Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இந்திய அரசுதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!' - ஈழத்திலிருந்து ஒரு குரல்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 16 February 2016 at 7:25 PM, கிருபன் said:

புலிகளின் ராஜதந்திரங்கள் தோல்வியடையும் என்று தெரிந்த கவியழகன் அதனைச் சீர்செய்ய என்னமாதிரியான நடவடிக்கைகளை உள்ளிருந்தே மேற்கொண்டார் என்றும் சொல்லியிருக்கலாம். 

ஒரு நல்ல எழுத்தாளன் பிழை நடக்கிறது என்று தெரிந்தும் அதை எடுத்தியம்ப முடியாதவாறு ஒரு காட்டாச்சி நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட முகாபே செய்வது போல.

எதிர்த்து கதைத்தால் கொலை செய் என்ற கொள்கையுடைய தலைமையுடன் யார்தான் சீர்திருத்தம் பற்றி பேசுவர்? ஆனால் நீங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் யதீந்திரா, நிலாந்தன் போன்ற அடிவருடிகள் போலில்லாமல் நஞ்சுண்ட காடு அப்போதே மறைமுகமாக புலிகளை சாடியது என்று கருதமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

எதிர்த்து கதையாடியதால் எத்தனை உட்கொலைகள் புலிகளில் நடந்தது.என்பதை அண்ணன் கோசான் அவர்கள் இப்பொழுது விளக்கி கூறுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

ஒரு நல்ல எழுத்தாளன் பிழை நடக்கிறது என்று தெரிந்தும் அதை எடுத்தியம்ப முடியாதவாறு ஒரு காட்டாச்சி நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட முகாபே செய்வது போல.

எதிர்த்து கதைத்தால் கொலை செய் என்ற கொள்கையுடைய தலைமையுடன் யார்தான் சீர்திருத்தம் பற்றி பேசுவர்? ஆனால் நீங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் யதீந்திரா, நிலாந்தன் போன்ற அடிவருடிகள் போலில்லாமல் நஞ்சுண்ட காடு அப்போதே மறைமுகமாக புலிகளை சாடியது என்று கருதமுடியும்.

குணா. கவியழகன் ஏணைப்பிறை என்ற தலைப்பைத்தான் முதலில் வைத்து பாலகுமாரனின் முன்னுரையையும் பெற்றிருந்தார். அதனை வெளியிட தமிழ்ச்செல்வன் தரப்பினர் விடவில்லை என்பதால் யுத்தம் முடிந்தபின்னர் நஞ்சுண்ட காடாக வந்தது. பாலகுமாரன் முன்னுரை கொடுத்த வரைபுக்குப் பின்னர் மாற்றங்களைச் செய்தாரா என்பதில் தெளிவில்லை.

புலிகளை மறைமுகமாக பெரிதாக எதுவும் சாடவில்லை. இயக்கத்தில் இணைந்தவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களும், சமூகத்தின் கீழ் நிலையில் உள்ளோருமாக இருந்தனர் என்பதுதான் துருத்தித் தெரிந்தது. ஆனாலும் பயிற்சியில் அரசியல் வகுப்புக்களும் இருந்தனவெனினும் அதில் என்னத்தைச் சொல்லிக்கொடுத்தார்கள் என்பதை அரசியலறிவு மையத்திற்குப் பொறுப்பாக இருந்த குணா. கவியழகன் சொல்லவில்லை. பிரச்சாரமாகப் போய்விடுமோ என்று விட்டிருப்பார்.

விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம் நாவல்களை சயந்தனின் ஆதிரையுடன் சேர்த்து போனகிழமை வாங்கியுள்ளேன். எத்தகைய விமர்சனங்களை வைத்துள்ளார் என்று படித்த பின்னர் யாழில் எழுதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

ஏணைப்பிறை எனப்படும் நஞ்சுண்டகாடு உள்ளார்தமாக புலிகளின் நிறுவனமயப்பட்ட எதேச்சதிகாரத்தை சாடுகிறது என்பது ஆழமான வாசிப்பு உள்ளவர்களின் கருத்து.

