Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்றொழில் அமைச்சருக்கு 2 வாரங்கள் கால அவகாசம்

Featured Replies

கடற்றொழில் அமைச்சருக்கு 2 வாரங்கள் கால அவகாசம்
 

image_c6c51ab6de.jpgஎஸ்.நிதர்ஷன்

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழில்களில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களை 2 வாரங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கடற்றொழில் அமைச்சருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளார்.

அத்துமீறல்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி கொழும்பில் உள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் நேற்று (14) கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவு மாவட்டத்தின் யுத்தம் முடிவுற்ற பின்னர் தொழிலுக்காக தென்னிலங்கை மீனவர்கள் அங்கு வருவது அதிகரித்துள்ளது.

“கொக்கிளாய், நாயாறு மற்றும் சாளை போன்ற பகுதிகளில் அதிகளவான தென்னிலங்கை மீனவர்கள் வருகைதந்து சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“இதற்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் உடந்தையாக இருக்கின்றார்கள். அங்கு வரும் மீனவர்கள் இவரின் உறவினர்களாகத்தான் இருக்கின்றார்கள். இதனால் அவர் தென்னிலங்கை மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதனையும் எடுப்பதில்லை.

“பணிப்பாளருடைய பெறுப்பற்றதன்மை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். எழுத்து மூலமாகவும் முறைப்பாடு செய்துள்ளேன். இருப்பினும் மாவட்டச் செயலர் அது தொடர்பான நடவடிக்கை எடுக்கவில்லை.

“மீனவர்கள், நாட்டுக்கு உட்பட்ட எந்த கடல் பகுதியிலும் சென்று தொழில் செய்யலாம் என இலங்கையில் ஒரு சட்டம் உள்ளது. ஆனால், கடற்கரையில் வடி அமைத்து தொழில் செய்வதாக இருந்தால் அந்த பகுதி பிரதேச செயலாளரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

“ஆனால், முல்லைத்தீவில் பிரதேச செயலாளரின் அனுமதியை பெற்றுக் கொள்ளாமல் 500க்கும் மேற்பட்ட வாடிகளை அமைத்து, தென்னிலங்கை மீனவர்கள் அங்கு தங்கி நின்று மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள். இந்த விடயத்தில் அரச அதிகாரிகள் உரிய சட்டத்தை நடமுறைப்படுத்தவில்லை.

“நாம் தமிழர்கள் என்றதால் பல்வேறு விதத்தில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டதால் தான் எமது ஆயுதப் போராட்டம் உருவெடுத்தது. இப்போதும் அடக்கு முறைகளும், ஒடுக்கு முறைகளும் தொடர் அத்துமீறல்களும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

“பல முறை பல வழிகளிலும் அரசாங்கத்திடம் இவ் அத்துமீறல்களை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிவருகின்ற போதும் அரசாங்கம் தீர்வைத் தர மறுக்கின்றது.

“இது தொடர்பாக சம்மந்தப்பட்ட கடற்றொழில் அமைச்சருடனும் பேசியுள்ளேன். இப்பிரச்சினை தீர்ப்பதற்கு 2 வார கால அவகாசம் அவர் கோரியுள்ளார். 2 வார கால அவகாசம் முடிந்த பின்னரும் அத்துமீறல்கள் தொடருமானால் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி, கொழும்பில் உள்ள கடற்றொழில் அமைச்சு அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளேன்.

“தொடர் போராட்டங்கள்தான் வெற்றியை பெற்றுத்தரும். ஆயுதப் போராட்டத்தை நாங்கள் இப்போது விரும்பாவிட்டாலும், எங்களுடைய உரிமைசார் விடயங்களில் போராட்டம் இல்லாமல் ஒரு போதும் கிடைக்காது” என்றார்.

http://www.tamilmirror.lk/வன்னி/கடற்றொழில்-அமைச்சருக்கு-2-வாரங்கள்-கால-அவகாசம்/72-200632

  • தொடங்கியவர்

காடழித்து முஸ்லிம் குடியேற்றங்கள் நிறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது : சாள்ஸ் நிர்மலநாதன்

 

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் காடழித்து புதிய முஸ்லிம் குடியேற்றங்களை நிறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். 

charles-nirmalanathan.jpg

இக் குடியேற்றங்களுக்கு அரசியல் அதிகாரம் கொண்டவர்களுடன் இணைந்து மாவட்ட அரச அதிபர் உட்பட்ட அனைத்து அரச உத்தியோகஸ்தர்களும் துணைபோகின்றனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார். 

