Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோஹினூர் வைரம் பிரிட்டனுக்கு 'அன்பளிப்பாகவே கொடுக்கப்பட்டது'

Featured Replies

கோஹினூர் வைரம் பிரிட்டனுக்கு 'அன்பளிப்பாகவே கொடுக்கப்பட்டது'

150723083927_koh-i-noor_diamond.jpg

 பிரிட்டிஷ் மகாராணியின் தயார் இறந்தபோது அவரது பிரேதப் பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்த கோஹினூர் வைரம் பொதித்த கிரீடம்

பிரிட்டனில் உள்ள விலைமதிப்பற்ற கோஹினூர் வைரத்தை மீளப்பெற்றுக் கொள்ள இந்தியா முயற்சிக்கக் கூடாது என்று இந்தியாவின் உச்சநீதிமன்றத்திடம் அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

அந்த வைரம் பிரிட்டனால் திருடப்படவில்லை என்ற காரணத்தினாலேயே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பிரிட்டனுக்குள் கொண்டுவரப்பட்ட இந்த வைரம், டவர் ஆஃப் லண்டனில் அரச குடும்பத்து ஆபரணங்களின் ஒருபகுதியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீளப்பெற்று வர வேண்டும் என்று கோரி சிவில் அமைப்பொன்று நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்திருந்தது.

கோஹினூர் வைரம், பஞ்சாபி மகாராஜா ரஞ்சித் சிங்கினால் பிரிட்டனுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாக இந்தியாவின் கலாசார அமைச்சு பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/india/2016/04/160418_kohinoor_diamond?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

சில இந்திய அரசியல் வாதிகள் கதை கேட்டால், மண்டை காஞ்சு போகும்.

முதலில், இந்தியா என்ற நாட்டினையே, பிரிட்டிஷ் காரர்கள் உருவாகிய நிலையில் யாரு அன்பளிப்பாக கொடுத்தது? இந்தியாவா?

ஒரு குறு நில மன்னர், தன்னிடம் இருந்த இந்த வைரத்தினை தனது தலைப்பாகையில் வைத்திருந்தார், மறந்து விட்டார்.

அவரை சந்தித்த வெள்ளையரின் தொப்பி, அவரை கவர, அதைக் பரிசாக கேட்டார். இவரும் பரவாயில்லை, உங்களது தலைப்பாகையைத் தாருங்கள், மாத்திக் கொள்வோம் என்றார்.

மாத்திக் கொண்ட பின்னர், வெள்ளையர் போய் நீண்ட காலத்துக்குப் பின்னர் தான் வைரமும் சேர்ந்தே போனதும் தெரிந்தது அந்த மன்னருக்கு.

போச்சு, இனி எங்க வரப் போகுது என்று விட்டு விட்டார்.

கொண்டு போன வெள்ளையரோ, தலைப்பாகை யை தூக்கி மூலையில் வீசி எறிந்தார். அதில் இருந்து விழுந்த கல்லை, மதிப்பு தெரியாமல் வீசப் போனவர், பார்கலாம் என்று தனது கோட் உள் பையில் போட்டு தொங்க விட்டு மறந்தும் போய் விட்டார்.

நாளடைவில், அந்த மன்னர் வைரக் கல் தொலைத்த கதை கேள்விப் பட்டு, தேடி எடுத்து, தனது விக்டோரியா ராணியாருக்கு அனுப்பி வைத்தார் அவர்.

ஆகவே அந்த மன்னர் அன்பளிப்பாக கொடுத்தது. அவர் இன்றைய பாகிஸ்தான், இந்தியா பகுதிகளுள் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தினை ஆண்டவர் என்ற வகையில் இரு நாடுகளும் உரிமை கோரினாலும், இந்த இரு நாடுகளும் பிரிட்டிஷ் காரர்களால் உருவாகப் பட்டவை என்பதால், அவர்களது கோரிக்கையில் வீரியம் இல்லை என்பது பிரிட்டிஷ்காரர்களுக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கொண்டு போன வெள்ளையரோ, தலைப்பாகை யை தூக்கி மூலையில் வீசி எறிந்தார். அதில் இருந்து விழுந்த கல்லை, மதிப்பு தெரியாமல் வீசப் போனவர், பார்கலாம் என்று தனது கோட் உள் பையில் போட்டு தொங்க விட்டு மறந்தும் போய் விட்டார்.

