Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிபீர் தாக்குதலில் கொல்லப்பட்ட 450 உடல்களுக்குள் என் மகனை தேடினேன்

Featured Replies

கிபீர் தாக்குதலில் கொல்லப்பட்ட 450 உடல்களுக்குள் என் மகனை தேடினேன்

கிபீர் தாக்குதலில் கொல்லப்பட்ட 450 உடல்களுக்குள் என் மகனை தேடினேன்:
கிபிர் தாக்குதலில் கொல்லப்பட்ட 450 க்கும் அதிகமான உடல்களின் மத்தியில் எனது மகனை தேடினேன் என கண்ணீர் மல்க தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
 
மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், 
 
நாம் இடம்பெயர்ந்து மாத்தளன் பகுதியில் தங்கி இருந்தோம். எம்முடன் எமது மகனான சேவியர் உஷாந்தனும் (காணாமல் போகும் போது வயது 17 ) இருந்தார்.
 
யுத்தம் தீவிரமடைந்து இருந்த வேளை பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பிரதேசத்தில் நாம் கொட்டகை போட்டு இருந்த பகுதிகளில் மீது 2009ம் ஆண்டு 3ம் மாதம் 09ம் திகதி காலை மதியம் மற்றும் மாலை என மூன்று நேரத்தில் நாம் இருந்த பிரதேசம் மீது கிபீர் விமானம் குண்டு வீசி தாக்குதல் நடாத்தியது.
 
அந்த தாக்குதலினால் எம்முடன் இருந்த பலரும் பல திசைகளாலும் ஓடினார்கள். அவ்வேளை எமது மகன் காணாமல் போய்விட்டார். தாக்குதல் ஓய்ந்த பின்னர் மகனை தேடினோம் எங்கும் இல்லை.
 
அந்த தாக்குதலில் அன்றைய தினம் 450க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 450 பேரின் உடல்களுக்குள் எனது மகனின் உடலும் இருக்கா என தேடி பார்த்தேன் ஒவ்வொரு உடல்களாக பார்த்தேன்.
 
மகனின் உடலை காணவில்லை. காயப்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என வைத்திய சாலைகளிலும் தேடினோம் எங்கும் இல்லை . அன்றைய தினம் எனது மகன் கிபீர் தாக்குதலில் கொல்லப்படவில்லை எனவே மகன் உயிருடன் இருக்கின்றார் என நம்புகின்றேன். என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
 
இறுதி யுத்தத்தில் அகோர செல் வீச்சு.
 
இறுதி யுத்தத்தின் போது அகோர செல் வீச்சு இடம்பெற்றதாகவும் அதன் மத்தியில் தமது உடமைகளை எடுக்க சென்ற மகனை காணவில்லை என தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
 
மேலும் தனது சாட்சியத்தில் தெரிவிக்கையில், 
 
இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை நாம் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வந்தோம்.  எனது கணவர் காயம் காரணமாக நடக்க முடியாது இருந்தார். அதனால் மகன் அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டு வந்து என்னுடன் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் இறக்கி விட்டு எம்மை அங்கு நிற்குமாறு கூறி எமது உடமைகளை எடுத்து வருவதற்காக மீண்டும் நாம் இருந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
 
மகன் உடமைகளை எடுக்க சென்ற வேளை செல் தாக்குதல் நடைபெறவில்லை. சிறிது நேரத்தில் நாம் இருந்த பகுதியை நோக்கி பல திசைகளில் இருந்தும் அகோர செல் தாக்குதல் நடாத்தப்பட்டது அதனால் நாம் அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
நாம் அங்கிருந்து இராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு சென்றோம். அவர்கள் எம்மை முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் இருந்து பலர் ஊடாக எமது மகனை பற்றி விசாரித்தோம் ஆனாலும் எந்த தகவலும் இல்லை என தனது சாட்சியத்தில் கூறினார்.
 
பதுங்குகுழியில் இருந்து தலை தூக்க முடியாத அளவு செல் வீச்சும், துப்பாக்கி சூடும்.
 
இறுதி யுத்தத்தின் போது பதுங்கு குழியில் இருந்து தலை தூக்க முடியாத அளவுக்கு செல் வீச்சும் துப்பாக்கி சூடும் இடம்பெற்றது. அதன் போது மகன் காணாமல் போய்விட்டதாக தாய் சாட்சியம் அளித்துள்ளார்.
 
மேலும் தமது சாட்சியத்தில் தெரிவிக்கையில், 
 
மாத்தளன் பகுதியில் நாம் இருந்த வேளை 2009ம் ஆண்டு 4ம் மாதம் 12 ம் திகதி நள்ளிரவு வேளை எமது கொட்டகைக்கு அருகில் இருந்த மற்றுமொரு கொட்டகையின் தரபாளின் மீது செல் ஒன்று வீழ்ந்து வெடித்து அதில் எந்த கொட்டகைக்குள் தூங்கி கொண்டு இருந்த எனது சகோதரியின் ஒன்பது வயது மகளின் கால் துண்டாடப்பட்டு படுகாயமடைந்தார்.
 
உடனே எனது மகனான சுதாகரன் படுகாயமடைந்த பிள்ளையை உடனே தூக்கிகொண்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்றார் கூட எனது சகோதரியின் குடும்பமும் சென்றது. 
 
முதல் செல் வீழ்ந்த இடத்தை நோக்கி தொடர்ந்தும் செல் வீச்சு இடம்பெற்றது அத்துடன் துப்பாக்கி சூடும் நடாத்தப்பட்டது. நள்ளிரவு தொடக்கம் காலை 7 மணி வரையில் இடைவிடாது நாம் வசித்த பகுதியை நோக்கி செல் வீச்சும் துப்பாக்கி சூடும் மேற்கொள்ள பட்டது அதனால் நாம் பதுங்கு குழியை விட்டு வெளியில் வர வில்லை.
 
காலை செல்வீச்சும் துப்பாக்கி சூடும் ஓய்ந்த பின்னர் எனது மகனையும் சகோதரியின் குடும்பத்தை தேடி வைத்திய சாலைக்கு சென்றோம் அங்கு எனது மகன் சகோதரி குடும்பம் ஆகியோரை காணவில்லை. 
 
அன்றை தினத்தின் பிறகு மகன் குறித்தோ  சகோதரி குடும்பம் பற்றிய தகவல் இல்லை என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்
 
  • கருத்துக்கள உறவுகள்

வலி சுமக்கும் இந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்ல யாருளர். கிபீரை செய்தவரா.. கொடுத்தவரா.. குண்டுகளை கட்டி ஏற்றியவரா..?!

எல்லோரும் கண்மூடி.. இன்னும் இன்னும் பயிற்சி கொடுப்பதில் ஆர்வமாக உள்ளனர். எல்லாம் பணம்.

பணத்துக்கு முன் மனிதன் பிணம். 

Edited by nedukkalapoovan

ஒரு தாயின் வலி புரிகிறது.

ஆனால் வீதி வீதியாய் எமநு சுபீடசத்திற்காக போராடப் போனவர்களை போட்டு எரித்தபோது எவர் வந்தார்கள். அப்போது அழுத தாய்களை, நாய்களாககூட மதிக்காதவர்கள் இங்கு ஊளையிடுகிறார்கள். 

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்புக்கு சொந்தப் பிள்ளையை பறிகொடுத்த.. ஒரு தாயின் வலி இது.

வீதி வீதியாய் இழுபட வேண்டாம் சரணடையுங்கள் உங்கள் பெற்றோருடன் சேர்க்கிறோம் என்று சொன்னதையும் கேட்காமல்.. சொந்தச் சகோதர்களோடு யுத்தம் என்று போனவை செத்த போதும் மக்கள் மனம் முட்டி அழுதார்கள் தான். ஆனால் தவிர்க்க இருந்த சந்தர்ப்பங்களை வீம்புக்கு  கூலிக்கு மாரடித்த தலைவர்கள் கேட்க மறுத்துவிட்டனர். விளைவு சாவும் ஓலமும்.

