Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்

Featured Replies

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்

துனீசியாவில் இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, கன்னிப்பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதற்காக, தங்கள் பிறப்புறுப்பின் கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்ட வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

குட்டை பாவாடையுடன் பெண்கள்படத்தின் காப்புரிமைAFP

யாஸ்மின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதட்டமாக காணப்படுகிறார். அவர் தன்னுடைய விரல் நகங்களை கடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய செல்பேசியை தொடர்ச்சியாக பார்த்துக் கொள்கிறார்.

"இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதை மோசடியாக கருதுகிறேன். உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

துனீசியாவில் தனியார் சிகிச்சை மையத்தில் மகளிர் மருத்துவ சிகிச்சையளிக்கும் நான்காம் மாடியில் அவர் இருக்கிறார். அவரை சுற்றியிருக்கும் ஊதா நிற காத்திருக்கும் அறையில், பிற பெண்கள் மருத்துவரை பார்க்க பொறுமையாகக் காத்திருக்கின்றனர்.

அறுவை சிகிச்சை மூலம் கன்னிப்படலத்தை மீண்டும் ஒட்டச்செய்யும், சிறியதொரு மருத்துவ சிகிச்சையான ஹேமன்நோபிளாஸ்டி செய்து கொள்வதற்கு வந்திருப்பதாக யாஸ்மின் பிபிசி செய்தியாரிடம் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மாதத்திற்குள், அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. 28 வயதான அவர், தான் கன்னிப்பெண் அல்ல என்பதை கணவர் கண்டுபிடிக்கலாம் என்று மிகவும் கவலையடைகிறார்.

பிறப்புறுப்பின் கன்னித் திரையை ஒட்டச்செய்து முந்தைய நிலையை அடையும் நோக்கில் வந்துள்ள இவர், எதிர்காலத்தில் எப்போதாவது உண்மை வெளிவரும் என்றும் பயப்படுகிறார்.

துனீசிய கடற்கரையில் அமர்ந்திருக்கும் பெண்கள்படத்தின் காப்புரிமைAFP

"என்றாவது ஒருநாள் என்னுடைய கணவரோடு உரையாடும்போது என்னை நானே காட்டிக்கொடுத்துவிடலாம் அல்லது என்னுடைய கணவர் என்னிடம் சந்தேகம் கொள்ளலாம்" என்கிறார் அவர்.

அழுத்தம்

சில இளம் பெண்கள் கன்னித்தன்மை இழந்தவர்கள் என்று கணவன்கள் சந்தேகப்பட்டதால், திருமணமான சில மாதங்களில் விவாகரத்து செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

முற்போக்கான குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்தவர்.

அவருடைய உண்மையான பாலுறவு வரலாற்றை அறிய வந்தால், அவருக்கு நிச்சயிக்கப்பட்டவர் திருமணத்தையே நிறுத்திவிடலாம் என்று அவர் அஞ்சுகிறார்.

துனீசிய பெண்கள் ஆண்களை விட வேறுபட்ட தரநிலைகளில் நடத்தப்படுகிறார்கள்” ராதௌவம் , பல்கலைக்கழக மாணவர்

"நான் ஒருவரை காதலித்தேன். அந்நேரத்தில், என்னுடைய சமூகத்தில் எவ்வளவு பெரிய அழுத்தமுள்ளது என்பதையும், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் நான் கற்பனை செய்யவில்லை" என்று ஆதங்கத்தை வெளியிடுகிறார் யாஸ்மின்.

"இப்போது எனக்கு பயமாக இருக்கிறது. என்னைத் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்டவரிடம் இதை நான் தெரிவித்தால், எங்களுடைய திருமணம் நிச்சயமாக ரத்தாகிவிடும்" என்று அவர் அங்கலாய்கிறார்.

ஏறக்குறைய 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 400 டாலர் (310யூரோ) யாஸ்மின் செலுத்த வேண்டும். தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் திருமணம் செய்ய இருப்பவருக்கு தெரியாமல் ரகசியமாக பல மாதங்கள் அவர் பணத்தை சேமிக்க வேண்டியிருந்தது.

