Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றிற்கு பரிந்துரை

Featured Replies

விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றிற்கு பரிந்துரை

 

விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றிற்கு பரிந்துரை


தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Eleanor Sharpston   பரிந்துரை செய்துள்ளார்.


பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கான உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் அமைப்பினை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.


ஆலோசகரின் இந்த பரிந்துரை கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில்லை.  எவ்வாறெனினும், மிக நீண்ட காலமாக ஐரோப்பிய நீதிமன்றங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகியன தம்மை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு விடுக்கும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136247/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தின் உயர் நிலை அதிகாரியொருவர் தீர்மானித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டதாகத் தெரிவித்து 2014ஆம் ஆண்டு அந்தத் தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிக்குமாறு மேன்முறையீடு செய்தது. இருப்பினும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் திருப்தியளிக்காமையால் மேன்முறையீட்டை இரத்துச் செய்ய ஐரோப்பிய நீதிமன்றத்தின் உயர்நிலை ஆலோசகரான எலோனோ சாக்ஸ்டன் தீர்மானித்துள்ளார்.

இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அங்கம் வகிக்கும் 28 நாடுகளிலும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் பாலஸ்தீனத்தின் விடுதலை இயக்கமான ஹமாஸ் இயக்கம் மீதான தடையும் நீக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=42234

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

http://thuliyam.com/?p=42234

EU Top Court Advised to Drop Hamas, Tamil Tigers From Terror List

An adviser to the European Union’s top court says the bloc’s governments failed to prove that the groups took part in terrorist attacks

 
 
Members of the military wing of Hamas hold flags during a rally in the north of Gaza on May 20. In 2014, the EU’s second-highest court ordered Hamas and the Tamil Tigers to be struck off the bloc’s terror list in two separate decisions.ENLARGE
Members of the military wing of Hamas hold flags during a rally in the north of Gaza on May 20. In 2014, the EU’s second-highest court ordered Hamas and the Tamil Tigers to be struck off the bloc’s terror list in two separate decisions. PHOTO: EUROPEAN PRESSPHOTO AGENCY
By 
GABRIELE STEINHAUSER
Updated Sept. 22, 2016 12:30 p.m. ET

BRUSSELS—An adviser to the European Union’s top court said Thursday Hamas and the Tamil Tigers should be taken off the EU’s terror list, because the bloc’s governments followed the wrong procedures when including the two groups.

The opinion of the European Court of Justice’s advocate general isn’t binding on the courts judges. However, if confirmed, it would mark a key point in a drawn-out court battle between the Palestinian and Sri Lankan groups and EU governments.

Depending on the detailed argument of the judges, EU governments might then still have an opportunity to place both Hamas and the Liberation Tigers of Tamil Eelam, as the group is formally known, back on the list.

 

In 2014, the EU’s second-highest court ordered both Hamas and the Tamil Tigers to be struck off the bloc’s terror list in two separate decisions.

It said at the time that Hamas’s listing wasn’t based on evidence that had been properly examined and confirmed by national authorities, but on “factual imputations derived from the press and the internet.”

The European Council, which represents EU governments in the bloc’s lawmaking process, had appealed that judgment, arguing that it was relying on a 2001 decision by the U.K. that designated both Hamas and the Tamil Tigers as terrorist groups, as well as the terror listing for both groups in the U.S.

Thursday’s opinion rejects that argument, following similar reasoning as the 2014 decision. “The council cannot rely on facts and evidence found in press articles and information from the internet,” Advocate General Eleanor Sharpston said.

Ms. Sharpston also said that the council couldn’t rely on terror listings by countries outside the bloc, such as the U.S., without ensuring that there was sufficient protection of fundamental rights.

A final judgment from the Luxembourg-based ECJ will likely take several months to arrive. The court’s judges often follow the opinions, but have also come out on the opposite end of their advisers in a few notable cases.

Until the case has been finally adjudicated, both Hamas and the Tamil Tigers will remain on the terror list. That means the groups’ assets will remain frozen and the EU will make extra efforts to stop any European funding from reaching them. The blacklisting also discourages EU officials from holding direct talks with senior members of either group.

