Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொலைக்காட்சி விவாதத்தில் அரங்கேறிய அநாகரிக வார்த்தைகள் ( வீடியோ)

Featured Replies

தொலைக்காட்சி விவாதத்தில் அரங்கேறிய அநாகரிக வார்த்தைகள் ( வீடியோ)

 

ந்தி தொலைக்காட்சியில் நேற்று இரவு 9 மணியளவில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் பங்கேற்று பேசினர்.
        
விவாதத்தின் போது  “மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று சீமான் கூற அப்போது அருணணுக்கும் சீமானுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த  சீமான், “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என அநாகரிகமான முறையில் பேசினார். தொலைக்காட்சி விவாதங்கள் இப்போதைக்கு  லூசு என்ற வார்த்தையில் முடிந்திருக்கிறது.

 

***************************

மேடை நாகரீகம் அப்படீன்னா....

 

ரசியல் என்றால் என்னவென்று ஆயிரமாயிரம் பேர் விளக்கம் சொல்லியிருந்தாலும் சுருக்கமாக இப்படி சொல்லலாம்; ஒன்றை மற்றொன்று எதிர்ப்பதுதான் அரசியல்.  அது இரண்டு தனிமனிதர்களுக்கிடை யிலேயோ அல்லது இரு கொள்கைகளுக்கிடையிலே யோ இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் அதற்கான நாகரீக எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது. 

seeman11.jpg



அந்த நாகரீகத்தின் மீது எழுப்பப்பட்ட அஸ்திவாரத்தின் மீதுதான் இன்றும் அரசியல் ஆரோக்கியம் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று அரசியல் நாகரீகம் மருவிப்போய் விட்டது.  மேடை நாகரீகம் என்பது இன்றைய தலைவர்களுக்கு மறந்துபோய்விட்டது. 

தனியார் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் சிபிஎம் கட்சியைசேர்ந்த பேராசிரியர் அருணனும் ஒருமையில் பேசி மோதிக்கொண்ட காட்சிகள் அரசியல்நோக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 

தமிழக தேர்தலின் இன்றைய சூழல் குறித்த கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பான இந்நிகழ்ச்சி அது. விவாதத்தில் நாம் தமிழர் சீமான், பாஜக வானதி சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி அருணன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் சீமான் விவாதம் நடந்த ஸ்டூடியோவில் அல்லாமல் வேறு இடத்திலிருந்து விவாதத்தில் பங்கேற்றார். இந்த விவாதத்தின்போது அதிமுக திமுகவை தோற்கடிப்பது தொடர்பாக நாம் தமிழர் சீமானுக்கும், அருணனுக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது. 

அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை விட தான் ஒரு வாக்கு குறைந்து எடுத்தாலும் தான் அந்தக்கட்சியில் சேர்ந்துவிடுகிறேன் என்று குறிப்பிட்ட சீமான்,  தொடர்ந்து  கம்யூனிஸ்ட்கட்சியில் கொள்கை இல்லை என்று குறிப்பிட்டார். அதற்கு பதிலடியாக பேசிய அருணன் ' மார்க்ஸியம் பேசிவிட்டு இனவெறிக்கருத்து பேசினீர்கள். நேற்றுவரை பெரியாரை கும்பிட்டுவிட்டு இன்று பெரியாரையே வசைபாடுகிறீர்கள். உங்களிடம் என்ன கொள்கை இருக்கிறது' என சீமானை குறிப்பிட்டார். இந்த விவாதம் முற்றியநிலையில் திடீரென ஆவேசமான சீமான், 'ஏய் என்னய்யா லுசு மாதிரி பேசுற' என நேரலையிலேயே சத்தம்போட பதிலுக்கு 'நீதான்டா லுசு, யாரைப்பார்த்து லுசு ங்கிற' என பதிலுக்கு அருணன் எகிற நேரலையில் பங்கேற்ற மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

fight.jpg


இதன்பிறகு அவர்கள் இருவரையும் அவர்கள் சமாதானம் செய்தபின் நிகழ்ச்சி தொடர்ந்தது. லட்சக்கணக் கான பேர் பார்த்துக்கொண்டிருக்கிற ஒருநிகழ்ச்சியில், தன்னிலை மறந்து பேசுவதுதான் சீமான் போன்ற தலைவர்களுக்கு அழகா எனவும், சமூக வலைத்தளங்கள் வளர்ச்சிபெற்றிருக்கிற இன்றைய காலகட்டத்தில் தன் நடத்தை எத்தகைய எதிர்வினையை ஏற்படுத்தும் என்பது தெரியாதா என கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இனிவருங்காலங்களில் நினைக்கும்போதெல்லாம் பார்க்க வாய்ப்பு பெருகியுள்ள இந்நாளில் ஒரு நேரலைநிகழ்ச்சியில் சீமானின் இந்த பேச்சு நேயர்களை முகம்சுளிப்புள்ளாக்கியுள்ளது. எதிர்பார்த்ததுபோலவே சீமானுக்கு எதிரான கண்டனங்கள் வாத பிரதிவாதங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற ஆரம்பித்துவிட்டது. 

