Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புயலைத் தாங்கும் பூவரச மரம்..!

Featured Replies

புயலைத் தாங்கும் பூவரச மரம்..!

பூவரச மரம்

பீப்பீ..பீப்பீ...பூவரசம் இலையில் சுருட்டிய விசில் சத்தம், இன்றைக்கு மத்திய வயதில் இருக்கும் பெரும்பாலானவர்களின் நினைவுகளின் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அன்றைக்கு கிராமத்து சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாக இருந்ததில், பூவரசம் மரத்தின் இலைக்கும், காய்க்கும் முக்கிய பங்குண்டு. இது அதிகளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரம் என்பதால், கிராமங்கள் தோறும் இந்த மரங்களை நட்டு வைத்தார்கள் முன்னோர்கள். குறிப்பாக, கமலை மூலமாக நீர் இறைக்கும் கிணற்று மேட்டில் பூவரசு நிச்சயம் இருக்கும். கமலையை இழுத்து வரும் மாடுகள் சோர்ந்துப் போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். காலப்போக்கில், கமலை மறைந்து, மின்சார மோட்டார் பாசனத்துக்கு வந்த பிறகு, மாடுகளும் காணாமல் போயின..பூவரசு மரங்களும் அருகிவிட்டன. அற்புதமான மருத்துவகுணங்கள் நிறைந்த பூவரசு மரங்களின் அழிவும் புவிவெப்பமாதலுக்கு ஒரு முக்கியமான காரணம். 

unnamed_12095.jpg

பல்வேறு காரணிகளால் வளியெங்கும் விரவிக்கிடக்கும் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொண்டு, பிராணவாயுவை வெளிவிடும் பூவரசு, அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான மரம் என்கிறார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இந்த மரம் கடுமையான புயலிலும் சாயாத தன்மைகொண்டது...அப்படியே சாய்ந்தாலும் சாய்ந்த நிலையிலேயே வளரும் தன்மை கொண்டது. பீரோ, கட்டில் போன்ற பொருட்கள் செய்வதற்கு அந்த காலத்தில் பூவரசு மரத்தின் பலகையைத்தான் பெரிதும் பயன்படுத்தினார்கள். இரும்பு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பூவரச மரத்தை சீண்டுவாரில்லை. ஆனாலும் இன்றைக்கும் பூவரசின் மகத்துவம் அறிந்தவர்கள் இதனை தேடித் தேடி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

unnamed_%281%29223d_12467.jpg

பூவரசு வெறும் மரம் மட்டுமல்ல... ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்கும் இலவச மருத்துவமனை. மிகச் சிறந்த தோல் மருத்துவர். தோல் தொடர்பான பல நோய்களுக்கான தீர்வு இந்த மரத்தில் இருக்கிறது. சாதாரணமாக தோலில் ஏற்படும் எச்சில் தழும்பு தொடங்கி, தொழுநோய் வரையான பல்வேறு சரும நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூவரசம் காயை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் கசியும். அதை எச்சில் தழும்பு, சொறி, சிரங்கு, படை, விஷக்கடி உள்ள இடங்களில் தடவி வந்தால் முற்றிலும் குணமாகும்.

நூறு ஆண்டுகள் ஆன முதிர்ந்த பூவரச மரத்தின் பட்டையை பொடிச்செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும். முதிர்ந்த பூவரசு மரத்தின் பட்டையை இடித்து, அந்த சாறில் தினமும் வாய் கொப்பளித்தால் வெண்குஷ்டநோயால் வாயில் ஏற்பட்ட வெண்புள்ளிகள் மாறும். இந்த சாறை கொப்பளித்து துப்பி விடவேண்டும். விழுங்கி விடக்கூடாது. இத்தனை மகத்துவம் வாய்ந்த மரம் என்பதால் தான் இதை 'காயகல்ப மரம்' என அழைக்கிறார்கள்.

