Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை! முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, trinco said:

எழுத்துகள் பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி வாலி. தானியங்கி சொல் திருத்தி செயலி அடிக்கடி கோளாறு பண்ணுகிறது. 

பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி வாலி.<_<

  • Replies 60
  • Views 3.3k
  • Created
  • Last Reply

விக்கியார் பேசியது ரணிலுக்கோ சந்திரிக்காவுக்கோ அல்லது வெளிநாட்டு பிரதிநிதிக்கோ அல்ல. தமிழருக்கு மட்டும்தான். அதுதான் வலு கவனமாக தமிழில் எழுதியதை வாசித்துள்ளார். தனக்கும் கூட்டணிக்கும் உள்ள பிரச்சனையில் தான் தமிழர்கள் சார்பில் பேச அதிக தகுதியுடையவன் என நிருபிக்க இந்த மேடையை பயன்படுத்துகிறார். உண்மையில் வந்த விருந்தினர்களுக்கு சொல்வதாக இருந்தால் ஆங்கிலத்தில் அவர்களுக்கு முழமையாக புரியும்படி பேசியிருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் பரப்புரை, விவரணம் போன்ற விடயங்களுக்காக நடிகர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஒளிக் காட்சிகளை கூட தரம் பிரித்து அறியகூட அறிவில்லாதவர்கள் இங்கே கொண்டு வந்து ஓட்டுகிறார்கள்.
இவர்களின் சுத்த பேடித்தனம் என்னவென்றால்
மாவீரர் தினத்தில் புலிகளுக்கு ஒரு வீரவணக்கம், மிச்ச நாட்கள் எல்லாம் சிங்கள துதி பாடல், புலிகள் வசைப்பாடல்.

************  தெரியாத பல கோடி மக்களின் அழிவில் ஓர் ஆனந்தம்.
(எல்லை மீறும் தமிழக மீனவர்கள் முதுகில் குறி வைக்க வேண்டும் என்ற வெறி பிடித்த கூட்டம்)
தமிழ் பெண்களின் மேல் ஒரு இளக்காரப் பார்வை...
இவர்களின் கருத்துக்களை யாரும் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.

ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் அழிந்த போது ஏதாவது ஒரு ஒளிப்பேழையை இணைத்திருப்பார்களா?   
மாறாக அதன் உண்மை பொய் பற்றி அலசி ஆராய்ந்து இருப்பார்கள் இந்த நிலை கெட்ட மானிடர்...

 

Edited by நியானி
மறைமுகமாக சீண்டும் கருத்து நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்கள் சொல்லப்பட்ட செய்தியினை அறியமாட்டார்கள். இணைக்கப்பட்ட காணொளி விவரணம் எனினும் 1985  வெசக் நாளில் அப்பபாவி சிங்கள மக்கள் 146 புலிகளின் பயங்கரவாதத்துக்கு பலியாகினர். இதற்கு புலிகளின் தலைவரின் சிங்கள மக்கள் மீது எந்த எதிர்ப்போ அல்லது கோபமோ இல்லாததுதான் காரணம். அரச பயங்கரவாதத்துக்கு நிகரான பயங்கரவாதம் செய்த புலிப் பயங்கரவாதத்தை மறைப்பவர்கள்தான் பேடிகள்!<_<

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் சாதாரண சிங்கள பொதுமக்களுக்கும்.. பேரினவாத நோக்கங்கள் எண்ணங்கள் கொண்ட பெரும்பான்மை பெளத்த பிக்குகளுக்கும்.. தமிழர் நிலத்தை அபகரிக்க.. தமிழர் எல்லைகளுக்கு ஊடுருவி வாழும்.. எல்லையோர சிங்கள ஊர்காவல் படை குடியேற்றக்காரர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கினம். இலங்கையில் இனப்பிரச்சனைக்கு பிரதான காரணமே...

சிங்கள பெளத்தம் என்பதை ஒட்டுமொத்த இலங்கையிலும் நிலைநிறுத்த முனையும் பெரும்பான்மை தேரர்களும்.. சிங்கள பேரினவாதக் கட்சிகளும்.. அதற்கு முண்டுகொடுக்கும் சிங்கள கூலிகளும்... தமிழ் கூலிகளும்.. முஸ்லிம் கூலிகளும்... அதில் சொந்த ஆதாயம் தேடும் வெளிநாட்டு சக்திகளும். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரம் புனிதநகரம் முழுச் சிங்களப் பகுதி என்பது சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை! 

