Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் திரையரங்குகள்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா ஜாம்பவான்கள் எங்கள் பலரின் உள்ளங்களில் குடிகொண்டிருப்பார்கள். அதிலும் இவர்களை வீட்டிற்கு சொல்லியும் சொல்லாமலும் தான் சந்தித்து இருக்கிறோம் .

1960 முதல் 1980 காலப்பகுதி வரை புரட்ச்சித்தலைவர் ,எம்.ஜி.ஆர் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  , மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விசுவநாதன் என சினிமா ஜாம்பவான்கள் எங்கள் பலரின் உள்ளங்களில் குடிகொண்டிருப்பார்கள். அதிலும் இவர்களை வீட்டிற்கு சொல்லியும் சொல்லாமலும் தான் சந்தித்து இருக்கிறோம் .  இவர்களை சந்தித்த இடங்களை ராணி, ராஜா, சாந்தி, வின்சன், லிடோ, ரீகல், வெலிங்டன், ஸ்ரீதர், மனோகரா, ரியோ, ஹரன்  என வரிசைப்படுத்த முடியும்.

5%20%281%29.JPG

இதில் இன்று ராஜா, சாந்தி (செல்வா) இரண்டு திரையரங்குகளில் தான் திரைப்படங்கள் யாழில் காண்பிக்கின்றது என்ற செய்தியை வெளிநாடுகளில் உள்ள ரசிக்கப் பெருமக்களுக்கு அறியத்  தருகின்றோம் .

5%20%282%29.JPG

1980ற்கு பின் விடுதலை போராட்டம், தொலைக்காடசி வருகை,  கசெட், சீ.டி அறிமுகம். மாணவர்களிற்கான பிரத்தியோக கல்வி நிலையங்கள். படம் பார்ப்பவர்கள்,  வெளிநாடு பயணம் என பல காரணங்களை திரையரங்குகள் குறிந்த விளம்பரமாக கூறலாம்.

5%20%283%29.JPG

1937ல் வெளிவந்த  ‘’ஏழிசை வேந்தர்’’ காலஞ்சென்ற அன்றய சூப்பர் ஸ்டார் தியாகராஜா பாகவதருடைய படங்கள் கூட யாழ் திரையரங்குகளில் திரையிடப்பட்டதாக வரலாறுகள் உண்டு. திரையரங்குகளில் கட்-அவுட்  கட்டுகின்ற கலாச்சாரத்திற்கு யாழ்ப்பாணம் என்றும் விதிவிலக்கல்ல.

5%20%284%29.JPG

உலகம் சுற்றும் வாலிபன் (ஸ்ரீதரில் ஓடியது)

வசந்த மளிகை (வெலிங்டனில் ஓடியது )

இதயக்கிளி (மனோகராவில் ஓடியது )

குடியிருந்த கோவில் (ராஜாவில் ஓடியது )

அடிமைப்பெண் (இராணியில் ஓடியது )

நவரத்தினம் (சாந்தியில் ஓடியது )

ஒரு கைதியின் டயரி (றீகலில் ஓடியது )

பட்டாக்கத்தி பைரவன் (ஸ்ரீதரில் ஓடியது)

கந்தன் கருணை (இராணியில் ஓடியது)

வாடகைக் காற்று (இராணியில் ஓடியது)

மாட்டுக்காரவேலன் (ராணி தியேட்டர் )

நாளை நமதே (ராணி தியேட்டர் )

காவல்காரன் (ராஜா தியேட்டர் )

நீரும் நெருப்பு (ராஜா தியேட்டர் )

பாபு (ராஜா தியேட்டர் )

ரிக்ஷாகாரன் (வெலிங்டன் )

சகலகலாவல்லவன் (ஷாந்தி )

மூன்றாம் பிறை (ஸ்ரீதர்)

இன்னும் இந்த கட் அவுட்டுகள் பலரது நெஞ்சங்களில் நிலைத்து இருக்கும்.

5%20%285%29.JPG

இவை மட்டுமல்ல, சுபாஷ், ரிக்கோ , லிங்கம் கூல் பார்களிற்கு தமது காதலியை கூட்டிச்சென்று விட்டு இந்த திரையரங்குகள் பலரது காதலை கல்யாணம் வரை கொண்டு வர காரணமாக இருந்ததை யாரும் மறக்க மாட்டார்கள் . மறந்தும் இருக்க மாட்டார்கள் . இங்கு சென்று காதல் கை கூடாதவர்கள் இருந்தாலும் அவர்களுடைய கொம்பியூடர் பாஸ்வேர்ட் ஆக  காதலியின் பெயர் இன்று வரை இருப்பதற்கு இந்த திரையரங்குகள் காரணமாக இருந்து இருக்கிறது.

5%20%286%29.JPG

 

12 தியேட்டர்கள் யாழ்நகரில் இருந்ததாலும்  இன்று இரண்டு  தியேட்டர்களே இயங்கி வருகின்றன.

5%20%287%29.JPG

வெலிங்டன் தியேட்டர் முற்றாக அழிந்து கட்டிடங்கள் மட்டும் தெரிகிறது. கொழும்பு-யாழ்ப்பாணம் ஓடிய K.G.Express பஸ்கள் நின்ற இடம் புல் தரைகளாக இருக்கிறது.

