Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 3k
  • Views 276.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிமிடம் தமிழில் கதையுங்கள் - நாம் தமிழர் கட்சி..

 

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்னாரி சர்பத்.. ☺️

  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலை சர்ச்சை. சீமான் கருத்து... 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றி பிரபலங்கள்..!

பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்... இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்...         - சகாயம் ஐயா

சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்... சீமான் ஒரு சிறந்த போராளி.          - ரஜினிகாந்த்

நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்... ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி..             -நம்மாழ்வார்

கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்.. இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது....   சத்யராஜ்

சீமான் பேசியது தான் விஜய் மெர்சல் படத்தில் பேசினார் என்று கூறுவது தவறில்லை! சீமான் ஒரு போராளி மற்றும் என் நண்பர்! தமிழ்நாடு நல்ல தலைவனை தேடுகிறது அது சீமானாகவும் இருக்கலாம்       -எஸ்ஏ சந்திரசேகர்

தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்.... சீமானின் பேச்சை பரப்புங்கள்...            -பாரதிராஜா..

கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்.. தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்..        -நியூஸ்7தொலைக்காட்சி..

சீமான் முன் வைக்கும் ஆட்சி முறையே சிறந்தது - அப்துல் கலாம் உதவியாளர்.       -விஞ்ஞானி பொன்ராஜ் .

சீமானின் கல்வி திட்டமே சிறந்தது -      -கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

காலத்தின் தேவை.. சீமான்.. நாம் தமிழர் கட்சி.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

தொழிலாளர்களை நவீன கொத்தடிமையாய் நடத்தும் என்பீல்டு, யமஹா.. அரசு தீர்வு காண சீமான் வலியுறுத்தல்!

seemantwit-1538810274.jpg

சென்னை: நவீன கொத்தடிமையாய் நடத்தும் என்பீல்டு, யமஹா தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தமிழக அரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.என்பீல்டு தொழிற்சாலையில் 15 மாதங்களுக்கு மேலாகப் பணியாற்றிய 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தத்தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய மறுத்ததோடு, அவர்களை பணிநீக்கமும் செய்துள்ளது. மேலும், தொழிற்சங்கம் அமைத்ததற்காக இரு நிரந்தரப் பணியாளர்களை நீக்கம்செய்து உத்தரவிட்டிருக்கிறது.இதற்கெதிராக அணிதிரண்டு 6,000க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அதனை நிர்வாகம் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஆலையின் இந்த போக்கை கண்டித்து பாமக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நவீன கொத்தடிமை

இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரிலுள்ள சிறப்புப்பொருளாதார மண்டலத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள யமஹா, என்பீல்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு பணிசெய்யும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை நவீனக் கொத்தடிமைகளாய் நடத்தும் போக்கினைக் கண்டித்தத் தொழிலாளர்களின் அறவழிப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது போராட்ட நோக்கங்களும், அவர்கள் எழுப்புகிற கோரிக்கை முழக்கங்களும் மிகத் தார்மீகமானவை. மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித் தருவதாகக் கூறி அமைக்கப்பட்டு இந்நாட்டின் வரிச்சலுகைகளையும், இன்னபிற வசதிகளையும் மிக எளிதாகவும், மலிவாகவும் பெற்றுக் கொண்டு பெரும் இலாபத்தை ஈட்டிவரும் பன்னாட்டு தொழிற்சாலை நிர்வாகங்கள் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளையே மறுத்து அவர்களை கொத்தடிமையாய் நடத்தி வருவது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

