Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெளதமி மோடிக்கு எழுதிய கடிதத்தின் முழு தமிழாக்கம்!

Featured Replies

கெளதமி மோடிக்கு எழுதிய கடிதத்தின் முழு தமிழாக்கம்!

 

கெளதமி

மிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி கடந்த 5-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிர் இழந்தார். அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணம் அடைந்த நாள்  வரை பல மர்மங்கள் இருப்பதாக மக்கள் சந்தேகப்படுகின்றனர். இது தொடர்பான கேள்விகளை யாரிடம் கேட்பது என மக்கள் புரியாத நிலையில் உள்ளனர். இந்த நேரத்தில், ஜெயலலிதா-வுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த நடிகை கெளதமி இது குறித்து பதில் அளிக்கும் படி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடித்ததின் சாராம்சம் இது...

‘‘இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அவர்களுக்கு...

அன்புடையீர்,

நான், இந்தக் கடிதத்தை ஒரு சாதாரண இந்திய பிரஜையாக எழுதுகிறேன். நான், ஒரு குடும்பத் தலைவி; ஒரு தாய் மற்றும் பணியாற்றக் கூடிய பெண். என் வாழ்க்கையில் ஏற்படும் எல்லாத் துன்பங்களும் அதற்கான முக்கியத்துவம் கருதி நாட்டில் உள்ள சக மனிதர்களால் பகிரப்படுகிறது. இதில், பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் முதன்மையானது.

பல கோடி மக்களைப்போலவே நானும், தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன். அவர், மிகச் சிறந்த தலைவர்; அத்துடன் அவர், பல பெண்களுக்கு உந்து சக்தியாக இருந்துள்ளார். என் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட அவருடைய ஆளுமைத் திறமை எப்போதும் ஒரு தூண்டுதலாகவே இருந்தது. தன்னுடைய பலத்தினால்... கஷ்டங்களை எதிர்த்துப் போராடும் ஜெயலலிதாவின் திறன்... ஆண், பெண் என எல்லோரும் தங்களுடைய கனவுகளை அடைய ஓர் உந்துதலாகவே இருந்துவந்தது. 

அவருடைய மரணம் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது மட்டும் அல்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல்... நடந்துவந்த சூழலும், பதில் தெரியாத சில கேள்விகளும் தொடர்ந்துகொண்டே இருந்தன. அவருடைய உடலில் ஏற்பட்ட பிரச்னைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, நலம் பெற்றார் என்ற தகவல் மற்றும் திடீர் மரணம்... இவை எதற்குமே பதில்கள் எதுவும் சரியாகக் கிடைக்கவில்லை. அவரின் உடல்நிலை குறித்த தகவல்கள் மூடி மறைத்த வண்ணமே காணப்பட்டது. மேலும், அவர் தங்கி சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்குள் யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை; அவர், உடல் நலம்பெற வேண்டும் என்று மனதார நேரில் சென்று வாழ்த்த நினைத்தவர்களுக்கும் அனுமதி இல்லை. மக்களின் பிரதிநிதியான ஒரு தலைவரின் நிலை எதற்காக ரகசியம் காக்கப்பட வேண்டும்.. அவரை, ஏன் தனிமைப்படுத்த வேண்டும்? அவரைப் பார்க்க அனுமதி இல்லை என்பதை யார் முடிவு செய்வது... ஜெயலலிதாவின் சிகிச்சை மற்றும் அக்கறை பற்றிய முடிவுகளை யார் எடுத்தார்கள்... மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது? இதுபோன்ற பல கேள்விகள் தமிழக மக்களுக்கு உள்ளன. அவர்களுடைய குரலாகவே நான் இப்போது உங்களிடம் கேட்கிறேன்.

அவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் இறந்துவிட்டார். இதில், எந்தச் சந்தேகமும் இல்லை என சிலர் கூறினாலும், இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்து. நான் இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு முக்கியக் காரணம், இந்தியக் குடிமகளான எனக்குக் கவலை தரக்கூடிய விஷயங்களைப் பற்றி அறிய வேண்டிய உரிமை எனக்குள்ளது. நாட்டினுடைய நிலைமையும், அவற்றுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்ய வேண்டும். நமக்குப் பிடித்த தலைவருடைய நலனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற, மிக முக்கிய விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள கேள்விகள் கேட்காமல் இருக்கக் கூடாது. முக்கியமாக, அதற்கான பதில்கள் தெரியாமல் இருக்கவே கூடாது. நாட்டில் ஒரு தலைவருடைய நிலையைப் பற்றி அறியவே முடியாத பட்சத்தில் தனி மனிதருடைய உரிமையை எப்படிப் பெற முடியும்? மக்கள் அனைவரும், சுதந்திர இந்தியாவில் நடக்கும் பிரச்னைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும்.

