Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருப்பழகி கன்னடத்துப் பைங்கிளி - சரோஜாதேவி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

தொடர் பாதியிலேயே நிற்கிறதே, திரு.நாதமுனி..?

அவ்வளவுதானா..?

அமைதி, அமைதி...

வருவா.... வருவா..

அமைதி, அமைதி...:love:   :grin:

  • Replies 53
  • Views 24.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

On 24.4.2016 at 5:24 PM, suvy said:

ஒருமுறை எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். பலாலி விமான நிலையத்தில் இருந்து பலாலி வீதி வழியாக வரும்பொழுது  நாங்கள் கந்தர்மடச் சந்தியில் வைத்துப் பார்த்தோம். எம். ஜி. ஆர் நல்ல நிறமும் அழகாவும் இருந்தார். ஒரு கையால் சரோஜாதேவியை  அணைத்துக் கொண்டு மறுகையால் எல்லோருக்கும் கையசைத்துக் கொண்டு சென்றார். வீதியெங்கும் ஏராளமான மக்கள் கூடியிருந்தார்கள்....!  :rolleyes:  tw_blush:

13071936_1146593265380484_40932549936421

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஸ்டில்... எங்கிருந்து சுட்டனீங்கள்....! tw_blush:

sni2k2.jpg

MGR and Sarojadevi arriving at Palali, Jaffna airport

2zgc6r4.jpg

MGR greeted by C. Rajadurai at Batticaloa

34qsle8.jpg

MGR greeting Dudley Senanayake 1965

MGR greeting Dudley Senanayake 1965

5lcsux.jpg

MGR in Ratmalana 1965

நன்றி..http://sangam.org

  • இலங்கை தமிழ் சங்கம்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு டவுட்டு.ஏன் இவ முதல் அமைச்சராக முடியவில்லை.டவுட்டுத்தானே அதுக்காகா போட்டு மொங்கிறது இல்லை.:)

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

எனக்கு ஒரு டவுட்டு.ஏன் இவ முதல் அமைச்சராக முடியவில்லை.டவுட்டுத்தானே அதுக்காகா போட்டு மொங்கிறது இல்லை.:)

ஜெயலலிதாவை விட... 20 வருசம் முந்தி பிறந்தமையால், அந்த சான்ஸ் கிடைக்காமை போயிட்டுது. SmileySmiley

2 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு ஒரு டவுட்டு.ஏன் இவ முதல் அமைச்சராக முடியவில்லை.டவுட்டுத்தானே அதுக்காகா போட்டு மொங்கிறது இல்லை.:)

வடிவேலு ஆதவன் படத்தில சொல்லுற மாதிரி இவ சொர்க்கத்திலயும் மேக்கப்போட திரியுறதுதான் காரணமா இருக்குமோ.  confused face smiley

2 hours ago, தமிழ் சிறி said:

ஜெயலலிதாவை விட... 20 வருசம் முந்தி பிறந்தமையால், அந்த சான்ஸ் கிடைக்காமை போயிட்டுது. SmileySmiley

அப்ப நம்மட கனவுக்கன்னிக்கு 88 வயதா?  fluffy white cat crying emoticon

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு ஒரு டவுட்டு.ஏன் இவ முதல் அமைச்சராக முடியவில்லை.டவுட்டுத்தானே அதுக்காகா போட்டு மொங்கிறது இல்லை.:)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 

அட அருமை... சிரிச்சு, சிரிச்சு வயிறு புண்ணாப் போச்சு... :grin:tw_bawling::grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 4/24/2016 at 1:02 AM, Nathamuni said:

வருவா.... வருவா..

அமைதி, அமைதி...:love:   :grin:

அவ வருவாளா.. ?

அவ வருவாளா..??

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

அவ வருவாளா.. ?

அவ வருவாளா..??

 

வருவா!,  வருவா !!

ஜெமினி ஸ்டுடியோவை எஸ்.எஸ். வாசனுக்கு விற்றவர் - டைரக்டர் கே.சுப்ரமண்யம்.

தமிழ் சினிமாவின் ‘முதல் கனவுக்கன்னி’ டி.ஆர். ராஜகுமாரியை ‘கச்ச தேவயானி’ படத்தில் அறிமுகப்படுத்தியவர்.

அதன் கன்னடப் பதிப்புக்குப் புது ஹீரோயின் தேடி பெங்களூர் சென்றார். அங்கு காளிதாஸ் படம் ஓடிக் கொண்டிருந்தது.

திரையில் சரோ தெரிந்ததும், கன்னட கச்சதேவயானியைக் கண்டு பிடிக்கும் கவலை தீர்ந்தது. நேரில் சந்திக்கையில்,

‘பெங்களூரிலேயே இருந்தால் எப்படி...? பட்டணம் வாருங்கள். நாலு பட முதலாளிகள் கண்களில் படலாம்... ’ என்று சரோ குடும்பத்தினரை மதராசுக்குக் கூப்பிட்டார்.

சென்னை. வாஹினி ஸ்டுடியோ. கே. சுப்ரமணியம் இயக்கத்தில், சரோ நடிக்க கச்ச தேவயானி ஷூட்டிங் தொடங்கியது.

அன்று சரோவின் வாழ்வில் திருப்புமுனை தினம்!

‘ லன்ச் பிரேக் விட்டாங்க. பக்கத்தில் படப்பிடிப்பில் இருந்த ஹீரோ, சுப்ரமணியம் சாரைத் தேடி வந்தார்.

ஆயிரம் சூரியன் ஒரே நேரத்தில் உதிச்சா அதன் பிரகாசம் எப்படியிருக்கும்னு, அன்னிக்கு நேரில் தெரிஞ்சு கிட்டேன்.

அப்படியொரு வெளிச்சத்தோடு நுழைந்தவரைப் பார்த்ததும், எல்லாரும் எழுந்து நின்னு வணக்கம் சொன்னார்கள்.

வந்தவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் பேசாமல் உட்கார்ந்திருந்தேன்.

டைரக்டர் கே. சுப்ரமணியம் கிட்ட அவர்,

‘யாரு சார் இந்தப் பொண்ணு... புதுமுகமா? ’ன்னு விசாரித்தார். பேசிட்டுத் திரும்பிப் போறப்ப, என்னிடம் ‘செனாகிதியம்மா’ன்னு கேட்டார். கன்னடத்தில் அதுக்கு சவுக்கியமான்னு அர்த்தம். சவுக்கியம் என்பதற்கு அடையாளமாக நான் தலையை ஆட்டினேன்.

அடுத்து காபி குடிக்கிறயான்னார்... அதுக்கும் நான் மறுபடியும் மவுனமா மண்டையை மட்டும் அசைச்சேன். காபி வந்தது.

வந்தவரை சகல மரியாதைகளுடன் வழியனுப்பி வைத்தார்கள். அவர் சென்றதும் சுப்ரமணியம் சார் கிட்டப் போய், ‘யார் சார் அவங்கன்னு...? ’ கேட்டேன்.

‘என்னம்மா... உனக்குத் தெரியாதா..? அவர் தானம்மா எம்.ஜி.ஆர்.! ’ என்றார். அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

‘எவ்வளவு பெரிய மனிதர் வந்திருக்கிறார்!’ எதுவும் தெரியாமல் சும்மா இருந்து விட்டோமே... என்று எண்ணி வருந்தினேன். ’ -- சரோஜாதேவி.

சின்ன அண்ணாமலையின் சாவித்ரி பிக்சர்ஸ் உருவானது. சியாமளா ஸ்டுடியோவில் மேக் அப் போட்டுக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். சின்ன அண்ணாமலை அவரிடம் கால்ஷீட் பற்றிக் கேட்டார். மலைக்கள்ளன் மகுடம் சூட்டியதில் எம்.ஜி.ஆர். பயங்கர பிசி. அதனால் மாலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து வரை ஷூட்டிங் நடத்த முடிவானது. ஆறு மாதங்களில் படத்தை முடிக்கத் திட்டமிட்டார்கள். கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.ஸ்ரீனிவாசன். சினிமா பைனான்ஸியர். படத்தின் நெகட்டிவ் உரிமை அவரைச் சார்ந்தது.பத்மினியை நடிக்க வைக்கலாம் என்றார் ஏ.எல்.எஸ். மூன்று மாதங்கள் காத்திருக்கச் சொன்னார் பத்மினி.

‘புது நாயகி நடித்தால் நம் சவுகர்யம் போல் சீக்கிரத்தில் படத்தை முடிக்கலாம்’ என்பது எம்.ஜி.ஆரின் யோசனை. மறு பேச்சின்றி ஒப்புக்கொண்டார் சின்ன அண்ணாமலை. ஏற்கனவே இயக்குநர் ப. நீலகண்டன் சிபாரிசு செய்த சரோ நினைவுக்கு வந்தார்.‘தங்கமலை ரகசியம்’ படத்தில் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு ஆட வந்தவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். அதுவும் நாயகி அரங்கேற்றம் எடுத்த எடுப்பில் எம்.ஜி.ஆருடன்!

 

1-saroja-devi.jpg

 

 

எம்.ஜி.ஆர். ஆராயாமல் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க மாட்டார். மேக் அப் , ஸ்கிரின் டெஸ்ட் பார்த்த பிறகு தீர்மானிக்கலாம் என்றார்.அதற்குக் காரணம் உண்டு. நடனப் பெண்ணை நாயகி ஆக்குவதா..?

பல விதங்களில் வெவேறு திசைகளில் எதிர்ப்புகள் தோன்றின.

சிட்டாடல் ஸ்டுடியோ. அரிதார நிபுணர் தனகோடி. புதுப் பெண்ணுக்கு மேக் அப் போட்டு விட்டார். காமிராமேன் வி. ராமமூர்த்தி ஆயிரம் அடியில் காட்சிகளை எடுத்தார்.

‘என்னை எம்.ஜி.ஆர். ஏற்பாரா ..? அவநம்பிக்கையில் நகம் கடித்தார் சரோ.

வாகினி லேப் தியேட்டர். புதிய தாரகையின் தரிசனங்கள் திரையில் ஓடின.

எம்.ஜி.ஆர். திரும்பத் திரும்பப் பார்த்தபடிச் சிந்திக்கலானார். அவரது முடிவுக்காகக் காத்திருந்தனர். உடனடியாகப் பதில் சொல்லாமல் சஸ்பென்ஸில் தவிக்க விட்டார்.

அதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார்கள் சிலர்.

‘ சார்... அந்தப் பொண்ணு ஒரு காலைத் தாங்கித் தாங்கி நடக்குது. ஹீரோயினுக்கு சரி வருமா...? ’ எம்.ஜி.ஆர். கலகலவென்று சிரித்தார் .

‘ஏன் அதுவும் செக்ஸியாகத்தானே இருக்கு. பார்க்கப் புதுசாவும் தெரியுது. இந்தப் பொண்ணையே செலக்ட் செஞ்சுடலாம்.’

எம்.ஜி.ஆரின் நாயகித் தேர்வில் பலத்த வெற்றி பெற்றார் பி. சரோஜாதேவி. தாயார் ருத்ரம்மாள், ஹீரோயினாகி விட்டத் தன் மகளுக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம் போதாது எனத் தகராறு செய்தார். கூடுதலாக ஆயிரம் கேட்டார். ஏ.எல்.எஸ். கடுப்பானார்.

‘எம்.ஜி.ஆர். ஜோடியா நடிக்க வைக்கிறோம். அதுக்கு அவ எவ்ளோ கொடுக்கறான்னு கேளுங்க... ’ என்றார்.

யூனிட்டில் முடிந்தவரைச் சமாதானம் செய்தனர்.

‘படம் ஹிட் ஆனால் உங்கள் பெண்ணுக்கு லட்சம் கூடத் தருவார்கள். ’

‘ ஏனப்பா சுள்ளு ஹேளூ... லட்சா! ’ (என்னப்பா பொய் சொல்றே... லட்சமா) என வாயைப் பிளந்தார்.

சாவித்ரி பிக்சர்ஸின் ‘திருடாதே’ படத்தில் சரோஜாதேவிக்கு எம்.ஜி.ஆருடன் முதல் நாள் ஷூட்டிங். காட்சிப்படி அண்ணன் முஸ்தஃபாவின் போட்டோ கீழே விழுந்து நொறுங்குகிறது. தங்கை சரோ அதிர்ச்சியோடு அதை எடுக்க வேண்டும். ஒத்திகை பார்த்தார்கள்.

எம்.ஜி.ஆரின் எதிரில் ஒழுங்காக நடிக்கும் ஆர்வம்.

சரோ கண்ணாடித் துகள்களைக் கவனிக்கவில்லை. அவைக் காலில் பலமாகக் குத்திவிட்டன. சங்கீதமாக சரோவின் அலறல் சத்தம்.

எம்.ஜி.ஆர். எங்கிருந்தோ பதறியபடி ஓடோடி வந்தார். சொட்டுச் சொட்டாக சரோவின் குருதி சிந்திச் சுற்றிலும் ரத்தத் திலகங்கள்.

‘சரோஜா இப்படி வாம்மா. ரொம்ப வலிக்குதாம்மா..? ’ அன்புடன் அழைத்தார் எம்.ஜி.ஆர். கொஞ்சமும் லஜ்ஜையில்லாமல், சரோவின் ரத்தம் பொங்கும் பாதத்தைத் தன் மடியில் எடுத்து வைத்துக் கொண்டார்.

இலேசாகக் கீறி வாட் லோடு துண்டுகளை எடுத்தார். அத்தோடு நிற்காமல் தனது நட்சத்திரக் கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து, காலில் பேண்டேஜ் மாதிரி கட்டி விட்டார்.

‘அண்ணே..! ’

நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் திக்குமுக்காடினார் சரோ.

தாயார் ருத்ரம்மா, மகளிடம்,

‘சரோஜா இனி நான் செத்தால் கூட நீ கவலைப்பட வேணாம். அண்ணன் எம்.ஜி.ஆர். உன்னை கவனித்துக் கொள்ள இருக்கிறார். ’ என்றார்.

--------------

புரட்சி நடிகர் தனது சொந்தத் தயாரிப்பான நாடோடி மன்னனில் முழு கவனம் செலுத்தத் தொடங்கினார். அதில் ரசிகர்கள் விரும்பிய அவரது வெற்றி ஜோடியான பானுமதியை ஒப்பந்தம் செய்தார்.

வாத்தியாரின் கனவுச் சித்திரம் வேகமாக முடிவடைவதற்காக, ‘திருடாதே’ உள்ளிட்ட அவரது ஏராளமான படங்கள் எடுத்த வரையில் நிறுத்தப்பட்டன.

‘நான் எங்கு தொழில் செய்தாலும் சுதந்திரமாக இருக்கவும் தொழில் செய்யவும் விரும்புகிறவன். இதே குணத்தைப் படைத்தவர் திருமதி பானுமதி அவர்கள். நாங்கள் இருவருமே விட்டுக் கொடுக்காத மனோபாவம் உள்ளவர்கள். ’- எம்.ஜி.ஆர்.

வாத்தியாரின் வாக்கு பலித்தது.

நாடோடி மன்னன் ஷூட்டிங்கில் பானுமதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் அபிப்ராய பேதம் ஏற்பட்டது. விளைவு பானுமதி விலகிக் கொண்டார்.

நாடோடி மன்னனில் புதிய கதாநாயகி யார்...? என்பது தமிழகத்தின் மில்லியன் டாலர் கேள்வியானது.

இறுதிச் சுற்றில் சரோ முன்னணியில் நின்றார்.

‘சரோவைத் தேர்வு செய்தது ஏன்? ’ என்று, படத்தின் வெற்றிவிழா மலரில் எம்.ஜி.ஆர். விவரமாக எழுதியுள்ளார்.

‘ இளவரசி ரத்னா’ பாத்திரத்திற்குப் பல புதிய நடிகைகளையும், இன்று விளம்பரமடைந்திருக்கும் ஒரு சிலரையும் நடிக்க வைக்க நினைத்ததுண்டு. எப்படியாவது ஒரு புதிய நடிகையை இந்தப் பாத்திரத்தின் மூலம் அறிமுகப்படுத்தப் பெரிதும் முயன்றேன்.

எனது முயற்சி பலவகையிலும் தோல்வியே கண்டது. இரண்டொரு நடிகையைப் படமெடுத்தும் பார்த்தேன். சரியாயில்லை. பிறகுதான் சரோஜாவை நடிக்கச் செய்து படமெடுத்தேன். இது ஒரு புதிய விசித்திர அனுபவம்.

 

1583-B-Saroja-Devi-Telugu-Actress.jpg

 

 

சரோஜாவைக் கொண்டு ‘பாடு பட்டாத் தன்னாலே‘ என்ற பாட்டுக்கு நடனம் ஆடச் செய்து முன்பே படமும் எடுக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே எடுத்த காட்சியை சந்திரா என்ற வேறொருவரை நடனமாடச் செய்து மீண்டும் படமாக்க நேரிட்டது.

சரோஜாதேவி அவர்கள் இப்போது பேசுவதை விடத் தமிழ் உச்சரிப்பு மோசமாக இருந்த நேரம். ஆகவே அவருக்கு ஏற்றாற் போல் வசனங்களை அமைக்கச் செய்தேன். அவருடைய பாத்திரத்தில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி பாவங்களை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.

வெளி உலகத்தைப் பற்றியோ, நல்ல பண்பாட்டைப் பற்றியோ எதுவுமே அறியாத ஓர் அப்பாவிப் பெண்ணாக அந்தப் பாத்திரம் அமைக்கப்பட்டது.

அந்தப் பாத்திரத்துக்குச் சரோஜாதேவி அவர்களும், சரோஜாதேவி அவர்களுக்கு அந்தப் பாத்திரமும் அற்புதமாகப் பொருந்திவிட்டன.

சரோஜாதேவி அவர்கள் அந்தப் பாத்திரத்தைத் தனதாக்கிக் கொண்டு, நடித்துப் புகழைப் பெற்று விட்டார் என்று துணிந்து கூற முடிகிறது.

‘வண்ணுமில்லே சும்மா! ’ என்று சொல்லும் கொச்சையான, ஆனால் கருத்தாழம் கொண்ட இயற்கை நடிப்பால் அவர் மக்கள் மனதில் பதிந்து விட்ட ஒன்று போதுமே, அவர் அந்தப் பாத்திரம் தாங்கி நடித்ததில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை நிருபிக்க. ’ - எம்.ஜி.ஆர்.

----------‘நாடோடி மன்னனில் நடிக்க எம்.ஜி.ஆர். தன்னைத் தேர்வு செய்த சூழல் பற்றி சரோஜாதேவி- - ‘எம்.ஜி.ஆர்., திருடாதே ஹீரோயினாக என்னை ஓகே செய்தாலும், ஒரு புதுமுகத்தை எப்படி நமது தயாரிப்பில் நடிக்க வைப்பது என்கிற குழப்பம் நிலவியது. அவர்கள் யாரும் எம்.ஜி.ஆரிடம் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். அதைப் புரிந்து கொண்டார். என்றாலும் என்னைத்தான் கதாநாயகியாகப் போட வேண்டும் என்று அவர் வற்புறுத்தவில்லை. அந்தச் சூழ்நிலையில் எம்.ஜி.ஆரின் எண்ணத்தில் முழுமையான உறுதி இருந்தது.

அவரது சொந்தத் தயாரிப்பில், பிற்பாதியில் முழுக்க முழுக்க கலரில் நடிக்க, என்னை அவர் ஒப்பந்தம் செய்தார்.’ -சரோஜாதேவி.

எம்.ஜி.ஆரே துணிந்து தனது சொந்தப் படத்தில் சரோஜாதேவியை நடிக்க வைத்தது, சரோ வேண்டாம் என்று மறுத்தவர்களிடம் ஒரு நிர்ப்பந்தத்தை உண்டாக்கியது.

‘திருடாதேயிலும் சரோஜாதேவியே கதாநாயகி...! ’என்பதை முகத்தில் அடித்த மாதிரி சொன்னார் எம்.ஜி.ஆர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்தத் திருப்தி எம்.ஜி.ஆருக்கு.

‘நாடோடி மன்னன்’ விமர்சனத்தில் - ஆனந்தவிகடன்: மாணிக்கம் - ‘கடைசி ஆறாயிரம் அடியும் சரோஜாதேவிதான். தீவுலே துணிப்பஞ்சம் போலிருக்குது. அப்படி இருந்தும் ஏதோ கிடைக்கிற துணியைக் கட்டிக் கிட்டு வந்து எல்லாரையும் சொக்க வைக்குது...

காதல் காட்சிகளில் எல்லாம் ரொம்ப ப்ரீயா நடிச்சிருக்குது... ’

நாடோடி மன்னனின் வெற்றியில் எம்.ஜி.ஆரை விட அதன் முழுப்பலனையும் அடைந்தவர் சரோ.

தேவர் பிலிம்ஸ் படத்தில் ஒரே ஒரு நடனம் ஆடுவதற்காகச் சென்றார் சரோ. ஊதிய முரண்பாடு காரணமாக ருத்ரம்மா சம்மதிக்கவில்லை. தேவரின் அடுத்தத் தயாரிப்பில் சரோவை ஹீரோயினாக்கி அழகு பார்த்தார்கள்.

நாடோடி மன்னன் வெளியீடு தாமதமானது. கிடைத்த ‘அரிமா’ இடைவெளியில் தேவர் முந்திக்கொண்டார்.

‘சரோ கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் தமிழ்ப் படம்’ என்கிற பெருமை, 1958 ஜூலை 11ல் ரிலிசான தேவரின் ‘செங்கோட்டை சிங்கத்து’க்குக் கிடைத்தது. நாடோடி மன்னனுக்கு முன்பாகவே ஒரு கன்னட டப்பிங் சினிமா, சரோஜா தேவியைப் பரவலாகத் தமிழர்களிடத்தில் நன்கு அறிமுகப்படுத்தியது. அந்த அதிசயம் பற்றி சரோ-

‘கன்னடத்தில் பி.ஆர். பந்தலு இயக்கத்தில் நான் நடித்த ஸ்கூல் மாஸ்டர் என்ற படம், ‘எங்க குடும்பம் பெரிசு’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ் நாட்டில் ஓடிக் கொண்டு இருந்தது.

மயிலாப்பூரில் காமதேனு தியேட்டரில் அந்தப் படம் பிரமாதமாக ஓடி பெரிய வெற்றி பெற்றது.

நேரடித் தமிழ் படங்களில் நடித்து நான் பெரும் புகழ் பெற்றாலும், என்னைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தது அந்த கன்னட டப்பிங் படமே ஆகும். ’ சரோஜாதேவி.

காளிதாஸ் கன்னட ஷூட்டிங் நடைபெற்ற சமயம். எம்.ஜி.ஆரைச் சந்தித்த அதே வாஹினியில் ஜெமினி கணேசன் - சரோ சந்திப்பும் நடந்தது.

கூனன் மேக் அப்பில் செட்டுக்குச் சென்றார் ஜெமினி கணேசன்.

‘இவரா காதல் மன்னன்...! ’ சரோவை ஆச்சரியமும், அருவருப்பும் ஒரு சேரத் தாக்கியது.

 

3-saroja-devi.jpg

 

 

கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் ஜெமினியின் கெட் அப் அது, என அவருக்கு விளக்கிச் சொன்னார்கள்.

அதைத் தயாரித்த நாராயணன் கம்பெனியின் அடுத்த படைப்பு இல்லறமே நல்லறம். எம்.ஜி.ஆர். போலவே ஜெமினியும் சமர்த்தர். உடனடியாக அவர் ஒப்பந்தம் ஆகியிருந்த ‘இல்லறமே நல்லறம்’ படத்தில் சரோவுக்குத் தனது ‘சின்ன வீடாக’ பெரிய வாய்ப்பை அளித்தார்.

மஞ்சக்குப்பத்து தெருக்கூத்தில் ஆடும் சரோவை, ‘ஜெர்மன் புகழ் நாட்டியத் தாரகை சரளாதேவியாக’ ஜெமினியிடம் காட்டிப் பணம் பறிப்பார் வில்லன் எம்.என். நம்பியார்.

‘அஞ்சலிதேவி, ஆர். கணேஷ், வி. நாகையா நடித்தது’ என்று இல்லறமே நல்லறத்தில் அஞ்சலிதேவியின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்திக் காட்டினார்கள். எம்.வி. ராஜம்மாவை அடுத்து சரோவின் பெயர் பட்டியலில் இடம் பெறும்.

ஓரிரு மாத இடைவெளியில் சரோ நடிப்பில் தேடி வந்த செல்வம், திருமணம், மனமுள்ள மறு தாரம் போன்றவை ரிலிசானது.

தேடி வந்த செல்வம் படத்தில் வில்லன் நடிகர் டி.கே. ராமச்சந்திரன், சரோஜாதேவியின் காதல் ஜோடி. மனமுள்ள மறுதாரம் மூவியில் கே. பாலாஜி நாயகன்.பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர். பந்தலு சரோவின் திடீர் ஏற்றத்தைப் பார்த்து வியந்து போனார்.

கச்சதேவயானி கன்னடப்படம் முடிந்ததும், தனது சபாஷ் மீனாவில் ‘ஹீரோ’ சந்திரபாபுவுக்கு ஜோடியாக சரோவுக்கு வாய்ப்பளித்தார்.

பாசக்காரத் தந்தை - மகளாக சரோவும் - எஸ்.வி. ரங்காராவும் 1970கள் வரை டஜன் கணக்கில் நடித்தார்கள். அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது சபாஷ் மீனா.

சென்னை காசினோ தியேட்டரில் 20 வாரங்களுக்கும் மேலாக ஓடியது. சென்ற நூற்றாண்டில் மிக அதிகமாகத் திரையிடப்பட்ட சினிமாக்களில் சபாஷ் மீனாவும் ஒன்று!

தெலுங்கில் என்.டி. ராமாராவுடன் ‘பாண்டுரங்க மஹாத்மியத்தில்’ அறிமுகமானார் சரோ. சவுகார் ஜானகியின் தங்கை, நடிகை கிருஷ்ணகுமாரி பின்னணிக் குரல் கொடுத்தார்.

அடுத்து வந்த ஆந்திர சித்திரங்களில் சரோவே மாட்லாடினார்.

தமிழில் சரோ நாயகி அந்தஸ்தை அடைந்த 1958ல் மட்டும், அவரது நடிப்பில் அரை டஜன் படங்களுக்கும் மேல் வெளிவந்தது. அது சரோ மீது தமிழர்கள் கொண்டிருந்த அபிமானத்தின் அளவு கோல்.

1959 சரோஜாதேவி சரித்திரம் படைத்த ஆண்டாக அரும்பியது.

-------------

  • கருத்துக்கள உறவுகள்

1583-B-Saroja-Devi-Telugu-Actress.jpg

இவர் நடித்த படத்தில் 'என் உள்ளத்தையே கொள்ளை கொண்ட ஓவியம் நீயே..!' என்ற பாடல் மனம் கவர்ந்தது..

படம் "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

 

ஏனுங்க சுவி, இது 'டப்பிங்' படம் போலல்லவா தெரியுது..?

நான் பார்த்தது எஸ் எஸ் ஆர் சரோஜாதேவி நடித்தது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

சரோஜா தேவி: 3. முதல் தர நடிகை!

 

 
 

நடுத்தரக் குடும்பங்களில் சரோ பற்றிய பேச்சு எழுந்தால், எல்லாருக்கும் நினைவுக்கு வருவது ‘கல்யாணப்பரிசு வசந்தி’ கேரக்டர்.

அனைத்துத் தரப்பினரின் மனங்களிலும் சரோ பதியம் போட்டு அமர, ஸ்ரீதர் மிக முக்கிய காரணம். கல்யாணப் பரிசு அவர் இயக்கிய முதல் படம்.

கல்யாணப் பரிசுக்குப் பின்னரே சரோவின் சினிமா வாழ்க்கை முழுமையாகக் களை கட்டியது.

பானுமதி-அஞ்சலி, பத்மினி- சாவித்ரி நால்வரையும் பின்னுக்குத் தள்ளி, வெற்றிக் கோட்டையை எளிதில் எட்டிப் பிடிக்க சரோவுக்கு நூறு விழுக்காடு உதவியவள் வசந்தி!

குறிப்பாக மூத்தவளுக்காகக் காதலைத் தியாகம் செய்த சரோவை, நோயாளி அக்கா விஜயகுமாரி சந்தேகப்படும் காட்சி.

ஜெமினியுடன் இணைத்துப் பேசப்படும் கட்டத்தில் சரோவின் துடிதுடிப்பும், அதிர்ச்சியைக் காட்டும் முக பாவங்களும், சகிக்க முடியாத அவமானத்தை உடன் பிறந்த சகோதரியே உண்டாக்கி விட்டாளே... என்கிற வேதனையும், பரிதவிப்பும் சரோவின் நட்சத்திர வாழ்க்கைக்கு நங்கூரம் பாய்ச்சியது!

‘சரோ முதல் தர நடிகை என்ற ஸ்தானத்தை அனேகமாகப் பிடித்து விட்டார் எனலாம். ரசிகர்களின் உள்ளத்தில் அணையாமல் சுடர் வீசக் கூடிய அமர தீபம்! என்றெல்லாம் வரிக்கு வரி ‘கல்யாணப் பரிசு’ சினிமாவைப் பாராட்டி, ‘குமுதம்’ தன் விமர்சன வரலாற்றில் சரோவுக்கு மிகப் பெரிய முகவரியை அளித்ததது.

திரையுலகில் முன்னுக்கு வரத் திறமை மாத்திரம் போதாது. அதிர்ஷ்டமும் அவசியம்.

எப்போதும் சரோ யோக லட்சுமி!

கல்யாணப்பரிசு படத்தில் வசந்தியாக நம் கண் முன் வந்திருக்க வேண்டியவர் நடிகையர் திலகம்.

கல்யாணப்பரிசு தொடங்கும் சமயம். சாவித்ரி தாய்மை அடைந்திருப்பது தெரிந்தது. தமிழச்சியான எல். விஜயலட்சுமியை அடுத்து நடிக்க அழைத்தார் ஸ்ரீதர். அவரது தந்தை கேட்ட ஊதியம் ஸ்ரீதர் நிர்ணயிருத்திருந்ததை விடப் பத்து மடங்கு கூடுதல். விளைவு வசந்தி வேடம் சரோ வசம் வந்தது.