நாதமுனியர்... எல்லாம் வடிவாய் பக்கத்தில நிண்டு பாத்த மாதிரி, வர்ணனை அந்த மாதிரி இருக்கு. Smiley

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

நாதமுனியர்... எல்லாம் வடிவாய் பக்கத்தில நிண்டு பாத்த மாதிரி, வர்ணனை அந்த மாதிரி இருக்கு. Smiley

ஜூனியர் விகடனில் மதன் எழுதிய வந்தார்கள், வென்றார்கள் புத்தகத்தில் உள்ள குறிப்பு அது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோஹினூர் வைரம் தோஷமுள்ளது என்று படித்த ஞாபகம், ஆனால் அதை வைத்திருக்கும் பிரிட்டிஷ்சார் சந்தோஷமாய்த்தான் இருக்கின்றார்கள். ஆயினும் பெருந்தேசங்களை வென்று ஆண்டவர்கள் இன்று மெலிந்த தேகமாய் சுருங்கியதற்கு இந்தத் தோஷம்தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை, நீங்கள் நினைத்தால் கம்பனி பொறுப்பேற்காது...!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

இந்த தோஷமுள்ள கோஹினூர் வைரத்தை.... இந்தியா, 
பிரிட்டனும் தள்ளி விட்ட பின்புதான்.... இந்தியா  வல்லரசு கனவை நோக்கி நகருது. Smiley

  • கருத்துக்கள உறவுகள்

கோசன், 

இந்த பக்கம் கேட்கிற வேலையை இன்னும் விடவில்லையோ? வீட்டில திண்ணைல இருந்து பழசுகள், கதை கேட்கிற மாதிரி இருக்குது! 

சரித்திரக் கதைகள் முக்கிய ஒரு விடயத்தை வைத்து பின்னர் மிகுதி விடயங்கள் புனையப்படுபவை. உதாரணம்: பொன்னியின் செல்வன்.

இங்கே ஒவ்வொருவரும் தமது புனைவுகளுடன் தான் கதை சொல்லி இருக்கலாம். ஆகவே நீங்கள் தந்த லிங்கோ, அல்ல நான் சொன்னதோ, சரி என்று இருவரும் விவாதம் செய்ய முடியாது.

நான் வாசித்த விடயத்தை சுவாரசியமாக தர முயன்றேன். 

இதுக்குள் வந்து பக்கம் கேட்பது (திண்ணைல) முட்டைல மயிர் புடுங்கிற வெட்டி வேலை.

நாம வாசிச்சமா, பதிந்தமா என்று போயிட்டே இருக்கனும்.

என்ன நான் சொல்றது? :cool:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கணக்க வாசிக்கிறேன் ஒன்றையும் ஞாபகம் வைத்திருப்பதில்லை கொசிப்பைத் தவிர.ஆனால் நாதமுனியாருக்கு நல்ல ஞாபகசக்தி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

..இந்தியா  வல்லரசு கனவை நோக்கி நகருது. Smiley

வல்லரசா?

கனவுதானே? தப்பே இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான்,  நாதமுனி இங்கு எவருக்கும் சரித்திர வகுப்பெடுக்கவில்லை! அத்துடன் கோஹினூர் வைரத்துக்காக்கப் புனை கதை புனையும் தேவையும் அவருக்கு இல்லை என நினைக்கிறேன்! அவர் எங்காவது வாசித்திருப்பார் அல்லது பப்பில் இருந்து யாருடனே கதைக்கும் போது அவர்கள் அவிட்டு விட்ட கதையாகவும் இருக்கலாம்! நீங்கள் திண்ணையிலிருந்து கொண்டு அவருக்குச் சரித்திரம் படிப்பிக்காமல் ....இயலுமானால் கீழே இறங்கி வந்து பதிலெழுதல் தான் ஆம்பிளைக்கு அழகு!:unsure:

படலைக்குள்ளால எட்டிப்பார்க்கிறதும்...பிறகு ஆளைக்கண்டவுடனை திண்ணைக்கு ஓடி ஒழிக்கிறதும் அவ்வளவு நல்லதாய்த் தெரியவில்லை!

ஒண்டு அல்லது இரண்டு நாளைக்கு எண்டால் பொறுத்துக் கொள்ளலாம்!