 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

அண்மைக்காலமாக முல்லைத்தீவில் முஸ்லிம் மக்களுடைய குடியேற்றம் தொடர்பில் குழப்பகரமான பதற்றநிலை காணப்படுகின்றது. யுத்தத்திற்கு முன்னர் முல்லைத்தீவில் இருந்தவர்கள் மீண்டும் இங்கு வரும் போது வீட்டிற்கு உரிய காணி இல்லை என்ற ரீதியில் அவர்களுக்கான காணி வழங்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. 

ஆனால் ஒரு சில அரசியல் வாதிகள், தங்களுடைய அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்காக குளாமுறிப்பில் காடழிப்பு செய்து வருகின்றார்கள். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் நான் பேசியுள்ளேன். அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கிருந்திருந்தார். அரசியல் ரீதியாக அதிகாரம் உள்ளவர்கள் சிலர் கடந்த ஆட்சிக் காலத்தில் இழைத்த தவறினை இப்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் இழைக்கின்றார்கள். இவர்களுடைய தவறான செயற்பாடுகளும் அந்த மாவட்டங்களில் உள்ள அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களமும் உடந்தையாக இருக்கின்றது.

வேறு பிரதேசத்தில் சொந்தமாக காணி, வீடு உள்ளவர்களுக்கு, அரசாங்கத்தினால் காணி வழங்க முடியுமா? இந்த கேள்வியை அரச அதிபரிடமும் கேட்டுள்ளேன். அரச அதிபர் எந்த பதிலினையும் எனக்கு வழங்கவில்லை. தற்போது முல்லைத்தீவில் குடியேற்றப்படவுள்ள முஸ்லிம் மக்களுக்கு ஏற்கனவே அரசாங்கத்தினால் காணிகளும், வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதனால்தான் நாங்கள் எதிர்க்கின்றோம் பிலக்குடியிருப்பு காணி விடுவிப்பின் போது ஏற்கனவே அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி கடிதம் அனுப்பப்பட்டது. இங்கு அரசியல் ரீதியாக ஒரு பகுதி மக்களுக்கு ஒரு விதமாகவும், இன்னுமொரு பகுதி மக்களுக்கு வேறோர் விதமாகவும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனால்தான் குழப்பங்களும் உருவாகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/21905

  • கருத்துக்கள உறவுகள்

“முல்லைத்தீவு மாவட்டத்தில், காடழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றுவதை ஒரு போதும் ஏற்க முடியாது” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மேலும், “இக்குடியேற்றங்களுக்கு, அரசியல் அதிகாரம் கொண்டவர்களுடன் இணைந்து மாவட்ட செயலாளர் உட்பட்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களும் துணைபோகின்றனர்” என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக, அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “அண்மைக்காலமாக, முல்லைத்தீவில் முஸ்லிம் மக்களுடைய குடியேற்றம் தொடர்பில் குழப்பகரமாக பதற்ற நிலை காணப்படுகின்றது.

“யுத்தத்துக்கு முன்னர், முல்லைத்தீவில் இருந்தவர்கள் மீண்டும் இங்கு வரும் போது வீட்டுக்கு உரிய காணி இல்லை என்ற ரீதியில், அவர்களுக்கான காணி வழங்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஒரு சில அரசியல்வாதிகள், தங்களுடைய அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்காக, குளாமுறிப்பில் காடழிப்பு செய்து வருகின்றார்கள். இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நான் பேசியுள்ளேன். அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கிருந்திருந்தார்.