நிர்வாகத்திற்கே வெளிச்சம்

ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யமஹா மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியா யமஹா மோட்டார்ஸ் 150 கோடி முதலீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 4,500க்கும் மேற்பட்டத் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள் எண்ணிக்கை என்பது வெறும் 807 மட்டும்தான். மற்றத் தொழிலாளர்கள் யாவரையும் ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களாக வைத்து இதுநாள்வரை காலங்கடத்திக் கொண்டு வருகிறது. இரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்து விடுவதாகக் கூறி அவர்களை வேலைக்கு நியமித்த நிர்வாகம், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும் முன்வரவில்லை. எந்தவித ஊதிய உயர்வையும் அளித்திடவுமில்லை. அவ்வூதிய உயர்வும் ஆண்டுக்கு 7,00 ரூபாய் உயர்த்திக் கொடுத்தாலே பெரிய காரியம் என்கிற அளவில்தான் இருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணைமுட்டி, பணவீக்கம் நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கிப்போடுகிற தற்காலச் சூழலில் இந்த 700 ரூபாய் ஊதிய உயர்வு எந்தவகையில் தொழிலாளர்களுக்குப் பயன்படும் என்பது ஆலை நிர்வாகத்திற்கே வெளிச்சம்.

ஆலை நிர்வாகம் முன்வரவில்லை

இவ்வாறு தொழிலாளர் நல உரிமைகள் நசுக்கப்படுவது மட்டுமல்லாமல் தொடர் அடக்குமுறைகள் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்டு மனித உரிமை மீறல்களும் நடக்கின்றன. இவற்றிற்கெதிராகத்தான் அவ்வாலைத் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்பீல்டு தொழிற்சாலையில் 15 மாதங்களுக்கு மேலாகப் பணியாற்றிய 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தத்தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய மறுத்ததோடு, அவர்களை பணிநீக்கமும் செய்துள்ளது. மேலும், தொழிற்சங்கம் அமைத்ததற்காக இரு நிரந்தரப் பணியாளர்களை நீக்கம்செய்து உத்தரவிட்டிருக்கிறது. இதற்கெதிராக அணிதிரண்டு 6,000க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தினைச் செய்துவருகின்றனர். ஆனால், இதுவரை எந்த தீர்வையும் முன்னெடுக்க ஆலை நிர்வாகம் முன்வரவில்லை.

வரம்பற்ற மனித உழைப்பு

தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கெதிராக இதேபோன்று 10,000 க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் அங்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவோம் எனக் கூறி கால்பதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுக்கிற அட்டைப்பூச்சிகளாக இருக்கின்றன. வரம்பற்ற மனித உழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நிர்வாகங்கள், உழைப்பாளர்களுக்குரிய அடிப்படை வசதிகளையோ, தார்மீக உரிமைகளையோ தர மறுத்து கொத்தடிமைகளாய் வைத்து அவர்களது இரத்தத்தை உறிஞ்சுகின்றன. அப்பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களையோ, விதிகளையோ துளியளவும் மதிப்பதில்லை. தங்களது கொள்ளை இலாபத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ள அந்நிறுவனங்கள், மண்ணின் மக்களை இன்னொரு காலனிய ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிற நிலைக்கு இட்டுச் செல்கின்றன.

தமிழக அரசு தலையிட வேண்டும்

ஆகவே, திருப்பெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் போராடிக் கொண்டிருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உடனடித் தீர்வைக் காண வழிவகைகளை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-urges-tamil-nadu-govt-solve-the-problem-yemaha-enfield/articlecontent-pf329887-331403.html

  • கருத்துக்கள உறவுகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால்  தமிழகம் போர்க்களமாக மாறும்.. சீமான் எச்சரிக்கை!

seeman345-1538814177.jpg

சென்னை: தமிழகத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறாவிட்டால் இதுவரை காணாத அளவுக்கு தமிழகம் போர்க்களமாக மாறும் என சீமான் எச்சரித்துள்ளார்

.தமிழகத்தில் 3 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 பகுதி மண்டலங்களின் பரப்பு 4099 சதுர கிலோ மீட்டர். இதில் 731 சதுர கிலோ மீட்டர் பொதுத்துறை நிறுவனத்திற்கும், மீதமுள்ள பரப்பு வேதாந்தா நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.இதற்காக, டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதானுடன் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இத்திட்டதை வாபஸ் பெறக்கோரி மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

அதிர்ச்சி ஆத்திரம்

இதுதொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் சுகாதாரமான வாழ்வினைக் கேள்விக்குறியாக்கி சுற்றுச்சூழல் மண்டலத்தைப் பாழ்படுத்திய வேதாந்தா நிறுவனத்திற்குத் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் தருகிறது.

