிட்டு கொஞ்சிக் கொண்டா இருந்திருப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

வாலி அவர்களே! தமிழகத்திற்குச் சொந்தமான தீவு ஒன்றைத் தமிழகத் தமிழரின் ஒப்புதல் இன்றியே இந்திய அரசு சிறீலங்காவுக்கு வழங்கியதுதான் நாடகம். இந்த நாடகம் அரங்கேறும்வரையில் தமிழகத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் மீன்பிடிப்பதில் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டதில்லை.

இலங்கையில் சிலாபம் தொடங்கி மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஈறாக பொத்துவில் வரையில் உள்ள கடல் தமிழர்களுக்குச் சொந்தமானது. இன்று அங்கெல்லாம் தமிழரா மீன்பிடிக்கிறார்கள். காலி, மாத்தறை, கம்பாந்தோட்டைக் கடலில் தமிழ்மீனவர்கள் சென்று மீன்பிடிக்க முடியுமா...? இதற்குள் அடுத்தவன் சொத்தினை அபகரிக்கும் மொள்ளமாரித்தனம் பற்றி வீராப்பு. 
 
இந்தியா கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது என்றால் தமிழக அரசு  இந்தியாவோடு போய் பேசவேண்டும்.  கச்ச தீவுப் பகுதி இலங்கையின் வட பகுதியில் இருக்கு ஆனால் இந்துக் கேவலம் கெட்டவர்கள் முல்லை, திருமலை போன்ற கிழக்குப் பகுதிக்கும் ஊடுருவ ஆரம்பித்துவிட்டார்கள்.

புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்பதால் புங்குடு தீவு வித்தியாவை கசக்கி கொன்ற கொலையாளிகளை தப்பவிட முடியாது. அதுபோலவே தமிழர்கள் என்பதால் இந்திய தமிழர் இலங்கைத் தமிழர் கடல்வளத்தினைக் கருவறுப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இது மொள்ளமாரித் தனமே!

  • கருத்துக்கள உறவுகள்

எமது வளம்.. எமது இன மக்களிடையே பகிரப்படுவதில் பிரச்சனையே இல்லை. அதில் சிங்களவனின் ஹிந்தியனின் தலையீடுகள் தான் பிரச்சனைக்கு முக்கிய காரணம். புலிகள் இருந்த காலத்திலும் கடல் வள திருட்டு இடம்பெற்றது. புலிகள் கண்ணியமாக நிலைமையை எடுத்து விளக்கியதோடு போட்டி குறைந்த இடங்களில் தமிழக மீனவர்களின்.. மீன்பிடி தொடர்பில் அமைதி காத்தும் வந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வாலி said:

அதைப்போய் சம்பந்தன் அய்யாவிடம் தான் நீங்கள் கேட்கவேணும்.

அடுத்தது அடாத்தாக எங்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன் வளத்தினைக் கொள்ளையடிக்கும் இந்தியனை அடிச்சு விரட்டவேண்டுமே தவிர அவனோட என்ன பேச்சு வேண்டியிருக்கு. இது வீட்டை உடைச்சுத் திருட வரும் திருடனோட பேச்சு நடத்தி மாசத்துக்கு 2 தரம் வந்து திருடிவிட்டுப் போங்கோ (மருவாதை) எண்டு சொல்லுற சமாச்சாரம் இல்லை.  இலங்கையின் கடல் எல்லைக்குள் இலங்கை நாட்டைச் சேர்ந்த எந்த்வொரு மீனவனும் மீன்பிடிக்கலாம். அல்லது இலங்கை அரசு அனுமதி கொடுக்கும் எவரும் மீன்பிடிக்கலாம்! 

இந்தக்கருத்தோடு உடன்படுகின்றேன்

தமிழரது பூமியிலிருந்து சிங்களம் விரட்டி அடிக்கப்படணும்

அவனோடு எதற்கு பேசணும்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

பாஞ்ச். புலிகள் இருந்து, தமிழீழமும் கிடைத்திருந்தால் இவ்வாறு எமது வளங்களைக் கொள்ளை அடிப்பவர்களைக் கூப்பிட்டு கொஞ்சிக் கொண்டா இருந்திருப்பார்கள்?

ஜீவன் சிவா அவர்களே! கீழே உள்ள நெடுக்காலபோவன் அவர்களின் பின்னூட்டம், தங்களின் கேள்விக்கான பதிலைத் தந்துள்ளதாக எண்ணுகிறேன்.