60களில் காங்கிரசுக்கு டஃப் கொடுத்த திமுகவின் பேச்சுக்களாலும் செயலாலும் டென்ஷனான நேரு, சென்னை விமானநிலையத்தின் வாசலில் நின்று 'நான்சென்ஸ்' என்றார் எரிச்சலாக.  ஒரு பெரிய கட்சியின் தலைவரான மக்கள் அபிமானம் பெற்ற நேருவின் இந்த வார்த்தை திமுகவை எரிச்சலுக்குள்ளாக்கினாலும் அதற்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பு சென்னை வந்த நேருவுக்கு கருப்பு கொடி காட்டுவது என்பதே. தேர்தலில் அரசியல் கண்ணியத்தை பேணிய தலைவர்கள் வாழ்ந்த காலம் அது.

anna%20mgr%20600%203%281%29.jpg

காங்கிரசை எதிர்த்து 1962 ல் தேர்தல் களம் கண்ட திமுக, காங்கிரஸின் செயல்பாடுகளை மேடைதோறும் கடைபரப்பி காங்கிரசுக்கு எதிரான ஓட்டுக்களை சாதுர்யமா பொறுக்கியது. அந்த எரிச்சலில் தென் தமிழகத்தில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில்  அண்ணாவை கடும்வார்த்தையை போட்டு வறுத்தெடுத்தார் மேடைப்பேச்சாளர் ஒருவர். மேடையின் நடுநாயகமாக இருந்த காமராஜர் பொங்கிஎழுந்தார். 'ஏய் என்ன பேசுற நீ...விஷயத்தை மட்டும் பேசு...சும்மா இப்படி பேசுனீன்னா மேடையை விட்டு எறங்கு' என்றார் நீளமான தன் கையை நீட்டியபடி. விக்கித்து அமர்ந்தார் அந்த பேச்சாளர்.  

மேடைநாகரிகம் என்ற வார்த்தைக்கு மதிப்பளித்த மனிதர்கள் வாழ்ந்த காலம் அது. ஆனாலும் அப்படிப்பட்ட காமராசரையே பறவை ஒன்றொடு ஒப்பிட்டு அவமதித்தார்கள் அண்ணாவுக்குப்பின் வந்த தலைவர்கள். ஆரோக்கியமான அரசியலுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்ட காலம் அதுதான். 

anna%20nehru%20300%281%29.jpgதிமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்தபோது எம்.ஜி.ஆர்-கருணாநிதி இருவருக்குமிடையே நடந்த  கருத்துமோதல்களும் அதற்கு அவர்கள் எதிர்வினையாற்றியதும் தெரிந்தவிஷயம். அதிமுக துவங்கி சில ஆண்டுகள் கழிந்தபின் நடந்த சம்பவம் அது. 

கருணாநிதி-எம்.ஜி.ஆர் மோதல் உச்சத்திலிருந்த நேரம். ஒரு மேடையில் கருணாநிதியை கடும் வார்த்தைகளால் அர்ச்சித்துவிட்டு எம்.ஜி.ஆரை வந்து சந்தித்தார் அந்த இரண்டாம் கட்டத்தலைவர். இருவரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். இரண்டாம் கட்டத்தலைவர், தான் கருணாநிதியை மேடையில் வறுத்தெடுத்ததை எம்.ஜி.ஆரிடம் பெருமிதமாக கூறினார். தலைவர் நம்மை பாராட்டுவார் என்பது அவரது எண்ணம். ஆனால் அந்த தலைவர் கதையை சொல்லி முடித்த அடுத்த வினாடி எம்.ஜி.ஆர் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச்சொன்னார். 

சம்பந்தப்பட்ட இரண்டாம் கட்டத்தலைவரை காரை விட்டு இறங்கச்சொன்னவர், “ கருணாநிதியை மேடையில் கண்டபடி பேசியதோடு இல்லாமல் அதை என்னிடமே வந்துசொல்கிறாயா...கருணாநிதியை பெயர் சொல்லிப்பேச உனக்கு என்ன் அருகதை இருக்கிறது. எனக்கும் அவருக்கும் ஆயிரம் கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆனாலும் ஒருகாலத்தில் எனக்கு தலைவராக இருந்தவர். அப்படிப்பட்டவரை நேற்று அரசியலுக்கு வந்த நீ எப்படி இப்படி பேசுவாய்...நான் உனக்கு தலைவர்...உன் தலைவரான எனக்கே அவர் தலைவராக இருந்தவர் என்றால் அவருக்கு என்ன மரியாதை தரவேண்டும்...அரசியல் வெளிச்சத்தில் இன்று நீ வந்துவிட்டாய் என்பதாற்காக பழசை மறக்கக்கூடாது. இனிமேலாவது மரியாதையாக பேசு” என சீறினார். பின்பு கிளம்பியது கார். சீறிச்சென்ற காரை பார்த்தபடி அதிர்ச்சியில் உறைந்துநின்றார் அந்த தலைவர். இப்படி அரசியலில் தங்கள் கண்ணியத்தை பேணிய தலைவர்கள் வாழ்ந்த காலம் அது.

