Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கும் பெண் நீர்வேலியில் சம்பவம்:

Featured Replies

சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கும் பெண் நீர்வேலியில் சம்பவம்:

சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கும் பெண் நீர்வேலியில் சம்பவம்:

யாழ்.நீர்வேலி பகுதியில் தாயொருவர் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதவாது ,

நீர்வேலி பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தை சேர்த்த தாயொருவர் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை கத்தியினால் மிக மோசமாக தாக்கும் காட்சி வீடியோவில் பதியப்பட்டு உள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாயார் உயிரிழந்தமையால் , தகப்பனார் வேறு திருமணம் முடித்து உள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே சிறுமியை மிக மூர்க்க தனமாக தாக்கி யுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136236/language/ta-IN/article.aspx

  • Replies 74
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது தாயல்ல பேய். Bild in Originalgröße anzeigen

  • கருத்துக்கள உறவுகள்

எமது பார்வைக்கு தவறாகத் தெரிந்தாலும், தாய் சம்பூ வைத்துக் குளிப்பாட்டவே இந்த அடி போட்டிருக்கிறா என்ற படியால், பிழை சொல்ல முடியாது. 

அட நாம வாங்காத அடியா ? எனக்குத் தெரிஞ்சு, கண்ணுக்க முளவாய் தூள் போட்டு கட்டி வைத்து அடித்த கதயள் இருக்கே...

உங்க பொடி பொட்டயளத் தொட ஏலாத படியா கட்டாக் காலியாள திரியுதுகள்.

1 hour ago, Nathamuni said:

உங்களுக்கு பிள்ளைகள் இருக்கா....

எப்படி உங்களால் இதை நியாயப்படுத்த முடியுது? நான் நினைக்கிறன் நீங்கள் முழுமையாக அந்த ஒளிப்பதிவை பார்க்கவில்லை என்று. 

பெற்றதாயாக இருந்தா இப்படி ஒரு கொடுமையை நினைத்தே பார்க்க மாட்டா , சித்தியார் தானே??

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது உலகில் பல விடயங்கள் மாற்றம் பெற்று வருகிறது.  அதில் இதுவும் ஒன்று. 

சித்தியார் என்பதனால் விடயம் ஊதிப்பெருப்பிக்கப்படுகிறது.

அப்பா எனக்கு இடுப்புப்பட்டியால் அடிக்கும் போது வயது 4ற்கும் குறைவு. அப்பாஅடித்த பிறகு என்னை நடக்ககூட விடவில்லை, தூக்கிக்கொண்டே திரிந்தார். 

அம்மா எனக்கு காலில் அடுப்பில் இருந்த கொள்ளிக்கட்டையால் காலில் சுடும் போது வயது 9. அழுதழுது கொண்டு வைத்தியரிடம் கொண்டு திரிந்தார். 

இலங்கையில் பிரம்பு வாங்கும் போது எனது மகனுக்கு வயது ...... 6 மாதங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
சிலர் அடிப்பார் சிலர் அணைப்பார்
அன்பும் அணைப்பும் எப்போதும் பிள்ளைகளை நல்ல வழியில் கொண்டு செல்லும். இந்த அம்மாவிற்கு என்ன பிரச்சனையோ தெரியவில்லை.
பாதிக்கப்படடவர் போல உள்ளார். இதை வீடியோ ஆக்கியவர் அந்த அம்மாவிற்கு ஏதாவது புத்திமதியைக் கூறியிருக்கலாம்.
இருந்தாலும் இப்போது அடிக்கும் அதே கை தான் அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு அரவணைப்பையும் கொடுக்கும் என்று நம்புகின்றேன்.
குழந்தைகளை வளர்ப்பதை விட அந்தக் குழந்தைகளை புரிந்து கொண்டு வளர்த்தால் எல்லாம் சிறப்பாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதுக்கு கஸ்டமாக இருக்கின்றது.

இருந்தாலும் இப்படியான சம்பவங்களை எப்படி இரு கோணங்களில் பதிவு செய்தார்கள்?