A spokesman for Israel’s foreign ministry said the government would wait for the ECJ’s judgment. “This is only an opinion, that does not obligate the court and is part of the European legal process,” the spokesman said. “We are convinced that the European Union will do everything necessary to keep Hamas, an active terror organization, on the European terrorist list.”

An EU spokesman said the bloc had taken note of the opinion and would await the final judgment. Thursday’s opinion also doesn’t affect the position of the two groups on national terror lists of EU member states.

The Tamil Tigers also remain on both the U.S. and Sri Lanka’s terror list, even though the decadeslong war on the island ended in 2009. President Maithripala Sirisena has made some efforts to reconcile with the Tamil community since he came to power in 2015, but has stopped short of setting up a court with foreign judges to investigate allegations of war crimes and systemic abuses by the military.

Thursday’s opinion also represents a setback for the EU governments, who have been working to reinforce their sanctions regime—including by creating new channels for sharing confidential evidence with ECJ judges. In recent months, those efforts have borne some fruit, such as last week’s decision by the General Court to uphold sanctions,backed by stronger evidence, against former Ukrainian President Viktor Yanukovych.

—Rory Jones in Tel Aviv contributed to this article.

http://www.wsj.com/articles/eu-top-court-advised-to-drop-hamas-tamil-tigers-from-terror-list-1474535703

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

மனநிறைவான செய்தி .....! 

35 minutes ago, விசுகு said:

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் இலிருந்து நான் பதிந்தது - தமிழ் ஊடகங்களில் எவ்வாறு செய்தி திரிக்கப்படுகிறது என்பதற்காகவே.
விசுகு இது உங்களுக்கு எதிரான பதில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் இலிருந்து நான் பதிந்தது - தமிழ் ஊடகங்களில் எவ்வாறு செய்தி திரிக்கப்படுகிறது என்பதற்காகவே.
விசுகு இது உங்களுக்கு எதிரான பதில் இல்லை.

ம்ம்ம்

அதை நானும் கவனித்தேன்..

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ எமது மக்கள் அங்கு தொடர்ந்து வாழவும் புலம் பெயர் சமுகத்தால் விடப்பட்ட இடை வெளியை நிரப்ப கூடிய வகையில் வாழ வழி கிடைத்தால் சந்தோசம்.

ஒரு விபச்சார ஊடகம் இப்படி எழுதுது .

  எவ்வாறாயினும், இது உறுதியாகினால் பாலஸ்தீனர்கள் மற்றும் இலங்கை குழுக்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் இடையிலான போர் தொடர்பில் தீர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு வருடங்களாகத் தொடர்ந்து அனுபவிக்கும் மன அழுத்த வேதனையைச் சற்றுக் குறையச்செய்யும் மருந்தாக இந்தச் செய்தி வெளிவந்துள்ளது. 

 

  • தொடங்கியவர்

`ஹமாஸ், விடுதலைப்புலிகள் அமைப்புக்களை ஐரோப்பிய ஒன்றிய தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்கவேண்டியிருக்கும் `

 

ஐரோப்பிய ஒன்றியம், பாலத்தீன இஸ்லாமியவாதக் குழுவான ஹமாஸ் மற்றும் இலங்கையை சேர்ந்த பிரிவினைவாத குழுவான விடுதலைப்புலிகள் ஆகிய அமைப்புக்களை தனது தீவிரவாத அமைப்புகள் குறித்த பட்டியலில் இருந்து நீக்க வேண்டியிருக்கும் என ஒரு ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

 

ஹமாஸ் போராளி

 ஹமாஸ் 2006ல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இஸ்ரேலுடன் மூன்று மோதல்களில் ஈடுபட்டது.

அந்த நீதிமன்றம் 2014ல் அந்த அமைப்புகள், தீவிரவாத குழு என்ற வகைப்பாட்டை மறு மதிப்பீடு செய்ததன் காரணமாக இல்லாமல், அவை தொழில்நுட்ப அடிப்படையில் தான் நீக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தது. 28 அரசாங்கங்களை பிரதிநித்துவப்படுத்தும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கவுன்சில், மேல்முறையீடு செய்தது.