உங்கட திண்ணைப் புலம்பல் தினசரி பிரச்சனையாய்ப் போச்சுது!tw_cookie:

திண்ணையில நீங்கள் எழுதிறதை..மட்டுறுத்தினர்களும் மட்டுறுத்த இயலாது! வீணான நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றீர்கள்!

விருப்பமெண்டால்.. இறங்கி வந்து .. கருத்துக்களை விமரிசியுங்கள்!

இல்லாவிட்டால்...கருத்தோடு சம்பந்தப் படாத உரையாடல்களைத் திண்ணையில் மேற்கொள்வதே பிரச்சைனகளைத் தவிர்க்கும்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

!

விருப்பமெண்டால்.. இறங்கி வந்து .. கருத்துக்களை விமரிசியுங்கள்!

இதுதான் ஆப்பு, பார்ப்பம் வந்து பதில் போடுகின்றாரா என்று

"உங்கட திண்ணைப் புலம்பல் தினசரி பிரச்சனையாய்ப் போச்சுது"

ஆமாம் புங்கை, திண்ணையில் நின்று ஒரே அறுவை, காணவில்லையென்றவுடன் திண்ணையில் தேடும் பலர்.

இந்த வயசு போனவர்களை திண்ணையிலிருந்து தடை செய்ய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

இதுதான் ஆப்பு, பார்ப்பம் வந்து பதில் போடுகின்றாரா என்று

"உங்கட திண்ணைப் புலம்பல் தினசரி பிரச்சனையாய்ப் போச்சுது"

ஆமாம் புங்கை, திண்ணையில் நின்று ஒரே அறுவை, காணவில்லையென்றவுடன் திண்ணையில் தேடும் பலர்.

இந்த வயசு போனவர்களை திண்ணையிலிருந்து தடை செய்ய வேண்டும்

இது எனக்கெல்லோ ஆப்புப் போல கிடக்குது...உடையார்!:unsure:

சும்மா பகிடிக்கு உடையார்.....!

  • கருத்துக்கள உறவுகள்

அவர் திண்ணைக்குள்ள நிண்டு வேலிக்குளாள எட்டிப் பார்த்து பழைய சிங்கப்பூர் பென்சனீயர் லெவலில அந்தப் புத்தகத்தில எத்தனாயாம் பக்கம் எண்டனியள்... என்று கேள்வியை போடுறார். இரவு முழுக்க, இன்றனெட் முழுவதும் துலாவி, புது லிங்குகளோள வந்து நிக்குறாராம்.

உங்க வரமாட்டாராம். அங்க நம்மல வரட்டாம்.

ஐயா, நமக்கு வேல வெட்டி இருக்குது. ஊதில மினக்கெட நேரமில்ல.

இன்னுமொரு சரித்திர பதிவு, 'மச்சு பிச்சு, கனவு நகரம்' திரில போட்டுருக்கிறன். கப்சா தான்..

அதயும் பாருங்க..

  • கருத்துக்கள உறவுகள்

ஜுனியர் விகடனில் வாசித்ததை போட்டேன் என்கிறன். ஊங்க ஒருத்தர் அது கப்சாவாம், ஆபத்தான நியூசாம். இவருக்கு புறூப் பண்ண எனக்கு வேற வேல இல்ல. ஏதோ தன்னத் தான் எல்லாத்தையும் செக் பண்ண விட்டமாதிரி அலம்பறை.. 

வேல வெட்டி இல்லீங்க.... அதுதான் வெட்டிப் புடுங்கிறம்... 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்ன, ஜூனியர் விகடனில் வாசித்த, தலைபாகை விடயம் நிகழ்ந்து தான் உள்ளது. ஆனால் ஆங்கிலேயருடன் அல்ல என்பதே சரி.

இங்கே ஒருத்தர் தான் தான் சரித்திரம் எல்லாம் கரைச்சுக் குடிச்ச அதிமேதாவி போல கதை விட்டு அடுத்தவரை மட்டம் தட்டிக் கொண்டு திரியிறார்....

போங்கப்பா, போய் எதாவது பிரயோசனமா செய்யுங்க. ஓய்வுக்கு மட்டும் வாங்க...