தொழுகைபடத்தின் காப்புரிமைREUTERS

யாஸ்மினுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்பவர் ஒரு மகளிர் சிறப்பு மருத்துவர் ராசிட். சராசரியாக, வாரத்திற்கு இரண்டு கன்னித்திரையை மீண்டும் ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சைகளை இவர் மேற்கொண்டு வருகிறார்.

தங்களுடைய குடும்பத்திற்கும், உறவினருக்கும் அவமானத்தை கொண்டு வரும் என்பதால். தன்னுடைய வாடிக்கையாளரில் 99 சதவீதத்தினர் பயத்தால் அவரிடம் வருவதாக ராசிட் தெரிவிக்கிறார்.

உண்மையிலே தாங்கள் கன்னித்தன்மையோடு இல்லை என்பதை மறைக்க யாஸ்மினை போன்ற பலரும் முயல்கின்றனர்.

ஆனால், பெண்களின் கன்னித்திரை மாதவிடாய் காலத்தில் சுகாதார பட்டையை பயன்படுத்துவது போன்ற வேறு பல காரணங்களாலும் கிழிந்துபோக வாய்ப்புக்கள் உள்ளது,

இதனால், திருமணத்திற்கு முன்னரே இவர்கள் உடலுறவு கொண்டுள்ளனர் என்று தவறுதலாக குற்றுஞ்சாட்டப்படலாம் என்ற கவலையையும் பெண்களிடம் நிலவுகிறது.

துனீசிய பெண்கள்படத்தின் காப்புரிமைFETHI BELAID/AFP/GETTY IMAGES

"மகளிர் சிறப்பு மருத்துவர்கள் கிழிந்துபோன கன்னித்திரையை மீண்டும் ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்கின்றனர். இதில் விதிவிலக்கு ஒன்றுமில்லை" என்று கூறும் ராசிட், "சில மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை அளிப்பதில்லை. கன்னித்தன்மையை புனிதப்பொருளாக கருதுவோரின் கருத்துக்களை நான் ஏற்பதில்லை. எனவே, இந்த சிகிச்சையை வழங்கி வருகிறேன்” என்று தெரிவிக்கிறார்.

"இது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. சில மத கோட்பாடுகளுடனான, ஆண் ஆதிக்க சமூகத்தின் வெளிப்பாடு இது. நான் குறிப்பிடுவது போல இது ஆண் ஆதிக்கம்தான். இதற்கு எதிரான முழுப் போரை தொடருவேன்" என்று அவர் தெரிவிக்கிறார்.

"பாசாங்குத்தனம்"

வட ஆப்ரிக்காவில் பெண்களின் உரிமைகளில் சிறந்த நாடாக துனீசியா கருதப்படுகிறது. ஆனால், மதமும், பாரம்பரியமும் திருமணம் ஆகும்வரை இளம் பெண்கள் கன்னித்தன்மையுடன்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன.

மலரோடு பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண்கள் கன்னித்தன்மை இல்லாதவர்களாக இருப்பதை கண்டுபிடித்தால், விவாகரத்து பெற்றுகொள்ளும் சட்ட உரிமையும் துனீசிய சட்டத்தில் உள்ளது.

"வெளிப்படையான துனீசிய சமூகத்தில் இந்த விடயத்தில் மட்டும், நாம் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் பாங்சாங்குத்தனம் உடையவராக மாறிவிடுகிறோம்" என்று சமூகவியலாளர் சாமியா எல்லௌமி தெரிவிக்கிறார்.

"நவீன சமூகத்தில் வாழ்வதாக நாம் கூறிக்கொள்கிறோம். ஆனால், பெண்களின் பாலியல் மற்றும் சுதந்திரம் என்று வருகின்றபோது, அதிக நவீனத்துவம் இல்லை என்பதால் ஒரு வகையான பழமை வாய்ந்த சமூக பழமைவாதத்தை நியாயப்படுத்துவது கடினமாக உள்ளது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

"கன்னித்தன்மை மிக மிக முக்கியம்"

பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஹிச்செம்மை, பிபிசி செய்தியாளர் சந்தித்தார். 29 வயதாகும் இந்த மாணவர் அடுத்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளார். திருமணம் செய்துகொள்ளும் பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை முக்கியமாக கருதுகிறீர்களா? என்று பிபிசி செய்தியாளர் அவரிடம் கேட்டார்.