On ‎16‎/‎01‎/‎2016 at 10:24 PM, Surveyor said:

சில பேருக்கு எல்லாத்துக்கும் எதிர் கருது எழுதுவது வேலையாய்போச்சு 

உங்களிடம் கருத்துக்கள் இருந்தால் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாரபுரம்.. சிங்களப் பகுதியாக்கப்பட்ட ஒன்று. எல்லாள மன்னன் கோட்டை கொத்தளங்களோடு ஆண்ட இடமும் அது. அப்போ எல்லாளன் என்ன சிங்களவர்களையா ஆண்டான்..??!

மேலும் அனுராதபுரத்தை மையப்படுத்தி தான் 1980 களின் ஆரம்பத்தில் பல பஸ் படுகொலைகளை சிங்கள அரசியல்வாதிகளும் புத்தபிக்குகளும் தூண்டிவிட்டனர். எத்தனையோ தமிழ் பொதுமக்கள் அனுதாரபுரம் பகுதியில் குறிப்பாக கொரவப்பத்தானை..ஹபரணை.. பகுதியில் வைத்து சிங்களக் காடைகளால்..படுகொலை செய்யப்பட்டார்கள். பஸ்கள் மீது கல்லெறிதல்.. துப்பாக்கிச்சூடு.. மற்றும் திட்டமிட்ட படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.

இவற்றை பலர் வசதியாக மறந்துவிட்டு.. இவற்றின் பின்னணியில் பிறந்த காரணிகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட பழிவாங்கல் தாக்குதல் ஒன்றை அடிப்படையாக வைச்சு இப்ப மொத்த வரலாற்றையும் சிங்கள விசுவாச வரலாறாக்க முயற்சிக்கிறார்கள். இதுதான் தமிழன் காலம்காலமாக தன் சொந்த இனத்தை பலிகொடுக்க முக்கிய காரணம். சொந்த வரலாற்றை அவனே திரித்துக் கொள்வதும் பதிவின்றி விட்டு விடுவதும். இறுதியில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் தானே தன்னை பயங்கரவாதி என்று எதிரியோடு சேர்ந்து அழைத்துக் கொள்வதும்.. அடிமைப்பட்டு மகிழ்ந்திருப்பதும். இதுவே தமிழன் பிழைப்பா போச்சு. tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2016 at 10:31 PM, arjun said:

தமது வாழ்வையே அரசியலுக்கு கொடுத்தவர்கள் பலர் கூட்டமைப்பில் இருக்கினம் 

இவ்வளவு காலமும் அரச உயர் பதவியில் இருந்து விட்டு வந்து ஒரு  கோலை அடித்து பார்ப்பம் என்று நினைக்கின்றார்.

பேய்காட்டும் தமிழர்களை மக்கள் அடையாளம் கண்டு கனகாலம் ஆகிவிட்டது என்று விக்கியருக்கு விளங்கவில்லை இப்பவும் விளங்காமல்  இருக்கும்  நாலு விசில் அடித்தால் காணும் என்று நினைக்கின்றாரோ தெரியவில்லை .

ஆம் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வை அரசியலுக்கு கொடுத்தது தமது வாழ்வாதாரத்துக்காக. மற்றவர்களை உசுப்பிவிட்டே அதில் குளிர் காய்ந்தவர்கள் இவர்கள். மக்களுக்காக வாழ்வை அர்ப்பணிக்கவேண்டும். அவனே உண்மையான அரசியல்வாதி.

மிக ஆச்சரியமாக இருக்கிறது.  இவ்வளவு  விவாதங்கள் செய்பவர்களுக்கு எல்லாளன் முழு இலங்கையும் 40 வருடங்கள் ஆண்ட வரலாறு தெரியாமல் இருப்பது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, hasan said:

மிக ஆச்சரியமாக இருக்கிறது.  இவ்வளவு  விவாதங்கள் செய்பவர்களுக்கு எல்லாளன் முழு இலங்கையும் 40 வருடங்கள் ஆண்ட வரலாறு தெரியாமல் இருப்பது. 