தற்போது ஐரோப்பிய நீதிமன்ற ஆலோசகர் இந்த மேல்முறையீட்டை நிராகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

தலைமை வழக்கறிஞர் என்று அறியப்படும், ஆலோசகரின் கருத்து முடிவானது அல்ல. ஆனால் பொதுவாக, ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பை அளிக்கும் போது அது பொதுவாகப் பின்பற்றப்படுகிறது.

அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அன்று நடந்த தாக்குதலுக்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியம், எந்த ஒரு குழுவின் நிதிச் சொத்துக்களை முடக்கவும், காவல் துறை மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவதை மேம்படுத்தவும் உதவும் வகையில், ஒன்றியத்தின் தீவிரவாத குழுவின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

குர்து போராளிக் குழுவான பிகேகே, லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பின் ராணுவப் பிரிவு மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போன்ற பாலத்தீன போராளிக் குழுக்கள் 23 குழுக்கள் மற்றும் தனி நபர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஹமாஸ் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்புகளை அந்த பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து எந்த விதமான இறுதி முடிவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பல நாடுகளின் அரசுகள் தயாரித்துள்ள பட்டியல்களை பாதிப்பதாக இருக்கும் என்று கருதமுடியாது.

ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி பி பி சியிடம் பேசுகையில், அந்த தீவிரவாத குழுக்கள் பற்றிய பட்டியல் பல பன்னாட்டு அரசுகளின் முடிவுகளின் அடிப்படையில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பட்டியலின் அடிநாதமாக உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டங்களை இது கேள்விக்குட்படுத்தாது என்றார்.

ஆனால் இந்த இரண்டு குழுக்களும் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், அது அந்த இரண்டு குழுக்களுக்கும் ,அவை நிதி திரட்டும் திறனுக்கும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்றார்.

 

இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் இடையில் நடந்த போரின் பொது மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். (கோப்புப்படம்)

 இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் இடையில் நடந்த போரின் பொது மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். (கோப்புப்படம்)

ஹமாஸ், எப்போதும் தான் ஒரு எதிர்ப்பு இயக்கம்தான், பயங்கரவாத அமைப்பல்ல என்று வாதிட்டுவருகிறது. ஆனால் அதன் கொள்கைப் பிரகடனத்தில் அது இஸ்ரேலின் அழிப்பை மேற்கொள்ள உறுதியாக இருக்கிறது.

விடுதலைப்புலிகள் இப்போது ஒரு ராணுவ சக்தியல்ல

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஹமாஸை ஒரு பயங்கரவாதக் குழுவாக கருதுகின்றன.

2006ல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அடுத்த ஆண்டு ஹமாஸ் காசாவில் உள்ள ஃபத்தா என்ற தனது போட்டியாளர்களை வெளியேற்றியது. அதற்கு பிறகு இஸ்ரேலுடன் மூன்று மோதல்களில் ஈடுபட்டது.

விடுதலைப் புலிகள் 2009 ல் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் இப்போது ஒரு இராணுவ சக்தியாக அவர்கள் இல்லை.

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற தலைமை அரசு வழக்கறிஞர் பேசுகையில், ஒன்றியத்தின் கவுன்சில் இந்த இரண்டு குழுக்களையும் தவறாக தீவிரவாத அமைப்பு என்று வரையறுத்தத்தில் நடைமுறைப்பிழைகள் செய்துவிட்டது என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ள மனித உரிமைகள் போலவே அந்த அரசாங்கங்களும் கொண்டுள்ளனவா என்று சோதிக்காமல், கவுன்சில் தவறாக அரசாங்கங்கள் வழங்கிய தீர்ப்புகளை நம்பியது என்றார் அவர்.