5%20%2813%29.jpg

ஸ்ரீதர் தியேட்டர் இருந்த இடத்தில் க.ஈ.பீ.பீ.யின் கட்சி காரியாலயம் இயங்கி வருகிறது. வின்சன் திரையரங்கு கட்டிடத்தில் பொருட்கள் வைத்து எடுக்கும் களஞ்சியமாக பயன் படுத்தப்படுகிது. இந்த வின்சன் தியேட்டர் கீழிருந்து மேலாக மேல் நாட்டு திரையரங்குகள் போல் கட்டபட்டிருந்தது.

5%20%288%29.JPG

இங்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் ''என் கடமை '' படம் ஓடியது ஞாபகத்தில் இருக்கிறது. ராணி தியேட்டர் இருந்த இடத்தில் சீமாட்டி எனும் புடவை கடை இருக்கிறது .

5%20%289%29.JPG

ரியோ திரையரங்கு நகரசபை கட்டிடத்தோடு அழிந்து விட்டது. லிடோ திரையரங்கு இருந்த இடத்தில் கடைகள் கட்டபட்டுள்ளது. ஆங்கில படங்கள் ஓடி தமிழர்களை ஆங்கிலம் பேச வைத்த ரீகல் தியேட்டரின் கட்டிட சுவர்களை காண கூடியதாக இருக்கிறது.

5%20%2810%29.JPG

கற்பக விநாகயர் ஆலயத்திற்கு அண்மையில் இருக்கும் மனோகராவில் தற்போது படங்கள் ஓடுவதில்லை.

5%20%2811%29.JPG

இவ்வாறு 1960 முதல் 1980 காலப்பகுதிகளில் இளையவர் , முதியவர்கள் , குடும்பத்தினர் , காதலர்கள் எனப்பலருடைய  வாழ்க்கையின் பொழுது போக்குக்கு களம் அமைத்த திரையரங்குகள் இவ்வாறு போய் விட்டன .

5%20%2812%29.jpg

ஆனால் இங்கு பார்த்த படங்களும் , யாரோடு படம் பார்க்க சென்றோமோ  அந்த நினைவுகள் எல்லாம் பசுமையானவையாகவே இருக்கின்றன.

இன்று கார்கில்ஸ் சதுக்கத்தில் புதிதாக சொகுசு திரையரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை விட யாழ் மாவட்டத்தில்…

இணுவில் சங்கிலியன் தியேட்டர் ,

சங்கானையில் மணிமஹால் தியேட்டர் ,

பண்டத்தரிப்பில் செல்வா தியேட்டர் ,

சுன்னாகத்தில் நாகம்ஸ் தியேட்டர் ,

மூளாயில் நியூ தீவாளி தியேட்டர் ,

நெல்லியடியில் மகாத்மா தியேட்டர் , லட்சுமி தியேட்டர் ,

வல்வெட்டித்துறையில் யோகநாயகி தியேட்டர் ,

சாவகச்சேரியில் தேவேந்திர தியேட்டர் , வேல் சினிமா தியேட்டர் ,

வல்வெட்டியில் ரஞ்சனாஸ் தியேட்டர் ,

கோண்டாவிலில் லதா தியேட்டர் ,

அச்சுவேலியில்  லாலா சோப் ஒரு தியேட்டர்  இருந்ததாகவும் கிளிநொச்சியில் ஒரு தியேட்டர்

இருந்ததாகவும் வரலாற்று பக்கங்களில் பதிவுகள் இருக்கின்றன.

5%20%2814%29.JPG

இதில் தியேட்டர் உரிமையாளர்களின் ஒற்றுமை காரணமாக ‘’உலகம் சுற்றும் வாலிபன்’’ போன்ற வரலாற்று படங்கள் ஒரே நேரத்தில் மூன்று திரையரங்குகளில் ஓடி வரலாறு படைத்தது.

5%20%2815%29.JPG

5%20%2816%29.JPG

5%20%2817%29.JPG

 

 

http://www.tamilsguide.com/blog/articles/1651

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு தியேட்டர்களும்  மண்ணிலே பூத்து மண்ணுக்குள் உரமாகியதை நினைக்கும்போது வேதனையாய் இருக்கின்றது ....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனோகரா தியேட்டர்...

 

 

ராஜா தியேட்டர்..

வின்சர்..

 

 

லிடோ தியேட்டர்...

 

வெலிங்டன் தியேட்டர்..

 

ஸ்ரீதர் தியேட்டர்...

 

சாந்தி தியேட்டர்...

 

ஹரன் தியேட்டர்...

 

ரீகல் தியேட்டர்...

 

ராணி தியேட்டர்..

....................:grin:..........