இந்தக் கடிதத்தை நான் எழுதக் காரணம், நாட்டில் நடக்கும் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது எல்லாக் குடிமக்களுக்கும் தெரிய வேண்டும் என்ற என்னுடைய ஆதங்கத்தைப் பற்றி அறிந்து... பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான். நீங்கள் பல இடங்களில் தனி மனிதனுக்கான உரிமைகளைப் பெற்றுத் தர எந்த இடத்திலும் தயக்கம் இல்லாமல் செயல்பட்டிருக்கிறீர்கள். நாட்டு மக்களுடைய கோரிக்கையை கவனத்தில்கொண்டு பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.’’

நம்பிக்கை மற்றும் மரியாதையுடன்,

ஜெய்ஹிந்த்!

கௌதமி தடிமல்லா

http://www.vikatan.com/news/india/74540-actress-gautami-writes-letter-to-prime-minister-modi.art

  • தொடங்கியவர்

‘ஒரு இந்தியக் குடிமகளாக எனக்கு உண்மை தெரிய வேண்டும்!' - கெளதமி பேட்டி

 

'மேடம் நீங்க அகில இந்திய பி.ஜே.பி. இளைஞரணி செயலாளராக இருந்தப்போ நான் உங்களை பேட்டி எடுத்து இருக்கேன்...' என்று சொன்னவுடன் கெளதமி முகத்தில் ஆனந்த ஆச்சர்யம். 'அது நடந்து 21 வருஷமாச்சுங்க அதுக்கப்புறம் அரசியலுக்கும் எனக்கும் துளிகூட சம்மந்தமே இல்லை' என்று பதில் சொன்னவரிடம் ஜெயலலிதா மரணம் குறித்து திடீரென பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் பற்றி கேட்டோம்.

''தமிழ்நாடு மட்டுமில்லை இந்தியாவே எழுந்து நின்று பிரமிச்ச  ஜாம்பவான், லெஜன்ட்  நம்ம முதல்வர் ஜெயலலிதா மேடம். அவருக்கு நேர்ந்த இறப்பு சம்பவத்தை யாரோ ஒருத்தருக்கு நிகழ்ந்த சாதாரண சம்பவமா எடுத்துக்க முடியாது. 'முதல்வருக்கு என்னதான் ஆச்சு? எப்படித்தான் இறந்தாங்க?' என்கிற கேள்வியை நாட்டுல இருக்குற எல்லோரும் சத்தமா கேட்குறாங்க. இண்டர்நெட், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் இப்படி எதைப் பார்த்தாலும் மேடம் மரணத்தைப்பற்றிய நியூஸைத்தான் ஷேர் பண்ணிக்கிறாங்க.

98_14230.jpg

எங்களோட முதல்வர் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று விவரம் கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். என்னோட தனிவாழ்க்கை, பொதுவாழ்க்கை எதுவாக இருந்தாலும் பத்துபேரை கலந்து ஆலோசிச்சு அப்புறமாக முடிவு எடுக்க மாட்டேன். எப்போதுமே சுயமா நானே யோசிச்சுத்தான் முடிவெடுப்பேன். இப்போதும் அப்படித்தான் கடிதம் எழுதியிருக்கேன்.

நீங்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய சம்பவம் குறித்து?

நிறைய தடவை பல்வேறு நிகழ்ச்சி குறித்து முதல்வரை நேரில் பார்த்து இருக்கிறேன். என்னவென்று லிஸ்ட்போட விரும்பலை. மீடியாவுல இருக்கிற எல்லோருக்கும், அது நல்லாவே தெரியும். ஒவ்வொரு முறையையும் அவரோட பேச்சு, மேனரீஸம், கம்பீரம் எல்லாத்தையும் பிரமிச்சு பார்த்து ரசித்து இருக்கேன். மேடம் இறந்த பிறகு அவர்மீது இருக்குற அன்புக்காக மக்கள் குறிப்பா சிறுமி முதல் வயசானவங்கவரை எல்லோருமே தங்களோட குடும்பத்துல இருந்த ஒருத்தரை பறிகொடுத்த மாதிரி கண்கலங்கி அழும் காட்சியை பார்க்கிறேன்.