அந்த பெண்ணில் தவறு இருந்தால் அதை சாட்சிப்படுத்தி உரியவர்களிடம் கொடுத்து நடவடிக்கை எடுப்பதுதான் ஒரு மனிதாபிமான பணி.
(நாங்க எல்லாம் தடி தும்பூ ஆகும் வரை அடிவாங்கிய ஆக்கள்)

அதை விட்டு தெரு சண்டியர்கள் போல றோட்டில் உள்ளது எல்லாம் படம் எடுத்து இப்ப தனி நபர் காணி வரை போயாச்சு,அடுத்து வீட்டுக்குள் தான் கமரா போகும் போல தெரிகிறது எங்கு செல்கிறது ஊடகம்,வர வர தமிழ்நாட்டின் ஒரு மாவட்டமாக யாழ்ப்பாணம் மாறிக்கொண்டு வருகிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது..

உங்கள் பணி, மனிதநேயம், ஊடக சுகந்திரம் ,எல்லாம் ஒரு அளவுகோல் உண்டு பெயர் புகழுக்கு ஆசைபட்டு கண்டதையும் எடுத்து பொது தளங்களில் போட்டு உங்களை மீட்பர்கள் ஆக காட்டுவது அபந்தம்.

இப்படி பார்க்க போனால் ஒவ்வெரு நாலு ஆயிரம் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது வீடுகளில்,இதை எல்லாம் வேலியில் நிண்டு படம் எடுத்து இணையத்தில் போட்டு,ஒரு குடும்பத்தை அதன் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்கு உள்ளாகும் செயலாகும்...

கையில் காசில்லாமல் நிக்கும் போது பிள்ளை ஐஸ் பழத்துக்கு அழுதாலும் கையில காலில கிடக்கிறதை உடனம் விற்றாவது வாங்கி கொடுக்கணும்,அப்புறம் "கதறி அழுத பிள்ளை கண்டுக்காத அம்மா" என ஒரு தலைப்பு செய்தியாக வரும் போல எங்க போகிறது எங்க மீடியா புரட்சி தொம்பிகளின் சமூக சீர் திருத்தம் என்றுதான் புரியவில்லை..

கணக்கா வேணாம் யாழ் மிலேனியம் பாரில் போய் நிண்டு ஒருக்கா ஒரு வீடியோ போடுங்க பார்ப்பம் குடிந்து அழியும் குடிமக்கள் என,அல்லது கரீனா பீச்சில் எடுத்து போடுங்க சமூக அவலங்களை, அதை எல்லாம் விட்டு சும்மா இருக்கும் ஏழை பாளைகள் கோடிக்குள் உங்கள் கமராவை நுழைத்து என்னத்த சாதிக்க போறீங்க என்றுதான் புரியவில்லை.

வளர்ப்பு நாய்க்கு கல்லெறி விழுவதில்லை பாவம் தெரு நாய்கள் போறவன் வாறவன் எல்லாம் எறிவான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செவ்வந்தி said:

உங்களுக்கு பிள்ளைகள் இருக்கா....

எப்படி உங்களால் இதை நியாயப்படுத்த முடியுது? நான் நினைக்கிறன் நீங்கள் முழுமையாக அந்த ஒளிப்பதிவை பார்க்கவில்லை என்று. 

பெற்றதாயாக இருந்தா இப்படி ஒரு கொடுமையை நினைத்தே பார்க்க மாட்டா , சித்தியார் தானே??

அடி விழுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தீங்களா?

பிள்ளைய குளிக்கக் கூப்பிட, அது முரண்டு பிடிக்க, இரண்டு போடு போட்டு குளிப்பாட்டல் நடக்குது. இதை வீடியோவில் பார்ப்பதால் பதைக்கிறோம்.

இதில், தாய், சித்தி வேறுபாடு தெரியவில்லை எனக்கு.

இது ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது தான்.

நாம் வழக்கமாக எமது நண்பர் உறவினரிடையே, அலட்டிக்காமல், உணர்வில்லாமல் செய்யும் வேலைகளை, சினிமாவில், மீயூசிக்கும் போட்டு, கதாநாயகிக்கும், கதாநாயகனுக்கும் நடப்பதாக உணர்வுபூர்வமாக காட்டினால், கண்ணீர் விட்டு பார்ப்போம்.

அதே போல் தான்... இதுவும்.

நான் அம்மாவிடம் நல்லா வாங்கியிருக்கிறேன். அந்தளவுக்கு குழப்படி, பிடிவாதம். ஆனால் பாசமும் அங்கே தான்.