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியார் ஒரு தியேட்டரையும் விட்டு வைக்கல போல

மட்டக்களப்பு ......... சாந்தி  திரையரங்கில்    மனிதன் திரைப்படம் பார்த்து நல்ல ஞாபகம் சிறுவயதில் 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது... இரு திரை அரங்குகளில் தான்.. படம் காட்டப் படுகின்றது என்பதை வாசித்த போது... ஆச்சரியமாக இருந்தது.
அதுகும்... நல்லதுக்குத்தான். இல்லாட்டி...  "கட் அவுட்டுக்கு" பால் ஊத்துற சனம், அதிகரித்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்க காலத்தில் இவை எதுவும் இயங்கவில்லை. எல்லாம் பொம்பர்.. ஹெலி.. ஷெல் அடிக்கு இலக்காகிக் கிடந்தன. 

  • கருத்துக்கள உறவுகள்

ரீகல் தியேட்டர் .....! கண் மூடி காதால் சுவாசிக்கவும் ....! tw_blush:

 

 

Edited by suvy
சிறு திருத்தம் .

25 minutes ago, suvy said:

ரீகல் தியேட்டர் .....! கண் மூடி காதால் சுவாசிக்கவும் ....! tw_blush:

மறக்க முடியுமா இந்த இசையை?

யாழில் தற்போது செல்வா (பழைய சாந்தி), ராஜா (இரு தியேட்டர்கள்), மற்றும் கார்கில்ஸ் ஸ்குயாரில் 3 தியேட்டர்கள் (மேலை நாட்டு தரத்தில் நல்ல ஒளி, ஒலியுடன் தரமான இருக்கைகளுடனும்) உள்ளன.
 

இப்பவெல்லாம் ஆங்கிலப் படங்களை இங்கு யாருமே திரையிடுவது இல்லை.

மலரும் நினைவுகள்!!!

 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அந்த காலத்தில் adults only படங்கள் திரையிடப்பட்டுள்ளதா? 

1 hour ago, colomban said:

யாழில் அந்த காலத்தில் adults only படங்கள் திரையிடப்பட்டுள்ளதா? 

இது ஒருவரின் முகப்புத்தகப் பதிவு. சிலவேளை இதனை இங்கு பதியக்கூடாதோ என்று எனக்கு தெரியாது. ஆனாலும் இதைவிட அழகாக இப்போது 50 வயதுகளில் உள்ளவர்களின் அந்தக்கால ஆங்கில சினிமா அனுபவத்தை எவராலும் மேம்பட எழுத முடியாது என்பது எனது கருத்து.

 

பசுமை நிறைந்த நினைவுகள்: அன்று யாழ்நகரில் பார்த்த ஆங்கிலத்திரைப்படங்கள்.

அண்மையில் ஐபிசிதமிழ் தொலைக்காட்சியினரின் 'வணக்கம் தாய்நாடு' என்னும் தலைபில் அன்றைய யாழ்நகரத்திரையரங்குகளின் இன்றைய நிலை என்பது பற்றிய காணொளியினை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். அது பழைய நினைவுகள் பலவற்றைக் கிளறிவிட்டது. அன்று றியோ, றீகல், மனோஹரா போன்ற திரையரங்குகளில் , என் பதின்மவயதுகளில் எத்தனை ஆங்கிலத்திரைப்படங்களைப் பார்த்திருப்பேன். அவற்றை எனக்கு அறிமுகம் செய்த அத்திரையரங்குகளின் இன்றைய நிலை நெஞ்சில் ஒருவித கழிவிரக்கத்தை வரவழைக்கும். இப்பதிவு அன்று யாழ்திரையரங்குகளில் நான் பார்த்த ஆங்கிலத்திரைப்படங்கள் பற்றியதொரு பொதுவான பதிவு.

அது ஒரு காலம். அப்பொழுது யாழ்ப்பாணத்தில் றீகல் (வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்திருந்த றீகல் இப்பொழுது இல்லை), மனோஹரா தியேட்டர்களில் மட்டுமே அதிக அளவில் ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் அதில் ரியோ திரைப்பட அரங்கும் சேர்ந்து கொண்டது. யாழ் நகர மண்டபத்தின் பகுதியே அவ்விதம் ரியோ தியேட்டராக மாறியது. ஆங்கிலப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகள் பாடசாலை மாணவர்களால் நிறைந்திருக்கும். கலரி, இரண்டாம் வகுப்பு மட்டுமே எப்பொழுதும் நிறைந்திருக்கும். பாடசாலை விட்டதும் றீகலுக்கும், மனோஹராவுக்கும் மாணவர்கள் படையெடுப்பார்கள். அன்று பார்த்த ஆங்கிலப் படங்கள் பல இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன. அத்திரைப்படங்களினூடு எனக்கு அறிமுகமான நடிகர்கள் பலர். அந்தனி குயீன், சாள்டன் கெஸ்டன் (இவர்களெல்லாரும் என் அப்பாவின் காலகட்டத்து நடிகர்கள். என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள். எங்கள் காலகட்டத்திலும் நடித்துக்கொண்டிருந்தார்கள்.), மைக்கல் கெயின், ஜான் வெய்ன், கிறிஸ்தோபர் லீ, லீ வான் கிளீவ், ஜீன் போல் பெல் மாண்டோ , யூல் பீரயினர், சீன் கானரி (ஷான் கானரி), ஜீனா லொல்லோ பிரிஜிடா (இவரது ஒரேயொரு படத்தைத்தான் பார்த்திருக்கின்றேன். அது விக்டர் ஹியுகோவின் புகழ் பெற்ற நாவலான The Hunch Back a Notre Dame , தமிழில் அதன் தழுவல் கல்யாணகுமார் நடிப்பில் மணியோசை என்று வந்தது.), உர்சுலா அன்ரெஸ், சார்ள்ஸ் பிரோன்சன், அலன் டிலோன், ஜூலியனா ஜெம்மா, கேர்க் டக்ளஸ், ஹென்றி ஃபொண்டா, ஹரி கூப்பர் (இவர் எங்களது அப்பாவின் பால்ய காலத்து நாயகர்களில் ஒருவர்; எங்களது காலத்திலும் இவரது புகழ்பெற்ற திரைப்படமான High Noon திரையிட்டபோது பார்த்திருக்கின்றேன்.), கிரகரி பெக், கிளிண்ட் ஈஸ்ட்வூட், டெலிச விலாஸ் என்று பெரியதொரு நடிகர்/ நடிகைகளின் பட்டாளம் அறிமுகமானது அக்கால கட்டத்தில்தான். சிசில் டிமில் (Cecil DeMille ) ஹாலிவூட்டின் புகழ்பெற்ற தயாரிப்பாளர்; இயக்குநர்; வசனகர்த்தா. 'பென்ஹர்' , 'டென் கமாண்ட்மென்ட்ஸ்' , 'த கிரேட்டஸ்ட் ஷோ ஒன் ஏர்த்' ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தவர். இவரது மகளே அந்தனி குயீனின் முதல் மனைவி என்று அப்பா அடிக்கடி கூறுவார்.