“அரசியல் ரீதியாக அதிகாரம் உள்ளவர்கள் சிலர், கடந்த ஆட்சிக் காலத்தில் இழைத்த தவறை, இப்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் இழைக்கின்றார்கள். இவர்களுடைய தவறான செயற்பாடுகளும் அந்த மாவட்டங்களில் உள்ள அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களமும் உடந்தையளிக்கின்றது. “வேறு பிரதேசத்தில் சொந்தமாக காணி, வீடு உள்ளவர்களுக்க, அரசாங்கத்தினால் காணி வழங்க முடியுமா? இந்த கேள்வியை மாவட்டச் செயலாளரிடம் கேட்டுள்ளேன். அரச அதிபர் எந்த பதிலையும் எனக்கு வழங்கவில்லை. தற்போது முல்லைத்தீவில் குடியேற்றப்படவுள்ள முஸ்லிம் மக்களுக்கு ஏற்கெனவே அரசாங்கத்தினால் காணிகளும் வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனால்தான் நாங்கள் எதிர்க்கின்றோம்” என்றார்.

“பிலக்குடியிருப்பு காணி விடுவிப்பின் போது, ஏற்கெனவே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி கடிதம் அனுப்பப்பட்டது. “இங்கு அரசியல் ரீதியாக ஒரு பகுதி மக்களுக்கு ஒரு விதமாகவும் இன்னுமொரு பகுதி, மக்களுக்கு வேறோரு விதமாகவும் சட்டங்கள் நடமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால்தான் குழப்பங்களும் உருவாகின்றன. “கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாற்றுக்கேணி பிரதேசத்தில் 1953ஆம் ஆண்டு 136 பேருக்கு 4 ஏக்கர் வீதம் மகாவலி திட்டத்தின் கீழ், காணி வழங்கப்பட்டது. அக்காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மீண்டும் அக்காணிகள் வழங்கப்படும் என்று அத்திட்டத்தின் பணிப்பாளரால் 2016ஆம் ஆண்டு உறுதியளிக்கப்பட்டது. “இருப்பினும் இன்று வரை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முஸ்லிம் மக்களுடைய குடியேற்றம் தொடர்பாக மாவட்ட செயலாளர் காட்டும் அக்கறையை மகாவலித் திட்டத்தில் காட்டுவதில்லை. முதலில் மாவட்ட செயலாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களையும் சமமாக மதிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=148928 .

 

முஸ்லீம் கள்ளக்காணிக் கும்பலை தமிழ் மண்ணில் அனுமதிக்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, போல் said:

முஸ்லீம் கள்ளக்காணிக் கும்பலை தமிழ் மண்ணில் அனுமதிக்க முடியாது!

எப்படி பிளேடை மாத்தி போடுகிறார்கள்>

ஹிஸ்புல்லா அண்மையில் ஒத்துக்கொண்டதை என்ன சொல்லப் போகினம்?

இனவாதமில்லா அமைச்சர் என்றா?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, போல் said:

முஸ்லீம் கள்ளக்காணிக் கும்பலை தமிழ் மண்ணில் அனுமதிக்க முடியாது!

தமிழர்களும் துணையென்று இருக்குதே ??

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் முன்னர் வாழ்ந்திராத இடங்களில் ஒரு அடி நிலமும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில்.. ஆக்கிரமிப்புச் செய்ய அனுமதிக்கக் கூடாது. 

அதேவேளை அவர்கள் வாழ்ந்த நிலத்தில் அவர்கள் வந்து வாழ்வதை உறுதிப்படுத்துவதும் நமது கடமை ஆகும். அதை மறுதலிக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த நிலத்துக்கு அப்பால்.. எந்த நோக்கத்தோடும் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முற்படின் அதனை தடுக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு உள்ளது. அது இனவாதம் அல்ல.. அந்த மக்களின் அடிப்படை உரிமை. இதனை முஸ்லீம் தமிழ் பேசும் சமூகம் புரிந்து கொள்வது மிக மிக மிக அவசியமாகும்.

கிழக்கிலும் தமிழர் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்தி.. உடனடியாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் இருந்து இவர்கள் வெளியேறி.. தமக்கு முன்னர் வழங்கப்பட்ட நிலங்களில் மட்டும் வாழ வேண்டும்.

