Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?

Featured Replies

ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?

 

 
jayalalithaa_3033229f.jpg
 

யாரைச் சந்தித்தாலும், “ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்குப் பின் இருப்பது வெறும் பரபரப்பை நாடும் ஆர்வம் மட்டுமே இல்லை. நாம் உதட்டைப் பிதுக்குகையில், அவர்கள் தமக்குத் தெரிந்தவற்றை நீளமாகச் சொல்கிறார்கள். துண்டு துண்டான தகவல்கள். பல்வேறு வகையிலான யூகங்கள். முன்னுக்குப் பின் முரணான நம்பிக்கைகள். கவலைகள். அக்கறைகள். ஆற்றாமைகள். தம்மைக் காட்டிலும் ஊடகவியலாளர்களுக்குக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று பொதுஜனம் நம்புவதில் பிழையில்லை. இது பிறழ்காலம். ஊடகவியலாளர்களிடமிருந்து பொதுஜனம் செய்தி தெரிந்துகொண்ட காலம் போய், சமூக வலைதளங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி தெரிந்துகொள்ள நேரும் காலம். குழப்பங்களுக்கான மையம் தமிழக அரசின் செயல்பாடு.

சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 இரவு ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். மறுநாள் காலை அந்தச் சாலையை நெருங்கவே முடியவில்லை. எங்கும் போலீஸ்காரர்கள். பாதைகளை மறித்திருந்தார்கள். “சாதாரணக் காய்ச்சல். இன்றே முதல்வர் வீடு திரும்பிவிடுவார்” என்பதே அரசுத் தரப்பு சொல்ல முயன்ற செய்தி. அதற்கு ஏன் இவ்வளவு களேபரச் சூழலை உண்டாக்க வேண்டும்? அங்கிருந்த கடைக்கார முதியவர் சொன்னார், “முப்பத்திரண்டு வருஷம் முன்னால நகர்ந்த மாதிரி இருக்கு. யப்பா என்னா கூட்டம்? பட்டிதொட்டி ஜனம் அத்தனையும் அப்போ இங்கெ வந்து கெடந்துச்சு.”

1984-ல் இதே போன்ற ஒரு அக்டோபர் நாளின் நள்ளிரவில், ஜெயலலிதாவின் முன்னோடி யும் அன்றைய முதல்வருமான எம்ஜிஆர் அப் போலோ மருத்துவமனைக்குக் கொண்டுவரப் பட்டார். அவருடைய சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அடுத்த இரு நாட்களில் அவர் பக்கவாதத்துக்கு உள்ளானார். தமிழகம் முழுவதிலும் வழிபாட்டுத் தலங்கள் திமிலோகப்பட்டன. விரதம், அங்கப் பிரதட்சணம், பால் காவடி என்று தொடங்கிய வேண்டுதல்கள் யாகங்கள், கை விரல்கள் காணிக்கை, தீக்குளிப்பு என்று நீண்டன. தொடர்ந்து, அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் எம்ஜிஆர். உடல்நலம் தேறினார். தேர்தல் வந்தது. அவருடைய புகைப்படமும் காணொலியும் வெளியாயின. படுத்துக்கொண்டே ஜெயித்தார். நோயிலிருந்து மீண்டு வந்து மீண்டும் முதல்வர் பதவியேற்றார். இதற்குள், தீக்குளித்து மட்டும் 21 பேர் செத்திருந்தனர்.

இந்தியாவைப் பொறுத்த அளவில் தலைவர்களின் உயிர் ஓருயிர் அல்ல. தமிழகம் இன்னும் ஒரு படி மேலே எப்போதும் இருப்பது. அண்ணாவுக்கு இங்கே கூடிய கூட்டம் லெனின், காந்தி, மாவோ யாருடனும் வரலாற்றில் ஒப்பிட முடியாதது.

