Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு யாத்திரை

Featured Replies

12 minutes ago, முனிவர் ஜீ said:

அடுத்த தங்குமிடம் வியால என்று சொல்கின்ற யால காட்டுப்பகுதியை நோக்கி தொடரும்    

முனி - இப்படியா மற்றவர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கிறது?
தீயணைப்பு படை வந்தாலும் எனது வயித்தெரிச்சலை அணைக்கேலாது.

என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்தானே.

நல்லவொரு சந்தர்ப்பம் - தவற விட்டுவிட்டேன் 

தொடருங்கள் - உங்கள் எழுத்திலும், படங்களிலுமாவது மனது குளிரட்டும்.

  • Replies 83
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு வெட்ட வெளி

DSCN0916.jpg

3 minutes ago, ஜீவன் சிவா said:

முனி - இப்படியா மற்றவர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கிறது?
தீயணைப்பு படை வந்தாலும் எனது வயித்தெரிச்சலை அணைக்கேலாது.

என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்தானே.

நல்லவொரு சந்தர்ப்பம் - தவற விட்டுவிட்டேன் 

தொடருங்கள் - உங்கள் எழுத்திலும், படங்களிலுமாவது மனது குளிரட்டும்.

அண்னே அந்த நேரம் நாம் தொடர்பு கொள்ள வில்லை  கதிர்காமம் யாத்திரை யாத்திரையென்று கதைத்தோம் ஆனால் நீங்கள் வருவீர்களோ என்ற எண்ணம் இருக்க வில்லை எங்களுடன் உங்கலையும் இணைத்து இருப்பேன் ஏனேன்றால் அத்தனை பேரும் இளைஞர்கள்  நன்றாக இருந்திருக்கும்  அடுத்த வருடம் இணையலாம்  கவலை வேண்டாம்  tw_blush:

தூரத்தில் மேயும்காட்டு மாடுகள்

DSCN0915.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவு கிட்ட போய் மரத்துக்கு கீழே நின்று சுட்டது 

DSCN0961.jpg

37 minutes ago, முனிவர் ஜீ said:

அண்னே அந்த நேரம் நாம் தொடர்பு கொள்ள வில்லை  கதிர்காமம் யாத்திரை யாத்திரையென்று கதைத்தோம் ஆனால் நீங்கள் வருவீர்களோ என்ற எண்ணம் இருக்க வில்லை எங்களுடன் உங்கலையும் இணைத்து இருப்பேன் ஏனேன்றால் அத்தனை பேரும் இளைஞர்கள்  நன்றாக இருந்திருக்கும்  அடுத்த வருடம் இணையலாம்  கவலை வேண்டாம்  tw_blush:

எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை - ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை பாழடிக்க மாட்டேன். இயற்கையை ரசிக்க ரொம்ப பிடிக்கும். அதுவும் இப்படி 12000 பேருடன் ஒரு சுற்றுலா. இது உங்களுக்கு யாத்திரை எனக்கு சுற்றுலா. நினைக்கவே புல்லரிக்குது - கொடுத்து வைத்தவர் நீங்கள். தொடருங்கள் 

நானும் கொஞ்சம் நடை பழகி உங்களுடன் அடுத்த வருடம் இணைகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

முதல்ல பொல்லை பிடிச்சு நடைபழகுங்க:grin:

  • கருத்துக்கள உறவுகள்

Afficher l'image d'origine

அன்பு நண்பன் ஜீவனுக்கு, எதோ எங்கள் கம்பெனியால் முடிந்தது.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை பயணக் கட்டுரை மிக சுவாரசியமாக இருக்கிறது. படங்கள் மிக அருமை, முனி.

ஈழத்தின் வடக்கு செம்மண்ணாலும், கிழக்கு கரிசலாகவும் இருக்கும் போல தெரிகிறது.

எனது கல்லூரித் தோழர்கள் குழாம் சென்றவாரம் கண்டி, நுவரெலியா,கதிர்காமம், கொழும்பு போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர். எனக்கும் அவர்களோடு செல்ல வாய்ப்பிருந்தது.. ஆனால் ஈழத்தை தவிர்த்து இலங்கையின் தென்மேற்கு பகுதிகளுக்கு செல்ல விருப்பமில்லையாதலால் தவிர்த்துவிட்டேன்.

