Jump to content

துருக்கியும்.... நானும்.  - தமிழ் சிறி. - 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, தமிழ் சிறி said:

பெரும்பாலான துருக்கியருடன்... நோன்பு பிடிக்கும்  ரம்ழான்  மாதங்களில் வேலை செய்வது மிகச்  சிரமானது. நோன்பு நேரம் என்று இங்கு நிர்வாகம் பார்க்க மாட்டாது. வழமையான  வேலையில்  நடந்து கொண்டே இருக்கும்.

இங்கு அரசாங்கமே நோன்பு நாட்களில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை அறிவுறுத்தியுள்ளார்கள், அதன் பின்னனியில் நடப்பவற்றை, சலுகைகளை அவர்கள் கண்டுகொள்வதும் இல்லை.. நோன்பு மாதத்தில் அலுவலக வேலை நேரம் தினமும் 5 மணியளவாக நேரம் குறைக்கபட்டுவிடும்.. அதாவது காலை 8 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை அல்லது காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை மட்டுமே..! இதில் சிலர் அலுவலகத்திற்கு, திட்டப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு  இன்னமும் தாமதமாக வந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.. இதனால் நமக்கும் வேலை கம்மியாகிவிடும்..!

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, Maruthankerny said:

உணவகங்கள் எல்லாம் வளமை போல இருக்குமா ?
அல்லது நிலவு வந்தால்தான் திறப்பார்களா ?

2020 உங்கள் நாட்டிற்கு எக்ஸ்போ பார்க்க வர உத்தேசித்து இருக்கிறேன் 
ரம்பிலனுக்குள் வந்து தொலைக்குமோ என்று கொஞ்சம் பயமா இருக்கு. 

எனது அனுபவத்தில் மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு நோன்புகாலங்களில் பயணிப்தைத் தவிர்க்க வேண்டும். நோன்புதிறக்காமல் உணவைக் காட்டமாட்டார்கள்.

On 11.3.2017 at 0:43 AM, தமிழ் சிறி said:

நொச்சி.... 
"வயித்துக் குத்தும், தலை இடியும்......  அவனவனுக்கு, வந்தால்தான் தெரியும்"  என்று சொல்வார்கள்.
ஜேர்மனியில்... துருக்கிகளுடன்  வேலை செய்வதற்கும், பழகுபவர்களுக்கும் தனித் திறமை வேண்டும்.

கொஞ்சம் .... அச மந்தமாக இருந்தாலும், "காதில் பூ" வைத்து விட்டுப் போய் விடுவார்கள்.  

"யாதும் ஊரே... யாவரும் கேளிர்" என்ற படியால்... 
இன்று, சொந்த நாடும், இல்லாமல் தவிக்கும்.....   இனம், தமிழ் இனம்.

துருக்கியரோடு அதிகம் பழகும் வாய்ப்பில்லை. டோனர் வாங்குவதோடு சரி. ஆனால் இவர்களிடம் எக்காரணம் கொண்டும் வாகனங்கள் வாங்கக்கூடாது. அப்படிவாங்கவதாயினும் நன்றாக ஆராய்ந்தே வாங்கவேண்டும். அதைவிட உங்களின் ஆக்கத்திலே வரும் சம்பவங்களில் சில நாமும் அவதானித்தவையே. பெண்விடயத்தில் மோசமான இயல்புடையோரே.விழுங்குவதுபோலவே பார்பார்கள். 

Posted
7 minutes ago, nochchi said:

எனது அனுபவத்தில் மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு நோன்புகாலங்களில் பயணிப்தைத் தவிர்க்க வேண்டும். நோன்புதிறக்காமல் உணவைக் காட்டமாட்டார்கள்.

இப்பொழுது சில ரெஸ்டாரண்ட்ஸ், அரசிடம் அனுமதி பெற்று, நோன்பு நாட்களிலும் "Take away" மட்டும் பகலில் செய்கின்றார்கள். இரவில் வழமை போல இயங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21.3.2017 at 0:19 PM, ஜீவன் சிவா said:

இதைப்பற்றி கொஞ்சம் விபரமாக எழுத முடியுமா?

நிச்சயமாக உங்களை பற்றி அறியும் ஆவலில் இல்லை.
எமது முன்னோர்களின் பெயர்களையும் அவர்களுக்கிருந்த இந்திய தொடர்பையும் அறிய ஆசை.