100_15232.jpg

அப்போலோவில் நடந்தது உங்கள் நண்பர் வெங்கையா நாயுடுவுக்கு தெரியுமே அவரிடம் நீங்கள் கேட்டு இருக்கலாமே?

நான் என்னோட அமைப்பு சார்பா பிரதமரை சந்திக்கிற கோரிக்கையை அமைச்சர் வெங்கையா நாயுடு அவர்களிடம் சொன்னேன். நான் ஏற்கெனவே பி.ஜே.பி.-யில் இருந்ததை நினைவுபடுத்தி அன்பாகப் பேசி பிரதமர் மோடியின் அப்பாயின்மென்ட் வாங்கிக் கொடுத்தார். நம்மோட பிரதமரை சாதாரண குடிமகனும் ட்விட்டர், ஃபேஸ்புக் மூலம சுலபமா அணுகலாம். அதன்படி, நம்மோட முதல்வருக்கு என்னதான் ஆச்சு? என்பதுபற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதறதுதான் முறை அதைத்தான் நான் செய்தேன்.

81_14597.jpg

தற்போது பி.ஜே.பி-யில் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா?

முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். நான் அரசியல்வாதி இல்லை. அந்த அடிப்படையில் நான் பிரதமருக்கு கடிதம் எழுதவும் இல்லை. தமிழ் நாட்டில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் மனதில் இருக்கும் கேள்வியைத்தான் என்னோட கடிதம் வாயிலா பிரதிபலிச்சு இருக்கேன். நான் ஒரு இந்திய சிட்டிசன் என்னை அரசியல்வாதி கோணத்துல பார்க்கவே பார்க்காதீங்க.

ஜெயலலிதவை இழந்து நிற்கும் அ.தி.மு.க-வின் எதிர்காலம் என்ன? ஆட்சி எப்படி நடக்கும்?

முதல்வரைவிட்டு தொலைவில் இருக்குற தமிழ்நாட்டு மக்கள் ஜெயலலிதா மேடம் மேல உயிரையே வெச்சிருக்காங்க. மேடம் பக்கத்துலேயே இருந்த அ.தி.மு.க-வினர் அவங்கமேல் எவ்வளவு பாசம் வெச்சு இருப்பீங்க. உதாரணத்துக்கு மேடம் இறந்தது ஒரு துரதிஷ்ட சம்பவம் அப்படிப்பட சூழ்நிலையிலும் நாட்டுல துளிகூட சட்டம் ஒழுங்கு கெடவில்லை. அந்தளவுக்கு மேடம் அமைதி பூங்காவா தமிழ் நாட்டை வெச்சிக்காங்க அதே அமைதியை அவங்க கட்சிக்காரங்களும் தொடணும்னு கேட்டுக்கறேன்.

 

http://www.vikatan.com/news/coverstory/74553-i-want-to-know-the-truth-behind-jayalaithaas-death---actress-gautami.art

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன மர்மம் அதிர்ச்சி இருக்க முடியும் என்று விளங்கவில்லை. செயற்கைச் சுவாசத்தில் இருந்தார் என்று யாரும் நேரடியாகச் சொல்லாமலே விளங்கிக் கொள்ள முடிந்தது. இரண்டு வாரத்திற்கு மேல் செயற்கைச் சுவாசத்தில் வைத்திருக்க வேண்டுமெனில் மூச்சுக் குழல் வழியாகத் துளை போட்டு சுவாச இயந்திரத்துடன் இணைக்கும் tracheostomy சத்திர சிகிச்சை செய்ய வேண்டும். அதுவும் செய்யப் பட்டதாக செய்தியில் வந்தது. அதன் பிறகு சுவாச இயந்திரத்தின் துணையை சிறிது சிறிதாகக் குறைத்து வருவார்கள். இறப்பதற்கு முன்னர் 90% தானே சுவாசிக்கக் கூடிய நிலையில் இருந்ததாக ஒரு செய்தியில் இருந்தது. அப்போதும் சுவாச இயந்திரம் இணைக்கப் பட்டிருந்தது என்பதே செய்தியில் நேரடியாகச் சொல்லப் படாத தகவல். செயற்கைச் சுவாசம் என்பது உயிர் காக்கும் அதே வேளை உடலின் இதயம், குருதிக் கலன்கள், ஈரல், நுரையீரல், சிறு நீரகம் என எல்லாவற்றிலும் பாதிப்பையும் ஏற்படுத்தி விடும். இவ்வளவு நீண்ட காலம் செயற்கைச் சுவாசத்தில் இருந்தவர், வீடு திரும்பியிருந்தால் தான் அது அதிர்ச்சியான miracle ஆக இருந்திருக்கும்! 