இதய வடிவ இலைகளையுடைய பூவரச மரம் தற்பொழுது அழிந்து வருகிறது. வீட்டுக்குத் தேவையான பலகைகள், நோய் தீர்க்கும் மருந்துகள் மற்றும் காற்றை சுத்தப்படுத்தும் சூழலியல் நண்பன் என பன்முகம் கொண்டது. இந்த பூவரசு மரங்களை வீடுகள், சாலையோரங்கள், காலியிடங்களிலெல்லாம் வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். புயலைத்தாங்கி வளரும் தன்மையும் உடையதால் புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் பூவரச மரங்களை நடலாம். புவியெங்கும் பூவரசு வளர்ந்தால் காற்று மாசு ஓரளவுக்காவது குறைந்து, பூமி சூடாவதில் இருந்து ஓரளவுக்காவது காக்க முடியும்.

http://www.vikatan.com/news/agriculture/76828-poovarasu-tree-can-withstand-the-cyclones.art

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் ஒருவர் காலமாகி விட்டால் வளவில் இருக்கும் இரண்டு பூவரசமரம் வண்டிலில் சுடுகாடு சென்று அவருக்கு தகனப் படுக்கையாகி விடும்....!

இடியப்ப உரலும் பூவரச மரத்தில்தான் செய்வார்கள்....! tw_blush:

ரப்பர் வளையத்தில் வைத்து அடிப்பதற்கு பூவரசம் காம்பு மிகச் சிறந்தது....! tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, suvy said:

பூவரசம் கேட்டியாலை வாங்கின அனுபவம் இல்லையோ? :(

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

பூவரசம் கேட்டியாலை வாங்கின அனுபவம் இல்லையோ? :(

ஒருக்காலும் இல்லை , நம்ம ரேஞ்சே வேற.....!  எப்பவும் முதிரை, பாலை பிரவட்டுகளால்தான் ஆடி வாங்குவது.... மிஞ்சிப் போனால் அடியோடு முற்றத்தில் முழங்காலில் + நெற்றியில் கல்லுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டி வரும்....!

ஒருநாள் வேலை செய்யும்போது கொஞ்சம் கண்ணயர்ந்து விட்டேன். மாமாவும் டேய் அந்த ஆணியை எடுத்துத் தாடா என்கிறார். நானும் அரக்கப் பறக்க எழுந்து அது பழுக்கக் காய்ச்சி கிடந்தது. அதைத் தூக்கியதும் பசியில் கூட நான் அம்மா என்று கத்தியதில்லை .அன்று கத்தினேன்.அவரோ கூலாக "ஆ இப்ப உசார் வந்திட்டுது என்ன" என்கிறார்....!

அந்த மாமாதான் காலாகாலத்தில் எனக்கு தனது மகளைத் திருமணம் செய்து வைத்தார். இப்ப அவர் விட்ட பொறுப்பை அவள் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறாள்....! கல்யாணத்துக்கு பின் நான் அன்று பட்ட  துன்பமெல்லாம் ஜூஜூபியாய் போச்சு....!

(முன்னர் ஒரு திரியில் ஒரு சித்தி பெண்பிள்ளையை அடித்த திரியில் நான் கருத்து எழுதவில்லை என நினைக்கின்றேன். அதையெல்லாம் தாண்டி இன்று நலமாய் இருக்கிறேன்.)  tw_blush: 

  • தொடங்கியவர்
 
Bild könnte enthalten: Pflanze und Natur
 
பூவரசம் இலைக்கு ஊரில் பலவிதமான பாவனை உண்டு. 1f642.png:) (y)

#பீப்பி செய்து ஊதலாம்.(இதனால் இரவில் ஊதி பாம்பு வரும் எண்டு அடி வாங்கிய நாட்கள் பல உண்டு).

எங்கட ஒழுகையால போகும் பொம்பிளை பிள்ளையளை பாத்து பம்பலா பகிடி பண்ண பீப்பி ஊதி அவளிட்ட கிழிய கிழிய வாங்கின அனுபவமும் மறக்கமுடியாது.

வடை மற்றும் பணியாரம் அதில் வைத்துத்தான் தட்டுவார்கள்.