தலைநகராக அனுராதபுரத்தைக் கொண்டிருந்தான் என்பதும் வரலாறு. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

தலைநகராக அனுராதபுரத்தைக் கொண்டிருந்தான் என்பதும் வரலாறு. tw_blush:

அதுக்கெல்லாம் கொஞ்சம் வாசிப்புத்தன்மை வேணும் நண்பரே...
கூலிக்கு மாரடிக்கும் போது பல உண்மைகள் தெரிவதில்லை.
தவிர இவை சுய புத்தியால் எழுதப்படும் கருத்துக்களா என்ன ?

இன்றைய அறிந்த வரலாற்றின்படி அனுராதபுரமே முதல் அமைக்கப்பட்ட சிங்கள இராசதானி. இதை இதுவரை எந்த வரலாராசிரியரும் கேள்விகுட்படுத்தவில்லை. எல்லாளன் தெனிந்தியாவில் இருந்து படை எடுத்து வந்து சிங்கள அரசனை துரத்தி விட்டு 44 வருடங்கள் முழு இலங்கையையும் ஆட்சி செய்தான். எல்லாளன் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசன். அவன் பௌத்தத்துக்கும் சிங்கள மக்களுக்கும் பெரும் சேவை செய்ததாக கருதப்படுபவன். விஜயன் குடிஏறியதும் சிங்கள இனத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அனுராதபுரத்தை மையமாக கொண்டதே. சிங்கள இனத்துக்கு நாம் எதிரி இல்லை என்று சொல்லிக்கொண்டு அவர்களுடைய பாரம்பரிய புராதன நகருக்கே உரிமை கோருவது  நல்லதல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சிங்கள மகாவம்சம்.. இஸ்தியாதி இஸ்தியாதி கற்பனை பதிவுகளின் பிரகாரம்.. அனுராதபுரம் சிங்களவர்களினாக்கப்பட்டிருக்கிறதே தவிர... தேவநம்பியதீசன் கூட சிவ பக்தனாக இருந்துள்ள சான்றுகளும் உள்ளன. இவரது தந்தை மூத்தசிவன்.. என்று அழைக்கப்பட்டார். இதனையும் சொல்லுவது இதே மகாவம்சம் தானே..!

பண்டுகாபயன் தான் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.

விஜயன் வங்காளி. அவனுக்கும் சிங்களத்துக்கும்.. பெளத்ததிற்கும் அனுராதபுரத்திற்கும் என்ன தொடர்பு..?!

அவன் மன்னாரை அண்டி வந்திறங்கி அங்கு தான் தமிழ் பெண்ணை மணந்து குடியேறி வாழ்ந்ததாகச் சொல்லப்படுவதும்.. இதே மகாவம்சத்தில் தான்.

பெளத்தம் தேவநம்பிய தீசன் காலத்தில் வந்தது. பெளத்தம் அப்போது தமிழர்களிடம் தமிழகத்திலும் செல்வாக்குக் கொண்டிருந்தது.

அனுதாரபுரம் புனித நகராக்கப்பட்டது.. வெள்ளரசுக் கிளை வரவோடு. அது நடக்க முதலே... அனுராதபுரம் பல மன்னர்களால் ஆளப்பட்டு விட்டிருந்தது.

பண்டுகாபயன் உண்மையில் சிங்களவன் அல்ல. அப்படி மகாவம்சத்தில் சொல்லப்பட்டுள்ளதே தவிர.. அவன் தமிழ் - சைவ மன்னனாக இருந்ததற்கான அடையாளங்களையே வரலாற்று ஆய்வுகள் விட்டுச் செல்கின்றன.

பண்டுகாபயன் (கி.மு. 437-367) இலங்கையின் முதலாவதாகக் கருதப்படும் அரச மரபின் நான்காவது அரசனாவான். இவன் இம்மரபின் இரண்டாவது அரசனான பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனும், மூன்றாவது அரசனான அபய மற்றும் அவனைப் பதவியிலிருந்து இறக்கிய பின் பகர ஆளுனராக இருந்த திஸ்ஸ ஆகியோரின் மருமகனும் ஆவான்.