ஆனால் இன்று அரசியலின் ஆரோக்கியம் ஐசியுவிற்கு சென்றுவிட்ட காலம். கட்சிகளின் பெயரை தேர்தல் கமிஷனில் பதிவுசெய்த கையோடு தங்களை சுற்றி தாங்களே வெளிச்சம் பாய்ச்சிக்கொள்கிறார்கள். யாரிடம் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதைப்பற்றிய கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வதில்லை. தங்களின் செயல்கள் மக்களால் கவனிக்கப்படுகிறது என்பது பற்றிய எண்ணமும் அவர்களிடம் இருப்பதில்லை.

http://www.vikatan.com/news/tamilnadu/59907-heated-word-exchange-between-seeman-cpms-arunan.art

 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா லூசு மாதிரிப் பெசிக்கிட்டிருக்காதே என்று சீமான் கூறுகிறார் தான்!

ஆனால் இது கெட்ட வார்த்தையா என்பது எனக்குத் தெரியவில்லை!

எமது ஊர்த் தமிழில் 'லூஸ்' என்று சொல்லுவது உனக்கு விசர் என்று அர்த்தப்படும்!

தமிழ் நாட்டில் வேறு மாதிரிக் கருத்தோ தெரியாது!

அருணன் என்பவர் தான் சீமானைத் தேவையேதும் இல்லாமல் கிழறிக் கொண்டிருந்த மாதிரித் தெரிந்தது!

 

இது பாண்டேவின்  சதி 

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி எழுத யாழ் கள உறவுகளுக்கு தகுதியிருக்கா என்று யோசித்தேன்.

பின் வாங்கிட்டேன்....tw_confounded:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தவறு நிகழ்ச்சித் தொகுப்பாளரினதே.

சீமான் தொலைத்தொடர்பு வழியாக இணைந்து கொண்டிருக்க மற்றைய மூவரும் நிகழ்ச்சிக் கலையகத்தில் உள்ளனர். ஒரு அரசியல் கலந்துரையாடலில்.. ஒருவருக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் மற்றவர் பேச அனுமதிக்கக் கூடாது. ஆனால்.. சீமானை சீண்டும் பாணியில் தந்தி தொலைக்காட்சி சமீப காலமாகவே செயற்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

சீமான் பேச வேண்டிய நேர வெளியில் கம்னியூஸ்டு பிடாரியை எதுக்கு கருத்துச் சொல்ல அனுமதிக்கனும். சீமானின் பேச்சுக்கு மறுப்பிருந்தால்.. அதனை தனக்குரிய பேசும் நேர வெளியில் அல்லவா மறுத்திருக்க வேண்டும்.. அந்த கம்னியூஸ்டு பிடாரி. 

தலைப்பு.. விஜயகாந்துடன் கூட்டணி பற்றி இருக்க.. கம்னியூஸ்டு ஆள்.. சீமானுக்கு எதிராக அல்லவா பிரச்சாரம் செய்கிறார். அதுவும் சீமான் முன்னிலையில். இது உண்மையில் நியாயமான ஒரு அரசியல் கலந்துரையாடல் ஆகவும் தெரியவில்லை.

மேலும் கம்னியூஸ்ட் ஆள்.. சீமானைப் பார்த்து.. நீ தான்டா லூசுன்னு.. பேசிவிட்டு.. மன்னிப்பு கோரனும் என்கிறார்... ஆனால் அவர் தான் முதன் முதலில் சீமானைப் பார்த்து.. நீ என்றும் மொழிகிறார். அதன் பின்னர் தான் சீமான் இப்படியே பேசினால் மோசமான நிலை ஏற்படும் என்று எச்சரிக்கவும்.. நிகழ்ச்சித் தொகுப்பாளர்.. கம்னியூஸ்டு பிடாரியின் குறுக்கிடலை தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார். 

இறுதியில் கம்னியூஸ்டு பிடாரியின் கருத்தை வைத்து லூசு மாதிரின்னு சீமான் சொல்ல.. கம்னியூட்டு பிடாரி.. நீ..  தாண்டா.. லூசு.. என்று ஒருமையில் மிகக் கீழ்த்தரமாக பேசிக் கொண்டு மன்னிப்பும் கேட்க வேண்டுமாம். என்ன நினைச்சிருக்கார்.. அந்த கம்னியூஸ்டு பிடாரி. தான் செய்வது எல்லாம் சரின்னா.

மொத்தத்தில் சீமான் போன்ற இளம் தலைவர்கள் இப்படியான கீழ்த்தர சக்திகள் வந்து உட்காரும் மேடைகளில் கலந்துரையாடல்களை தவிர்ப்பது நல்லது.

