Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறை முஸ்லிம்களின் சனத்தொகையை குறைக்க சதி – மயிர்க் கூச்செறியும் சில உண்மைகள் (அட்டவணை இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறிப்­பிட்ட மக்கள் குழு­மத்தின் அல்­லது சமூ­கத்தின் சனத்­தொகை செறிவைக் குறைப்­ப­தற்கு ஒன்றில் இனச் சுத்­தி­க­ரிப்பை அல்­லது சட்­ட­வி­ரோதக் குடி­யேற்­றத்தை ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் ஒரு கரு­வி­யாகப் பயன்­ப­டுத்­து­வது அவர்­களின் நீண்ட கால அர­சியல் தந்­தி­ரோ­பா­ய­மாகும். அதன் மூலம் குறிப்­பிட்ட சமூ­கத்தின் நிலத்­தொ­டர்ச்­சியை இல்­லா­­தொ­ழித்து அவர்­க­ளுடன் பேரி­னத்தை கலப்­பதன் மூலம் சனத்­தொகையை ஐதாக்கி, அர­சியல் பலத்தை சிதைப்­பது ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் உள்­நோக்­க­மாகும்.

இரண்டாம் உலக யுத்­தத்தின் பின்னர் உலகின் பல நாடு­களில் இந்தத் தந்­தி­ரத்தை ஏகா­தி­பத்­திய அர­சுகள் மிக இலாவ­க­மாகக் கையாண்­டுள்­ளன. அயர்­லாந்தில் பிரிட்டன் மேற்­கொண்ட குடி­யேற்­றங்­களும் போல்­கனில் சோவியத் யூனி­ய­னினால் பொஸ்­னியா போன்ற முஸ்லிம் நா­டு­களில் மேற்கொள்ளப்பட்ட சட்­ட­வி­ரோதக் குடி­யேற்­றங்­களும் இதற்குத் தெளி­வான உதா­ர­ணங்கள். கால­னித்­து­வத்­தி­லி­ருந்து விடு­பட்ட இலங்­கையில் சுதந்­தி­ரத்­திற்குப் பிந்­திய முதல் மூன்று தசாப்­தங்­க­ளிலும் இலங்கை பேரி­ன­வாத அர­சுகள் வடக்கு, கிழக்கில் இது­போன்ற குடி­யேற்­றத்­திட்­டங்­களை திட்­ட­மிட்டு மேற்­கொண்டு வந்­துள்­ளன. அதன் மூலம் சிறு­பான்மை மக்­களின் அர­சியல் பலமும் பேரம் பேசும் ஆற்­றலும் மழுங்கடிக்­கப்­பட்­டது.

நிலம் சார்ந்த பெரும் சமூக நெருக்­க­டி­யொன்­றுக்குள் அவர்­களைத் தள்­ளி­யது. கிழக்கில் முஸ்­லிம்­களின் சமூக பலத்­தையும் அர­சியல் சக்­தி­யையும் ­ம­ழுங்கச் செய்­வதில் அங்கு மேற்­கொள்­ளப்­பட்ட சிங்­களக் குடி­யே­ற்­றங்கள் முக்­கிய பங்­காற்­று­கின்­றன. கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள மூன்று மாவட்­டங்­க­ளான திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை என்­ப­வற்றின் பரப்­ப­ளவில் பெரி­யது அம்­பாறை. இலங்­கையின் 25 மாவட்­டங்­களில் நான்­கா­வது இடத்தில் அது உள்­ளது. ஏழு மாவட்­டங்­களை அம்­பாறை மாவட்டம் எல்­லை­க­ளாகக் கொண்­டி­ருப்­பது அதன் பரந்­து­பட்ட நிலப்­ப­ரப்­புக்கும் சமச்­சீ­ரற்ற தன்­மைக்கும் தெளி­வான ஆதா­ர­மாகும். மொன­ரா­கலை, ஹம்­பாந்­தோட்டை, பொலன்­ன­றுவை, மாத்­தளை, கண்டி, பதுளை, மட்­டக்­க­ளப்பு ஆகிய ஏழு மாவட்­டங்­களை அது உள்­ள­டக்­கி­யுள்­ளது.