எனது முன்னோர்களின் பெயர்கள்கூட மலையாள பெயர்களாகவே உள்ளது.

1745´ம் ஆண்டிலிருந்து  வரும்... முதல்  மூன்று தலைமுறை பெயர்களை  எழுதியுள்ளேன்.
1)  சோமநாத முதலியார். 
2)  பூலோக நாயகம் முதலியார், சுந்தர், வாரித்தம்பி.
3)  காசிநாதர்,  முதலி நாச்சன், அம்மணிப்பிள்ளை, கதிர்காமர், ராஜநாயகம், பூலோகசிங்கம் முதலியார்,  சபாபதி, தெய்வானைப்பிள்ளை, முருகேசுப்பிள்ளை, சின்னத்தங்கம், பராசக்தி பிள்ளை, அன்னம்மா, செல்லமுத்து, சின்னாட்சி பிள்ளை, தங்கமுத்து... என்று வருகின்றது.

ஜீவன்சிவா....  உங்கள்  முன்னோர்களின் மலையாளப் பெயர்களை அறிய ஆவலாக உள்ளது.
அத்துடன் மலையாள மொழி தமிழில் இருந்து தானே வந்தது. அதற்கு 700 வருட வயதுதான் என்று எங்கோ வாசித்தேன். சரியாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21.3.2017 at 0:54 PM, ஈழப்பிரியன் said:

நிர்வாகம் தான் இந்த வேலையைச் செய்திருக்கும் அல்லது செய்வித்திருக்கும்.

அப்படித்தான்... நானும்  நினைக்கின்றேன்  ஈழப்பிரியன்.
"முள்ளை... முள்ளால் தான், எடுக்க  வேண்டும்"  என்று முடிவெடுத்து இருப்பார்கள்.
இதனை சட்ட வழிகள் மூலம் அணுகினால், தேவையற்ற காலதாமதமும்,
நிறுவனத்தின் பெயர்... தொலைக்காட் சி, பத்திரிகைகளில்  இந்த  சம்பவங்கள்  வெளியே வருவதை விரும்பி இருக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, nochchi said:

பெண்விடயத்தில் மோசமான இயல்புடையோரே.விழுங்குவதுபோலவே பார்பார்கள். 

ஆனால் தங்கடை பொம்புளையளை மட்டும் போர்த்து மூடிக்கட்டிக்கொண்டு திரிவாங்கள்..tw_rage:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

          The electron gun from a CRT computer monitor is about the size of a roll of quarters. It contains the heater, cathode, focusing anode and accelerating anode for three electron beams.   kuerbiskerne.jpg

 

அந்த... நிறுவனத்தில் உள்ள வேலை இடங்கள், பல பகுதிகளாக பிரிக்கப் பட்டு இருக்கும். அதில் சில பகுதிகளில்   வெளிக்காற்று, தூசி... போன்றவை உள்ளே  வரமால் இருக்க மிகவும் தூய்மையாக பேணப்பட வேண்டும். அங்கு வேலை செய்பவர்களின்  உடையிலிருந்து கூட...  தூசி வரக் கூடாது என்பதற்காக, வேலை ஆரம்பிக்க முதல்  ஒரு குறிப்பிட்ட நடை பாதையால் செல்லும் போது, வேகமான காற்று வீசும் இயந்திரம்  செயல்பட்டு உடைகளில் உள்ள கண்ணுக்கு  தெரியாத தூசியை அகற்றி விடும். அதன் பின் புதிய நைலோன் உடை தலையிலிருந்து கால் வரை அணிந்த பின்பே... அந்தப் பகுதிக்குள் செல்லாம் என்னும்  போது... அந்த இடத்தில் தயாரிக்கப் படும் பொருளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள்.  