இந்தக் கம்னியூஸ்டு பிடாரிகள்.. முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நேரத்திலும் சிங்களவனுக்கு சார்ப்பாக அறிக்கை விட்டு ஈழத்தமிழரின் இதயங்களை மிகவும் காயப்படுத்திய மனித நேயமற்ற ஒரு கொடிய மானிடப் பிறப்புகள் என்பது ஏலவே தெரிந்த விடயமே. :rolleyes:

ஐயா வைகோவும் அண்ணன் திருமாவளவனும் இப்போ இவர்களோடு தான் கூட்டு வைச்சிருக்கினம் என்பது அவர்களின் முகத்திரையும் கிழிந்து தொங்கச் செய்துள்ளது. 

Edited by nedukkalapoovan

சீமான் கனடாவில் பங்குபற்ற வந்த கூட்டத்திற்கு முதல் நாள் ஒரு சிறிய கூட்டத்தில் இப்படிதான் தமிழ் நாட்டில் உளறுவது மாதிரி உளறி நாடு கடத்தப்பட்டவர் .ஒரு நாட்டின் சட்ட திட்டம் என்னவென்றே தெரியாத ஆள் .

ஆனால் யார் தேவாரம் பாடினாலும் கூப்பிட என்று ஒரு கூட்டம் இருக்கு மட்டும் அவர்கள் காட்டில் மழைதான் 

இவர்களுக்கும் புனர்வாழ்வு அவசியம் .

9 minutes ago, arjun said:

சீமான் கனடாவில் பங்குபற்ற வந்த கூட்டத்திற்கு முதல் நாள் ஒரு சிறிய கூட்டத்தில் இப்படிதான் தமிழ் நாட்டில் உளறுவது மாதிரி உளறி நாடு கடத்தப்பட்டவர் .ஒரு நாட்டின் சட்ட திட்டம் என்னவென்றே தெரியாத ஆள் .

ஆனால் யார் தேவாரம் பாடினாலும் கூப்பிட என்று ஒரு கூட்டம் இருக்கு மட்டும் அவர்கள் காட்டில் மழைதான் 

இவர்களுக்கும் புனர்வாழ்வு அவசியம் .

கனடாவிலை  சீமான் ஆங்கிலத்திலை பேசினவர் ... ஆகவே  கனடா அதிகாரிகள் கண்டு  பிடிச்சிட்டாங்கள்.... 

காட்டி குடுத்து துரத்தி விட காரணமாக இருந்தோம் எண்டு சொல்ல கூட துணிவு இல்லையா என்ன...? 

  • தொடங்கியவர்

சீமானும், அருணணும் மட்டும்தான் குற்றவாளிகளா...?

 

மரியாதைக்குரிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு,

உங்களுடைய பேச்சு உதாசீனப்படுத்துப்படும்போது, உங்களது பேச்சு நகைப்புக்குரியதாக ஆகும் போது, உங்களுடைய பேச்சு எந்த விளைவையும் ஏற்படுத்தாதபோது... உங்களுக்கு எப்படி இருக்கும்?  அந்த மனநிலையில் இருந்து நான் இதை எழுதுகிறேன். இது விரக்தியின் வெளிபாடு. வார்த்தைகள் அலங்காரமற்றதாக இருக்கலாம். ஆனால், வார்த்தைகளில் ஒளிந்து இருக்கும் கோபம் நிஜம். சரி, முன்னுரை போதும்,  நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

Seeman.jpg


நான் தொலைக்காட்சி விவாதங்களின் தொடர் பார்வையாளன் இல்லை. TRPயை  மனதில் வைத்து தயாரிக்கப்படும் இது போன்ற வெற்று விவாதங்கள், சமூகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது என்பது என் ஆழமான நம்பிக்கை. ஆனால், அதே நேரத்தில் இந்த விவாதங்களை இடது கையால் தள்ளியும் விட முடியாது என்றும் நம்புபவன். ஏனெனில், இது போன்ற விவாதங்கள் ஒரு தனி மனிதனை பற்றி,ஒரு சமூகத்தை பற்றி, அல்லது ஒரு குழுவை பற்றி மனிதர்களின் பொது புத்தியில் போகிற போக்கில் ஒரு கருத்தியலை உண்டாக்கிவிடும் ஆபத்தும் உண்டு. அதனால், அதில் பங்கு பெறுபவர்களும் , நெறியாளர்களும் சொற்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். ஒரு நூல் அளவு பிசகினால் கூட, அந்த நிகழ்ச்சி தரம் தாழ்ந்ததாக ஆக வாய்ப்புகள் அதிகம்.

அப்படியொரு அரசியல் விவாதம்,  தரம் தாழ்ந்ததாக மாறியதாக நேற்று இரவு நண்பர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னதுடன் மட்டும் நிறுத்தி இருக்கலாம். அந்த வீடியோவை whatsappல் அனுப்பியும் இருந்தார்கள். அதை நான் அழித்து இருக்கலாம். ஆனால், ஊடகவியலாளனுக்கு உள்ள ஒரு குறுகுறுப்பு அதை பார்க்க தூண்டியது.  அதில், இன்றைய அரசியலின் குரூர முகம் அப்பட்டமாக வெளிப்பட்டு இருந்தது.

