Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கியும்.... நானும்.  - தமிழ் சிறி. - 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் எழுதுங்கள் சிறி.

  • Replies 143
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணே....  துருக்கியர் 90 வீதமான ஆட்களுக்கு, நாரிப் பிடிப்பு இருப்பது உண்மை.
ஆனால்  இவர்களுக்கு, வரும் முதுகு வலி குளிரால் வாற  முதுகு வலி மாதிரி தெரியவில்லை.
அளவுக்கு அதிகமாக.. உடலுறவில் ஈடுபட்டாலும், நாரிப் பிடிப்பு வரும்.:grin:

kuerbiskerne.jpg

pistazien-sind-gesund-und-gut-fuer-die-figur.jpg

பூசணிக்கொட்டையும் பிஸ்தாவும் நேரகாலமில்லாமல் கொறிச்சுக்கொண்டிருந்தால் மனிசன் சும்மா படுக்கேலுமே? :grin:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, தமிழ் சிறி said:

என்ன முக்கியமான விசயத்தை  குறிப்பிடுகின்றீர்கள் என்று எனது நினைவுக்கு வரவில்லை.  
குறிப்பிட்டு சொன்னா ல்....  "பிரித்து, மேய்ந்து... விடலாம்."  :D:

அவையின்ரை கலியாணவீட்டு கொண்டாட்டத்திலை நடக்கிற மொய் விசயம்....:(

மைக்கை வைச்சுக்கொண்டு குமாரசாமி 5ரூபாய் மொய் வைச்சிருக்கிறார் எண்டு ஊர்முழுக்க கேக்கிறமாதிரி சொல்லுற விசயம்...tw_angry:tw_rage:

இன்னும் இருக்கு..tw_relaxed:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, colomban said:

துருக்கி சாப்பாடுகள் சுவையானவையே தமிழிசிறி. kofta / kabab எல்லாம் எப்படி?

Bildergebnis für imbiss

Bildergebnis für doner laden

ஆம்... கொழும்பான், துருக்கி உணவு வகைகள்... சுவையாக இருக்கும். அதிலும்... பல துருக்கி ஆண்கள் நன்றாக சமைக்கவும் தெரிந்தவர்கள்.
முன்பு இங்கு....  மக்கள் அதிகமாக புழங்கும் புகையிரத நிலையங்கள், கடை வீதிகள், பல் பொருள் அங்காடி தொகுதி கடைகளில் ஒரு பகுதியாக Imbiss  எனப்படும் ஜேர்மன் உணவு விற்பனை செய்யும்  பெட்டிக்  கடைகள் போன்றவை பல இருந்தன,  இப்போது  பெரும்பாலான  ஜேர்மன் மக்களும், மாணவர்களும்   "டோனர்" எனப்படும்  "கேபாப்" உணவை விரும்பி உண்ண  ஆரம்பத்திருப்பதால்.... ஜேர்மன்  Fast Food உணவகங்களை அதிகம் காண முடியவில்லை. 

"கேபாப்"  கடை வைக்க... பெரிய இடம் தேவை இல்லை.  சிறிய இடத்தில்... பெரிய லாபம் பார்க்கும் தொழிலாக, பல துருக்கியர் இந்தக் கடைகளை நடத்துகின்றார்கள். எமது நாட்டு அதிபர், அங்கேலா மேர்க்கல்.. டோனர் வெட்டும் படம் மேலே உள்ளதை பார்த்தாலே... ஜேர்மனியில்  "டோனர்" வியாபாரம்   ஓகோ.. என்று நடப்பதை புரிந்து கொள்வீர்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

துருக்கியர்  மட்டுமல்ல

பிறந்ததிகதியை  சரியாக சொல்லமுடியாத

அனைவரும்  இவ்வாறு தான்  பதிகின்றனர்

நானறிந்தவரையில்   ஆபிரிக்கர்களே அதிகமாக இவ்வாறு பதிகின்றனர்

நான் கடையில்  பணம் அனுப்புதல்  செய்கின்ற  படியால்  வயதானவர்களுக்கு

பிறந்த திகதியே  கேட்க தேவையிருக்காது

01-01- தான்

அல்லது 00-00-

தற்பொழுது கணணி இதை ஏற்க மறுப்பதால் 01-01...