அதை விஞ்சியது எதிரியின் இன அழிப்பு.

இதனை ஊளை என அடையாளம் காணும் ஓநாய்கள்.... இன அழிப்புக்கும்.. தூண்டி விட்டு குளிர்காய்ந்த..உள்ளக முரணுக்கும்.. இடை முரணுக்கும் இடையிலும் வேறுபாடு காண முடியாமல்.. ஓடி ஒளித்து நாடுகள்  பூரா அடைக்கலம் தேடி.. நய வஞ்சகமும்.. காழ்பும்.. கயமையும்.. துரோகமும்.. பகமையும்.. வளர்த்தவர்கள் இன்று..

ஊளை என்று ஓநாய்கள்.. நரிகளை தாமே தமக்குள் பழிக்கின்றன போலும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

ஒரு தாயின் வலி புரிகிறது.

ஆனால் வீதி வீதியாய் எமநு சுபீடசத்திற்காக போராடப் போனவர்களை போட்டு எரித்தபோது எவர் வந்தார்கள். அப்போது அழுத தாய்களை, நாய்களாககூட மதிக்காதவர்கள் இங்கு ஊளையிடுகிறார்கள். 

வாழ்த்துக்கள்.

ஜீவன்,

சகோதர இயக்கங்களின் மீதான புலிகளின் தாக்குதலை நியாயப்படுத்துவதோ அல்லது, மற்றைய இயக்கங்கள் புலிகள் மீது நடத்திய தாக்குதல்களையோ அல்லது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு இலங்கை இந்திய ராணுவங்களுடன் கூடி புலிகள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதல்களையோ நான் நியாயப்படுத்தவில்லை. மக்களுக்கென்று போராடப் போனவர்கள் அனைவருமே தமக்குள்ளோ அல்லது மக்கள் மீதோ நடத்திய தாக்குதல்கள் நிச்சயம் கண்டிக்கப்படவேண்டியவை. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அவர்களை பெற்றோர்களின் கவலையும், ஏக்கங்களும் தாய்க்குத் தாய் வேறுபட்டதல்லவே. புலிகளைப் பெற்ற தாயின் வேதனையும், புளொட், டெலோ, ஈ பி ஆர் எல் எப், ஈரோஸ் என்று மற்றைய இயக்கங்களைச் சேர்ந்த பிள்ளைகளைப் பெற்றோரின் வேதனையும் ஒன்றேதான். 

ஆனால் இங்கே பதியப்பட்டது இந்த இயக்கங்கள் எவற்றிலும் தொடர்புபடாத ஒரு பொதுமகனின் இழப்பு. அவருடன் சேர்ந்தே சிங்களப் பேரினவாதத்தால் ஒரே நாளில் கொல்லப்பட்ட இன்னும் 450 பொதுமக்களின் இழப்பு. இதை நாங்கள் எள்ளி நகையாட வேண்டாமே.

புலிகளால் மற்றைய இயக்கத்தவர் கொல்லப்பட்டார்கள் என்பதனால் பொதுமக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தும் விதமாக "சரிக்குச் சரியாப் போச்சு" என்று கருத்துப்பட நீங்கள் எழுதுவது சரியா ?

சிலவேளை இப்படியான கருத்துக்களைப் பார்க்கும்போது, புலிகளோடு இருந்தார்கள் என்பதற்காகவும், அவர்களை ஆதரித்தார்கள் என்பதற்காகவும் இந்தப் பொதுமக்களின் மீதான சிங்களப் பேரினவாதத்தின் தாக்குதல்களை நாம் அவ்வப்போது தெரியாமலேயே நியாயப்படுத்திவிடுகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதேவேளை இப்படியான கருத்துக்கள் எழுதுமளவிற்கு நீங்கள் புலிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும் எண்ணிப் பார்க்கிறேன். அதில் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை. உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள், ஆனால் எத்தரப்பினராலும் பாதிக்கப்பட்ட உள்ளங்களை இன்னும் காயப்படுத்தாமல் எழுத முடியுமென்றால் எழுதுங்கள், வாசிக்கக் காத்திருக்கிறோம்.

4 hours ago, ragunathan said:

ஜீவன்,

ஆனால் எத்தரப்பினராலும் பாதிக்கப்பட்ட உள்ளங்களை இன்னும் காயப்படுத்தாமல் எழுத முடியுமென்றால் எழுதுங்கள், வாசிக்கக் காத்திருக்கிறோம்.

மன்னிக்கவும் ரகு
எனது பதில் கீழுள்ள கருத்திற்கானது. நான் செத்தால் தியாகி, நீ செத்தால் துரோகி என்பவர்களுக்கு , ஒரு புரிதல் வேண்டுமென்பதற்காக பதியப்பட்டது.

6 hours ago, nedukkalapoovan said:

வலி சுமக்கும் இந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்ல யாருளர். கிபீரை செய்தவரா.. கொடுத்தவரா.. குண்டுகளை கட்டி ஏற்றியவரா..?!

எல்லோரும் கண்மூடி.. இன்னும் இன்னும் பயிற்சி கொடுப்பதில் ஆர்வமாக உள்ளனர். எல்லாம் பணம்.

பணத்துக்கு முன் மனிதன் பிணம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ragunathan said:

அதேவேளை இப்படியான கருத்துக்கள் எழுதுமளவிற்கு நீங்கள் புலிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும் எண்ணிப் பார்க்கிறேன்.

அப்படின்னா..ஒரு அரசு.. அதன் காவல்துறை தண்டிக்கும் கொலை குற்றவாளியின்.. பொண்டாட்டி பிள்ளையும் தான் அழுகுது. அதுகாக கொலை செய்தவனை தண்டிக்காமல் விட முடியுமா.. ?! (அப்பாவிகளை கொன்ற சிங்களவனையே.. புலிகளுக்கு சமப்படுத்தி மகிழ்கின்றன சில ஓநாய்கள்.)

என்ன ரகு திடீர் என்று போதிமரத்துக்கு கீழ் அமர்ந்துவிட்டவராகி இருக்கிறீங்க.

புலிகளால் பாதிக்கப்பட்டவர்களை விட துரோகிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகம்.. அதனால் தான் துரோகிகளை புலிகள் தண்டிக்க வேண்டியும் ஏற்பட்டது. இதனை நீங்கள் உளமார மறுப்பீர்களா..??! புலிகள் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால்.. இந்த போதிமரத் தத்துவமா பேசி இருப்பீர்கள். சிந்தித்துப் பாருங்கள். உங்களை உருவாக்கிய.. சொந்த தந்தையாக இருந்தும் அவர் உங்களுக்கு செய்த அநியாயம் தான் அவரை மன்னிக்க முடியாத அளவுக்கு உங்களிடம் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது.. இங்கு கதையாகவும் அதைப் பதிந்திருக்கிறீர்கள்.

தத்துவம் பேசலாமண்ணே இப்ப பாதுகாப்பாக இருந்து கொண்டு. நினைச்சுப் பாருங்க.. இந்திய இராணுவ காலம்.. அதன் பின் சிறீலங்கா ஆக்கிரமிப்புக் காலம்.. எத்தனை அவமானங்கள்.. கெடுதிகள்... அவதிகள்..அவலங்கள்.. அழிவுகள்.. சீரழிவுகள்.. இதில் இந்த இராணுவங்களை விட அதுங்களோடு கூட நின்ற துரோகிகள்.. செய்த தீமைக்கு.. அவர்களை.. கொஞ்சியா மகிழ்வார்கள் மக்கள். இத்தனை கொடுமைகளையும் அரகேற்றியது யார் இன்னொரு தமிழிச்சி பெற்றதுகள் தானே. ஒரு கொலைகாரனையும் ஒரு மனிதப் பெண் தானே பெற்றுப் போடுகிறாள்... அதற்காக கொலைகாரனை கொலை செய் விடு என்று ஆதரிப்பீர்கள் போல் உள்ளது. 

