Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் 2017 சீசன்!

Featured Replies

  • தொடங்கியவர்

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவதற்கான திறமை பெற்ற வீரர்கள் இலங்கையில் இல்லை: முத்தையா முரளிதரன்

 

 
கோப்புப் படம்.| நாகர கோபால்.
கோப்புப் படம்.| நாகர கோபால்.
 
 

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவதற்கான திறமை கொண்ட இலங்கை வீரர்கள் தற்போது இல்லை என்று மாஸ்டர் ஸ்பின்னர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பவுலிங் பயிற்சியாளராக செயலாற்றி வரும் முரளிதரன் கூறியதாவது:

தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில ஆடுமளவுக்கு திறமை கொண்ட வீரர்கள் இலங்கையில் இல்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்காவிலிருந்து நிறைய திறமையான வீரர்கள் ஆடிவருகின்றனர். மொத்தம் 32 அயல்நாட்டு வீரர்கள் ஆடலாம், ஆனால் இதில் இலங்கை வீரர்கள் இந்தத் தரத்திற்கு இல்லை என்பதுதான் உண்மை.

அணி உரிமையாளர்கள் இலங்கை வீரர்கள் குறித்த முந்தைய கணிப்பில் இப்போது இல்லை. எனவே இப்போதைய இலங்கை வீரர்கள் நிறைய அனுபவம் பெற்றால் ஒருவேளை ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக இலங்கை வீரர்கள் ஆட முடியும்.

இலங்கையில் பெரிய வீரர்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். எனவே தற்போது ஆடும் புதிய வீரர்கள் தங்களை பெரிய அளவில் நிறுவும் வரையில் ஐபிஎல்-ல் நுழைவது கடினம். வேறு அனுபவ வெளிநாட்டு வீரர்கள் இருக்கும் போது ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ஏன் இலங்கை வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்?

டி20 கிரிக்கெட் உலகம் முழுதும் இளம் வீரர்களை ஈர்க்கிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை வயதானவர்கள் பார்க்கும் போது, டி20 கிரிக்கெட்டை இளைஞர்களே பெரும்பாலும் விரும்புகின்றனர். பெரிய அளவு பணமும் வீரர்களுக்கு உற்சாகமூட்டுகின்றன.

90களை விட கிரிக்கெட் இப்போது பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் அப்போதெல்லாம் 220 ரன்கள் வெற்றிக்கான ஸ்கோராகும். ஆனால் இன்றோ 350 ரன்கள் எடுத்தாலும் வெற்றியை உறுதி செய்ய முடியவில்லை. தலைமுறைகளை நாம் ஒப்பிட முடியாது, அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் தீவிரமான மாற்றங்கள் வரலாம்.

எந்த ஒரு டி20 தொடரிலும் இந்திய வீரர்கள் ஆடவில்லை என்றால் அது பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. அனைவரும் இந்தியவீரர்கள் வேண்டும் என்று நினைக்கின்றனர், ஆனால் இந்திய வீரர்களுக்கு அனுமதி இல்லை என்றால் மிகப்பெரிய டி20 தொடராக இருந்தாலும் சோபிக்க முடியாது.

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-கிரிக்கெட்டில்-ஆடுவதற்கான-திறமை-பெற்ற-வீரர்கள்-இலங்கையில்-இல்லை-முத்தையா-முரளிதரன்/article9633548.ece

  • Replies 368
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: மும்பை அணி வெற்றி (4 விக்கெட் வித்தியாசம்)
  • தொடங்கியவர்

ஐ.பி.எல் 10: ஐதராபாத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி

ஐ.பி.எல் சீசன் 10-ன் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

 
 
 
 
ஐ.பி.எல் 10: ஐதராபாத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி
 
மும்பை:

ஐ.பி.எல் சீசன் 10-ன் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக வார்னர் 49 ரன்களும், தவான் 47 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி சார்பில் பும்ப்ரா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
201704122356403996_MI2._L_styvpf.gif
இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணியின் பார்த்திவ் படேல் தொடக்கத்தில் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. பார்த்திவ் படேல் 24 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 39 ரன்களை குவித்தார். பட்லர் 14 (11) ரன்களும், ரோகித் ஷர்மா 4 (4) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ராணா மற்றும் க்ரூனல் பாண்டியா கூட்டணி அதிரடி காட்ட மும்பையின் ஸ்கோர் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்கள் விளாசிய க்ரூனல் பாண்டியா 37 ரன்கள் எடுத்திருந்த போது புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் பென் கட்டிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். க்ரூனலை தொடர்ந்து ராணா 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 45 ரன்கள் எடுத்திருந்த போது புவனேஷ்வர் பந்தில் போல்டானார்.

இறுதியில் மும்பை அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஐதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/12235632/1079672/IPL-10-MI-won-Against-SRH-by-4-wickets.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணி - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

 
ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணி - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
 
இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் சொந்த ஊரில் (கொல்கத்தா ஈடன்கார்டன்) விளையாடப்போகும் முதல் போட்டி இதுவாகும். அதனால் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். தனது முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்சை பந்தாடிய கொல்கத்தா அணி, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியின் விளிம்பில் இருந்து கடைசி நேரத்தில் தோல்வியை தழுவியது.

அதிரடி வீரர் கிறிஸ்லின் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால் இந்த ஆட்டத்தில் களம் காண வாய்ப்பில்லை. இது கொல்கத்தாவுக்கு பின்னடைவு என்றாலும், சமீபத்தில் ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இணைந்திருப்பது கொல்கத்தாவுக்கு சாதகமான அம்சமாகும். இங்கு சுனில் நரின், ஷகிப் அல்-ஹசன் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது முதல் இரு ஆட்டங்கள் முறையே புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளை எளிதில் வீழ்த்தியது. புதிய கேப்டன் மேக்ஸ்வெல்லின் அதிரடியின் பேட்டிங் (44 ரன், 43 ரன்) மற்றும் பந்து வீச்சாளர்கள் இரு ஆட்டங்களிலும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்புடன் அந்த அணி வியூகங்களை வகுத்துள்ளது.

201704131009339825_kip._L_styvpf.gif
பயிற்சியில் பஞ்சாப் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா.

முன்பு கொல்கத்தா அணிக்காக விளையாடி இப்போது பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பராக பணியாற்றும் விருத்திமான் சஹா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘மாநில போட்டிகள், ரஞ்சி, ஐ.பி.எல். என்று இங்கு ( ஈடன்கார்டன்) இளம் வயதில் இருந்தே நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இங்குள்ள சூழல் எனக்கு பழக்கப்பட்ட ஒன்று.