6 minutes ago, Nathamuni said:

பிள்ளை குளிக்க வரவில்லையா அதற்கு தடியால காலுக்கு கீழை இரண்டு அடி அடித்தாலும் பரவாயில்லை . அதுவும் பெண் பிள்ளை . அதற்கு இப்படியா கையை முறுக்கிறது , தலைமுடியை பிடித்து இழுக்கிறது, கண்ட இடங்களில் நுள்றது, அதுக்கும் மேல கத்தியால அடிக்கிறது நிலத்தில போட்டு மிதிக்கிறது. 

இதை நியாயப் படுத்த இங்க கொஞ்ச ஆண்கள் கூட்டம். இவர்களால் எப்பவுமே தாய்மையை உணரமுடியாது....

  • கருத்துக்கள உறவுகள்

தும்புத்தடியே தும்பானது என்று சொல்லுறம், நீங்க தாய்மை தூய்மை என்கிறீர்கள் 

19 minutes ago, செவ்வந்தி said:

எங்களுக்கும் பெல்ட் பிஞ்சு போனது உண்டு தும்புகட்டை உடைந்து இருக்கு அதெல்லாம் நாங்க விட்ட சேட்டைக்கு கிடைத்த விருதுகள் ஆனால் இந்த ஒளி நாடாவில் அந்த பிஞ்சு குளிக்கவில்லை என்பதை சாட்டி அதன்மேல் நடத்தும் வன்முறை கொடூரமானது ( பிள்ளையை வெருட்ட  அடிப்பது வேறு பிள்ளையை கொல்வது போல் வன்முறை தாக்குதல் நடத்துவதுக்கும் நிறைய வித்தியாசம் )

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து வாழ்வியல் முறையுடன்  புலம்பெயர் வாழ்க்கை முறையை ஒப்பிடுவது  முட்டாள்தனமானது .

மனிதநாகரீகம் முன்னேறி உலகம் எங்கேயோ போய்க்கொண்டு உள்ளது. சிறுமியை கொடுமைப்படுத்தும் இந்தப்பெண் நிச்சயம் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு உள்ளே கம்பி எண்ணவேண்டியவர். பிள்ளையை கண்டித்து வளர்ப்பதற்கும், கொடுமைப்படுத்துவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. உங்கள் அம்மாவும் உங்களுக்கு முன்பு இப்படி அடித்தார் என்று இங்கே சும்மா விசர் வியாக்கியானம் கதைக்கக்கூடாது. 

உங்கள் சொந்தப்பிள்ளையை இப்படி உங்கள் மனைவியோ அல்லது வேறு யாரோ வெறிகொண்டு அடித்தால் பொறுத்துக்கொள்வீர்களா? இங்கே இப்படி அடிவாங்குவதற்கு சிறுமி செய்த குற்றம் என்ன? கொலையா? கள்ளக்காதலா? மதுபானம், சிகெரெட், போதைப்பொருள் ஏதாவது பாவித்தாரா? 

குளிப்பதற்கு விரும்பாவிட்டால் இப்படியெல்லாம் மிருகவெறிகொண்டு பிள்ளைகளை அடிக்கலாம் என்று நீங்கள் நினைப்பீர்களாயின் நிச்சயம் ஒரு மனநல மருத்த்துவரிடம் சென்று உங்களை பரிசோதித்துகொள்வது நல்லது.

3 hours ago, MEERA said:

தும்புத்தடியே தும்பானது என்று சொல்லுறம், நீங்க தாய்மை தூய்மை என்கிறீர்கள் 

உங்களுக்கு தும்புத்தடியே தும்பானது என்றால் அடுத்த தலைமுறையும் அதே தொடரும் என நினைக்கிறது உங்கட இயலாமை, உங்களுக்கு உங்கள் பெற்றோர் செய்ததை நீங்களும் உங்களுடைய பிள்ளைகளுக்கு செய்து வக்கிரத்தை தீர்த்துக்கொள்ள வேணும் என்ற எண்ணம் இருந்தால் தான் இப்படியான பிள்ளைகள் மீதான மிருகத்தனமான தாக்குதலை ஆதரிக்க முடியும்

  • தொடங்கியவர்
சிறுமியை மூர்க்கத்தனமாகத் தாக்கிய பெண் கைது
 
article_1474567866-article_1474544031-1.-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில், 6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில், அச் சிறுமியின் வளர்ப்புத் தாய், கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில் பெண்ணொருவர், குறித்த சிறுமியை, கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, இன்று வியாழக்கிழமை (22) காலை, பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டது.