மக்களை வதைத்த கொன்ற.. கொள்ளையடித்த.. காட்டிக்கொடுத்த.. சீரழித்த.. அந்தத் துரோகிகளில் பலர் தண்டனகள் இன்றி...இப்ப வெளிநாடுகளில்.. அகதிஅந்தஸ்துடன் வெளிநாட்டுப் பிரஜைகளாக வலம் வருகின்றனர். ஊருக்கு போய் பந்தாவும் காட்டுகின்றனர். அதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். 

அந்தத் துரோகிகளையும் ஒரு தாய் தான் பெற்றாள் என்பதற்காக.. அந்தத் தாயே வருந்தும் வண்ணம் நடந்து கொண்ட துரோகிகளுக்கு இப்ப பட்டுக்குஞ்சம் கட்டுவது கொடுமையிலும் கொடுமை. :rolleyes::unsure:tw_angry:

யாழில் வரவர ஒரு நியாயமும் அற்ற.. போதிதர்மங்கள் அதிகரித்து விட்டன. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nedukkalapoovan said:

மக்களை வதைத்த கொன்ற.. கொள்ளையடித்த.. காட்டிக்கொடுத்த.. அந்தத் துரோகிகளில் பலர் தண்டனகள் இன்றி...இப்ப வெளிநாடுகளில்.. அகதிஅந்தஸ்துடன் வெளிநாட்டுப் பிரஜைகளாக வலம் வருகின்றனர். ஊருக்கு போய் பந்தாவும் காட்டுகின்றனர். அதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இங்கே வந்து எங்கட பெண்பிள்ளைகளை சீரழிக்கின்றனர் ....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

ஒரு தாயின் வலி புரிகிறது.

ஆனால் வீதி வீதியாய் எமநு சுபீடசத்திற்காக போராடப் போனவர்களை போட்டு எரித்தபோது எவர் வந்தார்கள். அப்போது அழுத தாய்களை, நாய்களாககூட மதிக்காதவர்கள் இங்கு ஊளையிடுகிறார்கள். 

வாழ்த்துக்கள்.

ஜீவன், நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ..புறிந்தோ புறியாமலோ யார்மேலேயோ காட்ட விளையும் கோபம் நீங்கள் வருத்தப்படும், நீங்கள் கவலை படும்  உங்கள் மக்கள் மீதே வந்து விழுகின்றது என்பதை உணர்வீர்கள் என்று நினைக்கிறன். நீங்கள் கூறிகொள்ளும் நடுநிலை, ஒற்றுமை, சகோதர மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல் இவை எல்லாமே கேள்விக்குறியாகிறது.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அப்படின்னா..ஒரு அரசு.. அதன் காவல்துறை தண்டிக்கும் கொலை குற்றவாளியின்.. பொண்டாட்டி பிள்ளையும் தான் அழுகுது. அதுகாக கொலை செய்தவனை தண்டிக்காமல் விட முடியுமா.. ?! (அப்பாவிகளை கொன்ற சிங்களவனையே.. புலிகளுக்கு சமப்படுத்தி மகிழ்கின்றன சில ஓநாய்கள்.)

என்ன ரகு திடீர் என்று போதிமரத்துக்கு கீழ் அமர்ந்துவிட்டவராகி இருக்கிறீங்க.

புலிகளால் பாதிக்கப்பட்டவர்களை விட துரோகிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகம்.. அதனால் தான் துரோகிகளை புலிகள் தண்டிக்க வேண்டியும் ஏற்பட்டது. இதனை நீங்கள் உளமார மறுப்பீர்களா..??! புலிகள் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால்.. இந்த போதிமரத் தத்துவமா பேசி இருப்பீர்கள். சிந்தித்துப் பாருங்கள். உங்களை உருவாக்கிய.. சொந்த தந்தையாக இருந்தும் அவர் உங்களுக்கு செய்த அநியாயம் தான் அவரை மன்னிக்க முடியாத அளவுக்கு உங்களிடம் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது.. இங்கு கதையாகவும் அதைப் பதிந்திருக்கிறீர்கள்.

தத்துவம் பேசலாமண்ணே இப்ப பாதுகாப்பாக இருந்து கொண்டு. நினைச்சுப் பாருங்க.. இந்திய இராணுவ காலம்.. அதன் பின் சிறீலங்கா ஆக்கிரமிப்புக் காலம்.. எத்தனை அவமானங்கள்.. கெடுதிகள்... அவதிகள்..அவலங்கள்.. அழிவுகள்.. சீரழிவுகள்.. இதில் இந்த இராணுவங்களை விட அதுங்களோடு கூட நின்ற துரோகிகள்.. செய்த தீமைக்கு.. அவர்களை.. கொஞ்சியா மகிழ்வார்கள் மக்கள். இத்தனை கொடுமைகளையும் அரகேற்றியது யார் இன்னொரு தமிழிச்சி பெற்றதுகள் தானே. ஒரு கொலைகாரனையும் ஒரு மனிதப் பெண் தானே பெற்றுப் போடுகிறாள்... அதற்காக கொலைகாரனை கொலை செய் விடு என்று ஆதரிப்பீர்கள் போல் உள்ளது. 

மக்களை வதைத்த கொன்ற.. கொள்ளையடித்த.. காட்டிக்கொடுத்த.. சீரழித்த.. அந்தத் துரோகிகளில் பலர் தண்டனகள் இன்றி...இப்ப வெளிநாடுகளில்.. அகதிஅந்தஸ்துடன் வெளிநாட்டுப் பிரஜைகளாக வலம் வருகின்றனர். ஊருக்கு போய் பந்தாவும் காட்டுகின்றனர். அதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். 

அந்தத் துரோகிகளையும் ஒரு தாய் தான் பெற்றாள் என்பதற்காக.. அந்தத் தாயே வருந்தும் வண்ணம் நடந்து கொண்ட துரோகிகளுக்கு இப்ப பட்டுக்குஞ்சம் கட்டுவது கொடுமையிலும் கொடுமை. :rolleyes::unsure:tw_angry:

யாழில் வரவர ஒரு நியாயமும் அற்ற.. போதிதர்மங்கள் அதிகரித்து விட்டன. 

நான் போதிமரத்திற்குக் கீழே அமரவில்லை.

புலிகளால் எவருமே பாதிக்கப்படவில்லை என்கிறீர்களா ? 2009 இன் இறுதிப்பகுதியில் மக்கள் மேல் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கட்டாய ஆள்சேர்ப்பிலிருந்து, தப்பியோட முனைந்த மக்களைத் தடுத்தமை வரை பல அரங்கேறியிருக்கின்றன. ஆகவே நிச்சயம் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் புலிகள் மேல் கோபத்திலிருப்பதை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும் நெடுக்கர். அது விட்ட தவறுகளைத் திருத்த உதவும். விமர்சிப்பவர்கள் மேல் சேறடிப்பது எதையுமே தரப்போவதில்லை.

அதனால்த்தான் எனது இந்த போதிமரத்துச் சிந்தனையெல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

ரகு அண்ணே நாலு பேர் திரும்பத் திரும்பச் சொல்லினம் என்பதற்காக.. பல்லாயிரம் பேர் புலிகளால்..பாதிக்கப்பட்டார்கள்.. எல்லாம் புலிகளால் தான் என்று நம்ப நாங்கள் ஒன்று சிறுகுழந்தைகள் அல்ல.

முள்ளிவாய்க்கால் களத்தில் இருந்து மீண்ட எத்தனையோ பேர் இப்போது உலகம் பூராவும் வந்து வாழ்கிறார்கள். நீங்களே அவர்களிடம் நேரடியாகக் கேட்கலாம் என்ன நடந்தது என்று.

