Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் வசமாகுமா காங்கேசன்துறை !

Featured Replies

  • தொடங்கியவர்

இது நடேஸ்வரா கல்லூரியின் மைதானம்.  2012 இல் பார்த்தபோது இராணுவத்தின் மைதானமாக இருந்தது. திட்டமிட்டு கிளிசீரியா மரங்களை நட்டு காடாக்கி உள்ளார்கள். 

20160703_145950_1.jpgimage upload no size limit

20160703_145953_1.jpgimage hosting gif

20160703_145958_1.jpgprint screen windows

20160703_150002_1.jpghow to take a screen shot

  • Replies 181
  • Views 20.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காங்கேசன்துறையில் மாற்றம் நிகழ்கிறது. யாரோ கோவிலை துப்பரவு செய்கிறார்கள்,  அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து பஸ்களும், மினிபஸ்களும் காங்கேசன்துறை புகையிரத நிலையம் வரை செல்கின்றது. 

13567220_1339673482712658_27061267585582

13592375_1339674402712566_97199448088898

13438934_1339675202712486_49342251844072

13528969_1339675612712445_87673443375066

13537720_1339676092712397_37863715604228

13615306_1339676606045679_82101786590324

13612387_1339676599379013_89649848798532

13439100_1339678056045534_28021530241856

13532904_1339679089378764_22312804699545

13557897_1341246372555369_63062676990588

13620103_1341246895888650_28323394694093

13607009_1341247132555293_54480356609741

13619891_1341247402555266_62829785377361

13620348_1341248192555187_22417104300046

13626493_1341248335888506_49248328971232

13439041_1341248645888475_69530742190277

 

  • தொடங்கியவர்

இன்று நடேஸ்வரா கல்லூரியின் மைதானம் இயந்திரங்களின் உதவியுடன் சிறு தடங்கல்களுடன் ஆரம்பமானது - நன்றி அரசாங்க அதிபர்.

13626361_1341293662550640_60577938020031

13567510_1341294425883897_53856551283346

13612277_1341293469217326_16251375792377

13626415_1341293669217306_19121908190071

13557693_1341294855883854_41718377430082

13614969_1341297189216954_53190738815810

13592195_1341297459216927_81682835286671

 

  • தொடங்கியவர்

ஒரு மாதத்திற்குள் மீள்குடியமர்வை முழுமையாக்குமாறு ஜனாதிபதியால் உத்தரவு- சாத்தியமில்லை அதிகாரிகள்

யாழ்ப்பாணத்தில் படையினர் வசமுள்ள காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையிலும் எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதிக்கு முன்னர் மீள்குடியமர்வை முழுமையாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்.மாவட்ட அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் உறுதியாக தெரிவித்தன.

எந்தெந்தெக் காணிகள் விடுவிக்கப்படும் என்று தெரியாத நிலையில் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மீள்குடியமர்வை எப்படிச்செல்வது எனத் தெரியாது அதிகாரிகள்திணறிப்போயுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் 9870 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரம் பேர் மீள்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர். 4400 ஏக்கர் காணி படையினர் வசமிருந்து விடுவிக்கப்படவேண்டும் இந்நிலையில் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்குள் மீள்குடியமர்வை முழுமையாக்குமாறு யாழில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சால் மயிலிட்டி தையிட்டியை உள்ளடக்கிய 1500 ஏக்கர் பகுதியை விடுவிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அண்மையில் முன்வைக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதல் கிடைக்காததால் இன்னமும் அங்கீகரிக்கவில்லை இதில் 800 ஏக்கரை விடுவிப்பதற்கு இணங்கும் படைத்தரப்பு எஞ்சிய நிலப்பரப்பை நிரந்தரமாக்கவே விடுவிக்கமுடியாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இந்த இழுபறியே அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்படாமைக்கான காரணம்.