இப்போது நான் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறேன். எங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். கேப்டன் மேக்ஸ்வெல்லும், தலைமை நிர்வாகி ஷேவாக்கும் எதை பற்றியும் கவலைப்படாமல் நெருக்கடியின்றி இயல்பாக ஆடும்படி அறிவுரை வழங்கியுள்ளனர். உங்களது பங்களிப்பு 10 பந்துகளில் 20 ரன்கள் என்றாலும் அதனை உற்சாகமாக செய்யுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள். முதல் இரு ஆட்டங்களில் கிடைத்த வெற்றியின் உத்வேகத்தை அடுத்து வரும் ஆட்டங்களுக்கும் கொண்டு செல்வோம்’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/13100924/1079712/ips-Kings-XI-Punjab-vs-Kolkata-Knight-Riders-match.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: மும்பை அணிக்கு எதிரான நாளை போட்டியில் விராட் கோலி விளையாடுகிறார்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நாளை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி விளையாடுகிறார்.

 
 
ஐ.பி.எல்: மும்பை அணிக்கு எதிரான நாளை போட்டியில் விராட் கோலி விளையாடுகிறார்
 
பெங்களூர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரிலும் அவர் களமிறங்கவில்லை. பெங்களூர் அணியின் கேப்டனான கோலி, அந்த அணியின் முதல் மூன்று போட்டிகளிலும் களமிறங்காததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், தோள்பட்டை காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதாக விராட் கோலி கூறியதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் பங்கேற்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவர் ஐ.பி.எல். போட்டிக்கு திரும்புவதை பி.சி.சி.ஐ. தற்போது உறுதி செய்துள்ளது.

201704131212480361_txjqm07y._L_styvpf.gi

இதுகுறித்து பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், “விராட் கோலி மீண்டும் போட்டியில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதி பெற்றிருப்பதாக பி.சி.சி.ஐ. மருத்துவக் குழுவானது புதன்கிழமை உறுதி செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அடுத்த ஆட்டம் பெங்களூரில் ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறுகிறது. மும்பை அணிக்கு எதிராக நடைபெறும் இந்தப் போட்டியில் விராட் கோலி விளையாடுவார்” என தெரிவித்துள்ளது.

பெங்களூர் அணி, இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், கேப்டன் கோலியின் வருகை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/13121238/1079757/Kohli-receovers-from-injury-fit-to-lead-RCB-tomorrow.vpf

  • தொடங்கியவர்

சிறப்பாக பந்து வீசியதற்காக லேப்டாப் பரிசு பெற்ற ஆர்.சி.பி. வீரர் சாஹல்

ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசியதற்காக பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் லேப்டாப்பை பரிசாக வென்றுள்ளார்.

 
 
 
 
சிறப்பாக பந்து வீசியதற்காக லேப்டாப் பரிசு பெற்ற ஆர்.சி.பி. வீரர் சாஹல்
 
ஐ.பி.எல். சீசன் 10 கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்று. இந்த அணி விளையாடும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர் ஒருவருக்கு ஏசர் நிறுவனம் ஒரு லேப்டாப்பை பரிசாக கொடுக்க முடிவு செய்தது. அந்த வீரரை பயிற்சியாளர் வெட்டோரி தேர்வு செய்தார்.

பெங்களூரு அணி முதல் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 207 ரன்கள் குவித்தது. பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 172 ரன்கள் சேர்த்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

201704131742144753_Capture-s._L_styvpf.g

பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் ரன்கள் விட்டுக்கொடுத்த போதிலும் சாஹல் நான்கு ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதனால் முதல் போட்டியில் சிறந்த வீரராக சாஹலை வெட்டோரி தேர்வு செய்தார். இவருக்கு ஏசர் நிறுவனம் லேப்டாப் பரிசாக வழங்கியது.

முதல் போட்டியில் பயிற்சியாளர் வெட்டோரி சாஹலை தேர்வு செய்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்! என்று ஆர்.சி.பி. அணி டுவிட் செய்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/13174204/1079841/IPL-2017-Chahal-Wins-Laptop-After-Good-Bowling-Display.vpf

  • தொடங்கியவர்

#IPL10: பஞ்சாபின் தொடர் வெற்றியைத் தடுக்குமா கொல்கத்தா!

 

Pun_1_400_21439.jpg

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 11-வது போட்டியில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன. ஈடன் கார்டனில் நடக்கும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்றது. கொல்கத்தாவின் கேப்டன் கவுதம் கம்பீர், பவுலிங் செய்ய தீர்மானித்து பஞ்சாபை பேட்டிங் செய்யப் பணித்தார்.

Pun_2_400_21540.jpg

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய பஞ்சாப், முதல் இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரரில் ஒருவரான மணன் வோரா 19 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினார். அவருக்கு அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் க்ளென் மேக்ஸ்வெலும் தொடர்ந்து விளையாடி 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். அவருக்குப் பின்னர் வந்த மில்லர் மற்றும் விக்கெட் கீப்பர் சஹா ஆகியோரும் அதிரடியாக ஆடியதால் அணியின் ஸ்கோர் 170 ரன்களானது.

எனவே, கொல்கத்தா அணி 171 ரன்கள் எடுத்தால் வெற்றியை பெறலாம். பஞ்சாப் அணி, இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், கொல்கத்தா, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பது இரண்டாம் இன்னிங்ஸ் முடிவில் தெரிந்துவிடும்.

Kolkata Knight Riders 90/1 (7.1/20 ov)
Kolkata Knight Riders require another 81 runs with 9 wickets and 12.5 overs remaining

http://www.vikatan.com/news/sports/86389-punjab-and-kolkatta-go-head-to-head-at-eden-gardens.html

  • தொடங்கியவர்

டோனி பாஃர்ம் குறித்து கவலையில்லை: வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்- ஸ்மித் நம்பிக்கை

டோனி பேட்டிங் பாஃர்ம் குறித்து கவலையில்லை. வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி கேப்டன் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
டோனி பாஃர்ம் குறித்து கவலையில்லை: வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்- ஸ்மித் நம்பிக்கை
 
டோனி பேட்டிங் பாஃர்ம் குறித்து கவலையில்லை. வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி கேப்டன் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். சீசன் 10 டி20 கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இந்தியாவின் சாதனைக் கேப்டன் மகேந்திர சிங் டோனி இடம்பிடித்துள்ளார். இதுவரை புனே அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற புனே, அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

மூன்று போட்டிகளிலும் டோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை. முதல் போட்டியில் 12 பந்தில் 12 ரன்னும், 2-வது போட்டியில் 11 பந்தில் 5 ரன்னும், 3-வது போட்டியில் 14 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவரது பேட்டிங் குறித்து விமர்சனம் எழுந்தது.