அதன் காம்பை ரப்பர் பாண்டில் வைத்து இழுத்து சுண்டி வில் போல் அடித்தால் சுள் எண்டு வலிக்கும்.இப்பிடி பள்ளிக்கூடத்தில அடிச்சு ,என்னோட படிச்ச பிள்ளை சாந்தினியில பட்டு ..அவள் அழுதுகொண்டுபோய் ராணி ரீச்சரிட்ட சொல்ல , அவா பிறின்சிப்பலிட்ட சொல்ல.. அந்த ஆள் பூவரசம் காம்பால வெளு வெளு எண்டு துடையில ரத்தம் வர அடிச்சது ஒரு கதை.அதை வீட்ட சொல்லாமல் ஒழிச்சது பெரிய கதை.

கள்ளு குடித்துவிட்டு பூவரசம் இலையை சப்பி துப்பினால் மணம் போகும். இதனால் ஊரில பல பெரும் குடிமக்கள் மனிசியின்ர "அரிச்சனையில்" இருந்து ஓரளவு தப்பி இருக்கினம்.
(கொய்யா இலை திறம் சாமான்.ஆனால் கொய்யா இலை தேடி அலையுறதுக்கிடையில வெறி முறிஞ்சிடும்.அதனால கையுக்கெட்டின தூரத்தில கிடைக்கிற பூவரசம் இலைதான் அருமையான MOUTH FRESHENER)

சோறு, கறி எல்லாவற்றையும் ஒண்டாய் பிரட்டி பினைந்து அதை கவளமாக உருட்டி பூவரசம் இலையில் வைத்து அம்மா தரும் அந்த உணவு ...அமிர்தம்.

அஞ்சாம்மனை கோயில்ல புக்கை வாங்க அவசரமா உதவும் பாத்திரம் இதுதான்.
கன இலைகளை ஈக்கிலால ஒண்டா வட்டமா கோப்பை போல குத்தி அதில கோயில்ல தரும் புக்கையோ இல்லை அன்னதான சோறோ வாங்கி திண்டால் அதில வாற ருசி சொல்லி வேலையில்லை.

பூவரசம் தடி....!!!
இதனால் பாதிக்கப்படாத யாரும் எங்களின் ஊரில் இல்லை.
வீட்டில குழப்படி செய்தால் அம்மா உடனடியாய் வேலியடிக்கு போய் முறித்து அப்பாவிடம் கொடுக்கும் ஆயுதம் இது.குண்டியில் விழும் அடி சுள் என்று ஏறும்.
பள்ளிக்கூடத்தில் குழப்படி செய்தால் "ஐங்கரன் சேர்" போட்டு வெழுக்கும் ஆயுதமும் இதுதான்.

ஊரில "கள்ளக்காணி" பிடிக்க உடனடியா பயன்படுத்தும் உபகரணம் பூவரசம் கதியால்.
வேலிச்சண்டை,ஒழுங்கைச்சண்டை,காணிச்சண்டை,எல்லைச்சண்டை இப்படி பல பிரச்சினைக்கு காரணம் இந்த "பூவரசம் கதியால்" தான். கொஞ்சம் தண்ணி ஊத்தினா காணும் சும்மா கிசுகிசு எண்டு வளரும்.

அம்மா அடித்தால் கோபத்தில் மூஞ்சையை நீட்டிக்கொண்டு புலம் பெயர்ந்து ஏறித்தங்கும் தங்குமிடம் "பூவரச மரம்" தான்.

கோடை வெயிலில் பள்ளிக்கூடம் விட்டு ஒழுங்கையால் சுடு மணலில் ஓடி வரும் போது "நிழல்" தந்து எங்களின் பிஞ்சுக்கால்கள் பொக்கிழிக்காமல் காத்ததும் இந்த பூவரச நிழல்தான்.

எங்கட ஊரில கன காதலர்களின் தபால்ப்பெட்டி இதுதான். வேலியோரத்து பூவரச மரத்தில தான் தங்களின் காதல் கடிதங்களையும் அன்பளிப்பு பொருள்களையும் சொருகிப்போட்டு போறவை.