"என்னை பொறுத்தமட்டில் இது மிக மிக முக்கியம்" என்று அவர் தெரிவித்தார்.

தலையை மூடிய பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"திருமணத்திற்கு பிறகு அவர் கன்னித்தன்மையுடன் இல்லை என்று நான் அறிய வந்தால், அவரை நான் ஒருபோதும் நம்பமாட்டேன். அதனை நான் நம்பிக்கை துரோகமாக கருதுவேன். கன்னித்திரையை ஒட்டவைக்கும் அறுவை சிகிச்சைகளை நம்பவில்லை. அது சரியாக செயல்படும் என்று எண்ணவில்லை" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அவருக்கு அடுத்ததாக இருந்த இன்னொரு மாணவர் ராதௌவம் பேசுகையில், "துனீசிய பராம்பரியம் பெண்களுக்கு மிகவும் கடுமையானதாக உள்ளது" என்று தெரிவித்தார்.

"என்னைப் பொறுத்தமட்டில், இது முற்றிலும் பாசாங்குதனம்" என்று தெரிவித்த அவர், "திருமணத்திற்கு முன்னர் இளம் ஆண்கள் சுதந்திரமாக பாலியல் உறவு வைத்துகொள்ளலாம். அப்படியானால், அதனை இளம் பெண்கள் செய்யும்போது எவ்வாறு குறை சொல்ல முடியும்" என்று கேள்வி எழுப்புகிறார்.

http://www.bbc.com/tamil/global-40373629

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பட்டையால கிழியாதுப்பா, 

இதால வேணுமின்னா கிழியலாம்

IMG_4661.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

பட்டையால கிழியாதுப்பா, 

இதால வேணுமின்னா கிழியலாம்

IMG_4661.jpg

இதென்ன குச்சி மிட்டாயா?? மீரா :unsure: 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனி ஒருவன் said:

இதென்ன குச்சி மிட்டாயா?? மீரா :unsure: 

முனி இது தான் ஏவுகனைப் பட்டம்.:unsure:இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்.அறிவாழிகளுக்கு எப்பவும் ஆபத்து.tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, நவீனன் said:

ஒரு காலத்தில் தமிழ் பிபிசி தரம் வாய்ந்த செய்திகளையே மக்களுக்கு வழங்கியது.

இது உலகதமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

ஆனால் இன்று கன்னித்திரையை மூடி மறைக்கும் விடயம் கூட தமிழ் பிபிசிக்கு தலைப்பு செய்தி.
கேவலம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை போல .......யோனி பொருத்தம் பார்த்து 
கலியாணம் கட்டினால் என்ன செய்வினம் ? 

டாக்குத்தர்மார் என்னத்தை பொருத்தினாலும் 
ஐயருக்கு குறிப்பு பார்க்கும்போது தெரியும்தானே ?
எது பொருந்தும் என்று ...........

(நாங்கள் கரை சேரும் மட்டும் இப்பிடி ஏதாவது புரளியை கிளப்பி 
சமூகத்தை ஒரு பயத்தில வைச்சிருக்கோணும்) 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/23/2017 at 11:51 AM, தனி ஒருவன் said:

இதென்ன குச்சி மிட்டாயா?? மீரா :unsure: 

உதென்ன.. கலர் கலரா.. இருக்கு.. சொக்லேட் பாக்ஸோ என்று நானும் ஒரு காலத்தில் பார்த்து ஏமாந்தனான். அப்புறம் தான் தெரிஞ்சுது.. உதன் பின்னால் உள்ள சமாச்சாரம். 

ஊரில.. முன்னர் பாட்டரி.. கொண்டு வர சிங்கள அரசு தடை போட்டிருந்த போது பலர் பாட்டரியை.. உப்படி செருகித்தானாம் கொண்டு வாறவை. 

அப்ப அவைட கன்னித்தன்மை...??!

இப்ப உப்படியான வழிமுறைகள் எல்லாம் இருப்பதால்.. கன்னித்தன்மையை பழைய முறைப்படி சோதிக்க ஏலாதுப்பா. எதையாவது சொல்லி சமாளிச்சிடுவாளவ. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொக்காமக்கா,

எதை வச்சு காசு பார்கிறார்கள் உந்த டாக்குதர்மார்கள்.  