ஆனால், புனே அணியின் கேப்டன் ஸ்மித் டோனியின் பேட்டிங் மீது நம்பிக்கை வைத்துள்ளார். டோனியின் பேட்டிங் குறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘டோனியின் பாஃர்ம் குறித்து நான் கவலைப்படவில்லை. அவர் ஒரு தலைசிறந்த வீரர். நாங்கள் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளோம். இந்த தொடரில் மீதமுள்ள போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/13222854/1079870/MS-Dhoni-will-be-fine-with-the-bat-later-in-the-tournament.vpf

  • தொடங்கியவர்

பனித்துளியை சமாளிக்க ஈரப்பந்தில் பயிற்சி: ரஷித் கானுக்கு வார்னர் பாராட்டு

ரஷித் கான் பனித்துளியை சமாளிக்க ஈரப்பந்தில் பயிற்சி செய்தார் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

 
 
 
 
பனித்துளியை சமாளிக்க ஈரப்பந்தில் பயிற்சி: ரஷித் கானுக்கு வார்னர் பாராட்டு
 
ஆப்கானிஸ்தானின் 19 வயதே ஆன சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஐ.பி.எல். ஏலத்தில் 4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார். அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து ஐதராபாத் அணி அவரை ஏலம் எடுத்தது.

முதல் முறையாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஐ.பி.எல். தொடரில் களம் இறங்கினார். பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் ஐ.பி.எல். தொடரில் ரஷித் கானால் என்ன செய்ய முடியும் என்ற கருத்து நிலவியது.

ஆனால் பெங்களூருவிற்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ரஷித் கான். குஜராத்திற்கு எதிரான 2-வது போட்டியில் அசத்தினார். மெக்கல்லம், ரெய்னா போன்ற தலைசிறந்த வீரர்களின் விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. மற்ற பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த போதிலும் ரஷித் கான் நான்கு ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ரஷித் கானின் பந்து வீச்சை வெகுவாக பாராட்டியுள்ள வார்னர், பனி நேரத்தில் பந்து வீசக் கடினமாக இருக்கும் என்பதால், அதை சமாளிக்க ஈரப்பந்தில் ரஷித் கான் பயிற்சி மேற்கொண்டார் என்று வார்னர் கூறினார்.

இதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘வான்கடே மைதானத்தில் சற்று பனிப்பொழிவு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆகவே, 158 ரன்னிற்குள் மும்பை அணியை கட்டுப்படுத்துவது கடினம். வான்கடேவில் பனிப்பொழிவிற்கிடையே பந்து வீசுவது கஷ்டமான பணி. ஆனால், ரஷித் கான் இந்த சூழ்நிலையை நன்றாக புரிந்து சிறப்பாக பந்து வீசுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

போட்டிக்கு முன்பு பந்தை நனைத்து அதில் பயிற்சி மேற்கொண்டார். அந்த பயிற்சி அவருக்கு கைக்கொடுத்தது. பயிற்சியின்போது செய்த வேலையை கட்சிதமாக மைதானத்தில் வெளிப்படுத்தினார். மிகவும் சிறந்த பந்து வீச்சாளர் ரஷித் கான்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/13205504/1079862/Rashid-Khan-Practiced-With-Wet-Ball-To-Tackle-Wankhede.vpf

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: கோல்கட்டா அணி வெற்றி (8 விக்கெட் வித்தியாசம்)
 
  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி

ஐ.பி.எல் 11வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல்: பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி
 

கொல்கத்தா:

ஐ.பி.எல். சீசன் 10-ன் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லவன் பஞ்சாப்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் அதிரடியை காட்டிய வோரா 19 பந்தில் 28 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 9 ரன்னிலும், தொடக்க வீரர் அம்லா 25 ரன்னிலும், கேப்டன் மேக்ஸ்வெல் 14 பந்தில் 25 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
201704132331166507_kkrkkrrr._L_styvpf.gi
18-வது ஓவரில் உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய காம்பீர், நரேன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். பவர்ப்ளேயில் மட்டும் கொல்கத்தா அணி 72 ரன்களை குவித்தது. இதுவே பவர்ப்ளேவில் கொல்கத்தாவின் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 5.4வது ஓவரில் ஆரோன் வீசிய பந்தை தூக்கி அடித்த நரேன், அக்‌ஷர் படேலிடம் கேட்ச் ஆனார். அவர் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 37 ரன்களை குவித்தார். பின்னர் காம்பீருடன் ஜோடி சேர்ந்த உத்தப்பா அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் வேகம் உயர்ந்தது. 16 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சர் அடித்த உத்தப்பா, அக்சர் படேல் பந்துவீச்சில் அவுட்டானார்.

மணீஷ் பாண்டே 16 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்சர்களுடன் 25 ரன்கள் எடுத்தார். காம்பீர் 49 பந்துகளில் 11 பவுண்டரிகள் விளாசி 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி 16.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/13233106/1079875/IPL-KKR-won-against-KXIP-by-8-wickets.vpf

  • கருத்துக்கள உறவுகள்
நடுவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிய வார்னர்!
 
14151.jpg

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டியின் போது மும்பை அணி வீரர் பும்ரா வீசிய 6வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட வார்னர், அந்த பந்தில் பவுண்டரி அடித்தார். அதை தொடர்ந்து 7-வது ஓவரின் முதல் பந்தை தவான் சந்திக்க வேண்டும்.

ஆனால் 7வது ஓவரின் முதல் பந்தையும் வார்னரே எதிர்கொண்டார். இதை களத்தில் இருந்த இந்திய நடுவர்கள் நிதின் மேனன், நந்தன் ஆகியோர் கண்டுகொள்ளவில்லை. மூன்றாவது நடுவராக இருந்த பார்டேயும் இதை கவனிக்கவில்லை.

இருப்பினும் வார்னருக்கு தெரியும் நாம் மறுமுனைக்கு மாற வேண்டும் என்று இருப்பினும் இந்த தவறு எப்படி நடந்தது என்பது தெரியவில்லை.