இவ்விதமாக அன்று பார்த்த ஆங்கிலப் படங்கள் பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியவையாக விளங்கின. ஜேம்ஸ் பாண்டின் துப்பறியும் படங்கள், ஆல்ஃபிரெட் ஹிட்ஷாக்கின் திகில் படங்கள் ('சைக்கோ திரைப்படத்தை அந்த வயதிலேயே பார்த்திருக்கிறேன்.), திகில் மிகுந்த பேய்ப்படங்கள் (கிறிஸ்தோபர் லீ டிராகுலாவாக வரும் திரைப்படங்கள்), வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைப் படங்கள் (It is a mad mad mad wordl திரைப்படத்தை இப்பொழுது நினைத்தாலும் புன்னகை அரும்பும். அவ்வளவுக்கு வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த படம்; மனோஹராவில் பார்த்தது), கானகத்து மிருகங்களைப் பற்றிய படங்கள் (ஜான் வெயினின் 'ஹட்டாரி' , ஆபிரிக்கன் சவாரி போன்ற படங்கள். ஹட்டாரிக்குப் பாடசாலைகளே மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம்), 'வெஸ்டேர்ன் (அல்லது Cow-Boy) படங்கள் (லீ வான் கிளீவ், சார்ள்ஸ் புரோன்சன், ஜான் வெயின், ஜூலியனா ஜெம்மா போன்றவர்களின் பெரும்பாலான திரைப்படங்கள்; சார்ள்ஸ் புரோன்சன் தனது ஆரம்ப காலத்தில் இவ்விதமான படங்கள் அதிகமானவற்றில் நடித்திருக்கின்றார். அதிலொன்றான The Bull of the West எங்கள் காலத்தில் திரையிட்டபோது பார்த்திருக்கின்றேன். நான் பார்த்த இவரது முதலாவது படம் 'ரெட் சன்', யாழ் றியோ தியேட்டரில் பார்த்தேன். பின்னர் இவர் பல்வேறு வேடங்களில் நடித்த திரைப்படங்கள் வெளிவந்தன.), அறிவியல் அல்லது விஞ்ஞானத் திரைப்படங்கள் ( சாள்டன் ஹெஸ்டனின் 'த ஒமேஹா மான்', யூல் பிரையினரின் 'வெஸ்ட் வேர்ல்ட் இவை இரண்டையும் ஒருபோதுமே மறக்க முடியாது.