நந்தன்

புட்போல் விளையானினத்துக்காக ஆனந்தராசாவை போட்ட ஆக்கள், எங்கள் பாட்டுப் பாடின கிழவருக்கு பச்சை மட்டையடி கொடுத்த ஆக்கள் எல்லாம் யாழில இருக்கீனம். கேட்டால் நாங்கள் முன்னால் போராளிகள் என்று பீலா வேற.

கூடவே ரெலோவோடு கூட இருந்து பின் காற்று மாறியதும் புலிக்குத்தாவி, ஹைஏஸ் வான் ஓடின ஆக்கள் எல்லாம் இருக்கீனம்.

அவர்களிடம் போய்க் கேளுங்கள் புலிகளின் கருத்தறியும் பாங்கையும் ஜனநாயகத்தன்மையையும் பற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புத்தகங்களை லண்டனிலா வாங்கினீர்கள் கிருபன்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அண்ணை நீங்கள் முதலில் சொன்னது.புலிகள் அமைப்பின் உள்ளே நடந்ததாக ,நானும் அதற்கு தான் விளக்கம் கேட்டேன்.ஆனந்தராசா எப்போது புலிகள் அமைப்பில் இருந்தார்.இப்போ எதுக்கு அவசரப்பட்டு அறிக்கை விடுறீங்க,புலிகளைப்பற்றி வடிவாக அறிந்து தெரிந்து கொண்டு களத்துக்கு வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

கிருபன்,

ஏணைப்பிறை எனப்படும் நஞ்சுண்டகாடு உள்ளார்தமாக புலிகளின் நிறுவனமயப்பட்ட எதேச்சதிகாரத்தை சாடுகிறது என்பது ஆழமான வாசிப்பு உள்ளவர்களின் கருத்து.

நல்லது. நான் ஆழமாக எல்லாம் வாசிக்கவில்லை. புலிகள் இயக்கத்தில் அதிகாரம் எவ்வாறு தோன்றுகின்றது, அது எவ்வாறு போராடப்போனவர்களை கொலை செய்யும் இயந்திரமாக மாற்றுகின்றது என்பதோடு போராளிகளின் மனித குணங்களையும் காட்டுகின்றது.

Stanley Kubrick இன் Full Metal Jacket படத்தை புலிகள் பல தடவைகள் பார்த்து பயிற்சி முகாம்களை அமைத்திருப்பார்கள் என்றும் நினைத்தேன்!

37 minutes ago, ரதி said:

இந்தப் புத்தகங்களை லண்டனிலா வாங்கினீர்கள் கிருபன்?

சயந்தனின் ஆதிரை புத்தக வெளியீட்டுக்குப் போனபோது சிலவற்றை பெளசரிடமிருந்து வாங்கினேன்.

அவரிடமிருந்து பல நூல்களை வாங்கமுடியும். எதுவரை இணைப்பில் தேவையான தகவல்கள் உள்ளன.

http://eathuvarai.net/?page_id=205

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புலிகள் உட்கொலையே செய்யவில்லை. மாத்தையா எறும்பு கடிச்சே இறந்தார். அவருடன் கூட இருந்த ஒரே குற்றத்துக்காக கொல்லப் பட்ட 500 போராளிகளும். கருணா பிரிவின் போது வெருகலில் நரவேட்டையாடப் பட்ட அத்தனை பேரும் ஏதோ பூரான் கடித்து இறந்திருக்கலாம்.

வெளிநாடுகளில் வந்து தஞ்சம் அடைந்து விட்டோம் நீதியின் பிடியில் இருந்து தப்பி விட்டோம் என்று சில முன்னாள் கொலைஞர்கள் இறுமாந்திருப்பது தெரிகிறது.