‘பி.ஆர். பந்தலு படம் ஒன்றில் நடனமாடிய சரோஜாதேவி, முக பாவங்களை நன்கு வெளிப்படுத்தியதால் அவரை ஒப்பந்தம் செய்ய எண்ணினோம். வீனஸ் பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு தாயார் ருத்ரம்மாவுடன் சரோஜாதேவி வந்தார்.

‘வசந்தி கேரக்டரில் நடிப்பதற்கு இந்தப் புதுமுகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!’ என்றார் எனது கோ புரொடியூசர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி. கல்யாணப்பரிசில் இளம் கதாநாயகியாக சரோஜாதேவியையே நடிக்க வைப்பது என்று தீர்மானித்து விட்டோம். ’ -ஸ்ரீதர்.

 

Art-350.jpg  

 

கல்யாணப்பரிசில் சாவித்ரிக்குப் பதிலாக சரோ என்றதும் ஜெமினிக்குக் கொண்டாட்டம். சரோவுக்கு டயலாக் சொல்லிக் கொடுத்துத் தன் வசனங்களை ஜெமினி மறந்து போவதும் அன்றாட ‘அல்வா’ நிகழ்வு. சரோவைத் தேடி ஸ்டுடியோ ஸ்டுடியோவாக அலைவது அவரது வாடிக்கை ஆனது.

தமிழே அறியாத சரோவை வசந்தியாக்குவதற்குள் ஸ்ரீதரின் யூனிட் திண்டாடித் தெருவில் நின்றது. அந்த இனிய அவஸ்தையை சித்ராலயா கோபு சுவாரஸ்யமாகக் கூறியுள்ளார்.

‘இரண்டு நாள்கள் ஷூட்டிங் முடிந்திருந்தது. ‘எப்படி நம்மப் புதுமுகம்...? ’ என்று கேட்டார் ஸ்ரீதர்.

’எல்லாம் சரி. லேங்வேஜ்தான் ப்ராப்ளம். ’ என்றார் ஒளிப்பதிவாளர் வின்சென்ட்.

‘கொஞ்சம் கொஞ்சமாக வ(மொ)ழிக்குக் கொண்டு வர வேண்டும். ’ என்றார் உதவி டைரக்டர் பி. மாதவன்.

ஒரு ரூபா என்கிற வார்த்தையை ‘வரு ரூபா’ என்பதாக சரோ உச்சரித்தார். ரிகர்சல் பார்த்த ஸ்ரீதர், என்னிடம் சாமியாடினார்.

‘என்னடா நீ முன்னாடியே படிச்சுக் காமிச்ச லட்சணம் இதுதானா...? ’

என்னை முறைத்தவாறே ஸ்ரீதரும், கடைசி வரையில் சரோவின் ‘கொஞ்சும் கிளி’ தமிழைத் திருத்த முயற்சித்துத் தோற்றார்.

ஒத்திகையில் மட்டுமல்லாமல் டேக்கிலும் ‘வரு ரூபா’ என்றே சொல்லி, ஃபிலிமைத் தின்று நாள் முழுவதும் ஏப்பமிட்டார் சரோ.

ஸ்ரீதராலும் சரோவின் சந்தனத் தமிழைத் திருத்த முடியவில்லை என்கிற சந்தோஷத்தில் எனக்குத் தனி குஷி பிறந்தது.

ப்ளைமூத்தில் தாயார் ருத்ரம்மா, சகோதரிகள் சகிதம் கல்யாணப் பரிசு செட்டுக்கு வரும் சரோ, கம்பெனி தரும் ஹோட்டல் டிபனை ஒரு பிடி பிடிப்பார்.

ஸ்டில்ஸ் அருணாச்சலம்- ‘என்ன குழந்தே... தெம்பா இல்ல? ’

ருத்ரம்மா - ‘அது தூங்கப் போனது ரொம்ப லேட்டு. டயலாக் படிச்சது. ’

ஸ்டில்ஸ் ஆனாரூனா - ‘நீங்களும் வாங்கி அப்பப்பப் படிங்க. தமிழ் பொழைக்கும்! ’ ‘சித்ராலயா’ கோபு.

சினிமா உரையாடலை மட்டுமல்ல. கோபுவின் முழுப்பெயர் சடகோபன். அதை ‘ஜடைகோபால்’ என்றே சரோ தவறுதலாக அழைத்தார்.

பி. மாதவன், ஸ்ரீதரிடம் அது பற்றி முறையிட்டார்.

ஸ்ரீதர் - ‘அது அவனுக்குப் பொருந்தும். அவன் ஒன்பதாம் வகுப்பு வரை குடுமி வைத்திருந்தான். ’

சரோ - ‘குடுமின்னா என்னா...? ’

கோபு- ‘ரொம்பப் புத்திசாலி என்று அர்த்தம். ’

 

24FR-PANATHOTTAM_2483457e.jpg  

 

தமிழ் தெரியாவிட்டாலும் தன்னை யாராவது கலாய்த்தால் சரோ உஷாராகி விடுவார். அவர்கள் யாராக இருந்தாலும் பதிலடி கொடுக்காமல் விட்டதில்லை.

கல்யாணப்பரிசு சென்னை காசினோ தியேட்டரில் 25 வாரங்களைக் கடந்து ஓடியது.

ஜெமினி கணேசனின் ‘குட் புக்ஸில்’ சரோ நிரந்தரமாக இடம் பெற்றார்.

காதல் மன்னனின் முத்திரைச் சித்திரங்களில் சாவித்ரிக்கு அடுத்தபடியாக, சரோவே ஹீரோயின் என்பதை கல்யாணப் பரிசு உணர்த்தியது.

சரோ என்கிற இளமைப் புயல் வாலிபர்களின் ஏகோபித்த ஒரே கனவுக்கன்னியாகத் தமிழகத்தில் நிலை பெற்று விட்டது!

‘கல்யாணப்பரிசு படத்தில் நானும் ஜெமினியும் நடித்த ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’ என்ற பாடல் காட்சியில் நான் சைக்கிள் ஓட்ட வேண்டும். அதுவரை எனக்கு சைக்கிள் ஓட்டிய அனுபவம் கிடையாது. அந்தப் பாடல் காட்சிக்காகவே சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.

நான் கல்லூரிக்குப் புறப்படும் போது ‘அம்மா போயிட்டு வர்றேன். ’ என்று மாடியில் இருக்கும் ஜெமினி கணேசனுக்குக் கேட்கும் விதத்தில் இரண்டு முறை உரத்த குரலில் கூறி விட்டுப் புறப்படுவேன்.

அந்தக் காட்சிக்குக் கல்லூரி மாணவ மாணவிகளிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது.

கல்யாணப்பரிசு புதுமையான - அருமையான படம். அதனாலேயே பெரிய வெற்றியைப் பெற்றது. ’ -சரோஜாதேவி.

சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி என்று ஐந்து நகரங்களில் 100வது நாள் கொண்டாடினார்கள்.

மதுரையில் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகு, சித்ராலயா கோபு அதைப் பற்றி சரோவின் தாயாரிடம் தெரிவித்து அவரது சம்மதத்தைக் கேட்டார்.

ருத்ரம்மா கோபுவுக்குத் தக்கப் பதில் சொல்லாமல் தட்டிக் கழித்து வந்தார். மீண்டும் மீண்டும் கோபு சரோவின் மதுரை வருகை குறித்து நினைவுப் படுத்தத் தவறவில்லை.

ஒரு நாள் மிகுந்த கோபத்துடன் ருத்ரம்மா, கோபுவிடம்-

‘உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா...? ’ என்று ஆத்திரப்பட்டார்.

அப்போது சரோ நடிக்க கல்யாணப்பரிசு, ‘பெல்லி காணுக’ என்ற பெயரில் தெலுங்கில் தயாராகி வந்தது. தன் உயிர்த் தோழனும், உதவி இயக்குநருமான கோபு அவமானப்படுத்தப்பட்டதை அறிந்ததும், ஸ்ரீதர் ஷூட்டிங்கை ரத்து செய்து செட்டைவிட்டு வெளியேறினார்.

உச்சக்கட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் தன் பார்ட்னர்களிடம், ‘பெல்லி காணுக படத்தை இனி என்னால் இயக்க முடியாது. வேறு டைரக்டரைப் போட்டுக்கொள்ளுங்கள்... ’ என்றார்.

ஆடிப் போய் விட்டனர் சரோவும், அவரது தாயாரும்.

அடுத்த கணம் ருத்ரம்மா, ஸ்ரீதரின் வீட்டுக்குச் சென்று நேரடியாக, ‘தெரியாமல் பேசி விட்டேன். தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று வருத்தம் தெரிவித்தார்.

 

0.jpg  

 

சிவாஜி கணேசன் - ஏ.பீம்சிங் கூட்டணியில் பதிபக்தி வெற்றிகரமாக ஓடியது. விளைவு தமிழ் சினிமாவில் ‘பா’ வரிசை சித்திரங்களின் வருகை அதிகரித்தது.

ஒரே நேரத்தில் படிக்காத மேதை, பாகப்பிரிவினை இரு படங்களும் ஆரம்பமாயின. கதைப்படி இரண்டிலும் கணேசனுக்கு வீட்டு வேலைக்காரியாக வரும் பெண்ணே ஜோடி.

படிக்காத மேதை படத்தில் சவுகார் ஜானகியை ஏற்கனவே கணேசனின் மனைவியாக நடிக்கத் தேர்வு செய்திருந்தார்கள்.

‘பாகப்பிரிவினை’ சரவணா பிலிம்ஸ் சார்பில் ஜி.என். வேலுமணி தயாரித்த முதல் படம். அதற்கான நாயகியை முடிவு செய்ய வேண்டும்.

வாஹினியில் ஸ்ரீதருடன் சேர்ந்து கல்யாணப்பரிசு ரஷ் பார்த்தார் சிவாஜி கணேசன். சரோவின் நடிப்பில் பரவசமாகி, அதற்குக் காரணமான டைரக்டரையும் பாராட்டினார்.

அது நடந்து நாலாவது நாள். சிவாஜி அனுப்பியதாகச் சொல்லி, வேலுமணி - சரோவைச் சந்தித்து பாகப்பிரிவினை படத்தில் நடிக்க வைத்தார்.

தேவர் பிலிம்ஸ் போலவே சரவணா பிலிம்ஸூம் சரோவைக் கொண்டாடியது. பாகப்பிரிவினை தொடங்கி, சரோ அதன் ராசியான நட்சத்திரம் ஆனார்.

பாகப்பிரிவினையில் சரோவுக்குச் சற்று வயதுக்கு மீறிய, ‘பொன்னி’ என்கிற உருக்கமான வேடம்.

கை கால்கள் விளங்காத ‘கண்ணையன்’ - சிவாஜிக்கு இணையாக, சரோ சிறப்பாக நடித்துப் புகழ் பெற வேண்டும் என்பது சிவாஜியின் ஆசை. அதற்காக ரொம்பவும் மெனக்கெட்டார்.

நடிகர் திலகத்தின் ஆவலை சரோ பூர்த்தி செய்தாரா...?

அபிநய சரஸ்வதியின் சந்தோஷ சாரல் இதோ:

‘ டைரக்டர் பீம்சிங் எப்போதும் காட்சிகளை விளக்கி நடிப்பு சொல்லித் தருவார். அதற்குப் பின்பே காமிரா முன் நிற்பேன்.

அன்றைக்குப் பிரசவ வேதனையில் நான் துடி துடிப்பது போல் எடுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பெண், எப்படியெல்லாம் துன்பப்படுவாள் என்பதை பீம்சிங் செய்து காட்டினார்.

டேக்கின் போது அதை சரி வர செய்ய முடியுமா என்கிறப் பயம் எனக்கு ஏற்பட்டது. சிவாஜி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘என்ன சரோஜா, பிரசவ நடிப்புதானே... வா எங்கூட... ’ என்றார்.

அருகில் ஒரு மரம். அதைக் கட்டிக் கொண்டு இடுப்பு வலியில் அலறும் பெண்ணைத் தனது நடிப்பில் தத்ரூபமாக வெளிப்படுத்தினார்.

நான் மிரண்டு போனேன். குழந்தை பேறு பற்றித் தனக்குத் தெரிந்த தகவலை மட்டும் வைத்துக் கொண்டு, தாய்மையின் தவிப்பை எடுத்துக் காட்டினாரே அதனால் தான் அவர் நடிகர் திலகம்!

 

B_SarojaDevi_Sivaji.jpg

 

அவர் என்ன செய்தாரோ, அதையே பிரதிபலித்தேன். எனக்கு நல்லப் பெயர் கிடைத்தது.

பாகப்பிரிவினை வெளிவந்ததும் அநேகத் தாய்மார்கள் குறிப்பாக, அக்காட்சியை மட்டும் சொல்லி என்னைப் புகழ்ந்தார்கள்.

எல்லாருக்குமே ஒட்டு மொத்தமாக என் பதில் என்ன தெரியுமா...?

அந்த வாழ்த்துகள் முழுக்க முழுக்க சிவாஜி சாரையே சேரும்.’ - சரோஜாதேவி.

தன்னை பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் ‘சிங்கப்பூரான்’- எம்.ஆர். ராதாவை, நாட்டுப்புறத்துப் பொன்னி துடைப்பத்தால் அடித்து விரட்ட வேண்டிய விறுவிறுப்பான கட்டம்.

ஏற்கனவே ரத்தக்கண்ணீர் சினிமாவில் எம்.ஆர். ராதாவைப் பார்த்து, சரோ மிகவும் பயந்து போய் இருந்தார். அப்படிப்பட்ட முரட்டுக் கலைஞனை, விளக்குமாறால் விளாசித் தள்ளுவதா...!

சரோவால் ஆகக் கூடிய காரியமா அது?

கதைப்படி பொன்னியின் சீற்றம் நாயகி சரோவுக்குப் புரிந்தது. ஆனால் ராதாவை நிமிர்ந்து நோக்கவே தைரியம் இல்லையே...!

ஆவேசமாகித் தன் நிலை மறந்து தாக்குவதும் சாத்தியமா...?

ஒத்திகை பார்க்கக் கூடத் துணிச்சல் வரவில்லை சரோவுக்கு.

பலத்த ஆரவாரம் கேட்கவே கவனம் திசை திரும்பியது. அருகில் ராதா வந்து கொண்டிருந்தார். அவருக்கே உரிய கரகரப்பான குரலில் முழங்கினார்.

‘யாருப்பா இந்த பெங்களூர் பொண்ணு...? அனுபவம் இல்லாத நடிகை. சரியா நடிக்காதுன்னு சிலர் சொன்னாங்களே... நல்லாத்தானே பாடம் கேட்டுக்கிட்டு நிக்குது!’

இளம் ஹீரோயின், நடிப்பில் பழுத்த அனுபவம் பெற்ற வில்லனை அடிக்கத் தயங்குவதை, ராதா எளிதில் உணர்ந்து சொன்னார்.

சமயோசிதமாக அதற்கு ஒரு தீர்வு கண்டு சரோவின் மனத்தில் நிரந்தர இடம் பிடித்தார்.

 

vaadikai%20maranthathu%20eeno%20song.jpg  

 

‘இந்த சீன் எடுக்கறதுக்கு ஒரு ஐடியா கொடுக்கிறேன். நானும் சரோஜாவும் ரூமுக்குள் இருக்கற மாதிரி மொதல்ல படம் பிடிச்சுடுங்க.

வெளியே என் அலறல் சத்தம் மட்டும் வீடு பூரா கேட்கும். அடி தாங்காம நான் குய்யோ முறயோன்னு கத்திக்கிட்டு கதவைத் திறந்துகிட்டு ஓடி வருவேன்.

நம்ம ஜனங்க மகா புத்திசாலிங்க. உள்ளே என்ன நடந்துருக்கும்னு தன்னால யூகிச்சுப்பாங்க. ’

பாகப்பிரிவினை 1959 தீபாவளிக்கு வெளியானது.

சரோவுக்கு மட்டுமல்லாமல் நடிகர் திலகத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் கூட ஒரு சிரஞ்சீவி ரூபத்தை வழங்கியது.

ஆனந்த விகடன் பாகப்பிரிவினை சினிமா விமர்சனத்தில்,

‘மீனாட்சி அம்மாள் -‘சரோஜாதேவி நல்லா நடிச்சிருக்குதா? ’

ஷண்முகம் பிள்ளை - ‘ ஓ! அளவோட அழகா நடிச்சிருக்குது. வயக்காட்டில தலையில் கூடையோட வந்து ஒரு பாட்டுப் பாடுது. மனசுக்கு ரொம்ப குளுமை. ’ என்று சரோவைப் பாராட்டி எழுதியது.

மதுரை சிந்தாமணி தியேட்டரில் (217 நாள்கள்) வெள்ளிவிழாவையும் கடந்து 31 வாரங்கள் ஓடியது பாகப்பிரிவினை.

பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட வரலாற்று வண்ணச் சித்திரமான வீர பாண்டிய கட்டபொம்மனை மீறி,

‘1959ன் மிகச் சிறந்த தமிழ்ப்படம் என்று நடுவண் அரசின் வெள்ளிப் பதக்கம், ’

கருப்பு வெள்ளையில் எளிமையாகச் சொல்லப்பட்ட பாகப்பிரிவினைக்குக் கிடைத்தது.

சிவாஜி கணேசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கண்ணதாசன், டி.எம். சவுந்தரராஜன் - பி. சுசிலா கூட்டணி வலு பெற்றது.

‘தாழையாம் பூ முடிச்சு’ என்கிற ஆறரை நிமிட பட்டுக்கோட்டையாரின் பரவசமூட்டும் காதல் கீதம், கவியரசின் ‘ஏன் பிறந்தாய் மகனே, தங்கத்திலே ஒரு குறை இருந்தால்’ போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் பாகப்பிரிவினையை ஒரு பொக்கிஷமாக இன்னமும் பாதுகாக்கின்றன.

‘முதலில் நாடோடி மன்னன் ரிலிஸ் ஆச்சு. 25 வாரம் போச்சு. அடுத்து வந்த கல்யாணப்பரிசும், பாகப்பிரிவினையும் வெள்ளி விழா கொண்டாடுடுச்சு. அதுக்கப்புறம் என்னாச்சுங்கறீங்க? ஒரு நாள்ல 30 படம் புக் ஆச்சு. தினந்தோறும் 3 ஷிப்ட் நடித்திருக்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ரெஸ்ட் எடுத்திருக்கிறேன்.அந்த அளவுக்கு ராப்பகலா நடிச்சேன். இதுல இந்தி, தெலுங்கு, கன்னடப்படங்களும் அடங்கும். ’- சரோஜா தேவி.

  • 4 months later...

 

சரோஜா தேவி: 4. எம்.ஜி.ஆர். சாப்பாடு...!

 

வீட்டையொட்டி வாக்சல் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் ருத்ரம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி!

‘ஜெமினி’ எஸ்.எஸ். வாசன்!

சரோவின் தாயாரால் நிஜமாகவே நம்ப முடியவில்லை.

கால விரயம் செய்யாமல் நேரடியாகத் தன் வருகையின் நோக்கத்தை வெளியிட்டார் வாசன்.

அவரது அடுத்த ப்ராஜெக்ட்டான இரும்புத்திரையில் ‘வைஜெயந்திமாலாவின் தங்கையாக சரோ நடிக்க வேண்டும். ’

கதைப்படி அப்பா எஸ். வி. ரங்காராவ் இரண்டு பெண்டாட்டிக்காரர்.

தனித்து வாழும் ஏழைத் தாயிடம் வளரும் முதல் மகள் ‘ஜெயந்தி’யாக வைஜெயந்திமாலா.

தொழிலதிபர் எஸ்.வி.ரங்காராவுடன் வசதியோடு வசிக்கும் இன்னொரு பெண் ‘மாலதி’.

வைஜெயந்தியின் சாயலில் சரோ தெரிவதால், இருவரும் சகோதரிகளாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றார் வாசன்.

சரோவின் தாயாருக்குச் சம்மதமில்லை.

‘வேணாம். குழந்தை நடிக்காதுங்க’ என்று தைரியமாகவே சொல்லி விடத் தோன்றியது.

சினிமா பரமபதத்தில் எம்.ஜி.ஆர். என்கிற மிகப் பெரிய ஏணியில் ஏறி, இப்போதுதான் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறோம்...

மீண்டும் துணைக் கதாபாத்திரங்களில் சிக்கி அவதிப்படுவானேன்!

ஹீரோயினுக்குத் தங்கையாக நடித்தால் கடைசி வரை அதே ரோலுக்கு அழைப்பார்கள்.

விடாப்பிடியாக உட்கார்ந்திருந்தார் நினைத்ததை முடிக்கும் வாசன். ருத்ரம்மாவின் ஒப்புதல் அவருக்குத் தேவையில்லை என்பதைச் சில நொடிகளில் உணர்த்தினார்.

‘இதுல மட்டும் உங்க பொண்ணு நடிக்க மாட்டான்னு சொல்லிட்டீங்கன்னு வெச்சுக்குங்க... இப்பவே சரோஜாவைக் குண்டுக்கட்டாத் தூக்கிக்கிட்டு போயிடுவேன்... ’என்றார் சிரித்தவாறே.

‘கதர்ச்சட்டைக்குள் ஒரு தீவிரவாதி...! ’

வாசனின் வல்லமை ருத்ரம்மாவுக்குச் சட்டென்று புரிந்தது.

கைத் தட்டினால் ஏவலுக்கு ஆயிரம் பேர் காத்திருக்க, ஜெமினி முதலாளியே மெனக்கெட்டு வீடு தேடி வந்திருக்கிறார்..!

அதுவே சரோவுக்குக் கிடைத்த மிகப் பெரிய அந்தஸ்து. அப்படியிருக்க சரோவின் மேன்மையைக் குறைக்கும் விதத்திலா வாசன் படம் எடுப்பார்..?

‘எல்லாம் நன்மைக்கே’ என்று எண்ணினால் எப்போதும் எதிலும் மனம் சலனப்படாது.’

1-saroja-devi.jpg 

தன் சஞ்சலத்தை வியர்வையைத் துடைப்பது போல் துடைத்த ருத்ரம்மா,

‘ உங்க விருப்பப்படியே செய்யுங்க’ என்றார்.

தனது நிஜமான அன்னை வசுந்தரா தேவிக்கு சினிமாவிலும் மகளாக வைஜெயந்தி நடித்த ஒரே படம் இரும்புத்திரை.

இந்தியிலும் தமிழிலும் சம காலத்தில் ஜெமினி ஸ்டுடியோவில் படமானது. இரண்டிலும் இரு நாயகிகள் வைஜெயந்திமாலா - சரோஜாதேவி.

இந்தியில் அதன் பெயர் ‘பைகாம்’ ஹீரோ திலீப் குமார். தமிழில் சிவாஜி கணேசன்.

முன்னேறி வரும் சில்வர் ஜூபிளி ஸ்டார் சரோ. அவரது உச்ச நட்சத்திர ஸ்தானத்துக்கு எந்த பங்கமும் நேரிடாமல் வாசன் டைட்டில் போட்டார்.

இரும்புத்திரையில் எடுத்த எடுப்பில் வைஜெயந்திமாலா - சரோஜாதேவி இருவரின் பெயரையும் காட்டினார்.

அதற்கு அடுத்தே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று இடம் பெறும்.

அக்கா- தங்கை என்று அறியாமலே ஆரம்பத்திலேயே சிநேகிதிகளாகி சிறகடிப்பார்கள் வைஜெயந்தியும்- சரோவும்.

‘படிப்புக்கும் ஒரு கும்பிடு பட்டத்துக்கொரு கும்பிடு

பாஸூம் ஃபெயிலும் போடும் இந்தப் பழக்கத்தொரு கும்பிடு’

என்று பி. லீலா - ஜிக்கி குரல்களில் ஒலிக்கும் படத்தின் துவக்கப் பாடல். தேர்வுகள் முடிந்த சந்தோஷத்தில் தோழிகளுடன் இணைந்து மோட்டாரில் நகர்வலம் வருவார்கள்.

‘கலைமணி’ கொத்தமங்கலம் சுப்பு எழுதிய அர்த்தம் நிறைந்த ஹாஸ்யப் பாடல். அனைத்துக் கல்லூரி மாணவிகளாலும் அதிகம் பாடப்பட்டது.

எஸ்.எஸ். வாசனின் தயாரிப்பு இயக்கத்தில் சரோ அதற்குப் பின் நடிக்க முடியாத அளவு பிசி.

சரோவுக்கு, பொங்கல் வெளியீடாக 1960ன் முதல் சூப்பர்ஹிட் ஜெமினியின் இரும்புத்திரை.

தமிழில் கோவை- கர்நாடிக் தியேட்டரில் இரும்புத்திரை 25 வாரங்களைக் கடந்தது.

16 மாதங்களுக்குள் சரோவின் 5 வது வெள்ளிவிழாச் சித்திரம்- ‘பைகாம்’ ஆண்டுக்கணக்கில் ஓடி அபாரமாக வசூலித்தது!

தென்னக சினிமாவில் வேறு எந்த நாயகியாலும் என்றும் எண்ணிப் பார்த்திட முடியாத இமாலய சாதனை!

ஜெமினியைத் தொடர்ந்து சரோவைத் தேடி அடுத்துக் களம் இறங்கியது ஜூபிடர் பிக்சர்ஸ். அவர்களது பிரம்மாண்டத் தயாரிப்பு ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’.

அன்றைய கால கட்டத்தில் மிக அதிக சம்பளம் வாங்கிய டைரக்டர் டி. பிரகாஷ்ராவ் இயக்கியது. வசனம் - மு.கருணாநிதி. ஹீரோ ஜெமினி கணேசன்.

ஒரு டஜன் படங்களில் நாயகியாக நடித்து முடிப்பதற்குள், முதன் முதலாக இரண்டு லட்சத்துக்கு நெருக்கமாக சரோஜாதேவிக்கு, ஜூபிடர் மிகக் கூடுதலான ஊதியத்தை மனமுவந்து கொடுத்தது.

ஏறக்குறைய மூவேந்தர்களுக்கு நிகரான பேமென்ட்!

சரோ மீது அனைவரது கண் திருஷ்டியும் விழுந்திருக்க வேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னர் க்ளைமாக்ஸில் அவர் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது.

வில்லன், சரோவைக் கூண்டில் அடைத்து நெருப்பு வைக்கும் கட்டம்.

காட்சி வெகு ஜோராக வர வேண்டும் என்கிற ஆர்வக் கோளாறு. டைரக்டர் பெட்ரோலை நிறைய ஊற்றித் தீ வைத்தார்.

திடீர் எம்.ஜி.ஆராகி சிவந்த தீக்கங்குகளும் சரோவைத் தழுவ வந்தன.

கதாசிரியரும்- துணை இயக்குநருமான மா. லட்சுமணன் சரோ நின்றிருந்த கூண்டைச் சற்றே தள்ளி விட்டார்.

நல்ல நேரம்! சரோவை ‘சத்யநாராயண விரதம்’ காப்பாற்றியது!

‘இன்றைக்கும் சரோஜாதேவி எங்கள் குடும்பத்தில் ஒருவர். சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வராமல் போக மாட்டார். மறக்காமல் அவரது உயிரைக் காப்பாற்றிய சம்பவத்தை நினைவு கூறுவார்.

நன்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு சரோஜாதேவி!

ஒரு நாள் மதியம் உணவு வேளையில் அவர், ‘ஏன் லட்சுமணன்... இப்பவும் நாம சாப்பிடறது எம்.ஜி.ஆர். சாப்பாடுதானே...? ’ என்றார்.

 

NAAN_ANAIYITTAl_2542295g.jpg 

தனது உயர்வுக்குக் காரணமான எம்.ஜி.ஆரை எப்போதும் எண்ணிப்பார்க்கும், சரோஜாதேவி போன்ற நல்ல உள்ளம் சினிமா உலகில் அபூர்வமானது. ’ கதாசிரியர் மா. லட்சுமணன். ( 2001 கோடை)

சரோ அனலில் அகப்பட்டு நடித்தும், 1960 ஜூலை முதல் தேதி வெளியான எல்லோரும் இந்நாட்டு மன்னர் கல்லா கட்டவில்லை.

பட்டுக்கோட்டையாரின் ‘என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே’ பாடல் மட்டும் அதன் நினைவைப் பறை சாற்றுகிறது.

1960 தீபாவளிக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படங்கள் மூன்று. மக்கள் திலகத்தின் மன்னாதி மன்னன், நடிகர் திலகத்தின் இரட்டைஇலக்கியச் சித்திரங்கள் 1. அகிலனின் பாவை விளக்கு 2. மு.வரதராசனாரின் பெற்ற மனம் ஆகியன.

அதே அக்டோபர் 19-ல் எந்த விதப் பரபரப்புமின்றி வெளியானது வாசு பிலிம்ஸ் கைராசி.

ஜெமினி கணேசன் -சரோஜாதேவி இருவருக்கும் கல்யாணப்பரிசுக்குப் பிறகு அற்புதமாக நடிக்க அதிக வாய்ப்பு வழங்கிய மற்றொரு காதல் காவியம்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் உறவினர் வாசுமேனனின் தயாரிப்பு.

தீபாவளி ரேஸில் கைராசி ஓஹோவென்று ஓடியது. அது வாரிக் கொடுத்த வசூலில் ‘வாசு ஸ்டுடியோ’ கோலிவுட்டில் உருவானது.

‘எம்.ஆர். ராதா அழுதால் யார் பார்ப்பார்கள்... ’என்று கேட்டார் நடிகவேள். அவரை முழு உற்சாகமூட்டி நடிக்க வைத்தவர் டைரக்டர் கே. சங்கர். அவரது முந்திய படம் சிவகங்கைச் சீமை ஓடவில்லை. அதனால் மிகுந்த வெறியோடு வெற்றிக்காக உழைத்தார்.

கதை வசனம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். இசை கோவர்த்தனம் என ஒரு புது யூனிட் கைராசியில் கை கோர்த்தது.