மேலே படத்தில் காட்டப்   பட்டுள்ள பொருள் தான்... அந்தப் பகுதியில் தயாரிக்கப் படுவது. அண்ணளவாக  அது எமது  நடு விரல் அளவில் இருக்கும். அதில் 180 கண்ணுக்கு தெரியாத சிறிய பகுதிகளால், ரோபோ மூலம் ஓட்டப்  பட்டாலும்.... அந்த இடத்தில் மனித உழைப்பும் தேவை என்பதால்... பல பெண்கள் தான், அங்கு வேலை செய்வார்கள். அதில் துருக்கிய பெண்களும் உண்டு. அந்தப் பொருள் 100% தூய்மையாக தயாரிக்கப் பட்ட பின், இன்னும் 700 உதிரிப்பாகங்கள் பல்வேறு பகுதிகளில், பல் வேறு படிகளில் தயாரிக்கப் பட்டு விற்பனைக்கு அனுப்புவார்கள். மேலே காட்டப்  பட்ட பொருள் என்ன? என்று... முதலில் கூறுபவருக்கு  பச்சை  புள்ளி ஒன்று பரிசாக வழங்கப் படும்.  இந்தப் பொருள்...  உங்கள் வீட்டில் முன்பு இருந்தது. சிலவேளை... சில நாடுகளில் .... இப்போதும் இருக்கலாம். :)  

எந்த விதமான தவறும் இல்லாமல்....  நன்றாக தயாரிக்கப் பட்ட  சில  பொருட்களின்  இறுதிச் சோதனையில்,    தூசி படிந்த மாதிரி... கண்ணுக்கு தெரியாத   ஏதோ  அந்நிய   கூறுகள் காணப்பட... எல்லா இயந்திரங்களையும், சோதனைக்கு உள்ளாக்கியும் அந்தத் தவறின், மூல  காரணத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.  குறிப்பிட்ட பொருளின் தேவை அதிகம் இருந்ததால்.... அதன் உற்பத்தியையும் நிறுத்தி வைக்க முடியாது என்பதால்.... நல்லவற்றை எடுத்துக் கொண்டு மற்றவற்றை... கழித்து விட வேண்டிய நிலைமை.  இது மாதக் கணக்கில் தொடர்வதால் நிறுவனத்துக்கும் இழப்பு.:unsure:

பின்பு... இதற்கு காரணமானவர் யார் என்று பார்த்தால், ஒரு  துருக்கி பெண்மணி. அவர் துருக்கிக்கு சுற்றுலா சென்று விட்டு வரும் போது.... அங்கு வறுத்த பூசணிக் கொட்டையை, கிலோ கணக்கில் வாங்கி வந்துள்ளார்.    அதனை உள்  சட்டைப் பையில்   கொஞ்சம் கொஞ்சமாக... வீட்டிலிருந்து, வேலை இடத்துக்கு கொண்டு வந்து, இடைக்கிடை உடைத்து சாப்பிட தொடங்கிய விடயம்... நிறுவனத்துக்கு, பல நூறு  லட்சங்கள் பெறுமதியான பண இழப்பின் பின் தான் தெரிய வந்தது, கவலையான விடயம். உப்புத் தடவிய, வறுத்த   பூசணிக் கொட்டையை உடைக்கும் போது...   நுண்ணிய ஒளிப் பதிவில் "ஸ்லோ மோஷன்" ல்  பார்த்தால்... ஒரு குண்டு வெடிப்பது மாதிரி, புகை மண்டலம் தோன்றும். சாதாரண கண்களுக்கு அது தெரியாது என்பதால்.... துருக்கி பெண்மணி, இதில் இருந்து என்ன வரப்போகுது என்று நினைத்து...  பூசணிக் கொட்டையை,  சாப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

மேலே காட்டப்  பட்ட பொருள் என்ன? என்று... முதலில் கூறுபவருக்கு  பச்சை  புள்ளி ஒன்று பரிசாக வழங்கப் படும்.  இந்தப் பொருள்... முன்பு உங்கள் வீட்டில் முன்பு இருந்தது. சிலவேளை... சில நாடுகளில் .... இப்போதும் இருக்கலாம். :)  

கணணித் திரை!

இது இலத்திரன் வீசும் கருவி போல உள்ளது!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

          The electron gun from a CRT computer monitor is about the size of a roll of quarters. It contains the heater, cathode, focusing anode and accelerating anode for three electron beams.

 

dreamstime_3178746.jpg

இது பழைய குழாய் வடிவ தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்படும் மின்னனு துப்பாக்கி(Cathode Ray Tube Gun - CRT Gun).. இதிலிருந்துதான் படங்களை திரையில் பிரதிபடுத்த தேவையான மூன்று(சிவப்பு, ஊதா, பச்சை) வண்ணக் கதிர்வீச்சு மின் இழைகளும், கதிர் வழிகளை ஒழுங்குபடுத்தி கூர்மை படுத்தவும், தேவையான மின் அளவில் ஒளியை பாய்ச்சவும் மின் தகடுகள் போன்ற அமைப்புகள் இக்குழாயின் ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. 