44 minutes ago, nedukkalapoovan said:

எமது வளம்.. எமது இன மக்களிடையே பகிரப்படுவதில் பிரச்சனையே இல்லை. அதில் சிங்களவனின் ஹிந்தியனின் தலையீடுகள் தான் பிரச்சனைக்கு முக்கிய காரணம். புலிகள் இருந்த காலத்திலும் கடல் வள திருட்டு இடம்பெற்றது. புலிகள் கண்ணியமாக நிலைமையை எடுத்து விளக்கியதோடு போட்டி குறைந்த இடங்களில் தமிழக மீனவர்களின்.. மீன்பிடி தொடர்பில் அமைதி காத்தும் வந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இந்தக்கருத்தோடு உடன்படுகின்றேன்

தமிழரது பூமியிலிருந்து சிங்களம் விரட்டி அடிக்கப்படணும்

அவனோடு எதற்கு பேசணும்...

தமிழர் தாயகப்பகுதியில் இருந்து சிங்களம் மட்டுமல்ல தற்போது அடாத்தாக ஆக்கிரமிக்கும் இஸ்லாமிய புதிய குடியேறிகளும் விரட்டப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

சிங்களத்துடன் ஏன் பேசவேண்டும் என்றால் ஆங்கிலேயன் வெளியேறியபோது பெற்றிருக்க வேண்டிய உரிமைகளை அன்றைய கொழும்பின் மேற்குடி வெள்ளாளர் பெருமக்கள் சிங்களத்திடம் அடகு வைத்ததினால் தான். முகம்மது அலி ஜின்னாவினைப் போன்று அன்று சிந்தித்து இருந்தால் இன்று பேசப் போயிருக்கத் தேவையில்லை. 

இதுக்கும் தமிழகத்தைச் நேர்ந்த இந்திய மீனவர்களின் கடல் வளக் கொள்ளைக்கும் தொடர்பேதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

சரியான கருத்து

நன்றி

இந்தியா வேறு நாடு இலங்கை எமது நாடு .

சிங்களவன் ,முஸ்லிம் ஏன் தமிழன் கூட பலாத்தகாரமாக எதுவும் செய்தால் அது பிழை .ஆனால் இலங்கை என்ற நாட்டில் அந்த நாட்டின் பிரஜைகள் எங்கும் எதுவும் செய்யலாம் .

தமிழரது பூமியிலிருந்து சிங்களம் விரட்டி அடிக்கப்படணும்

அவனோடு எதற்கு பேசணும்...

இதைத்தான் சொல்வது படம் காட்டல் என்று .

அதை எப்படி செய்ய போகின்றிர்கள் என்று எங்களுக்கும் சொன்னால் உதவியாக இருக்கும் .

மொத்தத்தில் தமிழர்களை தமிழருடன் மோத வைக்கும் ஹிந்தியனின் செயலுக்கு ...விளக்கம் இல்லாமல் இங்க கருத்துகள் வைப்பவர்களை பார்த்தால் ....தமிழனுக்கு இப்போதைக்கு விமோசனம் இல்லைதான் ...

அறிவாளிகள் .....

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, arjun said:

இந்தியா வேறு நாடு இலங்கை எமது நாடு .

சிங்களவன் ,முஸ்லிம் ஏன் தமிழன் கூட பலாத்தகாரமாக எதுவும் செய்தால் அது பிழை .ஆனால் இலங்கை என்ற நாட்டில் அந்த நாட்டின் பிரஜைகள் எங்கும் எதுவும் செய்யலாம் .

சிங்களவனைப்போல தமிழன் எல்லாம் செய்ய முடியாமல் போனதால்தானே போராட்டமே உருவானது. மூன்று இனத்தவரும் எங்கும் எதுவும் செய்யலாமென்றால் நாட்டில் பிரச்சனையே இல்லையே.

3 minutes ago, Eppothum Thamizhan said:

சிங்களவனைப்போல தமிழன் எல்லாம் செய்ய முடியாமல் போனதால்தானே போராட்டமே உருவானது. மூன்று இனத்தவரும் எங்கும் எதுவும் செய்யலாமென்றால் நாட்டில் பிரச்சனையே இல்லையே.

இனி அதை உருவாக்குவதற்கு ஆனா வழிகளை தேடுவதை விட்டு அடித்து துரத்துவம் என்ற பொய்யில் உழன்று கொண்டிருக்க  முடியாது .

அதுவும் வெளிநாடுகளில் இருந்துகொண்டு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.