Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புட்டு தமிழரது பாரம்பரிய உணவா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புட்டு தமிழரது பாரம்பரிய உணவா அல்லது இடையில் ஆரியரால் அல்லது மொகலாயர்களால் அராபியர்களாலல் புகுத்தபட்டதா??வாருங்கள் விவாதிக்கலாம் ஆனால் கடைசியில் உங்கள் கருத்துகளள் அதாவது புட்டு யாருடைய கண்டு பிடிப்பு எண்று ஆதாரமாக நிருபிக்க வேண்டும்

வேணாம் சாத்து விசப்பரீட்சை..........

கேள்வியைப் போட்ட மாதிரி நிண்டு கதைக்கவேணும.; பிறகு காளையைக் கண்டு ஓட்டமெடுத்த கதையா இருக்கக்கூடாது....

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ சாத்திரி சார் புட்டு யாருடைய கண்டு பிடிப்பு எண்டு புட்டு புட்டு வைக்க வாறன் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட வீட்டில எண்டால் வீட்டுகாரியின் கண்டுபிடிப்பாத்தான் இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓய் ஆதி நான் யார்?? நான் யார்?? எனக்கே தெரியாது ஆனால் புட்டை கண்டு பிடிச்சது யாரெண்டு எனக்கு தெரிஞ்சாகணும் அதுக்கொரு விவாதம் நடந்தாகணும் நாலு பேர் திட்டியாக வேணும் இல்லாட்டி எனக்கு நிம்மதி இல்லை :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் ஆதி நான் யார்?? நான் யார்?? எனக்கே தெரியாது ஆனால் புட்டை கண்டு பிடிச்சது யாரெண்டு எனக்கு தெரிஞ்சாகணும் அதுக்கொரு விவாதம் நடந்தாகணும் நாலு பேர் திட்டியாக வேணும் இல்லாட்டி எனக்கு நிம்மதி இல்லை :P :P :P

நம்பர் இருக்குத்தானே இரண்டு திட்டு திட்டி விட்டு போறன் சாத்திரி சார்

  • கருத்துக்கள உறவுகள்

புட்டு உண்ணும் மக்கள் உள்ள இன்னொரு இடம் கேரளம். அங்கே ஈழவர் என்ற ஒரு இனமே உண்டு. எங்களைப்போன்ற கலாச்சாரத் தன்மைகள் கேரளத்தவரிடம் உள்ளது. இதிலிருந்து நாங்கள் சேர நாட்டவர் என்று நிறுவலாம். தமிழில் சமஸ்கிரத கலப்பு ஏற்பட்டு உண்டான மொழியே மலையாளம். அதற்கு முன் இருந்த தமிழ் பேசும் மக்களே ஈழத்திலும் இருக்கிறோம். சமஸ்கிருதம் எங்களைத் தீண்டவில்லை.

இதை வைத்துப் பார்த்தால் சமஸ்கிருதம் (ஆரியம்) கேரளாவிக்கு வருமுன்னரே நாங்கள் ஈழத்துக்கு வந்துவிட்டோம். அப்படியானால் புட்டு ஏற்கனவே சேரநாட்டில் இருந்திருக்கவேண்டும்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, புட்டு எமது உணவே..உணவே..உணவே என்று எழுதி என் கருத்தை வைக்கிறேன். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த பின்னும் வாழும் வாழ்க்கை வேண்டும்.

இறந்த பின்னும் வாழும் வாழ்க்கை வேண்டும்...ம்ம்ம்..

கறுப்பி, அதாவது கல்யாணமாகவேணுமெண்டு சொல்லுறியள் போல.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பிட்டுக்கு மண் சுமந்த கதையைப் படித்த ஞாபகம் உண்டு. அந்தக் கால கட்டத்தில் அராபியர்கள், மொகாலயர்கள் வந்திருக்கமாட்டார்கள் என்று சொல்லலாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஷ்யா,யுகோஸ்லாவியா நாடுகளிலும் புட்டு போன்ற உணவு இருக்கின்றது.ஆனால் தேங்காய்ப்பூ போடுவதில்லை.கோதுமை மாவுடன் மரக்கறிகள் சேர்த்து ஆவியில் வேக வைப்பார்கள்.மிகவும் சுவையாக இருக்கும்.ஆனால் எமது நாட்டில் பலவகையான புட்டுகள் இருக்கின்றன.உ+ம் ஒடியல் புட்டு

கோதுமைமா புட்டு

அரிசிமா புட்டு

குரக்கன்மா புட்டு

ஆட்டாமா புட்டு

மரவள்ளிமா புட்டு

மரக்கறிப் புட்டு

இப்படி சொல்லிக்கொண்டேபோகலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் (இது தமிழில் எழுதப்பட்டது )அந்தக் கதை உள்ளது அதற்கு முற்பட்ட இலக்கியங்களில் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் குரோக்கன் கேழ்வரகு திணை போன்றவற்றின் குறிப்புக்கள் உள்ளன. புட்டைப் பற்றித் தெரியவில்லை.