கட்டுரைக்கு நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

அப்போ இந்த வருடத்தில் இருந்தே நடக்க ஆரம்பியுங்கள் அண்ணை அப்ப தான் வந்து சேருவியள் நான் நடக்க ஆரம்பித்தால் யாரையும் திரும்பி கூட பார்க்க மாட்டேன் வருகிறாரா அல்லது இருக்குறாரா என்று அதனால நல்ல பயிற்ச்சி எடுக்கவும் . பேந்து நடுக்காட்டில் நாசமா போனவன் விட்டுட்டு போய்டானே என்று திட்ட கூடாது  tw_blush:

4 hours ago, நந்தன் said:

முதல்ல பொல்லை பிடிச்சு நடைபழகுங்க:grin:

வயது போனாலும் சிங்கன் மாதிரியொல்லோ ஆழு நடப்பார் சும்மா அந்த மாதிரி

2 hours ago, suvy said:

Afficher l'image d'origine

அன்பு நண்பன் ஜீவனுக்கு, எதோ எங்கள் கம்பெனியால் முடிந்தது.....!  tw_blush:

சுவி அண்ணே  பாத யாத்திரைக்கு நடக்க இந்த வாகனமா இதுல நடந்தால் பக்கத்து இருக்குற ரூமுக்கு செல்ல 10 நாட் கள் எடுக்குமேtw_blush:tw_blush:

2 hours ago, ராசவன்னியன் said:

யாத்திரை பயணக் கட்டுரை மிக சுவாரசியமாக இருக்கிறது. படங்கள் மிக அருமை, முனி.

ஈழத்தின் வடக்கு செம்மண்ணாலும், கிழக்கு கரிசலாகவும் இருக்கும் போல தெரிகிறது.

எனது கல்லூரித் தோழர்கள் குழாம் சென்றவாரம் கண்டி, நுவரெலியா,கதிர்காமம், கொழும்பு போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர். எனக்கும் அவர்களோடு செல்ல வாய்ப்பிருந்தது.. ஆனால் ஈழத்தை தவிர்த்து இலங்கையின் தென்மேற்கு பகுதிகளுக்கு செல்ல விருப்பமில்லையாதலால் தவிர்த்துவிட்டேன்.

கட்டுரைக்கு நன்றி!

நன்றி சேகர் அண்ணே ( ராஜவன்னியன்)   ஓம் வன்னி மண்ணுக்கும் கிழக்கு மண்ணூக்கும் நிறைய வித்தியாசம்  ஏன் பேச்சு தமிழ் கூட வித்தியாசம்  அ ட மிஸ் பண்ணிட்டீங்களே நீங்கள் வருவதாக எங்களுக்கு அறிவித்தல் கொடுத்திருந்தால்  கிழக்கில் நான் இருக்கிறேன் சுற்றிக்காட்ட பாடசாலை விடுமுறையென்பதால் எனக்கும் விடுமுறை ஒரு மாதம் , வடக்கில் ஜீவன் இருக்கிறார் சுற்றி க்காட்டி கொழும்பு வரைக்கும் கொண்டு சென்று விட்டிருப்போம் நீங்கள் போகும் திகதிக்கு :unsure:tw_blush:

இப்படியான சந்தர்ப்பங்களை தவறவிடாதீர்கள். ஒரு முறை சென்று வந்தீர்களேயானால் அடுத்த தடவை உங்களுக்கு இலகுவாக இருக்கும்.

கதிர்காமம் முனிவருக்கு பக்கத்தில் தான் உடனேயே ஓடி வந்திருப்பார் (?)

33 minutes ago, முனிவர் ஜீ said:

உண்மைதான் வன்னியர்.

நீங்கள் வந்து வடக்கு கிழக்கை நேரடியாக பார்த்திருக்கலாம். கருத்து சண்டை வேறு, உறவு வேறு. அடுத்தமுறை இப்படியான சந்தர்ப்பம் அமைந்தால் கூறவும், சகல உதவிகளும் செய்து தரப்படும்.

நல்லதொரு சந்தர்ப்பத்தை தவற விட்டு  விட்டீர்கள்.