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கப்பா  அவங்களுக்கும்  அரசியல் ஆசை வந்திட்டுது. எண்டு எடுக்கவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நந்தன் said:

விடுங்கப்பா  அவங்களுக்கும்  அரசியல் ஆசை வந்திட்டுது. எண்டு எடுக்கவேண்டியதுதான்.

எனக்கொரு உன்மை தெரிஞ்சாகணும் சாமி  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

விடுங்கப்பா  அவங்களுக்கும்  அரசியல் ஆசை வந்திட்டுது. எண்டு எடுக்கவேண்டியதுதான்.

நடிகர் கமலுக்கு அரசியல் பிடிக்காது என்று பட்டவர்தனமாக தெரிகிறது தோழர்..

8 hours ago, நவீனன் said:

நம்பிக்கை மற்றும் மரியாதையுடன்,

ஜெய்ஹிந்த்!

கௌதமி தடிமல்லா

ஜெய்ஹிந்த்!  கிழிந்தது கிருஸ்ணகிரி!  அது போகட்டும்...அது என்ன "தடிமல்லா" ? இது என்ன தமிழ் பெயரா ..? ஒரு வேளை தடி எடுத்து அடிக்க போறாங்களோ ..? சினிமா கூத்தாடிகளின் ஆட்டம் ரொம்ப ஒவராக போய் கொண்டு இருக்கு ..! பெரிய நம்பர் ( 9 ) நடிகையும்  அரசியலுக்கு அடிபோட்டுள்ளதாக செய்தி அடிபடுகிறது .


டிஸ்கி:

நிருபர் : நீங்க தொடர்ந்து நடிப்பீங்களா அல்லது உங்கட சொந்த ஊருக்கு போய்டுவீங்களா?

சத்யராஜ் : நோ .. நோ ..!! இளிச்சவாயனுங்கோ இந்த ஸ்டேட்டில் தான் நிறைய இருக்காங்கோ.. வெளி ஆளுங்களுக்கு கோயில் கட்டி  கும்பிடுறாங்கோ . உள்ளூர் காரனுங்களை  (...) ஆல்..அடிக்கிறாங்கோ !! ஐ லைக் திஸ் ஸ்டேட் வெரி மச் ..!!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு சொல்லிடாதீங்கப்பா?

அப்பறம்,  தெலுங்கர் ஆஸபத்திரில மண்டயப் போட்ட கன்னடத்திக்காக, தெலுங்கி, குஜராத்காரர்கிட்ட கடதாசி போட்டிரிச்சு எண்டப்போறார். :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, நவீனன் said:

நிறைய தடவை பல்வேறு நிகழ்ச்சி குறித்து முதல்வரை நேரில் பார்த்து இருக்கிறேன். என்னவென்று லிஸ்ட்போட விரும்பலை. மீடியாவுல இருக்கிற எல்லோருக்கும், அது நல்லாவே தெரியும். ஒவ்வொரு முறையையும் அவரோட பேச்சு, மேனரீஸம், கம்பீரம் எல்லாத்தையும் பிரமிச்சு பார்த்து ரசித்து இருக்கேன்.

100_15232.jpg

98_14230.jpg

 

ஒருகாலமும் இல்லாமல் இவா இப்ப அரசியல்ல நீந்திறதுக்கு  பாலம் ரோட்டு அத்திவாரம் எல்லாம் போட வெளிக்கிடுறாவு...tw_blush:

கமலனுக்கு எல்லாம் வெளிச்சம்:cool:

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

100_15232.jpg

98_14230.jpg

 

ஒருகாலமும் இல்லாமல் இவா இப்ப அரசியல்ல நீந்திறதுக்கு  பாலம் ரோட்டு அத்திவாரம் எல்லாம் போட வெளிக்கிடுறாவு...tw_blush:

கமலனுக்கு எல்லாம் வெளிச்சம்:cool:

குமாரசாமி அண்ணை.... 
நடிகைகளின்..... கைககளில். தான், மீண்டும்.....  தமிழகம் தங்கியியுள்ளதோ என்ற... பயம், மீண்டும் வருகின்றது.:unsure:

இவர்களை விட,  தமிழ்நாட்டு   இனமான.... நடராஜன்  சசிகலா கைகளில்... 
அ. தி.மு.க. இருப்பது..... உலகத் தமிழருக்கு பாதுகாப்பானது. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: பிரதமருக்கு கவுதமி மீண்டும் கடிதம்

 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை கவுதமி மேலும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

 
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: பிரதமருக்கு கவுதமி மீண்டும் கடிதம்
 
சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடிகை கவுதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

அதில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த அவர் சிகிச்சை தொடர்பாக மர்மம் இருப்பதாக கூறி இருந்தார்.

இதற்கு பிரதமர் விளக்கம் தரவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இதுவரை பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதையடுத்து நடிகை கவுதமி பிரதமருக்கு மேலும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவர் மரணத்தில் இருக்கும மர்மம் தொடர்பாக நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது.

இது சம்பந்தமாக பலரும் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள். இது எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட 75 நாள் சிகிச்சை தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்துள்ள தகவல்களை வரவேற்கிறேன். அதே நேரத்தில் நான் கேட்ட கேள்விகள் அது அல்ல.

நோயாளிக்கும், டாக்டர்களுக்கும் இடையே பல ரகசியங்கள் இருக்கலாம். ஆனாலும் இது பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும்.

கோடிக்கணக்கான தமிழக மக்கள் கேள்வியைத் தான் நான் எனது கேள்வியாக கேட்கிறேன். இது பற்றி எனது கடிதத்தில் நான் தெளிவாக கூறி இருந்தேன்.

எனவே நான் எழுதிய கடிதத்திற்கு தங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இதை உங்களுக்கு நினைவூட்டல் கடிதமாக அனுப்புகிறேன். ஒட்டு மொத்த தமிழகமும் பிரதமர் பதிலுக்கு காத்திருக்கிறது. உங்களிடம் பதில் கிடைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/12130312/1055685/Mystery-Jayalalithaa-death-Gowthami-Letter-the-prime.vpf

  • தொடங்கியவர்

“சசிகலாவிடம் இருந்து பதில் கிடைக்குமா?”

களம் இறங்கும் கௌதமி

 

p20.jpg

‘‘முதல்வராக இருந்த ஜெயலலிதா, எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்’’ என அப்போலோ பிரதாப் ரெட்டி கூறிவந்த நிலையில், அவரது திடீர் மரணம் தமிழக மக்களிடையே பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மக்களின் கேள்விகளுக்கு பதில்கேட்டு நடிகை கௌதமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், ‘‘முதல்வர் தங்கி சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையின் 2-வது தளத்துக்குள் யாரும் அனுமதிக்கப் படவில்லை. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று நேரில் சென்று வாழ்த்த நினைத்தவர்களுக்கும் அனுமதி தரப்படவில்லை. மக்கள் பிரதிநிதியான ஒருவரின் உடல்நிலை குறித்து ஏன் இவ்வளவு ரகசியம் காக்கப்பட்டது? அவரது சிகிச்சை குறித்து உடனிருந்து முடிவுகளை எடுத்தது யார்? ஏன் இறுதிவரை அவரது உடல்நிலை குறித்து எதுவும் வெளிப்படைத்தன்மை இல்லாமலே இருந்தது? மக்கள் பிரதிநிதியான ஒரு முதல்வரின் பாதுகாப்புக்கே இந்த நிலை என்றால், பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?” எனக் கேட்டிருந்தார். கௌதமி ஏற்கெனவே பி.ஜே.பி இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவர். இந்தக் கடிதம் தொடர்பாக அவரிடம் பேசினோம்.

‘‘ஜெயலலிதா மரணம் குறித்து உங்களுக்கு என்ன சந்தேகம்?’’

“அவருடைய இறப்பில் பிரச்னை இருக்கிறதா, இல்லையா என்பதை உணர்வதற்கான தகவல்கூட யாருக்கும் தெரியவில்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வியும் இதுதான். மக்களின் கேள்வியைத்தான் பிரதமருக்குக் கடிதமாக எழுதினேன்.’’

p20a.jpg

‘ஜெ. உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில், ஜெ.வுக்கு நெருக்கமானவர்களும், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களும் சகஜமாக நின்றபோது, நீங்கள் உடைந்து அழுதுவிட்டீர்களே?’’