இவ்வீடியோ பதிவேற்றப்பட்டு, சில மணித்தியாலங்களிலேயே, சிறுமியைத் தாக்கிய தாய், இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கும் கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம், தாக்குதல் மேற்கொண்ட தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாய் உயிரிழந்தமையால், தந்தை வேறு திருமணம் முடித்துள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே, சிறுமியை மிக மூர்க்கதனமாக தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மற்றும் சிறுமியின் சகோதரர்கள் உட்பட நான்கு சிறுவர்கள் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளனர்.

http://www.tamilmirror.lk/182466/ச-ற-ம-ய-ம-ர-க-கத-தனம-கத-த-க-க-ய-ப-ண-க-த-

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மாலை...  இந்தக் காணொளியைப் பார்த்தவுடன்,  
அந்தத் தாயின் கொடூரச்  செயலும், நடு  நடுங்கிக் கொண்டு நிற்கும் சிறுமியின் நிலையும்....
இரவு முழுவதும் நினைத்து, வெகு நேரம் மனக் கண் முன் தோன்றி, நித்திரை வராமல் தவித்தேன்.
இந்த... மரண  அடி வாங்கும்,  அந்தச்  சிறுமியின் மன நிலை எவ்வளவு பாதிக்கப் படும் என்பதை, முதலில் நாம் உணர வேண்டும்.

அத்துடன்... இது அடிக்கடி நடப்பதாம், அதனை  அந்தத் தாயிடமோ, அல்லது அவரது கணவரிடமோ... நேரடியாக சொன்னால்,
சண்டித்தனத்துக்கு வருவார்கள் என்பதால்... இதனைக் கண்டவர் காணொளி எடுத்து அந்தச் சிறுமியை... காப்பாற்றியுள்ளார்.
இப்போது அந்தத் தாயை... கோப்பாய் போலீசார் கைது செய்துள்ளார்கள் என்று அறிகின்றேன்.
இந்த நிலையில்...  காணொளி எடுத்தவர் செய்தது, சரி என்றே சொல்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இது வேறு ஒரு இணையத்தில் வந்தது... உங்கள் பார்வைக்கு இதனை இணைக்கின்றேன், முழுமையாக வாசியுங்கள்.

//இன்று காலை நேரம் 6.30 அன்மித்தது நான் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தேன்.அயலில் உள்ள தோட்டக்கிணற்றடியில் பெண் ஒருவர் மிக ஆக்கிரோசமாக யாரையோ திட்டித்தீர்க்கும் சத்தமும், சிறுமியின் அழுகுரலும் கேட்டது.

அயல் வீட்டில் குடியிருக்கும் பெண் தனது பிள்ளையை அடிக்கடி இவ்வறு திட்டுவதை அவதானித்திருக்கிறேன். ஆகையால் இது வழமையான ஒன்று என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு குளித்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் பெண்ணின் அதட்டும் பத்தமும் அதனைத்தொடர்ந்து பலமாக தாக்கும் சத்தமும் சிறுமியின் அலறல் சத்தமும் குளியலறையிலிருந்த என்னை வெளியே இழுத்து வந்தது. வெளியில் வந்த நான் சத்தம் கேட்கும் திசையை அவதாணித்தேன்.

தடி ஒன்றினால் ஆறு வயது முதிக்கத்தக்க அந்த சிறுமியை அவளது தாய் பலமாக தாக்குவதைப்பார்த்து என்ன செய்வது என ஒரு கணம் திகைத்து விட்டேன். ஓடிச் சென்று அந்தப் பெண்ணிடம் இருந்த தடியை பறித்தெடுக்க எண்ணினாலும் அந்தப் பெண் பற்றியும் அவரது கணவர் பற்றியும் ஏற்கனவே நான் அறிந்த சம்பவங்கள் என்னை தடுத்து நின்றன.

இருந்தும் சிறுமி தொடர்ந்தும் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு முடிவெடுத்தேன். இந்த சிறுமி தாக்கப்படும் கடைசி நாள் இன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதிக்கொண்டு எனது ஒளிப்படக்கருவியின் ஊடாக நடப்பவை அனைத்தையும் ஒளிப்பதிவு செய்தேன்.

அவ்வாறு ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்தக் கானொளியை தயவு செய்து எல்லோரும் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் அந்த ராட்சசியிடமிருந்து அந்த சிறுமியை காப்பாற்றுமாறும் எல்லோரையும் வேண்டுகிறேன்.