தொடருங்கள்சிறி.

தொடர்ந்துபார்த்து வந்தாலும் எழுத நேரம்   கிடைப்பதில்லை.

விசுகு... எமது நாட்டில் இருந்த,  மன்னர் ஆட்சி காலத்திலும் பிறந்த  திகதி பதியும் முறை  இருக்கவில்லை, ஆண்டுகள் பதியப் பட்டிருக்கலாம்  என நினைக்கின்றேன். ஒல்லாந்தர், போர்த்துக்கீசர், ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்பே.... இந்த நடை முறை வந்திருக்கும் என எண்ணுகின்றேன். 

அண்மையில்... உறவினர் ஒருவர் அனுப்பிய வம்சாவளி வரைவுப் படத்தில். 1750´ம் ஆண்டிருந்து, எனது     முன்னனோர்களின்  பெயரை  பார்த்து, அதிசயித்து விட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

//ரதி Posted March 10: நான் இருக்கிற பக்கம் முழுக்க துருக்கிக்காரன்கள் தான்....அவங்கட கடைகளில் விக்கிற பாண் ஓரளவுக்கு இலங்கையில் பாண் சாப்பிட்ட மாதிரித் தான் இருக்கும்...ஊரில் லூசாக விக்கிற எங்கட ஊர்த் தேயிலையைத் தான் பாவிப்பார்கள்.இரவிரவாய் சாப்பிடுவார்கள் என நினைக்கிறேன்...நட்ஸ்சும் நல்லாய் சாப்பிடுவார்கள்:unsure://

6 hours ago, குமாரசாமி said:

பூசணிக்கொட்டையும் பிஸ்தாவும் நேரகாலமில்லாமல் கொறிச்சுக்கொண்டிருந்தால் மனிசன் சும்மா படுக்கேலுமே? :grin:

குமாரசாமி அண்ணை.....
ரதியின் சந்தேகம், இப்ப தீர்ந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.  :grin: :D:

அடுத்து வரும்  பதிவுகள் ஒன்றில்...  வேலை இடத்தில், இவர்கள்...   
"பூசணிக்கொட்டை"  சாப்பிட்டதால்,  நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை பற்றி எழுத உள்ளேன். :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அவையின்ரை கலியாணவீட்டு கொண்டாட்டத்திலை நடக்கிற மொய் விசயம்....:(

மைக்கை வைச்சுக்கொண்டு குமாரசாமி 5ரூபாய் மொய் வைச்சிருக்கிறார் எண்டு ஊர்முழுக்க கேக்கிறமாதிரி சொல்லுற விசயம்...tw_angry:tw_rage:

இன்னும் இருக்கு..tw_relaxed:

அண்ணை,  எனக்கு... துருக்கி கலியாண  வீட்டுக்கு, போகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
நீங்கள், அறிந்தவற்றையும்  எழுதுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் எழுதுங்கள் சிறி.

நான் இருக்கும் இடத்தில  பாக்கிகள் டாக்ஸி ஓடுகிறார்கள். ஒரு கும்பலை ஆங்கில சிறுமிகளை  துஸ்பிரயோகங்கள் செய்ததுக்காக உள்ளே தூக்கி போட்டு விட்டார்கள். ஆனால்  தங்கள் பெண்களை பிறர் பார்ப்பதை அனுமதிக்க மாட்டார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

தொடர்ந்தும் எழுதுங்கள் சிறி.

நான் இருக்கும் இடத்தில  பாக்கிகள் டாக்ஸி ஓடுகிறார்கள். ஒரு கும்பலை ஆங்கில சிறுமிகளை  துஸ்பிரயோகங்கள் செய்ததுக்காக உள்ளே தூக்கி போட்டு விட்டார்கள். ஆனால்  தங்கள் பெண்களை பிறர் பார்ப்பதை அனுமதிக்க மாட்டார்கள். 