39 minutes ago, புங்கையூரன் said:

கணணித் திரை!

இது இலத்திரன் வீசும் கருவி போல உள்ளது!

புங்கை சொன்ன பதிலும் ஏறத்தாழ ஒன்று தான்..!

ஆனால் தமிழ்சிறி இணைத்த படமானது, தொலைக்காட்சிக் குழாயின்/கணணித் திரையின் ஒரு பகுதிதான்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

IMG_3752.jpg

 

இது சோனி(Sony) தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மின்னனு துப்பாக்கி.. நேசனல் பனாசோனிக்(National Panasonic) நிறுவனமும் இதே மாதிரி தொழிற்நுட்பத்தை தான் பயன்படுத்துகிறது.. ஒருவேளை தமிழ்சிறி இந்த தொழிற்சாலைகளுக்கு அறிமுகமானவராக இருக்கலாம்..! vil-cornes.gif

(கல்லூரில் பயிலும்போது, பகுதி நேரத்தில் பொழுது போக்கிற்காக தொலைக்காட்சி அசெம்ளிங் படித்ததினால் மிகச்சிறிது தெரியும்.. Course is very interesting to learn indeed!).

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, புங்கையூரன் said:

கணணித் திரை!

இது இலத்திரன் வீசும் கருவி போல உள்ளது!

புங்கையூரான்... அந்தக் கருவியின் உபயோகத்தை, உடனே கண்டு பிடித்ததற்கு பாராட்டுக்கள்.
இது  தொலைக் காட்சிக்கு பாவிக்கப் படுவது.  இந்தச் சிறிய பொருளை... எப்படி கண்டு பிடித்தீர்கள் என்று ஆச்சரியப்  பட்டேன். :) 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, ராசவன்னியன் said:

இது பழைய குழாய் வடிவ தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்படும் மின்னனு துப்பாக்கி(Cathode Ray Tube Gun - CRT Gun).. இதிலிருந்துதான் படங்களை திரையில் பிரதிபடுத்த தேவையான மூன்று(சிவப்பு, ஊதா, பச்சை) வண்ணக் கதிர்வீச்சு மின் இழைகளும், கதிர் வழிகளை ஒழுங்குபடுத்தி கூர்மை படுத்தவும், தேவையான மின் அளவில் ஒளியை பாய்ச்சவும் மின் தகடுகள் போன்ற அமைப்புகள் இக்குழாயின் ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. 

புங்கை சொன்ன பதிலும் ஏறத்தாழ ஒன்று தான்..!

ஆனால் தமிழ்சிறி இணைத்த படமானது, தொலைக்காட்சிக் குழாயின்/கணணித் திரையின் ஒரு பகுதிதான்..

மிக அருமை... ராஜவன்னியன். அழகிய தமிழில்...விளக்கமாக கூறியிருக்கின்றீர்கள். 
ஒரு சிறு திருத்தம்...  "திரையில் பிரதிபடுத்த தேவையான மூன்று (சிவப்பு, ஊதா, பச்சை) வண்ணங்கள் என்பதில் ஊதா  நிறம் வராது. சிவப்பு, நீலம், பச்சை நிறங்கள் மட்டுமே  தொலைக்காட்சி உள் பகுதியில்,   முன்திரையில் பதியப்  பட்டிருக்கும். 

இந்த மூன்று நிறங்களில் இருந்து தான்....  திரையில் நாம் காணும் நிறங்கள் எல்லாம் வருகின்றன.  மேலே உள்ள மூன்று நிறங்களுக்கும்,  சம அளவில் ஒளியை பாய்ச்சம் போது...  வெள்ளை நிறம் வரும். இது ஒளிக்கற்றைக்கு மட்டுமே பொருந்தும்.  சிவப்பு, நீலம், பச்சை நிறமுள்ள "பெயின்ற் ரின்னை".. சம அளவில் கலந்தால் வெள்ளை வாராது.  திரையில்... கறுப்பு கால் சட்டையுடன்  ஒருவர் வந்தால்... அவரின் கால் சட்டைப்  பகுதிக்கு  ஒளி எதுவும் பாய்ச்சப் படாமல் இருக்கும் போது.... இருட்டாக இருப்பதால்... எமது கண் அதனை கறுப்பாக  உள் வாங்கிக் கொள்கின்றது. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