ஓஎன்ஜிசி, வேதாந்தா

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, ஒ.என்.ஜி.சி. நிறுவனமும், வேதாந்தா நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் இரு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் ஒதுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், கமலாபுரம் உட்பட இரு இடங்கள் இதற்கெனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு இடத்தில் 1,794 ச.கி.மீ. பரப்பிலும், மற்றொரு இடத்தில் 2,574 ச.கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சைத்துரோகம்

இதே போல, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 731 ச.கி.மீ. பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எதுவும் காவிரிப்படுகையில் எடுக்க மாட்டோம் எனப் பாராளுமன்றத்தில் கூறிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்றைக்கு அவ்வாக்கை மீறி காவிரிப்படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித்திருப்பது தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த பச்சைத்துரோகம்.

அனுமதிக்க மாட்டோம்

தூத்துக்குடியில் 13 உயிர்களைப் பலிகொண்டு, பல இளைஞர்களை ஊனமாக்கி அவர்கள் வாழ்க்கையினையே

இழப்பதற்குக் காரணமாக இருந்த வேதாந்தா நிறுவனத்தை அம்மக்களின் மரண ஓலமும், இரத்தவாடையும் நெஞ்சைவிட்டு அகலாது ரணமாக உறுத்திக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழகத்திற்குள் அனுமதித்திருக்கும் மோடி அரசின் நயவஞ்சகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் களப்போராட்டங்களும், கருத்தியலும் தமிழகம் முழுக்க வீரியம்பெற்றிருக்கிற நிலையில் மீண்டும் அதனை அனுமதித்திருப்பது தமிழர்களின் தன்மான உணர்வை உரசிப்பார்க்கும் அதிகாரத்திமிராகும். அதனை எதன்பொருட்டும் இனமானத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம் என அறுதியிட்டுக் கூறுகிறேன்.

நாசகாரத் திட்டம்

உலகின் மிக நீண்ட சமவெளிப்பகுதியாக இருக்கிற காவிரிப்படுகையில் பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயம் நடைபெற்று வருவதாகத் தமிழர் இலக்கியங்களும், வரலாற்று ஆவணங்களும் தெரிவிக்கின்றன. அவையாவும் இம்மண்ணில் நிகழ்ந்தனவா என எள்ளி நகையாடும் அளவுக்குத் தற்போதைய தஞ்சைத் தரணியின் நிலை மாறியிருக்கிறது. கர்நாடக அரசின் வறட்டுப் பிடிவாதத்தாலும், மத்தியில் ஆண்ட அரசுகளின் பாரபட்சத்தாலும் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழர்களின் வாழ்வியலோடு இயைந்திருந்த காவிரியுடான தொடர்பு துண்டிக்கப்பட்டு, விவசாயம் செய்ய நீரற்று தற்கொலை செய்து சாகிற இழிவான நிலைக்குக் காவிரிப்படுகை விவசாயிகள் ஆளாகி நிற்கிறார்கள். கடந்தாண்டு மட்டும் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து, தற்போது ஒட்டுமொத்த விவசாயிகளும் செய்வதறியாது தவித்து நிற்கிற நிலையில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்த அறிவிப்பானது தமிழர்களின் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. தமிழர் நிலத்தைப் பாழ்படுத்தும் இந்நாசகாரத் திட்டத்தை எதன்பொருட்டும் அனுமதிக்க முடியாது.

போர்க்களமாக மாறும்

எனவே, மத்திய அரசானது தமிழர்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும். இதனைச் செய்யத்தவறும் பட்சத்தில் தமிழர் நிலவியல் மீதான இப்போருக்கு எதிராக இதுவரை காணாத அளவிற்குப் போர்க்களமாகத் தமிழகம் மாறும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-warns-withdraw-the-hydro-corban-project-from-tamilnad-331408.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

கேசவ நீதி .. ?

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி  நீங்க என்ன ஆளுங்க ?

 

  • கருத்துக்கள உறவுகள்

சிவனுக்கு தமிழ் தெரியாதா ?

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, people smiling, text

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.