பொதுவெளியில் ஒருவர் தொடர்ந்து காணக் கிடைக்காதபோது வதந்திகள் முளைக்கின்றன. மருத்துவமனைகள் வதந்திகளுக்கு இறக்கைகளை ஒட்டுகின்றன. தமிழகத்தில் அண்ணா நோய் வாய்ப்பட்டபோது தகவல்கள் பொதுவெளியில் பகிரப்பட்டன. எம்ஜிஆர் விஷயத்தில் எல்லாத் தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டதாகச் சொல்ல முடியாது என்றாலும், நிலைமை இன்றளவுக்கு இல்லை. எம்ஜிஆருக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லப்பட்ட ஒரு வட்டம் அவரைத் தொடர்ந்து சந்திக்க முடிந்தது. அமைச்சரும் மருத்துவருமான ஹண்டே செய்தியாளர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.

ஜெயலலிதா விவகாரத்தில் மருத்துவமனை அறிக்கைகளுக்கும், அரசு மற்றும் கட்சி சார்பில்வெளியிடப்படும் தகவல்களுக்கும், வெளியே காணக் கிடைக்கும் சூழலுக்கும் இடையில் நிலவும் முரண்பாடே தேசிய அளவிலான விவாதமாக இதை வளர்த்தெடுத்தது. செப்.23, 25, 29, அக்.2,3 என்று இதுவரை ஐந்து அறிக்கைகளை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டிருக்கிறது. “காய்ச்சலுக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்; உடல் நலன் மேம்பட்டு வழக்கமான ஆகாரம் எடுத்துக்கொள்கிறார்; சிகிச்சை தொடர்கிறது; பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலேவுடன் ஆலோசனை கலக்கப்பட்டது, மேலதிக நாட்கள் முதல்வர் சிகிச்சையில் இருக்க வேண்டும்; முதல்வர் உடல்நிலை மேம்பட்டிருக்கிறது” என்பதே அந்த ஐந்து அறிக்கைகளும் அடுத்தடுத்து கொடுத்த தகவல்கள்.

இந்த 10 நாட்களுக்குள் குறைந்தது 10 அறிக்கைகள் மருத்துவமனையில் ஜெயலலிதா அன்றாடம் அலுவல்களைத் தொடர்வதாகச் சொல்லும் வகையில் அரசு/அதிமுக சார்பில் வெளியிடப்பட்டன. அவற்றில் முக்கியமானவை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய அதிமுகவின் மூன்று வேட்பாளர்கள் பட்டியல்கள்; தொழில்நுட்பத் துறை, அறங்காவல் துறை தொடர்பான அறிவிப்புகள்; பிரதமருக்கும் ஆளுநருக்கும் ஜெயலலிதா சார்பில் அனுப்பப்பட்ட கடிதங்கள். தவிர, காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தையும் அவர் நடத்தியதாகவும் சொன்னார்கள். ஆனால், “முதல்வரை நான் சந்தித்தேன், அவர் என்னுடன் பேசினார்” என்று இதுவரை ஒருவர் சொல்லவில்லை; அவரை வெளியிலிருந்து சந்திக்கச் சென்ற மத்திய அமைச்சர், ஆளுநர் உட்பட.

கட்சிக்காரர்களே அரற்றுகிறார்கள். “மூத்த தலைவர்களைக்கூட உள்ள விட மாட்டேங்குறாங்க. மனசெல்லாம் பதைச்சுக் கெடக்கு. யாராவது ஒருத்தர் உள்ளே போய் வந்து, ‘நான் பார்த்தேன்’னு சொன்னா மனசு ஆறுதலாயிடும். என்ன நடக்குதுன்னே புரியலீங்க” என்கிறார்கள்.

நேற்று முன்தினம், அப்போலோ மருத்துவமனை, “லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே முதல்வரின் சிகிச்சைக் குழுவோடு இணைந்து பணியாற்றுகிறார்” என்று அறிவித்த உடனே, சமூக வலைதளங்களில் பலர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்கள். “ரிச்சர்ட் ஜான் பீலே தீவிரமான கிருமித்தொற்று, நுரையீரல் பாதிப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளின் செயலிழப்பு, தீவிர சிகிச்சைக்குப் பேர் போனவர். சாதாரண காய்ச்சல், முதல்வர் நலமுடன் இருக்கிறார் என்றால், ஏன் இவரை வரவழைக்க வேண்டும்?” இதுபோன்ற கேள்விகள் அர்த்தமற்றவை அல்ல.