வசந்தி, பொன்னி வரிசையில் கைராசி ‘சுமதி’யும் தாய்க்குலங்களின் கவனத்தைக் கவர்ந்தாள். சரோ நர்ஸாகவும் ஜெமினி டாக்டராகவும் நடித்தனர்.

காலத்தால் அழியாத கண்ணதாசனின் காதல் கீதங்கள்-

1.கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ, 2.காத்திருந்தேன் காத்திருந்தேன், 3.காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே 4. அன்புள்ள அத்தான் வணக்கம் என ஒவ்வொருப் பாடலும் வாலிப உள்ளங்களைக் கிறங்க அடித்தது.

அதே தீபாவளி நாளில் ரிலீசான சரோவின் இன்னொரு படம் தேவர் பிலிம்ஸ் யானைப்பாகன். தோல்வியைத் தழுவியது.

1960ன் கடைசி தினம். அன்றும் சரோ நடிக்க ஒரு சினிமா வெளியானது. அது ஸ்ரீதரின் விடிவெள்ளி.

சிவாஜியின் சிநேகிதர் - வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் தயாரித்தது - பிரபுராம் பிக்சர்ஸ் விடிவெள்ளி. ஏறக்குறைய நடிகர் திலகத்தின் சொந்தப்படம் எனலாம்.

saroja.jpg 

விடிவெள்ளி க்ளைமாக்சிலும் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் உண்டு. இசை ஏ.எம். ராஜா.

‘கொடுத்துப் பார் பார் உண்மை அன்பை

நினைத்துப் பார் பார் அதன் தெம்பை’

என்கிற நல்ல நோக்கம் கொண்ட கோஷ்டி கானம் விடிவெள்ளியில் சூப்பர் ஹிட்!

ஆண்டின் இறுதியாக வந்தாலும் தரத்திலும் வசூலிலும் முதலிடம் பிடித்தது. முக்கிய நகரங்களில் 100 நாள்கள் ஓடியது விடிவெள்ளி.

டி.ஆர். ராஜகுமாரியின் ஆர். ஆர். பிக்சர்ஸ் சரோவைக் கைத் தூக்கி விட்ட நிறுவனங்களில் மிக முக்கியமானது. அதற்குப் பிள்ளையார் சுழி 1961ன் பொங்கல் வெளியீடான ‘மணப்பந்தல்’.

கதாநாயகன் எஸ்.எஸ். ராஜேந்திரன். அவரது அண்ணனாக அசோகன். தம்பியைக் காதலிக்கும் சரோ, விதி வசத்தால் மூத்தவனை மணக்க நேரிடுகிறது.

எஸ்.எஸ். ஆர்.- சரோ நடித்து மிக அதிக முறை மக்களைச் சந்தித்த ஒரே படம் மணப்பந்தல்.

‘பூத்து மணம் பரப்புகிறவர் சரோஜாதேவி’ என்று சரோ நடிப்பை குமுதம் பாராட்டியது.

‘பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்’

பி.பி. ஸ்ரீநிவாஸ் - பி. சுசிலா குரல்களில் எஸ்.எஸ். ஆர்- சரோ பங்கேற்ற மணப்பந்தல் டூயட் இன்றைக்கும் நேயர் விருப்பமாக வலம் வருகிறது.

1959ல் சீர்காழியில் ‘இன்பக்கனவு’ நாடகம் நடிக்கப் போன எம்.ஜி.ஆரின் கால் முறிந்தது. நீண்ட கால சிகிச்சைக்குப் பின், வாத்தியார் குணமானதும் மீண்டும் திருடாதே ஷூட்டிங் தொடங்கியது.

‘என் அருகே நீ இருந்தால் ‘பாடல் காட்சி. எம்.ஜி.ஆர். காத்திருந்தார். சரோவைக் காணோம். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.

எம்.ஜி.ஆரே எதிர்பார்க்காத உயரத்தில் எம்.ஜி.ஆரை விட பிஸி சரோ!

கை படாத ரோஜா, கன்னடத்துக் கிளி என்றெல்லாம் பட்டங்கள். அவரது பெயரில் ஆபாசப் புத்தகங்கள். ரசிகர்களின் ரகசியக் கனவுகளில் சரோவின் உலா சகட்டு மேனிக்கு.

எம்.ஜி.ஆர். பொறுமை இழக்கத் தொடங்கினார். அப்புறம் என்ன நடந்தது. அதனை சரோவே சொல்வது அதை விட சுவாரஸ்யம்.

VIDISBP01 (1).jpg 

‘வாகினியில் சிவாஜியோட விடிவெள்ளி, பரணி ஸ்டுடியோல திருடாதே. விடிவெள்ளி படத்துக்கு பெரிய அளவில் செட் போட்டு எடுத்தாங்க. அதை முடிச்சிட்டு நான் பரணிக்கு வரணும். சில காரணங்களால் காட்சி நீண்டு விட்டது.

 

திருடாதேவுக்காக நான் கொடுத்திருந்த கால்ஷீட்டில் பாதி நேரத்தை விடிவெள்ளி எடுத்துக் கொண்டது.

ஒரு வழியாக நடித்து முடித்து விட்டு பரணிக்குப் பதற்றத்துடன் ஓடி வந்தேன். மொத்த யூனிட்டும் எனக்காகக் காத்திருந்தது.

என் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் படத்துக்கே நான் லேட்டாக வருகிறேன் எனும் போது என் குற்ற உணர்வு எப்படி இருக்கும்?

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் யாராவது லேட்டாக வந்தால், அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களின் முகத்தையே பார்க்க மாட்டார். அன்று என்னையும் பார்க்கவில்லை.

அவரைக் கடந்து நான் மேக் அப் ரூமுக்குப் போக வேண்டும். அவர் அருகே சென்றதும், மன்னிச்சுடுங்க என்றேன். அண்ணனோ,

‘நான் என்ன பண்றது நீ பெரிய ஸ்டார் ஆயிட்டே’ என்றார்.

சந்தோஷமான டூயட் பாடலில் நடித்து முடிக்கும் வரை, தாமதமாக வந்த உணர்வில் என் தலையில் ஒரு தயக்கம் சுழன்று கொண்டிருந்தது. ’ சரோஜாதேவி.

என் அருகே பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். போலிசுக்கு பயந்து மறைவிடத்தில் தங்கி இருப்பார். அங்கே செல்லும் சரோவோடு டூயட் பாடுவார்.

அவசரத்தில் சரோவின் பாவாடையை எம்.ஜி.ஆர். அணிந்து பாடுவதாக காட்சி. தியேட்டர்களில் கலகலப்பை ஏற்படுத்தும்.

எம்.ஜி.ஆர்.-சரோ சேர்ந்து நடித்த முதல் முழு நீள டாக்கி திருடாதே. அதுவும் விடிவெள்ளியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதை.

திருடி விட்டு அதற்காக வருந்தும் ஹீரோவின் மன உளைச்சலே அடிப்படை. இரண்டிலும் ஒரே நாயகி சரோ.

விடிவெள்ளி மாதிரி திருடாதே ஓடுமா...!

கண்டிப்பாக ஓடியே தீர வேண்டும் என்கிற கட்டாயம் எம்.ஜி.ஆருக்கு. திருடாதே வெற்றி அடைந்தால் மட்டுமே எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் மறு மலர்ச்சி ஏற்படும் அசாதாரண சூழ்நிலை.

போதாததற்கு சிவாஜியின் அடுத்த ‘பா’ வரிசைச் சித்திரம் பாவமன்னிப்பு மார்ச் 16ல் வெளியானது. மற்றொரு போட்டிக்கு முந்திக் கொண்டு உற்சாகமாகத் தோள் தட்டியது.

மார்ச் 23ல் திருடாதே ரிலீஸ்!

thirudathe.png 

தனது சக்ஸஸூக்கு சரோவின் பாபுலாரிடியை நம்ப வேண்டிய சங்கடம், முதன் முதலாக எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டிருந்தது எவராலும் மறுக்க முடியாத நிஜம்!

திருடாதே அநேக ஊர்களில் அநாயாசமாக 100 நாள்களைக் கடந்து ஆர்ப்பரித்தது.

எம்.ஜி.ஆர். நிரந்தரமாகச் சமூகச் சித்திரங்களுக்கு திசை மாற, திருடாதேயின் மகத்தான வசூலும் வெற்றியும் அஸ்திவாரம் அமைத்தது.

‘திருடாதே வெற்றிப்படத்துக்கு நான் தான் அஸ்திவாரம் என்ற நிஜம், வெளியே பலருக்குத் தெரியாமல் போயிற்று. ஆனால் சரோஜாதேவிக்கு எல்லாம் தெரியும்.

அதனால் ‘திருடாதே’ நூறாவது நாள் வெற்றி விழா நடைபெற்ற அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் கொண்டு வந்து என்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்து கொடுத்து விட்டுச் சென்றார்’ - சின்ன அண்ணாமலை.

தமிழ் சினிமாவில் தரித்திரம் தொலைய வேண்டுமானால், எம்.ஜி.ஆர்.- சரோஜாதேவி ஜோடி தொடர்ந்து இணைந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியானது.

அதற்கான அவசியத்தை அழகாகச் சொன்னது குமுதம் - ‘திருடாதே’ சினிமா விமர்சனம்-

‘எம்.ஜி.ஆருக்கு மற்றொரு புரட்சிதான். இதமாகத்தான் செய்திருக்கிறார். எத்தனையோ பேர் நாட்டுக்கட்டையாக நடித்து விட்டார்கள். என்ன போடு போடுகிறது அந்தப் பெண்! நாட்டுக்கட்டையாக சரோஜாதேவி செய்திருக்கும் விதத்தில் ஒரு தனிச்சிறப்பு உண்டு’

 

http://www.dinamani.com

  கள உறவு  Nathamuni இன் சம்மதத்துடன் இந்த திரி மீண்டும் தொடர்கிறது.

நன்றி Nathamuni..:)

சரோஜா தேவி: 5. நீ சாந்தி தானே...!

 

சரோவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய மகத்தான வெற்றிச் சித்திரம் பாலும் பழமும்!

அபிநய சரஸ்வதியின்  ஒப்பற்ற நடிப்பாற்றலுக்கு உரைகல்லாக எல்லாரும் எடுத்துச் சொல்வது  பாலும் பழமும் மாத்திரமே.

நர்ஸ் ‘சாந்தி’   எதனோடும் ஒப்பிட இயலாத தனித்துவம் மிக்க கதாபாத்திரம். தொடக்கம் முதல் இறுதி வரை இறுக்கமாகக் கட்டப்பட்டு இன்றைக்கும் மணம் வீசும் ஜாதி மல்லி!

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்,   நான் பேச நினைப்பதெல்லாம், காதல் சிறகைக் காற்றினில் விரித்து,  என்னை யார் என்று,  இந்த நாடகம் அந்த மேடையில்... என்று ஒவ்வொரு பாடலிலும் நாயகி சரோவின் குணச்சித்திரம், கதையின் சூழலுக்கேற்ப ஒன்றிக் கலந்து வெவ்வேறு உணர்ச்சி பாவங்கள் பெருக,  நடிப்பின் ஜீவநதியாகக் கரை புரண்டோடும்.

உலகத் தமிழர்கள் விரும்பும் பொற்காலத் திரை கானங்களில் பாலும் பழமும் படப் பாடல்கள் முந்தி நின்று சுகபந்தி விரிக்கும். சரோவை சதா  நினைவுப்படுத்தும். 

பாலும் பழமும் படத்தில் சவுகார் ஜானகி இன்னொரு ஹீரோயின்.

தனது அசாத்தியத் திறமையால்  ‘அன்னை’ சினிமாவில் பானுமதியையே மலைக்கச் செய்தவர். அவரை எதிரில் வைத்துக்கொண்டு, தன்னிகரற்ற நடிப்பில் சரோ சாதித்தது சாதாரண விஷயம் கிடையாது.

லீலாவாக வந்திருக்கும் சாந்திதான் டாக்டரின் முதல் மனைவி என்கிற நிஜம் புரிந்த நொடியில் சுந்தரிபாயும், சி.டி. ராஜகாந்தமும் சரோவை வீட்டை விட்டு வெளியேற்றும் காட்சி.

கடமை அர்ப்பணிப்பில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சரோ திருட்டுத்தனமாக ஏணி மீது ஏறி, சிவாஜிக்கு  ஊசி போடும் கட்டம் பதற்றமும், பரிதாபமும் நிறைந்தது.

சரோஜா தேவி: 6. அழுமூஞ்சி...!

 

 

ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் பணத்தோட்டத்தில் எம்.ஜி.ஆரும் டைரக்டர் கே. சங்கரும் முதன் முதலில் கை கோர்த்தார்கள்.

சிவாஜி கணேசனும் கே. சங்கரும் நீண்ட கால சிநேகிதர்கள். பி.எஸ். வீரப்பாவின் சூப்பர் ஹிட் படைப்பு ’ஆலயமணி’. கலைத் தொழிலிலும் அவர்களை ஒன்று சேர்த்தது.

அதே நேரம் எம்.ஜி.ஆர், ஜி.என்.வேலுமணியை அனுப்பிக் கையோடு சங்கரை வரவழைத்தார்.

‘ஏன் எதுக்கு எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிடறார்... சிவாஜியோட புது ப்ராஜெக்ட் ஆரம்பமாயிடுச்சே, அப்புறம் வரேன்னு சொல்லுங்களேன்.’ என்றார் அப்பாவியாக.

‘அதை நீங்களும் எம்.ஜி.ஆரும் நேர்ல பேசித் தீர்த்துக்குங்க.’

வேலுமணி விடமாட்டார் போலிருந்தது.

1962ல் உச்சக்கட்ட யுத்தம் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் நிலவியது. தினந்தோறும் விசிறிகளின் விஸ்வரூபம்! ரசிகர்களின் மண்டைகள் உடைந்த கதை பத்திரிகைகளில் வராத நாளே கிடையாது.

சங்கருக்கு சங்கடம்.

பயமும் குழப்பமும் போட்டியிட்டன. அது ஒரு காலை நேரம். வீட்டிலேயே சிற்றுண்டி அருந்தி விட்டு சங்கர் கிளம்பினார்.

ராமாவரம் ராமச்சந்திரன் சங்கரை மறுபடியும் டிபன் சாப்பிட வற்புறுத்தினார்.

ஏற்கனவே ஆயிற்று என்றாலும் ஆளை விடவில்லை. உண்ட பிறகே பேச்சு வார்த்தை என்றார். அஜீரணம் ஆனாலும் பரவாயில்லை என்று சங்கர் இலை முன்பு அமர்ந்தார்.

‘சார் ஆலயமணில முன்னாலேயே கமிட் ஆயிட்டேன். இப்ப உங்க படத்தையும் எப்படி ஒத்துக்கறது...?’

சங்கரின் வாய்க்குள் வார்த்தைகள் சடுகுடு ஆடின.

பார்க்க மிக எளிமையாகக் காட்சி தரும், சபைகளில் இனிமையாகப் பழகும் எம்.ஜி.ஆர். உள்ளுக்குள் சமர்த்தர்.

எம்.ஜி.ஆரின் சொல்லை மீறுவதும், காலை இடறுவதும் வெளியே தெரியாத விளைவுகளை சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கச் செய்யும்.

சங்கர் தன் பதில் எம்.ஜி.ஆருக்குப் போதுமானது என்று புறப்பட ஆயத்தமானார். சங்கரின் பணிவையும் பவ்யத்தையும் எம்.ஜி.ஆர். கிண்டலடித்தார்.

‘இந்த ஆக்டிங்லாம் இங்க வெச்சுக்காதீங்க. நீங்கதான் பணத்தோட்டம் டைரக்ட் பண்றீங்க...!’

300px-Panathottam.jpg 

எம்.ஜி.ஆர். அடித்துப் பேசினார். சங்கருக்கு சம்மதிப்பதைத் தவிர வேறு யோசனை எப்படி வரும்?

ஓர் படைப்பாளியைக் கைது செய்து சிறைப்படுத்தாத குறையாக சங்கரை பணத்தோட்டத்தில் சிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.

ஆலய மணி, பணத்தோட்டம் இரண்டிலும் ஒரே நாளில் வேலை செய்ய வேண்டி சங்கரும், நாயகி சரோவும் வாஹினியில் மாறி மாறி காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரையில் கஷ்டப்பட்டார்கள்.

நவம்பர் 23 - மாலை. கே. சங்கரை தொலைபேசி கூவிக் கூவி அழைத்தது. மறுமுனையில் எம்.ஜி.ஆர்.

‘சங்கர் நீங்கள் பெரிய வெற்றியைப் பெற்று விட்டீர்கள். சூப்பர் ஹிட் படத்தைக்கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!’

அன்று ஆலயமணி ரிலீஸ். நடிகர் திலகத்தின் படம் நூறு நாள்களைக் கடந்து வசூலில் சாதனை புரியப் போகிறது... என்கிற ஆசீர்வாதம் முதன் முதலில் பொன்மனச் செம்மலின் வாயிலிருந்து!

எம்.ஜி.ஆரின் வாக்குப் பலித்தது.

சென்னையில் பாரகன், ஸ்ரீகிருஷ்ணா, உமா, நூர்ஜஹான் என நான்கு தியேட்டர்களில் 100 நாள்கள் கண்ட முதல் படம் என்கிற அழியாப் பெருமையை அடைந்தது ஆலயமணி!

பாரகன் டாக்கீஸில் நிறைவாக 20 வாரங்களைக் கடந்தது.

ஆலயமணி தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறுபட்ட ஆங்கில பாணி படம். மன வக்கிரம் நிறைந்த தியாகராஜன் என்ற புதுமையான வேடம் சிவாஜிக்கு மட்டும் அல்ல. கோலிவுட்டுக்கும் புதுசோ புதுசு!

பி. எஸ். வீரப்பாவின் புகழ் பாடிய ஒரே சாதனைத் தயாரிப்பு!

‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா’ எஸ்.எஸ். ஆரும் - சரோவும் எடுத்த எடுப்பில் ஆடிப்பாடும் லவ் டூயட் சஸ்பென்ஸை ஏற்படுத்தும்.

சந்தர்ப்பவசத்தால் சரோ சிவாஜி கணேசனின் காதலி ஆவார். ஜாவர் சீதாராமனின் வெகு நுட்பமான திரைக்கதை.

‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’ சரோ ஆடிப்பாடி நடிக்கும் சூப்பர் ஹிட் பாடல். அக்காட்சி முடிந்ததும், சிவாஜியை சந்திக்க நேரும் சரோ, அவர் தனது எஸ்டேட் முதலாளி என்பதை அறியாமல் கேலி செய்வார்.

நிஜம் தெரிந்ததும் சரோ எப்படிக் கிண்டல் அடித்தாரோ..., அதை அப்படியே சிவாஜி அபிநயித்துக் காட்டுவது அரங்கை அமர்க்களப்படுத்தும் சுவாரஸ்யம்.

பின்னணி குரலில் பேக்ரவுண்ட் வாய்ஸில் ’ஹம்மிங்’குக்கு பிள்ளையார் சுழி போட்ட முதல் படம் ஆலயமணி.

‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’ டூயட்டில் எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் ஒலிக்கும். சரோவுக்கு ஈஸ்வரி பாடி சூப்பர்ஹிட் ஆன முதல் பாடலும் அதுவே.

சிவாஜி கணேசனின் தூரிகையில் சகுந்தலையாக சரோ சில விநாடிகள் தோன்றுவார்.

images.jpg 

ஆலயமணியில் திருப்பம் ஏற்படுத்தும் மரணப்பாறை காட்சிகளை ‘வர்க்கலை’ என்கிற ஊரில் படமாக்கினார்கள்.

க்ளைமாக்சில் சிவாஜி - சரோ இருவரும் இறந்து விடுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. நல்ல வேளையாக ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் ஆலயமணி சுபமாக முடிந்தது.

1962ல் சிவாஜி - சரோ இருவரது புகழையும் தக்க வைத்துக்கொண்ட ஒரே படமாக ‘ஆலயமணி’ அமைந்தது.

‘ஆலயமணியில் ‘மீனாவாக’ சரோஜாதேவி வருகிறார். அவரது சொந்த மாடல் குறும்புத்தனங்களைக் காதல் கட்டங்களில் காண்கிறோம். அப்புறம் குறும்புகளுக்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது.

அக்காவின் வாழ்க்கையைக் கடைத்தேற்றப் போக, அதற்காகத் தன் காதலைத் தியாகம் செய்ய நேரும் இடத்தில் அதிர்ச்சியைப் பொருத்தமாகக் காட்டியிருக்கிறார்’ என்று குமுதம் குறிப்பிட்டது.

----------------------------------

‘நீ படிப்பில் மேதையாக இருக்கலாம். பணத்தில் குபேரனாக இருக்கலாம். அழகில் மன்மதனாக இருக்கலாம். ஆனால் கண்ணியம் இல்லையே உன்னிடம்...‘

 

சரோ தட்டுத் தடுமாறி ஒத்திகையில் கஷ்டப்பட்டு பேசிப் பார்த்தும், டைரக்டர் எல். வி. பிரசாத் மவுனமாக நின்றார். ஓகே சொல்லவில்லை.

எல்.வி. பிரசாத்தின் ‘சுக்ரால்’ (இந்தி) மூலம் வடக்கேயும் சரோ வாகை சூடிய சமயம். 40 வாரங்களை வெகு சுலபமாகக் கடந்த ’சுக்ராலின்’ நாயகி உளறிக் கொட்டுவது சரோவுக்கே அவமானமாகத் தோன்றியது.

அது ‘இருவர் உள்ளம்’ சினிமா ஷூட்டிங்.

சரோவை அச்சுறுத்திய சமாசாரங்கள் அதில் அதிகம். தமிழகத்தின் மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர் லட்சுமி எழுதிய புதினம் ‘பெண் மனம்’. அதுவே இருவர் உள்ளம் என்ற பெயரில் படமாகியது. அதனைத் தயாரித்து இயக்கியவர் எல். வி. பிரசாத்.

சரோ ஹாயாக வந்து போகும் வழக்கமானப் பொழுது போக்குச் சித்திரமில்லை.

ஆண் இனத்தின் வாலிபத் தவறுகளுக்கு சாட்டையடி கொடுக்கும், வலிமை மிக்க வீராங்கனை – ‘சாந்தா’ வாக, சரோ விஸ்வரூபம் எடுக்க வேண்டிய வேடம்!

அதுவரையிலோ அதற்குப் பிறகோ அத்தனை உணர்ச்சிப் போராட்டமான, இறுக்கமானத் திரைக்கதையில் சரோ நடித்ததில்லை.

இருவர் உள்ளம் படத்துக்கு வசனம் மு. கருணாநிதி.

‘மனோகரா’ வின் செந்தமிழ்ச் சோலையிலிருந்து விடுபட்டு, சரோ சுலபமாகப் பேசும் வகையில் கலைஞர் உரையாடல் எழுதியிருந்தார்.

அதைப் பேசவும் சரோ சிரமப்பட்டார். அதற்குக் காரணம் நடிகர் திலகம்!

hqdefault (1).jpg 

சிவாஜி கணேசனுடன் நடிக்கும் போது டயலாகை கோட்டை விடுவது சரோவின் வாடிக்கை.

ஃபிலிமைத் தின்னும் தமிழர்களின் ட்ரீம் கே(ர்)ளை யூனிட் ஆள்கள் துச்சமாகக் காண்பது போல் தோன்றியது.

விளைவு சுய பச்சாதாபம் மேலிட க்ளிசரின் இன்றிக் கண்ணீர் விடத் தொடங்கினார்.

சதா புன்னகை தவழும் சரோவின் சந்தோஷக் கன்னங்களில், முதன் முதலாகச் சோகத்தின் தூரிகைகள்! அதைக் கண்டதும், கணேசனுக்கும் பதற்றம் பற்றிக் கொண்டது.

டைரக்டர் பொறுமையிழந்து கோபத்தில் சரோவை ஏதாவது ஏசி விடுவாரோ என்கிறத் தவிப்பு. சரோ மூட் அவுட் ஆனால் தமிழ் சினிமாவின் கல்லாவே காலி என்று அர்த்தம்.

புதிய பறவைக்கான கால்ஷீட்டும் கோவிந்தா ஆகிவிடும்.

ஹீரோயினைக் காப்பாற்ற கணேசன் துரிதமாகக் களத்தில் இறங்கினார்.

‘அன்று இப்படியே விட்டிருந்தால் என் டென்ஷன் ஜாஸ்தியாகி மேலும் சில டேக்குகள் வீணாகி இருக்கும். டைரக்டர் பிரசாத் என்னையே பார்க்கிறார். அப்போ சிவாஜி ஒரு காரியம் செய்தார்.

‘யாருப்பா அது லைட் சரியில்லை. சரி பண்ணு... சரி பண்ணு... என்றார்.

‘சரோஜா சரியாகத்தான் பேசறா...’,

‘சரோஜா... இந்த சீனை மறுபடியும் எடுக்கறதுக்கு நீ காரணமில்லை. டெக்னிகல் மிஸ்டேக். இந்த வாட்டி அழகா பண்ணிடு.’ என எனக்கு உற்சாகமூட்டுவது போல் கூற, நான் சுதாரித்துக் கொண்டேன்.

அடுத்த டேக்கில் என் நடிப்பு உடனடியாக ஓகே ஆனது.

அக்காட்சி திருப்தியாக எடுக்கப்பட்டதும்,

‘தப்பு என் மேலே. எதுக்கு லைட் சரியில்லன்னு பழி போட்டீங்க...?’ என்று கேட்டேன்.

அண்ணன் அதற்கு,

‘நீ தான் அழுமூஞ்சின்னு எனக்குத் தெரியுமே..! நானும் சேர்ந்து உன்னைத் திட்டினா அப்புறம் அந்த சீனை என்னைக்கு எடுக்கறது... ? என்றாரே பார்க்கலாம்.’ - சரோஜாதேவி.

சரோ நடித்து முடித்ததும் சிவாஜி ரீ ஆக்ஷன் தர வேண்டும். சரோவை மிஞ்சும் போட்டி மனப்பான்மை உசுப்ப கணேசன், ‘ஹீரோ செல்வம்’ உயிர் பெற்று உலவும் படியாக நடிப்பின் எல்லைக்கே சென்றார்.

கலைச் சிற்பி பிரசாத் முன்பு சிவாஜியும் சிறு துரும்பு.

’கட் கட் என்ற எல்.வி. பிரசாத், கணேசனை மெல்ல செட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றார்.

‘சிவாஜி நீ சிறந்த நடிகன் எனக்குத் தெரியும். நீ நடித்தால் காட்சியும் நன்றாக இருக்கும். ஆனால், இந்த சீனில் நீ பிரமாதமாகப் பண்ணினால் எல்லாமே வீணாகி விடும்.

இந்தக் கட்டத்தில் சரோஜாதேவிதான் உன்னை டாமினேட் பண்ணி நடிக்க வேண்டும்.

நீ பதில் பேசாமல் அமைதியாக இரு. இல்லையென்றால், இந்தக் காட்சி எடுபடாது. படமே ஓடாமல் போய் விடும்.’

பிரசாத் சொல்லே மந்திரம்! கணேசன் செயலற்று நின்றார்.

இருவர் உள்ளம் படத்தில்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

பி. சரோஜாதேவி

என்று இருவரது பெயரையும் இணைத்து டைட்டில் காட்டினார் எல்.வி. பிரசாத். கணேசனுக்கு இணையான நட்சத்திர அந்தஸ்தில் சரோஜாதேவிக்கும் கவுரவம் தேடித் தந்தார்.

vlcsnap-97682.png 

இருவர் உள்ளம் 1963 மார்ச் இறுதியில் வெளியானது. ’கல்கி’ வார இதழ் சரோவின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியது.

‘ சரோஜாதேவி மிக இயல்பாக நடித்திருக்கிறார். விழியும், பார்வையும், நடையும், முக பாவங்களும் பாத்திரத்தின் தன்மையை அற்புதமாக வெளிப்படுத்துகின்றன.

‘நாயகி சாந்தா’ பாத்திரத்துக்கு எல்லாவிதத்திலும் தகுதி உள்ளவர் சரோஜாதேவி.

சிவாஜியிடம் சீறும் போதும், சிவாஜியின் தங்கை பத்மாவுக்கு ட்யூஷன் எடுக்கையில், சிவாஜிக்கு சூடு கொடுக்கும் போதும், கணவன் களங்கமற்றவன் என்பதையறிந்து உதட்டசைவிலேயே உள்ளத் துடிப்பைக் காட்டும் உயிருள்ள நடிப்பு இருவர் உள்ளத்தை உயர்த்திக் காட்டுகிறது.’

கலைஞர், எல்.வி. பிரசாத்திடம் பந்தயம் கட்டிய மாதிரியே இருவர் உள்ளம் 100 நாள்கள் ஓடியது. எட்டு எழுத்து டைட்டிலில் தமிழில் வெற்றிச் சித்திரம் மிக அபூர்வம்! அதே போல் எட்டு சூப்பர் ஹிட் பாடல்கள்!

சரோவின் சோக கீதம் ‘இதயவீணை தூங்கும் போது பாட முடியுமா...!, பறவைகள் பலவிதம், கண் எதிரே தோன்றினாள், நதி எங்கே போகிறது, அழகு சிரிக்கிறது, ஏன் அழுதாய் ஏன் அழுதாய், கண்ணே கண்ணே, புத்தி சிகாமணி...

உள்பட கே.வி.மகாதேவன் இசையில் கேட்க கேட்கத் திகட்டாத கவியரசின் கானங்கள் இன்னமும் ஃஎப் எம் வானொலிகளில் நித்தமும் வலம் வருகின்றன.

சரோவின் நடிப்பாற்றலைச் சொல்லும் படமாக கலைஞர் தொலைக்காட்சியின் சிறப்புச் சித்திரமாக அவ்வப்போது ஒளிபரப்பாகிறது.

1963ல் எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி ஜோடியின் மிகப் பெரிய வசூல் சித்திரம் ஆர்.ஆர். பிக்சர்ஸின் பெரிய இடத்துப் பெண்.

டி.ஆர். ராமண்ணாவின் தயாரிப்பு இயக்கத்தில் உருவானது.

