Jump to content

கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்


Recommended Posts

கீழடி... சூழ்ச்சிக்கு இரையாகும் வரலாறு!

 

கீழடி அகழாய்வின் மூன்றாம் கட்டம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவதாகக் கூறி, இந்த ஆண்டு ஆய்வைப் பற்றிய அறிக்கையை அகழாய்வுப் பொறுப்பாளர் ஸ்ரீராமன் வெளியிட்டார். மூன்றாம் கட்ட அகழாய்வு என்பது தமிழ்ச் சமூகம் போராடிப் பெற்றது.

கீழடி அகழாய்வைத் தொடர அவர்களுக்கு விருப்பமில்லை. எனவே, மூன்றாம் ஆண்டுக்கான அனுமதியைத் திட்டவட்டமாக மறுத்தார்கள். நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ச்சியாகக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, இரண்டு ஆண்டுகள் நடந்த அகழாய்வைப்பற்றி அதன் பொறுப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை தரவில்லை என்று ஒரு காரணத்தைச் சொன்னார்கள்.

கீழடியோடு அகழாய்வுத் தொடங்கப்பட்ட இடம் குஜராத் - வாட்நகர் (மோடியின் சொந்த ஊர்). அதே போல, ராஜஸ்தானில் உள்ள பிஞ்ஜூர். இந்த இரண்டு இடங்களிலும் 2017-ம் ஆண்டு அகழாய்வு செய்வதற்கான உத்தரவை மத்திய தொல்லியல் துறை, 2016 டிசம்பர் மாதமே வழங்கிவிட்டது. ‘கீழடிக்கு அனுமதி வழங்காமல் இந்த இரு இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது எவ்வாறு? அனுமதியை மறுப்பதற்கு விதவிதமான காரணங்களைக் கண்டுபிடித்தனர்.

அதையும்மீறி கடின உழைப்பைச் செலுத்தி அமர்நாத் ராமகிருஷ்ணன் குழுவினர் இடைக்கால அறிக்கையை வழங்கினார்கள். அதன்பிறகும் அனுமதி தர மனம் வரவில்லை. தொடர்ந்து எழுப்பப்பட்ட எதிர்ப்புக் குரல்களால் வேறுவழியின்றி பிப்ரவரி 20-ம் தேதி இந்த ஆண்டுக்கான அனுமதியை வழங்கினர். ஆனால், நிதி எதுவும் வழங்கவில்லை. மார்ச் 17-ம் தேதி நிதியை வழங்கிவிட்டு மார்ச் 24-ம் தேதி அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்தனர். ஆய்வுக்கான புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீராமன் , ஏப்ரல் 24-ம் தேதி பொறுப்பேற்று, ஆய்வைத் தொடங்கி, இப்போது முடித்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பலரும் சந்தேகப்பட்டது போலவே, கீழடி அகழாய்வை முடக்குவதற்கான அடித்தளமிடும் வேலையை அந்த அறிக்கை செய்துள்ளது.

p18c.jpg

கடந்த இரண்டு ஆண்டுகளாக, 2,500 சதுர மீட்டர் பரப்பளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வெறும் 400 சதுர மீட்டர் பரப்பளவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளும், 102 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இந்த ஆண்டு தோண்டப்பட்டதோ, வெறும் எட்டுக் குழிகள் மட்டும்தான். அந்த எட்டுக்குழிகளில் ஒன்றுகூட இயற்கை மண்படிவம்    (Virgin soil) வரை தோண்டப்படவில்லை. அதாவது, ஒரு குழியைக்கூட முழுமையாகத் தோண்டவில்லை.

 கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட தொழிற்கூடம் போன்ற பகுதியின் கட்டட அமைப்புகளின் தொடர்ச்சி தென் திசையில் நிலத்துக்குள் அமைந்திருந்தது. அதன் தொடர் கட்டட அமைப்பைக் கண்டறிய வேண்டுமென்றால், தென் திசையில் அகழாய்வுக் குழியை அமைத்திருக்க வேண்டும். ஆனால், தென் திசையில் ஒரு குழிகூட அமைக்காமல், நேர் எதிராக வட திசையில் மட்டுமே எட்டுக் குழிகளையும் தோண்டியுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளும் கீழடி தொல்லியல் மேட்டின் வெவ்வேறு இடங்களாகத் தேர்வுசெய்து மொத்தம் ஒன்பது இடங்களில் அகழாய்வுக் குழிகளை அமைத்தனர். காரணம், ஓர் இடத்தில் தடயங்கள் கிடைக்காவிட்டாலும், இன்னோர் இடத்தில் கிடைக்கும் என்பதால். இந்த ஆண்டு, ஒரே ஓர் இடத்தில் மட்டுமே எட்டுக் குழிகளையும் தோண்டியுள்ளனர். இவற்றைப் படிக்கிற ஒருவரால், இதில் நடந்துவரும் சூழ்ச்சியை எளிதில் புரிந்துகொள்ளமுடியும். ‘இவ்வளவுக் குறைவான பகுதியில் மட்டுமே அகழாய்வுப் பணியைச் செய்துள்ளீர்களே, ஏன்?’ எனக் கேட்டதற்கு, மழையைக் காரணம் சொல்கிறார் ஸ்ரீராமன். அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்ட இரண்டு ஆண்டுகளும் கீழடியில் மழையே பெய்யவில்லையா? அல்லது, இந்த ஆண்டு இடைவிடாமல் கீழடியில் தொடர் மழை பெய்ததா?

 p181.jpg ‘முதல் ஆண்டு (2015), அகழாய்வுப் பணியை மூன்று மாத கால தாமதத்துடன்தான் அமர்நாத் ராமகிருஷ்ணனால் தொடங்க முடிந்தது. அப்படியிருந்தும், அவரால் 43 அகழாய்வுக் குழிகளை அமைக்க முடிந்தது. ஆனால், இந்த ஆண்டு வெறும் எட்டுக் குழிகளை மட்டுமே தோண்டியதற்கு என்ன காரணம்?’ என்ற ஊடகங்களின் கேள்விக்கு, “இங்கு நடப்பது PWD வேலையல்ல” என்று பதிலளிக்கிறார் ஸ்ரீராமன். உண்மை என்னவென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளும் அகழாய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்குச் சராசரியாக 80-க்கும் மேல் இருந்தது. இந்த ஆண்டு சராசரியின் அளவு 20 கூட இல்லை. இந்த ஆண்டு கண்டறியப்பட்டதில், 1800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றில், 90 விழுக்காடு கண்ணாடியால் செய்யப்பட்டவை என்று கூறும் அறிக்கை, இந்த இடத்தில் கட்டடங்கள் தொடர்ச்சியாகவோ, பரவலாகவோ கட்டப்பெறவில்லை” என்று கூறுகிறது. கீழடியின் சிறப்புமிக்க பங்களிப்பே அங்கு கிடைத்துள்ள கட்டுமானங்கள்தான். சங்ககாலத்தில் இருந்த ஒரு நகர அமைப்பு, முழுமையான கட்டட வடிவத்தில் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. மிகவிரிந்த அளவு கட்டட அமைப்புகள் முதல்முறையாக கீழடியில்தான் நமக்குக் கிடைத்துள்ளது.

 முதலாண்டு ஆய்வில் கிடைத்தவைகளெல்லாம், குடியிருப்புப் பகுதிகளாக இருந்தன. இரண்டாமாண்டு ஆய்வில், பெரும் தொழிற்கூடம் கண்டறியப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அதன் தொடர்ச்சியாக எந்தக் கட்டடப் பகுதியும் கிடைக்கவில்லை என்ற முடிவை நோக்கியே இந்த ஆய்வின் போக்கு, திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கூறிய விஷயங்கள் மூலம் உணரமுடிகிறது. “இந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகள், கரிமப் பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்பட்டு காலநிர்ணயம் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான், அவர்கள் நினைத்ததை நடத்தப்போகும் இடம். கடந்த ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு இருபது கரித்துகள் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப அனுமதி கேட்டது. ஆனால் மத்திய அரசோ, ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கி இரு மாதிரிகளை மட்டுமே ஆய்வுக்கு அனுப்பியது. ஆய்வு செய்யப்பட்ட இரு கரித்துகள் மாதிரிகளின் காலம் கி.மு 200 மற்றும் கி.மு 195 என்ற முடிவு வெளியானது.

