Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் வசமாகுமா காங்கேசன்துறை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

தந்தை செல்வநாயகம் தொடக்கம் இன்றைய பசிக்காக போராடியிருந்தால் இத்தனை அழிவுகளும் இடம்பெயர்வுகளும் புலம்பெயர்வுகளும் வந்திருக்கவே மாட்டாது.

தூரநோக்குகள் இனிவரும் காலங்களுக்கு அதிலும் ஈழத்தமிழர்களுக்கு ஒவ்வாமையாக மாறிவிட்டது.

வந்தமாம் சாப்பிட்டமாம் போனமாம்.:cool:

இங்கே இன்றுள்ள நிலைமையை சொல்ல வந்தேன்  யுத்தம் முடிவடைந்து நாம் தூர நோக்கிகொண்டுதான் இருக்கிறோம் ஆனால் தெரிகிறது  ஆனால் ஒன்றும் இல்லை tw_blush:

  • Replies 181
  • Views 20.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
15 hours ago, குமாரசாமி said:

தந்தை செல்வநாயகம் தொடக்கம் இன்றைய பசிக்காக போராடியிருந்தால் இத்தனை அழிவுகளும் இடம்பெயர்வுகளும் புலம்பெயர்வுகளும் வந்திருக்கவே மாட்டாது.

தூரநோக்குகள் இனிவரும் காலங்களுக்கு அதிலும் ஈழத்தமிழர்களுக்கு ஒவ்வாமையாக மாறிவிட்டது.

வந்தமாம் சாப்பிட்டமாம் போனமாம்.:cool:

இடம்பெயர்ந்த மக்களுக்கு இருக்க முதலில் ஒரு இடம் வேண்டும். மார்கழி ஆரம்பத்தில், கார்த்திகை முடிவில் பெய்த மழையில் + காற்றில் அடித்துக் கொண்டுபோன கூரை தகடு முகாமில் விரும்பினால் நீங்கள் இருங்கள். ஆனால் அவர்களின் இருப்பிடம் முதலில் உறுதிப்படுத்தப் படவேண்டும். நீங்கள் கடந்த 25 வருடமா இதுக்குள்ளயா இருந்தீர்கள். உங்களால் ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள். இல்லை ...... 

On 1/2/2017 at 4:01 AM, குமாரசாமி said:

என்னை பொறுத்தவரையில் பந்தாவுக்கு பொருத்து வீடுகளில் வசிப்பதை விட குடிசை கொட்டில்களில் வாழலாம்.

விட்டால் குடுமி அடிச்சால் மொட்டை என்ற கருத்து இனியும் எடுபடாது. மக்களுக்கு தெரியாமலா 65000 வீடுகளுக்கு 97000 பேர் விண்ணப்பித்தார்கள். நல்ல வேலை உங்களை போன்ற புலம்பெயர்ந்தவர்கள் கொட்டிலிலும் குடிசையில் வாழலாம் என்றது அவர்களுக்கு தெரியாமல் போச்சுது.

இப்படித்தான் நல்லிணக்கபுரத்தில் (மாவிட்டபுரம் அருகில்) மக்களுக்கு இராணுவம் வீடுகளை கட்டியபோது குய்யோ முறையோ என்று கத்தினீங்கள். இப்ப அங்கு நூறுக்கும் மேலான குடும்பங்கள் மழை, வெய்யில் இல்லாது நின்மதியாக இருக்கிறார்களே.

உங்களுக்கு இப்பவும் இதை வைத்தாவது அரசியல் பண்ணலாமா என்ற நப்பாசை. 

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். 

21 hours ago, ஜீவன் சிவா said:

அதுசரி பொருத்து வீடு என்றால் என்ன என்று விளக்கம் தரமுடியுமா?

இன்னமும் எனது கேள்விக்கு உங்கள் அனுபவத்தை வைத்து விடை வரவேயில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

12

பொருத்து வீடுகளுக்கான விண்ணப்பங்களை நிராகரித்து, கல் வீடுகள் தான் வேண்டுமென்று, அமைச்சின் அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவிக்குமாறு, வீட்டுத்தேவையுடைய மக்களிடம், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பொருத்து இரும்பு வீட்டுத்திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும், உயர்மட்ட அரசியல் தலைவர்களும், எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் மாகாண சபைகளிலும், பொருத்து வீட்டுத் திட்டத்தை எதிர்த்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில், எனது தலைமையில் உள்ள மீள்குடியேற்ற அமைச்சு உள்ளிட்ட மேற்பார்வைக்குழுவிலும், இத்திட்டம் வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில், 8 இலட்சம் வீட்டுத்திட்டங்கள், வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால், கல்லில்லை, மணலில்லை, நீரில்லை என்ற அற்ப காரணங்களைக் காட்டி, மக்களை ஏமாற்றுகின்றனர்.