திரு­கோ­ண­மலை 2226 சதுர கி.மீ பரப்­பையும், மட்­டக்­க­ளப்பு 2633 சதுர கி.மீ. பரப்­பையும் கொண்­டி­ருக்கும் அதே வேளை அம்­பா­றையின் பரப்பு 4415 சதுர கி.மீ. ஆகும். 1940 களுக்குப் பின்னர் இலங்­கையில் அப்­போது நடை­மு­றை­யி­லி­ருந்த dro பிரி­வுகள் அர­சாங்க அதிபர் பிரி­வு­க­ளாக மாற்­றப்­பட்­டன. முஸ்லிம் பிர­தேச சபைகள் பெரும்­பாலும் முஸ்லிம் குடி­யி­ருப்புப் பிரி­வு­க­ளாக மட்­டுமே மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. பெரும் பகுதி அர­சாங்க பூமியும் நீர் நிலை­களும் சிங்­க­ள-­, தமிழ் பெரும்­பான்மை கொண்ட பிர­தேச செய­லக நிர்­வா­கத்தின் கீழ் கொண்டு வரப்­பட்­டன.

முஸ்­லிம்­க­ளுக்கு சட்­ட­பூர்­வ­மாக அவ்­வு­ரிமை மறுக்­கப்­பட்­டது. நிர்­வாக அதி­கா­ரிகள் அனை­வரும் சிங்­க­ள­வர்­க­ளாக இருந்­த­தனால் தாம் விரும்பும் இடங்­களில் சிங்­கள மக்­களைக் குடி­யேற்­றவும் தற்­து­ணிவு மூலம் அவர்­களுக்கு காணி உரி­மை­களை வழங்­கவும் சிங்கள அதி­கா­ரி­க­ளுக்கு முடி­யு­மாக இருந்­தன. மாறி மாறி வந்த அர­சாங்­கங்­களின் பிராந்­திய முக­வர்­க­ளாக செயற்­பட்ட அர­சாங்க அதி­பர்­க­ளுக்கு உள்ள காணி பகிர்வு தொடர்­பான தற்­று­ணிவு அதி­காரம் தென்­னி­லங்கைச் சிங்­கள மக்கள் அநேகர் வடக்கு, கிழக்கில் குடி­யேற்­றப்­ப­டு­வ­தற்கு ஏதுவாய் இருந்­துள்­ளது. இன்னும் இருந்து வரு­கின்­றது. அம்­பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச செய­லாளர் பிரி­வு­களில் வாழும் முஸ்­லிம்­களின் எண்­ணிக்­கையும் அதற்­கென உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஒதுக்­கப்­பட்டு பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்ள காணி­களின் பரப்­பையும் சிங்­கள அர­சாங்க அதிபர் பிரிவு­களில் வாழும் சனத்தொகை­யுடன் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஒதுக்­கப்­பட்டு, பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்ள மயிர்க் கூச்­செ­றியும் சில உண்­மைகள் நமக்கும் துலங்கும்.

இலங்கையில் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஒரே மாவட்டம் அம்­பாறை. 282,484 முஸ்­லிம்கள் அங்கு வாழ்­கின்­றனர். இது மாவட்­டத்தின் மொத்த சனத்­தொ­கையில் 43.595% ஆகும். சிங்­க­ள­வர்­களின் சனத்­தொகை 251018 ஆகும். கிட்­டிய எதிர்­கா­லத்தில் இது ஒரு பாரிய நெரு­டிக்­க­டியை ஏற்­ப­டுத்­தா­வி­டினும் எதிர்­வரும் அரை நூற்­றாண்­டுக்குப் பின்­ன­ரேனும் அதன் மோச­மான விளை­வு­களை முஸ்லிம் சமூகம் அனு­ப­விக்க நேரும். கொழும்பு மாவட்டம் இதற்கு தெட்டத் தெளி­வான உதா­ர­ண­மாகும். சனத்­தொகை விதா­சா­ரத்­திற்கு ஏற்ப நிலம் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதே இங்­குள்ள அடிப்­படைப் பிரச்­சி­னை­யாகும். அம்­பாறை மாவட்­டத்தின் பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள காணி­களின் அளவைக் கணிப்பிட்டால் காணிப் பகிர்வில் நிகழ்ந்­துள்ள பாரிய இனப்­பா­கு­பாட்­டையும் அநீ­தி­யையும் தெளி­வாகப் புரிந்துகொள்­ளலாம். இப்படி ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் நாம் ஒப்பிட்டுச் சொல்லலாம். இங்குள்ள அட்டவணையிலிருந்து இவ்வுண்மைமை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். -

