Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 51 members have voted

  1. 1. வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் அபிப்பிராயம்

    • பொருத்து வீட்டுத் திட்டத்தினை எதிர்க்கின்றேன்
      30
    • இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு அடிப்படை வசதியாக இருப்பதால் ஓரளவு ஆதரிக்கின்றேன்
      16
    • கருத்து எதுவுமில்லை
      5

Please sign in or register to vote in this poll.

Featured Replies

On 17/01/2017 at 6:02 PM, Surveyor said:

நீங்கள் எதோ கூரை தகட்டில் Phd முடிச்ச மாதிரி எங்களுக்கு நீங்கள் வகுப்பு எடுக்க வேண்டாம்.  உங்களை போல நாங்கள் வெளி வேஷம் போடவில்லை. நீங்கள் மட்டும்தான் தமிழ் மக்களை காக்க வந்த ரட்ச்சகர் மற்றவர் எல்லோரும் தமிழர்களுக்கு எதிராவனவர்கள் என்ற உங்களது வாதம் அருவறுக்கத்தக்கது. 

நானும் வெளி வேஷம் போடவில்லை 
ஏன் என்று கேட்டேன் - பதில் இல்லை
இவ்வளவு ----------- என்பது எனது ஆதங்கம்

ஒரு விடயத்தை காரணமில்லாமல் எதிர்ப்பவர்கள் மீதான வெறுப்புதான்
இதுக்கு phd தேவை இல்லை மனிதாபமே போதும்.

மக்கள் முடிவெடுக்கட்டும்
முடிந்தால் அறிவார்ந்தவர்கள் ஆலோசனைகளை வழங்கட்டும்.

***********

Edited by நியானி
தனி நபர் தாக்குதல்

  • Replies 167
  • Views 30.3k
  • Created
  • Last Reply

கோமாரியில் ஒரு கோதாரி

IMG_7262.jpg

IMG_7263.jpg

இது சுனாமியினால் அழிக்கப்பட்ட வீடுகளுக்காக கோமாரி என்ற இடத்தில் ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் கட்டிக்கொடுத்த வீடுகள். இவற்றில் இரு வீடுகளில் மட்டுமே மனிதர்கள் இன்று வாழுகின்றார்கள்.

இன்னொரு விடயம் 

சுனாமியினால் அழிந்த வீடுகளுக்குப் பதிலாக அடுக்குமாடி வீடுகளை வழங்கியபோது அதனை மறுத்து தனி கல்வீடு வேண்டும் என்றவர்கள் இன்றும் குடிசையில். அடுக்குமாடிகள் இப்போது காலியாக உள்ளது. அடுக்குமாடியை பெற்றவர்கள் தனியாக வீடு கட்டி அங்கே வசிக்கிறார்கள்

ஒரு இடைக்கால தீர்வாக இதையாவது மக்கள் ஏற்க தயார் நிலையில் இருக்கும்போது - பலருக்கு எதுவும் புரியாது கடப்பது ஏனோ? 

போரழிவுக்கு ஐந்து வருடங்களின் பின்னர் பல பில்லியன் டொலர்களில் அமைக்கப்படும் வீடமைப்பை தற்காலிக ஏற்பாடு என கருதும் அளவுக்கு இலங்கை செல்வந்த நாடல்ல. சுனாமியின் பின் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடுகளுடன் இதை ஒப்பிட முடியாது. பீகாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தை பின்னர் அந்த கிராமங்களை மீளமைக்க நான்கு வருடங்கள்  நூற்றுக்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுடனான சந்திப்புகளூடாக திட்டமிடபட்டதாக சொன்னார்கள். இங்கே ஐந்து வருடங்களின் பின்னர் 65,000 தகர பெட்டிகளை கட்டி சூழலை வன்புணர்வு கொள்கிறார்கள். 