கோஹினூர் வைரம்

ஹிந்து புராணங்களில் கோஹினூர் 5000 வருடங்கள் பழமையானவைரம்,
இந்த கோஹினூர் வைரம் சதயபாமாவின் தந்தையான சத்யாஜித்திடம்
இருந்ததாம் ஜாம்பவான்என்பவரிடம்கைமாறி கடைசியில் ஸ்ரீகிருஷ்ணர் ஜாம்பவான்
பெண்ணை திருமணம் செய்து பெற்றார் என்பார்கள், “ச்யமந்தகமணி” என்ற
இந்த் வைரத்துக்கு ஸ்ரீகிருஷ்ணர் சரிதத்தில் தனி கதை இருக்கு, இந்த
ச்யமந்தகமணி” யால் யாதவகுலம் அழிந்தாலும், செல்வசெழிப்பும் பெற்றதாம்

700 வருடங்களுக்கு முன்னால் நம் நாட்டின் புண்யநதியான கிருஷ்ணா
கோதாவரி நதி கரைகளில் உள்ள சுரங்கங்களில் கண்டெடுக்கப்பட்டது,

கோஹினூர் கண்டெடுக்கப்பட்ட இடம் கர்நாடகமாநில பகுதியாம்.
முகலாயமன்னர் பாபரின் மகன் ஹூமாயூன் இப்ரஹாம் லோடி எனற
அரசனை ஜெயித்து இந்த் அபூர்வவைரத்தை பெற்றாராம்,

பாரசீக ராஜா நாதீர் ஷா முகலாயமன்னர்களை வென்றார், அதில்
ஒருமுகலாய மன்னர் தன் தலைப்பாகையில் கோஹினூர் வைரத்தை
மறைத்து வைத்து மற்ற தங்க வைர நகைகளை நாதீர் ஷாவிடம்
கொடுத்தாராம், அப்போது நாதீர் ஷா வின் மனைவி உலகத்தின்
பெரியவைரம் முகலாயமன்னர்களிடம் உள்ளது தலைப்பாகையில்
ஒளித்து வைத்து இருக்கலாம்,என்று ரகசியமாக நாதீர் ஷாவிடம் சொல்ல

நாதீர் ஷா தந்திரமாக முகலாய மன்னரிடம்
நமக்குள் சமாதனம் செய்துகொள்வோம் என்று சொல்லி தலைப்பாகை
மாற்றிக்கொள்ள சொன்னாராம், வேறு வழி இல்லாமல் தலைப்பாகை
மாற்றிக்கொண்ட முகலாய மன்னர், தலைப்பாகைக்குள்இருந்த கோஹினூர்
வைரத்தை அந்தப்புரம்சென்று நாதீர் ஷா பார்த்து வியந்தாராம்,

இதன் விலை நிர்ண்யிக்கமுடியாது, உலகுக்கே உணவு அளிக்கலாம்
ஒருநாளைக்கு என்றாராம், கோஹினூர் என்றால் ‘ஜோதிமலை” என்று
பொருள்.முகலாயவமசம் அழிந்த்து, பாரசீகவம்சம் அழிந்த்து,
ஆப்கானிஸ்தானை ஜெயித்து சீக்கியராஜா ரஞ்சித்சிங் கோஹினூர்
வைரத்தை இந்தியாவின் ஒரு ஹிந்து கோவிலுக்கு கொடுக்க உயில்
எழுதி வைத்தார், சீக்கிய ராஜ்யம் அழிந்த்து, கிழ்க்கிந்தியர் ஆட்சி
வந்த்து, ப்ரிட்டிஷ் ப்ரபு டல்ஹொஸி ரஞ்சித்சிங் உயிலை மதிக்காமல்

விக்டோரியா ராணிக்கு கோஹினூர் வைரம் கொடுக்க்ஏற்பாடு செய்தார்
,விக்டோரியா ராணியின் கணவர் ஆல்பர்ட் 186 கேரட்
வைரத்தை 105 கேரட் ஆக பட்டை தீட்டினார், விக்டோரியா ராணியின்
மகுடத்தில் 2000 வைரங்களுக்கு நடுவே நடுநாயகமாக கோஹினூர் விளங்கியது,
ராணிகள் மட்டுமே அணியவேண்டும் என்ற சட்டம் இருந்த்து,
இன்று சாபத்திற்க்கு பயந்த்தோ என்னவோ லண்டன் டவர் கோட்டையில்
ப்ரிட்டிஷ் மன்னர்களின் அணிகலன்களுடன் பத்திரமாக உள்ளது,
விஷேச விழாக்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறார்கள்,

நன்றி “மாம்பலம் டைம்ஸ்”