டிஸ்கி : முனிவர் வீட்டை மட்டும் அவதானமாக இருக்கவும் - முக்கியமா சாப்பிடும்போது. இல்லை தட்டை விட்டிட்டு எங்காவது பாத்தீங்களோ, திரும்ப தட்டை பாக்கும் போது ஆளாளுக்கு எதையாவது போட்டு மறுபடியும் தட்டை நிரப்பி வைத்திருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

இப்படியான சந்தர்ப்பங்களை தவறவிடாதீர்கள். ஒரு முறை சென்று வந்தீர்களேயானால் அடுத்த தடவை உங்களுக்கு இலகுவாக இருக்கும்.

கதிர்காமம் முனிவருக்கு பக்கத்தில் தான் உடனேயே ஓடி வந்திருப்பார் (?)

அதே  ஆனால் 250 கிலோமீற்றராக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை செய்பவர்கள் யாரும் பாதணிகள் அணிவார்களா?

உங்கள் பெயருக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரியே உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மைதான் வன்னியர்.

நீங்கள் வந்து வடக்கு கிழக்கை நேரடியாக பார்த்திருக்கலாம். கருத்து சண்டை வேறு, உறவு வேறு. அடுத்தமுறை இப்படியான சந்தர்ப்பம் அமைந்தால் கூறவும், சகல உதவிகளும் செய்து தரப்படும்.

நல்லதொரு சந்தர்ப்பத்தை தவற விட்டு  விட்டீர்கள்.

டிஸ்கி : முனிவர் வீட்டை மட்டும் அவதானமாக இருக்கவும் - முக்கியமா சாப்பிடும்போது. இல்லை தட்டை விட்டிட்டு எங்காவது பாத்தீங்களோ, திரும்ப தட்டை பாக்கும் போது ஆளாளுக்கு எதையாவது போட்டு மறுபடியும் தட்டை நிரப்பி வைத்திருப்பார்கள்.

யோவ் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை  கவனிப்பது கிழக்கு மக்கள் கொஞ்சம் வித்தியாசம் அதாவது வயிறார வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பது பண்பாடு மரபும் கூட tw_blush:tw_blush:

14 minutes ago, ஈழப்பிரியன் said:

யாத்திரை செய்பவர்கள் யாரும் பாதணிகள் அணிவார்களா?

உங்கள் பெயருக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரியே உள்ளது.

சிலர் அணிவார்கள் அண்ணே சிலபேர் அணிய மாட்டார்கள்  ஒருவருக்கு ஒரு முள் குத்தி அதாவது கீழ் பகுதியில் குற்றி மேல் பக்கத்துக்கு மேலாக வந்து விட்டது அவரை காவிக்கொண்டே சென்றார்கள் அதனால் சில பேர் அணிவார்கள் சிலர் அணிய மாட்டார்கள்.

பெயருக்கும் செயலுக்கும் என்ன அண்ண வச்ச புனைப்பெயரே  சரியாக அமைந்து விட்டது போல் ஓடுகிறது   மத்திய கிழக்கில்  இருக்கும் போது நண்பர் ஒருவருக்கு வைத்த பட்டம் அது  முனி என்று  யாழில் இணையும் போது புனை பெயர் கேட் க அதை வைத்தேன்  அவ்வளவுதான் ஆனால் ஒரு  முருக பக்தன் அவ்வளவே

Edited by முனிவர் ஜீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாவலடியில் பல வருடங்களாக மரத்தின் கீழ் ஊண்டப்பட்டிருக்கும் வேல் ஒன்று 

15782046_1159577350757861_1366862528_n.j

ஒரு வெட்டையில் இளைப்பாறும் ம‌க்க‌ள் கூட்டம்

15782789_1159577324091197_1254080506_n.j

அதிகாலை நேரத்துடனான நடை

15782533_1159577327424530_893748453_n.jp

முருக பக்தர் முனிவரின் படங்கள் அருமை!
எம்மையும் யாத்திரை போகத் தூண்டுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2017 at 0:48 PM, Rajesh said:

முருக பக்தர் முனிவரின் படங்கள் அருமை!
எம்மையும் யாத்திரை போகத் தூண்டுகிறது.