இந்த ஒளிப்பதிவைமேற்கொண்டதன் பின்னர் இந்தப் பெண்பற்றி அயலில் விசாரணை செய்த போது சிறுமியை தாக்கிய குறித்த பெண் சிறுமியின் தந்தையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்திருப்பதாகவும் சிறுமியின் தாய் இறந்து விட்டார் என்றும் சிறுமிக்கு இந்தப்பெண் சிறியதாய் என்றும் அறிய முடிந்தது.

இந்தக் கானொளியில் தயவு செய்து அவதாணியுங்கள் மிகக்கூர்மையான கத்தியால் சிறுமி பலமாகத் தாக்கப்படுகிறாள் எனவே குழந்தை நலக்காப்பகங்கள், சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள், சிறுவர்கள் மீது அன்பு செலுத்துவோர் தயவு செய்து இந்தப் பெண்ணிடமிருந்து சிறுமியை காப்பாற்றும் அதே நேரம் குறித்த பெண்ணை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டணை வழங்க ஏற்பாடுகளை செய்யுமாறும் வேண்டுகிறேன்.

நன்றி-Siva Karan//

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் நடக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கரும்பு said:

மனிதநாகரீகம் முன்னேறி உலகம் எங்கேயோ போய்க்கொண்டு உள்ளது. சிறுமியை கொடுமைப்படுத்தும் இந்தப்பெண் நிச்சயம் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு உள்ளே கம்பி எண்ணவேண்டியவர். பிள்ளையை கண்டித்து வளர்ப்பதற்கும், கொடுமைப்படுத்துவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. உங்கள் அம்மாவும் உங்களுக்கு முன்பு இப்படி அடித்தார் என்று இங்கே சும்மா விசர் வியாக்கியானம் கதைக்கக்கூடாது. 

உங்கள் சொந்தப்பிள்ளையை இப்படி உங்கள் மனைவியோ அல்லது வேறு யாரோ வெறிகொண்டு அடித்தால் பொறுத்துக்கொள்வீர்களா? இங்கே இப்படி அடிவாங்குவதற்கு சிறுமி செய்த குற்றம் என்ன? கொலையா? கள்ளக்காதலா? மதுபானம், சிகெரெட், போதைப்பொருள் ஏதாவது பாவித்தாரா? 

குளிப்பதற்கு விரும்பாவிட்டால் இப்படியெல்லாம் மிருகவெறிகொண்டு பிள்ளைகளை அடிக்கலாம் என்று நீங்கள் நினைப்பீர்களாயின் நிச்சயம் ஒரு மனநல மருத்த்துவரிடம் சென்று உங்களை பரிசோதித்துகொள்வது நல்லது.

நீங்கள் இங்கிருந்து கொண்டே, உங்கள் உணர்வுபூர்வமான பார்வையை செலுத்தக் கூடாது என்கிறேன்.

அந்தப் பெண் தனது பிள்ளைகளையும், இந்த மூத்தாரத்து பிள்ளையையும் வேறுபடுத்தி சாப்பாடு தராமல், சேரவிடாமல் தனிமைப் படுத்த அடி போட்டால், 'பேய், பிடாரி' என்பேன்.

இந்த தாயின் நோக்கம், முரண்டு பிடிக்கும் பிள்ளையை குளிக்க வைப்பது.

சனியனே, நீ குளியாவிடில் எனக்கென்ன கேடு என்று போகவில்லையே.

மேலும்,  இதை தடுக்காமல், படம் எடுத்தவர், எமது உணர்சியைக் கூட்ட, தாய் இல்லை, இது இரண்டாம் தாரம் என்று கதை விட்டிருப்பார்.

யாருக்குத் தெரியும்.... உணர்சியில் சிறுமிக்கு பணம் அனுப்ப தயாராக இருப்பவர்களை குறிவைக்கிறாரோ ?

சரி, என்ற விசர் வியாக்கியானத்தை விட்டுட்டு சொல்லுங்க, பாவம் இந்த தாயில்லா பிள்ளையின் பராமரிப்புக்கு 'நீங்கள் எவ்வளவு அனுப்புவீர்கள்' கரும்பர்?

