Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம்.”

Featured Replies

“புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம்.”

ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் – விஜயகலா மகேஸ்வரன்:-  குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

 

 

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என சிறுவா் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நில மெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் இதனை தெரிவித்துள்ளார்.. அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்

“யுத்தத்தை எப்படி இவா்கள் முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் சிறுவா்கள் முதியோர்களை கொன்றுதான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனா். இ்பபடியானவா்கள் மீண்டும் ஒரு அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு சர்வதேசம் அனுமதிக்க கூடாது. எனவே எங்களுடைய நல்லாட்சி அரசாங்கம் நீண்ட காலத்திற்கு செல்ல வேண்டும்.” எனத் தெரிவித்த அவா்

“எங்களுடைய சொந்த கால்களில் வாழந்த எங்களைக் கடந்த அரசாங்கம் கையேந்தி வாழும் நிலைக்கு தள்ளியுள்ளது. இனிவரும் காலங்களில் இப்படியான அரசாங்கத்திலே யார் யார் அங்கம் வகித்தார்களோ, யார் யார் காட்டிக்கொடுத்தார்களோ,யார் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உறுதுணையாக நின்றார்களோ அவர்களை இனம் காணுங்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்கள படுகொலை செய்திருக்கின்றீர்கள் அவா்களை அங்கவீனர்கள் ஆக்கியிருக்கின்றீர்கள், எங்களுடைய இளம் வயது பெண்களை விதவைகள் ஆக்கியிருக்கின்றீர்கள்.எனவே இவ்வாறனவா்களுக்கு நாங்கள் எதிர்வரும் காலங்களில் இடமளிக்க கூடாது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியை கொண்டு செல்லப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத சில தீய சக்திகள் வாள் வெட்டு, கிறிஸ்பூதம், பள்ளிகளை அடித்தல், ஆலயங்களில் சிலைகளை கொண்டு செல்லுதல் இ்பபடியான எத்தனையோ அட்டூழியங்களை அசெய்து வருகின்றார்கள்.

எனவே இதிலிருந்து நாங்க்ள விடுதலைப்பெற வேண்டும் இதற்காகதான் நாங்கள் இந்த நல்லாட்சி அரசை ஏற்படுத்தியிருக்கின்றோம்.2015 இற்கு பின்னர் எத்தனையோ காணிகளை இராணுவத்தினடம் இருந்து மீட்டு மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம். எனவே இப்படியான நடவடிக்கைகளுக்கு மக்கள் உறுதியான அரசாங்கத்தை தெரிவுசெய்ய வேண்டும், உறுதுியானவா்களை தெரிவு செய்ய வேண்டும். என்குறிப்பிட் அவா் தற்போது வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் செல் தாக்குதல் பங்கா் வாழ்க்கை, காணாமல் போதல்,வெள்ளைவான் கடத்தல் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதும் கல்வி முன்னேற்றத்தில் இருந்தது. ஆனால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னா் கல்வி நிலைமை மிக மோசமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/36600

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளாகவிருந்தால் அவர்களை இனங்கண்டு படுகொலை செய்யுங்கள் எனக்கூறுவதற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அப்போ வே. பாலகுமாரன் உட்பட புதுவையர் அனைவரையும் கைதுசெய்து காணமல் ஆக்ககப்பட்டது அல்லது கொலைசெய்தது, புலித்தேவன் நடேசன் ஆகியோரைக் கொலைசெய்தது இவை யாவும் நியாயமானது என இவர் கூறுகிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகரார்.. காரைநகர்.. கடற்படை முகாம் முற்றுகையின் போது..போராளிகளுக்கு தேத்தண்ணி கூட  கொடுக்க மறுத்தவர்களாம்... ஆனாலும் எத்தனையோ காரைநகர் இளைஞர்கள்.. தாயக விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈர்ந்துள்ளனர். 