p18a.jpg கடந்த ஆண்டு, நாலரை மீட்டர் தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியின் நடுப்பகுதியில், அதாவது இரண்டாவது மீட்டரில் சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகள்தான் அவை இரண்டும். அதற்குக் கீழே இரண்டரை மீட்டர் ஆழத்தில் சேகரிக்கப்பட்ட கரித்துகள் எல்லாம் இன்னும் ஆய்வுக்கு அனுப்பப்படாமலே வைக்கப்பட்டுள்ளன. அவைகள் அனுப்பப்பட்டால் கீழடியின் காலநிர்ணயம் இன்னும் பின்னோக்கிப்போகும் என்பது யாவரும் அறிந்ததே. அவற்றை அனுப்பாமல் வைத்துள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீராமன் , “இந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட கரித்துகளைக் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பி காலநிர்ணயம் செய்யப்படும்” என்று அறிவித்துள்ளார். ஒரு குழிகூட இயற்கை மண்படிவம் (Virgin soil)  வரை தோண்டப்படவில்லை. அப்படியிருக்க, இவர் எடுத்துள்ள கரித்துகள் மாதிரிகள் மேல்நிலை யிலிருந்து எடுக்கப் பட்டவைகளாகத்தான் இருக்கும். அவை, காலநிர்ணய ஆய்வுக்கு அனுப்பப்பட்டால் மிகவும் முன்தள்ளப்பட்ட காலத்தையே குறிக்கும். அதாவது, கீழடியின் காலத்தை முன்தள்ளிக் கொண்டுவருவதற்கான ஏற்பாடாகவே இது இருக்கும்.

 எனவே, அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு சேகரித்த பதினெட்டு கரிமத் துகள்களைக் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பிய பிறகுதான், இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கரிமத்துகள்களை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால், ஸ்ரீராமனால் ஆயிரம் ஆண்டுகளை எளிதில் விழுங்க முடியும்.

இங்கு நடப்பது PWD வேலையாக இருக்குமேயானால், இதில் நிகழும் ஊழலையும் மோசடியையும் வெளிப்படையாக அறியலாம். ஆனால், அகழாய்வுப் பணியல்லவா...மோசடிகளும் சூழ்ச்சிகளும் மிகமிக நுட்பமானவை. அதே நேரத்தில், வரலாற்றின் திசைவழியையே மாற்றக்கூடிய அளவுக்கு ஆபத்தானவை.

சிந்துவெளியில் கண்டறியப்பட்ட திமிலுடைய காளையைக் குதிரையென்றும், அங்கு யாககுண்டங்கள் கிடைத்துள்ளது என்றும் சிலர் கூறிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சுமார் நூறு ஆண்டுகள் சர்வதேச சமூகம் உற்றுநோக்கும் சிந்துவெளி ஆய்வையே தலைகீழாக மாற்றும் முயற்சிகள் நடக்கும்போது, வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ள கீழடி ஆய்வை விழுங்கி ஏப்பம்விட இவர்களால் முடியும், தமிழ்ச்சமூகம் விழிப்பு உணர்வற்று இருந்தால்.

படங்கள்: ஈ.ஜெ. நந்தகுமார், வீ.சதீஷ்குமார்

http://www.vikatan.com/juniorvikatan/2017-oct-08/investigation/135117-su-venkatesan-discuss-about-keeladi-excavation.html

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 203
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

Holes evacuated in Kizhadi for research is npw closing

கீழடியில் அகழ்வாய்வு பணிக்காக,  தோண்டப்பட்ட குழிகள் மூடல்.

கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் ஜேசிபி மூலம் மண் கொட்டப்பட்டு மூடப்படுகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் வட்டம், கீழடி அருகே அமைந்துள்ள பள்ளிச் சந்தை திடலில் இந்தியத் தொல்லியல் துறையினரால் கடந்த 2 ஆண்டுகளாக (2014-15, 2015-16) அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானங்கள் மற்றும் பலவகையான தொல்பொருள்கள் வெளிக் கொணரப்பட்டன. கீழடியில் 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. இவை கடந்த 30-ஆம் தேதி முடிவடைந்தன.

எனினும் அங்கிருந்து தொல்லியல் தொடர்பான பொருள்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கீழடியில் 4-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள கோரிக்கை வலுத்து வருகிறது. கீழடியில் 4ம் கட்டமாக அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக சென்னை உய்ரநீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் கீழடியில் மூன்றாவது கட்ட ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு வருகின்றன. இதற்காக ஜேசிபி மூலம் மண் கொட்டப்பட்டு மூடப்படுகிறது. 3-ஆம் கட்ட ஆய்வு பணிகள் முடிவடைந்த நிலையில் எந்த பொருளும் கிடைக்காததால் தொல்லியல் துறை குழிகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கீழடியில் ஆய்வை தொடர வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிய நிலையில் குழிகள் மூடப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- தற்ஸ்  தமிழ். -