ஒருவேளை நடுவர்கள் வேண்டும் என்றே இதை செய்தார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனை கண்டு கடுப்பான முன்னாள் வீரர் சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் நம்ம நடுவர்கள் வேற லெவல் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

http://valampurii.lk/valampurii/content.php?id=14151&ctype=news

  • தொடங்கியவர்

மும்பையுடன் இன்று பெங்களூர் மோதல்: விராட் கோலி அசத்துவாரா?

 

ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிராக இன்று களமிறங்கும் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி பேட்டிங்கில் அசத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

 
மும்பையுடன் இன்று பெங்களூர் மோதல்: விராட் கோலி அசத்துவாரா?
 
பெங்களூர்:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று மாலை 4 மணிக்கு பெங்களூரில் நடக்கும் 12-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூர் 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றது. 2-ல் தோற்றது. தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 3 போட்டிகளில் விளையாடாத கேப்டன் விராட் கோலி இன்று களம் இறங்குகிறார். இதனால் அவர் மீது ரசிகர்களின எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

கோலி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து அசத்துவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வரவு பெங்களூர் அணிக்கு கூடுதல் பலமாகும். அந்த அணியில் கெய்ல், டிவில்லியர்ஸ் வாட்சன், கேதர் ஜாதவ், சாகல், டைமன் மில்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

மும்பை அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி பெற்று இருக்கிறது. முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த மும்பை அடுத்த இரு ஆட்டங்களில் வென்றது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் இருக்கிறது.

அந்த அணியில் பார்த்தீப் பட்டேல், ஹர்பஜன்சிங், ஹிர்த்திக் பான்டியா, நிதிஷ் ராணா, மலிங்கா போன்ற வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் இதுவரை 19 முறை மோதி உளளன. இதில் மும்பை 11 முறையும், பெங்களூர் 8 முறையும் வெற்றி பெற்றன.

இன்று இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் நடக்கும் ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ், ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் மோதுகின்றன.

குஜராத் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோல்வி அடைந்தது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது. ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளார். பிரன்டன் மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச், தினேஷ் கார்த்திக், வெய்ன் சுமித், பிரவீன் சயர் போன்ற சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

புனே அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றது. 2-ல் தோல்வி அடைந்தது. ரகானே, டோனி, பென் ஸ்டோக்ஸ், டு பிளிஸ்சிஸ், இம்ரான் தாகீர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

கடந்த போட்டியில் விளையாடாத ஸ்டீவன் சுமித் இன்று விளையாடுகிறார். முன்னாள் கேப்டன் டோனி பேட்டிங்கில் சொதப்புவது அந்த அணிக்கு பாதிப்பாக இருக்கிறது. அவர் எழுச்சி பெற்றால் புனேக்கு சாதகமாக அமையும்.

தொடர்ந்து 2 ஆட்டத்தில் தோற்று உள்ளதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நெருக்கடியில் புனே உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/14104023/1079901/IPL-2017-RCB-vs-MI-clash.vpf

  • தொடங்கியவர்

ரவீந்திர ஜடேஜா வருகையால் முதல் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் குஜராத்

 

 
ரவீந்திர ஜடேஜா | கோப்பு படம்
ரவீந்திர ஜடேஜா | கோப்பு படம்
 
 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ராஜ் கோட்டில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணியில் ரவீந்திர ஜடேஜா களமிறங்குவது அந்த அணி யின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என கருதப் படுகிறது.

குஜராத் அணி கடந்த சீசனில் அறிமுக தொடரிலேயே 3-வது இடம் பிடித்து அசத்தியது. ஆனால் தற்போதைய சீசனை அந்த அணி சிறப் பாக தொடங்கவில்லை. மோதிய 2 ஆட்டங் களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இருமுறை சாம்பியனான கொல்கத்தா மற்றும் நடப்பு சாம்பியனான ஹைதராபாத் ஆகிய அணிகளிடம் குஜராத் தோல்வி கண்டுள்ளது.

இந்நிலையில் புனே அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா களமிறங்க உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய போது ஜடேஜாவுக்கு விரல் பகுதியில் லேசான வலி இருந்ததால் பிசிசிஐ மருத்துவக்குழு அவரை ஒருவார காலம் ஓய்வில் இருக்க ஆலோசனை வழங்கியிருந்தது.

இதனால் குஜராத் அணி விளையாடிய முதல் இரு ஆட்டங்களிலும் அவர் கலந்துகொள்ள வில்லை. ஜடேஜா உள்நாட்டு சீசனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அபார திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் அவரது வருகை குஜராத் அணியின் பலத்தை அதிகரிக்கும் என கருதப்படுகிறது. மற்றொரு முன்னணி வீரரான டுவைன் பிராவோவும் காயத்தில் இருந்து முற்றிலும் குணமடையும் நிலையில் உள்ளார். நேற்று அவர் அணியினருடன் பயிற்சியில் கலந்து கொண்டார். இதனால் அவரும் விரைவில் களமிறங்குவார் என தெரிகிறது.

குஜராத் அணி பேட்டிங்கில் வலுவாகவே திகழ்கிறது. பிரண்டன் மெக்கலம், ஆரோன் பின்ச், ஜேசன் ராய், சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடி வீரர்களாக உள்ள னர். இவர்களில் மெக்கலம், ஆரோன் பின்ச் ஆகி யோர் முதல் இரு ஆட்டங்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை.

ஜேசன் ராய் சிறப்பான தொடக்கம் கொடுத்த போதிலும் அதனை பெரிய அளவி லான ஸ்கோரை குவிக்கும் அளவுக்கு அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. மிடில் ஆர்டரில் ரெய்னா, தினேஷ் கார்த்திக் பலம் சேர்க்கிறார்கள். இரு ஆட்டத்திலும் அவர்கள் சிறந்த பங்களிப்பை வழங்கினர். மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த டுவைன் ஸ்மித் தனது அதிரடியால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவராக உள்ளார். குஜராத் அணியின் பிரச்சினையே பலவீனமாக பந்து வீச்சுதான். கடந்த இரு ஆட்டத்தையும் சேர்த்து குஜராத் பந்து வீச்சாளர்கள் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளனர். கடந்த சீசனில் சிறப் பாக செயல்பட்ட தவல் குல்கர்னி மற்றும் பிரவீன் குமார், பாசில் தம்பி, தேஜாஸ் பரோகா ஷிவில் கவுசிக் உள்ளிட்ட அனைத்து பந்து வீச்சாளர்களும் கடந்த ஆட்டத்திலும் மிக சாதார ணமாகவே செயல்பட்டனர். இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா மற்றும் அனுபவ வீரரான முனாப் படேல் ஆகியோர் கள மிறங்க உள்ளதால் பந்து வீச்சு பலம் பெறக்கூடும்.