காணிகளை விடுவிக்க இராணுவம் இவ்வாறு பின்னடித்துவரும் நிலையில் மீள்குடியேற்றத்தை ஜனாதிபதியின் கால எல்லைக்குள் நிறைவேற்ற முடியாது என்று பிரதேச மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Thanks--Jaffna Uthayan (07)

13615084_1675478435813079_20783338394198

படங்களுக்கு மிகவும் நன்றி ஜீவன்சிவா.  அந்த மண்ணை விட்டுப் பிரிந்து 26 வருடங்கள் ஓடி விட்டது.  மீண்டும் வந்து அந்த மண்ணைத் தரிசிக்க இந்தப் படங்கள் உந்துதலாக இருக்கிறது.   முகநூலிலும் பழைய மாணவர்கள் பலர் இந்தப் படங்களை இணைத்து ஆசையைத் தூண்டுகிறார்கள்.  அமெரிக்க மிசன் பாடசாலை அமைந்திருக்கும் பகுதி விடுவிக்கப்பட்டு விட்டதா?

  • தொடங்கியவர்
54 minutes ago, தமிழச்சி said:

படங்களுக்கு மிகவும் நன்றி ஜீவன்சிவா.  அந்த மண்ணை விட்டுப் பிரிந்து 26 வருடங்கள் ஓடி விட்டது.  மீண்டும் வந்து அந்த மண்ணைத் தரிசிக்க இந்தப் படங்கள் உந்துதலாக இருக்கிறது.   முகநூலிலும் பழைய மாணவர்கள் பலர் இந்தப் படங்களை இணைத்து ஆசையைத் தூண்டுகிறார்கள்.  அமெரிக்க மிசன் பாடசாலை அமைந்திருக்கும் பகுதி விடுவிக்கப்பட்டு விட்டதா?

ஆம் என்று அரசு சொல்கிறது, இல்லை என்று போலீசும் இராணுவமும் சொல்கின்றது. இதுதான் யாழ் தியேட்டர், அமெரிக்கன் மிஷன் பாடசாலை, முருகுப்பிள்ளையின் மில் போன்றவை இருந்த இடம்.

IMG_8157.jpg

Edited by ஜீவன் சிவா

2 hours ago, ஜீவன் சிவா said:

ஆம் என்று அரசு சொல்கிறது, இல்லை என்று போலீசும் இராணுவமும் சொல்கின்றது. இதுதான் யாழ் தியேட்டர், அமெரிக்கன் மிஷன் பாடசாலை, முருகுப்பிள்ளையின் மில் போன்றவை இருந்த இடம்.

IMG_8157.jpg

பச்சை போட்டது இந்த படத்துக்கு..

 ஜீவனின் இந்த பக்கம் வரபடாது.. இனி ...  இந்த படங்களை பார்க்க மனம் அங்க ஒருக்கா போய் வரத்தான்  சொல்லுது..:(

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட காணியை அடுத்தவன் பிடிச்சு வைச்சுக் கொண்டு அதைக் கொஞ்சம் கொஞ்சமா தாரதே.. அதை கொஞ்சம் கொஞ்சமா வாங்கிறதே.. இப்ப எங்கட வெற்றிகர அரசியலாப் போச்சுது. சுதந்திர நாடு கேட்ட மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா சொந்தக் காணியை விடுவிப்பது தான் இன்று தமிழர் அரசியல் என்று கொண்டு வந்து நிறுத்திட்டாங்கள் சிங்களவனும் ஹந்தியனும்..சர்வதேசமும். . **********

Edited by நியானி
தணிக்கை

  • தொடங்கியவர்
On 09/07/2016 at 4:04 PM, nedukkalapoovan said:

எங்கட காணியை அடுத்தவன் பிடிச்சு வைச்சுக் கொண்டு அதைக் கொஞ்சம் கொஞ்சமா தாரதே.. அதை கொஞ்சம் கொஞ்சமா வாங்கிறதே.. இப்ப எங்கட வெற்றிகர அரசியலாப் போச்சுது. சுதந்திர நாடு கேட்ட மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா சொந்தக் காணியை விடுவிப்பது தான் இன்று தமிழர் அரசியல் என்று கொண்டு வந்து நிறுத்திட்டாங்கள் சிங்களவனும் ஹந்தியனும்..சர்வதேசமும். *********

இது வீடு இழந்து, காணி இழந்து, தொழில் இழந்து, வாழ்வதற்கே ஆதாரமில்லாமல் இருக்கும் மக்கள் எப்படி தமது வாழ்வாதாரத்தை மறுபடியும் நிறுத்தப்போகிறார்கள் என்பதிற்கான ஒரு பதிவு. 