தன்னை விட வயதில் மூத்தவரை, ‘ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா’ என்கிறார் ஒருவர். 'நீதான்டா லுசு, யாரைப்பார்த்து லூசு ங்கிற' என பதிலுக்கு அரசியல் முதிர்ச்சி பெற்ற அவரும் எகிறுகிறார். கோடிக்கணக்கான மக்கள் இதை பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்ற எந்த பிரக்ஞையும் அவர்களுக்கு இல்லாமல் போய், அந்த நிகழ்ச்சி மொத்தமும் தரம் தாழ்ந்ததாக ஆகிவிட்டது. அரசிற்கு விரோதமான கருத்துகள் சொல்லும் போது, நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தி விளம்பரம் போட பழகிய தொலைக்காட்சிகள், நேற்று ஏனோ அதற்கு முயலவில்லை... சரி, கடிதம் அதன் மையப்பொருளிலிருந்து தடம் மாறுகிறது என்று நினைக்கிறேன். மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன்.

பெருமக்கள் கூட்டம் உங்கள் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து, உங்களை உணர்ச்சிவசப்பட தூண்டியது எது...? அதில்தான் இன்றைய மோசமான அரசியல் ஒளிந்து இருக்கிறது. உங்கள் கருத்துகள் மட்டும்தான் கேட்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், எதிர் கருத்துகளை சந்திக்க மறுக்கிறீர்கள். உங்கள் எதிராளி பேசக் கூடாது என்பது உங்கள் எண்ணமாக இருக்கிறது.  இது அப்பட்டமான பாசிசம் இல்லையா...? இதை வெறும் உணர்ச்சி கொந்தளிப்பில் சிந்திய வார்த்தைகள், இதை நீங்கள் பெரிதுப்படுகிறீர்கள் என்று சொல்லிவிடாதீர்கள். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில்  இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை சிந்துவீர்கள் என்றால், நாளை நீங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடத்திற்கு செல்வீர்களானால், நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் எவ்வளவு மோசமானதாக இருக்கும்.

சீமானும், அருணணும் மட்டும்தான் குற்றவாளிகளா...?

அரசியல் களத்தில் இருக்கும் உங்களில் பலர்,  நேற்று அந்த நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்து இருக்கக்கூடும்.  சக அரசியல் தலைவர்கள்,  பொது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டது உங்களில் பலருக்கு மகிழ்வை தந்திருக்கும். ஆனால் உங்கள் மனதில் கை வைத்து சொல்லுங்கள் அவர்கள் இருவர் மட்டும்தான் குற்றவாளிகளா...? அவர்கள் இருவர் மட்டும்தான்  எதிர் கருத்தை சந்திக்க தயங்கியவர்களா...?

12825221_1160309383986907_297912908_n.jp

2003 ல் மணிசங்கர் அய்யர், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன்  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்த மேடையில் ஜெயலலிதாவுக்கு ஒவ்வாத சில கருத்துகளை பகிர்ந்த காரணங்களுக்காக, குண்டர்களால் தாக்கப்பட்டார்.  இதுபோல், எழுதக் கூசும் இன்னொரு சம்பவமும் உண்டு.

தி.மு.க மட்டும் என்ன விதிவிலக்கா...? தி.மு. க ஆட்சியின் போது, உலக செம்மொழி மாநாட்டிற்கு எதிராக கட்டுரை எழுதினார் என்ற ஒரே காரணத்துக்காக, பழ. கருப்பையா  தாக்கப்பட்டார்.

ஒவ்வொரு கட்சியும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எதிர் கருத்தை பேசுபவர்கள் மீது வன்முறையை ஏவுகிறது.  கருத்தை, கருத்தால் சந்திக்காமல், அரசியல் கட்சி மேடைகளில்,  தனி மனிதனை இழிவுபடுத்தும் வார்த்தைகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் போக்கு தொடங்கி,  பல ஆண்டுகள் ஆகிறது. இது திராவிட கட்களின் கலாசாரம் என்று அனைத்து பழிகளையும் அவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. அவர்கள் வளர்ந்த கட்சிகளாக இருப்பதால், அது வெளியில் தெரிகிறது. அரசியல் அரங்கில் நேற்று துளிர்த்த கட்சிகள் கூட அப்படிதான் இருக்கிறது. பா.ம.க, தே.மு.தி.க மேடைகளில் இரண்டாம் கட்ட தலைவர்கள்  அச்சில் ஏற்ற முடியாத அளவிற்கு, தனி மனித வசை வார்த்தைகளை உதிர்த்துள்ளார்கள். அதை அப்போது மேடையில் அமர்ந்து இருக்கும் தலைவர்கள் தடுத்ததில்லை... இதன் நீட்சிதான் இப்போது தொலைக்காட்சி விவாதங்களில், ‘‘ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா’ போன்ற சொல்லாடல்கள்.