நாங்கள் கேட்டறிந்து அந்த உண்மைகளின் அடிப்படையில் பார்க்கிறப்போ.. கடைசி நிமிடம் வரை மக்கள் ஓர் நம்பிக்கையில் தான் புலிகளின் பின்னால் அவங்கள் எப்படியாவது தங்களை மீட்பார்கள்.. காப்பார்கள் என்று போனார்கள். 

ஆனால் எல்லாம் கைமீறிப் போன போது.. புலிகள் மீது மக்களுக்கு கோபம் வந்ததை விட.. அவர்களுக்கு உதவுவார் யாருமில்லையே என்ற வருத்தம் தான் வந்திருக்கிறது. 

ஏன் இன்று கூட முல்லை மக்கள்... சாட்சியம் அளிக்கும் போது புலிகளுக்கு எதிராக எத்தனை சாட்சியங்கள் பதியப்பட்டன.. மக்கள் சார்பில்..?! 

இறுதி ஐநா அறிக்கையில் புலிகள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டார்களா.. சிங்களப் படைகள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டார்களா..?!

ஐநா அடுக்கிய குற்றச்சாட்டுக்களில் புலிகள் மீது அமைந்தது இரண்டே இரண்டு தான். சிங்களப் படைகள் மீது..?!

இதே.. இந்தியப் படைகள் காலத்துக்குப் போங்கள்...

புலிகளைச் சாட்டி அந்த படை செய்த அநியாயங்கள் எத்தனை... இறுதியில் என்ன நடந்தது.. மக்கள் புலிகளை வெறுத்தார்களா. 1990 இல் புலிகள் மீள வந்த போது மக்கள் மாலை போட்டு விரவேற்கவில்லையா..??!

இதனை மக்கள் ஒட்டுக்குழுக்களுக்கு செய்தனரா..?!

பின்னர் 1996 க்குப் போங்கள்..

ரிவி ரெச 1, 2, 3இராணுவ நடவடிக்கையில் இருந்து மக்களை காக்க புலிகள் யாழ்ப்பாண நகரை விட்டே மக்கள் வெளியேறக் கேட்டார்கள்.. பின்னர் தென்மராட்சியை விட்டு வெளியேறி வன்னிக்கு போனார்கள்... இன்னும் ஒரு தொகுதியினர் தென்மராட்சியில் வடமராட்சியில் தங்கி விட்டிருந்தனர்.. இதன் போதும் புலிகள் மக்கள் வீடுகளை குண்டு வைத்து தகர்த்தனர்... வன்னிக்கு வராதவர்களை குண்டு வைச்சு கொன்றனர்.. சுட்டனர் என்று எத்தனையோ பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. எம்மவர்களே யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் சந்திரிக்கா அரசின் அறிக்கைகளுக்கு சாட்சியம் அளித்துக் கொண்டிருந்தனர்...

உண்மையில் என்ன நடந்தது...??!

2002 இல் புலிகள் குடா நாட்டிற்கு வந்த போது மக்கள் அமோக வரவேற்புக் கொடுக்கல்லயா..!!

இதனை மக்கள் ஒட்டுக்குழுக்களுக்கு செய்தனரா.. இல்லை இல்ல. அதுதான் பிரச்சனையே.. இங்கு வரும் கொக்கரிப்புக்களுக்கு காரணமே அதுதானே. 

இதே காலத்தில் தான் எங்கள் சொந்த வீடுகள் இரண்டும் உடைக்கப்பட்டது. அதனை புலிகள் உடைத்ததாக பதியச் சொல்லி.. சிறீலங்கா பொலிஸாரே சொல்லவில்லை. காரணம் வீட்டை குண்டு வைத்து தகர்த்தது இராணுவம். இறுதியில் போரில் வீடு உடைந்தது என்றுதான் பொலிஸ் பதிவு வழங்கப்பட்டது. 

ஆக... காலம் காலமாக..புலிகள் மீது.. சும்மா.. கயமையும்.. பகமையும்.. துரோகமும்.. காழ்புணர்வும் வளர்த்துத் திரிந்தவர்கள்.. ஒரு சில சம்பவங்களை வைச்சு.. திரிக்கிற திரிப்புக்கு எல்லாம் நாங்கள் எடுபட முடியாது.

1990 இல் கோட்டையில் பங்கர் வெட்ட பள்ளிக்கூடப் பிள்ளைகளை அழைத்தார்கள். உடனே எம்மவரில் சிலர் பள்ளிக்கூடத்தோட இயக்கத்துக்கு கொண்டு போறாங்களாம் என்றார்கள். 1991 இல் ஆனையிறவு அடிபாட்டின் போது நல்லூர் திருவிழாவுக்கு வரும் இளைஞர்களை யுவதிகளை பங்கர் வெட்ட அழைத்தார்கள். உடனே எம்மவர்கள் பிள்ளை பிடிக்கிறார்கள் என்றார்கள். ஆனால்.. இதே இரண்டு சம்பவத்திலும் நேரடிச் சாட்சியாக நாங்களே இருக்கம். கோட்டையில் ஒரு 6 மணித்தியாலம்.. அதுவும் அதிபரின் அனுமதியோடு.. விரும்பிய மாணவர்கள் வந்து உதவலாம் என்பது தான் கோரிக்கையாக இருந்தது. பள்ளிக்கூடமே தானா திரண்டு போனது தான் உண்மை.

1991 இல் பல இளைஞர்கள் கேட்காமலே போய் வெட்டிக்கொடுத்தது தான் உண்மை. அதில் சிலர் விமானக் குண்டு வீச்சிலும் இறக்க நேரிட்டது. சிலர் அதனையும்.. புலிகள் பிள்ளை பிடி என்றார்கள்.

1998 இல்.. வன்னியில் இருந்தப்போ.. கள பின் மருத்துவப் பணிக்காக அழைக்கத்தார்கள்... மாணவர்களை. அதிலும் பங்கெடுக்க வேண்டிய சூழல் எழுந்தது. என்ன சொன்னார்கள்.. புலிகள் ஆட் காணாது என்று புடிக்கிறாங்கள். ஆனால் உண்மை என்ன.. மாணவர்களை சொந்த விருப்பத்துக்கு அமைய.. சூழலை விளக்கி உதவிக்கு கேட்டார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு குழுவினர் என்று சுழற்சி முறையில்.. ஒவ்வொரு கள முனைக்கு அனுப்பினார்கள். 

நாங்க எல்லாம்.. இத்தனை சூழலையும் தாண்டி தானே வந்தம். புலிகள் மீது ஏன் பிடித்தார்கள்.. கட்டாயப்படுத்தினார்கள் என்று குறைசொல்லேல்ல...! ஏன்னா.. அதற்கான தேவை எமக்கில்லை. அவர்களின் கஸ்டங்களை நேரில் பார்த்த ஒருவருக்கு நாம் அவர்களுடன் இல்லையே என்ற வருத்தம் தான் மனச்சாட்சியின் படி வரணுமே தவிர.... குறை வரக்கூடாது. காரணம் அவர்கள்.. ஊதியம்.. வருமானம்.. விளம்பரம்.. ஆதாயம் தேடி அல்ல போராடினார்கள். உங்களுக்காக எங்களுக்காகப் போராடினார்கள். அதில் அவர்கள் சில காத்திரமான நேரங்களையும் கடக்க நேரிட்ட போது சில கடுமையான முடிவுகளையும் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது.

1990 களில் பாஸ் நடைமுறை வந்த போது எம்மவர்கள் என்ன சொன்னார்கள். சீதனம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று கொண்டு வரப்பட்ட போது எம்மவர்கள் என்ன சொன்னார்கள்.. என்ன செய்தார்கள்..??! ஒரே வசவு தான்.