"பண்டு காபய" என்று மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இம்மன்னன் சிங்கள மன்னனாக மகாவம்சத்தில் சொல்லப்பட்டாலும், இவனது பெயர் "பண்டு கபாயன்" (பண்டு என்றால் "பழைய" ,கபாயன் என்றால் "சிவன்") என்றும் இது இந்துக்களின் பழ‌ம்பெரும் தெய்வ‌மான "முந்துசிவ‌ன்" என்ற‌ பெய‌ரை ஒத்து உள்ளது என்றும், இத‌ன்மூல‌ம் இவ‌ன் ஒரு த‌மிழ் ம‌ன்னன் என்றும் வாதிடப்படுகிறது. இதே வாதம் இவனது பாட்டனான பண்டுவாசுதேவன் என்பவனுக்கும் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.[3]

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D

 

(சிங்களவன் சொல்வதை எல்லாம் எழுதி வைத்திருப்பதை எல்லாம்.. மறுகேள்விக்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளச் செய்து தான் தமிழர்களின் ஒரு பகுதியினர் தமிழர்களை இலங்கையில் வரலாறு அற்றவர்கள் ஆக்கி விட்டிருக்கிறார்கள். இந்த நவீன உலகிலும் சிங்களவனின் சிங்கக்கதை எடுபடுகுது.. தமிழனின் உண்மை வரலாறு மறுக்கப்படுகிறது. அதற்கு தமிழனே சிங்களவனை விட அதிகம் சிங்களவனுக்கு கதை வசனம்.. இயக்கம்.. படம் எல்லாம் எழுதி ஆக்கிக் கொடுக்கிறார்கள்.) tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டு கபாயன் ......சிங்கள சைவனாக இருந்திருக்கலாம்....

பண்டுகாபாயன் தமிழனாகவே இருக்கலாம். அதன் கருத்து அவன் ஆண்ட பகுதியில் தமிழர்கள்தான் இருந்தார்கள் என்பதல்ல. அப்படிப் பார்த்தால் எல்லாளன் ஆண்டபோது முழு இலங்கையிலும் தமிழர்கள்தான் இருந்தார்கள் என்று வாதிடலாம். போத்துகேசருக்கு முந்தைய இலங்கையை நீண்ட காலம் ஆண்டது தமிழர்கள்தான். ஆனால் அவர்கள் தெனிந்தியாவில் இருந்து வந்த சோழர்களும் பாண்டியர்களுமே. படை எடுத்து வந்தார்கள் அல்லது பெண் எடுத்து வந்தார்கள். சிங்களவர்களுக்கு என்று தனித்துவமான கலை கலாசாரம் கட்டடக்கலை உண்டு. அதன் எச்சங்களை இன்றும் அனுராதபுரதத்தில் காணலாம். தமிழ் மன்னர்களும் அதை போற்றி பாதுகாத்தனர். அவற்றை கிராமம் கிராமமாக சென்று தேடி உலகுக்கு காட்டியதும் ஓரு தமிழன்தான். சிங்கள் புத்திஜீவிகளால் இலங்கை பெற்றெடுத்த தலை சிறந்த மனிதன் என போற்றப்படும் ஆனந்த குமாரசாமியே அது. 

Mediaeval Sinhalese Art by Ananda Coomarasamy

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2016 at 7:36 PM, வாலி said:

உண்மைதான் . அப்ப தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தினது புத்தபெருமான் மீதும் பிக்குமார் மீதும் இருந்த எதிர்ப்பினாலும் கோபத்தினாலுமாகும்! மத வழிபாட்டுத் தளங்களுக்கு ஒருபோதும் மக்கள் வருவதில்லை. 

கீழ்வரும் இணைப்பில் 1985 இல் அப்பாவி சிங்கள மக்கள் மீது கோபம் இல்லாமல் அன்புடன் நடாத்திய அன்புடன் கூடிய தாக்குதல்.

 

சிங்களத் தலைமைகள் தமிழ் மக்கள் மீது எதிர்ப்புடனும் கோபத்துடனுமே எப்போதும் நடந்துகொண்டன.  அதனால்தான் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களை தெரிந்தும் திட்டமிட்டும் தாக்கியது. 