Link to comment
Share on other sites

கீழடி அகழ்வுப் பணிகள் தொடர்வதை தமிழக அரசு உறுதிசெய்யும்: அமைச்சர் பாண்டியராஜன்

கீழடி ஆழ்வாராய்ச்சி

சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வந்த கீழடி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்ட ஆய்வில் குறிப்பிடத்தக்க தொல்பொருட்கள் கிடைக்காததால் ஆய்வுக் குழிகள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கீழடி அகழ்வுப் பணிகள் குறித்து திங்களன்று (அக்டோபர் 9) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கீழடியில் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் நடைபெறும் என்றும் மத்திய அரசின் தொல்லியல் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொல்லியல்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமிழக தொல்லியல் துறையைக் காட்டிலும் மத்திய அரசின் நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்கள் உள்ள காரணத்தால் மட்டுமே கீழடி அகழ்வு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று கூறினார்.

''மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் கீழடியின் வரலாற்றை மறைப்பதாக நச்சுக் கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய நிறுவனத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டுவரும் அதிகாரி ஒரு தமிழர்தான். கீழடியில் மேலும் ஆராய்ச்சிகள் தொடரும். அதை தமிழக அரசு உறுதிசெய்யும்,'' என்றார் பாண்டியராஜன்.

2015ல் தொடங்கப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்பொருட்கள் சுமார் 2,200 ஆண்டுகள் பழமையானவை என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற அகழ்வுப் பணிகள் குறித்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் கண்டறியப்பட்ட சுமார் 27,000 தொல்பொருட்கள் மட்டுமே எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 11,000 பொருட்களை காட்சிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் .

எழும்பூர் அருங்காட்சியகத்தை உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாகவும், உலகின் முதல் ஐம்பது காட்சியகங்களில் ஒன்றாக மாற்றவும் முயற்சிகள் எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

''இலக்கிய ஆதாரம், தொல்பொருட்கள் மற்றும் கல்வெட்டுகள் என ஒவ்வொரு பகுதியாக பிரிந்து கிடக்கும் தமிழர் வரலாற்றை ஒன்றிணைத்து காட்சிப்படுத்தவுள்ளோம்,'' என்றார் அவர்.

http://www.bbc.com/tamil/india-41549937

Link to comment
Share on other sites

On 10/16/2017 at 12:51 AM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 3 Personen, Text

தமிழர்கள் இந்து இல்லை. அவர்கள் சைவம், ஆசிவகம், கெளமாரம் போன்ற நெறிகளைப் பேணியவர்கள்.

ஆரியர்கள் மத்திய ஆசிய பகுதியில் இருந்து (இன்றைய துருக்கி, ஈரான் போன்ற இடங்கள்) நகர்ந்து வந்தபோது அவர்களிடம் இருந்தது வேதங்கள் மட்டுமே.. இன்றும் ரிக் வேதத்தின் பகுதிகள் ஈரானின் சில பகுதிகளில் நூலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகர்ந்து வந்த ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த நாகர்களின் வழிமுறைகளை சூறையாடி விட்டார்கள். பிற்காலத்தில் அதற்கு இந்து மதம் என்று வெள்ளையன் பெயரிட்டுவிட்டான். tw_blush:

  • Thanks 1
Link to comment
Share on other sites

3 hours ago, இசைக்கலைஞன் said:

தமிழர்கள் இந்து இல்லை. அவர்கள் சைவம், ஆசிவகம், கெளமாரம் போன்ற நெறிகளைப் பேணியவர்கள்.

ஆரியர்கள் மத்திய ஆசிய பகுதியில் இருந்து (இன்றைய துருக்கி, ஈரான் போன்ற இடங்கள்) நகர்ந்து வந்தபோது அவர்களிடம் இருந்தது வேதங்கள் மட்டுமே.. இன்றும் ரிக் வேதத்தின் பகுதிகள் ஈரானின் சில பகுதிகளில் நூலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகர்ந்து வந்த ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த நாகர்களின் வழிமுறைகளை சூறையாடி விட்டார்கள். பிற்காலத்தில் அதற்கு இந்து மதம் என்று வெள்ளையன் பெயரிட்டுவிட்டான். tw_blush:

'வால்காவில் இருந்து கங்கை வரை' எனும் பயண கட்டுரை நூலை வாசித்துக் கொண்டு வருகின்றேன் புனைவையும் வரலாற்றையும் தத்துவார்த்தமாக விவரித்து எழுதப்படட நூல் இது. பாரஸீகத்தில் இருந்த  ஆரியர்களின் வருகையிலிருந்து, யவனர்களின் அறிமுகம், ஆங்கிலேயர்களின் வருகை வரைக்கும் எழுதப்பட்டு இருக்கு. ஆரியர்களின் ஆக்கிரமிப்பு,
விசுவாமித்திரர் வசிஷ்டர் போன்றவர்களின் பித்தலாட்டம், அவர்கள் அரசரிடம் இருந்து பெறும்  தட்ஷனைகளுக்காக ரிக் வேதத்தில் சேர்த்த அரசனை புகழ்ந்து பாடும் பாடல்கள் என்று விரிவாக உள்ளன.

இசை, உங்களை போன்றோர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நூல் என்று எண்ணுகின்றேன்

நூல் பற்றி :https://ta.wikipedia.org/wiki/வால்காவிலிருந்து_கங்கை_வரை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எந்த மதம் ரெல் மீ கிளியர்லி  ??:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.10.2017 at 3:52 PM, இசைக்கலைஞன் said:

தமிழர்கள் இந்து இல்லை. அவர்கள் சைவம், ஆசிவகம், கெளமாரம் போன்ற நெறிகளைப் பேணியவர்கள்.

ஆரியர்கள் மத்திய ஆசிய பகுதியில் இருந்து (இன்றைய துருக்கி, ஈரான் போன்ற இடங்கள்) நகர்ந்து வந்தபோது அவர்களிடம் இருந்தது வேதங்கள் மட்டுமே.. இன்றும் ரிக் வேதத்தின் பகுதிகள் ஈரானின் சில பகுதிகளில் நூலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகர்ந்து வந்த ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த நாகர்களின் வழிமுறைகளை சூறையாடி விட்டார்கள். பிற்காலத்தில் அதற்கு இந்து மதம் என்று வெள்ளையன் பெயரிட்டுவிட்டான். tw_blush:

"உண்மைகள்... உறங்கும் போது, பொய்  ஊரை சுற்றி வந்து விடும்" என்ற பழமொழி உள்ளது.
அதற்கு ஏற்ற மாதிரி.... ஆரியன், உலகின் மூத்த இனமான தமிழினத்தை, ஏறக்  குறைய அழித்தது  விட்டான் என்றே  நினைக்கின்றேன்.
அதனை... கொஞ்சம், தட்டி நிமிர்த்துவம் என்று, ஈழத்தில் ஆரம்பித்த போராட்டமும்  சோகத்தில் முடிந்தது மிக வேதனை
"வந்தாரை... வாழ வைத்ததால், இருந்தவனுக்கு இடமில்லை"  என்ற நிலைமை வந்து விட்டது.

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நான் எந்த மதம் ரெல் மீ கிளியர்லி  ??:cool:

புரட்சி.... நீங்கள் முன்பு எழுதிய கருத்துக்களில் பார்க்கும் போது....
நீங்கள்,  யாழ்ப்பாண... "ஆறுமுக நாவலரின்"   சைவ சமயத்தை, சேர்ந்தவராக இருக்க வேண்டும். :)

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

On 10/20/2017 at 2:54 PM, தமிழ் சிறி said:

"உண்மைகள்... உறங்கும் போது, பொய்  ஊரை சுற்றி வந்து விடும்" என்ற பழமொழி உள்ளது.
அதற்கு ஏற்ற மாதிரி.... ஆரியன், உலகின் மூத்த இனமான தமிழினத்தை, ஏறக்  குறைய அழித்தது  விட்டான் என்றே  நினைக்கின்றேன்.
அதனை... கொஞ்சம், தட்டி நிமிர்த்துவம் என்று, ஈழத்தில் ஆரம்பித்த போராட்டமும்  சோகத்தில் முடிந்தது மிக வேதனை
"வந்தாரை... வாழ வைத்ததால், இருந்தவனுக்கு இடமில்லை"  என்ற நிலைமை வந்து விட்டது.