Edited by Nathamuni

7 hours ago, அஞ்சரன் said:

அந்த பெண்ணில் தவறு இருந்தால் அதை சாட்சிப்படுத்தி உரியவர்களிடம் கொடுத்து நடவடிக்கை எடுப்பதுதான் ஒரு மனிதாபிமான பணி.
(நாங்க எல்லாம் தடி தும்பூ ஆகும் வரை அடிவாங்கிய ஆக்கள்)

அதை விட்டு தெரு சண்டியர்கள் போல றோட்டில் உள்ளது எல்லாம் படம் எடுத்து இப்ப தனி நபர் காணி வரை போயாச்சு,அடுத்து வீட்டுக்குள் தான் கமரா போகும் போல தெரிகிறது எங்கு செல்கிறது ஊடகம்,வர வர தமிழ்நாட்டின் ஒரு மாவட்டமாக யாழ்ப்பாணம் மாறிக்கொண்டு வருகிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது..

உங்கள் பணி, மனிதநேயம், ஊடக சுகந்திரம் ,எல்லாம் ஒரு அளவுகோல் உண்டு பெயர் புகழுக்கு ஆசைபட்டு கண்டதையும் எடுத்து பொது தளங்களில் போட்டு உங்களை மீட்பர்கள் ஆக காட்டுவது அபந்தம்.

இப்படி பார்க்க போனால் ஒவ்வெரு நாலு ஆயிரம் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது வீடுகளில்,இதை எல்லாம் வேலியில் நிண்டு படம் எடுத்து இணையத்தில் போட்டு,ஒரு குடும்பத்தை அதன் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்கு உள்ளாகும் செயலாகும்...

கையில் காசில்லாமல் நிக்கும் போது பிள்ளை ஐஸ் பழத்துக்கு அழுதாலும் கையில காலில கிடக்கிறதை உடனம் விற்றாவது வாங்கி கொடுக்கணும்,அப்புறம் "கதறி அழுத பிள்ளை கண்டுக்காத அம்மா" என ஒரு தலைப்பு செய்தியாக வரும் போல எங்க போகிறது எங்க மீடியா புரட்சி தொம்பிகளின் சமூக சீர் திருத்தம் என்றுதான் புரியவில்லை..

கணக்கா வேணாம் யாழ் மிலேனியம் பாரில் போய் நிண்டு ஒருக்கா ஒரு வீடியோ போடுங்க பார்ப்பம் குடிந்து அழியும் குடிமக்கள் என,அல்லது கரீனா பீச்சில் எடுத்து போடுங்க சமூக அவலங்களை, அதை எல்லாம் விட்டு சும்மா இருக்கும் ஏழை பாளைகள் கோடிக்குள் உங்கள் கமராவை நுழைத்து என்னத்த சாதிக்க போறீங்க என்றுதான் புரியவில்லை.

வளர்ப்பு நாய்க்கு கல்லெறி விழுவதில்லை பாவம் தெரு நாய்கள் போறவன் வாறவன் எல்லாம் எறிவான்.

சிறுமி மீது வெறியாட்டம் ஆடிய பெண் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக செய்தி, வரவேற்கத்தக்க விடயம். இது இப்படி வெறியாட்டம் போடுபவர்களுக்கு நல்லதோர் எச்சரிக்கை. தவறு செய்யாவிட்டால் யாராவது வீடியோவில் பிடித்து வில்லங்கத்தில் மாட்டி விடுவார்கள் என்று அஞ்சத்தேவையில்லையே.

Edited by கரும்பு

தாயாக இருந்தாலும் தகப்பனாக இருந்தாலும் மூர்க்கத்தனம் நிறைந்த, இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

தங்கள் இயலாமையை பிள்ளைகளை வதைப்பதன் மூலம் மறைக்க நினைக்கும் மனோபாவத்தின் வெளிப்பாடுகள் இவை.

8 minutes ago, Nathamuni said:

நீங்கள் இங்கிருந்து கொண்டே, உங்கள் உணர்வுபூர்வமான பார்வையை செலுத்தக் கூடாது என்கிறேன்.

அந்தப் பெண் தனது பிள்ளைகளையும், இந்த மூத்தாரத்து பிள்ளையையும் வேறுபடுத்தி சாப்பாடு தராமல், சேரவிடாமல் தனிமைப் படுத்த அடி போட்டால், 'பேய், பிடாரி' என்பேன்.

இந்த தாயின் நோக்கம், முரண்டு பிடிக்கும் பிள்ளையை குளிக்க வைப்பது.