போரினால் அழிந்து போயுள்ள வடக்கு – கிழக்குப் பிரதேசங்களுக்கு, கல், சீமெந்தினால் கட்டப்பட்ட ஒரு இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் தேவை” என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilnaatham.org/?p=53669

  • தொடங்கியவர்
On 1/4/2017 at 0:10 PM, nunavilan said:

 

பொருத்து வீடுகளுக்கான விண்ணப்பங்களை நிராகரித்து, கல் வீடுகள் தான் வேண்டுமென்று, அமைச்சின் அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவிக்குமாறு, வீட்டுத்தேவையுடைய மக்களிடம், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பொருத்து இரும்பு வீட்டுத்திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும், உயர்மட்ட அரசியல் தலைவர்களும், எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் மாகாண சபைகளிலும், பொருத்து வீட்டுத் திட்டத்தை எதிர்த்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில், எனது தலைமையில் உள்ள மீள்குடியேற்ற அமைச்சு உள்ளிட்ட மேற்பார்வைக்குழுவிலும், இத்திட்டம் வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில், 8 இலட்சம் வீட்டுத்திட்டங்கள், வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால், கல்லில்லை, மணலில்லை, நீரில்லை என்ற அற்ப காரணங்களைக் காட்டி, மக்களை ஏமாற்றுகின்றனர்.

போரினால் அழிந்து போயுள்ள வடக்கு – கிழக்குப் பிரதேசங்களுக்கு, கல், சீமெந்தினால் கட்டப்பட்ட ஒரு இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் தேவை” என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilnaatham.org/?p=53669

எனது மக்கள் மழையிலும் வெய்யிலிலும் 25 வருடங்கள் வாடியது போதும். மாவை சொன்னால் அவர்கள் கஷ்டப்படணுமா? மாவை எப்ப கடைசியாக முகாமிற்கு போனார்? அவர்களில் பலர் பொருத்து வீட்டிற்கு தயார் என்பது உங்களுக்கு புரியாதது என் தப்பில்லை.

2015 இல் மீள்குடியேற்றத்துக்கு 577 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 15 734 மில்லியன் ரூபாயில் 3 563 மில்லியன் மட்டுமே செலவானது யாழ் மாவட்டத்தில் - மிகுதி குப்பையில்.  2016 விபரமும் சீக்கிரம் வரும். 2015 இல் திருப்பி அனுப்பப்பட்ட பணத்தில் - அதாவது 12 ஆயிரம் மில்லியனில் எத்தனை வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம்?  

ஒரு வீடு 25 லட்ஷம் என்றாலும் 4800  வீடுகள். 

ஏன் எதற்கு இது நடக்குது என்று கேட்க மாட்டீர்கள். ஆனால் நான் பொருத்து வீடாவது மக்களுக்கு கிடைக்கட்டுமே என்று எழுதினால் அங்கு வசதியாக வாழும் உங்களுக்கு கசக்குதா?

இன்னொருத்தர் நிறைய அனுபவம் இருக்கு எண்டார் - பொருத்து வீடு என்றால் என்ன என்று கேட்டேன், ஆளையே காணோம்.

உங்கள் இருப்பிற்கு அரசியல் வேணும் - எனக்கு வேண்டாம்.

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

இந்த திரி அரசியலுக்கப்பால் மக்கள் நலன் விரும்பிகளுக்காக தொடரும்.
 

காங்கேசன்துறையில் தனியார் காணிகளுக்குள் தள்ளி விடப்பட்ட புகையிரத வண்டிகள். இது கல்லூரி வீதியின் பருத்தித்துறை வீதியின் நுழைவாசலையும் தடை செய்திருந்தது. உள்ளிருந்த பகுதிகளில் சில விடப்பட்டுள்ளன. பலவீடுகளில் இன்னமும் இராணுவமும் முட்கம்பி வேலிகளும்தான்.