உந்த மாதிரி, ஜில்மாற், தில்லாலங்கடி வேலைக்குப் போறது பசைப்பாட்டிகள் தான்.

வேறு ஒரு பசைப்பாட்டியின் குடும்பத்துள், குத்துவிளக்காக பூந்து ஏமாத்த வசதியா, ஒரு நாலு இளை தான் போடுவினம்.

பணம் மட்டும்..... மழை இல்லை, சினோவா கொட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

உதென்ன.. கலர் கலரா.. இருக்கு.. சொக்லேட் பாக்ஸோ என்று நானும் ஒரு காலத்தில் பார்த்து ஏமாந்தனான். அப்புறம் தான் தெரிஞ்சுது.. உதன் பின்னால் உள்ள சமாச்சாரம். 

ஊரில.. முன்னர் பாட்டரி.. கொண்டு வர சிங்கள அரசு தடை போட்டிருந்த போது பலர் பாட்டரியை.. உப்படி செருகித்தானாம் கொண்டு வாறவை. 

அப்ப அவைட கன்னித்தன்மை...??!

இப்ப உப்படியான வழிமுறைகள் எல்லாம் இருப்பதால்.. கன்னித்தன்மையை பழைய முறைப்படி சோதிக்க ஏலாதுப்பா. எதையாவது சொல்லி சமாளிச்சிடுவாளவ. tw_blush:

நெடுக்கர் பற்றரி கொண்டு வந்தவை குமர் பிள்ளைகளில்லை, களம் பல கண்டவை.......

  • கருத்துக்கள உறவுகள்
On 6/24/2017 at 0:38 AM, சுவைப்பிரியன் said:

முனி இது தான் ஏவுகனைப் பட்டம்.:unsure:இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்.அறிவாழிகளுக்கு எப்பவும் ஆபத்து.tw_angry:

 எனக்கு இது பற்றி தெரியாதுங்க சும்மா கேட்டன் ஆனாலும் வெளிநாட்டில் கடைகளில் கிடைக்குமாம் ஆனால் இங்கென்றால் ஒரு பலூன் ( கொண்டம் ) வாங்குவது கூட  முக்கி தக்கி தான் கேட்கணும் கடைக்காரனிடம் அவனும் ஏற இறங்கி பார்த்துப்புட்டுத்தான் தருவான் எங்கேயோ வேலி பாயப்போறதா நெனைச்சு :10_wink::10_wink::10_wink::10_wink:

On 6/24/2017 at 6:30 PM, nedukkalapoovan said:

இப்ப உப்படியான வழிமுறைகள் எல்லாம் இருப்பதால்.. கன்னித்தன்மையை பழைய முறைப்படி சோதிக்க ஏலாதுப்பா. எதையாவது சொல்லி சமாளிச்சிடுவாளவ.

யோவ்:10_wink::10_wink: கல்யாணம் காட்சி ஆன நீர் இதுக்க கிடந்து ஏன் மெனக்கெடுவான் சும்மா போவியா tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனி ஒருவன் said:

 எனக்கு இது பற்றி தெரியாதுங்க சும்மா கேட்டன் ஆனாலும் வெளிநாட்டில் கடைகளில் கிடைக்குமாம் ஆனால் இங்கென்றால் ஒரு பலூன் ( கொண்டம் ) வாங்குவது கூட  முக்கி தக்கி தான் கேட்கணும் கடைக்காரனிடம் அவனும் ஏற இறங்கி பார்த்துப்புட்டுத்தான் தருவான் எங்கேயோ வேலி பாயப்போறதா நெனைச்சு :10_wink::10_wink::10_wink::10_wink:

அட சிறிலங்கா இன்னும் வளரலையா? முன்னர் பார்மசியில் பெட்டையள் நிற்கும் போது கொண்டம் கேட்டு கடுப்பாக்கிறனாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

அட சிறிலங்கா இன்னும் வளரலையா? முன்னர் பார்மசியில் பெட்டையள் நிற்கும் போது கொண்டம் கேட்டு கடுப்பாக்கிறனாங்கள்.