உண்மை... அகஸ்தியன்,
தனக்கு வந்தால்... இரத்தம். மற்றவனுக்கு வருவதெல்லாம்...... 
தக்காளி சட்னி.... என்று, இறுமாப்பில்... இருக்கும்,  
மதம் சார்ந்த,  கொள்கைகளால்..... இவர்களை, நேசிக்க முடியாது.

1990 களில்  கூட,  துருக்கி கணவன்...  கோட் சூட்டுடன்,  முன்னே நடந்து போக...
பின்... ஒரு  மீற்றர் இடைவெளியில் தான், மனைவி நடந்து போவார்.
இப்போ... அடுத்த தலைமுறை, தலைகீழாக  மாறி விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

விசுகு... எமது நாட்டில் இருந்த,  மன்னர் ஆட்சி காலத்திலும் பிறந்த  திகதி பதியும் முறை  இருக்கவில்லை, ஆண்டுகள் பதியப் பட்டிருக்கலாம்  என நினைக்கின்றேன். ஒல்லாந்தர், போர்த்துக்கீசர், ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்பே.... இந்த நடை முறை வந்திருக்கும் என எண்ணுகின்றேன். 

அண்மையில்... உறவினர் ஒருவர் அனுப்பிய வம்சாவளி வரைவுப் படத்தில். 1750´ம் ஆண்டிருந்து, எனது     முன்னனோர்களின்  பெயரை  பார்த்து, அதிசயித்து விட்டேன்.

சில பெயர்களை வெளியால எடுத்து விடுகிறது தான்...சிறியர்!

நிச்சயமாக ..தீவுப்பக்கம் தொடுசல் இருக்கும்! இப்ப வளந்திட்டீங்க தானே...எல்லாவற்றையும் அப்படியே மறைக்காமல் சொல்லும் தைரியம் நிச்சயம் உங்களிடம் இருக்கும்! எமது முன்னோர்களின் பெயர்களை அறியும் ஆவலில் தான் கேட்டேன்! மலையாளப் பேருகளும் அதில இருக்குதோ?

எனக்கும் ஒருவரைத் தெரியும்..! ஒரு பிரபலமான மனுசன்! கொஞ்சம் நேரத்தோட ஆள் ஓய்வெடுத்திட்டுது! கொஞ்சம் சமூக சேவை செயபப்போறாருக்கும் எண்டு..ஒரு நாள் அவரைப் பார்க்கப் போனேன்!

என்னடாப்பா...நீங்களெல்லாம் இப்படி..காலம் வர முந்தியே ஓய்வெடுத்தால் ..நாடு படுத்திருமே என்று கேட்க...அவரும் மச்சான் இந்த விஷயம் நம்ம இரண்டு பேருக்குமிடையில் இருக்கட்டும்! என்ற உண்மையான வயசின் படி...நான் அஞ்சு வருசத்துக்கு முன்னமே..ஓய்வெடுத்திருக்க வேண்டும்!

அது சரி......துருக்கியர்களைப் பற்றி நிறைய விசயங்கள் அறிந்து கொண்டேன்! ஆனால் இன்னும் சில பகுதிகளை நீங்கள் தொடவில்லை என்றே நினைக்கிறேன்!

உதாரணமாக நான் ஒரு துருக்கிப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால்,,,,கால், கை...பிடித்து விடுவாளா? குளிக்கும் போது முதுக்குக்குச் சவர்காரம் தேய்த்து விடுவாளா போன்ற தகவல்களை எதிர் பார்க்கிறேன்!

தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 11/03/2017 at 1:22 PM, தமிழ் சிறி said:

சிரிச்சு.... விக்கல்...  வந்துட்டுது, அண்ணே.
 
துருக்கியை... பற்றி, கன  பகிடி கிடக்குது. 
"மெயின்" பகிடிகள் இன்னும்... ரொ ம்ப..... இருக்கு. :grin:

பகிடிக்காக‌வே காத்திருக்கிறோம் தொடருங்கள் தமிழ்சிறி....தொடர் மிகவும் சுவையாக உள்ளது.