சனியனே, நீ குளியாவிடில் எனக்கென்ன கேடு என்று போகவில்லையே.

மேலும்,  இதை தடுக்காமல், படம் எடுத்தவர், எமது உணர்சியைக் கூட்ட, தாய் இல்லை, இது இரண்டாம் தாரம் என்று கதை விட்டிருப்பார்.

யாருக்குத் தெரியும்.... உணர்சியில் சிறுமிக்கு பணம் அனுப்ப தயாராக இருப்பவர்களை குறிவைக்கிறாரோ ?

சரி, என்ற விசர் வியாக்கியானத்தை விட்டுட்டு சொல்லுங்க, பாவம் இந்த தாயில்லா பிள்ளையின் பராமரிப்புக்கு 'நீங்கள் எவ்வளவு அனுப்புவீர்கள்' கரும்பர்?

பராமரிப்பதற்கு கஸ்டம் வந்தால் இப்படித்தான் உங்கள் பிள்ளைமீதும் வெறியாட்டம் காட்டுவீர்களோ? 

  • கருத்துக்கள உறவுகள்

இனி பிள்ளை ஏதாவது இல்லத்தில் வாழ்க்கையை தொடங்கப்போகிறது, அங்கு என்ன நடக்குமோ யாருக்கு தெரியும்?

3 hours ago, செவ்வந்தி said:

உங்களுக்கு தும்புத்தடியே தும்பானது என்றால் அடுத்த தலைமுறையும் அதே தொடரும் என நினைக்கிறது உங்கட இயலாமை, உங்களுக்கு உங்கள் பெற்றோர் செய்ததை நீங்களும் உங்களுடைய பிள்ளைகளுக்கு செய்து வக்கிரத்தை தீர்த்துக்கொள்ள வேணும் என்ற எண்ணம் இருந்தால் தான் இப்படியான பிள்ளைகள் மீதான மிருகத்தனமான தாக்குதலை ஆதரிக்க முடியும்

இது வக்கிரத்தை தீர்பதல்ல. அந்த "சித்தி" நீ எக்கேடு கெட்டாவது போ என்று விடவில்லை. 

48 minutes ago, Nathamuni said:

அந்தப் பெண் தனது பிள்ளைகளையும், இந்த மூத்தாரத்து பிள்ளையையும் வேறுபடுத்தி சாப்பாடு தராமல், சேரவிடாமல் தனிமைப் படுத்த அடி போட்டால், 'பேய், பிடாரி' என்பேன்.

இந்த தாயின் நோக்கம், முரண்டு பிடிக்கும் பிள்ளையை குளிக்க வைப்பது.

சனியனே, நீ குளியாவிடில் எனக்கென்ன கேடு என்று போகவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கரும்பு said:

பராமரிப்பதற்கு கஸ்டம் வந்தால் இப்படித்தான் உங்கள் பிள்ளைமீதும் வெறியாட்டம் காட்டுவீர்களோ? 

நீங்கள் இன்னும் உணர்வு பூர்வமாகவே இருக்கிறீர்கள்...

பெண் பிள்ளைகளை விபச்சாரத்துக்கு கடத்தும் / வாங்கும் கும்பல்களிடம் விலை பேசி வித்துவிடும் பின்னர் பெடடை யாரோடோடயோ ஓடி போட்டுது, ஓடு காலி என்று கதை விடும் சொந்த தாய்மாரை பத்தி கேள்விப் பட்டு இருக்கிறீர்களா?

தண்ணி போட்டு விட்டு சாப்பிடலாம் என்று வாங்கி வந்த உருளைக்கிழங்கு பொரியலை, டாய்லட் போய் வருவதட்கிடையில் சாப்பிட்டு விடட, 5 வயது மகனை தலையில் ஒரே போடாகப் பொல்லால் போட்டுக் கொலை செய்து உள்ளே போய் இருக்கும் சொந்த தகப்பனை பத்தி கேள்விப் பட்டு உள்ளீர்களா?

சினிமாவில் தாய் படும் பாட்டினை கண்ணீர் ததும்ப பார்த்த விட்டு, வீடு வந்ததும், ஏன் முடடை பொரிக்கவில்லை என்று பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகள் தான் நாம்.

அந்த பெண்ணில் தவறு இருந்தால் சட்டம் தனது கடமையினை செய்யும். 

அதே வேலை, கண்ணால் காண்பதுவும் பொய் என்று இருப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.