நன்றி அதுக்கென்ன வாங்கோ கொடியேற்றத்துக்கு நடக்கலாம் 

நாவலடியிலிருந்து பயணம் ஆரம்பமாக முன்  சொன்னார்கள் அங்கே பெரிய ஆறு இருப்பதாகவும் அந்த இடத்தில் 3 நாட்கள் நாம் தங்க வேண்டும் என்றும் களைப்பாற நல்ல இடம் எனவும் கொண்டு போன சாப்பாட்டு பொருட்களை அங்கேயே முடித்து விட்டு சமையல் செய்யும் சட்டிகள் பானைகளை மட்டும் கொண்டு சென்றால் போதும் கதிர்காமம் சென்றவுடன் தேவையான பொருட்களை அங்கே வாங்கலாம் என்றும் சொன்னார்கள் அவர்கள் சொன்னது என் காதில் கேட்க வில்லை ஆற்றில் நிம்மதியாக நீராட வேண்டும் அதற்கு வேகமாக நடந்து  ஆற்றை அடைய வேண்டும் என்றும்  அதில் நன்றாக குளிக்க வேண்டும் ஆசை எனக்கு   ஆவலில் பெரியவர்களுடன் முன்னே நடந்தேன்.

அது  ஒற்றையடிப்பாதை அது அதில்  வேற வழி  பிரிகிறதென்றால்  அந்த இடத்தில் குறுக்காக தடி அல்லது கட்டைகளை போட்டு  வழியை மறித்து இருப்பார்கள் பெரிய காடு அது. தொலையா பொல என்ற காடு தொலைந்து போக கூடிய காடு என்றும் சொன்னார்கள்  . நானும் முதலில் காவிகட்டிய பெரியவர்களின்  உதவியுடன் டோச் லைட்டின் உதவியுன் நடக்க ஒரு சில மணித்தியாலங்கள் நடந்த பின் கண்ணுக்கு தெரியாத இருட்டு  வழி மாறி நடந்து கொண்டு இருப்பது தெரிந்தது அதாவது முட்கள் நிறைந்த காடாகவும் ஒருவர் கூட நடக்க முடியாமல் சிரமப்பட்டோம் தலையில் வைத்திருந்த பைகளை சூர முள் விடாமல் கொழுவி  கொழுவி பிடித்து இழுத்து கொண்டே வந்தது  ஒரு சிலருக்கு முட்கள் கிழித்து உடம்பிலிருந்து இரத்தம் வரவும் போன வழி நடுக்காட்டில் முடிவடைந்து இருந்தது மேலும் நடக்கமுடியாமல் போனது முன்னுக்கு சென்றவர்கள் வழி மாறி வந்து விட்டோம் என்று சொல்ல பின்னுக்கு வந்த மக்கள் முன்னுக்கு போன சாமிமார் என்னத்தை பார்த்து நடந்த நீங்கள் கண்ணை என்ன பிடயிலோ வைத்து நடந்தியள் என்று ஏச்சு கொடுத்தாலும் திரும்பி போக வேண்டும் ஆனால் திரும்பி போனாலும் அதே பாதையில் போய் சேர்வோமா என்ற சந்தேகம் வேற சனங்கள் சரியான கஸ்ரப்படுவதைப்பார்த்த அந்த சாமியார்கள் பொறுங்கோ கொஞ்சம் விடியட்டும் விடிஞ்ச பிறகு பாதை தேடி நடக்கலாம் என்று சொன்னார்.

சனங்கள்  அந்த இடத்தில் அமர முடியாது முட் காடுகள் ஒரு சிலர் இருக்கவும் ஒரு சிலர் நிற்கவும் நான் முன்னே நின்றேன் வழி மாறியதை நினைத்து  முழுசிக்கொண்டிருந்தேன் என்னுடன் வந்தவர்களை எப்படி கண்டு பிடிப்பது அவர்களுடன் எப்படி சேர்வது பற்றிய சிந்தனை ஓடிக்கிட்டே இருந்தது இனி அழுவதை தவிர வேற ஒன்றும்  இல்லை நினைக்கும் போது கொஞ்சம் வெளிச்சம் வந்து ஆட்கள் யார் யார் என கண்ணூக்கு தெரியும் படியாக இருந்தது