On 14/03/2017 at 4:28 PM, தமிழ் சிறி said:

இவர்களில்.... திருமணம் செய்த,  பல பிள்ளைகளுக்கு தந்தையாக, 50 வயதுக்கு மேற்பட்டு இருந்தாலும்....  யாராவது ஒரு பெண்ணை கண்டால், எந்த வயதென்றாலும் காரியமில்லை... அவரைப் பார்த்து, ரசித்து... ஜொள்ளு விட்டுக்  கொண்டு நிற்பார்கள். வீதியால்... ஒரு பெண் இவர்களை  கடந்து சென்றால் கூட... அந்தப் பெண் மறையும் வரை, திரும்பி நின்று பார்த்துக் கொண்டே நின்றாள்... 

.

இன்னும்... எழுதவா, இதோடை  நிறுத்தவா..... :grin:

உந்த விசயத்தில எல்லா(இன மத பேத்மின்றி) ஆண்களும்:unsure: அப்படித்தான் என்று நினைக்கிறேன்....தொடரை தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புங்கையூரன் said:

சில பெயர்களை வெளியால எடுத்து விடுகிறது தான்...சிறியர்!

நிச்சயமாக ..தீவுப்பக்கம் தொடுசல் இருக்கும்! இப்ப வளந்திட்டீங்க தானே...எல்லாவற்றையும் அப்படியே மறைக்காமல் சொல்லும் தைரியம் நிச்சயம் உங்களிடம் இருக்கும்! எமது முன்னோர்களின் பெயர்களை அறியும் ஆவலில் தான் கேட்டேன்! மலையாளப் பேருகளும் அதில இருக்குதோ?

எனக்கும் ஒருவரைத் தெரியும்..! ஒரு பிரபலமான மனுசன்! கொஞ்சம் நேரத்தோட ஆள் ஓய்வெடுத்திட்டுது! கொஞ்சம் சமூக சேவை செயபப்போறாருக்கும் எண்டு..ஒரு நாள் அவரைப் பார்க்கப் போனேன்!

என்னடாப்பா...நீங்களெல்லாம் இப்படி..காலம் வர முந்தியே ஓய்வெடுத்தால் ..நாடு படுத்திருமே என்று கேட்க...அவரும் மச்சான் இந்த விஷயம் நம்ம இரண்டு பேருக்குமிடையில் இருக்கட்டும்! என்ற உண்மையான வயசின் படி...நான் அஞ்சு வருசத்துக்கு முன்னமே..ஓய்வெடுத்திருக்க வேண்டும்!

அது சரி......துருக்கியர்களைப் பற்றி நிறைய விசயங்கள் அறிந்து கொண்டேன்! ஆனால் இன்னும் சில பகுதிகளை நீங்கள் தொடவில்லை என்றே நினைக்கிறேன்!

உதாரணமாக நான் ஒரு துருக்கிப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால்,,,,கால், கை...பிடித்து விடுவாளா? குளிக்கும் போது முதுக்குக்குச் சவர்காரம் தேய்த்து விடுவாளா போன்ற தகவல்களை எதிர் பார்க்கிறேன்!

தொடருங்கள்!

புங்கையூரான்,  
உங்களிடமிருந்து தான் இந்தக்  கேள்வி வரும் என்று, காத்திருந்தேன்.
+++++  முதலியார்...  என்ற பெயரில், இருந்து ஆரம்பிக்கின்றது.

நான்... நேசித்த,  பாட்டி இறக்கும் வரை,  அருகில் இருந்து வளர்ந்தவன்.
அவரின்  திருமண படமும்,  வீட்டில் உள்ளது. 
சின்ன... வயதில், நான்,,, குழப்படி செய்தால்....  "துஷ்டப் பயல்"  என்று,  பேசுவார்.
பிறகு... அவரே... எனக்கு, காசு தந்து, பள்ளிக்கூடம் அனுப்பி வைப்பார்.

அவர்  இறந்த போது, எனது நண்பர்களே.....  வீட்டில்  இருந்து,  கோம்பையன்  மணல் சுடலை மட்டும், தோரணம் கட்டி இருந்ததை  பார்த்த காட்சியை   இன்றும் மறக்க முடியாது.