மிக அருமை... ராஜவன்னியன். அழகிய தமிழில்...விளக்கமாக கூறியிருக்கின்றீர்கள். 
ஒரு சிறு திருத்தம்...  "திரையில் பிரதிபடுத்த தேவையான மூன்று (சிவப்பு, ஊதா, பச்சை) வண்ணங்கள் என்பதில் ஊதா  நிறம் வராது. சிவப்பு, நீலம், பச்சை நிறங்கள் மட்டுமே  தொலைக்காட்சி உள் பகுதியில்,   முன்திரையில் பதியப்  பட்டிருக்கும். 

இந்த மூன்று நிறங்களில் இருந்து தான்....  திரையில் நாம் காணும் நிறங்கள் எல்லாம் வருகின்றன.  மேலே உள்ள மூன்று நிறங்களுக்கும்,  சம அளவில் ஒளியை பாய்ச்சம் போது...  வெள்ளை நிறம் வரும். இது ஒளிக்கற்றைக்கு மட்டுமே பொருந்தும். ..

நன்றி தமிழ்சிறி..!

மன்னிக்கவும்.. நான் ஆங்கிலத்திலுள்ள ப்ளூ(Blue) என்பதற்கு தமிழில் ஊதா என நினைத்துவிட்டேன்.. (எல்லாம் 'ஊதாக் கலரு ரிப்பன்..' பாடலின் நினைவுதான்..! )

தொலைக்காட்சி தொழிற்நுட்பத்தில்(RGB Model)  பிரதான வண்ணங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவை வெள்ளை நிறத்தை திரையில் தோற்றுவிக்க வேண்டுமானால், அவற்றின் மின்னழுத்த அளவு 3:6:1 (சிவப்பு:பச்சை:நீலம்)என்ற விகிதத்தில் கலந்திருந்தால் மட்டுமே திரையில் வெள்ளை நிறம் தோன்றும், சம அளவில் அல்ல என்று படித்த நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறி உங்கள் தொடர் அருமையாக போகுது.நானும் யேரமனியில் ஆரம்ப காலத்தில் மலர்கள் வளர்க்கும் தோட்டத்தி ல் துருக்கிப் பெண்களுடன் வேலை செய்திருக்கிறேன்.நானும் முதலாளியும் தான் ஆண்கள்.மற்றவர்கள் அனைவரும் துருக்கி குட்டிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, சுவைப்பிரியன் said:

சிறி உங்கள் தொடர் அருமையாக போகுது.நானும் யேரமனியில் ஆரம்ப காலத்தில் மலர்கள் வளர்க்கும் தோட்டத்தி ல் துருக்கிப் பெண்களுடன் வேலை செய்திருக்கிறேன்.நானும் முதலாளியும் தான் ஆண்கள்.மற்றவர்கள் அனைவரும் துருக்கி குட்டிகள்.

இந்தா....இந்தா ஒரு பூனைக்குட்டி வெளியிலை வந்துட்டுது :grin: 

Bildergebnis für cat gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/03/2017 at 7:39 PM, தமிழ் சிறி said:

1745´ம் ஆண்டிலிருந்து  வரும்... முதல்  மூன்று தலைமுறை பெயர்களை  எழுதியுள்ளேன்.
1)  சோமநாத முதலியார். 
2)  பூலோக நாயகம் முதலியார், சுந்தர், வாரித்தம்பி.
3)  காசிநாதர்,  முதலி நாச்சன், அம்மணிப்பிள்ளை, கதிர்காமர், ராஜநாயகம், பூலோகசிங்கம் முதலியார்,  சபாபதி, தெய்வானைப்பிள்ளை, முருகேசுப்பிள்ளை, சின்னத்தங்கம், பராசக்தி பிள்ளை, அன்னம்மா, செல்லமுத்து, சின்னாட்சி பிள்ளை, தங்கமுத்து... என்று வருகின்றது.