யூல் பிரயினர் 'அன்ட்ராயிட்'டாக நடிக்கும் 'வெஸ்ட் வேர்ல்ட்டில்' பலமுறை இறந்து பிழைப்பார். ஜூராசிக் புகழ் மைக்கல் கிரைய்க்கடன் எழுதி, இயக்கிய திரைப்படமது. பொழுதுபோக்குப் பூங்காவொன்றில் அமெரிக்காவின் ஆரம்ப காலகட்டம், ரோம் காலகட்டம், ஐரோப்பாவின் மத்திய காலகட்டம் போன்றவற்றை உள்ளடக்கிய விருப்பமான காலகட்டத்துக்குரிய கம்யூட்டர் மனிதர்களுடன் நீங்கள் விளையாடலாம். அவர்களைக் கொல்லவும் முடியும். இவ்விதமான கம்யூட்டர் மனிதர்கள் ஒருபோதுமே மனிதர்களை மீறாத வகையில்தான் 'புறோகிறாம்; எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அந்தக் கம்யூட்டர் மனிதர்கள் புறோகிறாமையும் மீறிச் செயற்பட ஆரம்,பித்துவிடுகின்றார்கள். மனிதர்களைக் கொல்லவும் செய்கின்றார்கள். இவ்விதமாகச் செல்லும் கதை. மைக்கல் கிராய்க்டனின் ஜுராசிக் பார்க்கிலும் இவ்விதமானதொரு பொழுதுபோக்குப் பூங்காவொன்று , ஃபாசிலிலுள்ள டைனோசர்களின் உயிர் அணுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு கட்டத்தில் அம்மிருகங்கள் மனிதர்களை மீறிச் செயற்பட ஆரம்பிக்கும்.), கொள்ளைகளை மையமாக வைத்து உருவான படங்கள் (டேஞ்சர் டயபோலிக், த பிரயின், த இத்தாலியன் ஜாப், த கிரேட் ட்ரெயின் ராபரி, தெயர் வாஸ் அ குரூக்ட் மான் போன்ற) என்று பல்வகையான ஹாலிவூட் திரைப்படங்களில் மூழ்கிக் கழிந்தது எங்களது பாடசாலை மாணவப் பருவம். பல திரைப்படங்கள் எங்கள் வயதுக்கு மீறிய காட்சிகள் ( நடிகையின் நீர் வீழ்ச்சியில் நிர்வாணக் குளியல், நாயக- நாயகியரின் முத்தக் காட்சிகள் போன்ற) அவ்வப்போது , ஓரிரு கணங்கள், வருவதுண்டு. அவற்றுக்காகவும் சிலர் ஆங்கிலப்படங்களுக்குப் படையெடுப்பதுண்டு.

ஹேர்க் டக்ளஸின் There was a crooked man மறக்க முடியாத திரைப்படங்களிலொன்று. அதில் அவர் செல்வந்தர் ஒருவரிடமிருந்து அரை மில்லியன் டாலர்கள் கொள்ளையடிப்பார். அக்கொள்ளையில் ஈடுபட்டவர்களில் அவரைத் தவிர மற்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு விடுகின்றார்கள். இவர் பணத்தைப் பெண்களின் உள்ளாடைக்குள் முடிந்து, பாம்புப் புற்றொன்றில் போட்டு விடுவார். பின்னர் இவர் கொள்ளையடித்த செல்வந்தரால் காட்டிக் கொடுக்கப்பட்டு அரிசோனாவிலுள்ள பாலைநிலமொன்றின் நடுவிலுள்ள சிறைக்கூடத்தில் அடைக்கப்படுகின்றார். அவரைச் சிறைப்பிடிக்கும் சிறையதிகாரியாக ஆரம்பத்தில் ஹென்றி ஃபொன்டா வருவார் (பின்னர் ஏற்கனவே இருந்த சிறை வார்டனாக வருவார்). சிறையிலிருந்த வார்டனுக்கு ஹேர்க் டக்ளஷின் பணத்தைப் பங்கு போடவேண்டுமென்று ஆசை. அதற்காக அவர் ஹேர்க் டக்ளசுடன் திட்டமிடுகையிலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றார். அதன் பின்னர் புதிய வார்டனாக வருகின்ரார் ஹென்றி ஃபொன்டா. பின்னர் சிறையை உடைத்து ஹேர்க் டக்ளஸ் தப்பிச் சென்று பாம்புப் புற்றிலிருந்து பண முடிப்பை எடுத்து, மகிழ்ச்சியுடன் திறக்கையில் எதிர்பாராத வகையில் அதற்குள்ளிருந்த பாம்பு பாய்ந்து இவரைக் கொத்திவிடவே இறந்து போகின்றார். இவரைப் பின்தொடர்ந்து வரும் வார்டன் ஹென்றி ஃபொன்டா இவரது உடலையும், பண முடிப்பையும் எடுத்துக்கொண்டு சிறைச்சாலைக்குச் செல்கின்றார். சென்றவர் ஹேர்க் டக்ளசின் உடலைப் போட்டுவிட்டு, பணமுடிப்புடன் மெக்சிக்கோவுக்குத் தப்பிச்செல்கிறார். ஹேர்க் டகள்சின் பாம்புப் புற்றுக்குள்ளிருந்த பண முடிப்பை எடுக்கும் போது எதிர்பாராத விதமாக அதனுள்ளிருந்த பாம்பு பாய்ந்து கொத்தும் கட்டத்தில் திரையரங்கு அதிர்ச்சியில் ஆழ்ந்துவிடும். அந்தக் கட்டம்தான் எப்பொழுதும் இந்தப் படத்தைப் பற்றி எண்ணுகையில் நினைவுக்கு வரும்.ஹேர்க் டக்ளஸின் There was a crooked man மறக்க முடியாத திரைப்படங்களிலொன்று. அதில் அவர் செல்வந்தர் ஒருவரிடமிருந்து அரை மில்லியன் டாலர்கள் கொள்ளையடிப்பார். அக்கொள்ளையில் ஈடுபட்டவர்களில் அவரைத் தவிர மற்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு விடுகின்றார்கள். இவர் பணத்தைப் பெண்களின் உள்ளாடைக்குள் முடிந்து, பாம்புப் புற்றொன்றில் போட்டு விடுவார். பின்னர் இவர் கொள்ளையடித்த செல்வந்தரால் காட்டிக் கொடுக்கப்பட்டு அரிசோனாவிலுள்ள பாலைநிலமொன்றின் நடுவிலுள்ள சிறைக்கூடத்தில் அடைக்கப்படுகின்றார். அவரைச் சிறைப்பிடிக்கும் சிறையதிகாரியாக ஆரம்பத்தில் ஹென்றி ஃபொன்டா வருவார் (பின்னர் ஏற்கனவே இருந்த சிறை வார்டனாக வருவார்). சிறையிலிருந்த வார்டனுக்கு ஹேர்க் டக்ளஷின் பணத்தைப் பங்கு போடவேண்டுமென்று ஆசை. அதற்காக அவர் ஹேர்க் டக்ளசுடன் திட்டமிடுகையிலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றார். அதன் பின்னர் புதிய வார்டனாக வருகின்ரார் ஹென்றி ஃபொன்டா. பின்னர் சிறையை உடைத்து ஹேர்க் டக்ளஸ் தப்பிச் சென்று பாம்புப் புற்றிலிருந்து பண முடிப்பை எடுத்து, மகிழ்ச்சியுடன் திறக்கையில் எதிர்பாராத வகையில் அதற்குள்ளிருந்த பாம்பு பாய்ந்து இவரைக் கொத்திவிடவே இறந்து போகின்றார். இவரைப் பின்தொடர்ந்து வரும் வார்டன் ஹென்றி ஃபொன்டா இவரது உடலையும், பண முடிப்பையும் எடுத்துக்கொண்டு சிறைச்சாலைக்குச் செல்கின்றார். சென்றவர் ஹேர்க் டக்ளசின் உடலைப் போட்டுவிட்டு, பணமுடிப்புடன் மெக்சிக்கோவுக்குத் தப்பிச்செல்கிறார். ஹேர்க் டக்ளசின் பாம்புப் புற்றுக்குள்ளிருந்த பண முடிப்பை எடுக்கும் போது எதிர்பாராத விதமாக அதனுள்ளிருந்த பாம்பு பாய்ந்து கொத்தும் கட்டத்தில் திரையரங்கு அதிர்ச்சியில் ஆழ்ந்துவிடும். அந்தக் கட்டம்தான் எப்பொழுதும் இந்தப் படத்தைப் பற்றி எண்ணுகையில் நினைவுக்கு வரும்.