rsz_12804143_1160309393986906_2094470029


ஏன் உங்கள் தத்துவங்களை வைத்து மக்களை ஈர்க்க முடியாதா...?

rsz_dance_show.jpgஏன் உங்களால், உங்கள் கட்சியின் தத்துவத்தை  முன் வைத்து மக்களை ஈர்க்க முடிவதில்லை...? ஏன் உங்களுக்கு கூட்டத்தை கூட்ட குத்தாட்ட பாடல்கள் தேவைப்படுகிறது...? ஏன் பொது கூட்டங்களுக்கு வந்த கூட்டத்தை தக்க வைக்க, இரண்டாம் கட்ட தலைவர்களின் ஆபாசப் பேச்சு தேவைப்படுகிறது...? ஏன் மது வாங்கி கொடுத்து கூட்டத்தை கூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டீர்கள்...?   சின்ன காரணம் தான்,  மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். ஏன் நம்பிக்கை இழந்து விட்டார்கள்?  என்ற கேள்விக்கான விடையும் மிக எளிமையானது. நீங்கள் முன் மொழியும் தத்துவத்தை நீங்களே பின்பற்றுவதில்லை. இதை பூசி மெழுக தான்,  குத்தாட்டம், சாராயம் என்று அனைத்து அரிதாரங்களையும் பூசுகிறீர்கள்.

அரிதினும் அரிதாக, உங்கள் தவறுகளை யாரேனும் சுட்டிக் காட்டினால், நீங்கள் சமநிலையை இழக்கிறீர்கள், அவர்கள் மீது தனி மனித தாக்குதலை கட்டவிழ்த்து விடுகிறீர்கள்.

தமிழ் சமூகத்தின் பெருவாரி மக்கள் உங்கள் வெற்று பேச்சுகள் மீது நம்பிக்கை இழந்து பல நாட்கள் ஆகிறது. உங்கள் பேச்சை கேட்க கூடும் கூட்டம், உங்கள் மீது நம்பிக்கை வைத்து கூடிய கூட்டம் இல்லை என்பதை வரலாறு பல முறை உங்களுக்கு உணர்த்தி உருக்கிறது. அதை பார்வையாளனாக இருக்கும் எங்களை விட களத்தில் இருக்கும் உங்களுக்கு நன்கு தெரியும்.

உங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. தேர்தல் வெற்றிகளை கணக்கில் கொள்ளாமல், உங்கள் தத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சியுங்கள். அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள்.



வாக்கு வங்கி அரசியலில் அடி எடுத்து வைக்கும் சீமானுக்கு,  
மாற்று அரசியல் கூட்டணியின் பிரதிநிதியான அருணணுக்கு ...

 


12822214_1160309380653574_828744193_n.jpவிவாதத்தில் நீங்கள் உதிர்த்த சொல்லாடல்களை, உங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நீங்கள்  பார்த்து இருக்கக் கூடும். அப்படி பார்க்கவில்லை என்றால், ஒரு முறை பாருங்கள். நீங்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டீர்கள் என்று உங்களுக்கு தெரியும். ஒரு வேளை நிகழ்ச்சியை பார்த்த உங்கள் அன்பு ரசிக தம்பிகள், “அண்ணா... பின்னிட்டீங்க... தோழர்கள் ட்ரவுசரை கழட்டிடீங்க...” என்று புகழ்ந்து இருக்கக் கூடும். அதற்கு, நீங்கள் மயங்கி விடாதீர்கள். அருணனிடம் மனம் திறந்து மன்னிப்பு கேளுங்கள்.

நான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டுவீர்கள் என்றால், நீங்கள் இது போன்ற தரம் தாழ்ந்த மோசமான சொல்லாடல்கள் மூலம் மக்கள் மனதில் இன்னொரு அச்சத்தையும் விதைக்கிறீர்கள். ஆம். பொதுவில் இப்படி நடந்து கொள்ளும் நீங்கள், நாளை சட்டசபை செல்வீர்கள் என்றால், உங்கள் நடவடிக்கை கண்ணியமானதாக இருக்குமா....?

தோழர் அருணனுக்கு, அரசியலில் மூத்தவர் நீங்கள். சீமானுக்கு நீங்களே முதலில் நட்பு கரம் நீட்டுவதும் தவறில்லை. அதுதான் அரசியல் மாண்பும் கூட...!

http://www.vikatan.com/news/coverstory/59918-open-letter-to-the-most-respected-political-leader.art

நாங்கள் தான் மற்று  ....  மக்கள் நல கூட்டணி...   tw_blush:   

12804679_199504657078866_585987949642024

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவும் இப்ப துரோகியாகி விட்டாரா? உப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ துரோகி இல்ல.... கூட்டுச் சரியில்லை இதுதான் கருத்தாகப் பதியப்படுகிறது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நோ நோ வைகோ துரோகியில்லை.

அவர் தமிழரே இல்லை.

இதுதான் லேட்டஸ்டு.