VVD200417-PG08-R3-1493396668.jpg?resize=400%2C374

 

Rauff Zain விடிவெள்ளி

AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=127135 .

 

  • கருத்துக்கள உறவுகள்

மயிர் கூச்செறியும்.. பிறகு சாய்ந்து ஒடுங்கிவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் சிங்களவ்ர்களுடன் இணங்கி போனால் நல்லம் அதே போன்று தமிழர்களும் சிங்களவ்ருடன் இணங்கி போகவேண்டும்

2 hours ago, colomban said:

 கலப்­பதன் மூலம் சனத்­தொகையை ஐதாக்கி, அர­சியல் பலத்தை சிதைப்­பது ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் உள்­நோக்­க­மாகும்.

"எகாதிபத்தியம்" இதை மதவாதிகள் செய்தால் ஆத்மீகம்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

இலங்கையில் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஒரே மாவட்டம் அம்­பாறை. 282,484 முஸ்­லிம்கள் அங்கு வாழ்­கின்­றனர். இது மாவட்­டத்தின் மொத்த சனத்­தொ­கையில் 43.595% ஆகும். சிங்­க­ள­வர்­களின் சனத்­தொகை 251018 ஆகும். கிட்­டிய எதிர்­கா­லத்தில் இது ஒரு பாரிய நெரு­டிக்­க­டியை ஏற்­ப­டுத்­தா­வி­டினும் எதிர்­வரும் அரை நூற்­றாண்­டுக்குப் பின்­ன­ரேனும் அதன் மோச­மான விளை­வு­களை முஸ்லிம் சமூகம் அனு­ப­விக்க நேரும். கொழும்பு மாவட்டம் இதற்கு தெட்டத் தெளி­வான உதா­ர­ண­மாகும். சனத்­தொகை விதா­சா­ரத்­திற்கு ஏற்ப நிலம் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதே இங்­குள்ள அடிப்­படைப் பிரச்­சி­னை­யாகும். அம்­பாறை மாவட்­டத்தின் பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள காணி­களின் அளவைக் கணிப்பிட்டால் காணிப் பகிர்வில் நிகழ்ந்­துள்ள பாரிய இனப்­பா­கு­பாட்­டையும் அநீ­தி­யையும் தெளி­வாகப் புரிந்துகொள்­ளலாம்

எங்களுக்கு சிங்களவனுடன் சீவிப்பதில்  பிரட்சினையில்லை .....உங்களுடன் ஒப்பிட்டால் அவன் பல மடங்கு திறம்
நீங்கள் தமிழனுக்கு  செய்ததை சிங்களவன் உங்களுக்கு  செய்ய மயிர்கூச்செறியுது போல ....
உங்களுக்கு வந்தால் இரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்டினி 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, colomban said:

இலங்கையில் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஒரே மாவட்டம் அம்­பாறை. 282,484 முஸ்­லிம்கள் அங்கு வாழ்­கின்­றனர். இது மாவட்­டத்தின் மொத்த சனத்­தொ­கையில் 43.595% ஆகும். சிங்­க­ள­வர்­களின் சனத்­தொகை 251018 ஆகும்.