அவர்களின் பற்களின் ஈறுகளில் வடியும் சகதமிழனின் ரத்தத்தை இப்போ புலம்பெயர் வாழ்வு எனும் அழகிய கைக்குட்டை மறைக்கலாம். ஆனால் நீதி ஒருநாள் அவர்களை எட்டிப் பிடித்தே தீரும். குறைந்த பட்சம் பிள்ளைகள் வடிவிலாவது.

அப்போ தெரியும் கொலைகளின் வலி.

கிருபன் ஒரு அடக்குமுறையில் வாழும் எழுத்தாளன் பூடகமாயும் உருவகமாயுமே சில விடயங்களை சொல்ல முடியும்.

அதைக் கூட தமிழ்செல்வன், திருநாவுக்கரசு, நிலாந்தன் வகை ஜால்ராக்கள் போட்டுக் கொடுத்ததாலே புலி புத்தகத்துக்கு தடை போட்டது.

இத்தடை பின் பிரபாவால் விலக்கப் பட்டு மாவீரர் பணிமனைகள் துவங்கப் பட்டதாய் நியாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

உண்மைதான் புலிகள் உட்கொலையே செய்யவில்லை. மாத்தையா எறும்பு கடிச்சே இறந்தார். அவருடன் கூட இருந்த ஒரே குற்றத்துக்காக கொல்லப் பட்ட 500 போராளிகளும். கருணா பிரிவின் போது வெருகலில் நரவேட்டையாடப் பட்ட அத்தனை பேரும் ஏதோ பூரான் கடித்து இறந்திருக்கலாம்.

இயக்க விதிகளை மீறியவர்களுக்கு கச்சானும் சோழனும் கொடுக்கலாம் என நினைக்கிறேன். தண்ணி அடிச்சு வாகனம் ஓட்டுபவர்களுக்கே நினைத்து பார்க்க ஏலாத தண்டனை. உண்மையை சொன்ன அவுசுக்காரன் எம்பசிக்குள் இப்பவும் காய்ந்து கொண்டு இருக்கிறார். இப்படி உலகம் தண்டனைகளை எப்படி வழங்குகிறது என்பதைஅறியாமல் சிலர் சதாம் போல் மண்ணுக்குள்ளால் தலையை நீட்டி பார்க்கிறார்கள்.

5 minutes ago, கிருபன் said:

நல்லது. நான் ஆழமாக எல்லாம் வாசிக்கவில்லை. புலிகள் இயக்கத்தில் அதிகாரம் எவ்வாறு தோன்றுகின்றது, அது எவ்வாறு போராடப்போனவர்களை கொலை செய்யும் இயந்திரமாக மாற்றுகின்றது என்பதோடு போராளிகளின் மனித குணங்களையும் காட்டுகின்றது.

Stanley Kubrick இன் Full Metal Jacket படத்தை புலிகள் பல தடவைகள் பார்த்து பயிற்சி முகாம்களை அமைத்திருப்பார்கள் என்றும் நினைத்தேன்!

சயந்தனின் ஆதிரை புத்தக வெளியீட்டுக்குப் போனபோது சிலவற்றை பெளசரிடமிருந்து வாங்கினேன்.

அவரிடமிருந்து பல நூல்களை வாங்கமுடியும். எதுவரை இணைப்பில் தேவையான தகவல்கள் உள்ளன.

http://eathuvarai.net/?page_id=205

குணா கவியழகனின் முதல் இரண்டு நாவல்களிலும் புலிகளை பற்றிய விமர்சனம் பெரிதாக எதுவும் இல்லை .

பயிற்சி முகாம்களும் அங்கு கொடுக்கபட்ட பயிற்சிகளும் பயிற்சி கொடுப்பதற்கு பொறுப்பானவர்களும் அவர்கள் குணாதியம்சங்களும் மிக அருமையாக நஞ்சுண்டகாட்டில் வெளிக்கொண்டுவந்திருப்பார் .