********** இங்கு வந்து இந்த மக்களுடன் சேர்ந்து போராடுங்கள். அதைவிடுத்து ஏஸீ அறைக்குள்ள இருந்து பல்லு புடுங்க வேண்டாம்.

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
On 09/07/2016 at 5:22 PM, ஜீவன் சிவா said:

இது வீடு இழந்து, காணி இழந்து, தொழில் இழந்து, வாழ்வதற்கே ஆதாரமில்லாமல் இருக்கும் மக்கள் எப்படி தமது வாழ்வாதாரத்தை மறுபடியும் நிறுத்தப்போகிறார்கள் என்பதிற்கான ஒரு பதிவு. 

**********

இங்கு வந்து இந்த மக்களுடன் சேர்ந்து போராடுங்கள். அதைவிடுத்து ஏஸீ அறைக்குள்ள இருந்து பல்லு புடுங்க வேண்டாம்.

ஏன் இதே புல்லை தமிழீழத்தில் எல்லாரும் சேர்ந்து போராடி சுதந்திரமாக புடுங்கி இருக்கலாமே. 

இப்படி சனத்தின்ர காணியை விடிவிக்கிறம் என்று மாசா மாசம் வெற்று ஏமாற்று அரசியல் செய்வதிலும்...

இந்தக் காணி விடிவிப்பு என்பது சுத்துமாத்து அரசியலே தவிர.. உண்மையில்.. ஆக்கிரமிப்பு.. இராணுவ வெளியேற்றம் என்பது நிகழ்த்தப்பட்டிருந்தால்.. எல்லாம் தானே விடுபட்டிருக்கும்.

1998 இல் கிளிநொச்சி.. 2000 ஆனையிறவு விடுவிக்கப்பட்ட போது யாரும் என்ர காணியை விடன்னு கெஞ்சும் அரசியல் செய்யவில்லை.

எம் மக்களின் சுதந்திர தாகத்தை அவர்களின் காணியை வைச்சே நீர்த்துப் போகச் செய்யலாம் என்று பலரும் விரும்புகின்றனர்.  **********

இந்தக் கருசணை.. விடுதலைப்புலிகள் பாதுகாப்பு வலயங்களை அகற்றி மக்களைக் குடியேற்றினால் தான் எனிப் பேச்சு என்ற போது இதே ஆட்கள் சொன்னது புலிகள் பேச்சைக் குழப்ப நிற்கினம் என்று.

இப்ப அதுவே எம்மவர் அரசியல்.. சமூகக் கருசணை என்று வழியுது. இந்தப் புல்லுப் புடுங்கள்.. படம் காட்டல் அரசியல் எல்லாம் எதுக்குன்னு மக்களுக்கு நல்லாவே தெரியும். tw_blush:

இது சனநாயகக் களம். மக்கள் கருத்தை கேட்க வேண்டியது எல்லோரினதும் கடமை. tw_blush:

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

***********

**********

எமது மக்களின் அரசியல் என்பது காணி விடிவிப்புக்கு அப்பாற்பட்டது. சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை அப்படியே பத்திரமாக வைச்சுக் கொண்டு.. காணியை விடிவிப்பதால் மட்டும் மக்கள் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ்ந்திட முடியும் என்ற சிந்தனையை வளர்ப்பதும் இங்கு நிகழ்கிறது.

சாலாவையில்.. ஒரு மாதத்துக்குள் அழிவுகள் எல்லாம் புனருத்தாரம் செய்யப்பட்டு.. இராணுவ ஆயுதக் களஞ்சியமும் இடமாறிப் போய்விட்டது. ஆனால் தமிழர் நிலத்தில்.. காணி விடிவிப்பு என்பதே அடுத்த 50 ஆண்டுகால அரசியலாக இருக்கும் போலத் தெரியுது.

***********

**********

Edited by நியானி
தணிக்கை

  • தொடங்கியவர்

இன்று எடுத்த படங்கள் - மக்கள் தங்கள் காணியின் எல்லைகளை நிர்மாணிக்க தொடங்கியுள்ளார்கள். சில புலம் பெயர்ந்தவர்களுக்கு இது அதிசயமா இருக்கலாம், ஆனால் இங்கு வீடின்றி வாழும் மக்களுக்கு?