புனே அணி இந்த சீசனை வெற்றி யுடன் தொடங்கிய நிலையில் அடுத்த டுத்து இரு தோல்விகளை சந்தித் துள்ளது. கடந்த ஆட்டத்தில் களமிறங்காத ஸ்டீவ் ஸ்மித், மனோஜ் திவாரி இன்று களமிறங்குகின்றனர். இதனால் அணியின் பேட்டிங் கூடுதல் வலுவடையும்.

ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் பெரிய அளவிலான ரன்குவிப்பை நிகழ்த்தாவிட்டாலும் தனது அதிரடியால் பலம் சேர்க்கிறார். தோனியின் மோசமான பார்ம் அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது.

கேப்டனாக இல்லாமல் சாதாரண வீரராக இந்த சீசனில் விளையாடி வரும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இன்றைய ஆட்டத்தில் தனது அதிரடி பேட்டிங்கால் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.

பந்து வீச்சில் இம்ரன் தகரின் சுழல் பலமாக உள்ளது. வேகப் பந்து வீச்சில் அசோக் திண்டா, தீபக் ஷகர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/ரவீந்திர-ஜடேஜா-வருகையால்-முதல்-வெற்றியை-ருசிக்கும்-முனைப்பில்-குஜராத்/article9638276.ece?homepage=true

  • தொடங்கியவர்

ரன் சேசிங் செய்யவே விருப்பம்: விராட் கோலி

 

பெங்களூருவில் இன்று மாலை 4 மணிக்கும் தொடங்கும் போட்டியில் சேஸிங் செய்யவே விருப்பம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

 
ரன் சேசிங் செய்யவே விருப்பம்: விராட் கோலி
 
இந்திய அணியின் கேப்டனாக விளங்கும் விராட் கோலி தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்தார். தற்போது காயத்தில இருந்து மீண்ட விராட் கோலி, மும்பை அணிக்கெதிராக இன்று களம் இறங்குகிறார். பெங்களூரு - மும்பை அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

போட்டி இரவு 8 மணிக்குள் முடிந்து விடும் என்பதால் பனித்தாக்கம் இருக்காது. இதனால் சேஸிங் செய்யவே விரும்புகிறோம் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் அணிக்கு திரும்பி உள்ளதால் மாற்றங்கள் இருக்கும். பகல் நேரத்தில் பெங்களூரு ஆடுகளம் ரன் சேஸிங் செய்ய உதவும். எனவே இன்றைய போட்டியில் ரன் சேஸிங் செய்யவே விரும்புகிறோம்.

201704141358161323_kohli-m1-s._L_styvpf.

கடந்த தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். வெளியூர் ஆட்டங்களில் வெற்றி பெற்றோம். இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினோம். இதுதான் மிக முக்கியம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/14135804/1079919/Virat-Kohli-To-Focus-On-Chasing-Targets-In-IPL-2017.vpf

  • கருத்துக்கள உறவுகள்
சூழல் பந்து வீரர்  சுனில் நரைன், பஞ்சாப் (KXIP)அணிக்கெதிரான போட்டியில்   தொடக்க வீரராக முத்திரை பதித்துள்ளார்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR ) அணித் தலைவர் கவுதம் கம்பீர் நாராயனை இணைத்துக் கொண்டு  தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க, இது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இவரின் இந்த தெரிவு அணிக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. அவர் தொடக்க ஆட்ட  வீரராக ஆஸ்திரேலியா  பிக் பாஷ் லீக்கில்  மிகவும் வெற்றிகரமாக செய்துள்ளார். ஆனால் இந்த இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடக்க வீரராக  அவரது பங்களிப்பு இதுவே முதல் முறை.
17 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிடடார். வருண் அரண் வீசிய ஒரு  பந்து பரிமாற்றத்தில் 3 பந்துகளில்  16 ஓட்டங்களை பெற்றார். நாலாவது பந்து எல்லைக்கோட்டில் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். வருண் அரண் ஆக்ரோஷமாக நாராயனை பார்த்தார், ஆனால் நாராயண் அவரை தனது பணியில் கண்டு கொள்ளாமல் வெளியேறினார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:
சூழல் பந்து வீரர்  சுனில் நரைன், பஞ்சாப் (KXIP)அணிக்கெதிரான போட்டியில்   தொடக்க வீரராக முத்திரை பதித்துள்ளார்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR ) அணித் தலைவர் கவுதம் கம்பீர் நாராயனை இணைத்துக் கொண்டு  தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க, இது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இவரின் இந்த தெரிவு அணிக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. அவர் தொடக்க ஆட்ட  வீரராக ஆஸ்திரேலியா  பிக் பாஷ் லீக்கில்  மிகவும் வெற்றிகரமாக செய்துள்ளார். ஆனால் இந்த இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடக்க வீரராக  அவரது பங்களிப்பு இதுவே முதல் முறை.
17 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிடடார். வருண் அரண் வீசிய ஒரு  பந்து பரிமாற்றத்தில் 3 பந்துகளில்  16 ஓட்டங்களை பெற்றார். நாலாவது பந்து எல்லைக்கோட்டில் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். வருண் அரண் ஆக்ரோஷமாக நாராயனை பார்த்தார், ஆனால் நாராயண் அவரை தனது பணியில் கண்டு கொள்ளாமல் வெளியேறினார்.
 

நேற்றய ஆட்டத்தில் தனது மோசமான களத்தடுப்பிற்கு வருத்தப்படமலே தனது பாணியில் இருந்தார்.

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் சாமுவேல் பத்ரி

ஐ.பி.எல். சீசன் 2017-ல் முதன்முறையாக ஆர்.சி.பி. வீரர் சாமுவேல் பத்ரி மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

 
ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் சாமுவேல் பத்ரி
 
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது. இந்த மைதானத்தில் சேஸிங்கில் 143 ரன்கள் என்பது எளிதானது என்பதால், அதிக நம்பிக்கையுடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

முதல் ஓவரை சாமுவேல் பத்ரி வீசினார். இந்த ஒவரில் மும்பை அணி 4 ரன்கள் எடுத்தது. 2-வது ஓவரை ஸ்டூவர்ட் பின்னி வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் பட்லர் ஆட்டமிழந்தார். பட்லர் 5 பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். 2-வது ஓவர் முடிவில் மும்பை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்திருந்தது.