 அப்போது அந்த இடத்தில் சருகு சத்தம் கேட்கிறது   ஒரு பெரிய பாம்பு வந்தது இதுவரை நான் அந்த பாம்பை வாழ்நாளில் பார்த்தது இல்லை நல்ல பாம்பு சுமார் 10 அடி இருக்கும் அந்த இடத்துக்கு வந்தது சனம் கொஞ்சம் பீதியடைந்தாலும் வந்த பாம்பு அந்த இடத்தில் அதன் நீளத்திற்கு ஏற்றால் போல படம் எடுத்தது எடுத்து  அந்த நிலத்தில் அடித்தது ஒரே அதிசயமாக இருந்தது   எங்களுக்கு அந்த இடத்தில் என்ன சொல்வது என்று சொல்ல தெரியவில்லை.
சனம் எல்லாம் அரோகரா சத்தம் கொடுக்க காடு அதிர்ந்தது முன்னே நின்ற அந்த வயது போன சாமிமார் கற்பூரத்தை எடுங்கோ என்று சொல்ல கற்பூரத்தை எடுத்து கொழுத்திவிட்டு அந்த பாம்பின் வழி தொடர்த்தோம்    ஒரு தொலை தூரத்தில் காவித்துண்டு மரத்தில் கட்டிய ஒரு  சான்று தூரத்தில் தெரிந்தது அப்போதுதான் வந்த மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.பாம்பை தேடினால் அது எங்கே போனது எப்படி போனது என்று யாருக்கும் தெரியவில்லை  அந்த அந்த பாம்பு ஏன் வரவேண்டும் அந்த இடத்துக்கு என்ற ஆயிரம் கேள்வி மனதில் எழுந்தாலும் அதன் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டது மனிதனை மிஞ்சிய சக்தி இருக்கிறது அதை இறைவன் கடவுள் என்றாலும் இப்படிசில சம்பவங்கள் இந்த பாதையில் நடக்கிறது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு விஞ்ஞான விளக்கம் கொடுக்க முடியாது 
.

இதனால் ஈர்க்கப்பட்ட நான் வருடா வருடம் நடந்து செல்கிறேன் இதுவரை பல சம்பவங்கள் நடந்து இருந்தாலும் நான் நடக்கும் போது என் கண்முன்னே நடந்தது மத்திய கிழக்கில் இருக்கும் போது 3 வருடங்கள் நடக்க முடியாமல் போனது மற்ற மூன்று வருடங்கள் கதிர்க்காமம் யாத்திரை  போகும் மாதத்தில் விடுமுறையில் வந்து நடந்து விட்டு மீண்டும் சென்று விடுவேன் ஏனோ என் வாழ்வில் அது பிடித்து விட்டது.இந்த பாத யாத்திரை அம்மா அப்பா அம்மம்மா ஆகியோர் ஆரம்பத்தில் நடக்கும் கொடியேற்றத்துக்காக நடக்கும் சாமியாருடன் வருடா வருடம் நடந்து போவது வழமையாகிவிட்டது 
 