On 09/07/2016 at 5:54 PM, nedukkalapoovan said:

***********

**********

எமது மக்களின் அரசியல் என்பது காணி விடிவிப்புக்கு அப்பாற்பட்டது. சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை அப்படியே பத்திரமாக வைச்சுக் கொண்டு.. காணியை விடிவிப்பதால் மட்டும் மக்கள் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ்ந்திட முடியும் என்ற சிந்தனையை வளர்ப்பதும் இங்கு நிகழ்கிறது.

சாலாவையில்.. ஒரு மாதத்துக்குள் அழிவுகள் எல்லாம் புனருத்தாரம் செய்யப்பட்டு.. இராணுவ ஆயுதக் களஞ்சியமும் இடமாறிப் போய்விட்டது. ஆனால் தமிழர் நிலத்தில்.. காணி விடிவிப்பு என்பதே அடுத்த 50 ஆண்டுகால அரசியலாக இருக்கும் போலத் தெரியுது.

***********

**********

*************

*************

 

இது அரசியல் களமல்ல எமது மண் சார்ந்தது. உங்களுக்கு அது புரியாத மண் மணம்.  *************

இன்று எடுத்த படங்கள் - மக்கள் தங்கள் காணியின் எல்லைகளை நிர்மாணிக்க தொடங்கியுள்ளார்கள். சில புலம் பெயர்ந்தவர்களுக்கு இது அதிசயமா இருக்கலாம், ஆனால் இங்கு வீடின்றி வாழும் மக்களுக்கு?
 

IMG_9713.jpg

IMG_9714.jpg

IMG_9715.jpg

IMG_9716.jpg

IMG_9718.jpg

IMG_9720.jpg

IMG_9724.jpg

IMG_9729.jpg


image upload with preview

Edited by நியானி
தணிக்கை

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் முதலாவது படத்தில் - ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. இரண்டாவது படம் அந்த கோவில் இருந்த காணி. 
நெடுக்ஸ் மூன்றாவது படத்தில் - ஒரு மூன்றுமாடி கட்டிடம் இருந்தது, நாலாவது படம் அது இருந்த காணி.
நெடுக்ஸ் கடைசி படம் என்னதெரியுமா - இங்கு ஒரு தியேட்டரே இருந்தது.

*************

*************

 

 

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

அதேன் சாலாவையில் இராணுவம் சீரழிச்சதை இராணுவம் புனருத்தாரனம் செய்யனுன்னு துடிச்ச மைத்திரி அரசு.. தமிழர் நிலத்தில் தமிழர்களின் உடமைகளை.. காணிகளை சீரழிச்சதை புனருத்தாரனம் செய்து வழங்கனுன்னு நினைக்கல்ல... மக்கள் தான் அதைச் செய்யனுமாம்.. துண்டு துண்டா காணிகளை இராணுவ- அரசியல் தேவைகளுக்கு ஏற்ப விடிவிப்பினமாம்.. மக்கள் அதில் தாங்கள் தங்களின் முதுகை தட்டி சந்தோசிக்கனுமாம்.. அப்படியே வீட்டையும் கட்டிக்கனுமாம். 

தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் என்பது இழுத்தடிக்கப்படப் பட.. நாயாறு போல் தமிழர் நிலம் சிங்கள மயமாவது கண்டுக்கப்படாத நிலை தான் நிலவுகிறது. சிங்கள இராணுவ இருப்பின் கீழ் தமிழ் மக்கள் சுதந்திர புருசர்களாக வாழ முடியுமா என்ற கேள்விக்குறிக்கு மத்தியில்.. தமிழர் நிலத்தை தமிழரே புனருத்தாரனமும் செய்யனும்.. அழிவை மட்டும் சிங்கள அரசும் படைகளும் செய்யும் என்று சிலர் இங்கும் விதி சமைக்க முயல்கிறார்கள்.

இத்தனைக்கும் வெளிநாடுகளில் போரின் அழிவைக் காட்டித்தான் சிங்கள அரசின் பிச்சை எடுப்பு நடக்குது. அதெல்லாம் எங்க போகுதோ...?! அதைக் கேட்க ஒரு மனுசரில்ல.. வறுமையில் உள்ள மக்களை இன்னும் இன்னும் வதைப்பதில்.. காணி  விடிவிப்பு நடக்காம் என்று படம் காட்டினம் சிலர். 