புளொட் முகாம்களை ,பயிற்சிகளை ,அங்கு பொறுப்பானவர்கள் நடந்த விதங்களை பார்த்து வேறுப்படைந்த எனக்கு அனைத்து இயக்கங்களிலும் ஒரே கதையா என வியப்பாக இருந்தது .(புலமபெயர்ந்த நாடுகளில் எம்மவர் சூப்பர்வைசர்கள் ஆக வந்தாலும் இதே நிலை தான் என்று பல இடங்களில் கேள்விப்பட்டுள்ளேன் )

விடமெறிய கனவு வேறுதளம் ஆனால் அதில் புலிகளின் அரசியலை சற்று தொட்டிருப்பார் .போரின் தோல்வி அந்த கேள்வியை நிட்சயம் கேட்க வைத்திருக்கும் .

நிட்சயம் வாசிக்க வேண்டிய நாவல்கள் அவை .

ஆதிரை ? முக்கால்வாசி மிகவும் பஞ்சிபட்டு கஷ்டப்பட்டு வாசித்தாயிவிட்டது.  வரும் ஞாயிறு விமர்சன கூட்டத்திற்கு பிறகு மிச்சம் எழுதுகின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்

திரு.கோசான் இப்போ,மாத்தையாவுடன் கொல்லப்பட்ட 500 போராளிகளில் இருவரின் பெயரை மக்களுக்கு அறிவிப்பார்.அண்ண உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது எண்டது.யாழில் உள்ள பலருக்கு தெரிந்திருக்கும் போய் வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு மண்ணும் தெரியாது என்பது உண்மைதான்.

மாத்தையாவுடன் சுட்டுக்கொல்லப் பட்ட மற்றைய அப்பாவிப் போராளிகள் விபரத்தை கூட நின்று சகோதரப் படுகொலை செய்து விட்டு இப்போ புலத்தில் எலிபோல பதுங்கி வாழும் யாராவது ஒரு முன்னாள் கொலையாளிதான் சொல்ல முடியும்.

என்னால் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

திரு.கோசான் இப்போ,மாத்தையாவுடன் கொல்லப்பட்ட 500 போராளிகளில் இருவரின் பெயரை மக்களுக்கு அறிவிப்பார்.அண்ண உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது எண்டது.யாழில் உள்ள பலருக்கு தெரிந்திருக்கும் போய் வாருங்கள்

நந்தன், கோசானுக்கு செத்தவர்களில் இருவரின் பெயர் கூடத் தெரியவில்லை என்பதற்காக மாத்தையாவுடன் சேர்த்து ஆட்கள் கொல்லப் படவில்லை என்று நீங்கள் நம்பிக் கொண்டிருக்கலாம்! ஆனால் எத்தனை பேர் அப்படி மோட்டுத் தனமாக நம்புவார்களோ தெரியாது! இப்படி நடந்த தவறுகளை வீம்புக்கு மறுத்துக் கொண்டிருப்பதை விட தவறு தான் ஒத்துக் கொண்டு விட்டு நகர்ந்தால் எங்களுக்கிடையே இருக்கும் உராய்வுகளாவது குறையும்! 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2016 at 9:47 AM, நியானி said:

இறுதியாகப் பதியப்பட்ட பல தனிமனித தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் திரியின் தலைப்போடு ஒட்டி பண்பாக கருத்துக்களை வைக்கவும்.

பிரபாகரன் ஒரு சர்வதிகாரி !
இது இந்திய சிங்கள ஊடங்கங்கள்  பாடுபட்டு உழைத்து 
உருவாக்கிய ஒரு பெயர்!

அதற்காக பிரபாகரன் ஒரு கருணைகத்தா என்பது எனது கருத்தல்ல 

பிரபாகரன் என்ன செய்தார் என்பதை 
பிராபாகரனை சாடும் ஒரு தமிழனால் ஏன் தமிழில் எழுத முடியவில்லை?