Image may contain: outdoor

 

Image may contain: train and outdoor

 

Image may contain: sky, tree, plant, bridge, outdoor and nature

 

Image may contain: tree, plant, outdoor and nature

 

Image may contain: plant, sky, tree, bridge, outdoor and nature

 

Image may contain: tree, plant, house and outdoor

 

Image may contain: plant, tree, sky, outdoor and nature

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

ஆனாலும் இங்கு பலருக்கு கவலையான செய்தி என்னெவென்றால் நேற்று முதல் அவை அகற்றப்படுகின்றன என்பது. ஆனால் காங்கேசன்துறை மக்களுக்கு சந்தோசமான ஒரு செய்தி 

இன்றைய நிலை படங்களில்:

ஆனாலும் பலருக்கு இதை அகற்ற வந்த இன்ஜினின் பெயர் சிகிரியா என்பது மட்டும்தான் முதலில் முழுசா புரியும்.

Image may contain: train and outdoor

 

Image may contain: sky and outdoor

 

 

Image may contain: sky and outdoor

 

Image may contain: 3 people, outdoor

 

Image may contain: one or more people and outdoor

 

Image may contain: one or more people, train and outdoor

 

Image may contain: train, sky and outdoor

 

Image may contain: sky and outdoor

 

Image may contain: sky and outdoor

 

Image may contain: sky and outdoor

 

Image may contain: sky, cloud and outdoor

 

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

 தங்கள் பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி ஜீவன்....!

  • கருத்துக்கள உறவுகள்

"மக்கள் வசமாகுமா காங்கேசன்துறை !" தலைப்பில்  உள்ள  பதிவுகளும், விவாதங்களும்....
மிக ஆரோக்கியமாக சென்று கொண்டுள்ளன.... ஜீவன் சிவா. :)

"இரும்பு அடிக்கிற, இடத்தில்... எலிக்கு என்ன வேலை? என்பதால், :grin:
இதில் நான் புகுந்து... கருத்துக் கூறாமல் இருப்பது, இன்னும் நல்லது.. என்பதால், மௌனமாக இருக்கின்றேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

2015 இல் மீள்குடியேற்றத்துக்கு 577 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 15 734 மில்லியன் ரூபாயில் 3 563 மில்லியன் மட்டுமே செலவானது யாழ் மாவட்டத்தில் - மிகுதி குப்பையில்.

இதேன் இந்த காசு திரும்பி போகிறது ? இங்கு வந்து கூட்டம் வைப்பவர்கள்  அடிக்கடி சொல்கின்றனர் ......................கேட்டால் ஒவ்வொரு பதில்வருகிறது 

 

Edited by பெருமாள்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

மறுபடியும் தற்காலிகமாவது உயிர்த்தெழும்  ஊறணி அந்தோனியார்

ஐயோ வேண்டாம் என்பவர்கள் இதை பார்த்து தயவு செய்து 
இதயநோய்க்கு ஆளாதீர்கள்.

Image may contain: sky, tree, plant, outdoor and nature

Image may contain: one or more people, plant, sky, tree and outdoor

Image may contain: 1 person, standing and outdoor

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலிக கோவிலும் வீச்சு வளையும் 29.01.2017

29012017 7

ஊறணி புனித அந்தோனியார் ஆலய வளவில்  15.01.2017 குழாய்க்கிணறு அமைக்கப்பட்டது

well.jpg

 

தற்காலிக கோவில் 29.01.2017

on .

29012017 6ஏற்கனவே திட்டமிட்டவாறு நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை ( 31.01.2017) பிற்பகல் 3.30 மணிக்கு ஊறணி தற்காலிக ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 29012017 6

 

29012017 7

29012017 8

29012017 9

29012017 10

http://urany.com/index.php/2012-05-14-21-49-21/after04112016/483-29-01-2017

  • தொடங்கியவர்
7 minutes ago, nunavilan said:

ஏற்கனவே திட்டமிட்டவாறு நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை ( 31.01.2017) பிற்பகல் 3.30 மணிக்கு ஊறணி தற்காலிக ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுக்கு நன்றி

 

உங்கள் படங்களில் ஐந்தாவது + ஆறாவது படங்கள்தான் உண்மையில் கோவில் இருந்த இடம்  
இன்னொரு விடயம் கோவிலின் இருபகுதியிலும் இராணுவ வேலிகள்.