புரட்சி.... நீங்கள் முன்பு எழுதிய கருத்துக்களில் பார்க்கும் போது....
நீங்கள்,  யாழ்ப்பாண... "ஆறுமுக நாவலரின்"   சைவ சமயத்தை, சேர்ந்தவராக இருக்க வேண்டும். :)

ஈரான் நாட்டின் கொடி:

irlarge.gif

********************************************************************************************

இந்திய நாட்டின் கொடி:

National-Flag-of-India-ili-59-ogimg.jpg

இது எதேச்சையாக ஒரே மாதிரியாக அமைந்துவிட்டதா? :unsure:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இசைக்கலைஞன் said:

 

On 20/10/2017 at 7:54 PM, தமிழ் சிறி said:

"உண்மைகள்... உறங்கும் போது, பொய்  ஊரை சுற்றி வந்து விடும்" என்ற பழமொழி உள்ளது.
அதற்கு ஏற்ற மாதிரி.... ஆரியன், உலகின் மூத்த இனமான தமிழினத்தை, ஏறக்  குறைய அழித்தது  விட்டான் என்றே  நினைக்கின்றேன்.
அதனை... கொஞ்சம், தட்டி நிமிர்த்துவம் என்று, ஈழத்தில் ஆரம்பித்த போராட்டமும்  சோகத்தில் முடிந்தது மிக வேதனை
"வந்தாரை... வாழ வைத்ததால், இருந்தவனுக்கு இடமில்லை"  என்ற நிலைமை வந்து விட்டது.

புரட்சி.... நீங்கள் முன்பு எழுதிய கருத்துக்களில் பார்க்கும் போது....
நீங்கள்,  யாழ்ப்பாண... "ஆறுமுக நாவலரின்"   சைவ சமயத்தை, சேர்ந்தவராக இருக்க வேண்டும். :)

ஈரான் நாட்டின் கொடி:

irlarge.gif

********************************************************************************************

இந்திய நாட்டின் கொடி:

National-Flag-of-India-ili-59-ogimg.jpg

இது எதேச்சையாக ஒரே மாதிரியாக அமைந்துவிட்டதா? :unsure:

 

பார்சிகளான நேரு குழாமே மவுண்ட் பேட்டனுக்கும் அவரின் மனைவி எட்வீனாவிடற்கும் பாலியல் தோழனாகவும் அதே நேரத்தில் சேவகமும் செய்து பிரித்தானியர் இடம் இருந்து, அதிகாரத்தை அபகரித்து கொண்டது.

http://www.dailymail.co.uk/femail/article-1216186/The-shocking-love-triangle-Lord-Mountbatten-wife-founder-modern-India.html

http://www.telegraph.co.uk/news/2017/03/06/nehrus-love-lady-mountbatten-not-included-new-film-amid-fear/

இதில், நேரு பாலியல் தோழனாகவோ அல்லது சேவகத்திலோ விரும்பி பங்காளராக இருந்திருப்பின், அதை ஏறெடுத்துப்பார்க்கவோ அல்லது விமர்சிக்கவோ நான் விழையவில்லை.  

பார்சிகள் இன்றய ஈரான் மற்றும் ஈராக், துருக்கி மற்றும் சிரியாவின்  பகுதிகள் (அன்றய பாரசீகத்தை) பூர்விக்கமாக கொண்டவர்கள்.  

அவர்கள் கையில், அவர்கள் கனவிலும் நினைத்திராத அதிகாரம், கனவிலேயே காணாத  ஓர் நிலப்பரப்பின் மேல் பிரயோகிப்பதத்திற்கு வந்தபோது அல்லது வரும்போதோ, உண்மையான வரலாறு, பூர்விக, மானுடவியல் தடயங்களையும் அடையாளங்களையும் அவிபத்து அல்லது மறைப்பதே, அந்த அதிகாரத்தை தக்க வைக்க உதவும் என்பது வெள்ளிடைமலை.

அதனால், பார்சி பூர்விகத்திற்கும் கிந்தியக் கொடிக்கும் அதிக வேறுபாடுகள் இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.

உண்மையான கிந்தியக் கொடி, கிந்தியாவின் மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா கதைகளின் படி, வேறு விவிதமாகவே இருந்திருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், கிநதியா கூட வேறு பூர்விகமுடையோரின் கோடியை தனதாக வரித்துக் கொண்டதே.