WalkAbout ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற நாவல்களிலொன்றான WalkAbout என்பதை அடிப்படையாக வைத்து உருவான திரைப்படம். ஒரு பதின்ம வயது வெள்ளியினத்துச் சிறுமியும், அவளது இளைய தம்பியும் ஆஸ்திரேலியப் பாலை வனத்தில் வழிதடுமாறிச் சிக்குண்ட நிலையில் (சுற்றுலாவுக்காக அழைத்து வந்த அவர்களது தந்தை அவர்களைச் சுட்டுக்கொல்ல முற்படுகையில் இவர்கள் இருவரும் தப்பிச் செல்கின்றார்கள்; தந்தை காருக்குத் தீ வைத்து விட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொல்கின்றார்), அவர்களுடன் சேரும் ஆஸ்திரேலியவின் பூர்விகக் குடி இளைஞனொருவனும் சேர்ந்து கொள்கின்றான். இவர்கள் மூவரும் அப்பாலை வனப் பிரதேசத்தில் தப்பிப் பிழைத்தலுக்காக நடத்தும் போராட்டம் பற்றிய படம். என் மனதில் பசுமையாக நிற்கும் ஆங்கிலப் படங்களில் WalkAbout ற்கும் முக்கிய இடமுண்டு.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

இது ஒருவரின் முகப்புத்தகப் பதிவு. சிலவேளை இதனை இங்கு பதியக்கூடாதோ என்று எனக்கு தெரியாது. ஆனாலும் இதைவிட அழகாக இப்போது 50 வயதுகளில் உள்ளவர்களின் அந்தக்கால ஆங்கில சினிமா அனுபவத்தை எவராலும் மேம்பட எழுத முடியாது என்பது எனது கருத்து.

 

இந்த பழசுகளோட ஒரே தொந்தரவாக கிடக்குது. எல்லாம் சொல்லுறார். 'Adults Only படங்களுக்கு அடிச்சுப் பிடிச்சுக் கொண்டோடின விசயத்தினை சொல்லுறார் இல்லையே, ஜீவன்...

பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் வாழ்க்கை.

அட விடுங்க. 

ஆணைக்கோடடைக் கள்ளும், கனவாய்க் கறியும் இண்டைக்கும் கிடைக்குதோ இல்லையோ ? :grin:
 .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

யாழில் அந்த காலத்தில் adults only படங்கள் திரையிடப்பட்டுள்ளதா? 