மதம் + சாதி வேற்றுமையற்று நாங்கள் கூடிய இடம் இது - முன்னால் முழுவதும் மணல். இப்போது அதனை காணவில்லையே.
 

Edited by ஜீவன் சிவா

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

காங்கேசன்துறை தலையிட்டி வைரவர் கோவிலினுள் செல்லும் சந்தர்ப்பம் இன்று கிடைத்தது. இங்குள்ள கோவில்களில் குறைவாக சேதப்படுத்தப்பட்ட கோவில் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த கோவில் இலங்கையில் கருங்கற்களினால் அமைக்கப்பட்ட கற்பககிருகம் + கோபுரத்தை  கொண்ட ஒரேயொரு வைரவர் கோவில் என்று நினைக்கின்றேன்.

வழமையாக நந்தி இருக்குமிடத்தில் வைரவரின் நாய் ஒன்று உள்ளது. இது இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகளினால் ஒரே கல்லில் எழுபதுகளின் ஆரம்பத்தில் செதுக்கப்பட்டது. இந்த நாயின் வாய்க்குள் பற்களுக்கிடையே ஒரு பந்து உள்ளது. அந்த பந்தை விரலினால் நாயின் வாய்க்குள் தொண்டைவரை முழுமையாக உருட்டலாம் - ஆனால் வெளியே வராது.

நாயின் ஒரு பக்க வேட்டைப் பல்லும், நீண்டு தொங்கிய நாக்கில் பாதியும் அழிக்கப்பட்டாலும் இன்னமும் அந்த பந்து வாய்க்குள் இப்பவும் பத்திரமாகஉருளுது. சிற்பிக்கு ஒரு சலாம்.
 

Image may contain: plant and outdoor

 

No automatic alt text available.

Edited by ஜீவன் சிவா

  • 1 month later...
  • தொடங்கியவர்

நேற்று முன்தினம் காங்கேசன்துறை ஊரணி பகுதியில் விடுவிக்கப்பட்ட இடத்தில் இருந்து...


வேலிகள் முழுமையாக அகற்றப்படாவிடினும் சவுந்தரநாயகம் டீச்சர் வீட்டடியில் இருந்து கே வி டீ வீடுவரையான காணிகள் விடுவிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது பருத்தித்துறை வீதியில் இருந்து கடற்கரை வரையான காணிகள் விடுவிக்கப்பட்டன.

IMG_1315.jpg

 

IMG_1317.jpg

 

IMG_1318.jpg

 

IMG_1319.jpg

 

IMG_1321.jpg

 

IMG_1322.jpg

 

IMG_1323.jpg

 

IMG_1324.jpg

 

IMG_1325.jpg

 

IMG_1326.jpg


 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பார்த்த இடங்க்ள் அந்த வீடும் தானே சரியாக பெண்கள் ராணுவ முகாம் இருந்த பகுதி தானே இது 

  • தொடங்கியவர்
2 hours ago, முனிவர் ஜீ said:

நாம் பார்த்த இடங்க்ள் அந்த வீடும் தானே சரியாக பெண்கள் ராணுவ முகாம் இருந்த பகுதி தானே இது 

உண்மைதான் முனிவர்

மீன்பிடிக்க என்று விடப்பட்ட கரையோரத்தை பார்த்தோமல்லவா - இப்போது வீதிக்கும் கரையோரத்துக்கும் இடைப்பட்ட இடமும் விடப்பட்டுள்ளது.

ஆனாலும் முனிவர் பெண் இராணுவ முகாமை மட்டும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார். அது வீதியின் மற்றப்பக்கம். நீங்கள் அடுத்தமுறை வரும்போதும் சிலவேளை இருக்கலாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

உண்மைதான் முனிவர்

மீன்பிடிக்க என்று விடப்பட்ட கரையோரத்தை பார்த்தோமல்லவா - இப்போது வீதிக்கும் கரையோரத்துக்கும் இடைப்பட்ட இடமும் விடப்பட்டுள்ளது.