மேலும் அவர் ஊடகங்கள் மற்றும் இணையத்தில் உள்ள ஆதாரங்களை நம்பியிருக்க கூடாது என்று தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-37450422

  • தொடங்கியவர்
புலிகள் மீதான தடையை நீடிக்க முயற்சி செய்யும் இலங்கை -அமைச்சர் மங்கள சமரவீர
புலிகள் மீதான தடையை நீடிக்க முயற்சி செய்யும் இலங்கை -அமைச்சர் மங்கள சமரவீர
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீது கடந்த பத்து வருட காலமாக விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தின் உயர் நிலை அதிகாரி நேற்றைய தினம் அறிவித்திருந்த நிலையில், இந்தத் தடையினைத் தொடர்வதற்கான  முயற்சிகளை இலங்கை தொடர்ந்தும் மேற்கொள்ளுமென வெளிநாட்டமை ச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
ஐ.நா பொதுச் சபையில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நியூயோர்க்  சென்றுள்ள மங்கள சமரவீர் அங்கு வைத்து இதனைத்  தெரிவித்தார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு ஐரோப்பிய நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை மேன்முறையீடு செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியம்,  அதற்காக  முன்வைத்த காரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் மேன்முறையீட்டை இரத்துச் செய்ய தீர்மானித்துள்ள நிலையிலேயே ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தின் உயர்நிலை ஆலோசகரான  எலோனோ சாக்ஸ்டன் இந்த ஆலோசனையை   வழங்கியிருந்தார்.
 
ஆனாலும், இந்தத் தடை இலகுவில் நீக்கப்படமுடியாதது என்றும், அது தொடரப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று  வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/news/18019

  • கருத்துக்கள உறவுகள்

இனி தடையை நீக்கி என்ன செய்வது ??

காசு சுருட்டினவனுக்குத்தான் தடை நீக்கம் உதவும் 

  • கருத்துக்கள உறவுகள்

இவரெப்ப ஐரோப்பியஒன்றியத் தலைவராகினார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

இவரெப்ப ஐரோப்பியஒன்றியத் தலைவராகினார்.

 

யாரை மங்களவைத்தானே சொல்கிறீர்கள்...?அவருக்கு மங்களம் பாடும் நேரம் வரும்வரை மங்களமாகத்தான் இருப்பார்.:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்துவிட்டு.. தடையை நீக்கினால்.. என்ன விட்டால் என்ன.

எதுஎப்படியோ... எப்பவோ நீக்க வேண்டிய தடையை இப்பவாவது நீக்குறீங்களேன்னு திருப்தி பட்டுக்க வேண்டியான். 

ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட சில நடவடிக்கைகளினால்.. தான்.. பல ஆயிரம் அப்பாவி மக்கள் வன்னியில்..வாகரையில்.. இனப்படுகொலைக்கு ஆளானார்கள். இது குறித்து யார் விசாரிப்பது...????! 

ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ள நிலையில் தாம் அதற்கு இடம் வழங்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

'விடுதலைப் புலிகள் மீதான தடையை இலகுவில் அகற்ற முடியாது' என அமைச்சர மங்கள நியூயோர்க்கின் வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 71ஆவது மாநாட்டில் கலந்துக்கொள்ள அமெரிக்க சென்றுள்ள அமைச்சர் மங்கள, இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

கூடுமானவரை புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு ஐரோப்பியா நடவடிக்கைகள் எடுக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தான் 2006ஆம் ஆண்டில் வெளிவிவகார அமைச்சராக பதவிவகித்த காலத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன், மிகவும் கஸ்டத்தின் மத்தியில் இந்த தடைவிதிப்புக்கு காரணமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே குறித்த தடையினை நீக்குமாறு தற்போது பரிந்துரை செய்யும் புலி ஆதரவாளர்கள் இதற்கு முதலிலும் இந்த தடையை நீக்குவதற்கு பல அர்ப்பணிப்புகளை செய்திருந்தாலும் அவை வெற்றியடையவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த மாதம் அமெரிக்கா விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடித்ததாகவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/118869?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.