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

கோஹினூர் வைரம் திருடப்படவில்லை; இங்கிலாந்துக்கு பரிசாக வழங்கப்பட்டது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

diamond_2819938f.jpg
 
‘‘இந்தியாவின் கோஹினூர் வைரம் திருடப்படவில்லை. அதை இங்கிலாந்து ராணிக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியது’’ என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநில சுரங்கத்தில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய வைரம் வெட்டி யெடுக்கப்பட்டது. அதற்கு கோஹினூர் என்று பெயர் வைத்தனர். தற்போது உலகிலேயே மிகப்பெரிய வைரமாக (105 கேரட்) கோஹினூர் உள்ளது. அதன் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. இந்த வைரம் மன்னராட்சி காலத்தில் பலருடைய கைகளுக்கு மாறியது. பின்னர் இங்கிலாந்து ராணி விக்டோரியாவிடம் அந்த வைரம் சென்றடைந்தது.

இப்போது அந்த வைரம் ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட் டுள்ளது. அந்த கிரீடத்தை ஆண் டுக்கு ஒருமுறை பொது மக்களின் பார்வைக்கு வைக்கின்றனர். இங்கி லாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் ராணியாக முடிசூட்டிக் கொண்டால், கோஹி னூர் வைரத்துடன் அந்த கிரீடம் அவருக்கு சொந்தமாகிவிடும்.

இந்நிலையில், இந்தியாவின் பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரத்தை இங்கிலாந் திடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால், கோஹினூர் வைரத்தை திரும்ப ஒப்படைக்க முடியாது என்று கடந்த 2013-ம் ஆண்டு இங்கிலாந்து அரசு திட்டவட்டமாக கூறியது. மேலும், ‘‘கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதை திரும்ப தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை’’ என்று இங்கி லாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் கூறியிருந்தார்.

அதன்பின்னர், அகில இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான முன்னணி ஆகியவை இணைந்து, அந்த வைரத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வர உத்தரவிடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

அந்த மனுவை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் விசாரித்து, ‘‘கோஹினூர் வைரத்தை இங்கிலாந் திடம் இருந்து திரும்ப பெறும் எண்ணம் உள்ளதா? இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறதா? ஏனெனில், வருங் காலத்தில் அந்த வைரத்துக்கு சொந்தம் கொண்டாடினால், மத்திய அரசுக்கு சிக்கல்கள் ஏற்படும். எனவே, மத்திய அரசின் நிலை என்ன என்பது குறித்து பதில் அளிக்க வேண்டும்’’ என்று கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டார்.

அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறியதாவது:

கோஹினூர் வைரம் இந்தியா வில் இருந்து திருடப்படவில்லை. இந்தியாவில் இருந்து வலுக்கட் டாயமாக கொள்ளை அடிக்கப்படவும் இல்லை. கடந்த 1850-ம் ஆண்டு இங்கிலாந்து ராணிக்கு இந்தியா பரிசாக வழங்கி விட்டது. அதை திரும்ப கொடுங்கள் என்று கேட்க முடியாது. இதுதான் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவு அமைச்சகம் தனது நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு ரஞ்சித் குமார் கூறினார்.

இதையடுத்து 6 வாரங்களுக் குள் விரிவான பதில் அளிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி தாக்குர் உத்தரவிட்டார்.

கடந்த 1850-ம் ஆண்டு மகாராஜா ரஞ்சித் சிங், கோஹினூர் வைரத்தை கிழக்கிந்திய கம்பெ னிக்கு அன்பளிப்பாக வழங்கிய தாக கூறப்படுகிறது.

http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article8492770.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, உடையார் said:

இந்த வயசு போனவர்களை திண்ணையிலிருந்து தடை செய்ய வேண்டும்

உங்கட அப்பன் வீட்டு சொத்துதான தடை செய்ய.நாங்க திண்ணையில பாடுவம் ஆடுவம் படுத்தும் கிடப்பம்.. உங்களுக்கு எங்க குத்தி முறியுது.. பொத்திக்கொன்டு பாருங்கோ நாங்க திண்ணையில படுத்திருக்கிறதையும் காலாட்டுறதையும்.. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

நான் சொன்ன, ஜூனியர் விகடனில் வாசித்த, தலைபாகை விடயம் நிகழ்ந்து தான் உள்ளது. ஆனால் ஆங்கிலேயருடன் அல்ல என்பதே சரி.