  • Thanks 1
Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி என்ற ஒரு அமைப்பை சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது. சீமான் முதற்கொண்டு அக்கட்சியில் இருக்கும் Humayun, அப்துல் காதர் வரை வேல் ஏந்தி சென்றார்கள். அப்போது அது வேடிக்கையாக பார்க்கப்பட்டது. அதை ஏன் செய்தார்கள் என்பதற்கான விடை ஈரான் கொடியில் இருக்கிறது. tw_astonished:

இன்று பாஜக தமிழர்களை இந்துக்கள் என சொல்லி அரசியல் செய்ய வருகிறது. இல்லை.. முருகன், சிவன், கண்ணன் எல்லோரும் தமிழ் மூதாதைகளே. அவர்களை திருடிச் சென்றவர்கள் நீங்கள் என்ற கருத்தியலை நாம் தமிழர் கட்சி வலுவாக முன் வைக்கிறது. இதனால் பாஜகவின் இந்து மத அரசியல் தமிழகத்தில் அடிபட்டுப் போகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்டுக்கல் அருகே இன்னொரு கீழடி!!

1eb8bb.jpg

திண்டுக்கல்: தமிழகத்தின் இன்னொரு கீழடியாக பழந் தமிழர் நாகரீக சான்றுகளை திண்டுக்கல் பாடியூர் கோட்டைமேடு பகுதி தன்னுள் புதைத்து வைத்திருக்கலாம் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். எரியோடு சாலையில் குளத்தூரில் இருந்தும் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முள்ளிப்பாடியில் இருந்தும் உள்ளே பாடியூர் சென்றடையலாம். 30 அடி உயர மண்மேடுதான் இப்போதும் கோட்டைமேடு என அழைக்கப்படுகிறது. மிக பரந்துபட்ட அளவில் இந்த கோட்டை மேடு இருந்திருக்கிறது. அரசு பள்ளிக்கூடம் கட்டுவதற்காக இந்த மண்மேட்டின் பெரும்பகுதி அண்மையில்தான் இடிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இக்கோட்டை மேடு பகுதியில் பிரமாண்ட பழங்கால கிணறு ஒன்று இருந்திருக்கிறது. இந்த மண்மேட்டை இடித்துதான் அந்த பிரமாண்ட கிணறையே பள்ளிக் கட்டிடத்துக்காக மூடியும் இருக்கிறார்கள்.

மண்மேடுகளில் புதையுண்ட பானைகள் மண்மேடுகளுக்குள் பழங்கால பானைகள் புதையுண்டு கிடப்பதை இப்போதும் காண முடியும். மேலும் அந்த பகுதி எங்கும் சிவப்பு நிறத்திலான பழங்கால மண்பானைகளின் சிதறல்களையும் நேரில் காண முடிகிறது

கல்லாறு கோட்டை இந்த கோட்டைமேடு பகுதி கல்லாறு என்ற ஆற்றின் கரையோரத்தில் இருக்கிறது. திருமலைக்கேணி மலைப் பகுதியில் இருந்து வெளியேறும் நீர்தான் கல்லாறாக ஓடி குளத்தூர் அருகே சந்தானவர்த்தி ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆறுகள் வேடசந்தூர் குடகனாற்றில் சங்கமிக்கின்றன.

இக்கோட்டைமேடு மீது இப்போதும் பழங்கால கல் கட்டிடம் ஒன்று இருக்கிறது. முனியப்பன் கோவிலாக இப்போது சிறிய அளவில் இங்கே வழிபாடு நடத்தப்படுகிறது

இதே கல் கட்டிடத்தில் மீன்சின்னம் பொறித்த பிரம்மாண்ட கதவு இருந்ததாகவும் இக்கதவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஊர் பெரியவர் ஒருவர் நமது ஒன் இந்தியா தமிழ் செய்தியாளரிடம் கூறினார். மேலும் பள்ளிக்கூடத்துக்காக கோட்டை மேடு இடிக்கப்பட்டபோது மிக நீண்ட பெரும் பெரும் பாறை கற்கள் வெளியே எடுக்கப்பட்டதாகவும் பாடியூர் பெரியவர்கள் கூறுகின்றனர்.

இங்கே மிக பிரமாண்ட கோட்டை ஒன்று பழந்தமிழர் காலத்தில் இருந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. சங்க காலங்களில் ஆயுதக் கிடங்குகள் இருக்கும் இடங்களுக்கு பாடி என்ற பெயர் உண்டு. பாடியூரை சுற்றிய கிராமங்கள் அனைத்தும் பாடி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. சீலப்பாடி, முள்ளிப்பாடி, பாடியூர், மேல்பாடியூர், தாமரைப்பாடி என அடுத்தடுத்து பாடி என்கிற பெயர்களிலேயே இங்கு ஊர்கள் அமைந்திருக்கின்றன.