இப்பவும் தான் ஆனால் கேசியர் ஆண்  அதான் அவரிட்ட போய்  உடன்படிக்கை கைச்சாத்து வைக்கிறமாதிரியும் அணுகுண்டு  ரகசியம் பேசுறமாதிரியும் பேசித்தான் வாங்க வேணும் என்று நம்மட பொடிஸ் எல்லாம் சொன்னானுகள்  அவனுகள் கல்யாணம்கட்டிய  பொடிஸ் அனுபவத்தை அப்படியே சொல்லுவாங்க நானும் கேட்டுக்கொண்டு இருக்கிறன் :10_wink::10_wink::10_wink::10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

முன்ன பின்ன தெரியாத இடம் .....
நோய் ஆபத்து என்றால்தான் உந்த காசு செலவழித்து 
குழந்தைகள் மாதிரி பலூன் ஊதி கொண்டு திரியவேணும்.

மற்றும்படி இயற்கையாகவே சிறந்த வழிகள் உண்டு 
மாதத்தில் 7 நாட்கள் மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 10 நாள்தான் 
அவதானம் தேவை மற்றைய படி ஓப்பன் விசா தான்.

அந்த 7 நாளையும் தவற விட்டு விட்டு மீதி நாளில் சைக்கிள் ஓடி கொண்டு 
பின்பு பிள்ளை இல்லை பிள்ளை இல்லை என்று சிலர் திரிகிறார்களோ என்று 
நான் நினைப்பது உண்டு. 

வயது 23க்கு உள்ளே இருவருக்கும் இருக்கு மட்டும் கொஞ்சம் கூடிய அவதானம் தேவை 
பெட்ரோல் மணக்கிற வாட்டர் பம் மாதிரி டக்கென்று பத்திடும். அதுக்கு பிறகு இந்தியன் வாகனம் 
மாதிரி கொஞ்ச நேரம் எடுத்து மிதிக்கவேணும்.(நேரம் எடுத்து மிதிக்கோணும் என்றால் ... இதை தவறாக புரிந்து விடலாம் 
சில முட்டைகள் வீரியம் காரணமாக 10-14 நாட்கள் கூட நல்ல நிலையில் இருக்க 
சாத்தியம் உண்டு. அதுபோல் ஆணின் உயிர் அணுவும் வீரியம் காரணமாக ஓடி திரியிறது 
முட்டை தேடுற விளையாட்டு கொஞ்சம் கூட இருக்கும் ....பின்பு அதன் வீரியம் 
சராசரி நிலைக்கு வந்துவிடும் )

இப்போ ஸ்மார்ட் போனில் ஆப்ஸ் இருக்கு தரைஇறக்கி வைத்திருந்தால் 
மாத சுழட்ச்சி தொடங்கும் நாளை அதில் போட்டால் ... மீதி நாட்கள் எல்லாவற்றையும் 
அதுவே கணித்து தரும் .........
எல்லோர் உடல் நிலையும் ஒரே மாதிரி இல்லை ஆதாலால் குறைந்த பட்ஷம் ஒரு 
மூன்று நாலு மாதம் சரியான கணிப்புக்கு எடுக்கும் ...... முதலில் 28 நாட்கள் கணக்கு வைத்து 
கணிக்கும் ......... பின்பு எப்போது வருகிறோதோ ... அந்த திகதிகளை நீங்கள் போட்டு கொண்டு வந்தால் 
ஒரு நாலு மாதத்தில் அது சரியாக கணிக்க தொடங்கி விடும்.

பெண்களுக்கு மிக வசதியான ஆப்ஸ் ...
காரணம் விடுமுறை ...... வாட்டர் ஸ்போர்ட்ஸ் என்று போகும் பெண்கள் 
அந்த காலண்டர் உதவியுடன் திகதிகளை நிர்ணயிக்கலாம். விடுமுறைக்கு 
திகதியை நிர்ணயித்து டிக்கெட் கோட்டல் எல்லாம் புக் பண்ணி விட்டு 
பின்பு பிளேன் ஏறும்போது .......... அட சனியன் இது வேற இதுக்குள்ள வந்து 
தொலைச்சுவிட்டதே என்று கடுப்பாக தேவை இல்லை. 
2018- 2019 ஆம்  ஆண்டு காலண்டரையே அண்ணளவாக பார்க்க முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்

வெவரம் தெரியாமத்தான் கேக்கிறேன்...