பட்டி தொட்டிகளில் கமலை முதன் முதலாக வசூல் ராஜாவாக்கிய சினிமா ‘சகலகலாவல்லவன்’. பெரிய இடத்துப் பெண்ணின் அப்பட்டமான காப்பி.

‘புனிதா’ என்கிற மாறுபட்ட வேடத்தில் நடிப்பில் சரோ சாதித்துக் காட்டிய படம் அது.

எம்.ஜி.ஆர். - சரோ ஜோடி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தது.

‘ஆனந்த விகடன்’ தனது விமர்சனத்தில் ரசிகர்களின் உணர்வைப் படம் பிடித்துக் காட்டியது.

முனுசாமி - ‘எம்.ஜி.ஆர். ஜோரா நடிச்சிருக்காராமே...?

மாணிக்கம் - ‘ஆமாம் அண்ணே. அவர் ஆடற இங்கிலீஷ் டான்ஸ் நல்லா இருக்குது.

முனுசாமி - லவ் சீன்ஸ் எப்படி?

மாணிக்கம்- ஏன் அதை மட்டும் தனியா கேக்கற?

முனுசாமி-எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி ஜோடின்னாலே காதல் காட்சிகள் எப்படின்னு கேட்கத் தோணுது.

மாணிக்கம்- ரசிக்கும் படியா இருக்கண்ணே. கண்ணுக்குக் குளிமையான காமிரா, காதுக்கு இனிமையான பாடல்கள்...

மற்றப் பட அதிபர்களுக்கு சிம்ம சொப்பனமாகக் காட்சி அளித்தவர் சின்னவர் எம்.ஜி.ஆர்.

தேவர் பிலிம்ஸில் நடிக்கும் போது மட்டும் ஜாலி ஹீரோ. அதிலும் சரோ ஜோடி என்றால் கேட்கவே வேண்டாம்.

1963 கோடை. மூவேந்தர்களும் ஊட்டியில் முகாமிட்டார்கள். சிவாஜிக்கு ரத்தத் திலகம், ஜெமினிக்கு வாழ்க்கை வாழ்வதற்கே, எம்.ஜி.ஆருக்கு நீதிக்குப் பின் பாசம் படப்பிடிப்புகள்.

தேவர் சில நாள்கள் எம்.ஜி.ஆரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்னைக்குப் போயிருந்தார். அதுவரை மழை கொட்டு கொட்டென்று கொட்டியது. தேவர் ஊட்டிக்குத் திரும்பிய அன்று வெயில் கொளுத்தியது.

சரோ, எம்.ஜி.ஆரைக் கலாய்க்கும் உற்சாகத்தில், ‘தேவர் இல்லாவிட்டால் ஷூட்டிங் நடக்க மாட்டேன் என்கிறது. என்ன இருந்தாலும் தேவர்தான் வேகத்துக்கும் வெற்றிக்கும் காரணம்.’

எம்.ஜி.ஆர். செல்லக் கோபத்துடன், ‘அப்படியா, அப்ப தேவரே நடிக்கட்டும் பார்ப்போம். வேகம், வெற்றி எப்படியிருக்குன்னு.

தேவர் : ‘ எல்லாம் முருகன் செயல்!’

எம்.ஜி.ஆர்.- ‘இது ஆர்ட்டிஸ்டுகளுக்கு இன்சல்ட்.’ அதற்கு மேல் பேச்சு வளர்த்த தேவரா விடுவார்.

‘வெயில் வந்தாச்சு. ரெடி ரெடி திருமுவம் டேக் எடுப்பா...’ என்ற படி, எம்.ஜி.ஆர். தன்னை மறைத்துக் கொண்ட குடையைப் பிடுங்கிப் போட்டார்.

http://www.dinamani.com

Edited by நவீனன்

சரோஜா தேவி: 7. கோபால்...!

 

1963ல்  எம்.ஜி.ஆர்.-சரோ - தேவர் பிலிம்ஸ் கூட்டணியில் மற்றுமோர் 100 நாள்  வெற்றிச் சித்திரம் நீதிக்குப் பின் பாசம்.

அதில் புரட்சி நடிகர் நிஜமாகவே ஒரு  வாத்தியார் என்பதை நிருபித்திருப்பார். சரோவுக்கு  சைக்கிள் கற்றுத்  தரும் கட்டத்தை, 

கண்ணதாசன்  சுவையான வார்த்தைகளில் டூயட்டாக வடிவமைத்தார்.

'அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே

இடுப்பை இடுப்பை வளைக்காதே ஹாண்டில் பாரைப் போடாதே’

பாடலைக் கேட்கும் யாருக்கும்  மிதி வண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட முதல் நாள் நிச்சயம் நினைவுக்கு வரும்.

எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மதிப்புக்குரிய அண்ணி சரோ.  அநியாயத்துக்கு பிஸி. அவரது தாயார் ருத்ரம்மா மகளின் நட்சத்திர வாழ்க்கையை கால்ஷீட்டுகளாகக் கணக்கிட்டார்.

முதன் முதலில்  வண்ணப்படங்களை யார் எடுத்தாலும் சரோவே நடிக்கவேண்டும் என அடம் பிடித்தனர்.

சரோ தேவர் பிலிம்ஸின் பிரியசகி. ஜனவரி 7ஆம் தேதி அவரது பிறந்த நாள். தேவர்  சரோவுக்குக் கனகாபிஷேகம் செய்யாத குறையாக பொற்காசுகளால் வாழ்த்தி விட்டு வருவார்.

சரோ வசித்ததால் அடையாறு  காந்தி நகர் தமிழ் சினிமாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும்  திரை பீடமாகப் புகழ் பெற்றது.

தேவர்  வேட்டைக்காரனுக்காக எம்.ஜி.ஆர் உள்பட வழக்கமான எம்.ஆர். ராதா, நம்பியார், அசோகன் தேதிகளை மொத்தமாக வாங்கிவிட்டார். சரோ மட்டுமே பாக்கி. நம்பிக்கையின் சிகரமாக  சரோவின் இல்லத்துக்குள்  நுழைந்தார்.

ருத்ரம்மா விடம்  'வேட்டைக்காரன் 1964  பொங்கல் ரிலீஸ்’  என்ற படியே பேச்சு வார்த்தையைத் தொடங்கினார்.

hqdefault.jpg 

'முன்னே மாதிரி ஒரேயடியா கொடுக்க முடியாதுங்க. பாப்பா  ராத்திரி பகலா வேல செஞ்சாலும் போதல. ’

தேவர் அதை சட்டை செய்யவில்லை. எல்லோரிடமும் சொல்வது தனக்கு ஒத்து வராது. சரோவைப் பொறுத்தவரையில் அவர்  ஸ்பெஷல் என்கிற எண்ணம். 

'எம்.ஜி.ஆரின் கால்ஷீட்டை நான் வீணாக்க முடியாதேம்மா... ’ என்றார்.

'நாகிரெட்டி,ஜி.என்.வேலுமணி, எம்.ஜி.ஆர். மேனேஜர் வீரப்பா, ராமண்ணா இவங்களும் காத்திருக்காங்க.  நீங்கமட்டும் மொத்தமா கேட்டா எப்படி? ’

தேவர்   திடுக்கிட்டார். எல்லோருக்கும் ஒரே  தராசா?

தேவரை ருத்ரம்மா  மதிக்காமல் அலட்சியப்படுத்துவதா...  அத்தனை தூரத்துக்கு வந்து விட்டாரா?

மறவன் ரத்தம் உச்சி மண்டையில் பாய்ந்தது.

வெற்றுக் காசோலைகளால்  உழைக்கும் கலைஞர்களின் வயிற்றில் அடிக்கும் தயாரிப்பாளர்களுக்கு நடுவில் தேவர் வேடந்தாங்கல்.

எடுத்த எடுப்பில் குதிரை, நாய்களுக்கும் மொத்த சம்பளத்தையும்  முன் பணமாகவே கொடுத்து விரட்டி வேலை வாங்குவது  தேவர் ஸ்டைல். அவருக்கு ஆத்திரம் வராமல் இருந்தால் மாத்திரமே ஆச்சர்யப்பட வேண்டும்.

அதிலும் சரோ  அரை டஜன் படங்களுக்கும் மேல் தேவர் பிலிம்ஸில்  அரிதாரம் பூசியவர். தேவரின் ஒவ்வொரு அசைவுக்கும்   ஆயிரம் அர்த்தங்கள் அறிந்தவர். அவரும் வேடிக்கை பார்க்கிறாரே...

‘எம்.ஜி.ஆர். ஒதுக்கின நாள்ள சரோஜா வந்து நடிக்குமா, இல்லையா...? ’

தேவர்  ஓர் எஜமானராக உள்ளுக்குள்  சுயமரியாதைச் சுடர் எரிய  நின்றார்.

‘இப்படிப் பேசினா எம் பொண்ணு உங்க படத்துல நடிக்காது. ’ ருத்ரம்மா எரிமலைக்குள் கற்பூரத்தை எறிந்து விட்டார்.

‘உங்க மக என் படத்துல நடிக்கணுமா வேணாமான்னு நீங்க முடிவு பண்ணக் கூடாது. அதைத் தீர்மானிக்க வேண்டியவன் நான். ’

அங்கவஸ்திரத்தை ஆவேசமாக  இழுத்துப் போர்த்திக் கொண்டு புயலாகப் புறப்பட்டார் தேவர்.

 சினிமா காட்சி போல் சரோ ஓடி வந்து தடுத்தார். அதைச் சட்டை செய்யாமல் கார் வெளியேறியது.  

தெய்வத்தாய் ஷூட்டிங்கில் நடந்த  இனிப்பு விஷயம், சரோவின் சர்க்கரை வார்த்தைகளில்:

படப்பிடிப்பு நாள்களில் சாயந்தரமானா  எம்.ஜி.ஆர். அண்ணனே டிபன் வரவழைப்பார். அதுல ஸ்பெஷல் ஐட்டமா இருக்கிறது பாஸந்தி. அண்ணன் பாஸந்தியை விரும்பிச் சாப்பிடுவார். அப்ப நான் ரொம்ப ஒல்லியா இருப்பேன். எங்கிட்டே ‘சரோஜா, பாஸந்தி சாப்பிடு. உடல் கொஞ்சம் பூசினாப்பல வரும். ’ என்பார்.

‘இல்லண்ணே... உண்டாகிற உடம்பு இயற்கையா உண்டாகட்டுமே... ’ என்பேன்.

 அன்னிக்கு ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’ பாடல் சீன் எடுத்தாங்க.  அதுல எம்.ஜி.ஆர். அங்கங்கே என்னை அலாக்கா  தூக்கி வைப்பார்.  அத்தனை ஒல்லியா இருந்தேன். அதனாலதான் உடம்பில் கொஞ்சம் சதை போடட்டுமேன்னு கரிசனத்தோட கேட்டிருந்தார்னு புரிஞ்சிக்கிட்டேன். ’-சரோஜாதேவி.

தெய்வத்தாய் சினிமா விமர்சனத்தில் ஆனந்த விகடன் எழுதியவை,  சரோ - எம்.ஜி.ஆர். ஜோடியை ஒவ்வொரு பாராவிலும் உச்சி குளிர வைத்தது. 

மாணிக்கம் - -: எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லுப்பா!

முனுசாமி - : தெய்வத்தாயில் எம்.ஜி.ஆர். பிரமாதமா இங்கிலீஷ் டான்ஸ் ஆடியிருக்கார் பார்த்தியா? ஏன் நடிப்புக்கும் தான் என்ன குறைச்சல்?தனக்குக் கல்யாணம் ஆன மாதிரி சரோஜாதேவியோட நாடகம் ஆடறாரே, அந்த சீன்லே  சிரிப்பை அடக்க முடியலே!

மாணிக்கம் - : அந்தக் காட்சி மட்டுமா, முதல்லருந்தே  ஸ்கூட்டர் மாறிப் போறதும், போன்ல ரெண்டு பேரும் பேசிக்கறதும்  ‘பார்க்லே’ சந்திக்கிறதும் எல்லா  காட்சிகளும் நல்லாத்தான் இருந்தது.

முனுசாமி : - சரோஜாதேவியும் குறும்புக்கார பொண்ணா நல்லா நடிச்சிருக்காங்க. வெடுக்குப் பேச்சும், துடுக்குத்தனமும், பாட்டி மாதிரி இருமி நடிக்கிறதும் ரொம்ப ஜோர்.

‘இந்தப் புன்னகை என்ன விலை, வண்ணக்கிளி சொன்ன மொழி’ ரெண்டு டூயட்டும் கேட்க சுகமாயிருந்தது. எனக்கு ரொம்பப் பிடிச்சது.’

------------------சமீபத்தில் சென்னையின் பிரபலமான பள்ளி  ஒன்றில் நடந்த பல்சுவை நிகழ்ச்சிகளில் ‘கனெக்ஷன்’ என்கிற விளையாட்டும் ஒன்று.  அதில் மூதறிஞர் ராஜாஜியின்  முழு பெயரைக் கண்டு பிடிப்பதற்காகக்  திரையில் காட்டப்பட்டவை  சீட்டாட்ட ராஜா, புதிய பறவை சிவாஜி, சேலை ஆகியன.

இமை மூடித் திறக்கும் நொடி நேரத்துக்குள் மாணவிகள் மிகச் சரியாக ராஜாஜியின் திருநாமத்தை ‘ராஜ கோபாலச்சாரி’ என்று கண்டுபிடித்துச் சொன்னார்களாம்!

நீதிக்குப் பின் பாசம் படத்தில் கூட எம்.ஜி.ஆர். பெயர் கோபால்.

‘வாங்க வாங்க கோபாலய்யா வழக்கு என்ன கேளுங்கய்யா... ’  என்று சரோவே நாயகனை வரவேற்றுப் பாடுவார்.

பாரத விலாஸில் சிவாஜியும் - கோபால் தான். அப்படி எத்தனையோ ஹீரோக்கள் கோபால் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கே. பாக்யராஜூக்கும் கோபால் ராசியான திருநாமம். சின்ன வீடு படத்தில் அவரை கோவை சரளா கோவாலு என்று அழைக்கும் விதமே அலாதியாக இருக்கும். அரங்குகளில் அமர்க்களத்தை உண்டு பண்ணும்!

சமூக சீர்திருத்த கருத்துகளைச் சொல்லி வெள்ளி விழா கொண்டாடிய, கே.பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தில் அவரது பெயர் கோபால்.

‘புதிய பறவை கோபால்’ மட்டும் இளங்குருத்துக்களின் மனத்திலும் பதியம் போட மிக முக்கிய காரணம் சரோ.

புதிய பறவை ஹீரோவை அவர் குழைவாக அழைத்த ஸ்டைலும், அந்தக் ‘கொஞ்சும் கிளி’ பாஷையும் நாலு தலைமுறைகளைகளையும் தாண்டி தனித்து நிற்கிறது.

‘சின்னக் கலைவாணர், ‘பத்மஸ்ரீ’ விவேக்’கால், கே.ஆர். ஜி.யின் கடைசித் தயாரிப்பான ‘குரு என் ஆளு’ படத்தில் ‘கோபால்’ மறு வாழ்வு பெற்றது.

சென்ற தலைமுறையினருக்கு ‘அண்டை வீட்டுக்காரரின் பொறாமை’  என்கிற வாசகத்தோடு பிரபலமான ‘ஒனிடா’  கலர் டிவி  விளம்பரம் மறந்திருக்காது.

புதிய பறவை மெல்லச் சிறகை விரித்த போது பத்மினி, தேவிகா என்று வி.சி. கணேசனின் ‘இஷ்டப் பிராணேஸ்வரிகள்’  ஃபீல்டில் இருந்தார்கள்.

கே.ஆர். விஜயா, ஷீலா, ராஜஸ்ரீ, காஞ்சனா, ஜெயந்தி போன்ற கவர்ச்சிகரமானப் புதுமுகங்களுக்கும் பஞ்சமில்லை.

‘சிவாஜி பிலிம்ஸ்’ தயாரிக்கும் முதல் படம். அதுவும் வண்ணச் சித்திரம். அதில் அவசியம் சரோ   ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று நடிகர் திலகம் ஒற்றைக் காலில் நின்றார்.

ஒப்பனை உலகின் ஒரே மகாராணியாக, வெவ்வேறு காட்சிகளுக்காக  ஆடை மாற்றவும் சந்தர்ப்பம் கிடைக்காமல் சரோ மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார்.

சிம்மக்குரலோனின் இனிய விருப்பத்தை நிறைவேற்ற முடியாத கசப்பான சூழல். சரோ நிஜமாகவே தவித்தார்.

‘புதிய பறவை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அப்போது நான் முப்பது படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். சிவாஜியின் தம்பி ஷண்முகம் புதிய பறவை படத்துக்காக கால்ஷீட் கேட்டார்.

காலை ஏழு மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடித்தால் போதும் என்று சொன்னார். அவர் கேட்ட மாதிரியே செய்தேன். புதிய பறவைக்காக காஸ்ட்யூம், மேக் அப் எல்லாமே விசேஷமாக அமைந்தது.

சிவாஜி என் உடை, தலை அலங்காரம் ஆகியவற்றை  பார்த்து விட்டு, ‘சரோஜா, இது உனக்கு நன்றாக இருக்கிறது. இதையே கன்டினியூ பண்ணு’ என்றார். - சரோஜாதேவி.

ஏகத்துக்குப் பரபரப்பாக, பத்திரிகைகளில்  தலைப்புச் செய்தியாக... வரலாறு காணாத கனவுக் கன்னியாக நாளுக்கு நாள் சரோ சாதனை படைத்த பொற்காலம்.

வெள்ளித் திரைகளில் உற்சாக மூட்டும் உன்னத நட்சத்திரம் - ‘சரோ’ என்கிறத் தன் பிரிய புத்திரி, உள்ளத்துக்குள் வேதனையை அனுபவிப்பதை தாயார் ருத்ரம்மாவுக்கு ஒரு தினம் உணர்த்தியது.

நடந்தது என்ன ?

‘நான் சிரிக்கக் கூடாதா? ’ என்கிறத் தலைப்பில் வார இதழ் ஒன்றில் வந்ததை, வரிக்கு வரி  அப்படியே உங்களுக்கும் தாரை வார்க்கிறேன்.

‘சரோஜாதேவிக்குச் சொந்தமான கோவை மில்லில் வேலை நிறுத்தம் ஏற்பட்டிருந்த சமயம். அனைத்து முக்கிய நிர்வாகிகளும் சென்னைக்கு வந்து ருத்ரம்மாவைச் சந்தித்தனர்.

சரோஜாதேவி அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளவில்லை. ஏதோ ஒரு தமாஷைப் படித்து விட்டு, ‘கடகட’  என வாய் விட்டுச் சிரித்துக் கொண்டே இருந்தார்.

தாயார் கோபமாக  - ‘சரோ...  நாங்கள் எவ்வளவு சீரியஸாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். நீ என்னமோ குழந்தை மாதிரி சிரிக்கிறாயே... இங்கே வந்து இவங்க சொல்வதைக் கேள்! ’

சரோ - ‘உங்க சீரியுஸுமாச்சு. நீங்களுமாச்சு.

1.எதைத் தின்றால் உடம்பு ஊதி விடுவோமோ என்ற பயத்திலே ஆசைப்பட்டதைச் சாப்பிட முடியல.

2. சொந்தத் துணிமணிகளைத்தான் கட்ட முடிகிறதா...? நாள் பூராவும் சினிமாப் படத்துக்கான டிரஸ்தான்.

3. கல்யாணம் கார்த்திகை என்று எங்காவது போக முடிகிறதா...?

4. சரி போகட்டும். நான் படுத்துத் தூங்குவதற்காகப் பிரமாதமாக ஒரு அறை கட்டியிருக்கிறாயே, அங்கே தான் நான் அப்பாடா... என்று மணிக்கணக்காகப் படுத்துத் தூங்கவாவது முடிகிறதா...?

எதுவுமில்லை.

5. இந்தச் சிரிப்பு ஒன்றுதான்  நான் கண்ட ஒரே சுகம். இதையும் வேண்டாம் என்று சொல்கிறாயே...! ’

பெற்ற தாய்க்குக் கண்களில் நீர் முட்டி நின்றது.

-----------------------------------------------------------

படகோட்டி 1964  தீபாவளிக்கு ரிலிசானது. நடிகர் திலகம் சதம் அடித்த நவராத்திரி, 101வது முரடன் முத்து இரண்டு சினிமாக்களுக்கும் இடையே படகோட்டி நூறு நாள்களைக் கடந்து  வெற்றி பவனி வந்தது.

படகோட்டிக்கு அநேகப் பெருமைகள் உண்டு.

சரவணா பிலிம்ஸின் முதல் வண்ணத் தயாரிப்பு!

குப்பத்து மீனவர் வாழ்க்கையைத் தமிழ்த் திரையில் காட்டிய முதல் படம்.

படகோட்டிக்குப் பின்னர் கடலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சாவித்ரியின் பிராப்தம், பி.வாசுவின் கட்டுமரக்காரன், மணிரத்னத்தின் கடல், தனுஷின் மரியான் உள்பட  அநேக சினிமாக்கள் வசூலில் கவிழ்ந்து போயின.

‘செம்படவப் பெண் முத்தழகியாக சரோவும், படகோட்டி மாணிக்கமாக மக்கள் திலகமும் உலகத் தமிழர்களுக்குத் தங்கள் அற்புதத் திறமையால் இன்று வரை நவரஸ விருந்து படைக்கிறார்கள்.

மலையாள மண்ணின் மைந்தர் எம்.ஜி.ஆர். கேரளா சென்று அவுட்டோரில் கலந்து கொண்ட முதல் படம்.

கண்ணதாசனுக்கு இணையாக கவிஞர் வாலிக்குத் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய அங்கீகாரத்தை எம்.ஜி.ஆர். ஏற்படுத்தித் தந்த முதல் படம்.

எம்.ஜி.ஆர்.- சரோ ஜோடி நடித்த படங்களில் இனிமையான  சூப்பர் ஹிட் பாடல்களில் என்றும் படகோட்டிக்கே முதல் இடம்!

‘பாட்டுக்கு பாட்டெடுத்து’ மாதிரியான காதல் ஏக்கப் பாடல் எம்.ஜி.ஆர்.- சரோ வெற்றிச் சித்திரங்களில் படகோட்டிக்கு முன்போ பின்போ இடம் பெறவே இல்லை.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்புகள் உள்படப் பொன்மனச்செம்மல் - அபிநய சரஸ்வதி இணைந்து நடித்த பெரும்பாலான படங்கள் சின்னத்திரையில் அன்றாடம் இடம் பெறுகிறது.

அவற்றில் படகோட்டிக்கான உரிமை மட்டும் இன்னமும் வழங்கப்படவில்லை. காரணம் படகோட்டி விநியோக உரிமையை வைத்திருக்கும் தேவி பிலிம்ஸ் இன்றைய முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிச்சித்திரங்களுக்கு நிகராக  கேட்கும் மதிப்பு மிக்கத் தொகை! 

அதுவே படகோட்டியின் தனிச் சிறப்பு!

எப்போது மீண்டும் திரைக்கு வரும் என்று  சகலரையும் ஏங்க வைத்துக் கொண்டிருக்கும் வெற்றிச்சித்திரம் படகோட்டி.     

‘கன்னடத்துப் பைங்கிளியைக் கேரளத்து மண்ணில் விளையாட விட்டிருக்கிறார்கள்.சதங்கை ஒலி நடையும் வனப்பும் ஓரளவு நடிப்பும் நன்றாக அமைந்துள்ளன.

தென்னஞ்சோலைகள், உப்பங்கழிகள், சூரிய அஸ்தமனக் காட்சிகள்... - ஒளிப்பதிவாளர் பி.எல். ராய்க்கு பாராட்டுதல்கள்.

புரட்சி நடிகரின் ரசிகர்களுக்கு ஒரு விருந்து! ’

என்றது ‘கல்கி’யில் வெளியான விமர்சனம்.

ஏ.ஆர். ரஹ்மான் முதன் முதலில் ரீமிக்ஸ் செய்த பாடல் தொட்டால் பூ மலரும். அதற்கு இளைய தலைமுறையின் அமோக ஆதரவும், பெரிசுகளின் கண்டனமும் அதிகமாகவே எழுந்தது.

அந்தப் பாடல் காட்சியில் நடித்த சரோஜா தேவியின் கருத்து என்ன?

‘ரீ மிக்ஸ் பண்ணும் போது, பழைய பாடலில் இருந்த இனிமை போய் விடுகிறது. குறிப்பாக நானும், எம்.ஜி.ஆரும் நடித்த தொட்டால் பூ மலரும் என்ற ரீ மிக்ஸ் பாடல், என் ரசிகர்களுக்குப் பிடிக்கவேயில்லை. ’ 

http://www.dinamani.com

சரோஜா தேவி: 9. சக்கரக்கட்டி ராசாத்தி…!

 

 

 
1965  தீபாவளி ரிலீஸ் தாழம்பூ. அதன்  ஷூட்டிங்கை முடித்து விட்டு, உதவியாளர்கள் சாமி, ஆர்.எம்.வீரப்பன், முத்து ஆகியோரோடு கொழும்பில் கால் வைத்தார் எம்.ஜி.ஆர்.  அவருடன் சரோவும் ருத்ரம்மாவும்.

 

இலங்கை வானொலியில் தன்னுடைய ராசி எண்ணான ஒன்பதாம் இலக்க கலையகத்தில் எம்.ஜி.ஆர். உரையாற்றினார்.

 

வெளியே வரலாறு காணாத மழை.

நனைந்த படியே ஈழ ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் காண  நின்றனர். எம்.ஜி.ஆரும் சரோவும் பேட்டி முடிந்து வெளியே வந்த போது, கண்ணாடிகளின் வழியே ஈரத் தமிழர்கள்  எம்.ஜி.ஆரிடம் கெஞ்சினார்கள்.

‘அண்ணேன்… அண்ணேன்…  கொஞ்சம் நின்னு உங்க முகத்தைக் காட்டிட்டுப் போங்கோ… ’

எம்.ஜி.ஆர்.- ‘அம்மா  சரோ நீயும் உம்முகத்த காட்டு’.

ரசிகர்:சிறப்பா போயிட்டு வாங்க.

சிலோன் பயணத்தில் சரோ அவ்வளவு சந்தோஷமாக இல்லை. ஆயிரத்தில் ஒருவனின் அட்டகாச வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆர்., அம்முவுக்கு மாறி விட்டது கடல் கடந்தும் தெரிந்திருந்தது.

 சரோ மனத்தில் அடுத்து எம்.ஜி.ஆரோடு நடிக்கப்  புதிய படங்கள் ஒப்பந்தம் ஆகாத கவலை.

‘நுவரெலியாவில்  ஒன்னறை மணி நேரமும் சிரிக்காத சரோஜாதேவிக்கு என்ன கோபமோ!’

என்று வார இதழ் ஒன்றில் வருந்தினார் இலங்கையைச் சேர்ந்த மா. சிவராஜன்.

இலங்கையின் பிரதமர்  டட்லி சேனா நாயகாவை  எம்.ஜி.ஆரும்- சரோவும் சந்தித்தார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தந்தத்தாலான நேருவின் சிலையை எம்.ஜி.ஆர். நினைவுப் பரிசாக வழங்கினார். அது போதாதென்று தன்னுடைய அன்பையும் மரியாதையையும் தெரிவிக்கும் வகையில் தந்தத்தாலான விளக்கொன்றையும் அளித்தார்.

அக்டோபர் 22ல் கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு  மாபெரும் பாராட்டுக் கூட்டம் நடந்தது. லட்சக்கணக்கான  மக்கள், கொட்டும் மழையிலும் எம்.ஜி.ஆரின் பேச்சை  ஆர்வத்தோடு நனைந்த படியே கேட்டார்கள்.

 கொழும்பு மேயர், ஸ்ரீலங்காவின் உள் நாட்டு மந்திரி தகநாயகா எம்.ஜி.ஆருக்கு வரவேற்புரை வழங்கினர். சரோவுக்கு அவர் இருப்பது கோடம்பாக்கமா, கொழும்புவா என்று பிரமிப்பாகத் தோன்றியது.

நிருத்திய சக்கரவர்த்தி என எம்.ஜி.ஆருக்கும்,  நிருத்திய லட்சுமி என்று சரோவுக்கும்  இலங்கை கலாசாரத்துறை   அமைச்சர் காமினி ஜெயசூர்யா  பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்பதைத்  தமிழக எம்.ஜி.ஆர். விசிறிகள் நடிகப் பேரரசு எனவும், ‘நிருத்திய லட்சுமி’யை நடிகத் திருமகள்  ஆகவும் தங்களின் விருப்பத்துக்கேற்றவாறு அர்த்தப்படுத்திக் கொண்டனர்.

1966ல் எம்.ஜி.ஆரின் முதல் படம் ஏவிஎம்மின்  50வது தயாரிப்பு. 1965 ஆகஸ்ட் 12ம் தேதி அன்பே வா படத்துக்கு பூஜை போட்டார்கள்.

ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு அம்முவே எம்.ஜி.ஆரின் அன்பான சாய்ஸ். ‘சரோ வேண்டாம்’ என்றார்.

‘அண்ணி  சரோவோடு  வாத்தியாருக்கு என்ன தகராறு..?   எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் இனிச் சேர்ந்து நடிக்கவே மாட்டார்களா..?’ எனப் பத்திரிகைகளில் வாசகர்கள்  தொடர்ந்து  கேள்விகள் கேட்டார்கள்.  ஏவி.எம்.  எங்க வீட்டுப் பிள்ளை  ஜோடிக்கு ஆதரவாக  நின்றார்.

சிம்லாவில் சரோவுக்கு வேலை கிடையாது. ஆனால் ஏவிஎம்., சரோவையும் எம்.ஜி.ஆரோடு அனுப்பினார்.

‘இருவரையும் சேர்த்து காதல் மூவ்மெண்டுகளை சிம்லாவில் ஷூட் செய்யுங்கள். டூயட் பாடல் காட்சியில் ஆங்காங்கே பயன் படுத்திக் கொள்ளலாம்.