இந்த 'பாடி' பெயர்களிலான ஊர்கள் அனைத்தும் சிற்றாறுகளின் கரைகளிலேயே அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. பாடியூரில் எஞ்சியிருக்கும் பகுதியை முழுமையாக அகழாய்வு செய்தால் பழந்தமிழர் நாகரிகத்தின் சான்றுகள் ஏராளம் கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது.

பாடியூர் வேடசந்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்டது. அதாவது லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரையின் கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டது. ஆட்சியாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அக்கறையுடன் செயல்பட்டு அகழாய்வுக்குட்படுத்தினால் பாடியூர் பழந் தமிழர் நாகரிகத்தை நிறுவக் கூடிய இன்னொரு கீழடியாகவும் இருக்கக் கூடும் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

நன்றி : தட்ஸ்தமிழ்

டிஸ்கி :

அடுத்தது என்ன ? ஊத்தி மூட மத்திய அரசு ஓடர் ! மண் அள்ளி போட ஜெசிபி இயந்திரம் ரெடி !! :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen und Text

 

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களை மத்திய தொல்லியல் துறை அதிகாரி கடத்த முயன்றதால் கீழடி ஊர்மக்கள் திரண்டு அந்த வாகனத்தையும் அதிகாரியையும் சிறை பிடித்தனர்.

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வு மூன்று கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், நான்காம் கட்ட ஆய்வுப் பணி இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ளது சில தினங்களுக்கு முன்பு தமிழக தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 7000 பொருள்களை இந்த ஊரில் உள்ள சமூதாயக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. திடீரென நேற்று மதியம் 3 மணியளவில் மதுரையில் இருந்து ராட்சதலாரி மூலம் அங்குள்ள அனைத்துப் பொருள்களையும் கடத்தியுள்ளார் தொல்லியல்துறையின் அதிகாரிகளில் ஒருவரான வீரராகவன். அவர் பொருள்களை ஆள்களை வைத்து லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த தகவல் ஊர் மக்களுக்கு காலதாமதமாக தெரிய வந்தது. உடனே ஊரில் இருந்த பொதுமக்கள் திரண்டு லாரியில் ஏற்றிய பொருள்களை எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும் என்று முற்றுகையிட்டார்கள்.

இந்தத் தகவல் திருப்புவனம் போலீஸுக்கும் தாசில்தாருக்கும் தெரியவர அவர்களும் ஆஜராகினார்கள். எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் இப்படி அவசர அவசரமாக ஆய்வில் கிடைக்கப்பெற்ற பொருள்களை கொண்டு செல்லவேண்டிய அவசியம் என்ன என்று தாசில்தார் கேட்டதற்கு தொல்லியல் துறை அதிகாரியான வீரராகவன் என்னசொல்வது என்று தெரியாமல் உலற ஆரம்பித்தார். அந்த பொருள்களை பாதுகாப்பதற்காக வாசு என்கிறவர் காவலராக இருக்கிறார். அவருக்குக் கூட இது குறித்து தெரியப்படுத்தவில்லை. காவலாளியாக இருக்கும் வாசுவிடம் கேட்டபோது, ``கடத்தல் நடக்கும்போது நான் இங்கு இல்லை. எனக்கு போன் போட்டு தகவல் சொன்னார்கள். உடனடியாக வந்து பார்த்தால் பொருள்கள் அனைத்தையும் ஏற்றிவிட்டார்கள். உடனே லாரி சாவியை பிடுங்கிவிட்டேன். அதோடு எங்கள் ஊர் மக்களும் திரண்டுவிட்டார்கள். மதியம் 3 மணியில் இருந்து 7மணி வரைக்கும் பொருள்களை ஏற்றியிருக்கிறார்கள். இவர்கள் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சொல்லிவிட்டு எங்களையெல்லாம் ஏமாற்றப்பார்க்கிறார்கள். எங்கள் மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட எந்த பொருளும் கடத்தப்படுவதை அனுமதிக்கமாட்டோம். உடனடியாக அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்' என்றார் ஆவேசமாக.

http://www.vikatan.com/news/tamilnadu/106686-central-officer-tried-to-steal-excavated-things-at-keeladi.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 weeks later...
  • 3 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Text

110 ஏக்கரையும்,  தோண்டினால்.... எ‌வ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியம் வெளியில் வரும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 4 weeks later...
  • 1 month later...



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.