இனி சீமான் முத்திரை குத்தினாக்கள மட்டும்தான் தமிழர் என ஏற்போம். வீரபாண்டிய கட்டப்பொம்மன், ராணி மங்கம்மா, மதுரை வீரன், பொம்மி, யாருமே தமிழரில்லை.

புரிஞ்சுதா?

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ துரோகியல்ல.. கூட்டுச் சரியில்லை.

வைகோ தமிழகத்தை சேர்ந்த தெலுங்குப் பூர்வீகம் உள்ளவர். தமிழ் மொழி.. தமிழ் இனபற்றுள்ளவர்.

வைகோ திராவிட வாதத்தில் மூழ்கிக் கிடக்கிறவர். தமிழ் தேசிய தமிழின அடையாளத்தை எச்சரிக்கையாக நோக்குவது அவரின் பலவீனம். 

இவை எல்லாம் யதார்த்தம். சீமான் சொன்னா என்ன சொல்லாட்டி என்ன. tw_blush:

Edited by nedukkalapoovan

வைகோ பற்றி சீமான்... 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இனி சீமான் முத்திரை குத்தினாக்கள மட்டும்தான் தமிழர் என ஏற்போம். வீரபாண்டிய கட்டப்பொம்மன், ராணி மங்கம்மா, மதுரை வீரன், பொம்மி, யாருமே தமிழரில்லை.

புரிஞ்சுதா?

அடடா, அப்ப சீமான் தான் இப்ப தமிழ் அக்ரெடிற்றிங் ஏஜென்சியா? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் கிட்டத்தட்ட ஐ எஸ் முத்திரை மாதிரி.

பிராமணர் 3000 வருடங்களாய் நம்முடன் இருப்பதால் அவர்கள் தமிழர் என்கிறார்.

ஆனால் ஶ்ரீரங்கத்து பிராமணன் பெங்களூருக்கு பஞ்சம் பிழைக்கப்போன போது பிறந்த மகள் ஜெயலலிதா கன்னடத்தியாம் ?

வீட்டில் தமிழ் தவிர வேறு மொழி பேசினால் தமிழர் இல்லையாம், அப்போ முக்கால்வாசி புலம்பெயர் இரண்டாம் தலைமுறை, மலேசிய, தென்னாபிரிக்க மொரிச்யஸ் தமிழரும் தமிழர் இல்லையோ?

3000 வருட பிராமணனை ஏற்க முடியும் ஆனால் 600 வருட நாயக்கனை ஏற்க முடியாதாம். 

தான் ஜெயாவை/வைகோவை/காங்./திமுகவை  ஆதரித்தால் அது ராஜதந்திர காய்நகர்த்தலாம் அதையே கம்யூனிஸ்ட் செய்தால் அது கொள்கையற்ற அரசியலாம்.

80 களில் எம் ஜி ஆருக்கு துக்ளக் போட்ட தலையங்கம். முரண்பாடே உன் மறுபெயர்தான் முதல்வரோ?

முரண்பாடே உன் மறுபெயர்தான் சீமானோ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அருணன் கோமாளியை போலவே இன்னுமொருவரும் உள்ளார் ...காங்கிரஸ் M.L.A விஜயதாரணி ....இருவரிடமும் கருத்து பஞ்சம் ஏற்ப்பட்டால் 
தொடர்ந்து குரைக்க தொடங்கிவிடுவார்கள்....அதாவது எதிர்கருத்தாளரின் விவாதத்தை திசை திருப்ப கண்ட பாட்டிற்கு கண்டதெல்லாம் பேசுவார்கள் ...
மேலே உள்ள விவாதத்தை முழுவதுமாக பார்க்க வேண்டும் .... எல்லோருடனும் கூட்டணி வைத்து சல்லாபித்து விட்டு வந்து இப்போது புது கணக்கு என்று ஒன்றை அருணன் ஆரம்பித்தார் ....எல்லோரும் சேர்ந்து கிடுகிப்பிடிக்க ...அதிலும் சீமான் கொஞ்சம் மும்மூரமாக குரல் வளையை பிடிக்க
மல்லுக்கட்ட முடியாத அருணன் உளறுகிறார் ....போதாக்குறைக்கு விகடனும் வகுப்பெடுக்கிறது ....E.V.K.S இளங்கோவன் பேசாத வார்த்தைகளா 
.அவருக்கும் இதே  விகடன் வகுப்பெடுத்திருந்ததா  ....

9 hours ago, goshan_che said:

ஆமாம் கிட்டத்தட்ட ஐ எஸ் முத்திரை மாதிரி.

பிராமணர் 3000 வருடங்களாய் நம்முடன் இருப்பதால் அவர்கள் தமிழர் என்கிறார்.

ஆனால் ஶ்ரீரங்கத்து பிராமணன் பெங்களூருக்கு பஞ்சம் பிழைக்கப்போன போது பிறந்த மகள் ஜெயலலிதா கன்னடத்தியாம் ?

அறிவு காதாலை வளியுற மாதிரி இருக்கண்ணை.....  