மாத்தையாவை சுட்டபோது 500 பேரை சுட்டார்கள் என்பது 
வெறும் கட்டுகதை .... புலிகள் செய்தாலும் செய்திருப்பார்கள் 
என்ற விம்பம் இருப்பாதால் புலிகள் இயக்கம் அப்போது எப்படி இருந்தது 
மாத்தையாவின் பங்கு எப்படி இருந்தது என்று எள்ளளவும் தெரியாதவர்கள் 
அதை காவுவத்தோடு நிற்காமல் பரப்புரையையும் தம்மை அறியாமல் செய்கிறார்கள்.

மாத்தையாவின் வாகன டிரைவர் எமது ஊரை சேர்ந்தவர் 
12 புலிகள் ஒருமுறை இந்திய சிறையில் இருந்து குழிதோண்டி 
தப்பி ஓடிவந்தார்கள் (அறிந்திருப்பீர்கள் என்று  நினைக்கிறேன்)
அதில் 6 பேர் ஊர் போனார்கள் 2பேர்கள் எமது ஊரை சேர்ந்தவர்கள்.
(இவர்கள் றோவின் செட்டப்பில் வெளியால் வந்தவர்கள்) 
மூவரும் சுடபட்டர்கள் மாத்தையாவின் துரோகத்தில் முதலில் இருந்தே 
ஈடுபட்டவர்கள் எனக்கு சிறு வயதுமுதல் நண்பர்கள்.
எமது ஊரில் எல்லோருக்கும் என்ன நடந்தது என்பது அடியில் இருந்து தெரியும்.
என்னால் கூட எதையும் எழுத முடியாது நாமும் நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே 
இதை பற்றி பேசி கொள்வோம் 
(காரணம் உறவினர்கள் நண்பர்கள். முன்பு நாங்கள் டெலோ இவர்கள் 
புலிகள். சிறையில் இருந்து ஓடிவந்த ஒருவர் முன்னர் புளொட்டில்  இருந்தவர் . புலிகள் விசாரித்துவிட்டு வடமராச்சி கிழக்கு என்று விட்டவர். பின்பு ஒரு காதல் தோல்வியால் புலிகளில் போய் சேர்ந்து பெரிய பொறுப்பில் இருந்துதான் இந்தியாவில் பிடிபட்டார். பல மன கசப்புகள் தாண்டி பல திருமணங்கள் காதல் ஊடக  மீண்டும் இணைந்து வரும் உறவுகளில் விரிசல்கள் வரலாம் என்பதால் யாரும் பேசுவதில்லை. இதைகூட இப்போதான் நான் முதன் முதலில் எழுதுகிறேன். யாரும் வாசிக்க கூடாது என்று எண்ணிக்கொண்டு எழுதுகிறேன்) 

மத்தையாவிட்கும் ரோவிட்குமான தொடர்பில் இவர்கள்தான் அஞ்சல் காரர்கள் 
தெரியாத ஊர்களில் பேய்கதை முனி கதைபோல் அவரரே கட்டிவிட்ட கதைகள்தான் இப்போ உலா வருகிறது 
அது 500 ஆக உயர்ந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை 
தமிழனிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

புலிக்குட்டி  போன்ற சிலர் ஆரம்பம் முதலே மத்தையாவோடு இருந்தவர்கள் 
இதில் பங்கு கொண்டவர்கள். எல்லோரும் கூடிய விசாரணையின் பின்புதான் சுடபட்டார்கள்.
காரணம் யாரும் தப்ப கூடாது என்ற எண்ணமாக இருக்கலாம்.
மேற்கொண்டு எந்த ஆபத்தையும் அவர்கள் சந்திக்க விருன்பி இருக்கவில்லை.
மாத்தையாவே கிட்டுவை காட்டிகொடுத்தார் 12 போராளிகள் அநியாமாக தற்கொலை செய்தார்கள்.
அதிலும் வேலன் எனது நண்பர்தான் காட்லியில் எ/ல் லில் 4எ ரிசல்ட் வந்த பின்பு புலிகளில் சேர்ந்தவர்.
கிட்டுவின் விடயம் யோகிக்கு தெரிந்துவிட்டது ...
மாத்தையாவை சுடுவார்கள் என்பதால் பேசாமல் இருந்துவிட்டார் 
வெள்ளம் தலைக்கு மேலே போய்விட்டதை எண்ணி யோகி பயந்து இருக்கலாம்.
அதனால்தான் விலத்தி விட்டார்கள் பின்பு மீண்டும் அவராகவே சில பணிகளை செய்தார். 