ஸ்ரீதர்,  தியேட்டரில்....  "Born Black"  என்ற படம் பார்க்க, பெரிய ஆட்களின் தோரணையில்.... 
முகத்துக்கு கொஞ்சம் "மேக் அப்" பண்ணி.... நானும் நண்பனும் (அர்ஜுனுக்கு நன்கு தெரிந்தவர்)  அக்கம் பக்கம் பார்த்து....
ரிக்கற் கவுண்டரில்... நிற்கும் போது, எமது அயலில் வசிக்கும்.. ஒருவர் முன்னுக்கு நிற்பதை பார்த்து....
தலை தெறிக்க... ஓடி வந்ததால், அந்தப் படம் பார்க்காமல் போனது, இன்னும்.. கவலையாக இருக்குது.

44 minutes ago, Nathamuni said:

ஆணைக்கோடடைக் கள்ளும், கனவாய்க் கறியும் இண்டைக்கும் கிடைக்குதோ இல்லையோ ? :grin:

புங்கையர் வேற தேவையில்லாமல் படத்தை போட, நம்ம நாதம்ஸ் கள்ளுக்கும் கணவாய்க்கும் அலையிறார்.
ஆனைக்கோட்டை கள்ளும் கிடைக்கும், கணவாய் கறியும் கிடைக்கும் - ஆனா அந்த எக்ஸ்ட்ரா பிட்டிங் மட்டும் கிடைக்காது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

Image result

Ursula Andress

கதை புப்புவா நியூகனியில் நடப்பதாக காட்டி இலங்கையில் படமாக்கப் பட்ட இத்தாலிய மொழிப படம் The Mountain of the Cannibal God. ஆங்கிலத்தில்  Prisoner of the Cannibal God என்ற பெயரிலும் வெளிவந்தது. காட்டினுள் ஆராய்வு நடாத்த சென்ற கணவரை தேடி செல்லும் இவர் மனித மாமிசம் உண்ணும், காட்டு மிராண்டிகளிடம் மாட்டுப் பட.... அவர்களோ, இவரை நிர்வாணமாக கட்டி, சாப்பிட தயாராக... ஏதோ ஒரு காரணத்தினால், அவர் தமது தெய்வத்தின் உருவம் என்று, அவரை கடவுளாக வணங்க தொடங்க....

அது ஒரு  Adults Only படம். மிக அதிகமான நிர்வாண காட்சிகளும், வன்செயல்களும் இருந்தமையால், 1979ல் வந்த இந்தப் படத்தினை 2001 வரை பிரித்தானியாவில் தடை விதிக்கப் பட்டு இருந்தது.

ஆனால்,இதை விளம்பரமாக சொல்லியே, பலரை றீகள் தியேட்டர் இழுத்து காசு பார்த்தது.

Mountain of cannibal god poster3.jpg  

Image result for prisoner of the cannibal god

Image result for prisoner of the cannibal god

சுவிஸ் நாட்டு நடிகை Ursula, மேல்நாட்டு நடிகைகளில் எடு ப்பான மார்பழகு கொண்டவர் இவர் என்ற புகழை யாரும் இன்னும் முறியடிக்கவில்லை என்கிறார்கள். :223_speak_no_evil:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8.10.2016 at 0:01 AM, Nathamuni said:

Image result

Ursula Andress

இலங்கையில் படமாக்கப் பட்ட இத்தாலிய மொழிப படம் The Mountain of the Cannibal God. ஆங்கிலத்தில்  Prisoner of the Cannibal God என்ற பெயரிலும் வெளிவந்தது. காட்டினுள் ஆராய்வு நடாத்த சென்ற கணவரை தேடி செல்லும் இவர் மனித மாமிசம் உண்ணும், காட்டு மிராண்டிகளிடம் மாட்டுப் பட.... அவர்களோ, இவரை நிர்வாணமாக கட்டி, சாப்பிட தயாராக... ஏதோ ஒரு காரணத்தினால், அவர் தமது தெய்வத்தின் உருவம் என்று, அவரை கடவுளாக வணங்க தொடங்க.... அது ஒரு  Adults Only படம். மிக அதிகமான நிர்வாண காட்சிகளும், வன்செயல்களும் இருந்தமையால், 1979ல் வந்த இந்தப் படத்தினை 2001 வரை பிரித்தானியாவில் தடை விதிக்கப் பட்டு இருந்தது. ஆனால்,இதை விளம்பரமாக சொல்லியே, பலரை றீகள் தியேட்டர் இழுத்து காசு பார்த்தது.

 

உந்தப்படம் ரீகல் தியேட்டரிலை  ஒரே ஹவுஸ் புல்லாய் ஓடினது.....பயங்கரத்தோடை அந்தமாதிரி கிளுகிளுப்பான படம்.......உடம்பு சூடு கூடி ஓடுப்பட்டு திரிஞ்சது இப்பவும் நினைவிலை இருக்கு.....அது சரி வெலிங்டன் தியேட்டரிலை  the body  எண்டொரு படம் ஓடினது ஆருக்கும் தெரியுமோ...எனக்கும் ஒழுங்கான பெயர் ஞாபகத்துக்கு வருதில்லை....:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீதர்,  தியேட்டரில்....  "Born Black"  என்ற படம் பார்க்க, பெரிய ஆட்களின் தோரணையில்.... 
முகத்துக்கு கொஞ்சம் "மேக் அப்" பண்ணி.... நானும் நண்பனும் (அர்ஜுனுக்கு நன்கு தெரிந்தவர்)  அக்கம் பக்கம் பார்த்து....
ரிக்கற் கவுண்டரில்... நிற்கும் போது, எமது அயலில் வசிக்கும்.. ஒருவர் முன்னுக்கு நிற்பதை பார்த்து....
தலை தெறிக்க... ஓடி வந்ததால், அந்தப் படம் பார்க்காமல் போனது, இன்னும்.. கவலையாக இருக்குது.