ஆரேனும் வீட்ட போகும் போது அவையள் ஆரும் வீட்டில இல்லையெண்டா,
நாங்கள் வந்து போன விசயத்தை சொல்ல "பூவரசம் கொப்பொண்டை" முறிச்சு படலியடியில குத்திப்போட்டு போனா அவையளுக்கு தெரியும் ஆரோ வீட்ட வந்திட்டு போயிருக்கினம் எண்டு.

பொதுவா எல்லா வீடுகளிலையும் நாலு மூலைக்கும் பூவரசம் மரம் நிக்கும்.ஆரேனும் செத்துப்போனா அதில இரண்டு மூண்டை தறிச்சு சுடலைக்கு அனுப்புவினம்.பூவரசம் குத்தியத்தான் நெஞ்சாங்கட்டைக்கு வச்சு பிரேதத்தை கொழுத்துறவை.

#நன்றி - தமிழ்ப்பொடியன்

இது ஒரு முகநூல் பதிவு

ஆமா உந்த பூவரசை நினைக்கேக்கை அதில படையா இருக்கிற மசுக்குட்டியை மட்டும் மறந்துடுறானுங்க.

காங்கேசன்துறையில் விடுபட்ட பகுதியில உள்ள பூவரச பாத்தீங்க மயக்கமே வரும் - அம்மாண்டு பெருசு.

Image may contain: tree, sky, plant, outdoor and nature

  • 9 months later...
  • தொடங்கியவர்
 
Bild könnte enthalten: Pflanze, Blume und Natur
தமிழ் மருத்துவம்
 
சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்

பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.

சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:
 
என்ரை ஊரிலை பூவரசு எண்டால்...
வேலிக்கு கதியால்....
இல்லையெண்டால்...
நெஞ்சாங்கட்டைக்குக்குத்தான் பிரயோசனப்படும்.இலையை சுருட்டி பீப்பீ ஊதினது வேறை விசயம்.tw_blush:
இப்பதான் பூவரசுவிலை வருத்தங்களுக்கும் மருந்து இருக்கெண்டு கேள்விப்படுறன். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

தென்மராட்சியில்..

பூவரம் இலையின் பயன்பாடுகள்..

1. ராயிலட் ருசு.

2. சாப்பாடு கட்ட.

3. சாப்பாட்டு தட்டு.

4..கால்நடை உணவு.

5. பீப்பி

6. குடை

7. குந்த.

8. சுவத்தில எழுதிற பெயின்ட்.

9. நிழல் (புகையிலை நாத்துக்கு நிழல் கொடுக்கிறதுக்கு தூர இடத்தில் இருந்து வந்தும் வெட்டிப் போறவையாம்.)

10. வடிவுக்கு.

(இது இலைக்கு மட்டுமுள்ள பயன்பாடுகள்)tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

தென்மராட்சியில்..

பூவரம் இலையின் பயன்பாடுகள்..

1. ராயிலட் ருசு.

2. சாப்பாடு கட்ட.

3. சாப்பாட்டு தட்டு.

4..கால்நடை உணவு.

5. பீப்பி

6. குடை

7. குந்த.

8. சுவத்தில எழுதிற பெயின்ட்.

9. நிழல் (புகையிலை நாத்துக்கு நிழல் கொடுக்கிறதுக்கு தூர இடத்தில் இருந்து வந்தும் வெட்டிப் போறவையாம்.)

10. வடிவுக்கு.

(இது இலைக்கு மட்டுமுள்ள பயன்பாடுகள்)tw_blush:

9வது பிழை, பசளைக்கு நிலத்துக்கு அடியில் போடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் அந்த இலையில் வைத்து பலகாரத்தை சரி செய்வார்கள் எண்ணெய் தடவி  பீ பீ  ஊதுன்தென்றால் இந்த வருடம் நயினாதீவில் ஊதினன் பல வருடங்களுக்கு பிறகு  முதலில் காத்து வந்தாலும் பிறகு சத்தம் வந்தது  இந்த கருத்து எத்தின  பேர் வர போறாங்களோ என தெரியவில்லை காத்துதான் வந்ததா என கேட்டு tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நந்தன் said:

9வது பிழை, பசளைக்கு நிலத்துக்கு அடியில் போடுவோம்

9ம் சரி. பசளைக்கும் பயன்படுத்திறாங்க.. அதை 11 ஆ.. வைச்சுக்குங்க. 