கோசான் 500 என்று எழுதுவதில் ஆச்சரியமில்லை ....
இங்கு விழ விழ ஆயிரமாய் எழுந்துகொண்ட ஒருவர்தான் முதன் முதலில் இந்த 500 
இலக்கத்தை கண்டு பிடித்து எழுதியவர்.
அதற்கு முன்பு நான் அவரை பெரிதகா எண்ணிக்கொண்டு இருந்தேன்.
இவர் ஒரு முக்கிய ஆள் போல இருக்கு என்றுதான் நினைத்து வந்தேன்.
அன்றுதான் அவரின் வண்டவாளம் எனக்கு தெரியவந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

நந்தன், கோசானுக்கு செத்தவர்களில் இருவரின் பெயர் கூடத் தெரியவில்லை என்பதற்காக மாத்தையாவுடன் சேர்த்து ஆட்கள் கொல்லப் படவில்லை என்று நீங்கள் நம்பிக் கொண்டிருக்கலாம்! ஆனால் எத்தனை பேர் அப்படி மோட்டுத் தனமாக நம்புவார்களோ தெரியாது! இப்படி நடந்த தவறுகளை வீம்புக்கு மறுத்துக் கொண்டிருப்பதை விட தவறு தான் ஒத்துக் கொண்டு விட்டு நகர்ந்தால் எங்களுக்கிடையே இருக்கும் உராய்வுகளாவது குறையும்! 

வணக்கம்  ஜஸ்டின் ,ஊரில் வதந்தி பரப்புவனுக்கும்  கோசானின் 500,1000 எண்ணிக்கை கதைகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை .கோசான் முதலில் தொடங்கியது .புலிகளில் உட்கொலைகள்  நடந்தததாக நான் அதுக்கு விளக்கம் கேட்க அவர் ஓடிவந்து மாத்தையாவில் நிற்கிறார் .துரோகத்துக்கும் ,ஜனநாயகத்துக்கும்  வித்தியாசம் தெரியாமல் உளறுவது அவர்தான் ,நானில்லை ........சரி புலிகள் துரோகத்துக்கு தண்டனை வழங்கினார்கள் .என்பதை நான் ஒப்புக்கொண்டால் ,நீங்கள் மதில் மேல் நிக்காமல் இறங்கி வரத்தயாரா 

புலிகளின் ஆரம்ப கால உட்கொலைகள் மைக்கல் ,பற்குணம்  எல்லாம் பிரபாகரனால் சுடப்பட்டவர்கள் .

மாத்தையாவின் பிரச்சனையில் பலர் கொல்லப்பட்டதும் உண்மை (எண்ணிக்கை தெரியாது ) அதன் பின் கருணாவின் உடைவின் பின் பலர் கொல்லபட்டார்கள் (அந்த எண்ணிக்கையும் சரியாக தெரியாது ) இவையெல்லாம்  உட்கொலைகள் தான் 

புலிகள் துரோகத்திற்கு தான் தண்டனை வழங்கினார்கள் 

புலிகள் துரோகிகள் என்பவர்கள் எல்லாம் உண்மையில் துரோகிகள் என்று நீங்கள் நம்புவராயின் நீங்கள் ஒரு கட்டத்திற்கு மேலே சிந்திக்கமுடியாத மனநிலையில் உள்ளவர்களில் ஒருவர் ஆகிவிடுகின்றீர்கள் .