ஆனாலும் முனிவர் பெண் இராணுவ முகாமை மட்டும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார். அது வீதியின் மற்றப்பக்கம். நீங்கள் அடுத்தமுறை வரும்போதும் சிலவேளை இருக்கலாம். :grin:

மறக்க இயலாத இடம் அல்லவோ  அது தான் நினைவில் வந்தது :104_point_left:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

Picture

ஊர் சேர்வதற்கான ஆயத்தங்களில் ஒரு தலைமுறை கடந்திருக்கிறோம்.

ஐம்பது மைல் ஐநூறு மைல் என ஐம்பதினாயிரம் மைல் தாண்டியும் ஊர் சேர்வதற்கான ஆயத்தங்கள் களைகட்டுகிறது.

 
திறவுகோல்கள் எம்மிடமுள்ளது கதவுகளைக் காணவில்லை, கதவுகளுடன் வீடுகளும் வீடுகளுடன் எம் ஊரும் களவாடப்பட்டிருக்கிறது.

தன் இரையை நின்று நிதானமாக மென்று விழுங்கும் மலைப்பாம்பென காலம் எம்மை விழுங்கிக் கொண்டிருப்பினும் ஊர் சேர்வதற்கான ஆயத்தங்கள் தொடர்கின்றன.

ஊர் சேர்வதற்கான கனவுகளுடன் உலகை விட்டுச் சென்ற ஆன்மாக்களின் குரல்களில் இன்னமும் அந்த ஆதங்கங்கள் நிறைந்திருக்கின்றன.

நறுமணத் தைலங்கள் நாசி அறைந்தாலும் காற்று கவ்வி வரும் கடல் வாசம் தேடும் மனம்.

தேசங்கள் திரிந்தாலும் தேகங்கள் களைத்தாலும் தேன்சிட்டுக்கள் பாடும் ஊர் சேர்வதற்கான ஆயத்தங்கள் விரைவுபடுகிறது.
 
  • 2 months later...
  • தொடங்கியவர்

காங்கேசன்துறையில் college road க்கு மேலாக நேற்று அமைக்கப்பட்டு வரும் புகையிரதபாதை. இனி college road க்கு நேரான தொடர்பு பருத்தித்துறை வீதிக்கு இருக்குமென்பது சந்தேகமே. இனிமேல் அருகே இருந்த running bungalow வினைச் சுற்றியே வரவேண்டி இருக்குமாம். அதுவும் 11 அடி பாதையில். ஒரு சந்ததி காங்கேசன்துறையை மறந்துவிட்ட நிலையில் எந்த வீதி எப்படி இருந்தது என்பதுகூட பல அரச அலுவலகர்களுக்கு மறந்து போனதும் இயல்பானதே. ஆனாலும் தெரிந்தவர்களிடமாவது கேட்டிருக்கலாம் என்பது எனது அங்கலாய்ப்பு.

20170709_104027.jpg

20170709_104111.jpg

20170709_104141.jpg

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

மயிலிட்டியில் சென்ற வாரம் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கண்ணகி அம்மன் கோவில் + மீன்பிடி துறைமுகம்.

20170709_102428.jpg

20170709_102439.jpg

20170709_102529.jpg

20170709_102625.jpg

20170709_102630.jpg

20170709_102731.jpg

 

  • 6 months later...

ஓர் மகிழ்ச்சியான செய்தி; எமது குருநாதசுவாமி கோயில் விடுவிக்கப்பட்டு உள்ளது. ஞானி அன்ரி அங்கு சென்று கற்பூரம் கொளுத்தி வழிபாடு செய்துவிட்டு வந்ததாக தெரிவித்து உள்ளார். இன்னும் எமது வீடுள்ளபகுதி விடப்படவில்லையென்றே அறியமுடிகின்றது. குருவீதியால் கோயிலுக்கு செல்லமுடியாதாம். கல்லூரி வீதியால் வேறு ஓர் பகுதிக்கால் சுற்றி சென்று கோயில் பகுதியை அடைந்தார்களாம். கோயிலை சுற்றி கம்பிவேலி போடப்பட்டுள்ளது என்று ஊகிக்கின்றேன். கோயில் இடிக்கப்பட்டுள்ளது, அரசமரத்துக்கு அருகில் உள்ள நாகதம்பிராண் சிறுபகுதிமட்டும் உடைக்கப்படவில்லையாம். இவ்வாறே அருகில் உள்ள மடமும் உடைக்கப்படவில்லை, மிகுதி தரைமட்டம். கோயிலை புனருத்தாரணம் செய்ய அரசாங்கம் சிறு உதவித்தொகை கொடுக்கும் என்று அறியமுடிகின்றது. குருநாதர் பிரதம விக்கிரகம் தற்காலிகமாக 1990ம் ஆண்டில் இருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. எமது குருநாதரை சொந்தக்காணியில் விரைவில் மீளக்குடியமர்த்தி கோயில் பூசைகள் வழமைபோல் விரைவில் நடைபெறும் என்று பிரார்த்திப்போம்.