ஆனால் அதே 1996 இல் சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி பாஸ் நடைமுறையை அமுல்படுத்திய போது யாரும் மூச்சும் விடவில்லை. விசேட அடையாள அட்டைக்கு கியூவில் கிடந்து... பாஸுக்கு குயூபில் கிடந்து தான் கொழும்புக்கு போக வேண்டி இருந்தது. இல்லை என்பீர்களா..?!

அதனை எம்மவர்கள் எவரவாது குறை சொல்லி இருப்பினம்..??!

ஏன் 1990 இல் வன்னி தாண்டி வருபவர்கள் தாண்டிக்குளம் தாண்டி வவுனியா ஜோசப் முகாமில் பதியப்படவும் பணம் கட்டவும் பணிக்கப்பட்டார்கள் இராணுவத்தாலும்.. புளொட் ஒட்டுக்குழுவாலும்... அதை எவராவது கண்டிச்சிருக்கினம்.. 

ஆனால் புலிகள் சாமாதான காலத்தில் நிதிப் பங்களிப்புச் செய்யச் சொன்ன போது எம்மவர்கள் என்ன சொன்னார்கள். வரி வரி என்று புலம்பினார்களா இல்லையா..??!

விடுங்கண்ணா..கண் முன்ன இருந்தப்பவே பல கட்டுக்கதைகளை கட்டிட்டு.. வெளிநாடுகளுக்கு ஓடுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது தான் எங்கட சனம். அப்படியான சனத்திட்ட இருந்து 100% ஆதரவு ஒரு போராட்டத்திற்கு தன்னிச்சியையாக வர வாய்ப்பே இல்லை. புலிகள் காடாயப்படுத்தினர் என்று சொல்லுறவை சிங்களவன்.. ஹிந்தியன்.. ஒட்டுக்குழுக்கள் செய்த கட்டாயப்படுத்தல்களை பேசுவதில்லை. அவற்றோடு ஒப்பிடும் போது புலிகள் செய்தது சொந்த மக்களின் மண்ணின் நலனுக்காக மிகச் சிறிய குற்றம் எனலாம்.

அதை தூக்கிப் பிடிக்கிறவை யார் என்று பார்த்தால்.. அவர்களில் அநேகர் முன்னாள் ஒட்டுக்குழுக்களும்.. சிங்கள அரச விசுவாசிகளும்.. காட்டிக்கொடுப்பாளர்களும்.. சோர அரசியல்வாதிகளும்.. இன.. மண் அக்கறையற்றவர்களும் தான். மக்களின் பெரும்பான்மையானோர் அல்ல. இதனை முதலில் நீங்கள் ஏற்றுக் கொண்டால்..

உங்கள் விமர்சனத்தில்.. ஒரு நியாயம் இருக்குன்னு நாங்க ஏற்றுக் கொள்ள முடியும். அதை மறைச்சுக் கொண்டு ஒற்றைக்கண்ணால்.. ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் காட்டும் இழி செயலை தயவுசெய்து.. புலிகளிலும் குற்றம் காணுறம்.. இருக்கு என்ற போர்வையில் செய்யாதேங்கோ. அங்கிருந்த சூழல்.. தேவை.. அதில் என்ன முடிவை எடுப்பது அவசியம் என்று சிந்தித்து எழுதனும். நியாயத்தை கதைக்கனும்.

எம்மவர்கள் சொல்வது அளப்பது எல்லாம் உண்மை என்றால்.. இவ்வளவுக்கு புலிகளை வசவு பாடும் எம்மவர்களைக் கூட..ஏன் சிங்களவன் பூப்போட்டு கும்பிடேல்ல.. வரவேற்கல்ல... கொண்டாடி மகிழல்ல. மாறாகக் கைவிடுறான்.. இல்ல.. குழிதோண்டிப் புதைக்கிறான்..??! tw_warning:tw_blush:

சிந்தியுங்கண்ணே...!!!!

Edited by nedukkalapoovan

13 hours ago, ஜீவன் சிவா said:

ஒரு தாயின் வலி புரிகிறது.

ஆனால் வீதி வீதியாய் எமநு சுபீடசத்திற்காக போராடப் போனவர்களை போட்டு எரித்தபோது எவர் வந்தார்கள். அப்போது அழுத தாய்களை, நாய்களாககூட மதிக்காதவர்கள் இங்கு ஊளையிடுகிறார்கள். 

வாழ்த்துக்கள்.

யார் அப்படி ஊளையிட்டது ஜீவன். ஆக இங்கு சீண்டலை தொடக்கி குழுவாதம் ஆரம்பித்த பின்னர் மித்திரன் பத்திரிகை வாசிக்க ஆவலாக உள்ளீர்கள் என நினைக்கிறேன். உங்கள் நோக்கம் புரிகிறது. நாட்டில் வேலையின்மை மிகவும் அதிகரித்துவிட்டது.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

முழுப்பழியிம் புலிகள் மீதுதான் என்று யார் சொன்னது. புலிகளும் பிழை விட்டார்கள் என்றுதான் சொல்ல வருகிறேன். அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என்பதுதானே கேள்வி ?

ஐ. நா அறிக்கை ராணுவத்தைத்தான் அதிகம் சாடியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, புலிகளையும் சாடியிருக்கிறதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள். மக்களை கேடயங்களாகப் பாவித்தமை, மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடை போட்டமை, சிறுவர்களை படையில் சேர்த்தமை (இது பலகாலமாக ஐ. நா வினால் முன்வைக்கப்பட்டுவரும் ஒரு குற்றச்சாட்டு என்பது நீங்கள் அறியாதது அல்ல) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் இல்லையென்று நீங்கள் கருதுகிறீர்களா ? நான் அப்படி நினைக்கவில்லை நெடுக்கர். ஆனால், ஒன்று, இவற்றை விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் புலிகள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இப்போது இல்லை என்பது வேறு கதை. 

இந்திய ராணுவம் இருந்தபோது இருந்த நிலமை வேறு நெடுக்கர். அப்போது மக்கள் புலிகளை முற்றிலுமாக நம்பினார்கள், நேசித்தார்கள். அதனால் அவர்களை குறை கூறவில்லை. புலிகளை ஆதரிக்கவேண்டியது அபோது நியாயமாகப் பட்டது.

2009 இன் முதல் சில மாதங்கள் வரையும் இதுதான் நிலமை, புலிகள் வெல்லுவார்கள், சண்டை திரும்பும் என்று பலர் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மக்களில் பெரும்பாலானோர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கள நிலமை வேறாக இருந்தது. 

குறிப்பாக ஆனந்தபுரம் தாக்குதலின் பின்னடைவு, முல்லைத்தீவுத் தரையிறக்கத் தாக்குதலின் பின்னடைவு என்பன போராளிகளையும் மக்களையும் வெகுவாகப் பாதித்திருந்தன. 

அதுமட்டுமன்றி புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்கிறார்கள், மக்கள் செறிவாக வதியும் இடங்களில் இருந்து ராணுவத்தின்மீது கனரக ஆயுதங்களால் தாக்குகிறர்கள் என்று கூறிக்கொண்டே சிங்கள ராணுவம் வகை தொகையின்றி மக்களைக் கொன்று குவித்தது. இதுமட்டுமன்றி, காயப்பட்டவர்களுக்கு மருத்துவம், உணவு ஆகியவற்றையும் புலிகளைச் சாட்டியே தடையும் செய்தது. மக்களின் அழிவு நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கு, ஆயிரம் என்று தாண்டும்போது தொடர்ந்தும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கமுடியாதென்பதை உணர்ந்துகொண்ட மக்கள் வெளியேறுவதைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வரும்போது, புலிகள் குறுக்கே நின்றார்கள். அதுமட்டுமல்லாமல் பல பதின்மவயதினரைக் கட்டாயமாகக்ப் படையில் இணைத்துக்கொண்டார்கள். இங்கேதான் பிரச்சினை ஆரம்பித்தது. இதில் புலிகளுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பே பலர்  புலிகளால் தாக்கப்படவும், இலக்குவைக்கப்படவும் வழிவகுத்தது.