மண்ணெண்ணை வியாபாரத்தை புலிகள் தடுத்ததால்.. இவருக்கு அவர்கள் மீது கோபம் இருக்கலாம். ஆனால்.. மண்ணெண்ணைக்குத் தான் தெரியும் உள்வீட்டு ரகசியம். அதுதான் சிங்களவன் போட்டுத்தள்ளிட்டான். :rolleyes:

போராளிகள் என்பதற்காக சர்வதேச அணுசரனையின் கீழ் சரணடைந்த அவர்களைப் படுகொலை செய்ய யாருக்கும் சர்வதேச சட்ட நியமங்கள் அனுமதி அளிக்கவில்லை. அதை படிப்பறிவற்ற.. அனுபவ அறிவற்ற இவாவால்.. ஊகிக்கவே முடியவில்லை என்பது வியப்பில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பள்ளிக்கூடத்திலை எழுதி வாசிச்சமாதிரியே வாசிக்குது.....

இதெல்லாம் ஒரு அரசியல்வாதி...இதெல்லாம் ஒரு அமைச்சர்!!!!!!!
வெள்ளவத்தையிலை தேங்காயும் மண்ணெண்ணையும் விக்கத்தான் லாயக்கு....சிங்களவன் அவிக்கிறான் இது அவியுது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தனதுதரப்பிலும் தமிழர்தரப்பிலிருந்தும் நன்றாகப் பரப்புரை செய்கிறது. தமிழினத்தின் சாபக்கேடாக பகுத்தறிவற்ற  பதவிக்கலைவோரது பிதற்றல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனுக்கு ... கிடைத்த, அரசியல் வாதிகளை பார்க்க,
ஈழத்தமிழன்  என்ன பாவம் செய்தானோ... என்று நினைக்கத்  தோன்றுகின்றது. tw_cry:

டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, வரதராஜபெருமாள் போன்றவர்களின் இடத்தை நிரப்ப விஜயகலா, சுமந்திரன், சுவாமிநாதன் ஆகியோர் கடும் போட்டியில் இறங்கியுள்ளனர். 

  • தொடங்கியவர்

வடக்கில் அச்ச நிலையை ஏற்படுத்தி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சதி

07-14902ce1ee60018aad4a41197d5a3739896df924.jpg

 

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றச்சாட்டு
(நமது நிருபர்)

வடக்கில் அச்ச நிலையை ஏற்படுத்துவதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தீயசக்திகள் முனைந்துவருகின்றன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி பிரச்சினைக்குத் தீர்வைக் காண நாம் முன்வரவேண்டும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றிகூறவேண்டும். அவரினால்தான் இவர் ஜனாதிபதியானார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பூநகரி பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது:

நல்லாட்சி அரசாங்கத்தில் நடமாடும் சேவைகள் பிரதேச ரீதியாக தற்போது நடத்தப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் கண்டாவளை, கரைச்சி பிரதேச செயலகப்பிரிவுகளில் நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டன. முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டன. தற்போது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் மக்களுக்கு இந்த சேவை நடத்தப்படுகின்றது.

30 வருடகால யுத்தத்தில் நமது மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்திருக்கின்றனர். யுத்தம் இடம்பெற்றபோதிலும் அனைத்துக்கும் முகம் கொடுத்து நாம் செயற்பட்டு வந்தோம். தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மாறியுள்ளார். பிரதமர் மாறியிருக்கின்றார். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாறியுள்ளனர். ஆனால் எமது அரசாங்கத்திலும் வேலைத்திட்டங்கள் குறைவாகவே இருக்கின்றன.

 நாம் இந்த மக்களை வேதனையிலிருந்து விடுவிப்பதற்காக பாடுபடுகின்றோம். ஆனால் ஒவ்வொரு அமைச்சுக்களை எடுத்துக்கொண்டால் வேலைத்திட்டங்கள் குறைவாகவே உள்ளன. உண்மையிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் தீர்வை வழங்கவேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கின்றார்கள். ஆனால் அதற்கான எமது ஒற்றுமை காணாதுள்ளது.

 இந்த மாவட்டத்திலிருந்து ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். பலர் மாகாணசபைக்கு தெரிவாகியிருக்கின்றனர். ஆனால் இன்று நடைபெறும் இந்த நடமாடும் சேவையில் ஒருவருமே கலந்துகொள்ளவில்லை. இதனையிட்டு நாம் வெட்கப்படவேண்டியுள்ளது.