வீடு என்பது வெறுமனே மழைக்கும்  வெயிலுக்கும் ஒதுங்கும் இடமல்ல. கற்கால மனிதனுக்கு அப்படி இருந்திருக்கலாம். ஆனால் அது இன்று பல பரிமாணங்களை  பெற்று மனிதனின் இருப்பை அவனது சமூக பெறுமானத்தை அடையாளப்படுத்தும் அமைப்பாக வளர்ந்துள்ளது. வீடும் அதன் சூழவுள்ள நிலமும் மனிதனுக்கும் சூழலுக்குமான உறவை வெளிப்படுத்துகிறது. மனிதனுக்கும் இன்னொரு மனிதருக்கும், மனிதருக்கும் சூழலுக்கும் உள்ள உறவே கலாசாரமாகிறது. இதை புரிந்து கொள்ளாத வீடமைப்பும் திடடமிடலும் மக்களின் பண்பாடடை வலிந்து மாற்றமுயல்கிறது. மாறக்கூடியவர்கள் வீடமைப்புக்கேற்ற மொக்கை கலாசாரத்தை உருவாக்குவார்கள். சேரிக்கலாசாரம் போல. இயலாதவர்கள் விட்டு ஓடுவார்கள். இதற்க்கு உலகிலே நிறைய உதாரணங்கள் உண்டு. உலகின் மிக பிரசித்திபெற்ற கட்டிடக்கலைஞர்களால் உருவாக்கப்படட இந்தியாவில் உள்ள சண்டிகாரும் பிரேசிலில் உள்ள பிரேஸிலிகாவும் நல்ல உதாரணங்கள். அவைகள் கட்டடக்கலையில் உச்சத்தை தொட்டாலும் மக்களின் கலாசாரத்தை கணக்கில் எடுக்காததால் மக்களால் தீண்டுவாரற்று காண்கிறீர் வனமாக காட்ச்சியளிக்கிறது. ஆனால் இந்த 65000 வீடுகளும் கட்டடக்கலையின் விளிம்பையும் தொடவில்லை. இதை ஒரு பெரும் நிலப்பரப்பில் நிறுவுவார்களேயானால் இது பெரும் கலாசார சீரழிவை தரும் அல்லது மக்கள் இதை விட்டுவிட்டு ஓடுவார்கள். 

எந்த வீடமைப்பும் அதில் வாழும் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். அது வடிவமைப்பில் இருக்கலாம் அல்லது உடலுழைப்பில் இருக்கலாம். மேலும் அவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறும்போது அவர்களது வீடடை முன்னேற்ற கூடிய வாய்ப்பு இருக்க வேண்டும். அவ்வாறு வீடுகள் மாற்றமடையும்போது அவர்களுடைய சுய அடையாளங்கள் கிடைப்பதோடு army barrack மாதிரி இல்லாமல் வேறுபாடுகளோடு சூழல் அழகுபெறும். ஆனால் இந்த 6500 வீடமைப்பில் முன்னேற  வேண்டுமென்றால் இதை உடைத்து தள்ளிவிட்டு வேறு வீடு கட்ட வேண்டும். 

On 1/17/2017 at 6:47 PM, ஜீவன் சிவா said:

இங்கு உலோகம் மூலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் சீமெந்து தூண்களில் உள்ள உலோகத்தின் அளவை விட  இங்கு குறைவாக உள்ளது என்று நான் சந்தித்த சிலர் கூறுகின்றனர். அதைவிட சீமெந்தினால் உருவாகும் வெப்பத்தைவிட மிகவும் குறைவாகவே இங்கு உள்ளது என்றும் கூறுகின்றார்களே?

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள்.

:rolleyes:

On 1/19/2017 at 4:56 PM, Rajesh said:

பொருத்து வீடு பற்றி யாழ்ப்பாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் செய்த ஆய்வு முடிவுகளிலும் வெளி வெப்பத்தைவிட உள்வெப்பம் 4 - 6 டிகிரி செல்சிஸ் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.

3.2 Temperature and humidity The temperature and relative humidity measured inside and outside the pre-fabricated metal houses as well as the measurements taken inside an existing conventional block work house (Table 1) showed no large differences. In the mid day, the temperature was about 37 C and relative humidity was about 60% and these values are usual in the summer in Jaffna peninsula. Therefore, it can be mentioned that the comfort level of the pre-fabricated metal houses is the same as the conventional houses.

0001.png

Report from - University of Peradeniya independent assessment for the prefabricated metal houses

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin::grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வெளியே உள்ள 37 பாகை வெப்பநிலை வீட்டுக்குள்ளேயும் இருந்தால் வீடு எதற்கு?