(நிச்சயமாக இந்த உண்மை நிர்வாகத்தால் நீக்கப்படும். ஆனால் உண்மைகளை என்றும் மூடிமறைக்க முடியாது எனபது அவர்களுக்குப் புரியாது)

சிங்களத்தலைமைகளால் தமிழ் மக்கள் எறிகணைகளாலும் குண்டுவீசியும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படும்போது அதன் வலி எப்படியிருக்கும் என்று அவர்களுக்கு உணர்த்த இதைவிட வேறுவழி தலைவருக்கு இருந்திருக்காது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தையும் காட்ட அவர் ஒன்றும் ஏசுபிரான் இல்லையே!

8 hours ago, வாலி said:

முட்டாள்கள் சொல்லப்பட்ட செய்தியினை அறியமாட்டார்கள். இணைக்கப்பட்ட காணொளி விவரணம் எனினும் 1985  வெசக் நாளில் அப்பபாவி சிங்கள மக்கள் 146 புலிகளின் பயங்கரவாதத்துக்கு பலியாகினர். இதற்கு புலிகளின் தலைவரின் சிங்கள மக்கள் மீது எந்த எதிர்ப்போ அல்லது கோபமோ இல்லாததுதான் காரணம். அரச பயங்கரவாதத்துக்கு நிகரான பயங்கரவாதம் செய்த புலிப் பயங்கரவாதத்தை மறைப்பவர்கள்தான் பேடிகள்!<_<

நாங்கள் மறுக்கவோ மறைக்கவோ இல்லையே.  சில நேரங்களில் எதிரிக்கு அவர்கள் பாணியில் அடித்தால்தான் அதன் வலி புரிகிறது. அதற்காக பொதுமக்களை கொள்வதை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் சில் வேளைகளில் அது தவிர்க்க முடியாததாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, hasan said:

பண்டுகாபாயன் தமிழனாகவே இருக்கலாம். அதன் கருத்து அவன் ஆண்ட பகுதியில் தமிழர்கள்தான் இருந்தார்கள் என்பதல்ல. அப்படிப் பார்த்தால் எல்லாளன் ஆண்டபோது முழு இலங்கையிலும் தமிழர்கள்தான் இருந்தார்கள் என்று வாதிடலாம். போத்துகேசருக்கு முந்தைய இலங்கையை நீண்ட காலம் ஆண்டது தமிழர்கள்தான். ஆனால் அவர்கள் தெனிந்தியாவில் இருந்து வந்த சோழர்களும் பாண்டியர்களுமே. படை எடுத்து வந்தார்கள் அல்லது பெண் எடுத்து வந்தார்கள். சிங்களவர்களுக்கு என்று தனித்துவமான கலை கலாசாரம் கட்டடக்கலை உண்டு. அதன் எச்சங்களை இன்றும் அனுராதபுரதத்தில் காணலாம். தமிழ் மன்னர்களும் அதை போற்றி பாதுகாத்தனர். அவற்றை கிராமம் கிராமமாக சென்று தேடி உலகுக்கு காட்டியதும் ஓரு தமிழன்தான். சிங்கள் புத்திஜீவிகளால் இலங்கை பெற்றெடுத்த தலை சிறந்த மனிதன் என போற்றப்படும் ஆனந்த குமாரசாமியே அது. 

Mediaeval Sinhalese Art by Ananda Coomarasamy

தமிழ் மன்னர்கள் தலைநகர்களை அவற்றின் இயற்கை.. விவசாயம்.. நீர்வளம் கருதி தெரிவு செய்தார்களே தவிர.. சிங்களவர்கள் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று தெரிவு செய்யவில்லை. மேலும் சிங்கள மொழி என்பது தேவநம்பியதீசன் காலத்தில் கூட செழிப்புற்றிருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. மேலும் தேவநம்பிய தீசன் கூட சைவ ஆலயங்களை அமைத்ததாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. தேவநம்பிய தீசனிற்கு முந்தைய காலத்தில் எல்லா தலைநகர்களிலும் சைவ ஆலயங்கள் பெருமளவில் அமைக்கபட்டுள்ளன. பொலனறுவை ராச்சியத்திலும் அதன் பாங்கை காணலாம்.