 பத்திரிகைகளில் ‘எம்.ஜி.ஆர்.- சரோஜா தேவி ஜோடியாக, அன்பே வாவுக்காக சிம்லா போகிறார்கள்!’ எனச் செய்தி வரும்.

மக்கள் மத்தியில் பரபரப்பும், படத்தை உடனே பார்க்க விரும்பும் ஆர்வமும் அதிகரிக்கும்’ என்றார்.

எம்.ஜி.ஆர். ஏறக்குறையத் தன்னைக் கைவிட்டு விட்டதாகவே சரோ நினைத்தார். எங்க வீட்டுப் பிள்ளைக்குப் பிறகு, எட்டு மாதங்கள்  ஆகியும் அவர் நடித்து எந்தப் புதுப்படமும் ரிலிசாகவில்லை.

அரச கட்டளை, நாடோடி, தாலி பாக்கியம், பறக்கும் பாவை மாதிரியானப் பழைய,நீண்ட காலத் தயாரிப்புகளில் மட்டும் எம்.ஜி.ஆருடன்  நடிக்க வேண்டிய சூழல்.

சோகத்தை வெளிக்காட்டாமல் சரோ, சிம்லா தோட்டங்களில் எம்.ஜி.ஆருடன் சும்மா வேணும் ஆடிக் களித்தார்.

ஒரு நாள் புல்வெளி ஒன்றில், ரெடி ஸ்டார்ட்டுக்காக, சரோ நின்று கொண்டிருந்த நேரம்.  எம்.ஜி.ஆர். அவரைப் பிடித்து மல்லாக்கத் தள்ளினார். சரோ  நாலடி எட்டிப் போய் மண்ணில் விழுந்தார். யூனிட் பதறியது.

 என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு. யாருக்கும் ஏதும் புரியாது மலைத்தனர். எம்.ஜி.ஆர். அவர்களிடம் நடந்ததைக் கூறி சாந்தப் படுத்தினார்.

சரோவின் காலுக்கடியில் ஓர் இரட்டைத் தலை நாகம் சீறியவாறு நெருங்கி வந்திருக்கிறது. நாயகிக்குப் பக்கத்தில் பாம்பு படம் எடுத்து நிற்பதை கவனித்த மக்கள் திலகம், எப்போதும் போல் உஷார் பார்ட்டியாக நடந்து கொண்டார்.

‘சரோ… பாம்பு… பாம்பு… எனக் கத்திப் பதற்றத்தை உண்டு பண்ணாமல், சமயோசிதமாக ஹீரோயினை கீழேத் தள்ளிச் சாய்த்திருக்கிறார். அதோடு நிறுத்தாமல் தன் பூட்ஸ் கால்களால், கொடிய நாகத்தை மிதித்தேக் கொன்றும் விட்டார்.

சரோவுக்கு நிம்மதிப் பெருமூச்சு தோன்றியது. எம்.ஜி.ஆர். மனத்துக்குள் தனக்கான இடம் பத்திரமாக  உள்ளதாக  உணர்ந்தார். வாத்தியாருடைய அன்புக்கும், சமயோசிதத்துக்கும் நன்றி சொன்னார்.

 தன் உயிரைக் காப்பாற்றிய வாத்தியாரிடம்,

‘எப்படிண்ணே இந்த மாதிரிப் பண்ணணும்னு உங்களுக்குத் தோணிச்சு?’ எனக் கேட்டார்.

‘இப்படி இக்கட்டான நேரத்துல நம்ம புத்தியை யூஸ் பண்றதுலதான் வெற்றியே இருக்கு.’ என்றார் எம்.ஜி.ஆர்.

சிம்லா மற்றும் ஊட்டி அவுட்டோர்களில் எம்.ஜி.ஆர். நடனப் பெண்களுக்குப் போட்டி வைத்து, சிறப்பாக ஆடியவர்களுக்கு  நூறுநூறாக அள்ளிக் கொடுத்தார். பந்தயம் நடத்தச் சொல்லி சரோவிடமும் கேட்கச்  சொன்னார்  எம்.ஜி.ஆர்.

அதற்கு சரோவின் பதில்- ‘ஓகே. நான் கேம்ஸ் வைக்கிறேன். ஆனா ப்ரைஸ் ஹீரோ தான் கொடுக்கணும். ’

சரோவுக்கும் சேர்த்து எம்.ஜி.ஆர். இரட்டிப்பாகத்  தந்தார்.

அன்பே வா படத்துக்கு எம்.ஜி.ஆர். அவர் அதுவரையில் வாங்கியிராத  கூடுதல் சம்பளத்தை ஏவிஎம். மிடமிருந்து வற்புறுத்திப் பெற்றார்.

எல்லாம் அறிந்தவர்  ஏவி.எம். நாயகி சரோவின் மார்க்கெட் சரிந்து வருவதை அறிந்து,  அவருக்கு மிகக் குறைவான ஊதியத்தை நிர்ணயித்தார். வெறும் தொண்ணூறு ஆயிரம் ரூபாய்!

கிட்டத்தட்ட  மூன்று லகரங்கள் வரை டிமான்ட் செய்யும் சரோ,  சமர்த்தாகக் கொடுத்ததை வாங்கிக் கொண்டார்.

நாகிரெட்டி  எங்கவீட்டுப் பிள்ளைக்காக பிரம்மாண்ட செட்களை அமைத்தார். ஆனால் ஏவிஎம்மோ  எம்.ஜி.ஆருக்காக  எட்டாவதாகப் புதிய தளத்தை  விசாலமாகக் கட்டினார்.

கூடவே  எம்.ஜி.ஆருக்கும் சரோவுக்கும்  ஸ்பெஷலாகத்  தனித் தனி  ஏசி மேக்அப் ரூம்கள்.

‘ அன்பே வா’ வில் ஏவி.எம். ஹீரோயினின் ஆடை அலங்காரத்திலும் அதிக அக்கறை காட்டினார்.

11c8cw9.jpg

பெங்களூரில் ரிலிசாகியிருந்தது வக்த் இந்தி கலர் சினிமா. யதேச்சையாக மெய்யப்பன் அதைக் காண நேர்ந்தது.

‘வக்த்’ நாயகி அணிந்திருந்த வண்ணமயமான சுடிதார்களில் மனம் மயங்கி, அதே போன்ற உடுப்புகளை நம்ம சரோவுக்கும் அன்பே வா வில் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதற்காகவே சரோவின் காஸ்ட்யூமர் பெங்களூர் சென்று வக்த் படத்தைப் பார்த்து, சரோவுக்கான உடைகளைத் தைத்துக் கொடுத்தார்.

 சரோவின் சம்பளக் குறைப்பை சரிக்கட்டும் விதமாகவும்,  அபிநய சரஸ்வதி சந்தோஷத்துடன்  நடிப்பதற்காகவும், கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் செலவில் ஆடை ஆபரணங்கள் ஏவி.எம்மால்  சரோவுக்காக வாங்கப்பட்டன.

ஒரே காட்சிக்கு ஒவ்வொரு முறையும் மூன்று செட் துணிகள். புதிய புதிய வண்ணங்களிலும், ரகங்களிலும் அதி நவீன ஆடைகள்.

 அதில் எம்.ஜி.ஆரும், சரோவும் தங்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்ததை,சிவசங்கரியின் வார்த்தைகளில் சொன்னால்-

‘தினுசு தினுசான காஸ்ட்யூம்களில் எதை எடுப்பது எதை விடுவது!’

அன்பே வா  அவுட்டோருக்காக  ‘ஊட்டி உட்லண்ட்ஸ் ஹோட்டலில்’, சரோவின் உடைகளைப் பராமரிப்பதற்காக மாத்திரம் தனி அறை ஒன்று 24 மணி நேரமும் தயாராக இருந்தது.

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பல்லவியை  எம்.எஸ்.வி  சொல்ல, மற்ற சரணங்கள்  வாலியால் வலியோடு எழுதப்பட்டது.

மறு நாள்  சிம்லாவுக்குப் போக வேண்டும். அதற்குள்  ராஜாவின் பார்வை பாடலைப்  படமாக்க  டைரக்டர் ஏ.சி. திருலோகசந்தருக்குக்  கட்டளையிட்டார் செட்டியார்.

திருலோக் ஒரு சாரட்டைக் கொண்டு வரச் சொன்னார். எம்.ஜி.ஆர் -சரோவை அதில் ஏற்றி,  எம்.ஜி.ஆரின் கையில் குதிரை லகான் போன்ற வார்ப்பட்டையைக் கொடுத்தார்.

அதன் மறு கோடியில் ஒரு  பையனை இழுத்துப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். அவன் தான் குதிரை.  ராஜாவின் பார்வை ஒலிக்கப் படம் பிடித்தார்.

பின்பு  நிஜக்  குதிரையைக் கொண்டு வரச்  செய்து,  அது  தலையை மேலும் கீழும் அசைப்பதையும் குதிரையை ஓட விட்டு அதன் கால்களும்   தனியேப் பதிவு செய்யப்பட்டன.  அடுத்து சாரட்டின் சக்கரங்களும்  சுழல  அனைத்தும்  காமிராவில் விழுந்தன.

சிம்லாவிலும்  எம்.ஜி.ஆர்.-சரோவை  ஆடச்செய்து  சில காட்சிகளை  எடுத்தார்கள். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஒரு பாடலாக உருவாக்கினார் திருலோக்.

இன்று வரையில்  ராஜாவின் பார்வை  ரசிகர்களின் பக்கம். அதன் பிறகு  எம்.ஜி.ஆர் படங்களில்  காதல்  கனவுப் பாடல்கள்  முக்கிய முதலீடு ஆனது.

ஏறக்குறைய  மூன்று லட்சத்துக்குள்  ஏவிஎம்  தயாரிப்புகள் முடிந்து விடும். ஹீரோ  எம்.ஜி.ஆர் என்பதற்காக  முப்பது லகரங்கள்  துணிந்து செலவிட்டார் செட்டியார். தமிழ் சினிமா  சரித்திரத்தில் முதல் முறையாக முப்பத்தி மூன்று லட்சங்களுக்கு அன்பே வா  விலை போனது.

‘புதுமையான பொழுது போக்குச்  சித்திரம்!’ என விளம்பரம் செய்தது ஏவிஎம்.

 எம்.ஜி.ஆர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். பொதுவாக ஏவி.எம். படங்கள்  மவுண்ட் ரோடில்  வெலிங்டனில் ரிலிசாகும்.

1966 பொங்கல் அன்று அன்பே வா  கேசினோவில்  வெளியானது. எங்க வீட்டுப் பிள்ளை வெள்ளி விழா  கொண்டாடிய அரங்கம். அதிலும் எம்.ஜி.ஆர். ஸ்பெஷல்.

தங்களின் முதல் வண்ணச் சித்திரமான ‘அன்பே வா’ வில் சரோ அழகாகத் தெரிய வேண்டும் என்று ஏகத்துக்கும்  மெனக் கெட்டது ஏவி.எம். ஆனால் ஆனந்த விகடன்  தன் விமர்சனத்தில்

‘சரோஜாதேவி மோசமான மேக் அப் செய்து கொண்டு வந்து செகரட்ரி பாலுவைக் காதலிக்கிறாங்க.  அவர் தான் பணக்கார ‘ஜேபி’ன்னு தெரிஞ்சதும் அழறாங்க’என்று எழுதியது.

ஆனால் மக்கள் வழக்கம் போல் சரோவை அள்ளிக் கொண்டார்கள்.

100 நாள்கள் ஓடி முடிந்த பிறகு ரசிகர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார்கள்.  அன்பே வா  படத்தில் 12 காட்சிகளை வரிசைப்படுத்தி, அதில் எது முதலிடம் பெறும் சிறந்த காட்சி  என்று கேட்டார்கள்.  வேறு எந்த எம்.ஜி.ஆர்- சரோ  படங்களுக்கும் போட்டி அறிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

 எல்லா வகையிலும் எம்.ஜி.ஆர் – சரோ ஜோடிக்கும், அவர்களின்  விசிறிகளுக்கும்  அன்பே வா மொத்தத்தில் ஒரு புதிய அனுபவம்.

அன்பே வா   23 வாரங்கள்  ஓடியது.  ஏனோ  வெள்ளிவிழாவுக்குப்  பதிலாக   100வது நாள் கொண்டாட்டம் நடந்தது. அதில் பேசிய எம்.ஜி.ஆர்,

‘அன்பே வா  வெற்றிக்கு முழு முதற் காரணம்  டைரக்டர் ஏ.சி. திருலோகச்சந்தர். இது ஒரு டைரக்டரின் படம்’ என்றார்.

எம்.ஜி.ஆரின் நூற்று முப்பத்தாறு படங்களில் அவரால் மறக்க முடியாத  முதல் படம் பெற்றால்தான் பிள்ளையா. அதன் இயக்குநர்கள் கிருஷ்ணன்- பஞ்சு.

பெற்றால் தான் பிள்ளையா வெளிவரும் முன்னரே அதில் சரோவின் நடிப்பைப் பாராட்டி பிரபல சினிமா மாத இதழில்  எழுதியிருந்தார்கள்.

‘கவர்ச்சியும் களிப்பும் நிறைந்த வேடங்களில் தான் சரோஜாதேவி சோபிக்க முடியும் என்ற தவறான எண்ணம் பல தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது.

எங்களைப் பொறுத்தவரையில் எல்லாத் தரப்பட்ட வேடமும் ஏற்று நடிக்கக் கூடியவர் சரோஜாதேவி.

பெற்றால்தான் பிள்ளையா படத்தில் சரோஜாதேவியின் திறமைக்கேற்ற மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறோம்.

யார் அவரைப் பற்றி எப்படிச் சொன்னாலும் சரி, எங்களைப் பொறுத்தவரையில் சரோ மென்மை உள்ளம் கொண்ட,  நன்கு ஒத்துழைக்கக் கூடிய நடிகை என்றே சொல்வோம்.

இடைக் காலத்தில் அவரைப் பற்றி ‘கர்வி’ என்று சிலர் சொல்லக் கூட கேள்விப்பட்டு இருக்கிறோம். சிறிது முன் கோபம் கொண்டவர் என்றாலும், சிரித்துப் பேசிப் பழகும் தன்மை நிறைந்தவர்.’ – கிருஷ்ணன் – பஞ்சு.

கிருஷ்ணன் பஞ்சுவின் பெற்றால் தான் பிள்ளையா படத்தில் சரோவுக்குச் சற்றே நூதனமான பாகம்.

‘கிளி ஜோசியக்காரி மோகினி’.  கிணற்றில் தூர் வாருகிற நாயகன் ஆனந்தனை ஐந்து வருடமாகக் காதலிக்கும் நாயகி பாத்திரம்.

தமிழ் சினிமாவில் சரோவுக்கு முன்போ பின்போ வேறு ஹீரோயின்கள் கிளி ஜோசியக்காரியாக நடித்து இருக்கிறார்களா…!

‘எம்.ஜி.ஆர் நடிப்பு திருப்தி. சற்றே பளுவான வேடம். துணிவுடன் சுமத்தி அதில் ஓரளவு வெற்றி கிருஷ்ணன் -பஞ்சுவுக்கு.

‘மீண்ட சொர்க்கத்தை மில்டன் எழுதினார். சரோஜாதேவியை ஸ்ரீ முத்துக்குமரன் பிக்சர்ஸ் மீண்டும் தயாரித்து இருக்கிறார்கள். கொஞ்ச காலத்துக்கு முன்னாடியே மீட்டிருக்கக் கூடாதா என்றிருக்கிறது.

‘எப்போய்யா …  என்னைக் கல்யாணம் கட்டிக்கப் போறே… சீக்கிரம் என் கழுத்துல தாலியைக் கட்டய்யா…’ என்று  அவரைத் தவிர வேறு யாராலே அப்படிக் குழந்தைத்தனமாகக் கேட்க முடியும்? ’

 சரோவைத் தவிர வேறு யார் சரோவாக நடிக்க முடியும் என்றெல்லாம் அபூர்வமாகப்  பாராட்டுப் பத்திரம் வாசித்தது குமுதம்.

 1966  ஜனவரியில்  அன்பே வா.  டிசம்பரில் பெற்றால்தான் பிள்ளையா. இரண்டும் மாறுபட்ட வெற்றிச் சித்திரங்கள்.

 தமிழ் சினிமாவில் காதலியை வித்தியாசமாகவும் விதவிதமாகவும் எத்தனையோ கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள்.

ஆனால் வாலியைத் தவிர இன்று வரை நேசத்துக்குரிய பெண்ணை யாரும்  ‘சக்கரக்கட்டி ராசாத்தி’ என்று வர்ணித்ததாக வரலாறு கிடையாது.

 கனவில் பறக்கும் காரில் சென்றபடி எம்.ஜி.ஆரும் சரோவும் பாடுவதாக டைரக்டர்களும் தங்கள் பங்குக்கு அதைப் பிரமாதப்படுத்தினார்கள்.

பெற்றால்தான் பிள்ளையா 100 õள்கள்  ஓடியது. அண்ணா  தமிழக முதல்வரான பின்பு அவரது தலைமையில் வெற்றி விழா கொண்டாடிய முதல் எம்.ஜி.ஆர். சினிமா.

சரோ அந்த வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை. காரணம் அவர் புது மணப்பெண். தவிர, எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவமும் அதிர்வு அலைகளை உண்டாக்கி இருந்தது.

ஆரூர்தாஸின் யோசனைப்படி  சரோவுக்காக,  அண்ணாவிடமிருந்து விருது கேடயத்தைப் பெற்றவர் சாட்சாத் நடிகையர் திலகம் சாவித்ரி!

http://www.dinamani.com

சரோஜா தேவி: 10. கபாலி கோயில்...!

 

 

சரோ நடித்து வெளிவர  ‘அரச கட்டளை’ மட்டுமே பாக்கி. 1964ல் மூச்சு விட முடியாமல் துரத்திய வேலைப் பளு  காணாமல் போய் விட்டது.

புதிய பறவைக்குப் பின் சிவாஜியிடமிருந்து எந்த சிக்னலும் இல்லை. அமெரிக்கா போன பத்மினியும் மீண்டும் நடிக்க வந்து, சிவாஜியின் தயவுக்காகக் காத்திருந்த நேரம்.

 ஏவிஎம். ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்  எனப் புது ஹீரோக்களின் போட்டியால், ‘சிவாஜிக்கு மார்க்கெட் போயிடுச்சி...!’ என்று அவரது நாயகிகளே கிசுகிசுத்தார்கள்.

ஜெமினி பகிரங்கமாகவே தனக்குப் புதுப் படங்கள் கிடையாது என ஒப்புக்கொண்டு கொடைக்கானலில் குடியேறி விட்டார்.

1965ல்  தமிழ் சினிமா வரலாறு காணாத வகையில் காமிரா முன்பு இளமை வழியும் புத்தம் புது யுவதிகள். நிர்மலா என்ற பெயரிலேயே மூன்று பேர் உதயமாகி இருந்தனர்.

ஜெயலலிதாவிடம் முழுதாக கோலிவுட் கை மாறியது. ‘சரோவின் பட அதிபர்கள் ஜி.என். வேலுமணி, தேவர், டி.ஆர். ராமண்ணா மூவரும் சொல்லி வைத்த மாதிரி ‘ஜெ’வை ஒப்பந்தம் செய்தார்கள்.

சினிமா நடிப்பு முற்றிலும் கை விட்டு விட்ட நிலையில் சரோவின்  எதிர்காலம் குறித்து ருத்ரம்மாவுக்குக் கவலை தோன்றியது.

பருவ வயதைக் கடந்த  பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டாமா...?

சரோவின் தோழி சுசிலா பத்மநாபன் உருப்படியான யோசனையைத் தெரிவித்தார்.

b-saroja-devi_1460625431.jpg 

‘தினமும் ஈரத் துணியுடன் ஆஞ்சநேயருக்கு விரதம் இருந்து, அனுமனை வேண்டி வந்தால் நல்ல மாப்பிள்ளை அமையும்.’

சரோ தன் சிநேகிதியின் சொற்படியே வாயுபுத்திரனின் தீவிர பக்தையாக மாறினார். நாள் தவறாமல் உபவாசம் இருந்து உத்தம புருஷனுக்காகக் காத்திருந்தார்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம். ‘பராபவ’ ஆண்டின் ஆடி வெள்ளிக்கிழமை. கற்பகாம்பாள் சன்னதியில் கட்டுக்கடங்காத கூட்டம்.

சுசிலா பத்மநாபனுக்குத் திகைப்பாக இருந்தது. இந்த ஜன சமுத்திரத்தில் சரோ எப்படி உள்ளே நுழைந்து சுவாமி தரிசனம் செய்யப் போகிறார்...!

சரோவின் கலை உலக வாழ்க்கை கம்பீரமாக நிலைபெற்று விட்டது. அடுத்தது இல்லறம்.

‘பெண்ணாகப் பிறந்த எவருக்கும் ஒழுக்கம் நிறைந்த நல்ல மணவாளன் அமைவது மிக மிக முக்கியம்!’

அம்மாவைத் தவிர வேறு உலகம் அறியாதவர் சரோ. சிறந்த கணவர் வாய்க்க அம்பாளிடம் வரம் வேண்ட வந்திருக்கிறார்.

நெரிசலில் சிக்காமல் நிம்மதியாக நின்று,  ஒரு கணம் அமைதியாக சாமி கும்பிட முடியுமா அபிநய சரஸ்வதி சரோஜா தேவியால்...?

தங்களின் ‘கனவுக் கன்னி’, கோயிலுக்கு வந்திருப்பது தெரிந்தால் பக்தர்கள், ஷண நொடியில் ரசிகர்களாக மாறிவிடுவார்களே... தள்ளு முள்ளு நேருமே.

சரோ எப்படிச் சமாளிக்கப் போகிறார்...?

சுசிலாவின் பயத்தைப் புறந்தள்ளி விட்டு வெகு இயல்பாக சரோ அம்பாளை நோக்கி முன்னேறினார். சரோவின் துணிச்சல் அசாத்தியமாகப் பட்டது.

சற்றும் சுற்றுச் சூழலைக் கண்டு மனம் தளராமல், வந்திருக்கும் நோக்கத்திலிருந்து அடி பிறழாமல், பக்திப் பிரவாகத்தில்  கற்பகாம்பிகையைக் கண் குளிர தரிசித்து, ஆனந்தப் பரவசமடைந்து விழிகளில் நீர் கசிய,

‘என் பிரார்த்தனையைப் பலிக்கச் செய் தாயே...!  இதுவரையில் என் வாழ்வில் துன்பமில்லாமல் காத்து வந்தது போல்,  இனியும் நீ தான் அடைக்கலம் தந்து அருள வேண்டும் அம்மா! உன்னை விட்டால் வேறு யாரைச் சரணடைவேன்...  ஆதி சக்தியே... ஈஸ்வரியே... துணை நீயே!’ என்று நெஞ்சுருகி கை எடுத்துக் கும்பிடுகையில், சினிமா காட்சிகளில் வருவது போல் அது நடந்தது!

‘கற்பகாம்பிகையின் கருணை  பரிபூரணமாக சரோஜாதேவிக்கு உண்டு’  என்று எடுத்துக் காட்டும் விதமாக, அம்பாளின் கழுத்திலிருந்து பெரிய மலர்ச்சரமொன்று ஆசி வழங்கும் நோக்கில் பூமியில் விழுந்தது!

அதைக் கண்டு சரோ அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? அப்படியொரு ஜென்ம சாபல்ய சந்தோஷம்!

நெருக்கமானவர்களிடத்தில் எல்லாம் திருமணம் ஆகும் வரையிலும், ஆன பின்னாலும் சரோ அதைச் சொல்லிச் சொல்லி ஆச்சரியத்தில் முகம் மலர்ந்து போவார்! 

ஏராளமான வரன்களை அலசி ஆராய்ந்து கடைசியில், ஜெர்மனியில் படித்த இன்ஜினியர் ஸ்ரீஹர்ஷாவை சரோவுக்கு மணமகனாக ருத்ரம்மா தேர்ந்தெடுத்தார்.

பி.கே. ஸ்ரீஹர்ஷா பெங்களூரு பெல் நிறுவனத்தில்  பணியாற்றிய 28 வயது வாலிபர். ஏறக்குறைய சரோவும் அவரும் ஒரே ஆண்டில் 1938ல்  பிறந்திருக்கக் கூடும்.

ரோஜா மலரின் வடிவத்தில் தனது திருமண அழைப்பிதழைப் புதுமையாக அமைத்திருந்தார் சரோ.

பிப்ரவரி 28 காலையில்  கவுரி பூஜை கோலாகலமாக நடந்தது. மாலையில் தனது நிச்சயதாம்பூலப் பரிசாக ஆயிரம் ரூபாயில் பட்டுப்புடைவையையும் தங்க வளையல்களையும் ஈடு கட்டினார் ஹர்ஷா.

மாப்பிள்ளை அளித்த பட்டுச்சேலையை அணிந்து வந்து அனைவரிடமும் ஆசி பெற்றார் சரோ.

ருத்ரம்மா தேர்ந்தெடுத்த முகூர்த்த நாள் 1967 மார்ச் முதல் தேதி.  அன்று  தமிழகத்தில் கூடுதல் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. காரணம் அண்ணாவின் தலைமையிலான ஆட்சி மாற்றம்!

முற்பகல் பதினோரு மணி.

சரோஜாதேவியின் திருமணம் விமரிசையாக பெங்களுர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

Saroja Devi with her husband.jpg 

சரோவின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்து, தங்களின் இதய தேவதை இல்லறம் புகும் காட்சியைக் கண் குளிரக் கண்டார்கள்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டுக் கச்சேரி சரோ கல்யாணத்தின் சிறப்பம்சம்!

உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானி, பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் ராதாகிருஷ்ணன், சரோவுக்குக் கல்யாணப்பரிசாக பகவத் கீதை நூலைப் பரிசாக அனுப்பி இருந்தார். ‘தம்பதி சமேதராகத் தன்னை வந்து தவறாமல் சந்திக்கவும் வாழ்த்து மடலில் மறக்காமல் குறிப்பிட்டார்.

மார்ச் 5ஆம் தேதி மயிலாப்பூர் நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏ.எல்.எஸ். என்று அழைக்கப்பட்ட ஏ.எல். ஸ்ரீனிவாசன்,  அகில இந்திய அளவில்  அநேக முறை சினிமா வர்த்தக சபையின் தலைவராகப் பதவி வகித்தவர்.

1954 முதல் ஏ.எல். எஸ். மறைந்த  1974 வரை தமிழ்த் திரையுலகம் அவரது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தது. இன்று அந்த அடையாளங்களைச் சொன்னால் உங்களுக்குத் தெரியாது.

கவிஞர் கண்ணதாசனின் உடன் பிறந்த அண்ணன் ஏ.எல்.எஸ். என்றால் சட்டென்று புரியும்.

அவரது பட நிறுவனம் ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ். கே.எஸ். கோபாலகிருஷ்ணன், பி. மாதவன் போன்ற ஸ்ரீதரின் உதவியாளர்களை சாரதா, மணியோசை போன்றத் தரமான படங்களின் மூலம் டைரக்டர்களாக அறிமுகப்படுத்தியது.

எஸ். ஏ. அசோகனுக்கு கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் என்றால் அதிகப் பிரியம். ஆரூர்தாஸை ஏ.எல். எஸ். மூலமாக இயக்குநராக உயர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆரூர் தாஸ் சினிமா டைரக்டராக ப்ரமோஷன் பெறுவதை  எம்.ஜி.ஆர்.  மிகக் கடுமையாக எதிர்த்தார். மிகச் சிறந்த திரை எழுத்தாளரான ஆரூர்தாஸை இழப்பதில் புரட்சி நடிகருக்குப் பிடித்தமில்லை.

ஆரூர்தாஸின் இயக்கத்தில் முதல் படமாக ‘பெண் என்றால் பெண்’ சினிமாவைத் தயாரிக்க ஏ.எல். எஸ் சம்மதித்தார்.

ஜெமினி ஹீரோ. விஜயகுமாரி ஹீரோயின். ஷூட்டிங் தொடங்கி தொடர்ந்து நடந்தது.

 படத்தில் அசோகனுக்கு மிக முக்கிய வேடம். அவருக்கு ஜோடியாக இன்னொரு நாயகியும் உண்டு. அதற்கானத் தேர்வு நடைபெற்றது.   

அத்தகைய சூழலில் ஏ.எல். எஸுக்கு ஒரு போன் வந்தது.  மறுமுனையில் அழைத்தவர் திருமதி. சரோஜாதேவி.

ஏ.எல். எஸ். ஆச்சரியத்துடன் சரோ  சொன்னத் தகவலை ஆரூர்தாஸிடம் பகிர்ந்து கொண்டார். ஆரூர்தாஸ் கடுமையான அதிர்ச்சிக்குள்ளானார். 

ஆரூர் தாஸ் - ‘ இந்த மார்ச்  மாதம் ஒண்ணாம் தேதிதான், சரோஜா கல்யாணம் நடந்துச்சி. அதுக்குள்ளே  மறுபடியும் எப்படி நடிக்க வரும்?’

ஆரூர்தாஸ் கதை வசனம் எழுதின முதல் படம் வாழ வைத்த தெய்வத்துல, நான் தான் ஹீரோயினா நடிச்சேன். அதே மாதிரி அவர் முதன் முதலா டைரக்ட் பண்ற சினிமாலயும் நானே நடிக்க விரும்பறேன்.

saro_1.jpg 

அவர் எம்.ஜி.ஆருக்கு எழுதின நிறைய படங்கள்ள நான் தான் ஹீரோயினா நடிச்சிருக்கேன். அதனால் நீங்களே  என் கால்ஷீட் எப்ப வேணும்னு கேட்டு, எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க. நான் அவர் கிட்டே பேசிக்கிறேன்னு சொல்லிச்சு.’ என்றார் ஏக குஷியோடு ஏ.எல். எஸ்.

அதோட கூட ஸ்ரீதர் முதன் முதலா டைரக்ட் பண்ணின ‘கல்யாணப்பரிசு’ல  ஜெமினி கணேசன், சரோஜாதேவி, விஜயகுமாரி ‘காம்பினேஷன்’ நல்லா வொர்க் அவுட் ஆச்சு. அதே மாதிரி நமக்கும் வொர்க் அவுட் ஆகும்னு நினைக்கிறேன்...!