பேக்கரி வெக்கை இதைவிடப் பரவாயில்லை.

சிலவேளை எயார்கொண்டிஷனும் இலவசமாகக் கொடுப்பார்களாக்கும்?

1 hour ago, கிருபன் said:

வீட்டுக்கு வெளியே உள்ள 37 பாகை வெப்பநிலை வீட்டுக்குள்ளேயும் இருந்தால் வீடு எதற்கு?

பேக்கரி வெக்கை இதைவிடப் பரவாயில்லை.

சிலவேளை எயார்கொண்டிஷனும் இலவசமாகக் கொடுப்பார்களாக்கும்?

நீங்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கவே இல்லையா - சொல்லவே இல்லை.

நொட்டை பிடிப்பார்கள் என்பதினால்தான் நான் விபரங்களை தரவில்லை.

நீங்கள் ஏர் கண்டிஷன் வீட்டில் பிறந்து வளர்ந்தது எனக்கு தெரியாமல் போச்சுதே!!!!

இங்கு எழுதுபவர்கள் எதுவுமே புரியாமல் எழுதுகிறார்கள் என்பது பலருக்கும் தெரியும்.
ஆனாலும் கூரை எப்படிப்பட்டது என்பதுக்காவது பதில் தந்திருக்கலாம்.

ஆனாலும் ஒரு உறவு வீட்டுக்குள்ள 5 - 6 பாகையில் கூடுதல் வெப்பம் என்கிறார் அவருக்கான பதில் இது.

பேசாம மணவீடாவது கட்டிக்க கொடுங்கள் - ஏர் கண்டிஷன் தேவை இல்லை.

<< வீடு உங்களுக்கு இல்லைத்தானே >>

Outside the model house 37 degree

Inside the model house 37 degree

Inside the block work house 37 degree - இது சாதாரண சீமெந்து வீடு.

புரிந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண கல்வீட்டிற்குள் வெளியிலுள்ள வெப்பத்திலும் பார்க்க குறைவு.

இப்படித்தான் நிலத்தடி நீர்ப்பிரச்சனை வந்தபோது சில அறிக்கைகள் கிறுக்குத்தனமாக வெளிவந்தது.

ஒரு வெப்ப காலத்தில் கல்வீட்டிற்குள் இருக்கும் வெப்பத்தின் அளவை விட பொருத்து வீட்டிற்குள் இருக்கும் வெப்பத்தின் அளவு கூடுதலாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

நீங்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கவே இல்லையா - சொல்லவே இல்லை.

நொட்டை பிடிப்பார்கள் என்பதினால்தான் நான் விபரங்களை தரவில்லை.

நீங்கள் ஏர் கண்டிஷன் வீட்டில் பிறந்து வளர்ந்தது எனக்கு தெரியாமல் போச்சுதே!!!!

இங்கு எழுதுபவர்கள் எதுவுமே புரியாமல் எழுதுகிறார்கள் என்பது பலருக்கும் தெரியும்.
ஆனாலும் கூரை எப்படிப்பட்டது என்பதுக்காவது பதில் தந்திருக்கலாம்.

ஆனாலும் ஒரு உறவு வீட்டுக்குள்ள 5 - 6 பாகையில் கூடுதல் வெப்பம் என்கிறார் அவருக்கான பதில் இது.

பேசாம மணவீடாவது கட்டிக்க கொடுங்கள் - ஏர் கண்டிஷன் தேவை இல்லை.

<< வீடு உங்களுக்கு இல்லைத்தானே >>

யார் peer review செய்து approve பண்ணிய அறிக்கை என்றாவது சொல்லியிருக்கலாம்! இங்லீஷ் பேசிற எல்லாரும் அறிவாளிகள் என்று நம்புவர்களுக்காக இங்கிலீஷில் அறிக்கை வந்திருக்கு!

ஒரு வெப்பவலய நாட்டில் வீட்டுக்குள் சகிக்கக்கூடிய சுவாத்தியமான வெப்பநிலை என்னவென்று ஒரு வெப்பமானியை நீங்கள் இருக்கும் வீட்டில் காலை ஏழு மணியிலிருந்து பின்னேரம் ஐந்து மணிவரை  குறிப்பெடுத்து தாருங்கள். அதன் பின்னர் நாங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தோமோ, எயார்கொண்டிசனுக்குள்  வேர்க்காமல் இருந்தோமா என்ற கேள்வி வராது.