தமிழர்களின் உணவு முறை உடல் நலத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நல்ல உணவுகளை உட்கொண்டால் மருந்தே தேவையில்லை என்கிறது திருக்குறள்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின். (குறள்942)

அந்த வகையில் உணவை நீராவியில் சமைப்பது தமிழர்களின் முறை. ஆனால் அது குரோக்கன் பிட்டாகத்தான் இருந்திருக்கவேண்டும்.

Edited by இளங்கோ

சாராயம் என்னும் அரக் அரேபியர்களிடம் இருந்து வந்தது என்கிறார்கள். உண்மையா?

கள்ளு எங்களுடையதா இல்லை வேறு யாரும் அறிமுகப்படுத்தியதா?

சுரபானம் குடிப்பவர்கள் அசுரர்கள் நாங்கள் தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு பழ. நெடுமாறன் அவர்கள் ஒரு முறை பிரான்ஸ் வந்தபோது வழக்கம் போல் எங்கிட தமிழர்கள் அவருக்கு பிட்டு விருந்து அளித்தனர். அப்போது நெடுமாறன் ஐயா பிட்டுக்கு மண் சுமந்த கதை எங்களிடம் உள்ளது ஆனால் எங்களிடம் பிட்டு இல்லை உங்களிடம்தான் அது உள்ளது என்று நகைச்சுவையாகக் கூறினார். இந்தத் தகவலை எனக்குக் கூறியவர் TTN நிர்வாக இயக்குனராக முன்பிருந்த திரு.குகன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுராபானம் குடிக்காதவர்களையே அவர்கள் அசுரர்கள் என்றனர். அவர்களால் அசுரர்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்கள் வேறு யாருமிலர் தமிழர்களாகிய நாங்கள்தான். எங்களைத்தான் அவர்கள் அசுரர்கள், தஸ்யுக்கள், அரக்கர்கள் என்று தங்கள் நூல்களில் வர்ணித்து எழுதினார்கள்.

நீராவியில எங்கட சனம் அந்தக்கால்லத்தில இருந்து புட்டூ அவிக்குது ஆனால் கேத்தல் கொதிக்கும் போது அந்தரத்தில் ஆடிய கேத்தல் மூடி ஏன் அந்தரத்தில் ஆடியது என யோசித்து ரயில் எஞ்சினை கண்டுபிடித்தான் வெள்ளைக்காரன் ஆனால் எங்கட சனம் இன்னும் அந்த தொழில்நுட்பத்தில் புட்டும் இடியப்ப்பமும் தான் அவிக்குது :P அந்த லட்சனத்தில அது யாரின் உணவு என ஆய்வு வேறு :P .எனக்கு தெரிந்த அளவில் புட்டு கேரள மக்களின் ஒரு முக்கிய உணவு

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்களின் உணவகங்களில் காணப்படும் புட்டு இடியப்பம் கொத்துரொட்டி தமிழக உணவகங்களில் காணக்கிடைப்பதில்லை.

ம்ம்ம்ம் சாஸ்த், இது இப்ப ரொம்ப அவசியமா?

சமைத்தமா சாப்பிட்டமா என்று இருக்கணும்..

  • கருத்துக்கள உறவுகள்

எந்த புட்டை சொல்லுரீர் சாத்திரி.........?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Pitza தான் எம்முடைய பாரம்பரிய உணவாகும். புட்டு இடையில் வந்ததது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த புட்டை சொல்லுரீர் சாத்திரி.........?????

நான் மானிப்பாய் குமார் கடை குளாய் புட்டை பற்றி கேட்டனான் ஒய் புத்தா என்ன நக்கலா பொதுவா எல்லா புட்டையும் பற்றி தான் கேட்டனான் உமக்கு விடை தெரியாட்டி புளிய மரத்தடியிலை போய்் இரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீராவியில எங்கட சனம் அந்தக்கால்லத்தில இருந்து புட்டூ அவிக்குது ஆனால் கேத்தல் கொதிக்கும் போது அந்தரத்தில் ஆடிய கேத்தல் மூடி ஏன் அந்தரத்தில் ஆடியது என யோசித்து ரயில் எஞ்சினை கண்டுபிடித்தான் வெள்ளைக்காரன் ஆனால் எங்கட சனம் இன்னும் அந்த தொழில்நுட்பத்தில் புட்டும் இடியப்ப்பமும் தான் அவிக்குது :P அந்த லட்சனத்தில அது யாரின் உணவு என ஆய்வு வேறு :P .எனக்கு தெரிந்த அளவில் புட்டு கேரள மக்களின் ஒரு முக்கிய உணவு

சற்று சிந்தித்துப் பாருங்கள் நீராவிக்கு சக்தி உண்டு என்று கண்டு பிடித்தவன் தமிழன், அதைப் பயன் படுத்தி அவன் உணவு சமைத்தான். ஆனால் ஜேம்ஸ் வாட் (James Watt a Scottish inventor) நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடிக்கும் அளவுக்கு அவன் அறிவு முன்னேறாததற்கு என்ன காரணம். எல்லாம் இந்த ஆரியர்களால் கற்பித்த மூடத்தனத்தில் விழுந்ததுதான்.