அம்பாறையில் தமிழர்களைக் காணவில்லையே....! :(

 

VVD200417-PG08-R3-1493396668.jpg?resize=400%2C374

அட்டவணையிலும் கல்முனை (தமிழ்) பிரிவுக்கு காணியையே காணவில்லையே.... !! :shocked: 

தமிழர்களுக்கு அங்கு என்ன நடந்தது.....? மண்ணுக்குள் அனுப்பப் பட்டனரா.? அல்லது சுண்ணத்துக்குள் அரவணைக்கப் பட்டனரா.... ?? :(:shocked:

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Paanch said:

 

கல்முனை காணிகள் விற்கப்பட்டு வருவதால் இன்னும் கணக்கெடுக்க வில்லை போல அக்கினிக்கு உங்களுக்கு தெரியுமா என்ன :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, முனிவர் ஜீ said:

கல்முனை காணிகள் விற்கப்பட்டு வருவதால் இன்னும் கணக்கெடுக்க வில்லை போல அக்கினிக்கு உங்களுக்கு தெரியுமா என்ன :rolleyes:

கல்முனை காணிகள் விற்கப்படும் முறைபற்றி எனக்குத் தெரியாது. ஒருவேளை கோழி, ஆடு, மாடு வெட்டப்படுவதுபோல் இருக்கலாம். :(
 
கலால் என்று இசுலாமிய முறைப்படி கோழி, ஆடு, மாடு வெட்டப்படுவதை அவர்கள் மத்தியில் நான் வாழ்ந்தபோது அறிந்துள்ளேன். :rolleyes:

அக்கினியைப்பற்றி எனக்குத் தெரியாது சிலவேளை அவர் யட்கா என்று இந்து முறைப்படி வெட்டப்படுவதை அறிந்திருக்கலாம். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

கல்முனை காணிகள் விற்கப்பட்டு வருவதால் இன்னும் கணக்கெடுக்க வில்லை போல அக்கினிக்கு உங்களுக்கு தெரியுமா என்ன :rolleyes:

முனி 
தமிழர்களின் காணிகள் கல்முனைப்பகுதியில் தமிழ் பினாமிகளினாலேயே முஸ்லிம்களின் கைகளுக்கு சென்றுகொண்டிருக்கிறது ..

இப்போதைக்கு கணக்கு போட முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

முனி 
தமிழர்களின் காணிகள் கல்முனைப்பகுதியில் தமிழ் பினாமிகளினாலேயே முஸ்லிம்களின் கைகளுக்கு சென்றுகொண்டிருக்கிறது ..

இப்போதைக்கு கணக்கு போட முடியாது 

அது உன்மைதானே நானும் அறிந்து கொண்டுதான் இருக்கிறன் 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பரிசோதனைக்கு லன்காவின் பிறப்பு வீத அளவீடுகள் 2050 களில் அதாவது இன்றில் இருந்து 33வருடங்கள் கழிந்த நிலையில் யார் என்று பார்த்த போது இவர்கள் தான் முன்னுக்கு நிற்கிறார்கள் . அப்ப பவுத்த இலங்கை முஸ்லிம் இலங்கையாகிடும் இதே நிலைமையில் போனால் தமிழரின் பெரும்பான்மை நிலங்கள் பறி போயிருக்கும் அதே நிலைதான் சிங்களத்துக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-4-28 at 9:23 PM, colomban said:

இலங்கையில் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஒரே மாவட்டம் அம்­பாறை. 282,484 முஸ்­லிம்கள் அங்கு வாழ்­கின்­றனர். இது மாவட்­டத்தின் மொத்த சனத்­தொ­கையில் 43.595% ஆகும். சிங்­க­ள­வர்­களின் சனத்­தொகை 251018 ஆகும். கிட்­டிய எதிர்­கா­லத்தில் இது ஒரு பாரிய நெரு­டிக்­க­டியை ஏற்­ப­டுத்­தா­வி­டினும் எதிர்­வரும் அரை நூற்­றாண்­டுக்குப் பின்­ன­ரேனும் அதன் மோச­மான விளை­வு­களை முஸ்லிம் சமூகம் அனு­ப­விக்க நேரும். 

 


'இததானப்பா, அவனும் சொல்றான்' என்ற வடிவேலு பேமஸ் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

அதாவது முஸ்லிம்களின் இன விகிதாசார பெருக்கம் குறித்து தானே ஞானசேர சேரர் கவலை படுகிறார். சிங்களவரின் இருப்புக்கே உலை வைக்குமளவுக்கு பெருகிறார்கள் என்கிறார்.