கேள்வி கேட்க ஆட்களே இல்லை என்ற துணிவு எல்லாருக்கும் சிங்களவனுக்கும் எம்மவர் போலி மனிதாபிமானிகளுக்கும். :rolleyes:

15 minutes ago, ஜீவன் சிவா said:

நெடுக்ஸ் முதலாவது படத்தில் - ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. இரண்டாவது படம் அந்த கோவில் இருந்த காணி. 
நெடுக்ஸ் மூன்றாவது படத்தில் - ஒரு மூன்றுமாடி கட்டிடம் இருந்தது, நாலாவது படம் அது இருந்த காணி.
நெடுக்ஸ் கடைசி படம் என்னதெரியுமா - இங்கு ஒரு தியேட்டரே இருந்தது.

இதே ஒரு புத்தகோவிலாக இருந்திருந்தால்..

இப்போ சர்வதேச ஊடகங்களை எல்லாம் கூட்டி புலிகளால் அழித்தொழிக்கப்பட்ட சிங்கள மக்களின் அடையாளங்கள்.. இனச்சுத்திகரிப்பு என்று சிங்களம்  ஒரு பெரிய படமே காட்டி இருக்கும்.

ஆனால்.. பக்கத்தில்.. ஒரு இந்து அரசு இருக்குது.. அதுக்குக் கூட இந்த அழிவுகளை இனங்காட்ட எம்மவரால் முடியவில்லை. அதன் மனச்சாட்சியை வேண்டாம்.. இத்தனை கோடி இந்துக்களின் மனச்சாட்சியை.. இந்துக் கோவில்கள் மீது சிங்கள பெளத்த இராணுவம் காட்டிய வெறுப்பு வெறித்தனத்தைக் கூட இனங்காட்டாமல் தான்.. எம்மவர்கள்.. தம்மையே தாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

விளைவு.. சிங்களவனும் அவனின் கொடுமைகளும்.. பயங்கரவாத அழிப்பாக.. தமிழரின் உரிமையும் நிலமும் அதற்கான போராட்டமும் அடாத்தும் பயங்கரவாதமும் ஆகிறது.

புத்தர் இந்தியாவில் இந்துக்களின் வீடுகளில் சயனம் செய்ய.. இங்கு இந்துக் கடவுள்களும் கோவில்களும் சிங்கள பெளத்த இராணுவத்தால் அழிக்கப்படுவது அடையாளம் இன்றி மறைக்கப்படுகுது. வெளிநாடுகளில் இந்திய இந்துக்கள் எம்மவர் கோவிலுக்கு வருவதை வரவேற்கினமாம். :rolleyes:

கேட்டால்.. புனருத்தாரனம்..! புனருத்தாரனம் செய்வதும்.. மக்கள் குடியேறுவதும் எவ்வளவு அவசியமோ.. அதே அளவுக்கு இவற்றை புனருத்தாரனம் செய்ய வேண்டிய நிலைக்கு அழித்தவனை அவனின் கொடுஞ்செயல்களை உலகின் மனச்சாட்சி முன் நிறுத்துவதும் அவசியம். யார் செய்வது...??!

இவற்றை செய்தால்.. புலிகள் பயங்கரவாதி ஆக முடியாதே என்ற வருத்தத்தில் எம்மவரிலும் ஆக்கள் இருக்கினம். :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

*************

*************

 

 

இதுக்குபிறகும் நான் யாழில் இருந்தால் நான் நெடுக்ஸை விட கேவலமாக மதிக்க படுவேன் . தொலைந்து போகின்றேன்

யாழின் வாசகனாக தொடர்ந்தும் இருப்பேன். கள உறவுகள் இங்கு வந்தால் தாராளமாக தனிமடலில் தொடர்பு கொள்ளலாம் - சந்திப்பேன்.