போகும் வழியில் கள்ள வியால என்ற இடம் சிறிய ஓடை உப்புத்தண்ணிதான் நாங்கள் அந்தநாட்களில் போகும் போது அதை கடந்து தான் போக வேண்டும் முதலைக்கூட்டங்கள் படுத்திருக்கும் இதுவரை மனிதர்களை ஒன்றும் செய்தது இல்லை தற்போது அதை கடக்க சில மர‌ங்களை குறுக்காக போட்டுள்ளார்கள் வனத்துறையினர் தற்போது அந்த இடத்தில் நடந்து போகும்  யாத்திரிகளுக்கு சிங்கள் கோடீஸ்வரர்களால் மதிய உணவு சமைத்து கொடுக்கிறார்கள் , இளநீர் கூட கொடுக்கிறார்கள் .மூன்று நாட்கள் அங்கே நல்ல சாப்பாடு தண்ணீர் நல்ல தூக்கம் காட்டுக்குள் கொண்டு போன உணவான சிற்றுண்டி வீட்டில் செய்து கொடுத்த  அனைத்து பார உணவுகளுக்கும் அங்கே விடுதலை கொடுத்தோம்    கருவேப்பிலை மரங்கள் காடாகவும் மதுரை மரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் ஆற்றை வணங்கிய இடமும் போல் அழகிய இடம் மக்கள் கூட்டமும் வந்த களைப்பில் இளைப்பாறும் இடமாகவும் காணப்பட்டது வியால என்கிற யால இது மிருக சரணாலயம் கூட யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் குடிக்கும் தூரமாக மக்களின் சத்தத்துக்கு அருகில்    மிருகங்கள் வருவது குறைவு ஆனால் இரவில் காட்டில் முறிக்கும் மரங்களின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.    
கரடிகள் ஆதிகமாக காணப்படும் காடு  சிறுத்தைகள் மான்கள் மரைகள் ,இரு வருடங்களூக்கு முன் காட்டில் மாலை நேரம் மிருகம் கத்தும் சத்தம் கேட்டது போய் பார்த்தால் ஒரு மான்குட்டியை சிறுத்தை கிழித்து அப்போதுதான் போட்டிருந்தது அதன் படம் தொலைந்து விட்டது ,இன்னுமொரு சம்பவம் காட்டுக்குள் சென்ற ஒருவரை  காட்டு பன்றிகள் தன்னை பிடிக்க வருகிறார் என நினைத்து அவரின் கவட்டுக்குள் புகுந்து விட்டது வேறென்ன கவடு கிழிந்து காயம். ஆனால் இந்த காட்டில் ஒருவர் காணாமல் போயுள்ளார் அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரைக்கும் யாருக்கும்  தெரியாது.  இதே போல் இன்னும் கொஞ்சம் பேர் வழி மாறி  சென்ற போது காட்டு எருமைகள் வந்து கூட்டமாக  துரத்தி வருவது போல் வந்து வழி காட்டி சென்றதாகவும் சொல்வார்கள்.
  சில சம்பவங்கள் இப்படியும் நடக்கும் இப்படி மிகப்பயங்கரமாக இருக்கும் இந்த வியால என்ற காடு ராணுவத்தில் மிக முக்கியமான பயிற்ச்சி தளம் கூட இருக்கிறது அந்த நாட்களில் ராணுவத்தில்  மெடிக்கல் பிரிவினர் வந்து மக்களுக்கு காயம் ஏற்பட்டால் , மருந்து கட்டுவது , தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் சிலவேளைகளில் ரீ பணிஸ் தேநீர் தந்து விட்டு போவார்கள் அது வில்வம் பூவினால் செய்தது மிக நன்றாக இருக்கும் அதற்க்கு சீனி போடாமல் சக்கரைக்கட்டி அல்லது சீனியை நக்கி குடிக்க  தருவார்கள் சுவையானதும்  உடம்புக்கு மிக நல்லது கூட‌..... 
 
நான் சொன்ன‌ க‌ள்ள‌ வி(யால‌)

15820069_1159577344091195_1078327253_n.j

15800979_1159577347424528_370320129_n_1.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரை செய்யும் சாமிமார்க‌ளூக்கு சாப்பாடு கொடுக்கும் சிங்க‌ளதொழில‌திப‌ர்க‌ளால் அமைக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கூடார‌ம் அந்த‌ ந‌டுக்காட்டில்

DSCN0919.jpg

சாப்பாடு வழங்கும் போது 

15782219_1159577334091196_761124791_n.jp

வியால ஆற்றின் பகுதி கையில் கறிவேப்பிலை கட்டுடன்

15822471_1159577440757852_20989404_n.jpg

ஆற்றின் நடுவே மக்கள் 15820440_1159577384091191_123505292_n.jp

அழகிய ஆற்று மணலில் இரவில் நித்திரை கொள்வது 

DSCN0922.jpg

இந்த வருட சமையல் வேலையில் நமது சாமிமார் இருவர் திட்டம் போடுகிறார்கள் என்ன சமைக்கிறதென்று tw_blush:

DSCN0924.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 நீரை எடுக்கும் காட்சி

15781997_1159577400757856_472141774_n.jp

போன வருடம் யாலயை சென்றவுடன்  பொருட் களை பிரித்து வைத்து தேநீர் வைப்பதற்காக நீரை எடுக்க சென்ற வேளை நமதுசங்கத்து உறுப்பினர்கள் ஆட்டையை போட்டுக்கொண்டு ஓடிவிட்டார்கள் மரக்கறிகளை அவைகளை சுட்ட படம் இது மரத்தின் கலரில் உருமறைப்பு செய்ததால் பக்கிகளை கண்டு பிடிக்க முடியல

DSCN0113.jpg

சொதி வைக்க வைத்திருந்த தக்காளியை சுவைக்கிறார்

DSCN0662.jpg

Edited by முனிவர் ஜீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை துரத்தி ஆறுவரைக்கும் கொண்டு விட்டது சரிதானே அதுன்ற இடத்துக்கு நாம போனால் விடாது  கூட்டத்தை கூட்டி வந்து என்னத்தை சொல்ல ஒரு காட்டு காட்டிச்சு

DSCN0668.jpg

என்னை ரவுண்டு கட்டியது .............................தொடரும் யாத்திரை

DSCN0667.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரவில் தீ மூட்ட  விறகுகளை அடுக்கியது tw_blush:

இரண்டு பக்கமும் ஆறு ஓடிக்கொண்டே இருக்கும் நடுவில் இருக்கும் மணல் திட்டில் என்ன சொல்வது ...................................