புகையிலை நாத்தை புடுங்கி நட்டிட்டு.. நிழல் கொடுக்க எதை குத்திறதாம்... ??! tw_blush:

ஆனால் தென்மராட்சியில் புகையிலை பயிரிடுவது அரிது. அதற்கு தீவகம்.. மற்றும் வலிகாமம் தான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

புகையிலை நாத்துமேடை வடமராட்சி பொலிகண்டி திக்கம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

புகையிலை நாத்துமேடை வடமராட்சி பொலிகண்டி திக்கம் தான்.

மண்டைதீவும் புகையிலை நாத்துக்கு பெயர் போனது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nedukkalapoovan said:

மண்டைதீவும் புகையிலை நாத்துக்கு பெயர் போனது. tw_blush:

மாப்பிளை....எங்கட ஊர்...புகையிலையை....மணந்து பாக்கேல்லைப் போல கிடக்கு!

புகையடிக்கிற கிடங்குக்குள்ள ஒருக்கா இறங்கி...ஏறினாலே....அந்த வாசத்திலயே ஒரு கிறக்கம் இருக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, nedukkalapoovan said:

9ம் சரி. பசளைக்கும் பயன்படுத்திறாங்க.. அதை 11 ஆ.. வைச்சுக்குங்க. 

புகையிலை நாத்தை புடுங்கி நட்டிட்டு.. நிழல் கொடுக்க எதை குத்திறதாம்... ??! tw_blush:

ஆனால் தென்மராட்சியில் புகையிலை பயிரிடுவது அரிது. அதற்கு தீவகம்.. மற்றும் வலிகாமம் தான். tw_blush:

கூடுதலாய் எல்லா நாத்துக்கும் நிழல் குடுக்க கீயா இலை/கெட்டி இல்லாட்டி நாவல் இலை/கெட்டி....tw_blush:

கொடிகாம சந்தைப்பக்கம் போயிருந்தால் தென்மராட்சி பொயிலைக்கும் அருமையில்லையெண்டது தெரிஞ்சிருக்கும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

9ம் சரி. பசளைக்கும் பயன்படுத்திறாங்க.. அதை 11 ஆ.. வைச்சுக்குங்க. 

புகையிலை நாத்தை புடுங்கி நட்டிட்டு.. நிழல் கொடுக்க எதை குத்திறதாம்... ??! tw_blush:

ஆனால் தென்மராட்சியில் புகையிலை பயிரிடுவது அரிது. அதற்கு தீவகம்.. மற்றும் வலிகாமம் தான். tw_blush:

நாங்கள்...நொச்சி இலை தான் நிழலுக்குக் குத்திறது!:mellow:

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

9ம் சரி. பசளைக்கும் பயன்படுத்திறாங்க.. அதை 11 ஆ.. வைச்சுக்குங்க. 

புகையிலை நாத்தை புடுங்கி நட்டிட்டு.. நிழல் கொடுக்க எதை குத்திறதாம்... ??! tw_blush:

ஆனால் தென்மராட்சியில் புகையிலை பயிரிடுவது அரிது. அதற்கு தீவகம்.. மற்றும் வலிகாமம் தான். tw_blush:

தெரியாட்டி இடத்தை விட்டு விலகிடோணும்.எந்த ஊரில புகையிலை கன்றுக்கு பூவரசம் இலையை நிழலுக்கு நடுறவை எண்டு ஒருக்கா விசாரிச்சு சொல்லுங்க,தீவில பொதுவா வைக்கோலை ஒரு சுத்து சுத்தி ,ரெண்டு பனையோலை ஈர்க்கை ரெண்டா மடிச்சு கூடாரம் போல புகையிலை கன்றை சுத்தி குத்திப்போட்டு அதுக்கு மேல கைக்கோல் திருகணியை போட்டுவிடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நந்தன் said:

நான் உதே தீவகத்தில் கண்டிருக்கிறேன். தென்மராட்சியில் இருந்து பூவரம் குழையும்.. குருத்தோலையும் தீவகத்துக்கு கொண்டு வரப்படுவதையும்.. புகையிலை நாற்றை புடுங்கி நட்டதும் முதலில் இலை குத்துவினம்.. அதுக்குப் பிறகு அது துளிர்விடும் நேரத்தில் தான்..என்னென்னோ எல்லாம் செய்வார்கள்.