அரை டிக்கெட் வேண்டும் எண்டு காலை அகட்டிக் கொண்டு குள்ளமா காட்டுறதும், adults only படத்துக்கு நுனிக்காலில நிண்டு உசரமா, வயது கூடினதாக காட்டுறதும்.... அட அது ஒரு கலை. என்ன சிறியர்...? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The Exorcist    இந்தப்படம் ராணியிலை ஓடினதெண்டு நினைக்கிறன்.....பொழுதுபட்டால் நித்திரையே வராது..

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5.10.2016 at 7:53 PM, colomban said:

கிளிநொச்சியில் ஒரு தியேட்டர்

இருந்ததாகவும் வரலாற்று பக்கங்களில் பதிவுகள் இருக்கின்றன.

 

இதில் தியேட்டர் உரிமையாளர்களின் ஒற்றுமை காரணமாக ‘’உலகம் சுற்றும் வாலிபன்’’ போன்ற வரலாற்று படங்கள் ஒரே நேரத்தில் மூன்று திரையரங்குகளில் ஓடி வரலாறு படைத்தது.http://www.tamilsguide.com/blog/articles/1651

இணைப்புகளுக்கு நன்றி. 

கிளிநொச்சியில் மூன்று திரையரங்குகள் இருந்தன.கிளிநொச்சி - யாழ் வீதிக்கு அருகாமையில் சண்முகா,ஈஸ்வரன்,பராசக்தி(பராசக்தி; வயற்பகுதி இடமான 4ம்வாய்காலில்  அமைந்திருந்தது.) கிளிநொச்சி - யாழ் வீதியிலிருந்து சற்று உள்ளே செல்ல வேண்டும். மூன்றிலும் அப்பப்போஆங்கிலப்படங்களும்   சிங்களப்படங்களைச் சிலவேளைகளிலும் திரையிடுவார்கள். திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு அனுபவமென்றால்;  பார்த்துவிட்டு வரும்போது சிங்களப்படை  சிங்களக்காவற்றுறையென்று பல அனுபவங்களும் உள்ளன. அவற்றையும் உங்களது பதிவு மீட்டியுள்ளது. வரும்வழியிலே கரடிப்போக்குச் சந்திக்கு அருகிலே ஒரு சாப்பாடுக்கடையும் பாராசக்தித் திரையரங்கு நோக்கியிருக்கும் சந்தியிலே இரண்டு கடைகளும் (ஒன்று தவளகிரி மற்றது மணியம் கபே(?)) திறந்திருக்கும். மணியம் கபே வடையும் தேனீரும் சுவைதான். அப்படியே  பேரூந்து நிலையம் வரை உணவகங்கள் திறந்திருக்கும். அதில் சுபாஸ் கபேயும் ஒன்று. சண்முகாவில் முதல்வகுப்புக் கதிரையிலே கூட  மூட்டைப்பூச்சியாரின் அன்புத்தொல்லை. மிக மோசமான திரையரங்கு. மிகவும் தரமான திரையரங்காக ஈஸ்வரன் இருந்தது. 1980ம் ஆண்டுகாலப் பகுதியிலே புனித திரேசாள் தேவாலயத்திற்கு முன்பாக மிகப்பிரமாண்டமான திரையரங்கொன்றைத்தேவாலய பங்குமக்களின் விமர்சனங்களோடு  கட்ட ஆரம்பித்து 20 வீதப்பணிகள் நகரவும் தீவிரமான தாக்குதல்கள் தொடங்கவும் நின்றுவிட்டது. அதனைக் கட்டத்தொடங்கியவர் கொழுப்பிலே பெரிய வர்த்தக முதலீடுகளைக்கொண்ட ஒரு தமிழராவார். அதன் பின் படிப்படியாக காணொளியினூடாகத் திரைப்படம் காட்டுவது தொடங்கியது. காலமும் வெகுவேகமாகி ஓடிவிட்டதை இந்தப்பதிவு நினைவூட்டியது. 

ஈருருளிக்கு லைற்றில்லாவிடில் காவற்றுறை காற்றைக் களட்டிவடுவதும் நாம் உருட்டிக்கொண்டு போவதும். மூவர்  ஈருருளியில் பயணிக்கும் போது காவற்றுறை வந்தால் பாய்ந்து ஒருவர் நடப்பதும் என ஒரு கலகலப்பான காலங்கள். இனி என்றுமே வராத காலங்களாகவே போய்விட்டன.தமிழனுக்கு  மகிழ்வைச் சுகிப்பதற்குக்கூட வாய்ப்பின்றிப்போனதும் ஒருவகைத் துயரமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.