ஜீவன்சிவா....  உங்கள்  முன்னோர்களின் மலையாளப் பெயர்களை அறிய ஆவலாக உள்ளது.
அத்துடன் மலையாள மொழி தமிழில் இருந்து தானே வந்தது. அதற்கு 700 வருட வயதுதான் என்று எங்கோ வாசித்தேன். சரியாக தெரியவில்லை.

தான்

ராஜராஜ  கொம்பந்த முதலியாருடைய ஒப்பாட்டன்  என்று எனது தகப்பனார் சொல்வார்.

காசிநாதர் - முதலி நாச்சியார்

விசவலிங்கம் - தெய்வானைப்பிள்ளை

அனது தகப்பனாருடைய இரு சகோதரிகள்

தங்கமுத்து - சின்னாட்சி பிள்ளை

பரம்பரை அப்படியே பொருந்துதே..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2015 இல் நியூயோர்க் நேபால் கொழும்பு போகும் போது துருக்கி விமானத்தில் மனைவியும் நானும் பயணித்தோம்.

சாப்பாட்டில் இருந்து விமான சிப்பந்திகளின் சேவை பிரமாதமாக இருந்தது.சாப்பாடுகளும் நன்றாகவே இருந்தன.மது வகைகள் கூட கேட்பவர்களுக்கு தாராளமாகவே வழங்கிக் கொண்டிருந்தனர். 

துருக்கியில் இருந்து நேபால் போகும் போது எதிர் பாராத விதமாக ( அமெரிக்க பாஸ்போட் என்றோ தெரியவில்லை) முதலாம் வகுப்புக்கு தாமாகவே புதிய போடிங் பாசை தந்தார்கள்.என்னடா இது எதிர் பாராத அதிஸ்டம் என்று எண்ணி பயணித்தோம்.

இதுவே முதல்முறை என்றபடியால் ரொம்பவும் மனதுக்கு இதமாக இருந்தது.வீட்டில் கட்டிலில் படுப்பது போலவே இருந்தது.சேவிசும் அந்த மாதிரி.சும்மா கண்ணை முழித்தா என்ன சார் வேணும் என்று பக்கத்தில் ஆள் வந்து நிற்கும்.

அந்த நேரம் விலையும் ரொம்ப மலிவாகவே கிடைத்தது.இப்போதும் என்ன விலை போகுது என்று தட்டிப் பார்த்தா மற்றைய விமானங்களை விட 200 டொலர் கூ டுதலாகவே போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

இந்தா....இந்தா ஒரு பூனைக்குட்டி வெளியிலை வந்துட்டுது :grin: 

Bildergebnis für cat gif

இந்த குட்டி எப்பவும் வெளியில் தான் நிக்குது.பிரச்சனை என்னவென்டால் நேரம் மட்டு என்றாதால் கத்தாமல் நிக்குது.:)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎25‎.‎03‎.‎2017 at 3:58 PM, சுவைப்பிரியன் said:

சிறி உங்கள் தொடர் அருமையாக போகுது.நானும் யேரமனியில் ஆரம்ப காலத்தில் மலர்கள் வளர்க்கும் தோட்டத்தி ல் துருக்கிப் பெண்களுடன் வேலை செய்திருக்கிறேன்.நானும் முதலாளியும் தான் ஆண்கள்.மற்றவர்கள் அனைவரும் துருக்கி குட்டிகள்.

31.12.2015 ல் எடுத்த புள்ளிவிபரப்படி யேர்மனியின் கீழ்வரும் மாநிலங்களில் வாழ்ந்துவரும் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை. இவற்றுள் துருக்கிக் குட்டிகளைக் கணக்கெடுப்பது கடினமானது. ஏனெனில் குட்டிகள் வளருமுன்னரே கட்டிவைத்து மூடிவிடுவார்கள்.

 சுவைப்பியனுக்கு குட்டிகளைக் காணக்கிடைத்தது, குருசந்திர யோகம்.

Nordrhein-Westfalen                   5.055,31

Baden-Württemberg                    2.620,94

Bayern                                             1.992,15

Hessen                                             1.577,66

Berlin                                                1.086,03

Niedersachsen                                909,14

Rheinland-Pfalz                               592,84

Hamburg                                           468,96

Schleswig-Holstein                         282,26

Bremen                                             244,30

 

புள்ளி விபர ஆதாரம்: Ludwigsburger Kreis Zeitung

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.