அட நம்மளை விடுங்க, நமக்கு, கனடா இருக்குது, ஐரோப்பா, அவுஸ், அமெரிக்கா இருக்குது, கிளம்பி போய்கிடடே இருப்போமே. ஆனால் இந்த சிங்களவர்களை நினைக்க மயிர் கூச்செரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:


'இததானப்பா, அவனும் சொல்றான்' என்ற வடிவேலு பேமஸ் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

அதாவது முஸ்லிம்களின் இன விகிதாசார பெருக்கம் குறித்து தானே ஞானசேர சேரர் கவலை படுகிறார். சிங்களவரின் இருப்புக்கே உலை வைக்குமளவுக்கு பெருகிறார்கள் என்கிறார்.

அட நம்மளை விடுங்க, நமக்கு, கனடா இருக்குது, ஐரோப்பா, அவுஸ், அமெரிக்கா இருக்குது, கிளம்பி போய்கிடடே இருப்போமே. ஆனால் இந்த சிங்களவர்களை நினைக்க மயிர் கூச்செரியுது.

அது தான் அவங்கள் அபே ரட்ட என்று சொல்கிறது  நாதாtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

அது தான் அவங்கள் அபே ரட்ட என்று சொல்கிறது  நாதாtw_blush:

பேசாம, புத்தர் இந்து, கிருஷ்ணரின் அவதாரம்... எங்கண்ட ஆள் தான். என்று சொல்லி கொண்டே புழைப்பை பார்க்க வேண்டியது தான் முனிவர்.

நம்ம பொயட் ஐயாவை புடிச்சு, இரண்டு தேவாரக் கவிதைகள் புத்தருக்கு போட்டு வாங்கிக்கிரனும்.

சிங்களவர்களிலும் பார்க்க, புத்தரை கொண்டாடினா, விசயம் வெட்டி ஆடின மாதிரி தான்... சூதனமா நடந்துகொள்ளணும், முனிவர்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பானுக்கு http://www.akuranatoday.com/news/?p  எனும்  தளத்தில் இருந்து செய்திகளை இணைக்கும் போது தான் மயிர்க்கூச்செறிகிறது போல.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-4-30 at 7:28 PM, Nathamuni said:

பேசாம, புத்தர் இந்து, கிருஷ்ணரின் அவதாரம்... எங்கண்ட ஆள் தான். என்று சொல்லி கொண்டே புழைப்பை பார்க்க வேண்டியது தான் முனிவர்.

நம்ம பொயட் ஐயாவை புடிச்சு, இரண்டு தேவாரக் கவிதைகள் புத்தருக்கு போட்டு வாங்கிக்கிரனும்.

சிங்களவர்களிலும் பார்க்க, புத்தரை கொண்டாடினா, விசயம் வெட்டி ஆடின மாதிரி தான்... சூதனமா நடந்துகொள்ளணும், முனிவர்.

எனது புனைபெயரை புத்த‌ன் என்று வைத்தமைக்கு காரணம் அதுதான்:10_wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

கொழும்பானுக்கு http://www.akuranatoday.com/news/?p  எனும்  தளத்தில் இருந்து செய்திகளை இணைக்கும் போது தான் மயிர்க்கூச்செறிகிறது போல.tw_blush:

 

:grin:

ஒரு பம்மலுக்கு தான் நுணா, நான் முஸ்லீமோ அல்லது அவர்களுக்கு சார்பனவனோ அல்ல.

நேற்று மகிந்த ஒர் மாவீரன் (?) என ஒர் கட்டுரையை இணைத்தேன். ஒரே தூக்காக தூக்கிவிட்டீர்கள்.

இங்கு இவர்கள் ம்யிர் கூச்செறிகின்றது என கூக்குரலிடுகின்றார்கள். , நேற்று மகிந்த ஒரு மயிரையும் புடுங்க முடியாதென்கிறான்.  

எப்படியே இப்படியான கட்டுரைகள் எங்கள் யாழ் உறவிகளை இரத்தம் கொதித்து, கருத்துக்கள் எழுத வைக்கின்றது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.