15749869_1159577517424511_872855789_n.jp

அருமை! அருமை! தொடரட்டும் பாத யாத்திரை .

On 1/6/2017 at 11:24 PM, முனிவர் ஜீ said:

 அப்போது அந்த இடத்தில் சருகு சத்தம் கேட்கிறது   ஒரு பெரிய பாம்பு வந்தது இதுவரை நான் அந்த பாம்பை வாழ்நாளில் பார்த்தது இல்லை நல்ல பாம்பு சுமார் 10 அடி இருக்கும் அந்த இடத்துக்கு வந்தது சனம் கொஞ்சம் பீதியடைந்தாலும் வந்த பாம்பு அந்த இடத்தில் அதன் நீளத்திற்கு ஏற்றால் போல படம் எடுத்தது எடுத்து  அந்த நிலத்தில் அடித்தது ஒரே அதிசயமாக இருந்தது   எங்களுக்கு அந்த இடத்தில் என்ன சொல்வது என்று சொல்ல தெரியவில்லை.
சனம் எல்லாம் அரோகரா சத்தம் கொடுக்க காடு அதிர்ந்தது முன்னே நின்ற அந்த வயது போன சாமிமார் கற்பூரத்தை எடுங்கோ என்று சொல்ல கற்பூரத்தை எடுத்து கொழுத்திவிட்டு அந்த பாம்பின் வழி தொடர்த்தோம்    ஒரு தொலை தூரத்தில் காவித்துண்டு மரத்தில் கட்டிய ஒரு  சான்று தூரத்தில் தெரிந்தது அப்போதுதான் வந்த மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.பாம்பை தேடினால் அது எங்கே போனது எப்படி போனது என்று யாருக்கும் தெரியவில்லை  அந்த அந்த பாம்பு ஏன் வரவேண்டும் அந்த இடத்துக்கு என்ற ஆயிரம் கேள்வி மனதில் எழுந்தாலும் அதன் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டது மனிதனை மிஞ்சிய சக்தி இருக்கிறது அதை இறைவன் கடவுள் என்றாலும் இப்படிசில சம்பவங்கள் இந்த பாதையில் நடக்கிறது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு விஞ்ஞான விளக்கம் கொடுக்க முடியாது 

இது போன்ற அற்புதங்களுக்கு விஞ்ஞான விளக்கங்கள் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் முனிவர்ஜீ...தனியே படங்களை மட்டும் போடாமல் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

தொடருங்கள் முனிவர்ஜீ...தனியே படங்களை மட்டும் போடாமல் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் எழுதுங்கள்

பாவம் விட்டு விடுங்கள் சகோதரி.... இப்பதான் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

தொடருங்கள் முனிவர்ஜீ...தனியே படங்களை மட்டும் போடாமல் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் எழுதுங்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ரதி ஒவ்வொரு வருடம் ஒரு சிலருக்கு மட்டுமே அனுபவிக்க கிடைக்கும்  சம்பவங்கள்   அது  கிடைப்பது  பாக்கியம் தான் 

13 hours ago, suvy said:

பாவம் விட்டு விடுங்கள் சகோதரி.... இப்பதான் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.....!  tw_blush:

 இந்த வருடம் போக முடியாமல் போய் விடுமோ என்ற  ஒரு தயக்கம் தான் பார்ர்போம் கட்டினால்  பொட்டி விடாது கட்டாமல் விட்டா வீடு விடாது  இரு பக்கமும் அடிபட வேண்டியதா கிடக்கண்ணை  

tw_blush:  

அப்பப்ப    ஞாபகப்படுத்துகிறீர்களே:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அதொண்டும் பிரச்சினை இல்லை முனிவர்.... பொட்டியை  நேர்வழியில் அனுப்பிவிட்டு நீங்கள் வழக்கம்போல் குறுக்கு வழியில போகலாம்....! tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.