ஜீவன், தயவுசெய்து அங்காளப்பக்கம் சென்றால் விரிவாக படங்கள் எடுத்து அனுப்புங்கள். நன்றி~!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நிலம் விடுவிக்கப்படுவது மகிழ்ச்சியான செய்தி. ஜீவன் படம் எடுத்து போடுங்கள். 

ஜீவன், ஆளை காணவில்லை :rolleyes:

எமது வீட்டை அன்ரி பார்வையிட்டு உள்ளார். கூரை இல்லை சுவர்கள் உள்ளன என்று கூறப்படுகின்றது. வீட்டை பார்க்க அனுமதி கொடுத்தார்களா அல்லது வீடு 28 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்டுவிட்டதா என்று சரியாக தெரியவில்லை. முன்பு வீடு தரைமட்டம் வாழைத்தோட்டம் உள்ளது என்று சொன்னார்கள். நான் இரண்டு தடவைகள் சென்றபோதும் அருகில் செல்லமுடியவில்லை சுமார் நூறு மீற்றர் தூரத்தில் இருந்து பார்வையிட்டதால் வீடு அமைந்த பகுதி தெளிவாக தெரியவில்லை. எமது விட்டு கூரை இல்லாவிட்டாலும் சுவர்கள் மிஞ்சினால்கூட அதுவே பெரிய ஆறுதல்தான் ஏன் என்றால் அது நான் உயிர்பிரியும் வரை சுமக்க்கின்ற வாழ்க்கையின் ஞாபகச்சுவடுகள்.

  • 4 months later...
  • தொடங்கியவர்

இரு பெண்கள் வாழும் குடும்பம்

தாய்க்கு ஐம்பது வயது இருக்கலாம். மகளுக்கு இருபத்தி மூன்று. அரசபணத்தில் வீடு கட்டியுள்ளார்கள். கிணறு இல்லை, பக்கத்தில் உள்ள அண்ணனின் குழாய்க்கிணறு மூலம் ஒரு பரலில் நீர் நிரப்பி விடுவார்கள். அந்த 23 வயது பெண்ணிற்கு Downs Syndrom - செடிகளின் மறைவில் குளிப்பார். வீதியில் போவோரால் தொல்லை. ஒரு தொட்டியும் அதனைச் சுற்றி ஒரு மறைப்பை ஏற்படுத்தி தரமுடியுமா என்று காங்கேசன்துறை அபிவிருத்தி சங்கத்தை கேட்டிருந்தார்கள். இதை விட முக்கியமான தேவைகள் இருந்ததினால் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

திடீரென ஒரு யாழ் கள உறவுவின் யாழ் விஜயம்

டேய் ஜீவன் காங்கேசன்துறையைப் பற்றி  நிறைய எழுதுகிறாய், கதைக்கிறாய் - பார்க்கணும் என்றார். சரி என்று கூட்டிச் சென்று காண்பித்தேன். அடுத்த நாள் .கையில் ஒரு கத்தையை  தந்து கஷ்டப்பட்ட எவருக்காவது ஏதாவது உதவி செய்யடா என்றார்.

அவரது உதவியின் ஒருபகுதியில் இது இன்று முடிந்தது.

இதைப் பகிருவதன் நோக்கம் அந்த அன்பு உள்ளத்திற்கு நன்றி சொல்ல மட்டுமே.

தயவு செய்து இதை வாசிப்பவர்கள் உதவி செய்ய என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் - இது எனது நெருங்கிய நண்பர்களுடன் மட்டும்  மட்டுப்படுத்தப்பட்டது.

36378336_2127475247265807_6748668857935724544_n.jpg?_nc_cat=0&oh=63e9b0aee36716f2b566f54b4dc40393&oe=5BA37A96

Jeevakumaran Sivagnanam sitt bilde.

Jeevakumaran Sivagnanam sitt bilde.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.