---------

புங்கை,  கனவிலும்  துருக்கி  பெண்ணை கலியாணம் கட்ட நினைக்காதீர்கள்.
உங்களுக்கு... கால், கை  பிடித்து, விடுவதெல்லாம்  அந்தக் காலம்.
அந்தரங்கப்   பகுதிகளில்,  வளரும்  முடியை வெட்டும், 
பக்குவமம், தெரிய வேண்டும்,

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் எனக்கும் கடைசிக்கு காலத்தில் கோம்பையன் மணலில்  வீரவிறகில் வெந்துபோக, காக்கைதீவில் காடாத்திவிட, கீரிமலையில் அந்திரட்டி நடந்திட ஆசை. இறையின் சித்தம் எதுவோ யாமறியோம்....!

  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2017 at 0:09 AM, தமிழ் சிறி said:

அளவுக்கு அதிகமாக.. உடலுறவில் ஈடுபட்டாலும், நாரிப் பிடிப்பு வரும்.:grin:
------
 
விந்து விட்டார்

நொந்து கெட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18.3.2017 at 3:13 AM, putthan said:

பகிடிக்காக‌வே காத்திருக்கிறோம் தொடருங்கள் தமிழ்சிறி....தொடர் மிகவும் சுவையாக உள்ளது.

உந்த விசயத்தில எல்லா(இன மத பேத்மின்றி) ஆண்களும்:unsure: அப்படித்தான் என்று நினைக்கிறேன்....தொடரை தொடருங்கள்

புத்தன்,  நேரப்  பற்றாக்  குறையால்... தினமும் தொடர்ந்து எழுத  முடியாமல் இருந்தாலும்,  நிச்சயம் தொடர்வேன்.
உங்களது ஆக்கத்தையும், ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம். இன்னும் இரண்டு கிழமை மட்டுமே உள்ளது. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18.3.2017 at 9:00 AM, suvy said:

சிறியர் எனக்கும் கடைசிக்கு காலத்தில் கோம்பையன் மணலில்  வீரவிறகில் வெந்துபோக, காக்கைதீவில் காடாத்திவிட, கீரிமலையில் அந்திரட்டி நடந்திட ஆசை. இறையின் சித்தம் எதுவோ யாமறியோம்....!

சுவி.... எனக்கும் அந்த ஆசை உள்ளது. பொறுத்திருந்து  பாப்பம்....  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18.3.2017 at 3:30 PM, ஈழப்பிரியன் said:

விந்து விட்டார்

நொந்து கெட்டார்.

Had sperm

Nevrotik kötü. 

ஈழப்பிரியன்  எமது முன்னோர்கள்.... எமக்கு நாரிப்பிடிப்பு tw_tounge_wink: வராமல் இருக்க, 
எவ்வளவு  ஒரு பொருத்தமான பழமொழியை,  சொல்லி விட்டு போனதால்... tw_lol:
நாம்.... இப்ப, துருக்கிக்காரர் மாதிரி... "நாரிப்பிடிப்பு வருத்தம்"  இல்லாமல் வாழ்கின்றோம். :grin:
எமது  பழமொழியை... மொழிபெயர்த்து, எல்லா துருக்கிக் காரனுக்கும்... சொல்ல இருக்கின்றேன். :D:
(துருக்கி  மொழிபெயர்ப்பு  உதவி...... கூகிள்  ஆண்டவர்) :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுவி.... எனக்கும் அந்த ஆசை உள்ளது. பொறுத்திருந்து  பாப்பம்....  :)

ஹா ஹா .... ஐ யாம் வெயிட்டிங்......!  tw_blush:

டோன்ட் வொரி.... தி பெஸ்ட்  ரொடி கொட்டில் ஆல்சோ ஃ பிரொண்ட்  ஓஃப் தி சுடலை....! tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டு மணித்தியால வேலை நேரத்தின் போது,  மூன்று இடைவேளைகள்  15 / 30 / 15 நிமிடம் எல்லோருக்கும் கிடைக்கும். இதில் என்ன பிரச்சினை என்னவென்றால்.... தொழுகை நடத்தும் துருக்கி, தனது இடைவேளை நேரத்தில் தொழுகை நடத்தாமல், வேலை நேரத்தில் தொழுகை நடத்துவது பலரின் முகத்தை சுழிக்க வைக்கும். 