“அது திடீர் அழுகை அல்ல. ஜெயலலிதா  நலமாகிவிட்டார் என்றும், எப்போது வேண்டுமானாலும் அவர் வீட்டுக்குத் திரும்பி ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் என்றும் 4-ம் தேதி மதியம் வரை எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென இதய முடக்கம் ஏற்பட்டதாகச் செய்தி வந்தது. பிறகு, கண்மூடி கண் திறக்கும் நொடியில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. அந்த கம்பீரம், காந்த ஈர்ப்பு என தனிப்பட்ட முறையில் நான் வியந்து பார்த்த ஒரு பெண், இனிமேல் உயிருடன் இல்லை என்ற செய்தியைக் கேட்டதில் இருந்தே நான் உடைந்துதான் போயிருந்தேன்.’’

‘‘ஜெயலலிதாவை நீங்கள், சந்தித்து இருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி?’’

“முதல்வரை சிலமுறைதான் சந்தித்து இருக்கிறேன்.  சில நிமிடங்கள்தான் பேசியுள்ளோம். 2016-ல், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னேன். ஆனால், ஒரு தமிழகத்தின் பிரஜையாக மற்ற எல்லோரும் ஜெ-வுடன் தங்களை எப்படித் தொடர்புபடுத்திக் கொண்டார்களோ, அப்படித்தான் எனக்கும் அவருக்குமான தொடர்பு. எனது  இந்தக் கடிதம்கூட அந்தக் காரணத்தால்தான்.’’

‘‘ ‘விஸ்வரூபம்’ பிரச்னையின்போது, ஜெயலலிதாவுடன் நீங்கள் முரண்பட்ட கருத்தில் இருந்தீர்களே?’’

“நான் மட்டுமல்ல... பலரும் அவருடன் அப்போது முரண்பட்ட கருத்தில்தான் இருந்தார்கள். ஆனால், அதுவேறு. முதல்வர் பதவியில் இருப்பவர் எப்படி இறந்தார் என்பதே தெரியாமல் இருக்கும் நிலையில், அது பற்றி கேள்விகேட்பது ஒரு குடிமகளாக என் கடமை”.

‘‘நீங்கள் மோடியை ஒரு மாதத்துக்கு முன்பு சந்தித்தீர்கள். தற்போது மீண்டும் அவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறீர்களே?’’

“அந்த சந்திப்புக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரைச் சந்தித்தபோது இப்படியான சூழல் எழும் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அடுத்த வருடம் யோகா தொடர்பான ஒரு நிகழ்வைத் தொடங்க, சென்ற வருடமே திட்டமிட்டிருந்தேன். அதற்காகத்தான், அக்டோபர் மாதம் மோடியைச் சந்தித்தேன். அவரும் எனக்கு அந்த நிகழ்வு தொடர்பாக உதவுகிறேன் எனச் சொல்லி இருக்கிறார். அவ்வளவுதான்”.

p20b.jpg

‘‘பி.ஜே.பி-யில் மீண்டும் இணையும் திட்டம் இருக்கிறதா?’’

“நான் பி.ஜே.பி இளைஞர் அணியில் இருந்தது ஒருகாலம். பி.ஜே.பி-யில் இணையும் யோசனையுடன் தற்போது நான் எதையும் செய்யவில்லை. அதுவும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கும்போது, அதைக் காரணமாகவைத்து அப்படிச் செய்யமாட்டேன்.’’

‘‘உங்கள் கடிதத்துக்கு மோடியிடமிருந்தோ, சசிகலா தரப்பிடமிருந்தோ என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள்?’’

“என்னுடைய கேள்விக்கு நிச்சயம் பிரதமரிடமிருந்து பதில் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதேபோல சசிகலாவிடம் இருந்தும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால், கிடைக்குமா?”

http://www.vikatan.com/juniorvikatan

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால பாஜக தமிழ்நாடு மாநில பிரிவு தலைவரிடம் கேட்காம விட்டது ..
நிருபர் : நீங்க தமிழ்நாட்டு மக்களை இளிச்சவாயனுங்களா நினைக்கிறீங்களா..?
கவுதமி : யெஸ் 100% கரெக்ட்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.