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி ஜீவன் உங்கள் பதிவுகளால் அந்த மண்ணின் மைந்தர்கள் ஆனந்தப்படுவது ஒன்றே போதும்.உங்கள் உழைப்பிற்க்கு.தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நீங்கள் படம் போடுவது பிரச்சனை இல்லை. ஆனால் அந்த மக்களின் மனங்களுக்குள் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான கேள்விகளை மூடி மறைச்சு.. காணி விடிவிப்பு என்பதே எமது மக்களின் அரசியல் என்று காட்டப்படுவதற்கு எதிராகவும் நாம் குரல்கொடுக்க வேண்டி இருக்குது. ஏனெனில் யாழில் காணி விடிவுப்பு நடக்கும் அதே சமயத்தில் கிழக்கிலும் வன்னியிலும் காணிகள் சிங்கள பெளத்த புரங்களாக சொந்த தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்படுக் கொண்டிருக்கின்றன. ஏன் யாழிலும் நாவற்குழி மண்டைதீவு பறிபோய் கொண்டிருக்கிறது. அந்த மக்கள் சொந்தக் காணிகளை ஊர்களை நிரந்தரமாக இழந்து கொண்டிருக்கிறார்கள். பெளத்த ஆலயங்களாகிக் கொண்டிருக்கின்றன எம்மவர் நிலங்கள்.

மேலும்.. யாழில் சிங்கள பெளத்த அரச படைகள் நடத்திய திட்டமிட்ட இன அழிப்பின் அடையாளங்களும்.. எம்மவர்களாலும் விளங்காத்தனமாக வெளி உலக அறிவுக்கு எட்டாத வகைக்கு மூடிமறைக்கப்பட்டு.. வருகின்றன. அவை வெளி உலகிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.. இயன்ற அளவு. 

அழிவுகளை ஊடகங்களின் ஊடாக பதிவு செய்வதும்.. ஏதிலியான மக்களிடம் கையளிக்கப்படும் காணிகளின் நிலை என்ன என்பதையும் வெளி உலகிற்கு காட்ட வேண்டும். அந்த மக்களுக்காக வெளிநாடுகள் அள்ளி வழங்கும் பணத்துக்கு என்னாகிறது என்ற கேள்வியை அவர்களே சிங்கள அரசைக் கேட்கும் நிலையையும் ஏற்படுத்த வேண்டும்.

இவற்றை எல்லாம் இலேசாகக் கடக்க நாமே சிங்களவனுக்கு உதவி நிற்பதை இட்டுத்தான் எங்கள் ஆதங்கம் வெளியாகிறது.

*************

 

Edited by நியானி
தணிக்கை

ஜீவன் சிவா, நான் நீங்கள் இணைக்கும் படங்களை தொடர்ந்து பார்த்தும், பகிர்ந்தும் வருகின்றேன். உங்கள் பதிவுகள் தொடர வேண்டும், நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

You know, where there are human beings naturally there will be problems. Our viewpoints are different. My upbringing and my perspectives are different, and your perspectives are different. So definitely there would be conflicts and difference of opinions. This is the reality. The issue is not about the existence of conflicts but how do we deal with these conflicts? How do we respect each other's opinions? Whatever your understanding, whatever your perspectives all of them are based on your experience and I should understand and respect that. We need not fight over that. May be we can agree on certain things, but we can also honourably disagree on other things.

இதைச் சொன்னது நாங்களில்ல. பேராசிரியர் அரியதுரை. இளவயதில் இலங்கையில் பல்கலை ஒன்றுக்கு துணை வேந்தராக உள்ளவர்.

ஜீவன் சிவா போன்றவர்களின் வயதை ஒத்தவர். கண்டியில் யாழ்ப்பாணப் பெற்றோருக்குப் பிறந்து.. 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டு.. கண்டியிலும் இந்தியாவிலும் கல்வி கற்று.. பின்.. இங்கிலாந்தில் டாக்டர் பட்டம் பெற்று.. நாட்டு நிலைமையால்.. சகோதரர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு சென்று வாழ்ந்த சூழலிலும்.... தனக்கு வெளிநாட்டில் வாழக் கிடைத்த வாய்ப்பையும் துறந்து.. நாடு திரும்பி.. இன்று இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக.. (பேராசிரியர் துரைராஜாவும் இங்கு பணிபுணிந்திருக்கிறார்) உள்ளவர். அதுவும் ஒரு போட்டி மிக்க சூழலில்.. பிரச்சனைகளுக்குரிய சூழலில் தோன்றி. 