’மற்றுமொரு சிறந்த வெற்றிப்படம் வழங்கும் தன் உயரிய எண்ணத்துக்குக் கூடுதல் வலு  சேர்த்தார்.

ஷூட்டிங் முடிந்து ஆரூர் தாஸ் வீடு திரும்பியதும் இன்னொருப் பதற்றம் அவரைச் சூழ்ந்தது. எம்.ஜி.ஆரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகச் சொன்னார் திருமதி ஆரூர்தாஸ்.

எம்.ஜி.ஆர். துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்குப் பின்னர்,  வீட்டிலேயே ஓய்வெடுத்து குரல் சிகிச்சை பெற்று வந்த சமயம்.

‘மீண்டும் மக்கள் திலகத்தால் சினிமாவில் நடிக்க முடியாது... என, 

வாத்தியாரால் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த அசோகன் உள்ளிட்ட உண்மை நண்பர்கள்...! செய்தி பரப்பி வந்தார்கள்.’

ஏற்கனவே ஆரூர்தாஸை டைரக்டராக வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தவர் எம்.ஜி.ஆர்., மீண்டும் எதற்காக அழைத்திருக்கிறார் என்று ஆரூர்தாஸ் குழம்பினார்.

உடனடியாகத் தெளிவு பெறும் பொருட்டு எம்.ஜி.ஆருக்கு போன் போட்டார். இருவரும் பரஸ்பரம் நலன் விசாரித்த பிறகு,

எம்.ஜி.ஆர்.-‘ இன்னிக்கு மாலை முரசு பார்த்தீங்களா...?’

ஆரூர்தாஸ்- ‘பார்த்தேன். என்னண்ணே விஷயம்?’

எம்.ஜி.ஆர்.- ‘உங்க படத்துல சரோஜா நடிக்கிறதா செய்தி வந்துருக்கே. அது உண்மையா?’

mgr_2824078g.jpg 

ஆரூர்தாஸ் - ’ஆமாண்ணே.’

எம்.ஜி.ஆர்.- ‘சரோஜாதான் கல்யாணம் பண்ணிக்கிட்டு சினிமாவை விட்டே ஒதுங்கிடுச்சே. ஒரு மாசம் தான் ஆகியிருக்கு...

மறுபடியும் ஏன் அதை இழுக்குறீங்க. இடையில் கர்ப்பமாயிடுச்சின்னா, உங்க ஷூட்டிங் பாதிக்கப்படாதா? அது உங்களை சான்ஸ் கேட்டுச்சா?

ஆரூர்தாஸ் - சத்தியமா சரோஜா என்னை சான்ஸ் கேக்கலே. என் கிட்ட கேக்க வேண்டிய அவசியமும் அதுக்கு இல்ல.  ஏ.எல். எஸ். சொல்றபடிதான் நான் நடக்குறேன்.’

சரோவின் செயலில் எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை என்பது ஆரூர்தாஸூக்குப் பரிபூரணமாகத் தெரிந்தது.

தாயார் ருத்ரம்மாவும், குடும்பப் பெண்ணான பின்பு  மீண்டும் திரையில் தோன்றுவது கூடாது என்றார்.

சரோவின் கணவர் ஹர்ஷாவின் முடிவு வேறாக இருந்தது.

‘பெண்கள் வீட்டில் சும்மா இருப்பது எனக்குப் பிடிக்காத விஷயம். அவர்கள் தங்களது திறமையை வீணாக்கக் கூடாது. எனவே சரோஜாதேவி தொடர்ந்து நடிப்பார்’ என்றார்.

தமிழ் சினிமாவின் மூவேந்தர்களின் ஈடு இணையற்ற ஒரே ஜோடியாக வலம் வந்தவர் சரோ. அவரது செகன்ட் இன்னிங்ஸில், அசோகனுக்குக் காதலியாக இரண்டாவது நாயகியாக அவர்  திரையில் தோன்ற எந்த அவசியமும் கிடையாது.

 அத்துடன்  மற்றொருத் தவறையும் ஆர்வக் கோளாறால் சரோ செய்ய நேர்ந்தது. துரதிர்ஷ்டவசமாக அவரது முழுப் பங்களிப்பு அமையாத, ‘பெண் என்றால் பெண்’ சினிமாவைத் தனது ‘நூறாவது படம்’ என்று  அறிவித்தார்.

சின்ன வாத்தியார்களாக ஜெய் சங்கரும் - ரவிச்சந்திரனும் தொடர்ந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த நேரம். அசோகன் ஹீரோவாக நடிப்பது எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல. பொது ஜனங்களுக்கும் கூட உற்சாகம் அளிக்காத சமாசாரம்.

1967 டிசம்பரில் சரோவின் ராசி தேதியான 7ல் பெண் என்றால் பெண் வெளியாகியது. சென்னை கெயிட்டி தியேட்டரில் அதிக பட்சமாக ஐந்து வாரங்கள் ஓடியது.

‘சிரித்தாலும் கண்ணீர் வரும்...  அழுதாலும் கண்ணீர் வரும்...’ என்று,

பெண் என்றால் பெண் படத்தில் ஒரு சூப்பர் ஹிட் டூயட். கண்ணதாசன்-எம்.எஸ். வி. கூட்டணியில் டி.எம்.எஸ்.- பி. சுசிலா குரல்களில்  சரோவின் நிலைமையை அப்பட்டமாகச் சொல்லியிருந்தார்கள்.

1968  பிப்ரவரியில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பணமா பாசமா ரிலிசானது. அதில் ஜெமினிகணேசனும் சரோஜாதேவியும் ஜோடியாக நடித்திருந்தார்கள். கதையின் மிக முக்கிய ‘திமிர் பிடித்த மாமியார்’ வேடம் எஸ். வரலட்சுமிக்கு.

சீமான் பெற்ற செல்வம் ‘சாந்தி’யாக, ஏழை ஓவியர் ஜெமினியுடன் காதல் வசப்படும் காட்சிகளில்

‘மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ’ என்று பாடி ஆடித்  துள்ளித் திரிவார் சரோ.

3-saroja-devi.jpg 

ஜெமினியை மணந்த பின்னர் ஓலைக் குடிலில், மாற்றிக் கட்ட சேலை கூட இல்லாமல் கஷ்டப்படும் போதும், பெற்ற தாயை விடத் தனக்குத் தாலி கட்டிய காதலனையே உயர்வாகப் பேசுவார்.

திருமதி சரோஜாதேவியின் நடிப்பு தாய்க்குலங்களைப் பெரிதும் கவர்ந்தது.

'அபிநய சரஸ்வதி அழகாக தோசை கூட சுடுகிறாரே...’ என்று ஆச்சரியப்பட்டது தினமணிகதிர் விமர்சனம். ‘ஸ்பென்ஸர் இடியாப்பம்’ என ‘குமுதம்’ பணமா பாசமாவை உயர்த்தி எழுதியது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய திரை அரங்கான மதுரை தங்கத்தில் 25 வாரங்கள் ஓடியது பணமா பாசமா. அதன் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தச் சொல்லி தியேட்டர்காரர்களை கே.எஸ்.ஜி.யே கேட்டுக் கொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அது வாரித் தந்த வசூல் எவ்வளவு என்று!

ஏ.பி. நாகராஜனின் பக்தி சினிமாக்களுக்கும், தென்னக ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் தோட்டா சத்தங்களுக்கும் இடையில் மீண்டும் சமூகச் சித்திரங்களுக்குப் புதிய வரவேற்பை ஏற்படுத்தியது.

கே.எஸ். ஜி. யின் இயக்கத்தில் சரோவுக்கு அது முதல் படம் மட்டுமல்ல. மறக்க முடியாததாகவும் அமைந்தது.தொடர்ந்து கே.எஸ். ஜி.-  ஜெமினி -சரோ  கூட்டணியில் புதிய படங்கள் தயாராயின.

‘பணமா பாசமா’வை 100வது படமாக அறிவித்திருந்தால், இன்னமும் அதிகப்  புகழ் சரோவுக்குப் பரவியிருக்கக் கூடும்.

http://www.dinamani.com

சரோஜா தேவி: 11. கார்... கவர்ச்சி... கர்வம்...!

 

 

1970ல் சரோ நடித்த சிநேகிதி, கண்மலர், மாலதி ஆகிய மூன்றிலும் ஜெமினியே ஹீரோ.

கண்மலர் படத்தில் எஸ். ஜானகியின் குரலில் சரோ பாடுவதாக வரும் பக்திப்பாடல்

‘பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா’

கண்ணதாசன் புருவம் உயர்த்தி வியந்து நோக்கிப் பாராட்டிய வாலியின் பாடல். சூப்பர் ஹிட் ஆகியது.

இரட்டை இயக்குநர்களான திருமலை - மஹாலிங்கம் அவர்களது குருவான கிருஷ்ணன் - பஞ்சுவின் டைரக்ஷன் மேற்பார்வையில் இயக்கிய படம் கண்மலர்.

நாலு டைரக்டர்கள் பங்கேற்ற ஒரு சினிமாவில் நாயகியாக நடிக்கிற வாய்ப்பு சரோவுக்கு முதலும் கடைசியுமாக அமைந்தது. வி.கே. ராமசாமி தயாரித்த கண்மலர் வசூல் வெளிச்சம் பெறவில்லை.

1970 தீபாவளிக்கு வெளியானது மாலதி. கே.எஸ். ஜி. இன்னொரு ஜாக்பாட்டை எதிர்பார்த்தார். அவர் இயக்கிய முதல் படம் படுதோல்விப் படமாக மாலதி மாறிப் போனது.

1972 நவம்பரில் டி.ஆர். ராமண்ணாவின் தயாரிப்பு இயக்கத்தில் ‘சக்திலீலை’ வெளியானது. 1971 தீபாவளிக்கு ரிலிசான கே.எஸ். ஜி.யின் ஆதி பராசக்தி பெற்ற வெள்ளிவிழா ஓட்டத்தையும், வசூலையும், வெற்றியையும் கண்டு வண்ணத்தில் உருவான சினிமா.

தமிழில் ‘மாரி அம்மனாக’ பரசுராமனின் தாயாராக சரோ பங்கேற்ற முதல் பக்திச் சித்திரம்.

எம்.ஜி.ஆர். மூலம் பிரபலமான சரோ, ஜெ, மஞ்சுளா ஆகியோர் இணைந்து நடித்த ஒரே படம். மூவரும் வெவ்வேறு எபிசோட்களில் தோன்றினர்.

1974 தைத் திருநாள் வெளியீடு ‘பத்துமாதபந்தம்’ இயக்கம் கிருஷ்ணன் - பஞ்சு. கலரில் காட்டப்பட்ட குடும்பக்கதை. பானுமதி, ராஜஸ்ரீ, ஏவி.எம். ராஜன், முத்துராமன், வெண்ணிற ஆடை நிர்மலா, மூன்று வேடங்களில் மனோரமா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களுடன் சரோவும் நடித்த படம்.

TH06_SAROJADEVI_SEN_303583g.jpg 

‘சரோஜாதேவியை நாம் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறோமோ, இல்லையோ, அவர் தன் நடிப்புத் திறனை மறந்துவிடவில்லை’ என்று குமுதம் ‘பத்துமாத பந்தம்’ விமரிசனத்தில் குறிப்பிட்டது.

1970 தொடங்கி இந்திய சினிமாவில் ‘நியூவேவ்’ என்கிற புதிய வார்த்தைப் பிரயோகம் எட்டுத் திக்கிலும் ஒலித்தது. மெல்ல மரபுகளை மீற ஆரம்பித்தன திரைக்கதைகள்... படுக்கையறைக் காட்சிகளுடன் கூடிய ஏ சான்றிதழ் படங்கள் தமிழிலும் அதிகமாக வெளிவரத் தொடங்கின.

திரும்பிய திசைகளிலெல்லாம் ஸ்ரீவித்யா, மஞ்சுளா, லதா, சுபா, பிரமீளா, ஜெயசித்ரா, ஜெயசுதா, போன்ற புதுமுகங்களின் அணிவகுப்பு.

கொடி கட்டிப் பறந்த சீனியர் நாயகிகள் அதனால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அம்மா வேடங்களுக்குத் தாவ வேண்டியதாயிற்று. சரோவுக்கும் அதே நிலைமை.

ஆனால் அவர் ஹீரோயின் அந்தஸ்தை அத்தனைச் சீக்கிரத்தில் இழந்து விட விரும்பவில்லை.

அத்தகைய சூழலில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் சரோஜாதேவியின் மிக முக்கிய பேட்டி வெளியானது. சரோ அதில் மனம் திறந்து பேசியிருந்தார்.

‘சரோ வாய்ஸ் பூவுக்குள் பூகம்பமாகி’ பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இளைய தலைமுறை ஒட்டு மொத்தமாக அதிர்ந்தது. அதன் சில பகுதிகள் உங்களுக்காக-

‘நீங்கள் புகழுடன் விளங்கிய போது இருந்த படவுலகிற்கும், இன்றைக்கிருக்கும் படவுலகிற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூற முடியுமா?’

‘காமிரா, இசையமைப்பு ஆகியவற்றின் தரம் உயர்ந்திருக்கிறது. ஆனால், கதையமைப்பின் தரம் தாழ்ந்திருக்கிறது.

‘பாசமலர், ஆலயமணி, எங்க வீட்டுப் பிள்ளை’ போன்ற சிறந்த படங்கள் இப்போது தயாரிக்கப்படுவதில்லை.

kalangarai1_jpg1_2484832g.jpg 

உணர்ச்சிவயப்படக் கூடிய கதைகளைப் படமாக எடுக்காமல், பொழுது போக்கிற்காகத்தான் தயாரிக்கிறார்கள். இம்மாதிரி தொடர்ந்து படமெடுப்பது திரையுலகை மிகவும் பாதிக்கும்.

முன்பெல்லாம் கதாநாயகிகளாக நடிக்கிறவர்கள் மிக அழகாக, உடல் அமைப்பு நன்றாக இருக்கிறதா என்று பார்த்துப் படங்களில் நடிக்க அழைப்பார்கள்.

இப்போதெல்லாம் நடிகைகள் சாதாரணமாக இருந்தாலும் போதும் நடிக்க அழைக்கிறார்கள். புதுமுகங்களைத் தேடும் தயாரிப்பாளர்கள் அப்புதுமுகங்களின் ‘அழகை’ இப்போது பார்ப்பதில்லை.

‘நீங்கள் இன்றையப் புதுமுகங்களுக்கு கூறும் அறிவுரை என்ன?’

‘இன்றையப் புதுமுகங்கள் ‘நவரஸ’ நடிகைகளாக நடந்து கொள்கிறார்கள். தொழிலில் பற்றில்லாமல், பல இடங்களில் பலவிதமாக நடந்து கொள்வதைத்தான் ’நவரஸ நடிகைகள்’ என்று குறிப்பிட்டேன்.

நடிகை என்று கூறும் போதே கவர்ச்சி, கிளாமர் என்று கூறப்படுகிறது. அதனால் ஒரு நடிகைக்குப் பல சிக்கல்கள் வருகின்றன.

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது ‘தான் ஒரு நடிகை’ என்பதை மறந்து, நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு நிகழ்ச்சிக்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து சென்றால், மிகவும் ஆபாசமாக இருக்கும். ஏனென்றால், ‘நடிகையே கவர்ச்சி’- அதற்கு மேல் கவர்ச்சி உடை என்றால் ?

கவர்ச்சியையும் கவர்ச்சியையும் கூட்டினால் ஆபாசம் தான் பதிலாக வரும்.

ஒரு முறை மிகப்பெரிய காரை வாங்க பம்பாய் சென்றிருந்தேன். அப்போது திரு. எஸ்.எஸ். வாசன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் பெரிய கார் வாங்கும் விஷயத்தைச் சொன்னேன். அப்போது அவர்,

‘ நீ ஒரு பிரபலமான நடிகை. சிறிய காரில் ஆடம்பரமில்லாமல் சென்றாலே உன்னை எல்லாரும் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள். கூட்டம் கூடி விடும்.

பெரிய காரில் ஆடம்பரத்துடன் சென்றால், நடிகைதானே என்று பார்க்க விரும்பாதவர்கள் கூட, காரின் கவர்ச்சியில் மயங்கி, உன்னைக் காண வருவார்கள். கூட்டம் அதிகமாவதால் பலருக்கும் துன்பம்.

பொது வாழ்வில் பிரபலமாகும் போது, நாம் சாதாரணமாக ஆடம்பரமில்லாமல் இருப்பதே நல்லது. படவுலகில் இருந்து வெளியே தள்ளப்பட்ட பிறகும் கூட, ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்தால், தலை நிமிர்ந்து நடக்கலாம்.’ என்று கூறினார்.

உடனே கார் வாங்கும் எண்ணத்தைக் கை விட்டேன்.

நடிகை என்னும் போது அவளுடைய செய்கைகளையும், அவள் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையும் மற்றவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். ஆகையால், நாம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்.’

‘உங்களை மிகவும் கர்வம் பிடித்தவர் என்று கூறுகிறார்களே...?’

 

‘என்னிடம் வந்தவர்கள் கர்வம் பிடித்தவர் போல் பழகியிருக்க வேண்டும். நானும் அவர்களிடம், அவர்கள் நடந்து கொண்டாற் போல் நடந்து கொண்டேன். அதனால் அவர்கள் அப்படிக் கூறியிருக்க வேண்டும்.

உங்களிடம் இப்போது நல்லவிதமாகத்தானே நடந்து கொள்கிறேன்?’

‘தமிழ்ப்பட உலகில் உங்களுக்கு மீண்டும் வரவேற்பு இல்லையே, ஏன்?’

‘நான் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டவள்.

குடும்ப விவகாரங்களிலும் ஈடுபட்டுக் கொண்டு, படத் தொழிலையும் கவனிக்க எனக்கு நேரமில்லை. ஆகையால் அதிகமான படங்களில் நடிக்க நான் விரும்புவது கிடையாது.

sarojadevi--Aadhavan-100-Days-Celebration-03.jpg 

தமிழில் நடிக்க அடிக்கடி சென்னை வர வேண்டும். அதனால் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடிவது இல்லை. மேலும் பல தமிழ்ப்படங்களின் கதையமைப்பு எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் தமிழ் சினிமாவில் எனக்கு வரவேற்பு இல்லை என்று கூற முடியாதே!

‘ஒரு நடிகை திருமணமான பின்பும் கலைத்துறையில் ஈடுபடுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...?’

‘அந்த நடிகையின் கணவரின் மன நிலையைப் பொறுத்துதான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியும். தன் மனைவி திருமணத்துக்குப் பின்னும் நடிக்கலாம் என்று கணவர் அனுமதித்தால் நடிக்கலாம். கணவரின் அனுமதி தான் திருமணமான ஒரு நடிகைக்கு முக்கியம்!’

‘சமீபத்தில் பார்த்த தமிழ்ப்படங்கள் பற்றி விமர்சனம் செய்ய முடியுமா?’

‘ஒரு நியூவேவ் படம் தான் நான் சமீபத்தில் பார்த்தேன். இடைவேளை வரை கதையே கிடையாது. இடைவேளைக்கு முன்பும் பின்பும் சில ஆபாச, அருவருப்பான காட்சிகள், வேண்டாத இடத்தில் பாடல்கள், காபரே நடனக்காட்சிகள்... ஏ சர்டிபிகேட் பெற்ற படம் அது!

கதையமைப்பு சரியில்லாவிடின் எந்தப் படமும் உருப்படாது. கதை வலிவு இல்லாத படங்கள் தயாரிப்பாளர்களை மட்டும் அல்லாமல், அதில் நடித்த அத்தனை நடிகர் நடிகைகளையும் பாதிக்கும்.

அதில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை நடித்திருக்கிறார். அவர் இந்தப்படம் வந்த பிறகு வேறு எதிலும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று கேள்வியுற்று வேதனைப்பட்டேன்.

தமிழ்த்திரை உலகம் இப்படியே போய்க் கொண்டிருந்தால் எப்படி? ஏதாவது, ஒரு வழி செய்ய வேண்டாமா ?

தரமான கதையுள்ள சிறந்த படங்களை எடுத்தால் மக்கள் பார்க்க மாட்டேன் என்றா சொல்கிறார்கள்...?’

--------------------

1974க்குப் பிறகு சரோ நடித்து ஒரு மாமாங்கம் கடந்தும் எந்தத் தமிழ்ப்படமும் வெளிவரவில்லை.

1986 ஏப்ரல் 18. ‘எந்தத் தீய பழக்கங்களும் இல்லாதவர் என் கணவர்!’ என்று இறுமாந்திருந்த சரோவுக்குக் கடுமையான அதிர்ச்சி.

அவரது அன்பான கணவர் ஹர்ஷாவுக்கு எதிர் பாராத விதமாக தீடீர் மாரடைப்பு. தனியார் மருத்துவமனை ஐ.சி.யூ. அவரது உயிரைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தது.

21 ஆம் தேதி இதய வலி அதிகரிக்க, பகல் பன்னிரெண்டரை மணி அளவில் மருத்துவ சிகிச்சை பலன் இன்றி ஹர்ஷா காலமானார்.

அரசுப் பணிகளின் கூடுதல் சுமை காரணமாக, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் சட்டென்று பெங்களூர் சதாசிவம் நகருக்குச் சென்று, சரோவுக்கு ஆறுதல் சொல்ல இயலவில்லை.

அதனால் அவரது ‘இரங்கல் ஓலை’ சரோவுக்கு அனுப்பப்பட்டது. முதல்வரின் மடலில் -

‘தங்கள் கணவர் மரணம் அடைந்த செய்தி கேட்டு, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஹர்ஷாவின் பூத உடல் கனஹள்ளியில் சரோவுக்குச் சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

29FR-SAROJA_1410199g.jpg 

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் கண்ணீரும் வற்றும் படி சரோ அழுது தீர்த்தார். இனி அழக் கண்ணீர் ஸ்டாக் இல்லை என்ற நிலை. அத்தகைய அசாதாரண நிலை கண்களுக்கு ஆபத்தை உண்டாக்கியது.

சரோவின் கண்களை ‘டாக்டர் பத்ரி நாத்’ பரிசோதித்தார். உடனடியாக சிகிச்சை செய்யாவிடின் பார்வை பறி போகக் கூடிய அபாயம் உண்டென்றார்.

பத்ரி நாத்தின் வழிகாட்டுதலின் படி சிங்கப்பூரிலிருந்து வந்து சேர்ந்தன சிறப்பு மருந்துகள். பாதிக்கப்பட்ட சரோவின் கண்களில் தேவையான அளவு விடப்பட்டன. அவை விழிகளில் ஊற ஊற விண்மீன் பார்வை மீண்டும் வெளிச்சம் பெற்றது.

ஏறக் குறைய குறுகிய காலத்தில் இருபது ஆண்டுகளில் சரோவின் மண வாழ்வு நிறைவு பெற்றது. சரோ 48 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்.

சரோவை மறவாமல் மனத்துக்குள் தீராத நேசம் நெய்தவர்களுக்கு அகவை ஒரு பொருட்டா என்ன...?

தங்களின் கனவுக்கன்னி கைம்பெண்ணாகக் காட்சியளித்ததில், தென்னாட்டு கனவான்கள் துடிதுடித்துப் போனார்கள்.

அத்தகைய தர்ம சங்கடமானத் துயர நிலை மேலும் தொடர்வதை, மேட்டுக்குடியினர் யாரும் விரும்பவில்லை.

சரோவை மறுமணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமாக வாழத் தலைப்பட்டார்கள்.

‘பணத்துக்காக உங்களை விவாஹம் செய்ய விரும்புவதாக எண்ண வேண்டாம். என்னிடமும் வற்றாத செல்வமும், ஆயிரம் ஏக்கர் கணக்கில் டீ எஸ்டேட்களும் உள்ளன...’

என்று சொத்துப் பத்திரங்களின் பட்டியலை அனுப்பினார்கள்.

‘கல்யாண வசந்தம்’ போதும் என்று தோன்றியது சரோவுக்கு. மீண்டும் மணப்பந்தலை எண்ணிப் பார்க்கவும் அவர் மனம் மறுத்தது.

‘தனிமையிலே இனிமை காண முடியுமா’ என்று சினிமாவில் பாடி நடித்தவர், வாழ்வில் அமைதியை வேண்டி விரும்பிப் பெற யோகாவில் மூழ்கி விட்டார்.

1988ல் மிலிட்டரி டாக்டராக சரோ மீண்டும் அரிதாரம் பூச சந்தர்ப்பம் வாய்த்தது. படம் - தியாகராஜனின் பூவுக்குள் பூகம்பம்.

1989ல் ஜெமினி கணேசன் ஜோடியாக, விஜயகாந்த் அம்மாவாக பி. வாசுவின் பொன்மனச்செல்வன், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தியின் மகிமை சொல்லும் பக்திச் சித்திரம் - ஒரே தாய் ஒரே குலம்.

1993 தீபாவளிக்கு மனோபாலா இயக்கத்தில் சிவாஜியுடன் பாரம்பரியம் ஆகியவை சரோ நடிப்பில் வெவ்வேறு கால கட்டங்களில் ரிலீசாயின.

அவை எதுவும் சரோவுக்குப் புதிய புகழ் மாலையைச் சூட்டவில்லை.

1997ல் ஒரு வித்தியாசமான முயற்சி ஒன்ஸ்மோர். நடிகர் திலகம் - சரோஜாதேவி இணைந்து நடித்த கடைசிப்படம்.

08-1452243218-sivaji-saroja-devi5-600.jpg 

1963ல் மகத்தான வெற்றி அடைந்த ‘இருவர் உள்ளம்’ படத்தின் தொடர்ச்சி. தயாரிப்பு ரீமேக் டைரக்டர் சி.வி. ராஜேந்திரன். இயக்கம் எஸ். ஏ. சந்திரசேகர்.

சிவாஜி கணேசனின் மிக அதிகப் படங்களை இயக்கியவர் ஏ. சி. திருலோக சந்தர். அவரது இல்லத்தில் முதல் நாள் படப்பிடிப்பு நடைபெற்றது ‘ஒன்ஸ் மோர்’ விசேஷம்!

இருவர் உள்ளம் படத்தின் முக்கிய காட்சிகளும் ஒன்ஸ் மோர் சினிமாவில் இடம் பெற்று ஓட்டத்துக்கு உதவியது.

பிரிந்து வாழும் அன்னை - தந்தையை ஒன்று சேர்க்கும் மகனாக விஜய் தோன்றினார். விஜய் - சிம்ரன் வெற்றி ஜோடி பங்கேற்ற முதல் வண்ணச் சித்திரமும் கூட. மக்களின் வரவேற்பை பெற்று 100 நாள்கள் ஓடி வசூலை அள்ளியது.

2009 தீபாவளி வெளியீடு ‘ஆதவன்’ . சூர்யா - நயன்தாரா இணையுடன் சரோவுக்குப் பாட்டி வேடம்.

‘அன்பே வா’ காலத்து அலங்கார பூஷணியாக ஆதவனில் பருவக்குமரிகளுக்கு நிகராக சரோஜாதேவி காட்சி அளித்தார்.

சரோவுக்கே உரிய கம்பீரமான தோரணையும், கிளிப் பேச்சும் அவரை இருபத்தியோராம் நூற்றாண்டு மழலைகளிடம் எளிதாகக் கொண்டு சென்றது. இயக்கம் கே.எஸ். ரவிகுமார்.

சரோவை வடிவேலு கலாய்க்கும் ஒவ்வொரு காட்சியும், ஜனங்களிடையே பெரும் கலகலப்பை ஏற்படுத்தின. ஆதவன் வெற்றிக்கு அஸ்திவாரம் அமைத்தன.மிக்கப் பெருந்தன்மையுடன் தன்னை வைத்து காமெடி செய்ய சரோ ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்!

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நாடோடி மன்னனில் வண்ணப் பகுதியில் நாயகியாக அறிமுகமாகி, கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பான ஆதவனுடன் சரோவின் நடிப்பு வாழ்க்கை தற்காலிகமாகப் பூர்த்தி அடைந்துள்ளது. அது மேலும் தொடர இன்னும் வாய்ப்பு இருக்கிறது.

நாடோடி மன்னனும் - ஆதவனும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகவரி கொண்டக் கலைப்படைப்புகள் என்பது எதேச்சையான ஒற்றுமை.

http://www.dinamani.com

Edited by நவீனன்

சரோஜா தேவி: 12. மூவர் உலா!

 

சரோ நடித்த மொத்தத் தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை ‘ஆதவன்’ வரையில் தொண்ணூறுக்குள் அடங்கி விடும்.

அவற்றில் மக்கள் திலகத்துடன் 26, நடிகர் திலகத்துடன் 20, காதல் மன்னனுடன் 20 ஆக 66 படங்களில் தமிழ் சினிமாவின் மூவேந்தர்களுடன் நடித்துள்ளார்.

வேறு எந்த நாயகியாலும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாத அரிய சாதனை!

‘எங்க வீட்டுப் பிள்ளை’ - உதயசூரியன் போல் எப்போது பார்த்தாலும் ரசிக்கக் கூடியப் புத்துணர்வை ஊட்டும் உற்சாகமான வண்ணச் சித்திரம்!

டூயல் எம்.ஜி.ஆர். இரண்டு நாயகிகள். பொதுவாகப் ‘புரட்சி நடிகர்’ ஹீரோவாகத் தோன்றும் சினிமாக்களில் நாயகிகளுக்கு கனவில் டூயட் பாட மாத்திரமே சந்தர்ப்பம் கிடைக்கும்.

கிடைத்த சைக்கிள் கேப்பில் சரோ சாமர்த்தியமாக நடித்து, குமுதம் விமர்சனத்தின் மிக அரிய பாராட்டைப் பெற்றார்! அத்தனை லேசில் சென்ற நூற்றாண்டின் வார இதழ்கள் எவரையும் போற்றியது கிடையாது.

hqdefault.jpg 

‘சிறு பிள்ளைத்தனத்துக்கு நோபல் பரிசு பெறும் தகுதியுள்ள சரோஜாதேவி, இதில் இனிய தன்னம்பிக்கையும் இறுமாப்பற்ற கம்பீரமும் கொண்ட சீமான் மகளாக வருகிறார்.