வேலை நடந்து கொண்டு இருக்கும் இடத்தில்.... இவர்கள் இப்படி தொழுகை நடத்துவது,  மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதை அவதானித்த நிர்வாகம், அவர்கள் கும்பிடுவதற்கு என்று ஒரு அறையை ஒதுக்கி கொடுத்தார்கள். அந்த அறைக்கு... பச்சை வர்ணம் பூசி, கிட்டத் தட்ட  "மினி மசூதியாக்கி"  விட்டார்கள்.  

இப்ப மசூதி கிடைத்த சந்தோசத்தில்....  தொழுகை நடத்தாத துருக்கி எல்லாம்... கும்பிட தொடங்கி விட்டார்கள். சில நேரங்களில் வேலை இடத்தில் ஒரு துருக்கியையும் காணக் கிடைக்காது. அப்படி என்ன நடக்கின்றது என்று அவர்களின் "மினி  மசூதி" கதவை திறந்து பார்த்தால்... உள்ளுக்கு, எல்லாத் துருக்கியும்.. வட்ட மாக குந்தி இருந்து...  கதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது.... பிற மதத்தவர்களான  கிறிஸ்தவர், கிரேக்கர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களும்... தாம்  வழிபட தனி இடம் வேண்டும் என்று கேட்கத்  தொடங்க,  நிர்வாகத்துக்கு தலையிடியாய் போய் விட்டது. அதற்கிடையில்......  துருக்கிகளின்  "மினி மசூதிக்குள்"  பன்றி ஒன்றின் முகத்தின் மூக்குப் பகுதியை..... கடையில் இருந்து வாங்கி வந்து, யாரும் இல்லாத நேரமாக பார்த்து.... ஒருவருக்கும் தெரியாமல்..... எறிந்து  விட்டு, வந்து விட்டான். இதனை அறிந்த துருக்கிகள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்ய தொடங்கி விட்டார்கள்.

நிர்வாகத்துக்கு... போதிய முன்னறிவித்தல் கொடுக்காமல், திடீரென வேலை நிறுத்தம் செய்வது... சட்டப்  படி குற்றம் என்பதால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் துருக்கிகள்  வேலையை விட்டு  நீக்கப்பட்டதாக  கருதப்படுவார்கள் என்று நிர்வாகம் அறிவித்த பின்...   துருக்கி வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டது. அத்துடன்...  நிர்வாகம், பல மதத்தவர் வேலை செய்யும் செய்யும் இடத்தில்... தொழுகை செய்வதை ஏற்க  முடியாது. அத்துடன்.... எட்டு மணித்தியால வேலைக்கு (இடைவேளை உட்பட), நிர்வாகமே... சம்பளம் கொடுப்பதால்..... இனி தொழுகையில் ஈடுபடுபர்களின் நேரம்,  அவர்களின் வேலை மணித்தியாலத்திருந்து கழிக்கப்படும் என்ற பின்.... ஒரு துருக்கியும்  தொழுகை நடத்துவதில்லை. 

ஒரு பன்றியின் மூக்கு... பெரிய ஒரு பிரச்சினையை,  அடியோடு தீர்த்து வைத்ததை  இட்டு, நிர்வாகத்துக்கு உள்ளூர மகிழ்ச்சியே.... :14_relaxed:

இன்னும்,  கொஞ்சம் இருக்கு..... :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

..வேலை நடந்து கொண்டு இருக்கும் இடத்தில்.... இவர்கள் இப்படி தொழுகை நடத்துவது,  மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதை அவதானித்த நிர்வாகம், அவர்கள் கும்பிடுவதற்கு என்று ஒரு அறையை ஒதுக்கி கொடுத்தார்கள். அந்த அறைக்கு... பச்சை வர்ணம் பூசி, கிட்டத் தட்ட  "மினி மசூதியாக்கி"  விட்டார்கள்.