உலகில் எல்லா மனிதர்களும் நோய் பாதிப்புக்குள்ளாவது இயல்பானது. சொல்லப் போனால், மக்களால் கொண்டாடப்படும் அரசியல் தலைவர்கள் தம்முடைய உடல் உபாதைகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது, சமூகத்தில் ஏனையோர் மத்தியில் அன்பையும் நல்லெண்ணத்தையும் அதே நோய் பாதிப்புக்குள்ளாகும் ஏனையோரிடத்தில் தன்னம்பிக்கையையும் விதைக்கும். அரசியல் தலைவர்களின் உடல்நிலையைப் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியம் இன்று உலகம் முழுக்க ஜனநாயக நாடுகளில் விவாதிக்கப்படும் விஷயம். நாம் இங்கு ஜெயலலிதாவை முன்வைத்து நடத்தும் இதே விவாதம் அமெரிக்காவில் ஹிலாரியை முன்வைத்து நடந்துகொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் உட்ரோ வில்சன், ரூஸ்வெல்ட், கென்னடி என்று பல அதிபர்கள் தங்கள் உடல் உபாதைகளை மக்களிடம் மறைத்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அது ஒரு காலம். 1985-ல் அதிபர் ரொனால்டு ரீகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். அறுவைச் சிகிச்சைக்காக அதிபர் மயக்கநிலையில் ஆழும் முன், மரபுப்படி உதவி அதிபரிடம் அதிபர் பொறுப்பை அளித்தார்; வெற்றிகரமாக சிகிச்சை முடித்து வந்து மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்். அதற்குப் பின் 19 ஆண்டுகள் - 93 வயது வரை உயிரோடு இருந்தார். பின்னாளில் அல்ஸைமர் தாக்குதலுக்குள்ளாகாவிடில் இன்னும் கொஞ்ச காலம்கூட ரீகன் வாழ்ந்திருப்பார் என்று சொல்வோர் உண்டு. பிற்காலத்தில் சூழல் மேலும் மேம்பட்டது. இன்று அமெரிக்க அதிபர் தன் உடல் பரிசோதனை அறிக்கையை மக்களிடம் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை அதிபர் ஒபாமாவின் சீரான உடல்நிலையை மக்களுக்குச் சொன்னது. “அரசியல் தலைவர்களின் உடல்நல அறிக்கையில் ஓரளவுக்கு மேல் அந்தரங்கம் என்று ஏதும் இல்லை; மாறாக தேசத்தின் அன்றாட செயல்பாட்டுடன் சம்பந்தப்பட்டது அது. மக்களின் பிரதிநிதிகள் மக்களிடம் மறைக்க ஏதும் இல்லை” என்று ஒலிக்கும் ஜனநாயகக் குரல்கள், அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்கள் மருத்துவப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டங்களையும் இப்போது கோருகின்றன.

இந்தியாவில் “அந்தரங்க உரிமை குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று கிடையாது” என்று உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் மூலம் அரசு வாதிடும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அரசியல் தலைவர்களின் அந்தரங்க உரிமைகள் தொடர்பாகவும் குடிமக்கள் விவாதிக்கவும் நிறையவே இருக்கிறது. ஒரு ஆட்சியாளரின் உடல்நலன் தொடர்பான செய்திகள் மக்களிடம் மறைக்கப்படும்போது, அதன் பின்விளைவுகளை அந்த நாடும் மக்களும் எவ்வளவு காலத்துக்கு அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதையே ஜின்னாவின் பாகிஸ்தானிடம் இன்றளவும் பார்க்கிறோம்.