இப்படி எதையும் நம்புபவர்கள் இருப்பதால்தான் அரசியல்வாதிகள் பிழைப்பு  ஓடுகின்றது .

மாத்தயாவின் பிரச்சனை பற்றி மருது எழுதிய கொமடி புராணம் வாசித்து வாய் விட்டு சிரித்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்

Shocking lapses

The Tamil Nadu Government comes under fire as 43 alleged LTTE militants escape, leaving behind many unanswered questions.

September 15, 1995 | UPDATED 10:42 IST
 
At first, it seemed more like a tale spun out by the local rumour mill than something true. Forty-three suspected LTTE militants detained at Vellore Fort since 199 Oh ad dug a 15 3 -ft-long tunnel swum across a 50-ft-wide moat, changed into dry clothes and got away.

As if the security personnel at the detention centre did not exist, as if the administration was not chastened by the seven jailbreaks by LTTE detainees in the state in the past three years. All this may have sounded too bad, but, sadly, it was all too true.

A day after the breakout, on Independence Day, two of the escaped militants were challenged by plainclothes policemen at Mambalam in Madras. When one detainee consumed cyanide and died, the two policemen fled in panic. Gunaseelan, the second militant and reportedly the mastermind behind the escape, was hauled to a police station by an auto driver, only to be let off by the head constable on duty.

This prompted charges that money must have changed hands. So shocking was the administration's floundering that the rearrest of 11 of the detainees gave little cause for cheer. While reports came in that four had reached Jaffna, senior officers claimed that check-posts had been reactivated at coastal points close to Sri Lanka's northern peninsula and that LTTE hideouts in Tamil Nadu were being raided.

11 hours ago, arjun said:

புலிகளின் ஆரம்ப கால உட்கொலைகள் மைக்கல் ,பற்குணம்  எல்லாம் பிரபாகரனால் சுடப்பட்டவர்கள் .

மாத்தையாவின் பிரச்சனையில் பலர் கொல்லப்பட்டதும் உண்மை (எண்ணிக்கை தெரியாது ) அதன் பின் கருணாவின் உடைவின் பின் பலர் கொல்லபட்டார்கள் (அந்த எண்ணிக்கையும் சரியாக தெரியாது ) இவையெல்லாம்  உட்கொலைகள் தான் 

புலிகள் துரோகத்திற்கு தான் தண்டனை வழங்கினார்கள் 

புலிகள் துரோகிகள் என்பவர்கள் எல்லாம் உண்மையில் துரோகிகள் என்று நீங்கள் நம்புவராயின் நீங்கள் ஒரு கட்டத்திற்கு மேலே சிந்திக்கமுடியாத மனநிலையில் உள்ளவர்களில் ஒருவர் ஆகிவிடுகின்றீர்கள் .

இப்படி எதையும் நம்புபவர்கள் இருப்பதால்தான் அரசியல்வாதிகள் பிழைப்பு  ஓடுகின்றது .

மாத்தயாவின் பிரச்சனை பற்றி மருது எழுதிய கொமடி புராணம் வாசித்து வாய் விட்டு சிரித்தேன் 

வேவுப்புலிகள் மண்டைதீவில் கட்டிநின்ற கடற்படையின் டோறா படகு ஒன்றை 
கடத்தி சென்றார்கள்.

இந்த வேவுப்புலிகள் முதல் இரவு தஞ்சம் அடைந்து ஒரு பகல் முழுதும் இருந்தது 
மண்டைதீவு ஈப்பி டீபீ முகாமில்.
இராணுத்திடம்  பிடிபட்டால் சுட்டுவிடுவார்கள் என்று 
புலிகளை ஆயுதங்களுடன் தமது முகாமில்தான் வைத்திருந்தார்கள்.

மறுநாள் இரவுதான் அவர்கள் சென்ற இலக்கை அடைந்தார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.