37 பாகை உடலின் வெப்பநிலை என்பதால் அது வீட்டுக்குள் இருக்கக்கூடிய வெப்பநிலை என்று நம்பக்கூடாது. ஈரப்பதன் அதிகம் உள்ள வெப்பவலய நாடுகளில் உருக்கினாலான பொருத்துவீடுகளை அமைத்து மக்களை வீட்டுக்குள்ளேயே வேகவைக்கப் போகின்றார்கள் என்பது புகைக்குடிலுக்குள் பொயிலை உணர்த்தின எங்களுக்குத் தெரியும். Sauna க்குள் இருந்து வியர்வைக் கழிவை வெளியேற்றியவர்களுக்கு சுவாத்தியமாகத்தான் தெரியும்?

23 minutes ago, கிருபன் said:

:grin:

Prof. P. B. R. Dissanayake, BSc. Eng., M.Eng., PhD., C. Eng., FIESL., Head, Department of Civil Engineering, Faculty of Engineering, University of Peradeniya

Dr. C. S. Bandara, BSc. Eng., MSc. Eng., PhD., AMIESL., Senior Lecturer, Department of Civil Engineering, Faculty of Engineering, University of Peradeniya Eng.

G. A. Dissanayake, BSc. Eng., MPhil., C. Eng., MIESL., Structural Engineer, Researcher, Department of Civil Engineering, Faculty of Engineering, University of Peradeniya Eng.

K. T. S. Karunanayake, BSc. Eng., MPhil., AMIESL., Civil Engineer, Researcher, Department of Civil Engineering, Faculty of Engineering, University of Peradeniya Eng.

K. M. Dharmasiri, BSc. Eng., Research Assistant, Department of Civil Engineering, Faculty of Engineering, University of Peradeniya Eng.

T. N. Sumathipala, BSc. Eng., Engineering Instructor, Department of Civil Engineering, Faculty of Engineering, University of Peradeniya

1 hour ago, MEERA said:

சாதாரண கல்வீட்டிற்குள் வெளியிலுள்ள வெப்பத்திலும் பார்க்க குறைவு.

இப்படித்தான் நிலத்தடி நீர்ப்பிரச்சனை வந்தபோது சில அறிக்கைகள் கிறுக்குத்தனமாக வெளிவந்தது.

ஒரு வெப்ப காலத்தில் கல்வீட்டிற்குள் இருக்கும் வெப்பத்தின் அளவை விட பொருத்து வீட்டிற்குள் இருக்கும் வெப்பத்தின் அளவு கூடுதலாக இருக்கும்.

நொட்டை பிடிப்பார்கள் என்பதினால்தான் நான் விபரங்களை தரவில்லை.

இங்கு எழுதுபவர்கள் எதுவுமே புரியாமல் எழுதுகிறார்கள் என்பது பலருக்கும் தெரியும்.
ஆனாலும் கூரை எப்படிப்பட்டது என்பதுக்காவது பதில் தந்திருக்கலாம்.

இனி சிங்கள பேராசிரியருக்கு யாழ்ப்பாண வீடுகளைப் பற்றி என்ன தெரியும் என்று எழுதினாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

விதண்டாவாதம் உங்களுக்கானது விபரமான வாதம் எனக்கு தேவை - அதை தர உங்களால் முடியாதபோது - வணக்கம் + நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா,

வணக்கம் போட முதல் இந்த உதவியை யாழ்ப்பாணத்தில் இருக்கும் நீங்கள் செய்யமுடியுமா?

ஒரு வெப்பவலய நாட்டில் வீட்டுக்குள் சகிக்கக்கூடிய சுவாத்தியமான வெப்பநிலை என்னவென்று ஒரு வெப்பமானியை நீங்கள் இருக்கும் வீட்டில் காலை ஏழு மணியிலிருந்து பின்னேரம் ஐந்து மணிவரை  குறிப்பெடுத்து தாருங்கள். ஒவ்வொரு மணித்தியாலமாக பார்த்துக் குறிப்பது கஷ்டமான வேலையில்லைத்தானே!