இங்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக தொழுகை அறைகள் நிச்சயம் இருக்கும்.. சாப்பிங் மால்களிலும் இவை உண்டு..வேண்டிய நேரம் தொழுது கொள்ளலாம..! smileys-praying-000125.gif

ரமலான் நோன்பு மாதத்தின்போது இவர்கள் மிகக் குறைந்த நேரமே, அதுவும் மிக எளிதான வேலைகளே செய்வர்.. இந்த நோன்பு போர்வையில் பச்சைகள், பட்டான்கள்,பெங்காளிகள் மற்ற மல்லு இசுலாமியர்கள் பெரும்பாலும் ஒளிந்துகொள்வார்கள்.. எங்கும் ஒரு வேலையும் நடக்காமல் மந்தகதியில் அனைத்தும் இயங்கும்.. எமக்கும் அப்பொழுது அதிகம் வேலை இருக்காது..! vil2_suisse.gif

On 17.3.2017 at 10:30 AM, தமிழ் சிறி said:

அண்மையில்... உறவினர் ஒருவர் அனுப்பிய வம்சாவளி வரைவுப் படத்தில். 1750´ம் ஆண்டிருந்து, எனது     முன்னனோர்களின்  பெயரை  பார்த்து, அதிசயித்து விட்டேன்.

இதைப்பற்றி கொஞ்சம் விபரமாக எழுத முடியுமா?

நிச்சயமாக உங்களை பற்றி அறியும் ஆவலில் இல்லை.
எமது முன்னோர்களின் பெயர்களையும் அவர்களுக்கிருந்த இந்திய தொடர்பையும் அறிய ஆசை.

எனது முன்னோர்களின் பெயர்கள்கூட மலையாள பெயர்களாகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஒரு பன்றியின் மூக்கு... பெரிய ஒரு பிரச்சினையை,  அடியோடு தீர்த்து வைத்ததை  இட்டு, நிர்வாகத்துக்கு உள்ளூர மகிழ்ச்சியே.... :14_relaxed:

இன்னும்,  கொஞ்சம் இருக்கு..... :)

நிர்வாகம் தான் இந்த வேலையைச் செய்திருக்கும் அல்லது செய்வித்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

இங்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக தொழுகை அறைகள் நிச்சயம் இருக்கும்.. சாப்பிங் மால்களிலும் இவை உண்டு..வேண்டிய நேரம் தொழுது கொள்ளலாம..! smileys-praying-000125.gif

ரமலான் நோன்பு மாதத்தின்போது இவர்கள் மிகக் குறைந்த நேரமே, அதுவும் மிக எளிதான வேலைகளே செய்வர்.. இந்த நோன்பு போர்வையில் பச்சைகள், பட்டான்கள்,பெங்காளிகள் மற்ற மல்லு இசுலாமியர்கள் பெரும்பாலும் ஒளிந்துகொள்வார்கள்.. எங்கும் ஒரு வேலையும் நடக்காமல் மந்தகதியில் அனைத்தும் இயங்கும்.. எமக்கும் அப்பொழுது அதிகம் வேலை இருக்காது..! vil2_suisse.gif

உணவகங்கள் எல்லாம் வளமை போல இருக்குமா ?
அல்லது நிலவு வந்தால்தான் திறப்பார்களா ?

2020 உங்கள் நாட்டிற்கு எக்ஸ்போ பார்க்க வர உத்தேசித்து இருக்கிறேன் 
ரம்பிலனுக்குள் வந்து தொலைக்குமோ என்று கொஞ்சம் பயமா இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

உணவகங்கள் எல்லாம் வளமை போல இருக்குமா ?
அல்லது நிலவு வந்தால்தான் திறப்பார்களா ?

2020 உங்கள் நாட்டிற்கு எக்ஸ்போ பார்க்க வர உத்தேசித்து இருக்கிறேன் 
ரம்பிலனுக்குள் வந்து தொலைக்குமோ என்று கொஞ்சம் பயமா இருக்கு. 