ஆமா, ஆம்பளப் பயலுகளுக்கு இந்தமாதரி ஆப்பரேசன் செய்து.... கன்னிப்பயல் ஆகேலாதோ?

ஊர் வழிய இருப்பினமே.... பரியாரிமார்..? 

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

வெவரம் தெரியாமத்தான் கேக்கிறேன்...

ஆமா, ஆம்பளப் பயலுகளுக்கு இந்தமாதரி ஆப்பரேசன் செய்து.... கன்னிப்பயல் ஆகேலாதோ?

ஊர் வழிய இருப்பினமே.... பரியாரிமார்..? 

:rolleyes:

அதற்கும்... பரிகாரம் உண்டு, நாதமுனி. 
"தாத்தா வீட்டு  வைத்தியம்"  இது. (எவ்வளவு நாளைக்கு... "பாட்டி வைத்தியம்"  என்று சொல்லிக் கொண்டிருப்பது.) :grin:

இஞ்சி, உள்ளி, மிளகு... ஆகியவற்றை,  சம அளவில் எடுத்து,
காரமான..... இரண்டு செத்தல் மிளகாயுடன், அம்மியில் வைத்து...  அரைத்து,
குறிப்பிட்ட பகுதியில்... முதல் நாள் இரவு,  9 மணிக்கு... நித்திரைக்கு போக முன்னம், பத்துப் போட்டு... கட்டி விட்டு, 
அடுத்த நாள் விடிய... 5 மணிக்கு,  சேவல் கூவுற நேரம், எழும்பி...   அவிட்டுப் பார்த்தால், 
பூரண  சுகம் கிடைக்கும் tw_thumbsup:. நீங்கள், விரும்பியது நடக்கும். :D:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 28/06/2017 at 4:33 PM, தமிழ் சிறி said:

அதற்கும்... பரிகாரம் உண்டு, நாதமுனி. 
"தாத்தா வீட்டு  வைத்தியம்"  இது. (எவ்வளவு நாளைக்கு... "பாட்டி வைத்தியம்"  என்று சொல்லிக் கொண்டிருப்பது.) :grin:

இஞ்சி, உள்ளி, மிளகு... ஆகியவற்றை,  சம அளவில் எடுத்து,
காரமான..... இரண்டு செத்தல் மிளகாயுடன், அம்மியில் வைத்து...  அரைத்து,
குறிப்பிட்ட பகுதியில்... முதல் நாள் இரவு,  9 மணிக்கு... நித்திரைக்கு போக முன்னம், பத்துப் போட்டு... கட்டி விட்டு, 
அடுத்த நாள் விடிய... 5 மணிக்கு,  சேவல் கூவுற நேரம், எழும்பி...   அவிட்டுப் பார்த்தால், 
பூரண  சுகம் கிடைக்கும் tw_thumbsup:. நீங்கள், விரும்பியது நடக்கும். :D:

பார்தியலோ.... எங்கண்ட பரியாரியார்.... தலை தெறிக்க ஓடீயாந்து நிக்கீறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

அதற்கும்... பரிகாரம் உண்டு, நாதமுனி. 
"தாத்தா வீட்டு  வைத்தியம்"  இது. (எவ்வளவு நாளைக்கு... "பாட்டி வைத்தியம்"  என்று சொல்லிக் கொண்டிருப்பது.) :grin:

இஞ்சி, உள்ளி, மிளகு... ஆகியவற்றை,  சம அளவில் எடுத்து,
காரமான..... இரண்டு செத்தல் மிளகாயுடன், அம்மியில் வைத்து...  அரைத்து,
குறிப்பிட்ட பகுதியில்... முதல் நாள் இரவு,  9 மணிக்கு... நித்திரைக்கு போக முன்னம், பத்துப் போட்டு... கட்டி விட்டு, 
அடுத்த நாள் விடிய... 5 மணிக்கு,  சேவல் கூவுற நேரம், எழும்பி...   அவிட்டுப் பார்த்தால், 
பூரண  சுகம் கிடைக்கும் tw_thumbsup:. நீங்கள், விரும்பியது நடக்கும். :D:

இது முதலுக்கே மோசம் சிறி பரியாரியார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.