இதுதான் இறுதி அறிக்கை

http://resettlementmin.gov.lk/site/images/stories/pdf/rep.pdf

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கையை மேலோட்டமாக வாசித்தேன். அமைச்சரின் funding இல் தயாரிக்கப்பட்ட அறிக்கை சுயாதீனமாக இருக்கும் என்று நம்பலாம்?

கதவையும், ஜன்னல்களையும் தவிர காற்று உள்ளே நுழைய வழி இல்லை. இது குளிரூட்டி இல்லாத வீடுகளுக்கு வழமைக்கு மாறானது என்று அறிக்கையே சொல்கின்றது.

மேலும் கூரை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதெல்லாம் தெளிவாகத்தான் அறிக்கையில் இருக்கின்றது.

பொருத்து வீட்டை அமைக்க தெரிவு செய்யப்பட்ட முறைகளில் உள்ள குறைபாடுகளை இங்கிலீஷில் படிக்க:

http://www.sundaytimes.lk/160320/news/who-will-win-the-battle-of-the-builders-mittal-or-locals-187197.html

Economist Muttukrishna Sarvananthan questioned the Government’s decision to leave it solely to beneficiaries to deliver a verdict on the ArcelorMittal model house. ”Although the consent of the beneficiaries should be taken as a matter of principle, in the case of the potential recipients of the proposed pre-fabricated steel houses in the North and East, any responsible Government, let alone a ‘maithri’ or compassionate one, should not leave the decision-making to the potential recipients,” he said. “Most of them are likely to be severely traumatised, destitute people due to the protracted civil war with very low level of education and knowledge about the pros and cons of pre-fabricated steel houses in climatically arid, dry zones of the country.”

“The potential recipients of the proposed pre-fabricated steel houses may harbor an intuition that ‘beggars have no choice’ but no human being, let along people’s representatives, should take advantage of such fatalism among those hapless, destitute citizens,” he added. “Besides, a ‘maithri’ or compassionate Government should endeavour to build homes rather than houses. Homes cannot be built on concrete or steel alone.”

14 minutes ago, கிருபன் said:

அறிக்கையை மேலோட்டமாக வாசித்தேன். அமைச்சரின் funding இல் தயாரிக்கப்பட்ட அறிக்கை சுயாதீனமாக இருக்கும் என்று நம்பலாம்?

இந்த பதிலைத்தான் எதிர்பார்த்தேன் 

ஏன் என்ற கேள்வி கேட்டால் விடை தெரியாது.
விளக்கங்களை கொடுத்தால் விதண்டாவாதம்.

எத்தனை முறை கேட்டிருப்பேன் - குறைகளை சொல்லுங்கள் என்று
இதுக்குமேல் ஜீவன் இங்கு இருப்பதைவிட மண்சட்டியும் மீன்குழம்பும் பார்க்க விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா,

இதை மறக்கவேண்டாம்.

வணக்கம் போட முதல் இந்த உதவியை யாழ்ப்பாணத்தில் இருக்கும் நீங்கள் செய்யமுடியுமா?

ஒரு வெப்பவலய நாட்டில் வீட்டுக்குள் சகிக்கக்கூடிய சுவாத்தியமான வெப்பநிலை என்னவென்று ஒரு வெப்பமானியை நீங்கள் இருக்கும் வீட்டில் காலை ஏழு மணியிலிருந்து பின்னேரம் ஐந்து மணிவரை  குறிப்பெடுத்து தாருங்கள். ஒவ்வொரு மணித்தியாலமாக பார்த்துக் குறிப்பது கஷ்டமான வேலையில்லைத்தானே!

1 minute ago, கிருபன் said:

நிச்சயமாக செய்கின்றேன்

இப்போதைய காலநிலை அதற்கு உகந்ததா என்று நீங்களே முடிவெடுங்கள் -இல்லை வெயிற்காலம்வரை காக்கணுமா?

அதுக்கப்புறமும் வரும் விதண்டாவாதங்களுக்கு நீங்களே பொறுப்பு

புரிந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

வெப்பநிலையை அளப்பதாக உறுதி தந்தமைக்கு நன்றிகள்.

அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலையை அளந்திருக்கின்றார்கள். நீங்கள் தையிலும் பின்னர் பங்குனி கத்திரி வெய்யிலும் அளந்து பாருங்கள்.

1 minute ago, கிருபன் said:

வெப்பநிலையை அளப்பதாக உறுதி தந்தமைக்கு நன்றிகள்.

அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலையை அளந்திருக்கின்றார்கள். நீங்கள் தையிலும் பின்னர் பங்குனி கத்திரி வெய்யிலும் அளந்து பாருங்கள்.

இப்போது அளக்க முடியும்
ஆனால் பங்குனியில் இங்கிருந்தாலும் அளக்க முடியும்
ஆனால் உண்மைகள் மாறாது 
நன்றி கிருபன் - இதுக்கு மேலும் வேண்டாமே 

விதண்டாவாதம் உங்களுக்கானது விபரமான வாதம் எனக்கு தேவை - அதை தர உங்களால் முடியாதபோது - வணக்கம் + நன்றி 

On 1/17/2017 at 8:06 PM, Surveyor said:

Image result for metal roof sheets

  • pre-painted galvanized steel sheets (gi- base)
  • hot dipped galvanized pre-painted steel sheet
  • zinc alum steel sheet (galvalume)
  • non- color (55% aluminum 43% zinc 1.6% silicon)
  • alu-zinc coating: az 150 (option az 100)

On 1/17/2017 at 8:15 PM, Surveyor said:
Thermal conductivity
Material Thermal conductivity
  (W/m K)*
Diamond 1000
Silver 406
Copper 385
Gold 314
Brass 109
Aluminum 205
Iron 79.5
Steel 50.2
Lead 34.7
Mercury 8.3
Ice 1.6
Glass,ordinary 0.8
Concrete 0.8
Water at 20° C 0.6
Asbestos 0.08
Snow (dry) ...
Fiberglass 0.04
Brick,insulating 0.15
Brick, red 0.6
Cork board 0.04
Wool felt 0.04
Rock wool 0.04
Polystyrene (styrofoam) 0.033
Polyurethane 0.02
Wood 0.12-0.04
Air at 0° C 0.024
Helium (20°C) 0.138
Hydrogen(20°C) 0.172
Nitrogen(20°C) 0.0234
Oxygen(20°C) 0.0238
Silica aerogel 0.003

MEERA

  • Advanced Member
  •  
  • MEERA
  • கருத்துக்கள உறவுகள்
  •  569
  • 2,349 posts
  • Gender:Not Telling
  • Location:UK

சாதாரண கல்வீட்டிற்குள் வெளியிலுள்ள வெப்பத்திலும் பார்க்க குறைவு.

கிருபன்

  • வலைப்போக்கன்
  •  
  • கிருபன்
  • கருத்துக்கள உறவுகள்
  •  2,034
  • 10,517 posts
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்

வீட்டுக்கு வெளியே உள்ள 37 பாகை வெப்பநிலை வீட்டுக்குள்ளேயும் இருந்தால் வீடு எதற்கு?

பேக்கரி வெக்கை இதைவிடப் பரவாயில்லை.

சிலவேளை எயார்கொண்டிஷனும் இலவசமாகக் கொடுப்பார்களாக்கும்?

Rajesh

  • புதிய உறுப்பினர்
  •  
  • Rajesh
  • கருத்துக்கள உறவுகள்
  •  6
  • 47 posts
  • Gender:Male
  • Location:பூவுலகு
  • Interests:எல்லாம்

பொருத்து வீடு பற்றி யாழ்ப்பாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் செய்த ஆய்வு முடிவுகளிலும் வெளி வெப்பத்தைவிட உள்வெப்பம் 4 - 6 டிகிரி செல்சிஸ் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.

கிருபன்

  • வலைப்போக்கன்
  •  
  • கிருபன்
  • கருத்துக்கள உறவுகள்
  •  2,034
  • 10,517 posts
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்

ஜீவன் சிவா,

வணக்கம் போட முதல் இந்த உதவியை யாழ்ப்பாணத்தில் இருக்கும் நீங்கள் செய்யமுடியுமா?