ஆக.. சிங்கள.. பெளத்தம் அனுராதபுரத்தை மையமாகக் கொண்டு எழுந்தது என்பதும்..அது சுத்த சிங்கள பெளத்த பிரதேசம் என்பதும் சுத்த பித்தலாட்டம். அங்கு வாழ்ந்த மக்களிடம் சைவ ஒழுக்கம் இருந்துள்ளது. தமிழ் நாகரிகம் இருந்துள்ளது. சந்திர வட்டக்கல் போன்றவற்றில் சைவ விலங்கினங்கள் வகைப்படுகின்றன. காவற்தெய்வங்கள் என்பன.. தமிழ் சைவ ஆலயங்களின் பண்பை பிரதிபலிக்கின்றன. இப்படி எத்தனையோ சான்றுகள் உள்ளன.

ஆனந்தக்குமாரசாமி.. சிங்களவர்களால் போற்றப்பட்டார் என்பதற்கு அப்பால் அவர் தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்க என்ன பண்ணினார் என்று கேட்டால் விடை.. பூசியம். இந்த வெட்டி பந்தா தான் தமிழனை இந்த நிலைக்கு இன்று கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

தமிழன் எனியாவது தன் வரலாற்றை சான்றுகளோடு நிறுவனும்.. தனக்கான உரிமையை தக்க வைக்கனும். அதற்குப் பிறகுதான் பிறரின் புகழ்பாடலுக்கு மயங்கனும். அதைவிட்டு.. பிறரின் புகழ்பாடலுக்கு மயங்கினால்.. அடிமை வாழ்வு தான் மிச்சமாகும்.

இப்ப கூட இனப்படுகொலையாளி.. போர்க்குற்றவாளி மகிந்தவை தேசிய தலைவர் என்பது சிங்களவன் அல்ல.. தமிழ் சம்பந்தன். இதனால்.. தமிழனுக்கு என்ன நன்மை. எதுவும் இல்லை. சம்பந்தனுக்கு புகழும் பதவியும் காக்கப்படும். அவ்வளவும் தான். மகிந்தவோ தமிழர்களுக்கு அதிகாரம் கொடுக்கவே கூடாது என்று தேசிய தலைவர் பிரகடனத்தின் பின் கூட வலியுறுத்தி உள்ளார். சம்பந்தனுக்கு செருப்பால் அடிச்ச கணக்கா. ஆனால்.. சம்பந்தனும்.. ஒரு புகழ் விரும்பி என்பதால்... சொரணை இருக்காது.tw_blush:

இதற்குள் எல்லாளன் முழு இலங்கையை ஆண்டான் என்று என்னத்தை சொல்ல வருகின்றீர்கள் ,

பிரிட்டிஸ்காரன் முழு இலங்கையை ஆண்டான் அப்ப வெள்ளையனின் நாடா இலங்கை .

புலிகள் செய்த தவறுகளில் அனுராதபுர தாக்குதலும் ஒன்று என்று சொன்னால் விடயம் முற்று பெற்றுவிடும் அதைவிடுத்து 

கோத்தா இறுதி யுத்தத்தில் ஒரு அப்பாவி தமிழ் மக்களும் இறக்கவில்லை என்பது போல எம்மவரிலும் பல கோத்தாக்கள் இருக்கினம் .

இலங்கை இன்று இப்படி இருப்பதற்கு இவர்கள் போன்றவர்கள் தான் காரணம் .

தனி வாழ்விலும் சரி பொது வாழ்விலும் சரி விடும் பிழைகளை ஒப்புகொண்டால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும் அதை நியாயப்படுத்த வெளிக்கிடும் போதுதான் பிரச்சனை பெரிதாகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, arjun said:

தனி வாழ்விலும் சரி பொது வாழ்விலும் சரி விடும் பிழைகளை ஒப்புகொண்டால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும் அதை நியாயப்படுத்த வெளிக்கிடும் போதுதான் பிரச்சனை பெரிதாகின்றது .

இதைத்தானே நாங்களும் இவ்வளவுநாளும் தலையில அடிச்சுஅடிச்சு சொல்லிறம். உங்களுக்குத்தான் விளங்குதில்லையே.

ஒருவேளை வாசிக்கும்போது விளங்குது எழுதும்போதுதான் விளங்கவில்லையோ! 