 ஶ்ரீரங்கத்தில் பூசை செய்பவர்கள் வைனவ பிராமணர் ஐயங்கர் எண்று சொல்லப்படுபவர்கள் தெலுங்கு கன்னட அடி கொண்ட வைனவ பிராமணர்களுக்கும்..   நாங்கள்  ஐயர் எண்று சொல்லும்  தமிழ் பிராமணர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது...  

முதலில் சொல்லப்படும் சுருக்கத்தை வைத்து உளராமல்  விவரமாக விடயம் அறிந்து எழுதுங்கள்....

9 hours ago, goshan_che said:

வீட்டில் தமிழ் தவிர வேறு மொழி பேசினால் தமிழர் இல்லையாம், அப்போ முக்கால்வாசி புலம்பெயர் இரண்டாம் தலைமுறை, மலேசிய, தென்னாபிரிக்க மொரிச்யஸ் தமிழரும் தமிழர் இல்லையோ?

3000 வருட பிராமணனை ஏற்க முடியும் ஆனால் 600 வருட நாயக்கனை ஏற்க முடியாதாம். 

தான் ஜெயாவை/வைகோவை/காங்./திமுகவை  ஆதரித்தால் அது ராஜதந்திர காய்நகர்த்தலாம் அதையே கம்யூனிஸ்ட் செய்தால் அது கொள்கையற்ற அரசியலாம்.

80 களில் எம் ஜி ஆருக்கு துக்ளக் போட்ட தலையங்கம். முரண்பாடே உன் மறுபெயர்தான் முதல்வரோ?

முரண்பாடே உன் மறுபெயர்தான் சீமானோ?

.நாங்கள் போய் வாழும் நாடுகளிலை எல்லாம் நாங்கள் தான் ஆழ போகிறம் எண்டு யாரும் அடம் பிடிக்கவில்லை...   

மற்றது  நாயக்கன் நாயக்கனாகவே இருக்கட்டும்...  அவர்களை இனமாற்றம் செய்யும் வேலையை நீங்கள் செய்ய வேண்டியதில்லை..  அவர்களின் சுயத்தை அவர்களே தீர்மானிக்கட்டும்...   

 வந்தேறிகளை வாழ வைத்து  அழிந்த உலக இனம் எண்றால் அது இரண்டுதான்....   ஒண்று பலஸ்தீனர்கள் இரண்டாவது தமிழன்....

தமிழனை ஆழ்வதுக்கு எதுக்கு திருட்டு திராவிடம்...??   கர்நாடாகாவில் ஒரு கோடி தமிழன் இருக்கிறான்...  அதுகாகா அங்கே திருட்டு திராவிடமா ஆட்ச்சி செய்கிறது...?

  • கருத்துக்கள உறவுகள்

தல நீங்கள் சீமானுக்கும் மேல,

அவர் பிராமணர் எல்லாம் தமிழர் எண்டுறார் நீங்க ஐயர் தமிழர் ஐயங்கார் தமிழர் இல்லை எண்டுறியள்.

அப்ப ராமானுஜர் தமிழரா இல்லையா?

ஆழ்வார்கள்?

போறபோகில சீமானின் குடும்பம் மட்டும்தான் தமிழர் எண்டாகப்போகுது ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாடு ஜாதி பிரிவுகளை பற்றி ஈழ தமிழர்கள் பேசி கொள்வதும், தமிழ் நாடு அரசியலை ஆழ்ந்து கவனிப்பது சுவாரசியமாக உள்ளது இந்த தமிழக தமிழனுக்கு.

சீமான், இவர் நிச்சயம் ஒரு வயதில் மூத்த, அதுவும் அரசியல் லாபமே சுவைக்காத அருணனை லூசு என்று சொல்லியது தமிழகத்தில் ஒரு எதிர்ப்பை அவருக்கு கொடுத்து உள்ளது என்பது மறுக்க முடியாதது. சீமான் வெறும் உரக்க பேசுவதால் மட்டும் தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடிக்க முடியாது. பண்பாளனாகவும், இருக்கும் திராவிட கட்சிகளின் நடவடிக்கைகளில் இருந்து தான் வேறுபட்டவன் என்று மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஏற்கனவே விஜய காந்தின் உளறல் மற்றும் அநாகரீக பேச்சுக்களை கேட்டு வெறுபடைந்துள்ள தமிழக மக்கள், சீமானிடம் இருந்து இந்த அநாகரீக பேச்சை எதிர் பார்க்க வில்லை என்பதே உண்மை. 

மேலும், என்னை கேட்டால் ஐயரும், ஐயங்காரும் தங்களை தாங்களே தமிழர்கள் என்று எப்பொழுதும் வெளிபடையாக சொல்லி கொண்டு நான் கேட்டதில்லை. அவர்கள், தமிழ் மன்னர்களை ஆட்டி படைத்தவர்கள். யாகம் செய்ய தமிழ் நாட்டிற்க்கு வந்தவர்கள். அவ்வளவே. ஆனால் தமிழுக்கும் சமுசுகிரதிர்க்கும் நிறைய தொண்டு ஆற்றியவர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.