201704141838423717_badree1-s._L_styvpf.g
ரோகித் சர்மா க்ளீன் போல்டாகிய காட்சி

3-வது ஓவரை சாமுவேல் பத்ரி வீசினார். இந்த ஓவரில் மும்பை அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 2-வது பந்தில் பார்த்தீவ் பட்டேல் கெய்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த பந்தில் மெக்கிளேனகன் மந்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் விக்கெட் வீழ்த்தினால் ஹாட்ரிக் சாதனைப் படைக்கலாம் என்ற நோக்கத்தில் பத்ரி பந்து வீச, ரோகித் சர்மா அதை எதிர்கொண்டார். ஹூக்ளியாக வீசிய அந்த பந்து, ரோகித் சர்மாவின் பேட்டிற்கும், பேடிக்கும் இடையில் சென்று ஸ்டம்பை தாக்கியது. இதனால் சாமுவேல் பத்ரி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

201704141838423717_badree2-s._L_styvpf.g
மெக்கிளெனகன் அடித்த பந்தை கேட்ச் பிடிக்கும் மந்தீப் சிங்

பவர்பிளேயான 6 ஓவருக்குள் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் வீசிய பத்ரி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/14183857/1079962/samuel-hat-trick-wickets-against-mumbai-indians.vpf

  • தொடங்கியவர்

பாதாளத்தில் விழுந்த மும்பை அணியை, அதிரடி மூலம் மீட்ட பொல்லார்டு

 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்

 
பாதாளத்தில் விழுந்த மும்பை அணியை, அதிரடி மூலம் மீட்ட பொல்லார்டு
 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல். தொடரின் 12-வது போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது.

அதன்பின் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த 7 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய நான்கு விக்கெட்டுக்களை இழந்தது திணறியது மும்பை. அடுத்து வந்த ராணா 11 ரன்களில் வெளியேறினார். அப்போது மும்பை அணி 8 ஓவரில் 33 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

6-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் விக்கெட்டுக்களை காப்பாற்றுவதற்காக நிதானமாக விளையாடிய பொல்லார்டு அதன்பின் அதிரடியாக விளையாடினார்.

13 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 70 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு 42 பந்தில் 73 ரன்கள் தேவைப்பட்டது. அதன்பின் பொல்லார்டு அதிரடி வாணவேடிக்கை விட ஆரம்பித்தார். 14-வது ஓவரில் ஒரு சிக்ஸ் விளாசினார். 15-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த பொல்லார்டு 16-வது ஓவரில் இரண்டு இமாலய சிக்ஸ் விளாசினார். 18-வது ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸ் விளாசி பொல்லார்டு, அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 47 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 70 ரன்கள் குவித்தார்.

201704141956242387_pollard1-s._L_styvpf.

பொல்லார்டின் அதிரடியால் மும்பை அணி வெற்றி உறுதியானது. அடுத்து குருணால் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா 19-வது ஓவரின் 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெற வைத்தார். மும்பை அணி 18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பத்ரி 4 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஆனால், மற்ற இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹல் 3 ஓவரில் 31 ரன்னும், நெஹி 2 ஓவரில் 28 ரன்களும் கொடுத்தனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/14195611/1079970/IPL-2017-12th-match-mumbai-indians-beats-RCB-by-4.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: குஜராத் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 13-வது போட்டியில் குஜராத் அணியின் வெற்றிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்.

 
 
ஐ.பி.எல்.: குஜராத் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்
 
ஐ.பி.எல். 2017 சீசனின் 13-வது லீக் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் ரகானே, திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ரகானே ரன்ஏதும் எடுக்காமல் முதல் ஓவரின் 3-வது பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து திரிபாதி உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. திரிபாதி 17 பந்தில் 33 ரன்கள் எடுத்த நிலையிலும், ஸ்மித் 28 பந்தில் 43 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ், அங்கீத் ஷர்மா தலா 25 ரன்னும், மனோஜ் திவாரி 31 ரன்னும் எடுக்க ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்துள்ளது. குஜராத் அணி சார்பில் டை ஹாட்ரிக் விக்கெட் உடன் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கி விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/14214323/1079981/IPL-172-Runs-target-to-Gujarat-Lions.vpf

  • தொடங்கியவர்

ஐபிஎல் : புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி!

 
 

ஐ.பி.எல் தொடரில் இன்று நடந்த இரண்டாவது போட்டியில் புனே அணியும், குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, முதலில் பந்துவீசப் போவதாகக் கூறி, புனே அணியை பேட்டிங் ஆட பணித்தார்.

குஜராத் அணியின் பிரெண்டன் மெக்கல்லம்

முதலில் களமிறங்கிய புனே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் ஆண்ட்ரூ டை, இந்த தொடரின் இரண்டாவது ஹாட்-ட்ரிக் எடுத்தார். நான்கு ஓவர்கள் பந்து வீசிய அவர் 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐ.பி.எல் தொடரின் முதல் 5 விக்கெட் பந்துவீச்சு இது என்பது குறிப்பிடத்தக்கது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு குஜராத் அணி அடுத்ததாகக் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ட்வாய்ன் ஸ்மித் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ட்வாய்ன் ஸ்மித் 47 ரன்களும், மெக்கல்லம் 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

18 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் எடுத்து குஜராத் அணி எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

http://www.vikatan.com/news/sports/86477-gujarat-lions-won-rising-pune-supergiant-by-7-wickets.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: புனே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் வெற்றி

 

ராஜ்கோட்டில் நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் புனே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் வெற்றி பெற்றது.

 
 
ஐ.பி.எல்: புனே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் வெற்றி
 
ராஜ்கோட்:

ஐ.பி.எல். சீசன் 10-ன் இன்றைய போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் தொடக்க வீரர் ரகானே ரன் ஏதுமின்றி பிரவீண் குமார் வேகத்தில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான திரிபாதி 17 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர் என 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்மித் 28 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்சர் என 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மித் சுழலில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

201704142327206054_GL2._L_styvpf.gif

பென் ஸ்டோக்ஸ் 25 (18) ரன்களும், மனோஜ் திவாரி 31 (27) ரன்களும் அங்கிட் சர்மா 25 (15) ரன்களும் எடுத்தனர். 20 ஒவர்கள் முடிவில் புனே அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 171 ரன்களை எடுத்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் மிக்கல்லம், டுவைன் ஸ்மித் தொடக்கம் முதலே அதிரடி காட்ட, அணியின் ஸ்கோர் மளமளவௌ எகிறது. முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த போது, தாகிர் வீசிய பந்தை தூக்கி அடித்த ஸ்மித் சகாரிடம் கேட்ச் ஆனார். ஸ்மித் 30 பந்துகளில் 8 பவண்டரி, ஒரு சிக்சர் என 47 ரன்கள் எடுத்தார்.