1

3

எம்மவர் பலர் கற்றுக் கொள்ள வேண்டியதை மேலே சொல்லி உள்ளார். tw_blush: (தினக்குரல் கலண்டரை கொழுவி வைத்துள்ளார்.)

இவர் பற்றிய அறிமுகம் தந்த Linkedin.com க்கு நன்றி.

https://lk.linkedin.com/in/samuel-anbahan-ariadurai-18641928

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கை அரசாங்கத்தால் ஒரு அடி நிலம் கூட  விடுவிக்கப்படுவது மக்களின் நலனுக்காக நாம் அடித்துக் கொள்வதற்காக அல்ல இதுவே வழங்கப்படா விட்டால் நாம் என்ன செய்வோம் என்பதே எனது கேள்வி நண்பர்களுக்கு

போரில்  ஒரு அடி விடுவது எடுப்பது என்பது கனபேருக்கு தெரியும் அதை இங்கே விளங்கப்படுத்த தேவை இல்லை என நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்


ஜீவன் (சிவா) நீங்கள் உண்மையிலேயே ஒரு அர்த்தமுள்ள ஜீவனாகாவே இருக்கிறீர்கள் பாராட்டுகள். நாங்களென்னவோ கணினியோடு........

 

 உங்களது முயற்சி வலுவடையவும் வெற்றிபெறவும் வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நொச்சி அண்ணே சொல்லவாறீங்க.. ஒரு கமராவோடு போய் படம் எடுத்து யாழில போட்டால்.. சிங்களவன் பிடிச்ச ஊர்களை விட்டிட்டுவான் என்றா...??! இப்படியான அபரிமிதமான தோற்றப்பாடுகள் தான் எம் மக்களை சொந்த நிலத்தில் ஒரு துண்டுக் காணிக்கு கெஞ்சும்.. ஏதிலிகளாக்கி உள்ளது. 

விடுவிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வும் சிங்களவனின்.. சிங்கள இராணுவத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அரசியல் தேவைக்கு சர்வதேசத்தில் சொறீலங்காவின் தேவை திருப்திப்படுத்தல் கருதித்தான் நடக்கே தவிர... தமிழ் மக்கள் மீதான கருசணையில் அல்ல. இதனை மக்கள் உணர்கிறார்கள். வெளிநாடுகளில் சொகுசா வாழ்ந்திட்டு இப்ப ஊருக்குப் போனவை தான் அதிகம் படம் காட்டினம். tw_blush:

கொஞ்ச நாள் சம்பூரை வைச்சு படம் காட்டிச்சினம்.. இப்ப அந்த மக்களின் கதி என்னென்னு யாரும் கணக்கிலும் எடுப்பதில்லை. இதே நாளை இங்கு.... இதில் எல்லாம் அதிகம் இருப்பது அரசியலும்.. விளம்பரமும் தான். மக்கள் நலன் என்ற போர்வை மட்டும் தான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
On 2.7.2016 at 3:26 PM, ஜீவன் சிவா said:

 

நடேஸ்வரா கல்லூரியின் மைதானத்தின் பின்புறமாக உள்ள ஒரு கோவில் இது. இங்கு எனது பசுமையான நினைவுகள் அதிகம். நகரத்துக்குள் ஒரு காடு அந்தக் காட்டுக்குள்ளே ஒரு கோவில். இந்த கோவிலையும், இனிமேல் இது எப்படி மாறும் என்பதனையும் காங்கேசன்துறையின் வளர்ச்சியில் ஒரு உதாரணமாக காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.


ஜீவன் (சிவா) நீங்கள் உண்மையிலேயே ஒரு அர்த்தமுள்ள ஜீவனாகாவே இருக்கிறீர்கள் பாராட்டுகள். நாங்களென்னவோ கணினியோடு........

 

 உங்களது முயற்சி வலுவடையவும் வெற்றிபெறவும் வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து உங்களீன் பதிவுகனளயும் படங்கனளயும் இனணயுங்கள் ஜீவன்...எனக்கும் இது பிரயோசனமாய் இருக்குது....!

ஜீவன், நீங்கள் இங்கு தொடர்ந்து உங்கள் ஊரின் பதிவுகளை ஆவணபடுத்தவேண்டும். இது பலரின் ஆசை..

உங்களது முயற்சி வலுவடையவும் வெற்றிபெறவும் வாழ்த்துகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.