உள்ளேயிருந்தால் விமானக் குண்டுவீச்சிலும், செல்த் தாக்குதலிலும் ராணுவம் கொல்கிறது, சரி, தப்பி வெளியேறலாம் என்றால் புலிகள் விடுகிறார்கள் இல்லை. இப்படியான சந்தர்ப்பத்தில் இரு போரிடும் தரப்புகள் மீதும் மக்கள் கோபப்படுவது இயல்புதானே?

தற்போது நடைபெற்றுவரும் காணாமற்போனோரின் விசாரணையில் மக்கள் குற்றம் சாட்டுவது பெரும்பாலும் ராணுவத்தைத்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இறுதிக்காலத்தில் புலிகளால் கட்டாயமாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமது பிள்ளைகள் ராணுவத்திடம் சரணடைந்தோ அல்லது கொல்லப்பட்டோ காணாமற் போனதற்கான கோபம் நிச்சயம் புலிகள் மேலும் இருக்கும் என்பதையும் மறக்கவேண்டாம். ஆனால் அதனை பெரும்பாலானோர் வெளியே சொல்லப்போவதில்லை என்பது வேறு விடயம். 

இங்கே புலிகள் மக்களைக் கொன்றார்கள் என்று சொல்லவரவில்லை, ஆனால் சிங்கள ராணுவம் தனது விருப்பத்திற்கேற்றவாறு தமிழர்களை வேட்டையாட ஒரு வகையில் புலிகளே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்ல வருகிறேன். இது புலிகளின் கடைசிநேர, வேறு வழியின்மையால் எடுக்கப்பட்ட உத்தியாக இருக்கலாம். 

ஆனால், சிங்களம் சரணடைந்த பொதுமக்களையும் போராளிகளையும் நடத்திய விதத்தைப் பார்க்கும்போது புலிகளுடன் இருந்தாலென்ன இல்லாவிட்டலென்ன, தன்னால் முடிந்தளவிற்கு தமிழர்களைக் கொன்று தள்ளியிருக்கும், அதுவும் புலிகளின் பெயரால் என்பதையும் சொல்லியே ஆகவேண்டும். ஏனென்றால் இதுதான் எமது சரித்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ragunathan said:

இனி  உங்களுக்கு நித்திரை வரும் என நினைக்கின்றேன்

அது போதும்....

நான் இதைத்தொடர்ந்து கேட்பது எதற்காக இவற்றைப்புலிகள் செய்தார்கள்?

இவற்றை செய்யாதிருக்க புலிகளுக்கு நாம் செய்திருக்கவேண்டியவை எவை?

நாம் அவற்றை செய்து கொடுத்தோமா??

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

உள்ளேயிருந்தால் விமானக் குண்டுவீச்சிலும், செல்த் தாக்குதலிலும் ராணுவம் கொல்கிறது, சரி, தப்பி வெளியேறலாம் என்றால் புலிகள் விடுகிறார்கள் இல்லை. இப்படியான சந்தர்ப்பத்தில் இரு போரிடும் தரப்புகள் மீதும் மக்கள் கோபப்படுவது இயல்புதானே?

நீங்களும் சொறீலங்கா அதிகாரிகள் போல பேச வெளிக்கிடுவது அபந்தம். புலிகள் போரின் இறுதிக் கட்டம் நெருங்க முன்னரே.. சர்வதேச செஞ்சிலுவையை தரையூடாக வந்து பொதுமக்களையும் காயமடைந்து வெளியேற விரும்புவர்களையும் எடுத்துச் செல்ல கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அது மறுக்கப்பட்டு.. கடல் வழியாக காயமடைந்தவர்களை ஒரே ஒரு செஞ்சிலுவை கப்பலை மட்டும் பாவித்து கொண்டு செல்ல அப்போதைய மகிந்த அரசு அடாத்துப் பண்ணி அனுமதித்தது.

புலிகள் மீது குற்றம் சுமத்த வெளிக்கிடும் நீங்கள் ஐநா வை வன்னியை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்கள் கோரியதை புலிகள் தடுக்கவில்லையே..?! இதற்கு என்ன சொல்லச் சொல்லுகிறீர்கள். புலிகளுக்கு இருந்த ஒரே பயம் மக்கள் பலிவாங்கப்படுவார்களோ என்பதுதான். காரணம்.. தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வராமல் புலிகளோடு மக்கள் செல்வதை சிங்களம் விரும்பி இருக்கவில்லை. அதன் விளைவு.. அவர்களையும் பயங்கரவாதிகள் என்று அழைத்தது.

மீண்டும் 1995 க்குப் போனால்.. 1996 க்குப் போனால்.. யாழ்ப்பாண இடம்பெயர்வு பின் சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் பின்னான கிளிநொச்சி இடம்பெயர்வுகள் என்பன விமர்சிக்கப்பட்டாலும்.. எத்தனையோ ஆயிரம் மக்களை இராணுவ அழிவாயுதங்களில் இருந்து காத்தது. இந்தப் படிப்பினையின் காரணமாகத்தான் மக்கள் புலிகளோடு நகர்ந்தார்கள். 

இன்னொன்றையும் வசதியாக மறந்து விட்டீர்கள்.. புலிகளோடு மக்கள் நகர்ந்ததால் தான் புலிகளும் சிக்க வேண்டி ஏற்பட்டது. (கடைசியில் புலிகள் மக்களை மனிதக் கேடயமாக்கினர் என்ற பழிப்பும்.. வேற வந்து சேர்ந்திருக்கிறது.). சிங்களப் படையை விட பலம்பொருந்திய இந்தியப் படையை புலிகள் எதிர்கொண்டு தம்மை தக்க வைக்கக் காரணம் புலிகள் மக்களை தவிர்த்து தாம் ஒதுங்கிக் கொண்டதால் ஆகும். இந்த உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நம்புகிறோம். 

ரகு அண்ணே நீங்கள் உங்கள் வசதிக்கு.. ஏதோ ஒப்புசப்புக்கு மற்றவர்கள் சொல்லினம் அல்லது அவர்களை திருப்திப்படுத்தனும் என்பதற்காக புலிகள் மீது குறை குற்றம் சொல்வதை விட்டு யதார்த்தத்தை அலசி ஆராய்ந்து எழுதுங்கள். புலிகள் தவறு விட்டார்களா இல்லையா என்பதை அதுவே உங்களுக்கு உணர்த்தனும் நெடுக்காலபோவன் சொல்ல வேண்டியதில்லை.. அதை. 

3 hours ago, ragunathan said:

இறுதிக்காலத்தில் புலிகளால் கட்டாயமாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமது பிள்ளைகள் ராணுவத்திடம் சரணடைந்தோ அல்லது கொல்லப்பட்டோ காணாமற் போனதற்கான கோபம் நிச்சயம் புலிகள் மேலும் இருக்கும் என்பதையும் மறக்கவேண்டாம். ஆனால் அதனை பெரும்பாலானோர் வெளியே சொல்லப்போவதில்லை என்பது வேறு விடயம். 

இங்கே புலிகள் மக்களைக் கொன்றார்கள் என்று சொல்லவரவில்லை, ஆனால் சிங்கள ராணுவம் தனது விருப்பத்திற்கேற்றவாறு தமிழர்களை வேட்டையாட ஒரு வகையில் புலிகளே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்ல வருகிறேன். இது புலிகளின் கடைசிநேர, வேறு வழியின்மையால் எடுக்கப்பட்ட உத்தியாக இருக்கலாம். 

ஆனால், சிங்களம் சரணடைந்த பொதுமக்களையும் போராளிகளையும் நடத்திய விதத்தைப் பார்க்கும்போது புலிகளுடன் இருந்தாலென்ன இல்லாவிட்டலென்ன, தன்னால் முடிந்தளவிற்கு தமிழர்களைக் கொன்று தள்ளியிருக்கும், அதுவும் புலிகளின் பெயரால் என்பதையும் சொல்லியே ஆகவேண்டும். ஏனென்றால் இதுதான் எமது சரித்திரம்.