இங்கே ஒருத்தர் தான் தான் சரித்திரம் எல்லாம் கரைச்சுக் குடிச்ச அதிமேதாவி போல கதை விட்டு அடுத்தவரை மட்டம் தட்டிக் கொண்டு திரியிறார்....

போங்கப்பா, போய் எதாவது பிரயோசனமா செய்யுங்க. ஓய்வுக்கு மட்டும் வாங்க...

கோஹினூர் வைரம்

ஹிந்து புராணங்களில் கோஹினூர் 5000 வருடங்கள் பழமையானவைரம்,
இந்த கோஹினூர் வைரம் சதயபாமாவின் தந்தையான சத்யாஜித்திடம்
இருந்ததாம் ஜாம்பவான்என்பவரிடம்கைமாறி கடைசியில் ஸ்ரீகிருஷ்ணர் ஜாம்பவான்
பெண்ணை திருமணம் செய்து பெற்றார் என்பார்கள், “ச்யமந்தகமணி” என்ற
இந்த் வைரத்துக்கு ஸ்ரீகிருஷ்ணர் சரிதத்தில் தனி கதை இருக்கு, இந்த
ச்யமந்தகமணி” யால் யாதவகுலம் அழிந்தாலும், செல்வசெழிப்பும் பெற்றதாம்

700 வருடங்களுக்கு முன்னால் நம் நாட்டின் புண்யநதியான கிருஷ்ணா
கோதாவரி நதி கரைகளில் உள்ள சுரங்கங்களில் கண்டெடுக்கப்பட்டது,

கோஹினூர் கண்டெடுக்கப்பட்ட இடம் கர்நாடகமாநில பகுதியாம்.
முகலாயமன்னர் பாபரின் மகன் ஹூமாயூன் இப்ரஹாம் லோடி எனற
அரசனை ஜெயித்து இந்த் அபூர்வவைரத்தை பெற்றாராம்,

பாரசீக ராஜா நாதீர் ஷா முகலாயமன்னர்களை வென்றார், அதில்
ஒருமுகலாய மன்னர் தன் தலைப்பாகையில் கோஹினூர் வைரத்தை
மறைத்து வைத்து மற்ற தங்க வைர நகைகளை நாதீர் ஷாவிடம்
கொடுத்தாராம், அப்போது நாதீர் ஷா வின் மனைவி உலகத்தின்
பெரியவைரம் முகலாயமன்னர்களிடம் உள்ளது தலைப்பாகையில்
ஒளித்து வைத்து இருக்கலாம்,என்று ரகசியமாக நாதீர் ஷாவிடம் சொல்ல

நாதீர் ஷா தந்திரமாக முகலாய மன்னரிடம்
நமக்குள் சமாதனம் செய்துகொள்வோம் என்று சொல்லி தலைப்பாகை
மாற்றிக்கொள்ள சொன்னாராம், வேறு வழி இல்லாமல் தலைப்பாகை
மாற்றிக்கொண்ட முகலாய மன்னர், தலைப்பாகைக்குள்இருந்த கோஹினூர்
வைரத்தை அந்தப்புரம்சென்று நாதீர் ஷா பார்த்து வியந்தாராம்,

இதன் விலை நிர்ண்யிக்கமுடியாது, உலகுக்கே உணவு அளிக்கலாம்
ஒருநாளைக்கு என்றாராம், கோஹினூர் என்றால் ‘ஜோதிமலை” என்று
பொருள்.முகலாயவமசம் அழிந்த்து, பாரசீகவம்சம் அழிந்த்து,
ஆப்கானிஸ்தானை ஜெயித்து சீக்கியராஜா ரஞ்சித்சிங் கோஹினூர்
வைரத்தை இந்தியாவின் ஒரு ஹிந்து கோவிலுக்கு கொடுக்க உயில்
எழுதி வைத்தார், சீக்கிய ராஜ்யம் அழிந்த்து, கிழ்க்கிந்தியர் ஆட்சி
வந்த்து, ப்ரிட்டிஷ் ப்ரபு டல்ஹொஸி ரஞ்சித்சிங் உயிலை மதிக்காமல்