10 minutes ago, Eppothum Thamizhan said:

இதைத்தானே நாங்களும் இவ்வளவுநாளும் தலையில அடிச்சுஅடிச்சு சொல்லிறம். உங்களுக்குத்தான் விளங்குதில்லையே.

ஒருவேளை வாசிக்கும்போது விளங்குது எழுதும்போதுதான் விளங்கவில்லையோ! 

புலிகள் விட்ட பிழைகளை நீங்கள் யார் ஒப்புகொண்டீர்கள் ? இன்றும் தேவாரம்  தானே பாடுகின்றிர்கள். புலிகளே ஒப்புக்கொண்ட அனுராதபுர படுகொலையை இல்லை என்று இப்ப இங்கு வந்து இல்லை என்பது போல தொடங்குகின்றார்கள் 

நாங்களே எமது இயக்கம் விட்ட பிழைகளை எழுதிக்கொண்டே வந்தோம் .

விக்கிபிடியாவிற்கு பதில் எழுதி பிரயோசனம் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுர படுகொலையை இல்லை என்று இப்ப இங்கு யார் வந்து தொடங்கினார்கள்?
உங்கள் வாசிப்பு + கிரகிப்பு தன்மை அவ்வளவு மோசமானதா?
கோர்க்கப்பட்ட வீடியோ பரப்புரைக்காக சிங்களத்தால் தயார் செய்யப்பட்டது.
சிங்களவன் அவன் செய்த எல்லா அட்டூளியதுக்கும் வந்து பொது மன்னிப்பு கேட்கட்டும், உண்மையான பிராயாசித்தம் தேடட்டும்.
உங்கள் சிங்கள நண்பர்களுடன் அதை முதலில் கேளுங்கள்.    (முடிந்தால்)
சிங்களவருக்கு நீங்கள் எப்போதுமே ஓர் "பர தேமலேக்" என்பதை மறவாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஒரு புலம்பெயர் போராளி பிரபாகரனுக்குச் சிங்களவர் மீது கோபமோ எதிர்ப்போ இல்லையாம் எண்டு எழுதப்போகவே அது இணைக்கப்பட்டது. சிங்களவன் பரதெமலக் என்று மட்டும் சொல்வதில்லை கள்ளத்தோணி எண்டும் அரைகுறைத் தமிழில் சொல்லுவான்.  <_<

அடுத்தது எல்லார 44 ஆண்டுகள் இலங்கையை ஆண்டான் என்பதை மகாவம்சம் தவிர வேறெந்த நூல்களிலும் ஆதாரம் கிடையாது. இலங்கையை தமிழன் ஆண்டான் என்பதை சிங்கவரின் மகாவம்சத்திலேதான் கூறப்படுகின்றது. அதனை மட்டும் நம்பும் புத்திமான்கள் ஏன் மகாவம்சத்தை முழுமையாக நம்பக்கூடாது? இதற்கு விக்கிப்பீடியாவில் பதில் இருக்காது. <_< 

சம்பவம் தான் முக்கியம் வீடியோ அல்ல ,

தன்னுடன் இல்லாத தமிழ் மக்களிலேயே அவர்கள் வைத்திருந்த அன்பு பற்றி உலகம் அறியும் இதற்குள் சிங்கள மக்கள் மீதான அன்பு பற்றி சொல்ல வேண்டுமா ?

மனித குலத்திற்கே எதிரானவர்கள் தான் உலகத்தால் பயங்கரவாதிகள் என்று அழைக்கபடுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய உலகில் பயங்கரவாதிகள் தான் ஏனையவர்களை பயங்கரவாதிகள் என்பது உலகம் அறிந்தது. உலகின் பெரிய நாட்டில் இருந்தும் சிறிய மூளையாக சிலருக்கு  உல்ளது. புலிகள் பிழை விடவில்லை என இங்கு ஒருவரும் சொல்லவில்லை. அடிக்கடி பழைய ரெக்கோட்டை போட்டு சிலர் களத்தை நாறடிக்கிறார்கள்.

மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகள் செய்த பலர் கூட்டமைப்பில் இருந்தார்கள். இருக்கிறார்கள். அதில் நீங்கள் இருந்த புளட் கூட்டத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.