பொதுவாக இராணுவத்திடம் போகும் எம்மவர்கள்.. புலிகள் மீது தாம் தப்பிக்க குற்றச்சாட்டுக்களை அடுக்குவது போராட்டம் நெடுகிலும் அவதானிக்கப்பட்ட ஒன்று. இன்றும் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து வாங்க.. புலிகள் மீது எத்தனையோ அப்பாட்டப் பழிகளைப் போட்டு கதை எழுதிக் கொண்டு தான் இருக்கினம்.. எம்மவர்கள். 

இறுதிப் போரில் கூட கட்டாய ஆர்சேர்ப்பு என்பதை காட்டிலும் வீட்டுக்கொருவர் கட்டாயம் இணைய வேண்டும் என்ற வேண்டுகோள் சமாதான காலத்திலேயே விடுக்கப்பட்ட ஒன்று தான். காரணம்.. ஓயாத அலைகள் 3 என்பது பின் புல ஆளணி இல்லாததால் தான் நாவற்குழி தச்சந்தோப்பு வரை சென்று தேக்கமடைய நேரிட்டது. அன்று போதிய பின்புல ஆளணி இருந்திருந்தால்.. யாழ் நகர் மீட்பு என்பது வெகு இலகுவாக நடந்திருக்கும்.

அந்தத் தேக்கமே பின் போராளிகளுக்கு பெரும் பின்னடைவும் ஆனது. முகமாலை வரை பின்னிழுத்து வரும் நிலையை தோற்றுவித்தது தீச்சுவாலை முறியடிப்பு வரை. 

அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதில் தான் ஆளணி பலப்படுத்தலை போராளிகள் மேற்கொள்ள உந்தப்பட்டார்கள். கட்டாய ஆட்சேர்ப்பு என்று இன்று பேசப்படுவது பின்னணிக் களத்துக்கு அனுப்பப்பட்டவர்கள் தான்.

இதே ஜெயசிக்குறு காலத்தில்.. பள்ளி மாணவர்கள் அனுமதியோடு..பின்னணி வேலைக்கு போயிருக்கிறார்கள். ஜெயசிக்குறு வெற்றியோடு அது மறக்கப்பட்டு விட்ட்டது. இன்று தோல்வி என்ற படியாலும்.. இராணுவ நெருக்குவாரத்தில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் மக்களில் சிலர் எடுத்துக் கொண்ட நிலைப்பாடு தான்.. புலிகள் கட்டாயமாகப் பிடித்துப் போனார்கள்.. என் பிள்ளை விரும்பிப் போகல்ல.. நான் என்ன செய்ய.. அவனை அவளை விடுவிங்கோ என்ற கோரிக்கை. மக்கள் தமது பிள்ளைகளை மீட்க புலிகளை பாதுக்காக்கனுன்னு சிந்திக்கப் போவதில்லை.. புலிகளை பழித்தாலும் பிள்ளை வந்தால் போதும் என்பது தான் நிலைப்பாடு.

வெளிநாடுகளில் புலிகளை பற்றி பொய்க்கதை எழுதி காட்டிக்கொடுத்தாலும் அகதி அந்தஸ்து கிடைக்கனும் என்பது தான் மக்களின் முதல் இலக்கு. அதற்காக புலிகள் மக்கள் சொல்லும் எல்லாக் குற்றங்களையும் செய்திருப்பர் என்பது அர்த்தமில்லை.  

யாரோ ஓரிருவருக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நடந்தது பலருக்கு அது கதையாகி அமைகிறது.

யாரோ ஓரிருவர் புலி பழிக்கதையில் பெற்ற பயனை எல்லோரும் பெற முண்டி அடிப்பதன் பலாபலன் தான் புலி இவ்வளவு பழிகளையும் சுமக்கக் காரணம்.

புலிகள் தவறு விடவில்லை என்பதல்ல இதன் அர்த்தம். புலிகள் விட்ட தவறுகளுக்கான சூழ்நிலைக்கு புலிகள் மட்டும் பொறுப்பல்ல. மக்களும் பொறுப்பு. மேலும் புலிகள் விடாத தவறுகளையும் விட்டதாகச் சொல்லியும் உள்ளனர் மக்கள். இதனை நீங்கள் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் புலிகள் மட்டும் தவறிழைக்கவில்லை.. புலிகள் 20% தவறிழைத்திருந்தால்.. மிச்சப் பேர் அதனை விடப் பல மடங்கு தவறிழைத்திருக்கிறார்கள்.

புலிகளின் தவறுக்கு அவர்களை அழித்து தண்டனை வழங்கி விட்டீர்கள். அப்போ மற்றவர்களுக்கு ஏன் தண்டனை வழங்காமல்.. புலிகளின் தவறைக் காட்டி  தவரிழைத்த மற்றவர்களைக் காப்பாற்ற நிற்கிறீர்கள்.. இதுதான் எங்கள் ஆதங்கம்.. வினவல்...??!

எம் மக்கள் ஒன்றும் யோக்கியமான ஆக்கள் இல்லை என்பதற்கு எங்களிடமே நிறைய ஆதாரங்கள் உள்ளன. தமக்கு ஆதாயம் வரும் என்றால் எம் மக்கள் மனச்சாட்சியே இல்லாமல் நடக்கக் கூடியவர்களாக இருப்பதையும் காண்கிறோம். மனச்சாட்சியோடு நடக்கும் மக்கள் வெகு சில சதவீதமே உள்ளனர். 

இந்த அடிப்படைகளையும் நீங்கள்.. புலிகள் மீது குற்றம் காண முற்படும் போது விளங்கிக் கொள்வது அவசியம். மற்றும்படி.. புலிகள் தவறே செய்யவில்லை என்பதல்ல வாதம். புலிகளின் தவறுக்கு புலிகள் மட்டுமல்ல காரணம் என்ற யதார்த்தத்தை சொல்வதே எங்கள் கருத்து. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இனி  உங்களுக்கு நித்திரை வரும் என நினைக்கின்றேன்

அது போதும்....

நான் இதைத்தொடர்ந்து கேட்பது எதற்காக இவற்றைப்புலிகள் செய்தார்கள்?

இவற்றை செய்யாதிருக்க புலிகளுக்கு நாம் செய்திருக்கவேண்டியவை எவை?

நாம் அவற்றை செய்து கொடுத்தோமா??

புலத்தில இருந்த நான், நீங்கள் இன்னும் எம்மை போன்ற பலர் நிலத்தில் போய் நின்று புலிகளுக்கு சரீர ரீதியாயும்  தோல் கொடுத்திருக்க வேண்டும். அதை  நாங்கள் செய்யத் தவறி  விட்டோம் அண்ணா. 
இந்த குற்ற உணர்ச்சி எப்போதும் என்னுள் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

புலத்தில இருந்த நான், நீங்கள் இன்னும் எம்மை போன்ற பலர் நிலத்தில் போய் நின்று புலிகளுக்கு சரீர ரீதியாயும்  தோல் கொடுத்திருக்க வேண்டும். அதை  நாங்கள் செய்யத் தவறி  விட்டோம் அண்ணா. 
இந்த குற்ற உணர்ச்சி எப்போதும் என்னுள் தொடரும்.

ஒவ்வொருவரும் இதனைத்தான் சிந்திக்கணும் சசி

நாம் தான் அவர்கள்

இதில் நாம் ஒதுங்கிநின்று

அல்லது தடக்கிவிட்டுவிட்டு

வெற்றியைக்கேட்பது மடமை...

மனச்சாட்சியுள்ள எந்த மனிதனும் உயிரைக்கொடுத்த அவர்கள் மீது கை விரல் நீட்டான்...