இந்திய அரசியல் சூழலில், ஒரு தலைவரின் உடல் நல விவகாரம் மக்களின் உரிமையின்பாற்பட்டது மட்டும் அல்ல; மாறாக, அவர்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்தது. இது ஒருவகையில் வரம்; ஒருவகையில் சாபம். தொண்டர்களை உயிரினும் மேலானவர்களாக, உடன்பிறப்புகளாக, ரத்தத்தின் ரத்தங்களாகச் சித்திரித்து உறவை வளர்க்கும் அரசியல் தலைவர்கள், தம்முடைய அந்தரங்க உரிமையைத் தாமாகவே சமூகத்திடம் கையளித்துவிடுகிறார்கள். தனிமனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. மக்கள் நலனோ எல்லா நியாயங்களிலும் மேம்பட்டது!

http://tamil.thehindu.com/opinion/columns/ஜெயலலிதாவுக்கு-என்ன-ஆயிற்று/article9182921.ece

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நவீனன் said:

அண்ணாவுக்கு இங்கே கூடிய கூட்டம் லெனின், காந்தி, மாவோ யாருடனும் வரலாற்றில் ஒப்பிட முடியாதது.

இது உண்மைதானா?! :unsure: சீனப்புரட்சிக்கு காரணமான மாவோவுக்கு கூடாத கூட்டம் அண்ணாவுக்கு கூடியதா?! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கு ஒன்றும் இல்லை.சரியான குள்ள நரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6.10.2016 at 9:22 PM, ரதி said:

அம்மாவுக்கு ஒன்றும் இல்லை.சரியான குள்ள நரி

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமாகி பலநாட்களாகி விட்டது எண்டு ஒரு கதைய கட்டிவிட்டால்......நரி பொந்துக்கை குசு விட்டு நண்டை பிடிக்கிறமாதிரி....... கொம்மா கொம்மான் கொக்கா குப்பன் சுப்பன் எல்லாரும் வெளியிலை சீறிக்கொண்டு வருவினம்.

உலகத்திலேயே கேவலம் கெட்ட அரசியல் தமிழ்நாட்டிலை மட்டும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமாகி பலநாட்களாகி விட்டது எண்டு ஒரு கதைய கட்டிவிட்டால்......நரி பொந்துக்கை குசு விட்டு நண்டை பிடிக்கிறமாதிரி....... கொம்மா கொம்மான் கொக்கா குப்பன் சுப்பன் எல்லாரும் வெளியிலை சீறிக்கொண்டு வருவினம்.

உலகத்திலேயே கேவலம் கெட்ட அரசியல் தமிழ்நாட்டிலை மட்டும் தான்.

முடிஞ்சுது போல தான் கிடக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7.10.2016 at 0:24 AM, ஈழப்பிரியன் said:

முடிஞ்சுது போல தான் கிடக்கு

 

4 hours ago, குமாரசாமி said:

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமாகி பலநாட்களாகி விட்டது எண்டு ஒரு கதைய கட்டிவிட்டால்......நரி பொந்துக்கை குசு விட்டு நண்டை பிடிக்கிறமாதிரி....... கொம்மா கொம்மான் கொக்கா குப்பன் சுப்பன் எல்லாரும் வெளியிலை சீறிக்கொண்டு வருவினம்.

அண்ணை உதைத்தானே தமிழிச்சி செய்ய வெளிக்கிட்டு நாறிப்போய் இருக்கிறா:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவை தேடி...  இவர் பாடும், மிகவும் சோகமான பாடல். பார்ப்பவர்களின்... கண்களை, குளமாக்கி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
மருத்துவக் கடவுள் யார் கண்களுக்குத் தெரிவார்? 
ஜூலியஸ் சீசரும் அப்போலோவும்..
 
இப்போதெல்லாம், எதையும் ‘டைமிங்’ ஆக எடுத்து விடுவதில், அசகாய சூரர்களாக இருக்கிறார்கள் நெட்டிசன்கள். இதற்காக கிறிஸ்து பிறப்பதற்கு 100 ஆண்டுகள் முந்தைய காலக்கட்டத்துக்குச் செல்கிறார்கள். எதைச் சொன்னால் சரியாக இருக்கும் என, தேடிப் பிடித்து ஒரு விஷயத்தைப் பரப்பி விடுகிறார்கள்.
 
அது என்னவென்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! 2000 ஆண்டுகளுக்கு முன் - கிரேக்கப் பேரரசர் ஜூலியஸ் சீசர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கிறார்.
 