201704142327206054_GL3._L_styvpf.gif

ஸ்மித்தை தொடர்ந்து 32 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசிய மிக்கல்லம் 49 ரன்னில் சகார் பந்துவீச்சில் ஸ்டம்ப் அவுட் ஆனார். தினேஷ் கார்த்திக் 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரெய்னா மற்றும் பின்ச் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். ரெய்னா 22 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்களும், பின்ச் 19 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர் என 33 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.

இறுதியில் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டிய குஜராத் லயன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/14232711/1079986/IPL-GL-won-against-RPS-by-8-wickets.vpf

  • தொடங்கியவர்

 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரே நாளில் இரண்டு ‘ஹாட்ரிக்’: பத்ரீ, ஆண்ட்ரூ டை சாதனை

 

 
 

நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் ‘ஹாட்ரிக்’ சாதனையை பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரீ, குஜராத் லயன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரு டை நேற்று படைத்தார்கள்.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரே நாளில் இரண்டு ‘ஹாட்ரிக்’: பத்ரீ, ஆண்ட்ரூ டை சாதனை
ஹாட்ரிக் சாதனையாளர் பத்ரீயை, கோலி பாராட்டுகிறார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் ‘ஹாட்ரிக்’ சாதனையை பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரீ (வெஸ்ட் இண்டீஸ் நாட்டவர்) நேற்று படைத்தார்.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 3-வது ஓவரை பத்ரீ வீசினார். இதன் 2-வது பந்தில் பார்த்தீவ் பட்டேல் (3 ரன்) ‘கவர்’ திசையில் நின்ற கெய்லிடம் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய மெக்லெனஹான் (0) புல்டாசாக வீசப்பட்ட பந்தை தூக்கியடித்த போது சிக்கினார். 4-வது பந்தை எதிர்கொண்ட கேப்டன் ரோகித் சர்மா (0) தாழ்வாக ஊடுருவிய பந்தை தடுக்க முடியாமல் கிளன் போல்டு ஆகிப்போனார். இதன் மூலம் 36 வயதான பத்ரீ ஹாட்ரிக் சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

201704150929383193_record._L_styvpf.gif

அதன் தொடர்ச்சியாக இரவில் நடந்த புனே சூப்பர் ஜெயன்ட்சுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரு டையும் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்து அட்டகாசப்படுத்தினார். ஆட்டத்தின் 20-வது ஓவரில் அங்கித் ஷர்மா (25 ரன்), மனோஜ் திவாரி (31 ரன்), ஷர்துர் தாகுர் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக கபளகரம் செய்து ஹாட்ரிக் சாதனையாளராக ஜொலித்தார். 30 வயதான ஆண்ட்ரூ டை ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆவார்.

இவற்றையும் சேர்த்து ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 16 ‘ஹாட்ரிக்’ பதிவாகியுள்ளன. பத்ரீ, ஆண்ட்ரு டை இருவருக்கும் இந்த சீசனில் இதுதான் முதல் ஆட்டமாகும். ஐ.பி.எல். போட்டியில் ஒரே நாளில் இரண்டு ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/15092936/1080010/ipl-cricket-same-day-two-hat-trick-Samuel-Badree-Andrew.vpf

  • தொடங்கியவர்

சுனில் நரைனிடம் இருந்து ஆலோசனை பெற வேண்டும்: கம்பீர்

 

சுனில் நரைனின் பேட்டிங் திறமையை பற்றி நிறைய பேர் குறைவாக மதிப்பிடுகிறார்கள். அவரை போன்ற வீரர் அணியில் இருப்பது எனக்கு எப்போதும் சவுகரியமாக இருக்கிறது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
சுனில் நரைனிடம் இருந்து ஆலோசனை பெற வேண்டும்: கம்பீர்
 
கொல்கத்தா :

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை பஞ்சராக்கியது. இதில் பஞ்சாப் நிர்ணயித்த 171 ரன்கள் இலக்கை கொல்கத்தா அணி 16.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. கேப்டன் கவுதம் கம்பீர் 72 ரன்களும் (12 பவுண்டரி), சுனில் நரைன் 37 ரன்களும் (18 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.

இந்த ஆட்டத்தை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், கம்பீருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டது தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய விஷயமாகும். கிறிஸ்லின் காயமடைந்ததால் கம்பீருடன், ராபின் உத்தப்பா இறங்குவார் என்று எதிர்பார்த்த வேளையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் முறையாக சுனில் நரைன் தொடக்க வீரராக அனுப்பப்பட்டார். அவரும் அதிரடியில் மிரள வைத்து விட்டார்.

201704151031034634_Sunil-Narine._L_styvp

சுனில் நரைனுக்கு புகழாரம் சூட்டியுள்ள கம்பீர் கூறுகையில், ‘சுனில் நரைனின் பேட்டிங் திறமையை பற்றி நிறைய பேர் குறைவாக மதிப்பிடுகிறார்கள். அவரை போன்ற வீரர் அணியில் இருப்பது எனக்கு எப்போதும் சவுகரியமாக இருக்கிறது. அவர் தரமான பந்து வீச்சாளர். அதே போல் அதிரடியான பேட்டிங்குக்கும் அவரை பயன்படுத்த முடியும்.

அவர் விளையாடிய விதத்தை பார்த்து சில பேட்ஸ்மேன்கள் பெருமைப்பட வேண்டும். அவரது சில ஷாட்டுகளை பாருங்கள். மெகா சிக்சர் அடிப்பது எப்படி என்பதை அவரிடம் இருந்து நான் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து சாதகமான முடிவுகள் கிடைத்தால், சுனில் நரைனை நீங்கள் தொடக்க வீரராக பார்க்கலாம்’ என்றார்.
 