2000 ஆண்டுகளுக்கு முன் வரழ்ந்த சோழ அரசன் கரிகாலன் கட்டிய கல்லணையால் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் பலன் பெற்றனர் அவனுக்கு 1000 ஆண்டுகள் கழித்து வந்த ராஜ ராஜ சோழனால் பயன் அடைந்தது முழுக்க வடநாட்டுப் பார்பனர்கள்தாம். கோவில்களைக் கட்டி அதைப் பார்ப்னர்களிடம் ஒப்படைத்ததுமில்லாமல் , விவசாயிகளின் நிலங்களைப் பறித்து உழைக்காமல் உண்டு கொழுக்கும் பார்பனர்களுக்கு சதுர்வேதி நிலம் என்ற பெயரில் தானமாகவும் கொடுத்தான். கோட்டைகளையும் கல்லணைகைளையும் கட்டிய தமிழன் கோவில்களைக் கட்டத் தெடங்கியதுதான் அவனது வீழ்ச்சிக்குக் காரணம்

பெயரையே பாருங்கள் கரிகாலன் தூய தமிழ்ப் பெயர் ஆனால் ராஜ ராஜனில் சமஸ்கிருதம் புகுந்து விட்டது.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

புட்டு என்பது பிழை பிட்டு என்பதே சரியென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் மானிப்பாய் குமார் கடை குளாய் புட்டை பற்றி கேட்டனான் ஒய் புத்தா என்ன நக்கலா பொதுவா எல்லா புட்டையும் பற்றி தான் கேட்டனான் உமக்கு விடை தெரியாட்டி புளிய மரத்தடியிலை போய்் இரும்

நான் படிக்கிற காலத்தில் குமார் கடை இருக்கவில்லை சந்தியில கந்தையா கடை தான் அங்கு தான் புட்டு சாப்பிட்டனான் அதுவும் ஒரு புட்டு தான்,புட்டு சாப்பிட்டு ஒரு பிளேன் டீயும் ஒரு தம்மும் அடித்தா சொர்க்கமே தெறியும்..........எந்த புளியமரம் மானிப்பாய் இந்துகல்லூரியில இருக்கிற புளியமரமோ?????நான் அந்த பக்கம் போறதில்லை ஒருக்கா போய் நின்று அதை பார்த்த வாத்தி பக்கத்து பாடசாலைக்கு போற பிள்ளையல பார்க்கிறீயோ என்று அடித்த பிறகு எனக்கு புளியமரம் என்றாலே ஒரு அலர்ஜி......................

:P :P :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் படிக்கிற காலத்தில் குமார் கடை இருக்கவில்லை சந்தியில கந்தையா கடை தான் அங்கு தான் புட்டு சாப்பிட்டனான் அதுவும் ஒரு புட்டு தான்,புட்டு சாப்பிட்டு ஒரு பிளேன் டீயும் ஒரு தம்மும் அடித்தா சொர்க்கமே தெறியும்..........எந்த புளியமரம் மானிப்பாய் இந்துகல்லூரியில இருக்கிற புளியமரமோ?????நான் அந்த பக்கம் போறதில்லை ஒருக்கா போய் நின்று அதை பார்த்த வாத்தி பக்கத்து பாடசாலைக்கு போற பிள்ளையல பார்க்கிறீயோ என்று அடித்த பிறகு எனக்கு புளியமரம் என்றாலே ஒரு அலர்ஜி......................

:P :P :lol::lol:

அப்ப அந்த புளியடி பிறின்ஸ்சிப்பலை தெரியுமோ வாத்திட்ட தப்பினாலும் அந்தாலுட்ட தப்ப ஏலாது.

புட்டு என்பது பிழை பிட்டு என்பதே சரியென நினைக்கிறேன்.

வாவ் வாவ் சாத்துக்கே ஆப்பா

:P

ஓய் பிட்டு எந்த நாடு எண்டு நமக்கு தெரியாது பட் பிட்டும் கணவாய் கறியும் சாப்பிட்டா

ஓய் சாத்து வாய் ஊறுதா

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.