Julius-cesar.jpg
 
அவரது உடல் நலம் குறித்து வெளியே தெரிந்தால் , அண்டை நாட்டு மன்னன் கிரேக்கத்தை கைப்பற்றக் கூடும் என்பதால் ரகசியமாக அரண்மனையில் வைத்தியம் பார்க்கிறார்கள். அரசர் நலம் பெற்று விரைவில் மக்கள் முன் தரிசனம் தருவார் என அறிவிக்கிறார் பேரரசி கிளியோபாட்ரா.
 
இருந்தாலும் மக்கள் மத்தியில் கவலை . மருத்துவக் கடவுளை நோக்கி ஓடுகிறார்கள். ஒலிம்பஸ் குன்றின் அடிவாரத்தில் மக்கள் குவிகிறார்கள்.
 
இருந்தாலும் குன்றின் மேல் ஏற மக்களுக்கு அனுமதியில்லை. கீழே இருந்தவாறே சூரியனை தொழுகிறார்கள். ஏனென்றால் சூரியனுக்கான கிரேக்க கடவுள் தான் மருத்துவத்திற்கும் கடவுள்.
 
மந்திரி பிரதானிகளுடன் தலைமை மருத்துவ குரு குன்றின் மீது ஏறி, மருத்துவக் கடவுளை நோக்கி பூஜை செய்தார். திடீரென அவர் கண்களில் பிரகாசம் ... மந்திரிகள் ஏன் என்று கேட்க ... மருத்துவக் கடவுள் தன் கண் முன் தோன்றியதாகவும் மன்னர் குணமாவார் என கூறியதாகவும் சொன்னார். எங்கள் கண்களுக்கு தெரியவில்லையே என மந்திரிகள் கேட்க, யாருடைய மனைவி பத்தினியோ அவர்களின் கண்ணுக்கு மட்டுமே தெரிவார் என கூறிவிட்டு குரு புறப்பட்டார்.
 
நம் கண்களுக்கு தெரியவில்லை என கூறினால் நம் மனைவி பத்தினி இல்லை என ஆகிவிடும். எனவே நேரம் ஆக ஆக எல்லா மந்திரிகளும் கடவுளை 2 பார்த்துவிட்டதாக கூறி கீழே வந்தனர். மக்களிடம் மருத்துவக் கடவுளை கண்டதாகவும், மன்னர் குணமாகிவிடுவார் என கூறியதாகவும் தெரிவித்தனர்.
 
இருந்தாலும் மக்களிடம் குழப்பம் நீடிக்கவே , தலைமை தளபதி வந்து மலையில் ஏறி , அவரும் கடவுளை பார்த்ததாக கூறினார். இது தான் சாக்கு என மன்னனால் ஓரம்கட்டப்பட்டு இருந்த குறுநில மன்னன் தாலாமாவல்ஸ் ஒலிம்பஸ் மலைக்கு வந்தார். மலையின் இரண்டாம் சுற்று வரை சென்றதாகவும், கடவுளை பார்த்தவர்கள் மன்னர் குணமாகி விடுவார் என கூறியதாகவும் சொன்னார்.
 
மன்னர் குணமானாரா இல்லையா ? இப்போது அதுவா முக்கியம்? ஆங்.. சொல்ல மறந்துவிட்டேன் ... கிரேக்க புராணங்களின் படி .. மருத்துவ கடவுளின் பெயர் என்ன தெரியுமா... ?
 
‘அப்போலோ‘ அப்பாடா… ஒரு வழியாகச் சொல்லி முடித்து விட்டேன்.
 