விக்டோரியா ராணிக்கு கோஹினூர் வைரம் கொடுக்க்ஏற்பாடு செய்தார்
,விக்டோரியா ராணியின் கணவர் ஆல்பர்ட் 186 கேரட்
வைரத்தை 105 கேரட் ஆக பட்டை தீட்டினார், விக்டோரியா ராணியின்
மகுடத்தில் 2000 வைரங்களுக்கு நடுவே நடுநாயகமாக கோஹினூர் விளங்கியது,
ராணிகள் மட்டுமே அணியவேண்டும் என்ற சட்டம் இருந்த்து,
இன்று சாபத்திற்க்கு பயந்த்தோ என்னவோ லண்டன் டவர் கோட்டையில்
ப்ரிட்டிஷ் மன்னர்களின் அணிகலன்களுடன் பத்திரமாக உள்ளது,
விஷேச விழாக்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறார்கள்,

நன்றி “மாம்பலம் டைம்ஸ்”

வசிட்டரே வந்து வாழ்த்திப்போட்டுப் போயிருக்கிறார், நாதம்!

அது தான் யாழ் கள உறவுகளின் சிறப்பு!

தொடர்ந்து கருத்தாடுவோம்!  விளக்கத்துக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

வசிட்டரே வந்து வாழ்த்திப்போட்டுப் போயிருக்கிறார், நாதம்!

அது தான் யாழ் கள உறவுகளின் சிறப்பு!

தொடர்ந்து கருத்தாடுவோம்!  விளக்கத்துக்கு நன்றி!

அது நம்ம தல...

  • தொடங்கியவர்

'கோஹினூர் வைரத்தை பெறுவோம்'- அரசின் திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன?

Kohinoordiamondlong.jpg

இங்கிலாந்திடம் உள்ள கோஹினூர் வைரத்தின் வரலாற்றை மட்டுமே சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார் என்றும், கோஹினூர் வைரத்தை சுமுகமாக திரும்பப் பெற எல்லா முயற்சிகளும் மேற்கொள்வோம் என்றும் மத்திய அரசு திடீரென கூறியுள்ளது.

மிகவும் பழமையான, அரிய பொக்கிஷமாக கருதப்படும் கோஹினூர் வைரம், இங்கிலாந்துக்கு பரிசாக  இந்தியா கொடுத்தது. இந்த வைரம், இங்கிலாந்து மகாராணியின் மணிமகுடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது, லண்டன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

இதனிடையே, கோஹினூர் வைரத்தை இங்கிலாந்திடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. தற்போது, இக்கோரிக்கையை வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணையின்போது, ‘கோஹினூர் வைரத்தை திரும்ப கேட்கக்கூடாது என்பதுதான் மத்திய கலாசார அமைச்சகத்தின் நிலைப்பாடு’ என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். இதனால், கோஹினூர் வைரம் மீதான உரிமையை இந்தியா விட்டுக்கொடுத்து விட்டதாக கருதப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் நிலையில் ஒரே நாளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்றரவு மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோஹினூர் வைரம் பற்றிய மத்திய அரசின் கருத்து, இன்னும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால், ஊடகங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த செய்தி, உண்மையின் அடிப்படையில் அமையவில்லை.

உண்மை நிலவரம் என்னவென்றால், நீதிமன்றத்தில் பொதுநலன் மனு இன்னும் ஏற்கப்படவில்லை. வைரம் பற்றிய இந்திய அரசின் கருத்தைக் கேட்குமாறு சொலிசிட்டர் ஜெனரலை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதற்கு சொலிசிட்டர் ஜெனரல், கோஹினூர் வைரத்தின் வரலாற்றை மட்டுமே தெரிவித்தார். ஆகவே, இந்திய அரசு தனது கருத்தை இன்னும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை என்பதே உண்மை. அரசின் நிலைப்பாட்டை கேட்டுப்பெற கால அவகாசம் வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் கேட்டதால், உச்ச நீதிமன்றம் 6 வார கால அவகாசம் அளித்தது.

இந்த நேரத்தில், கோஹினூர் வைரத்தை சுமுகமான முறையில் மீட்டுக் கொண்டுவர எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அரசு மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறது. இதில் சுமுக தீர்வு உருவாகும் என்று இந்திய அரசுக்கு நம்பிக்கை உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/india/62760-will-make-all-efforts-kohinoor-diamond-says-govt.art

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Thirdeye said:

உங்கட அப்பன் வீட்டு சொத்துதான தடை செய்ய.

எனக்கு தெரிந்தவரையில்லை, உங்கள் தொகொவிடம் கேட்டுப்பாருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.