 
  • தொடங்கியவர்

எங்கய்யா இருந்த இவ்ளோ நாளா ? விராட்கோலிக்கு கிடைத்த 'ஹாட்ரிக் பத்ரி' #IPL2017

 
 

ஒரு பந்து வீச்சாளரின் பொறுப்பு ஒரு அணிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒரு ஓவரில், ஏன்.. ஒரு பந்தில் முழு ஆட்டமே கைமாறும் அளவிற்கு சுவாரசியம் நிறைந்தது கிரிக்கெட் போட்டி. அந்த ஒரு கணம் ஒரு பேட்ஸ்மேனோ பௌலரோ மிகவும் பதற்றத்துடன் இருப்பார்கள். சிலர் இது போன்ற தருணங்களுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். எவ்வளவு திறமையான வீரர்களாக இருந்தாலும் அந்த நிமிடத்தில் காலமும் அவர்களுக்கு கை கொடுத்தால் மட்டுமே அது முழு வெற்றியாக அமையும். அந்த வகையான தருணம் பந்து வீச்சாளர்களுக்கு இருக்கிறது என்றால் அது `ஹாட்ரிக்` விக்கெடுகளை வீழ்த்துவது. அந்த வகையில் அவ்வளவு சாதாரணமாக ஹாட்ரிக் விக்கெட் எடுப்பது என்பது முடியாத காரியம். ஆனால், அதனை அடைவது என்பது நிஜமாக ஒரு சாதனைதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

பத்ரி

இந்த மேஜிக் அவ்வப்போது நிகழும். அதுவும், ஐபிஎல் போன்ற போட்டிகளில் நிகழ்ந்தால் எப்படி இருக்கும்? ஆம், இது வரை, எத்தனையோ பேர் ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றி வரலாற்றில் தன் பெயரை பதித்துள்ளனர். அந்த வரிசையில் நேற்று ராயல் சாலஞ்சர்ஸின் சாமுவேல் பத்ரியும் இடம்பெற்றுள்ளார். நடந்து முடிந்த மும்பைக்கும் பெங்களூருக்கும் இடையேயான போட்டியில் வெஸ்ட் இண்டீஸை சார்ந்த ராயல் சாலஞ்சர்ஸின் சாமுவேல் பத்ரி ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதன் ஸ்பெஷலே அவர் முதல் பவர்ப்ளேவில் ஹாட்ரிக் எடுத்ததுதான்.

மும்பை தன் அதிரடியின் மூலம் கடந்த போட்டிகளில் வெற்றியை பதித்து வருகிறது. இந்த நிலையில், மும்பைக்கும் கோலி தலைமையில் பெங்களூருக்கும் நடைபெற்ற இந்த போட்டி மிக ஆரவாரத்துடன் தொடங்கியது. இந்த போட்டியில் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை. 3வது ஓவரில் வந்து அதிர்ச்சி கொடுத்தார் பத்ரி. மூன்றாவது ஓவரின் 2வது பந்தில் பார்த்திவ் படேலை வீழ்த்தினார். இவர் வீழ்ந்த உடன் மகிழ்ச்சியில் திளைத்தது ஆர்சிபி. 3வது பந்தில் தனக்கான முதல் பந்தை சந்தித்த மெக்லனகனும் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து மந்தீப் வசம் வீழ்ந்தார், ஏற்கெனவே அதிரடி நாயகன் பட்லர் விக்கெடை இழந்து ஆடிய நிலையில், அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து 7 ரன்னிற்கு 3 விக்கெட்டுகளை இழந்து நின்றது. பத்ரியின் சாதுரியமான பந்தில் அணியின் கேப்டன் ரோஹித் போல்ட் ஆக ஆர்ப்பரித்தது ஆர்சிபி.

பத்ரி தன் ஆபார பந்துவீச்சினால் படபடவென விக்கெட்டுகளை சாய்த்து மும்பைக்கு ஷாக் கொடுத்தார். இவரின் அடுத்த ஓவரிலும் ரன் மழை பொழியும் ராணாவை வீழ்த்தி தம்ஸ் அப் காட்டினார். இவரின் ஹாட்ரிக் பெங்களூருக்கு பெரும் பலமாக இருந்தது. ஆனால், பொலார்டின் அதிரடி ஆட்டத்தால் மும்பை வெற்றி பெற்றது. இருந்தும் தன் லாவகமான பந்து வீச்சின் மூலமாக ஹாட்ரிக் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்ரி

யார் இந்த சாமுவேல் பத்ரி ?

36 வயதான சாமுவேல் பத்ரி இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தன் 31வது வயதில் தன் முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கினார். ஆனால், உள்ளூர் போட்டிகளான கரிமியன் பிரிமியர் லீக், பிக்பாஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், பங்களாதேஷ் பிரிமியர் லீக், போட்டியில் ஒவ்வொரு அணிக்காக விளையாடி உள்ளார். இவர் இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் 2013ல் ராஜஸ்தான் அணியில் எடுக்கப்பட்டு ஒரு போட்டி மட்டுமே விளையாடியுள்ளார். 2014 ஆண்டில் சிஎஸ்கே அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இவர் விளையாடிய 4 போட்டிகளில் 2 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். அவர் தோளில் ஏற்பட்ட காயத்தினால் பிக்பாஷ் லீக் போட்டியில் விளையாடவில்லை. 2016 ல் பிக்பாஷ் தொடரில் அதே அணிக்காக மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டு சிறப்பாக விளையாடி இறுதி போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

ஐபிஎல்லில், ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இன்று நடந்த போட்டியில் முதன்முதலாக களமிறங்கினார். தன் முதல் போட்டியிலே ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார் சாம்ஸ். 4 ஓவர் வீசி 9 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து சிகப்பு நிற ஜெர்ஸியில் நம்மை சிலிர்க்க வைத்தார். ஆனால், அவர் இது வரை 50 ஓவர் போட்டியில் ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மே.இ.தீவுகள் அணிக்காக 34 டி20 போட்டியில் விளையாடி 45 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

இந்த போட்டியில் இவரது ஹாட்ரிக்கின் மூலம் ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த 15 வது வீரர் என்னும் பெருமையும் பெற்றார். இந்த போட்டியில் பெங்களூர் தோற்றாலும் பெங்களூர் ரசிகர்கள் மத்தியில் ‘பத்ரி..எங்கய்யா இருந்த இவ்ளோ நாளா?’  என்ற கேள்வி எழுந்துள்ளது. தன் முதல் போட்டியில் அசத்திய இவர் இனி வரும் போட்டிகள் அனைத்திலும் நிச்சயமாக இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். இவரது வரவை ஆர்சிபி மிகச்சரியாக பயன்படுத்தும் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக மட்டுமல்லாமல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கிறது.

வாழ்த்துக்கள் பத்ரி...ஆல் தி பெஸ்ட்...

http://www.vikatan.com/news/sports/86507-virat-kohli-found-out-the-most-wanted-bowler-samuel-badree-in-this-season.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.