-சி.என்.இராமகிருஷ்ணன்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=174762

  • கருத்துக்கள உறவுகள்

"அத்தையைப் பாக்க விடமாட்றாங்க'- ஜெ., அண்ணன் மகள் தீபா கண்ணீர்

depa.jpg

மிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகிவிட்டது. ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு? எப்படி இருக்கிறார்? என்பதை எதிர்பார்த்து தமிழகமே காத்திருந்தாலும், குழப்பங்கள் மட்டுமே அதற்குப் பதிலாக கிடைத்து வருகிறது. இத்தனை நாட்கள் கடந்த பின்னரும் மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதாவை அவரது ரத்த சொந்தங்கள் யாரும் சந்திக்கவில்லை.  சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே ஜெயலலிதா உள்ளார் என தகவல்கள் வெளியாகும் நிலையில்,' "அத்தையை சந்திக்க என்னை அனுமதிக்க மறுத்து விட்டனர். மருத்துவமனை வாசலில் காத்திருந்து திரும்பிவிட்டேன்'" என  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் மகளான தீபா,'' அத்தைக்கு உடல் நலம் சரியில்லை என்பதை கேள்விப்பட்டு, அவரைப் பார்ப்பதற்காக அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன். அத்தை என் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்திருக்கிறார். ஆனால், அவரைப் பார்த்து ஆறுதல் சொல்ல, என்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். மூன்று நாட்கள் தொடர்ந்து சென்றும், கேட்டிலேயே என்னை தடுத்து நிறுத்திவிட்டனர். அத்தையை பார்க்காமல் நான் திரும்பிச் செல்ல மாட்டேன் என நான் கறாராக கூறியதும், 'உயர் அதிகாரிகள் உங்களைத் தொடர்பு கொண்டு உள்ளே அழைத்துச்  செல்வார்கள்' என அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், இதுவரை என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை'' என புலம்பியுள்ளார்.

appollo600.jpg

சென்னையில் வசித்துவரும் தீபா ஆங்கில இலக்கியம் மற்றும் இதழியல் படித்துள்ளார். இவரது சகோதரர் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றினை நடத்திவருகிறார். '' 1995-ல் என் அப்பா இறந்த போது எங்கள் வீட்டுக்கு அத்தை வந்தார். அதன் பிறகு அவரை சந்திக்க முடியவில்லை. 2012-ல் எனது அம்மா நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது கூட, எங்களால் அத்தையை தொடர்பு கொள்ள முடியவில்லை. அத்தை இரண்டு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வருகின்றன.  அத்தையை பார்க்க எங்களை அனுமதிக்க மறுக்கின்றனர். அத்தை உடல்நிலை விவகாரத்தில் ஏன் இவ்வளவு ரகசியம் காக்கப்பட வேண்டும்? இதன்பின்னணியில் இருப்பவர்களை விசாரித்து கண்டறிய வேண்டும்.'' என்கிறார்  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.

http://www.vikatan.com/news/tamilnadu/69213-i-want-to-see-jaya-aunt-they-stopped-me-at-the-gates--jayalalitha-niece-cries.art?artfrm=related_article

  • கருத்துக்கள உறவுகள்

14519688_1788838754725829_35187901756062

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, இசைக்கலைஞன் said:

14519688_1788838754725829_35187901756062

ஆகா..... அருமையான, படம். இவர்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்கள் சிந்திக்க வேண்டிய விடயம்.
இனிமேலும்..... சாராயத்துக்கும், சோத்துப் பார்சலுக்கும்.. வாக்களிக்காமல்,
சீமான், வைகோ, அன்புமணி ராமதாஸ், வேல் முருகன், திருமாவளவன்... போன்ற, அரசியல் வாதிகளுக்கு... 
தமிழக மக்கள் வாக்களிக்க முன் வரவேண்டும்.

Edited by தமிழ் சிறி

2 hours ago, தமிழ் சிறி said:

இனிமேலும்..... சாராயத்துக்கும், சோத்துப் பார்சலுக்கும்.. வாக்களிக்காமல்,
சீமான், வைகோ, அன்புமணி ராமதாஸ், வேல் முருகன், திருமாவளவன்... போன்ற, அரசியல் வாதிகளுக்கு... 
தமிழக மக்கள் வாக்களிக்க முன் வரவேண்டும்.