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா,இந்த கணணியிலேயே இருந்து கொண்டு, விக்கிபீடியாவை ஆதரவாய் கொண்டு எழுதுகின்ற ஒரு,சிலர் மாதிரி இல்லாமல் நாலு பேரோட பழகுறவர் ஊர்,உலகத்தில என்ன நடக்கிறது என்பதை அறிஞ்சிருப்பார் என நினைத்தேன்...இறுதி யுத்தத்திலே தப்பிக்க நினைச்ச மக்களை கண் மூடித் தனமாக சுட்டுக் கொண்ட புலிகளே இப்ப வந்து பாவமன்னிப்புக் கேட்டாலும், இவர்கள்,அவர்களை பார்த்து துரோகி என்பார்கள்...அந்த மக்களை சுட்டுட்டார்கள் என்பதற்காக அல்ல,உண்மையை சொல்லிப் போட்டார்கள் என்பதற்காக.நான்,இவர்களை பார்த்துப் பரிதாபப்படுகிறேன்.இப்படியானவர்கள் கடைசி வரைக்கும் கற்பனையிலையிலேயே வாழ வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க தேனீ.. தேசத்தை விட விக்கிபீடியா திறமுன்னு நினைக்கிறமுங்கோ. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பி அளவாயிருக்குது என்று போட்டுக் கொண்டீர்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பி என்றில்லை. குஞ்சம் என்று தெரிஞ்சு தான் கட்டிக்கிறீங்க. ஏன்னா.. இங்க ஒன்றும் விரல் சூப்பிகள் வந்து போகல்லையே. என்ன எழுதிக்கிட்டு இருக்குதுங்க சிலதுன்னு வாசிக்கக் கூடியதுகள் தானே வந்து போகுதுங்க. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

விசுகு அண்ணா,இந்த கணணியிலேயே இருந்து கொண்டு, விக்கிபீடியாவை ஆதரவாய் கொண்டு எழுதுகின்ற ஒரு,சிலர் மாதிரி இல்லாமல் நாலு பேரோட பழகுறவர் ஊர்,உலகத்தில என்ன நடக்கிறது என்பதை அறிஞ்சிருப்பார் என நினைத்தேன்...இறுதி யுத்தத்திலே தப்பிக்க நினைச்ச மக்களை கண் மூடித் தனமாக சுட்டுக் கொண்ட புலிகளே இப்ப வந்து பாவமன்னிப்புக் கேட்டாலும், இவர்கள்,அவர்களை பார்த்து துரோகி என்பார்கள்...அந்த மக்களை சுட்டுட்டார்கள் என்பதற்காக அல்ல,உண்மையை சொல்லிப் போட்டார்கள் என்பதற்காக.நான்,இவர்களை பார்த்துப் பரிதாபப்படுகிறேன்.இப்படியானவர்கள் கடைசி வரைக்கும் கற்பனையிலையிலேயே வாழ வேண்டியது தான்.

இனி  உங்களுக்கு நித்திரை வரும் என நினைக்கின்றேன்

அது போதும்....

நான் இதைத்தொடர்ந்து கேட்பது எதற்காக இவற்றைப்புலிகள் செய்தார்கள்?

இவற்றை செய்யாதிருக்க புலிகளுக்கு நாம் செய்திருக்கவேண்டியவை எவை?

நாம் அவற்றை செய்து கொடுத்தோமா??

உலகம் எவ்வளவோ வளர்ந்திருந்தபோதும்

அத்தனை வகை ஆயுதங்களையும் எம் கைக்கு கொண்டுவரும் நிலை இருந்தபோதும் 

ஒரு இலக்கை தகர்ப்பதற்கு

ஒரு உயிரை காவு கொடுக்கும் நிலையிலேயே இயக்கம் இருந்தது

அந்தளவுக்குத்தான் நாம் இயக்கத்தை வைத்திருந்தோம்

அதை பேசுவோம் முதலில் ரதி..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தோல்விக்கு முதல் காரணம் நீங்கள் எல்லாம் நாட்டை விட்டு ஓடி வந்தது...பத்தாதற்கு[சமாதான காலத்தில் கூட] உங்கள் ஊரில் உள்ள சொந்த,பந்தம் எல்லோரையும் வெளியில் எடுத்தது...காசு இருக்கிறவன் தப்பி வெளியில் போகனும்,இல்லாதவன் ஊரிலேயே அடிபட்டு சாகனும் என்று நினைத்தீர்கள் பாருங்கள். அப்பவே தொடங்கிட்டு...புலி,தேசியம் என்று கதைக்கும் நீங்களே புலிகள் மீது நம்பிக்கையில்லாததால் தான் உங்கள் குடும்ப உறவ்ய்கள் அனைவரையும் எடுத்தீர்கள்

இங்கேயிருந்து காசு மட்டும் அனுப்பினால் போதும் தலைவர் தமிழிழம் எடுத்து தருவார் என்று நினைத்தீங்கள் பாருங்கள்...ஆயுதம் இருந்தால் என்ன/இல்லா விட்டால் என்ன? அந்த ஆயுதத்தை தூக்கி சண்டை பிடிக்க ஆட்கள்[தயராக] இருந்தார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு குற்றவுணர்வு பொங்கி வழிவதைக் காண முடிகிறது. நியாயமாக இவர்கள் குற்றவுணர்வு அடைய வேண்டியோர் தான். ஆனால், இந்தக் குற்றவுணர்வை எல்லாரிடமும் சுமத்தி விட முடியாது. பயத்தை விடவும், இராணுவ அமைப்பொன்றில் சேர்ந்தால் மனிதத் தன்மைக்கு ஒவ்வாத பல காரியங்களைச் செய்ய வேண்டி வரும் என்ற எச்சரிக்கையுணர்வில் போராடச் செல்லாதோரும் உண்டு. புலிகளில் இருந்து நோட்டீஸ் கொடுத்து ஆறு மாதம் தண்டனை பெற்று வெளியேறிய பலரும் இந்தக் காரணத்தினால் வெளியேறியதாக அறிந்திருக்கிறேன். இந்தப் பின்னணியில் பார்க்கும் போது,  "நாம் போகாததால் அவர்கள் கட்டாயமாகப் பிடித்தார்கள், எனவே நாம் தான் பொறுப்பு என்பது", சிலர் புலிகளின் மேலுள்ள பக்தியினால் அவர்களைப் புனிதமாக்கப் போடும் ட்ராமா என்றே நினைக்கிறேன்!

மேலும், இந்தக் குற்றவுணர்வு, வெளிநாடுகளில் இருந்து கொண்டு இன்னும் "ஊரில் குழப்பம் வந்தால் உலகம் வந்து தீர்வு தரும்" என்று நம்பும் தமிழர்களுக்குக் கட்டாயம் இருக்க வேண்டியது தான்!

  • கருத்துக்கள உறவுகள்

கிபீருக்கு தன் அப்பாவிப் பிள்ளையைப் பறிகொடுத்த தாய்க்கு ஒரு நீதியும் இல்லை.. நீதி கிடைப்பதற்கான.. வலிகாட்டுதலும் இல்லை.

கிபீரே வைச்சிராத.. புலிகள் புனிதரா.. புனிதமற்றவரா என்று சிலர் ரெஸ்டியூப் வைச்சு.. சொந்த புத்திக் கெமிக்கல் கலந்து பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். பரிசோதனையின் பெறுபேற்றை ஏலவே தீர்மானித்தும் விட்டுத்தான்.. போலிப் பரிசோதனையும் செய்கிறார்கள்.. ஊருக்கு அளந்துகட்ட. என்னே போலி மனிதர்கள் இந்த உலகில். இவர்கள் மத்தியில் தான் இவ்வளவு காலமும் வாழ்ந்தோமா என்று நினைக்கும் போது.. அருவருப்பாக உள்ளது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.