ஒரு வெப்பவலய நாட்டில் வீட்டுக்குள் சகிக்கக்கூடிய சுவாத்தியமான வெப்பநிலை என்னவென்று ஒரு வெப்பமானியை நீங்கள் இருக்கும் வீட்டில் காலை ஏழு மணியிலிருந்து பின்னேரம் ஐந்து மணிவரை  குறிப்பெடுத்து தாருங்கள். ஒவ்வொரு மணித்தியாலமாக பார்த்துக் குறிப்பது கஷ்டமான வேலையில்லைத்தானே!

இதுதான் இறுதி அறிக்கை

http://resettlementmin.gov.lk/site/images/stories/pdf/rep.pdf

:grin::grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஜீவன் சிவா said:

இப்போது அளக்க முடியும்
ஆனால் பங்குனியில் இங்கிருந்தாலும் அளக்க முடியும்
ஆனால் உண்மைகள் மாறாது 
நன்றி கிருபன் - இதுக்கு மேலும் வேண்டாமே 

விதண்டாவாதம் உங்களுக்கானது விபரமான வாதம் எனக்கு தேவை - அதை தர உங்களால் முடியாதபோது - வணக்கம் + நன்றி 

விதண்டவாதம் என்று நீங்கள் சொல்லுவதால்தான் உங்கள் விபரமான வாதத்திற்காக வெப்பநிலையை அளக்கக்கேட்டேன்.

மிகவும் இலகுவாக அந்த உண்மைகளை அறிய வழி இருந்தும் உறுதிதந்தபடி வெப்பநிலையை அளக்காமல் பின்வாங்குவது மாதிரித் தெரிகின்றது. இது உங்களுக்கே 37 பாகை வீட்டிற்குள் அதிகம் என்று ஐயப்பாட்டைத் தந்திருக்கலாம் என்று நான் ஊகிக்கின்றேன்.

அது இல்லையென்று நிரூபிக்க வெப்பநிலையை அளந்து பாருங்கள். இது உங்களால் முடியும்தானே.

7 minutes ago, கிருபன் said:

பேராதனை பல்கலைக் கழகத்தில் இருந்து வந்து அளந்த பேராசிரியர்களையே உங்களால் நம்ப முடியவில்லை - அப்புறம் நான் எம்மாத்திரம்.
இதனை விதண்டாவாதம் என்று ஒதுக்கிவிட்டு எனது நேரத்தை வேறு வழிகளில் பயன்படுத்த நினைப்பது தவறா?

விதண்டாவாதம் எந்த வழியிலும் வரும் - இரவு வணக்கங்கள்

நிச்சயமாக நான் வெப்பநிலையை பதிவு செய்வேன் - ஆனால் இங்கு பகிர்ந்து வெறும் வாயை மெல்ல வழி வகுக்க மாட்டேன். வேறு இடத்தில் பதிவேன் - அங்கு உண்மையான விமர்சனம் + கருத்துக்கள் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

பேராசியர்களின் அறிக்கையில் உள்ளதை இலகுவாக உங்களால் ஒப்புப்பார்க்கமுடியும். அதைச் செய்யாமல் வெறும் விதண்டவாதம் என்பது உங்களின் கருத்தாடலில் உள்ள நேர்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிகின்றது. மேலும் உண்மையான விமர்சனம் நடக்கும் இடங்களில் நேரத்தைச் செலவழிக்காமல் யாழ் களத்தில் ஏன் நின்று குத்தி முறிகின்றீர்கள் என்று நாங்களும் கேட்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஏதோ தாயக மக்களுக்கு உதவத்தான் முயற்ச்சிக்கிறார்கள்.இதற்க்குள் ஏன் பிரச்சனைகள்.தயவு செய்து ரென்சன் படாமல் கருத்துக்களை பகிரவும்.நன்றி.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

எல்லாரும் ஏதோ தாயக மக்களுக்கு உதவத்தான் முயற்ச்சிக்கிறார்கள்.இதற்க்குள் ஏன் பிரச்சனைகள்.தயவு செய்து ரென்சன் படாமல் கருத்துக்களை பகிரவும்.நன்றி.tw_blush:

ஆனால் தான் மட்டும் தான் உதவுதாக நினைச்சு

மற்றவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கும் சீவன் சிவா தான்

பிரச்சனையை கிளப்புகின்றார் ஐயா

போர்க்காலத்தில் எல்லாம் வெளிநாட்டில் இருந்து விட்டு

போர் முடிய

ஊருக்கு வந்து உதவி செய்பவன் மட்டும்தான் நேர்மையானவன்

என தொனியில் மற்றவர்களை ஏளனம் செய்யும் சீவன் சிவா தான்

இங்கு பிரச்சனை

பலர் வந்து பல உதாரணங்களை காட்டி விட்டார்கள்

பொருத்து வீடு சரி இல்லை என்று

ஆனால்

அப்படி காட்டுகின்றவர்களை விலகிச் செல்லுங்கள் என்று

உத்தரவிட தனக்கு உரிமை இருப்பதாக

ஊரில் இவர் தற்காலிகமாக தங்கி இருப்பதை காரணம் காட்டி

நிற்கின்றார்

அது எப்படி நியாயமாகும்?

மக்களுக்கு உதவ மக்களை

அணி திரட்ட வேண்டும்

மக்களை அணிதிரட்ட

கண்ணியம் முக்கியம்

மற்றவனை நேசித்து அவனது /அவளது

பிரச்சனைகளை புரிந்து

ஒரு அணியில் ஒன்று திரட்ட வேன்டும்

ஆனால் சீவன் சிவா செய்வது

உதவ எண்ணுகின்றவர்களையும்

ஒன்று சேராமல்

சிதறடிப்பது

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

நொட்டை பிடிப்பார்கள் என்பதினால்தான் நான் விபரங்களை தரவில்லை.

இங்கு எழுதுபவர்கள் எதுவுமே புரியாமல் எழுதுகிறார்கள் என்பது பலருக்கும் தெரியும்.
ஆனாலும் கூரை எப்படிப்பட்டது என்பதுக்காவது பதில் தந்திருக்கலாம்.

இனி சிங்கள பேராசிரியருக்கு யாழ்ப்பாண வீடுகளைப் பற்றி என்ன தெரியும் என்று எழுதினாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

விதண்டாவாதம் உங்களுக்கானது விபரமான வாதம் எனக்கு தேவை - அதை தர உங்களால் முடியாதபோது - வணக்கம் + நன்றி 

ஜீவன் கூரை எப்படிப்பட்டது என்று கிருபன் இணைத்த இணைப்பில் உள்ளது, சென்று வாசியுங்கள். அந்த அறிக்கை எப்படிப்பட்டது என்பதை தீர்மானிப்பது உங்களை பொறுத்தது.

கல்வீட்டிற்கும் பொருத்து வீட்டிற்கும் அவர்களின் ஒப்பீடு பின்வருமாறு உள்ளது,

IMG_4494.png

இங்கு பொருத்து வீடு தொடர்பாக வாசித்ததை அறிந்ததையே எழுதுகிறேன், 

மேலும் யாழில் உள்ளவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நாற்சந்தியிலும் துளித்துளியாய் பகுதியிலும் சென்று வாசியுங்கள்.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாதென்பார்கள், ஆனாலும் எழுதுகிறேன், நல்லதோ கெட்டதோ.

ஜனவரி 2017 இல் கொடுத்தது 

1) வலிவடக்கில் 1000 ஓடுகளுக்காகவும் + வீடுகட்டுவதற்காகவும் 100,000/= 

2) ஒருவர் வைத்தியசாலை செலவிற்கென 250,000/= கேட்டு 150,000/= 

இதனை விட அடுத்த கிழமை மாதாமாதம் அனுப்பும் 50,000/= ( முன்னாள் போராளி குடும்பத்திற்கு + மாவீரர் குடும்பம் + ஒரு தனிநபர்  + ஒரு வயோதிபர் மருத்துவ செலவு)

HSBC bank இல் 09/01/2017 அன்று £ 15,000 கடன் எடுத்தது 60 மாதத்திற்கு   £ 271.21 படி கட்ட வேண்டும் நானும் மனைவியும்.

இப்படி பலர் செய்து கொண்டு இருக்கிறார்கள்

Edited by MEERA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.