ஒரு கட்டம்- குளியலறையில் தந்தை. வெளியே மகள்.

சரோ - ‘அவர் வந்திருக்கிறார் அப்பா...! ’

எஸ். வி. ரங்காராவ்- ‘யாரம்மா...? ’

சரோ - ‘அவர் தான் அப்பா! ’

ராவ் - ‘அவர் என்றால் யார் அம்மா...? ’

சரோ - ‘உங்கள் மாப்பிள்ளை. ’

ராவ் - ‘எந்த மாப்பிள்ளை? ’

சரோ - ‘உங்களுக்கு எத்தனை மாப்பிள்ளை இருக்கிறார்கள்...? ’

இந்த மாதிரி இடங்களில் கொஞ்சம் நாணம், கொஞ்சம் குதூகலம், கொஞ்சம் அடக்கம், கொஞ்சம் தைரியம் இவற்றை இணைத்து, பெண்மைக்கும் பணத்துக்கும் பகை காண முடியாத வகையில், ஒரு சுவையுள்ள கலவையாகக் காட்சி தருகிறார் சரோஜாதேவி!’ என்று ‘குமுதம்’ அபிநய சரஸ்வதியை ஆராதித்தது.

சரோவுக்கு மட்டும் எப்படி அது கை வந்த கலை ஆனது?

எம்.ஜி.ஆரும் - சிவாஜியும் மாறி மாறி விளையாடிய கோலிவுட் கால் பந்தாட்டத்தில், சரோ மாத்திரம் சிந்தாமல் சிதறாமல் கடைசி வரையில் நிலையாக நின்றார். மற்றவர்கள் ஆண் ஆதிக்க நட்சத்திரப் புயலில் சிக்கி கிடைத்த ஹீரோக்களுடன் ஆடிப் பாடினார்கள்.

எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி மூவருடன் திரையிலும், அதற்கு அப்பாற்பட்டும் ஏற்பட்ட தோழமையை நெஞ்சம் நெகிழ அடுத்தடுத்து இங்கே பகிர்ந்து கொள்கிறார் உங்கள் சரோ!

1.புரட்சித்தலைவர்!

‘ஆரம்ப நாள்களில் கன்னித் தமிழுக்குப் பதிலாக, கன்னடத் தமிழ் பேசி வந்த புதுமுகமான எனக்குத் துணிந்து, முக்கிய கதாபாத்திரம் அளித்துப் படம் தயாரித்தவர் அண்ணன் எம்.ஜி.ஆர். அதை என்றும் எண்ணிப் பார்க்கக் காரணம் உண்டு.

‘கன்னடப் பெண்ணையாப் போடுகிறீர்...? அவளை வைத்து கலரில் படம் எடுக்கிறீரா...?’ என்றெல்லாம் பல படேபடே புள்ளிகள் அவரை அதைரியப் படுத்தப் பார்த்தார்கள். சில நட்சத்திரங்கள் தாங்கள் நடிப்பதாக வலுவில் முன் வந்தார்கள். ஆனால் அண்ணனோ ஒரே உறுதியாக நின்று, என்னையே வைத்து நாடோடி மன்னன் தயாரித்தார்.

அன்று மட்டும் எம்.ஜி.ஆர். தன்னம்பிக்கையைத் தவற விட்டிருந்தால் இன்று, நான் எங்கே எப்படியிருப்பேனோ... தெரியாது.

ஒரு நாள் அண்ணனிடம் மனம் விட்டுப் பேசிய போது, நான் இந்த அளவு வளர்ந்திருக்கிறதே, ‘உங்களால தான் அண்ணே’ என்றேன்.

‘என்ன சரோஜா சொல்றேன்னு’ கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘உங்க நாடோடி மன்னன், திருடாதே படங்கள்ள எனக்கு நல்லதொரு அறிமுகம் கொடுத்தீங்க. அதனாலதான் நான் மள மளன்னு முன்னேற முடிஞ்சது. ’ என்றேன்.

van-01-11-zz-82.jpg 

‘அப்படியில்ல சரோஜா, இந்த ராமச்சந்திரன் உதவலன்னா இன்னொரு ராமச்சந்திரன் உனக்கு உதவப் போறான்... ’ன்னு சர்வ சாதாரணமா சொன்னார் அண்ணன்.

‘அப்படிச் சொல்ல யாருக்கு மனசு வரும்! ’

சண்டைக் காட்சிகள் படமாக்குவதற்கு முன்பாக, நான் நிற்க வேண்டிய இடத்தில் வேறு ஒருவரை நிற்க வைத்து, அடிதடியின் போது எனக்குக் காயம் ஏதும் படாது என்று நிச்சயமாகத் தெரிந்த கொண்டு, அதன் பிறகே என்னை நடிக்க அழைப்பார்.

எங்கிட்ட ஒரு பழக்கம். ஆச்சரியமான விஷயமோ அல்லது, ஜீரணிக்க முடியாத விஷயமோ யாராவது சொன்னால், என்னையும் அறியாமல் ‘அட ராமச்சந்திரா! ’என்பேன்.

இப்படித்தான் ஒரு நாள் எம்.ஜி.ஆர். அண்ணன் செட்ல இருக்கிறப்ப, ‘அட ராமச்சந்திரா’ ன்னுட்டேன். உடனே எம்.ஜி.ஆர். அண்ணன் என் கிட்டே வந்தார்.

‘என்னம்மா என்னைப் போய் அடா புடான்னுக்கிட்டு’ என்றார். ‘ஸாரிண்ணே! ’ என்றேன். ‘ம்... ம்’ என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார் அவர்.

எம்.ஜி.ஆர். அண்ணன் என்னை விடக் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் மூத்தவர்! அன்றிலிருந்து அந்த டயலாகை அக்கம் பக்கம் பார்த்து சர்வ ஜாக்ரதையுடன் உச்சரிப்பேன்.

‘எனக்கு எந்த நல்ல பழக்கமும் கிடையாது. ’ என்று நான் சொல்லவில்லை. ஒரு சினிமாவில் எம்.ஜி.ஆர். என்னைப் பார்த்து,

‘காபி, டீ , ஓவல் என்ன வேண்டும்? ’ என்று கேட்பார். நான் எல்லாவற்றுக்கும் வேண்டாம் வேண்டாம் என்று மறுக்கவே,

‘உனக்கு எந்த நல்லப் பழக்கமும் கிடையாது போலிருக்கு’ என்பார்.

நடிப்புக்காக மட்டும் அல்ல. நிஜத்திலும் நான் காபி அருந்துவது கிடையாது. அதையும் படத்தின் ஒரு காட்சியாக உருவாக்கி, தியேட்டரில் ரசிகர்களிடையே கலகலப்பையும் ஊட்டினார் எம்.ஜி.ஆர்.

அண்ணன் என்னை சரோஜா என்று கூப்பிடுவார். அவர் கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம் ‘தன்னம்பிக்கை. ’

‘சரோஜா என்னோட பிறந்த நாள் 17. உன்னோடது 7. இரண்டுமே லக்கி நம்பர்ங்க. நாம் நல்லா வருவோம். ’என்பார். அந்தத் தன்னம்பிக்கை அண்ணனோட பெரிய ‘பவர்.’

அதனாலதான் ஒரு தடவை நாடகம் நடத்தும் போது கால் உடைஞ்ச நிலையிலும், துப்பாக்கி சூட்டுக்குப் பிறகும், அவரால் மீண்டு வர முடிஞ்சது.

இன்று எம்.ஜி.ஆரைப் பற்றி என்னிடம் பேசும் போது எவ்வளவோ விஷயங்களைச் சொல்கிறார்கள்.

‘அவருக்கு இது பிடிக்கும்... அது பிடிக்கும்... ’ என்று என்னிடமே சொல்பவர்களும் உண்டு. எனக்குச் சிரிப்பு வரும். கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வேன்.

எம்.ஜி.ஆர். பற்றி எனக்குத் தெரியாததா...!

அண்ணனின் ஒவ்வொரு குணாதிசயமும் எனக்குத் தெரியுமே! திருப்பதிக்கே லட்டு. திருநெல்வேலிக்கே அல்வா - கதைதான் இது.

தனக்கு, தன்னோட தேவைக்குன்னு அவர் எதையும் யார் கிட்டயும் கேட்க மாட்டார். பொதுவான விஷயம் அதாவது நாலு பேருக்குப் பயனுள்ளதாகக் கேட்பார்.

அண்ணன் மூணாவது முறையா சீஃப் மினிஸ்டரா இருந்தப்ப ஒரு நாள் எங்கிட்ட, ‘சரோஜா உங்க ஊர்லருந்து எங்க ஊருக்குக் கொஞ்சம் ‘தண்ணி’ கொடுப்பீங்களா’ன்னு கேட்டார்.

maxresdefault.jpg 

எனக்குப் புரியலை. தண்ணிப் பத்தி கேட்கறார்னு புரிஞ்சது. மது வகைகளை தண்ணின்னு சொல்றது வழக்கம். அந்த ‘தண்ணி’ பத்தி பேசற ஆள் இல்லையே அண்ணன், அந்தப் பழக்கத்துக்கு அப்பாற்பட்டவர் ஆச்சே... என்ற யோசனையுடன்,

‘என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தோணுதுண்ணே... ? என்று கேட்டேன். அண்ணன் விளக்கமா சொன்னார்.

‘காவிரி தண்ணீர்’ பத்தி கேட்கறார்னு எனக்குப் புரிஞ்சது. ’

பாருங்க எது பத்தி பேசினாலும் அதுல ஒரு பொது நலம் வெச்சிப் பேசறதுலே அண்ணனுக்கு நிகர் அண்ணனேதான்!

எனக்கு இருட்டுன்னா அப்ப ரொம்பப் பயம். கரண்ட் இல்லாத நேரத்துல, எங்க வீட்டு மாடிக்குக் கூடப் போக மாட்டேன்னா, என் பயம் எப்படிப்பட்டதுன்னு பார்த்துக்குங்களேன்.

ஆனா இப்ப வீட்டு ஹால்ல தனியா உட்கார்ந்திருக்கும் போது, கரெண்ட் போனால் கூட அப்படியே ஆடாம அசையாம இருக்கிறேன்.

அப்படி இருட்டுக்கு, தனிமைக்கு பயப்படக் கூடாதுன்னு எனக்குச் சொல்லிக் கொடுத்தது யார் தெரியுமா? அதுவும் அண்ணன் எம்.ஜி.ஆர். தான்.

எனக்கு ஒரு சமயம் மாடிக்குப் போக வேண்டிய தேவை இருந்துச்சு. நான் படிக்கட்டுல கால வெச்சுக்கிட்டுத் தயங்கி நின்னேன்.

அதைப் பார்த்தது ‘என்ன சரோஜா, ஏன் மேலே போகலையா...? ’ன்னு கேட்டார்.

இருட்டுன்னா எனக்குப் பயம்னு அண்ணணுக்கு ஏற்கனவே தெரியும்.

‘என்ன... இன்னும் நீ அந்தப் பயத்தை விடலையா...?

நீ சாமி கும்புடுவே இல்ல. கோயிலுக்குப் போற நீ, போயும் போயும் இருளுக்கு அச்சப்படலாமா...?

தெய்வம் உண்டுன்னு நினைக்கிறவங்க, பகவான் எப்பவும் நம்ம கூடவே எப்பவும் இருப்பான்ற நம்பிக்கையோடு இருப்பாங்க இல்லையா... உனக்கு அந்த எண்ணம் கிடையாதா...?

‘நிறையவே இருக்குண்ணே... ’

‘அப்ப ஏன் நீ பின் வாங்குற. தைரியமா மாடிக்குப் போ. ’

‘சத்திய நாராயணனுக்கு விரதம் இருந்து பூஜை செய்யற, ஊட்டி அவுட்டோருக்குப் போனா மறக்காம, முனிஸ்வரன் கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ற... நீ இருட்டுக்குள்ள நடமாடறப்ப, நாராயணசாமி உன் கூடப் பக்கத் துணைக்கு நிக்கிற மாதிரி மனசுல நினைச்சிக்க. அப்புறம் எப்படி நெஞ்சுக்குள்ள நடுக்கம் வரும்...?னு அதட்டிக் கேட்டாரு. ’

அண்ணன் எப்ப அப்படிச் சொன்னாரோ அந்த நிமிஷத்துலருந்து என் பயம் போச்சு.

அண்ணன் என்னை நேரடியாகப் பாராட்டியது கிடையாது. ஏதாவது குற்றம் குறை சொல்லிக் கொண்டு இருப்பார். அதனால் தொடக்கத்தில் எனக்கு அவர் மீது வருத்தம் கூட இருந்தது.

ஆனால் நான் இல்லாத சமயம், மற்றவர்களிடம் என்னைப் பாராட்டிப் பேசும் அவரது பொன் மனம் எனக்குப் போகப் போகப் புரிந்தது. அண்ணனின் பெருந்தன்மையை நான் உணர முடிந்தது.

hqdefault (2).jpg 

யாருடனாவது எனக்குச் சிறு தகராறு எழுந்தால் நான் மனம் வருந்தி அவரிடம் போய்ச் சொல்வேன்.

‘நீதான் ஏதாவது வம்பு செய்திருப்பாய்’ என்று என்னையே குற்றம் சொல்வார்.

அதோடு விஷயம் முடியாது. சண்டை போட்ட ஆசாமியிடம்,

‘சரோஜா ஒரு குழந்தை. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிறவள்’ என்று எனக்காக வக்காலத்து வாங்கி பேசுவார்.

என் கணவர் அகால மரணம் அடைந்த சமயம். அண்ணன் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாளும் என்னைப் பார்த்து ஆறுதல் சொல்ல பெங்களூர் வந்தாங்க.

அப்ப அண்ணன் எங்கிட்ட ,

‘சரோஜா உனக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மிகப் பெரியது. என்றாலும் எப்பவும் நீ துக்கத்திலேயே மூழ்கிக் கிடப்பது ஆரோக்கியத்தைக் கெடுத்து விடும். பொது வாழ்க்கையில் ஈடுபடுவதன் மூலம் நீ போகப் போக உன் துன்பத்தை மறக்கலாம்.

இந்திரா காந்தி அம்மான்னா உனக்கு ரொம்ப இஷ்டமாச்சே. ராஜீவ்காந்தி கிட்டே சொல்லி உன்னை ‘காங்கிரஸ் எம்.பி.’ ஆக்கிடவா... ன்னு கேட்டார்.

சிலர் என்னை அவரோட கட்சியில் சேர்றியான்னு எம்.ஜி.ஆர். கேட்டதா சொல்றாங்க. அது தப்பு.

அண்ணனோட குணமே, தனக்கு வேண்டியவங்களோட விருப்பத்தை மதிக்கறது தான். என் எண்ணத்தைத் தெரிஞ்சிக்கிறதுல அவர் தெளிவா இருந்தார். அதுக்கப்புறமா டெல்லிக்கு பேசலாம்ங்கிற யோசனை அவருக்கு.

என் கணவரை இழந்த துக்கத்துல இருந்து மொத்தமா மீள முடியாத சூழல்... எதைப் பத்தியும் யோசிக்கிற நிலைமையில் நான் நிச்சயம் இல்ல.

எல்லாத்தையும் எம்.ஜி.ஆர். பாத்துக்குவார்னு அன்னிக்கு நான் மட்டும் ஒரு உம் சொல்லியிருந்தா, அரசியல்லயும் கொடி கட்டிப் பறந்திருப்பேன். ஏன்னா அண்ணனோட சக்தி அப்படிப்பட்டது!

1987 டிசம்பர் 24. என்னால் மறக்க முடியாத நாள். நான் அப்ப மயிலாப்பூர் ‘சோழா’ ஹோட்டல்ல தங்கி இருந்தேன். காலைல ஆறு மணி இருக்கும். ரிசப்ஷன் ஊழியர் என்னிடம்,

‘மேடம் உங்க ஹீரோ போயிட்டாராமே... ’ன்னார்.

எனக்கு ஒண்ணும் புரியவே இல்ல. என்ன சொல்றீங்க நீங்கன்ணேன். அவர் விளக்கமா விடியற்காலைல அண்ணன் காலமாயிட்டதாச் சொன்னதும் எனக்குக் கடுமையான அதிர்ச்சி!

முதல்வர் எம்.ஜி.ஆர். மறைஞ்சுட்டார்னு கேள்விப்பட்டதும் சென்னை பூரா பரபரப்பு. நான் தனியா ராமாபுரம் தோட்டத்துக்குப் போக முடியுமான்னு சந்தேகம் ஏற்பட்டுச்சு.

போலீஸ் துணைக்கு வர அவங்க ஜீப்லயே எம்.ஜி.ஆர். வீட்டுக்குப் போனேன்.

ஜானகி அம்மாளைப் பார்த்து, நாலு வார்த்தை ஆறுதலா சொல்ல முடியாம ஓன்னு கதறி அழுதேன். ரொம்ப நாழி அவங்களோட தோட்டத்துலயே இருக்க முடியல. மறுபடியும் ‘காவல்’ வாகனத்துலயே பாதுகாப்பா ‘சோழா’வுக்குத் திரும்பினேன்.

MGR-chennai_0_0_0_0.jpg 

அன்னிக்கு மதியம் மூணு மணி சுமாருக்கு எம்.ஜி.ஆரோட இறுதி ஊர்வலம் நான் தங்கியிருந்த ஹோட்டல் வழியா வந்தது. நான் மாடியிலருந்து பார்த்தேன்.

அண்ணனோட பூத உடல் என் கண்ணுல சின்னதா படுது. நான் அப்ப சிந்தியக் கண்ணீர்த் துளிகள் அவரோடப் பாதங்களில் போய்ச் சேர்ந்திருக்குமா...?

இது தான் வாழ்க்கை என்று புரிந்து போகிறது. என் கணவரின் மறைவு என்னைப் பாதித்த போது பெரிய இழப்பாத் தெரிஞ்சது.

இத்தனைச் சீக்கிரத்துல என் சினிமா வாழ்க்கையை நிர்ணயிச்ச அண்ணன் எம்.ஜி.ஆரும் போனது எந்தக் காலத்துலயும் என்னாலத் தாங்கிக்க முடியாத துக்கம்!

காலச் சக்கரத்தின் சுழற்சி எனக்கொண்ணும் ஆச்சரியமாத் தெரியல. வாழ்க்கையை அதன் யதார்த்த போக்கில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

‘எந்த இடமும் யாருக்கும் நிரந்தரமில்லைன்ற உண்மையைப் புரிஞ்சிக்கிட்டாலே வாழ்க்கையின் அர்த்தம் புரிஞ்சிடும். ’

எம்.ஜி.ஆர். எனக்குக் கூறிய ஆசி மிக முக்கியமானது. கல்யாணம் வரைக்கும் நான் ஓய்வு ஒழிச்சல் இல்லாம நடிச்சுட்டு வந்தேன். அப்ப ஒரு நாள் என்னைப் பார்த்து,

‘சரோஜா... உனக்கு பேரன் பேத்தி பிறந்த பிறகும் கூட நீ இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும்’ என்றார்.

அவரது வாழ்த்து நிரந்தரமாகவே பலித்து விட்டது! ’ - சரோஜாதேவி.

http://www.dinamani.com

சரோஜா தேவி: 13. ஆசானும்... அண்ணாச்சியும்..!

 

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சரோ-, ‘எம்.ஜி.ஆர். என் உடன் பிறவா சகோதரர் என்றால், என் கலை உலக ஆசான் சிவாஜி ஆவார். சிவாஜிக்கு மூச்சே நடிப்புதான். நடிகர் திலகத்தின் இடத்தை சினிமாவில் யாராலும் நிரப்ப இயலாது. அவரே இன்னொரு ஜென்மம் எடுத்து வந்தால் மட்டுமே அந்த இடத்தை நிரப்ப முடியும்!

நடிப்பைத் தவிர என் குருவுக்கு வேறு உலகம் தெரியாது. நடிக்க வந்து விட்டால் செட்டுக்குள்ளயே இருப்பார். டைரக்டர் பிரேக் சொன்ன பிறகுதான் வெளியே போவார்.

tumblr_naqyl1QhDw1ta7y6bo1_500.png 

பெங்களூருவில் பள்ளியில் படித்து வந்த காலம். ‘மனோகரா’ நாடகம் நடைபெற்றது. தோழிகள் சிலர் ‘சிவாஜி மனோகரனாக நடிக்கிறார். நேருக்கு நேர் அவரது அற்புத நடிப்பைப் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீயும் அவசியம் வரவேண்டும்’ என்று என்னையும் வற்புறுத்தி அழைத்தார்கள்.

சிவாஜி கணேசன் நடிப்பில் மகத்தானப் புகழ் பெற்றவர். மிகப் பெரிய இந்தி நட்சத்திரங்கள் கூட அவரை வியந்து பாராட்டுகிறார்கள். சிவாஜி நம் ஊரில் நடிக்கிறார் என்றால் மக்கள் வழக்கத்தை விட அதிகமாகவே கூடுவார்கள். அவரை நேரில் காணும் ஆசை எல்லாருக்கும் சகஜமாக இருக்கும்.

எனக்கோ கூட்டம் என்றாலே பிடிக்காது. அதனால் என் சிநேகிதிகளிடம்,

‘நீங்கள் போங்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டட்டும்’ என்றேன். நான் அப்போது விளையாட்டாகச் சொன்னது, பிற்காலத்தில் பலிக்கும் என்று நான் நிச்சயம் எதிர்பார்த்தவள் கிடையாது.

தங்கமலை ரகசியம் படத்தில் நடிகர் திலகத்துடன் ஒரு சின்ன வசனம் மட்டுமே எனக்கு இருந்தது. சும்மா இரண்டே வார்த்தைகள்.

‘வாழ்க்கைக்கு எது மிகவும் முக்கியம், இளமையா... அழகா...? ’ என்று நான், சிவாஜி அண்ணனைப் பார்த்துக் கேட்க வேண்டும்.

மிகப் பெரிய கலைஞரான அவர் முன்பு அதைப் பேச முடியாமல் கூச்சத்தில் தவித்தேன். கையும் காலும் தந்தி அடித்தன. இரண்டு சொற்கள் என் வாயிலிருந்து வெளியே வரவில்லை.

‘தைரியமாகப் பேசும்மா’ என்று சிவாஜி கணேசன் ஊக்கம் தந்த பிறகு, சமாளித்துக் கொண்டு பேசினேன்.

சபாஷ் மீனாவில் நாங்கள் இருவரும் நடித்திருந்தாலும் அவருடன் பழகச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. பாகப் பிரிவினைக்குப் பிறகே நடிகர் திலகத்தின் அன்பையும் ஆசியையும் ஆதரவையும் பெற்றேன்.

01slide8.jpg 

விடிவெள்ளி படத்துக்குக் கால்ஷீட் கொடுப்பதில் எனக்குப் பட அதிபருடன் சிறு சிறு பிரச்சனைகள் எழுந்தன. சிவாஜியின் மிக நெருங்கிய நண்பர் வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம். அவரோட தயாரிப்பு விடிவெள்ளி.

அண்ணன் சிவாஜியோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கியே இருந்தார்.

‘சொந்த விருப்பு வெறுப்புகளை மனத்தில் வைத்துக் கொண்டு, அதைப் படத் தொழிலில் உடன் நடிப்பவர்களிடம் சிவாஜி அண்ணன் எப்போதும் காட்டியது கிடையாது.

மனத்தில் எதையும் துளி கூட வஞ்சம் வைக்காத உயர்ந்த மனிதர்!

அவரை அரசியல் மேடைகளில் தூற்றியவர்களும், அண்ணனைப் பத்தி குறை கூறிப் பேசியவர்களும் சிவாஜியோட படங்களில் நடிச்சிருக்காங்க. அது பொது ஜனங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்.

நானாக மனம் நொந்து போய் யாரைப் பற்றியாவது அண்ணனிடம் புகார் செய்தால்,

‘போனால் போகட்டும் போ’ சினிமா உலகமே அப்படித்தான் என்று தொடங்கி, சிரித்துச் சிரித்துப் பேசி அனுப்பி விடுவார். யாருடனும் பகையை வளர்க்க விரும்ப மாட்டார்.

பாகப் பிரிவினை தொடங்கி நான் அவருடன் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு நடிப்புக் கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பாகும்.

என்னிடம் ஏதாவது திறமை இருந்தால், சினிமாவில் நான் நடப்பது முதல் நடிப்பது வரை எனக்குச் சொல்லிக் கொடுத்த வழி காட்டி சிவாஜி அண்ணன்!

சிவாஜியின் கூட்டுக் குடும்பம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எந்த வீட்டிலும் இல்லாத அம்சம்! ஞாயிற்றுக்கிழமையானால் அவங்க வீட்டு டைனிங் டேபிளில் அறுபது பேர் அமர்ந்திருப்பார்கள். அத்தனை பேர்களுக்கும் மருமகள்களே பரிமாறுவார்கள்.

ரொம்ப காலத்துக்குப் பிறகு ‘ஒன்ஸ் மோர்’ படத்துல நானும் சிவாஜியும் நடித்தோம். ‘அண்ணனோட மறுபடியும் நடிக்கிறோம்’னதும் சந்தோஷமா இருந்தது. பழைய நினைவுகள் மொத்தமா மனசுல வந்து அலை மோதுது.

காலை ஏழு மணிக்குக் கால்ஷீட் கொடுத்திருந்தார்னா ஆறே முக்கால் மணிக்கெல்லாம் மேக் அப்போட செட்ல உட்காந்திருப்பார். நாங்க பெண்கள் மேக் அப் போட்டு முடிய எப்பவுமே கால தாமதம் ஆகும்.

images.jpg 

அதுல கொஞ்சம் கூடுதலா லேட்டாயிடுச்சுனா முறைக்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார். அதனாலயே சிவாஜி செட்டுக்கு வந்திட்டாருன்னா, நாங்க மேக் அப்காரரை சீக்கிரம் சீக்கிரம்னு அவசரப்படுத்தி இருக்கோம்.

சிவாஜி கிட்டே என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மனம் விட்டுப் பேசி இருக்கிறேன். பல சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லி இருக்கிறார்.

அவர் மட்டும் அல்ல, அவரோட மனைவி கமலாம்மா, பொண்ணுங்க உட்பட ஒட்டு மொத்தக் குடும்பமும் என் மேல் தனிப்பாசம் வெச்சிருந்தாங்க. அண்ணன் காலத்துக்குப் பிறகும் அது மாறாம தொடருது.

சில நேரம் நாங்க லேடீஸ் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். அந்த சமயம் சிவாஜி வந்துட்டாருண்ணா , ‘என்ன மாதர் மன்றமா எல்லாரும் ஒண்ணு சேந்துட்டீங்களா..., அப்ப நான் போயிடறேன்னு...’ கிண்டல் பண்ணுவார்.

என் வாழ்க்கை திறந்த புத்தகம். அதில் ரகசியம் எதுவும் கிடையாது. 1986ல் என் கணவர் என்னைத் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டார். என்னை விதவை கோலத்தில் காண சிவாஜி விரும்பவில்லை.

‘நான் சரோஜாவைப் பார்க்க மாட்டேன். அவள் நெற்றியில் குங்குமம் இல்லை. ’ என்று சில ஆண்டுகள் என்னைப் பார்க்காமலே தவிர்த்தார். நானாக மனத்தைத் தேற்றிக் கொண்டு அவரைச் சென்று பார்த்தேன். கடைசிக் காலம் வரையில் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

‘ஒன்ஸ் மோர்’ ஷூட்டிங். முதல் நாள் லன்ச் பிரேக்ல சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நம்ம வீட்லருந்து சாப்பாடு வந்துருக்கு. நீயும் இப்ப என் கூட சாப்பிடறே...’ என்றார்.

‘இல்லண்ணே... எனக்குத் தனியா மீல்ஸ் வரும்’ என்றேன்.நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. சிவாஜி வீட்டுச் சாப்பாட்டை, அவருடன் எத்தனை நாள் சாப்பிட்டிருக்கிறேன். இன்னிக்குப் புதுசா என்ன வந்ததுச்சு..?

ஒரு வேளை... கால இடைவெளி, என்னை இந்த வார்த்தையைப் பேச வைத்து விட்டதோ..!

அப்போது சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நமக்கு வேண்டியவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா போயிட்டே இருக்காங்க பார்த்தியா... பாலையாண்ணன், சகஸ்ரநாமம், ராதா அண்ணன்லருந்து இப்ப எம்.ஜி.ஆர். அண்ணன் வரை போயாச்சு...

நம்மள்ள கூட இப்ப நான், பப்பி, நீன்னு கொஞ்சம் பேர்தான் இருக்கோம். நம்மள்ள யார் முந்தறோம்னு நமக்குத் தெரியாது. இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா அனுசரணையா இருப்போம்’ன்னாரு.

சிவாஜி அப்படி சோகம் பொங்க வருத்தமாச் சொன்னதும் எனக்குக் கண் கலங்கிற்று. அவராலயும் மேற்கொண்டு ஏதும் பேச முடியாம நாக்கு தழுதழுத்துச்சு. எனக்காக சிவாஜியோட சாப்பாடு கேரியர் பிரிக்காமயே இருந்தது. கொஞ்சம் கழிச்சு அண்ணன் மறுபடியும் என்னைத் தன்னோட சாப்பிட வற்புறுத்தினார்.

‘சரோஜா உனக்கு லன்ச் எப்ப வரும்? ’

‘உங்களோடயே சாப்பிடறேன் அண்ணே. ’என்று சொல்லி அவருடனேயே மதிய உணவைப் பகிர்ந்து கொள்ள உட்கார்ந்தேன்.

இழப்பு என்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கொண்டாலும், தனது நண்பர்களின் இழப்பு அவரை எத்தனை தூரம் பாதித்து இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.

அதற்குப் பிறகு ஒன்ஸ் மோர் ஷூட்டிங்கில் சிவாஜி வீட்டுச் சாப்பாடுதான் தினமும் எனக்கு!

3. ஜெமினி கணேசன்!