வடக்குக் கிழக்கில்.. முஸ்லீம்கள்.. ஒன்றும் பூர்வ குடிகளாக வாழவில்லை. தெற்கில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட வேளையில்.. வந்து குடியேற அனுமதிக்கப்பட்டதன் நல் விளைவையே.. இன்று தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு நோக்கி பாவிக்கிறார்கள்.

காத்தான்குடி கூட தமிழர்களின் பூர்வீக பூமி ஆகும். அதற்கு இன்று சவுதி உரிமைகோரும் நிலை தோன்றி உள்ளது. :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

1 hour ago, nedukkalapoovan said:

முஸ்லீம்கள் முன்னர் வாழ்ந்திராத இடங்களில் ஒரு அடி நிலமும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில்.. ஆக்கிரமிப்புச் செய்ய அனுமதிக்கக் கூடாது. 

அதேவேளை அவர்கள் வாழ்ந்த நிலத்தில் அவர்கள் வந்து வாழ்வதை உறுதிப்படுத்துவதும் நமது கடமை ஆகும். அதை மறுதலிக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த நிலத்துக்கு அப்பால்.. எந்த நோக்கத்தோடும் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முற்படின் அதனை தடுக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு உள்ளது. அது இனவாதம் அல்ல.. அந்த மக்களின் அடிப்படை உரிமை. இதனை முஸ்லீம் தமிழ் பேசும் சமூகம் புரிந்து கொள்வது மிக மிக மிக அவசியமாகும்.

கிழக்கிலும் தமிழர் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்தி.. உடனடியாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் இருந்து இவர்கள் வெளியேறி.. தமக்கு முன்னர் வழங்கப்பட்ட நிலங்களில் மட்டும் வாழ வேண்டும்.

வடக்குக் கிழக்கில்.. முஸ்லீம்கள்.. ஒன்றும் பூர்வ குடிகளாக வாழவில்லை. தெற்கில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட வேளையில்.. வந்து குடியேற அனுமதிக்கப்பட்டதன் நல் விளைவையே.. இன்று தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு நோக்கி பாவிக்கிறார்கள்.

காத்தான்குடி கூட தமிழர்களின் பூர்வீக பூமி ஆகும். அதற்கு இன்று சவுதி உரிமைகோரும் நிலை தோன்றி உள்ளது. :rolleyes:tw_angry:

இதற்காம செய்ற்திட்டம் ஏதும் எம்மிடம் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
On 7/15/2017 at 1:02 PM, nedukkalapoovan said:

முஸ்லீம்கள் முன்னர் வாழ்ந்திராத இடங்களில் ஒரு அடி நிலமும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில்.. ஆக்கிரமிப்புச் செய்ய அனுமதிக்கக் கூடாது.

அதே போல முஸ்லிம்கள் வெளியேற்றப் பட முதல் தமிழர் வாழ்ந்திராத ஒரு அடி நிலமும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் தமிழரால் ஆக்கிரமிப்புச் செய்ய அனுமதிக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

அதே போல முஸ்லிம்கள் வெளியேற்றப் பட முதல் தமிழர் வாழ்ந்திராத ஒரு அடி நிலமும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் தமிழரால் ஆக்கிரமிப்புச் செய்ய அனுமதிக்கக் கூடாது.

தமிழர் இழந்த நிலங்கள் முஸ்லிம்கள், சிங்களவரால் அபகரிக்கப்பட்டுள்ளது. அல்லது அபகரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை வடக்கில் மீள குடியேறுமாறு புலிகள் காலத்திலேயே ( மன்னிப்பு கேட்டதோடு ) சொல்லியாயிற்று.
 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

அதே போல முஸ்லிம்கள் வெளியேற்றப் பட முதல் தமிழர் வாழ்ந்திராத ஒரு அடி நிலமும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் தமிழரால் ஆக்கிரமிப்புச் செய்ய அனுமதிக்கக் கூடாது.

விஜயனின் வாரிசுகளை என்ன செய்வதாக உத்தேசம்????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.