தமிழ் சிறி : தயவு செய்து என்னையும் உங்கட லிஸ்டில் சேர்த்துக்க முடியுமா? ப்ளீஸ் 

Bilderesultat for vijayakanth

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

தமிழ் சிறி : தயவு செய்து என்னையும் உங்கட லிஸ்டில் சேர்த்துக்க முடியுமா? ப்ளீஸ் 

Bilderesultat for vijayakanth

உங்களை, கூட்டணியில்  சேர்த்தால்.... :206_cat:
அடிக்கவோ... துப்பவோ... மாட்டீர்கள், என்று.... எங்களால், உறுதிப் படுத்த முடியாதுள்ளதால்....
நோ... கூட்டணி, வித் யூ.... :grin:

28-1451308994-thoo-t-shirt-600.jpg tw_blush:

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2016 at 0:34 AM, இசைக்கலைஞன் said:

இது உண்மைதானா?! :unsure: சீனப்புரட்சிக்கு காரணமான மாவோவுக்கு கூடாத கூட்டம் அண்ணாவுக்கு கூடியதா?! tw_blush:

மூன்று விதமான தகவல்கள் வருகின்றன ..

ஒன்று ..


ஏற்கனவே கடந்த 10 ம் தேதி அன்றே செயலலிதா இறந்து விட்டார்..இப்போ நடப்பது சொத்து தகறாரு... ஆளில்லாத் சொத்து தானே என்று சில குருப்பூ ஆட்டைய  போட துடிக்குது...! இதை ஏன் நாம் சொல்கிறம் என்றால் 

இரண்டு

எம் ஜி ஆர் இறந்த பிற்கு சத்தியபாமா காலேஜ்.... ஏசி  ஷ்ண்குமன்  காலேஜ்..மற்றும்  எவா வேலு .. இதில் இஞ்சினியரிங்படித்தது எனக்கே வெட்கமாக உள்ளது

மூன்று கண்டெய்னர் லோறி ய்யில்  காசை அள்ளி வாழ்பர்கள்தான் மொள்ளமாறிகள்!! .  இது வருங்கால வாரிசுகளுக்கு முன் உதாரணமாக ஆகிட கூடாது  !!

 

இரண்டு :

அவர் சிறிது சிறிதாக  மூளை சாவு அடைந்து கொண்டுள்ளார் .... ஆதாலால் வந்த வரை லாபம் என்று அடிமை பாய்ஸ் .. தாடி வளர்த்து கொண்டு திரியுங்க.. (பிரான்ஸ் தமிழச்சி பதிவின்படி..)

மூன்று


உள்ளாட்சி தேர்தலுக்காக நூல் விட்டு பார்கிறார்..???  பிரதமர் வேட்பாளாரகவே பில்டப்பு குடுத்துவிங்க ... 37 எம்பி சீட்டு வாங்கிணூங்க... எப்படி பார்த்தாலும் / ரைப்டேட்ர் அடிச்ச  அன்றய தவறுக்காக .. இன்னோரு குமாரசாமி சுப்ரீம் கோர்டில் கிடைக்கவா போறான்

 

டிஸ்கிக்கு  டிஸ்கி ;


தமிழன் இந்த  தமிழர் நாட்டை ஆளாதவரை  ...அதை உங்க பார்வைக்கே விட்டுவம் ...

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

14591732_1114496778635707_3051508639756579722_n.jpg?oh=c6851ef22ca07ff71d6d2ab5c41e696d&oe=58655298

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கிக்கு  டிஸ்கி ;

தமிழன் இந்த  தமிழர் நாட்டை ஆளாதவரை  ...அதை உங்க பார்வைக்கே விட்டுவம் ...

எங்களுடைய  பார்வையில்..... :206_cat:
மீண்டும்....  "புரட்டாசி தலைவர், பன்நீர் செல்வம்"  வந்தால்,  ரொம்ப நல்லாயிருக்கும். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7.10.2016 at 5:12 AM, ஜீவன் சிவா said:

அண்ணை உதைத்தானே தமிழிச்சி செய்ய வெளிக்கிட்டு நாறிப்போய் இருக்கிறா:grin:

அது நாறல் இல்லை.......அவர்கள் தமிழிச்சியின் கருத்தால் அதிர்ந்து விட்டார்கள் என்பதுதான் அர்த்தம். 
கருத்து சுதந்திரம் எவருக்கும் எங்கும் இருக்க வேண்டும்.:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6.10.2016 at 8:14 PM, நவீனன் said:

ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.