‘காதல் மன்னன்’ படித்தவர் என்கிறதை விடப் பண்பு மிக்கவர்’- இதுவே என் எண்ணம். சில நேரங்களில் நானே அவரது நடிப்பைக் குறை கூறி இருக்கிறேன்.

‘இந்தக் காட்சியில் இப்படி நடித்தால் சிறப்பாக இருக்கும்’ என்று ஆலோசனைகளை அள்ளி விடுவேன்.

‘இவள் என்ன எனக்குச் சொல்லித் தருவது...! ’ என்று எண்ணாமல் என் யோசனையை உடனடியாக ஏற்றுக் கொள்வார்.

‘சினிமாவில் சிருங்காரம்’ சொட்டும் நடிப்பை எனக்குக் கற்றுத் தந்தவர் சாட்சாத் ஜெமினி கணேசன். காதல் காட்சிகளில் என் நடிப்பு இயற்கையாக இருக்க ஜெமினி அண்ணாச்சியே காரணம்!

01slide4.jpg 

ஜெமினி கணேசன் ஓர் அழகான கதாநாயகன். சிலர் மாதிரி உம்மென்று இருக்க மாட்டார். ஷூட்டிங்கில் ஏதாவது தமாஷாகப் பேசி கலகலப்பை உண்டு பண்ணுவார்.

‘நீங்க மட்டும் பொம்பளையாப் பொறந்திருந்தீங்கன்னா, இந்த உலகத்தையே உங்க வனப்பால், வசீகரத்தால், சாமர்த்தியத்தால் அழிச்சி இருப்பீங்க...’ என்று நான் குறும்பாகச் சொல்வது உண்டு.

‘சினிமாவில் நான் தான் கெட்டிக்காரன் என்பார்கள். அந்த விஷயத்தில் நீ என்னையும் மிஞ்சியவள்’ என்று வாய்க்கு வாய் கேலியாகப் பதில் சொல்வார்.

ஒரே இடத்தில் நிற்கவோ உட்காரவோ மாட்டார். கொஞ்சம் டைம் கிடைத்தாலும் போதும். பக்கத்து ப்ளோருக்குப் போய் விடுவார்.

ஒரு பியட் கார் வைத்திருந்தார். அதை எடுத்துக்கொண்டு ஏவி.எம்மிலிருந்து வாஹினிக்குப் பறப்பார்.

அவருக்கும் எனக்கும் அண்ணன் தங்கை உறவு இருந்தது. ஜெமினியை நான் ‘அண்ணாச்சி’ என்று கூப்பிடுவேன். ‘ஏதாவது பிரச்சனைன்னா எங்கிட்டச் சொல்லுமா... ’ என்பார்.

‘கப்பலோட்டிய தமிழன்’ சினிமா சம்பந்தமாக எனக்கும் பட முதலாளிக்கும் அபிப்ராய பேதம் வந்தது. எங்கள் இருவரையும் தன்னால் முடிந்த மட்டும் சமாதானப்படுத்தியவர் ஜெமினி அண்ணாச்சி. பலருக்கும் இப்படி உதவி இருக்கிறார்.

எங்களுக்கு சேர்ந்து ஷூட்டிங் இல்லாம பல நாள்கள் கடந்திருக்கும். அப்படியொரு சூழ்நிலையில திடீர்னு என்னைப் பார்க்கணும்னு அவருக்குத் தோணும்.

நான் எந்த ஸ்டுடியோவுல இருக்கேன்னு தெரிஞ்சிக்கிட்டு, ‘தங்கச்சி’ன்னு கூப்பிட்டுக்கிட்டே உள்ளே நுழைவார்.

திரை உலகின் மிகச் சிறந்த அப்பா ஜெமினி கணேசன். தனது எழிலானத் தோற்றத்தால், சிறந்த நடிப்பால், பண்பான நடத்தையால், அன்போடு பழகும் தன்மையால் பலரது மனத்திலும் இடம் பிடித்தவர்.

கல்யாணப்பரிசு நானும் அவரும் சேர்ந்து நடித்து வெள்ளி விழா கொண்டாடியது. அதே போல் எங்கள் இருவர் நடிப்பிலும் கைராசி வெற்றிகரமாக ஓடியது.

அதற்குப் பிறகு தனக்கு நடிக்கப் போதுமான வாய்ப்பு இல்லாவிட்டாலும், நடிப்பில் எனக்கு அதிக முக்கியத்துவம் உள்ள ஏராளமான படங்களில் ஜெமினி அண்ணாச்சி என்னுடன் பெருந்தண்மையுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்!

அவற்றில் சில படங்கள் என்னாலும் ரசிகர்களாலும் என்றும் மறக்க முடியாதவை.

Art-350.jpg

‘தாமரை நெஞ்ச’த்தில் ஜெமினியுடன் உள்ள காதலை வெளிக்காட்ட மாட்டேன். அதில் கடகடவென்று தண்ணீரைக் குடிப்பேன். அந்த ஈரம் இன்னும் என் நெஞ்சில் கசிகிறது.

பணமா பாசமா, குல விளக்கு இரண்டும் கே.எஸ். கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடியது.

நான் ஏற்ற வேடங்களில் எனக்கு மிகவும் பிடித்தது... குலவிளக்கு படத்தில் கிடைத்த ‘கண்ணம்மா டீச்சர்’ கதாபாத்திரம்! குடும்பத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் மிக அருமையான குணச்சித்திரம்.

அதில் எஸ்.எஸ்.ஆர். - ஜெமினி இருவரும் என்னை மணக்க நினைப்பார்கள். மகளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டால், வீட்டுக்கு வருமானம் போய்விடுமே என்று, அப்படி ஏதும் நடக்கவிடாமல் அப்பா எஸ்.வி. ரங்காராவ் இருவரையும் தடுத்து விடுவார். கடைசியில் நான் டி.பி. நோயால் இறந்து போவேன்.

நடிப்பில் கொடி கட்டிப் பறந்தவர்கள் பலர் திரை உலகில் இருக்கிறார்கள். தன் ஒவ்வொரு குழந்தையும் சொந்தக் காலில் சுயமாக நிற்க வேண்டும். அதற்கு படிப்பில் வெற்றி பெற வேண்டும் என்று முழு மூச்சுடன் பாடுபட்டவர் ஜெமினி கணேசன்.

அவர், தான் கைப்பிடித்த பெண்களுக்கு துரோகம் செய்யாமல் - நட்டாற்றில் விடாமல் ஒவ்வொரு குழந்தையையும் ஆளாக்கி இருக்கிறார். அந்த வகையில் அவர் ஒரு நல்ல தந்தை. அவருடைய பிள்ளைகள் அத்தனை பேரையும் நல்ல நிலையில் வைத்திருக்கிறார்.

ஷாட் நேரத்துல பல சமயங்கள்ல எனக்கு டயலாக் சொல்லித் தருவார். டேக்கின் போது நான் கரெக்டா பேசிடுவேன். அண்ணாச்சி அவரோட வசனத்தை மறந்துடுவார்.

நடிப்பதற்காக வந்த சமயத்தில் தான் சந்தித்தோம் என்றாலும், எனக்கு மணமான பின்பு என் கணவரோடும் மனம் விட்டுப் பேசிப் பழகிய மிகச் சிறந்த குடும்ப நண்பர்.

vaadikai maranthathu eeno song.jpg 

‘மணிபாலில்’ ஜெமினி அண்ணாச்சியின் பெண்கள் படித்து வந்தார்கள். பெங்களூருக்கு வரும் போது எங்கள் குடும்பத்தைச் சந்திக்க வருவார்.

சந்தோஷத்தில் பங்கு கொள்வதை விடச் சங்கடமான சூழலில் தோள் கொடுப்பதுவே தோழமை. அதைப் புரிந்து வைத்திருந்தவர் அண்ணாச்சி.

‘ஆடிப்பெருக்கு’ சங்கீதமும் சந்தோஷமும் இழையோடிய அருமையான படம். அதில் நடிக்கிறப்ப நான் ரொம்பச் சின்னப் பொண்ணு. படத்தில் என் புருஷனா நடிக்கிறவர் இறந்து போக, என் கை வளையல்களை உடைக்கிற சோகமான காட்சி.அந்த சீனில் நடிக்கும் போது நான், காமிராவுக்கு முகம் காட்டிய நேரம் போக, மற்ற சமயங்களில் சதா சிரித்துக் கொண்டே இருந்தேன்.

இடையில் பல ஆண்டுகள்... பெங்களூரில் என் கணவர் இறந்து போகிறார்...எனக்கு ஆறுதல் சொல்லத் துடிதுடித்துப் போய் முதலில் ஓடோடி வந்தவர் ஜெமினி. என்னைப் பார்த்ததும், ‘சரோஜா... அன்னிக்கு ஆடிப்பெருக்கு படத்துல, கணவனை இழந்த சீனில் நடிக்கிறப்ப சிரிச்சிக்கிட்டே இருந்தியே... இப்போ நிஜமாகவே உன் புருஷன் போயிட்டாரேம்மா... ’ ன்னு சொல்லி ஓன்னு அழுதார்.

பழைய சினிமா சம்பவத்தை இன்றைய இழப்போடு ஒப்பிட்டுப் பேசிய போது, என்னுடைய கணவரது இழப்பு அவரை எத்தனை தூரம் பாதித்திருக்க வேண்டும், என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அண்ணாச்சியின் அத்தகைய அரிய பண்பால் ஜெமினியின் குடும்பத்திலும் என்னை ஒருத்தியாகவே உணர்ந்தேன். ’ - சரோஜாதேவி.

http://www.dinamani.com/

சரோஜா தேவி: 14. அபிநய சரஸ்வதி!

 

 

1938 ஜனவரி 7ஆம் தேதி பிறந்தவர் சரோ. 2016 ஜனவரி ஆறாம் தேதியுடன் 77 ஆண்டுகள் பூர்த்தி ஆகி, 78வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

தென் இந்தியாவில் பிரபல ஹீரோயின்கள் எல்லாரும் சரோவுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

ஓஹோவென்று ஓடிய அவரது எந்தப் படத்திலும் மற்றொரு நாயகியின் பங்களிப்பால், அபிநய சரஸ்வதி அவரது தனித்துவத்தையோ, நன் மதிப்பையோ, குறும்பில் கொடி கட்டிப் பறக்கும் குளு குளு நடிப்பையோ இழந்தது கிடையாது. அதுவே சரோவின் மிகப் பெரிய பலம்!

சிம்ரன் உள்பட அநேகம் பேர் சரோவுடன் தங்கள் நடிப்புக் கணக்கைத் தொடங்கி புகழ் பெற்றிருக்கிறார்கள். சரோவுடன் சங்கமித்தவர்கள்-

1.விஜயகுமாரி (கல்யாணப்பரிசு, பெண் என்றால் பெண்) 2. சவுகார் ஜானகி (பாலும் பழமும், புதிய பறவை, கண் மலர்) 3.வைஜெயந்திமாலா (இரும்புத்திரை, பைகாம் இந்தி)

4.சாவித்ரி (பார்த்தால் பசி தீரும்) 5. தேவிகா (ஆடிப்பெருக்கு, குலமகள் ராதை) 6. ஷீலா - அறிமுகம் (பாசம்)

7. ஜோதிலட்சுமி, 8.மணிமாலா - அறிமுகம் (பெரிய இடத்துப்பெண்) 9. சாரதா - அறிமுகம் (வாழ்க்கை வாழ்வதற்கே)

10. ரத்னா (எங்க வீட்டுப் பிள்ளை) 11. கே. ஆர். விஜயா (நான் ஆணையிட்டால்) 12. பாரதி - அறிமுகம் (நாடோடி)

13.காஞ்சனா (பறக்கும் பாவை) 14. ஜெயலலிதா (அரச கட்டளை) 15. விஜய நிர்மலா (பணமா பாசமா, அன்பளிப்பு) 16. வாணிஸ்ரீ (தாமரை நெஞ்சம்)

17.லட்சுமி (அருணோதயம், உயிர்) 18. பத்மினி (தேனும் பாலும்) 19. பானுமதி-20.ராஜஸ்ரீ (பத்து மாத பந்தம்) 21. ஷோபனா (பொன் மனச் செல்வன், ஒரே தாய் ஒரே குலம்) 22. சிம்ரன் (ஒன்ஸ்மோர்) 23. நயன் தாரா (ஆதவன்)

தன்னுடைய திரையுலகத் தோழிகள் பற்றி சரோஜாதேவி-

‘அமெரிக்கா போனா பத்மினி வீட்லதான் தங்கியிருப்பேன். 1981ல் நானும் என் கணவரும் ஒரு மாச டூர்ல, நியூயார்க்ல பப்பிம்மா வீட்டுக்கும் போனோம்.

SARO NEW.jpg 

பத்மினியின் கணவர் டாக்டர் ராமச்சந்திரன். நியூயார்க் முழுசையும் எங்களுக்குச் சுற்றிக் காட்டினார். அவங்க வீட்ல டின்னர் சாப்பிட்டுக்கிட்டே பல விஷயங்களைப் பேசினோம்.

அப்ப பத்மினியோட கணவர் கிட்ட,

‘பொதுவா நம்ம நாட்ல இருந்து பலர், அமெரிக்காவை சுத்திப் பார்க்க வராங்க. இங்கேயே தங்கி உத்தியோகம் செய்யறாங்க. படிக்கிறாங்க.

அவங்களுக்குத் திடீர்னு அகால மரணமோ, அல்லது விபத்துல உயிர் இழப்போ நிகழ்ந்துட்டா, ‘பாடியை’ இந்தியாவுக்குக் கொண்டு போவாங்களா... இல்ல இங்கேயே அடக்கம் பண்ணிடுவாங்களான்னு... ’ கேட்டேன்.

‘அது அவங்க அவங்க சூழ்நிலையையும் விருப்பத்தையும் பொறுத்தது. ’என்றார் டாக்டர்.

நாங்க என்னிக்கு எந்த இடத்துல இருப்போம்னு பத்மினியிடம் சொல்லிட்டுப் போவோம். அன்னிக்கு ‘மினிய பெலிஸ்’ என்ற இடத்தில் இருந்தோம்.

அங்கே நாங்க எதிர்பாராத விதமா ஒரு ட்ரங் கால். பப்பியம்மாவோட மகன் பதற்றமான குரலில், ‘அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார்னு’ சொன்னதும் எங்களுக்கு ஒரே ஷாக்.

உடனடியா ட்ரிப்பை கேன்சல் பண்ண முடியல, பப்பியம்மாவுக்கும் ஆறுதல் சொல்ல முடியல. கிட்டத்தட்ட ஒரு மாசம் கழிச்சி டூர் முடிஞ்சி திரும்பி வரும் வழியில், பத்மினியைப் பார்த்து துக்கம் விசாரிச்சேன்.

பப்பிம்மா எங்கையைப் பிடிச்சிக்கிட்டாங்களே தவிர, ஒரு மணி நேரம் தாண்டியும் ஒரு வார்த்தை கூட அவங்க வாயிலருந்து வரல.

கணவரை இழந்த அதிர்ச்சி எத்தனை கொடூரமானதுன்னு, அன்னிக்குப் பப்பிம்மா மூலமா உணர்ந்தேன்.

கணவர் மறைந்து மூணு மாசத்துக்குப் பிறகு பப்பிம்மா, அவங்க அக்கா லலிதாவோட பெங்களூர்ல எங்க வீட்டுக்கு வந்தாங்க. அப்ப லலிதாவுக்கு கேன்சர் முத்தின நேரம்.

என்கிட்டே விடை பெறும் சமயம்,

‘சரோஜா... அடுத்த முறை நான் வருவேனோ இல்லையோ... ஒரு வேளை நாம சந்திக்கிறது இதுவே கடைசி தடவையா இருக்கும்னு, லலிதாம்மா கண் கலங்கினப்ப எனக்கும் அழுகை வந்து விட்டது. ஆறுதல் சொல்லத் தெரியாமல் நானும் சேர்ந்து அழுதேன்.

சவுகார் ஜானகியுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று நிறையவே நடித்திருக்கிறேன்.

‘சரோஜாவையும், சவுகாரையும் ஜோடியாக சேர்த்துக் கொண்டால் அந்தப்படம் நிச்சயமாக வெற்றி அடையும்’ என்பார் சிவாஜி.

இரண்டாயிரமாவது ஆண்டில் சவுகாருக்கு இருதய ஆபரேஷன் நடைபெற்றது.

அப்போது நான் அவருக்கு போன் செய்து பேசினேன்.

‘இன்னும் ஆபரேஷன் ஆரம்பமாகவில்லை. நான் தைரியமாகவே இருக்கிறேன். என்றாலும் இந்த நேரத்தில் உங்கள் அழைப்பு எனக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது சரோஜா’ என்று நெகிழ்ந்தார் ஜானகி. எங்களுக்குள் நிரந்தரமான நேசம் நீடிக்கிறது.

ஆலயமணி படத்தில் நானும் விஜயகுமாரியும் போட்டி போட்டு நடிப்போம். எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு எப்போதும் உண்டு. நாங்கள் ஒரு குடும்பம் போல் அன்பு காட்டி, அதையே திரும்பப் பெறுகிறோம். ’ -சரோஜாதேவி.

சரோவின் நடையழகு தனித்துவம் வாய்ந்தது. அதை வர்ணித்து மூவேந்தர்களும் பாடியவை சூப்பர் ஹிட் ஆயின.

1.ஆஹா மெல்ல நட- புதிய பறவை 2. இந்த பெண் போனால் அவள் பின்னாலே என் கண் போகும் - எங்க வீட்டுப் பிள்ளை 3. மெல்ல... மெல்ல... என் மேனி நடுங்குது மெல்ல - பணமா பாசமா.

சரோவுடன் ஜோடி சேராத ஒரே ஹீரோ ஜெய்சங்கர்!

நடிகர் திலகத்தின் நாயகிகளில் அநேகம் பேர் அவருக்கு அம்மாவாக, அக்காவாக, தங்கையாக, மகளாக, மருமகளாக, மாமியாராகக் கூட நடித்திருப்பார்கள்.

‘பாகப்பிரிவினை தொடங்கி ஒன்ஸ்மோர் வரையில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் சரோ மட்டுமே! அது ஓர் இனிய அதிசயம்! ’

கின்னஸ் சாதனை புரிந்துள்ள பி.சுசிலாவின் கான சமுத்திரத்தில், சரோவின் உள்ளம் கொள்ளை கொள்ளும் நடிப்பும் நதியாக சங்கமிக்கும்.

தேவர் பிலிம்ஸ், சரவணா பிலிம்ஸ், ஏவி.எம்., ஆர்.ஆர். பிக்சர்ஸ் என எவர் படமெடுத்தாலும் பி. சுசிலாவின் குரலில், ஓபனிங் மற்றும் சோலோ சாங்கில் சரோ கொடி கட்டிப் பறந்ததற்கு இணையாக இன்னொருவரைச் சொல்லவே முடியாது.

SARO.jpg 

இன்று வரையில் நித்தம் நித்தம் சலிக்காமல் அனைத்து ரேடியோ, டிவி சேனல்களில் ஒலிக்கிறது... புதிய பறவையின் ‘சிட்டுக்க்குருவி முத்தம் கொடுத்து... ’

விடியலின் அழகோடு தாம்பத்யத்தின் இனிமையையும் சேர்த்துச் சொல்ல, ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ ஒன்று போதுமே. அதில் தோன்றும் சரோவைப் போன்ற எழிலான இளம் மனைவிக்கு, 1961ல் எத்தனை இளைஞர்கள் ஏங்கினார்களோ...!

தேவர் படங்கள் ஒன்று தவறாமல் காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை, காட்டுக்குள்ளே திருவிழா, காடு வெளைஞ்ச நெல்லிருக்கு என்று தொடங்கி, மூலிகையின் பெருமை பேசும் நீண்ட பயனுள்ள பட்டியல்...

‘அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்’ பாடலில் திருநாவுக்கரசரின் தேவாரம் எதிரொலித்து கண்ணதாசனின் இலக்கிய செழுமை நங்கூரம் பாய்ச்சும்.

பணத்தோட்டம் படத்தில் வரும் ‘ஒரு நாள் இரவில்’ கேட்டுக் கொண்டே செத்து விடத் தோன்றும்!

‘திருடாது ஒருநாளும் காதல் இல்லை என்பேன்

எனையே அவன் பால் கொடுத்தேன்

என் இறைவன் திருடவில்லை’

அதில் மேற்கண்ட வரி வைரமுத்துவால் முரளி நடித்த ‘ஊட்டி’ சினிமாவில் மீண்டும் கையாளப் பட்டது.

‘தாய்ச் சொல்லைத் தட்டாதே’யில் பிரிவாற்றாமையைப் பிரசவிக்கும் ‘பூ உறங்குது பொழுதும் உறங்குது’ வைரமுத்துவை உலுக்கிய பாடல்.

டி.ஆர். ராமண்ணாவின் படங்களில் எம்.ஜி.ஆர்.- சரோ ஜோடி பங்கேற்ற ஒவ்வொரு டூயட்டும் அவற்றின் மாறுபட்ட காட்சி அமைப்புகளுக்காகவும் நெஞ்சில் நிலைத்தவை.

1. பெரிய இடத்துப் பெண் - மேற்கத்திய நடனம் ஆடியவாறு ‘அன்று வந்ததும் அதே நிலா’

2. பணக்கார குடும்பம் - டென்னிஸ் மட்டையோடு ‘பறக்கும் பந்து பறக்கும்’

3. அதிலேயே இன்னொரு இனிய கீதம் - ‘இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா... ’ - கொட்டும் மழையில் கட்டை வண்டிக்கு அடியில்.

4. பறக்கும் பாவை - சர்க்கஸ் வலையில் - ‘கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா... ’

5. மற்றொன்று பாத்ரூமில் குளித்தவாறே, ‘உன்னைத் தானே ஏய்... ’

----------

சரோவின் பாட்டு ராசி எண்ணற்றக் கவிஞர்களின் அழியாப்புகழோடு ஒன்று கலந்தது.

உவமைக்கவிஞர் சுரதாவை மறக்க முடியாமல் நினைவு படுத்துவது

நாடோடி மன்னனின் எம்.ஜி.ஆர். -சரோ இடம் பெற்ற ‘கண்ணில் வந்து மின்னல் போல்’ எனத் தொடங்கும் டூயட்.

அதில்‘எழில் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே உன்னைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே

நீல வானம் இல்லாத ஊரே இல்லை உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை’ போன்ற வரிகள் இலக்கியத்தேன் ஊறிய பலாச் சுளைகள்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கல்யாணப் பரிசு படப் பாடல்கள் இன்னமும் பன்னீர் தெளிக்கின்றன.

SAROJA NEW PICS.jpg 

பாகப்பிரிவினையின் ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தால்’ ஒலித்த பிறகே கண்ணதாசன் வீட்டில் பண மழை பெய்யத் தொடங்கியது.

கே. டி. சந்தானம் மிகச் சிறந்த கவிஞர் மற்றும் நடிகர். சிவாஜியின் முதல் குரு. ரகசிய போலீஸ் 115ல் அம்முவின் அப்பாவாக நடித்திருப்பார். ‘என்ன பொருத்தம்’ என்ற பாடல் காட்சியில் அவரைக் காணலாம்.

அவரது புகழுக்குக் கலங்கரை விளக்கமாக ஆடிப்பெருக்கு படத்தின்

1.தனிமையிலே இனிமை காண முடியுமா 2. காவேரி ஓரம் கவி சொன்ன காதல்...என்றும் நிலைத்திருக்கிறது.

தெய்வத்தாய், படகோட்டி, அன்பே வா படப் பாடல்களால் வாலியின் வசந்தம் நிரந்தரமானது.இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம்.

‘அன்னக்கிளி’ படப் பாடல்களுக்கு முன்பு அவருக்கு விலாசம் தந்தவை கலங்கரை விளக்கம் படத்தில் ஏக்கத்தின் ஊஞ்சலாக பி. சுசிலாவின் குரலில் பவனி வந்த

1.என்னை மறந்ததேன் தென்றலே, மற்றும்

2. சரோ சிவகாமியாகவும் எம்.ஜி.ஆர். நரசிம்ம பல்லவனாகவும் காட்சி தந்த ‘பொன் எழில் பூத்தது புது வானில்’ என்கிற ஏழு நிமிட டூயட்.

-----------

தாய்ச் சொல்லைத் தட்டாதே படத்தின் ‘பட்டுச் சேலை காற்றாட’ பாடல், காட்சிப்படுத்தப்படாமல் பாக்கி நின்றது. குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது ஒரு டூயட்டைப் படமாக்கத் தேவைப்படும்.

சரோ அவசரமாக, சுக்ரால்- இந்தி ஷூட்டிங்குக்குச் செல்ல வேண்டும்.

‘அரை நாள் போதும் எனக்கு. அதற்குள் உனக்கான காட்சிகளை முடித்து, பம்பாய்க்கு ப்ளைட் ஏற்றி விடுகிறேன் சரோஜா... ’என்றார் தேவர்.

நாலே மணி நேரத்தில் காமிரா முன்பு சரோ, ஒரு திரைக் காதலியின் அழகிய பாவனைகளை பதித்துக் காட்ட,

‘பட்டுச் சேலை காற்றாட’ இன்னமும் பரவசமூட்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

‘அபிநய சரஸ்வதி -கலை அரசி பி. சரோஜாதேவி’ என்று 1966ல் சத்யா மூவிஸ் நான் ஆணையிட்டால் படத்தில் முதன் முதலில் சரோவுக்கு இரண்டு பட்டங்களுடன் டைட்டில் காட்டினார்கள்.

வேறு எந்த ஹீரோயினுக்கும் அவ்வாறு செய்திருப்பார்களா என்பது வியப்புக்குரிய வினா!

------

‘அய்யோ கொடுமை...! சரோஜாதேவிக்கு ‘அபிநய சரஸ்வதி’ பட்டமா?’ என்று என். முருகன் - திருநெல்வேலி - பேசும் படத்தில் கேள்வி கேட்டார்.

b-saroja-devi_1460625431.jpg 

காரணம் சரோஜாதேவி, வைஜெயந்திமாலா - பத்மினி போல், ஒப்பற்ற நடனமணியாகத் தமிழக மேடைகளில் முத்திரை பதித்தவர் அல்ல.

‘கன்னடக்காரர்கள் கொடுத்ததுதானே? அந்த ஊருக்கு சரோஜாதேவிதான் நாட்டிய மேதை என்றால் அதில் தவறில்லையே... ’ என்று பேசும் படம் பதிலளித்தது.

கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பா சரோவுக்கு வழங்கிய கவுரவம் ‘அபிநய சரஸ்வதி! ’

‘அமர சில்பி ஜக்கண்ணா’ என்கிற கன்னட சினிமாவில் சிறப்பாக நடித்ததற்காக சரோவுக்கு அவ்விருது கிடைத்தது.

அப்பரிசு தமிழ் நாட்டில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

கன்னடத்தில் ‘அபிநய’ என்பது நடிப்பைக் குறிக்கும் வார்த்தை. நடனம் என்று பொருள் கிடையாது.

நம் ஊரில் அபிநயத்தை பரதத்துடன் இணைத்துப் பேசுவது வழக்கம்.

‘அமர சில்பி ஜக்கண்ணா’ விக்ரம் ஸ்டுடியோ முதலாளி - சிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் பி.எஸ். ரங்கா தயாரித்து டைரக்ட் செய்த படம்.

தமிழிலும் ‘சிற்பியின் செல்வன்’ என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது. 1965 கோடையில் பிரபல பத்திரிகைகளில் ‘சிற்பியின் செல்வன்’ விளம்பரம் காணப்படுகிறது.

சரோவுடன் கல்யாண குமார், சித்தூர் வி. நாகையா ஆகியோர் நடித்தனர்.

‘அபிநய சரஸ்வதி சரோஜாதேவி’ என்று முதன் முதலில் டைட்டிலில் போடப்பட்ட படம் ’எங்க வீட்டுப் பிள்ளை’

சரோவுக்கும் ஆடல் கலையில் சிறந்த பயிற்சியும் தேர்ச்சியும் உண்டு. நவரச பாவனைகளுடன் சினிமா நடனத்தில் ஜொலி ஜொலித்திருக்கிறார்.

ஏறக்குறைய ஏழு நிமிடங்களுக்குக் குறையாமல் சரோ, திரையில் பங்கேற்ற நாட்டிய நாடகங்கள் சில உண்டு.

கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் ஜெமினி கணேசன் - சரோஜாதேவி ஜோடியாக நடித்த படம் வாழ்க்கை வாழ்வதற்கே.அதில் கே.வி. மகாதேவன் இசையில் கண்ணதாசனின் சங்க இலக்கியம் சொட்டும் வரிகளில் பி. சுசிலா- பி.பி. ஸ்ரீனிவாஸ் குரல்களில்

‘அவன் போருக்குப் போனான் - நான் போர்க் களமானேன்

அவன் வேல் கொண்டு சென்றான் - நான் விழிகளை இழந்தேன்’

கலங்கரை விளக்கம் படத்தில் எம்.எஸ். வி. இசையில் ஒலிக்கும் பாவேந்தர் பாரதிதாசனின் தமிழர் எழுச்சிப் பாடல் ‘சங்கே முழங்கு’.

அப்பாடல் காட்சிக்குக் கிடைத்த வெற்றியால், எம்.ஜி.ஆர்., தன் வண்ணப் படத்துக்கு சங்கே முழங்கு என டைட்டில் வைத்தார்.

1967 மே ரிலிஸ்- எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி தயாரித்து இயக்கிய அரச கட்டளை. எம்.ஜி.ஆர்.- சரோ இணைந்து நடித்த கடைசி படம். அதில் கே.வி. மகாதேவன் இசையில்

‘ஆடி வா ஆடிவா ஆடப்பிறந்தவளே ஆடி வா’ - (முத்துக் கூத்தன் பாடல்) சரோவின் ஆனந்தத் தாண்டவத்தையும், வாத்தியாரின் வாள் வீச்சையும் ஏழு நிமிடங்கள் ஒரு சேரத் திரையில் காட்டி ரசிகர்களைத் திக்குமுக்காடச் செய்தது.

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.