ஒருவேளை நீங்க வேற மாதிரி நடுறனீங்க போல. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

நான் உதே தீவகத்தில் கண்டிருக்கிறேன். தென்மராட்சியில் இருந்து பூவரம் குழையும்.. குருத்தோலையும் தீவகத்துக்கு கொண்டு வரப்படுவதையும்.. புகையிலை நாற்றை புடுங்கி நட்டதும் முதலில் இலை குத்துவினம்.. அதுக்குப் பிறகு அது துளிர்விடும் நேரத்தில் தான்..என்னென்னோ எல்லாம் செய்வார்கள்.

ஒருவேளை நீங்க வேற மாதிரி நடுறனீங்க போல. tw_blush::rolleyes:

ஆமா நீங்க சொல்லுற தீவகம் நுணாவிலுக்கு எந்தப்பக்கம் இருக்கு:grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

ஆமா நீங்க சொல்லுற தீவகம் நுணாவிலுக்கு எந்தப்பக்கம் இருக்கு:grin:

எந்தப் பக்கமுன்னே தெரியாதா உங்களுக்கு.. ஐயே..! :rolleyes:tw_blush:

எதுக்கும் மீண்டும் ஊருக்குப் போய் புகையிலை செய்து பார்த்துப் பழகவும் (தடை வர முதல்). tw_blush:

தென்மரடாட்சியில் இருந்து.. குழை.. குருத்தோலை மட்டுமல்ல.. புகையிலை வாட்ட என்று தேங்காய்மட்டையும் கொண்டு வாறவை. ஊமல்.. (பனங்கொட்டையின் காய்ந்த வடிவம்).. தீவகத்திலேயே அதிகம்.. கிடைப்பதால்.. அது கொண்டு வாறதைக் காணவில்லை.

எல்லாரும் இப்படிச் செய்யினமோ தெரியாது.. தீவகத்தில்.. இதை அவதானிச்சிருக்கம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இன்றைய மருத்துவ சிந்தனை: பூவரசு மரம்

8016695971_388532fdd9_b

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

பூவரசு மரம்:

  • பழுத்த பூவரசு இலையை அரைத்து தலையில் புழுவெட்டு உள்ள இடத்தில் தடவிக் குளித்து வந்தால் புழுவெட்டு மறைந்து அந்த இடத்தில் தலைமுடி வளரும்.
  • பூவரசு மரப்பட்டையை அரைத்துக்  குளித்து வந்தால் படை , நமைச்சல் குணமாகும்.
  • பூவரசு மரத்தின் இலையை வதக்கி வீக்கத்தின் மீது கட்டினால் வீக்கமும் வலியும் குறையும்.
  • பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளை மிளகு (8) சேர்த்து அரைத்து , மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து தினமும் மூன்று வேளையும் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
  • பூவரசு மரத்தின் காயைத் தண்ணீர் சேர்த்து அரைத்து படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
  • பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்தால் இலேசான பசபசப்புடன் மஞ்சள் நிற சாறு வரும்.  இதை முகத்திலுள்ள கறுப்புப் பகுதிகள், செயின் உராய்வதால் உண்டான கறுத்த பகுதிகளில் தடவினால்  கருமை மாறும்.
  • பூவரசங்காய் (2), செம்பருத்திப்பூ (2), பூவரச பழுத்த இலை (2)  இவற்றை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் பொடுகு நீங்கும். சருமத்தில் தேய்த்து வந்தால் சருமம் பளபளப்பதுடன் கண் கருவளையம் மாறும்.

http://www.dinamani.com/health/healthy-food/2017/oct/27/இன்றைய-மருத்துவ-சிந்தனை-பூவரசு-மரம்-2796881.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.