ரமலான் நோன்பு மாதத்தில் மட்டும் உணவகங்கள் மாலை(06.30 மணிக்கு மேல்) மசூதியில் சங்கூதிய பின் தான் திறப்பார்கள்.. மசூதிகளில் வழங்கப்படும் இலவச பிரியாணிகளுக்கு கூட்டம் அலைமோதும்.. மற்ற சாதாரண நாட்களில் உணவங்கள் எப்பொழுதும் திறந்திருக்கும்..

நிச்சயம் ரமலான் நோன்பு மாதத்தில் எக்ஸ்போ 2020 வராது,பன்னாட்டு நிறுவனங்கள், விருந்தினர்கள் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டுமே! மேலும் ஒவ்வொரு வருடமும் ரமலான் நோன்பு மாதம் 20 நாட்கள் முன் நோக்கி நகரும்.. இவ்வருடம் ஜூன் மாதம் நோன்பு வருகிறதாகக் கேள்வி. எக்ஸ்போ 2020க்கு துபாய்க்கு நீங்கள் வரவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி.. நான் பதவியிலிருந்து ஓய்வுபெறாமல் அமீரகத்தில் தொடர்ந்தால் அவசியம் சந்திக்கலாம்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ராசவன்னியன் said:

இங்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக தொழுகை அறைகள் நிச்சயம் இருக்கும்.. சாப்பிங் மால்களிலும் இவை உண்டு..வேண்டிய நேரம் தொழுது கொள்ளலாம..! smileys-praying-000125.gif

ரமலான் நோன்பு மாதத்தின்போது இவர்கள் மிகக் குறைந்த நேரமே, அதுவும் மிக எளிதான வேலைகளே செய்வர்.. இந்த நோன்பு போர்வையில் பச்சைகள், பட்டான்கள்,பெங்காளிகள் மற்ற மல்லு இசுலாமியர்கள் பெரும்பாலும் ஒளிந்துகொள்வார்கள்.. எங்கும் ஒரு வேலையும் நடக்காமல் மந்தகதியில் அனைத்தும் இயங்கும்.. எமக்கும் அப்பொழுது அதிகம் வேலை இருக்காது..! vil2_suisse.gif

File:Gulf Air Logo.svg    Gulf Air

மத்திய கிழக்கில் உள்ள... சர்வதேச விமான நிலையங்களில், இந்த  "மினி மசூதிகளை"  அவதானித்துள்ளேன், வன்னியன். அத்துடன்  Gulf Air போன்ற விமானங்களில் பறக்கும் போது... மெக்கா  இருக்கும் திசையை... ஜேர்மனியிலிருந்து,   கொழும்பு வரை... திரையில் அடிக்கடி காட்டிக் கொண்டே இருப்பார்கள்.

பெரும்பாலான துருக்கியருடன்... நோன்பு பிடிக்கும்  ரம்ழான்  மாதங்களில் வேலை செய்வது மிகச்  சிரமானது. நோன்பு நேரம் என்று இங்கு நிர்வாகம் பார்க்க மாட்டாது. வழமையான  வேலையில்  நடந்து கொண்டே இருக்கும். இவர்கள் தூங்கி வழிந்து  கொண்டு இருப்பதால்..... விரதம் பிடிப்பவர்களின் வேலையையும் நாம் செய்ய வேண்டியதால்....  அவர்களின் அல்லா  கடவுள், நோன்பு  பிடிப்பவர்களின் பலனில்... 50 % தை  எமது கணக்கில் சேர்த்து விடுவார் என்ற நம்பிக்கையில்.... அவர்களின் வேலையையும்,  சிவனே....  என்று செய்து  முடிப்பேன். :grin:

சில துருக்கிகள்...  மற்றவன்  பேசுவான் என்று  ரமழான் நோன்பு  பிடிக்கிற மாதிரி... "சீன்"  போட்டு, ஒளித்திருந்து தண்ணீர் அருந்துவதையும் நேரில் கண்டுள்ளேன். :)

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.