 யுத்தத்தில் எமது வடமாகாணம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வடக்கு, கிழக்கில் யுத்தம் காரணமாக 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். இளம் வயதில் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். வடக்கில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனர்களாக உள்ளனர். 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரை இழந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த கால யுத்தத்தினால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கின்றது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த அரசாங்கமானது எதனையும் செய்யவில்லை. அடாவடித்தனமான முறையில்தான் அவர்கள் ஆட்சி செய்தார்கள்.

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தமைக்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவர் நன்றி சொல்லவேண்டும். பிரபாரனால்தான் அவர் ஜனாதிபதியானார். எமது கட்சியின் தலைவரும் நான்காவது பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க 1 இலட்சம் வாக்குகளினால்தான் ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வியுற்றிருந்தார். ஆனால் தற்போதைய நிலைமையைப் பார்க்கும் போது அவர் தோல்வியுற்றமை தமிழ் மக்களுக்கு நன்மைபயத்துள்ளதாகவே நான் நினைக்கின்றேன். சில சில நடவடிக்கைகள், சந்தர்ப்பங்கள், நிகழ்ச்சிகளை ஒப்பிட்டுப்பார்க்கும் போது இவ்வாறு எண்ணவேண்டியுள்ளது. ஏனெனில் நல்லதொரு சிறந்த தலைவர் நாட்டுக்கு இருந்தால்தான் அந்த நாட்டை கட்டிக்காக்க முடியும்.

 கடந்த ஆட்சிக்காலத்தில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். ஊடக நிறுவனங்கள் அடித்துடைக்கப்பட்டன. ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. இவ்வாறான நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தமிழ் , முஸ்லிம் மக்களே வாக்களித்தனர்.

 அங்கவீனமுற்றுள்ள எமது இளம் சமுதாயத்திற்கு கடந்த அரசாங்கக் காலத்தில் சமுர்த்தி தொகையான 3ஆயிரம் ரூபா கூட வழங்கப்படவில்லை. ஆனால் எமது அரசாங்கம் அங்கவீனமாகவுள்ளவர்களுக்கு 3 ஆயிரம் ரூபா பணம் வழங்கி வருகின்றது. 3500 பேர் வரையில் இதனால் பயனடைகின்றனர். ஆனால் 30 ஆயிரம் பேருக்கும் இந்த உதவி வழங்கப்படவேண்டும்.

 திட்டமிட்டு எம்மை படுகொலை செய்த கடந்த கால அரசாங்கம் தற்போது எமது நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு புதிய புதிய பிரேரணைகளை கொண்டுவருகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இனவாதிகள் அதற்கு அனுமதிவழங்கவில்லை.

 அவ்வாறு இனவாதம் அன்றும் மேலோங்கியிருந்தது. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை சம்பந்தனுக்கு வழங்கியுள்ளனர். இது தமிழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாரமாகவே அமைகின்றது. இதேபோன்றே தமிழ் மக்களுக்கான தீர்வை நாம் வழங்கவேண்டும்.

 யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் சமுர்த்தி கொடுப்பனவுகள் உரிய வகையில் வழங்கப்படவேண்டும். அந்த கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணுமாறு நாம் அழுத்தம் கொடுத்துள்ளோம். பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கும் ஒரு இலட்சம் ரூபா முதல் ஐந்து இலட்சம் ரூபா வரையில் நல்லாட்சி அரசாங்கம் வழங்கி வருகின்றது.

 முன்னாள் போராளிகளுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் எதுவுமே செய்யப்படவில்லை. ஆனால் தற்போது அவர்களுக்கும் உதவிகள் வழங்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக வடமாகாணத்தில் சிக்கலான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. இன்றும் வீடுகளிலிருந்து வெளியே நாம் செல்லும் போது அச்சமான நிலை காணப்படுகின்றது.

 ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வேலணைப்பகுதியில் வீடொன்றிற்குள் சென்ற தமிழ் ஆயுதக்குழுவினர் ஆயுதங்களை எடுத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் உள்ளவர்களை வீட்டுக்குள் பூட்டிவிட்டு மின்சாரத்தை தடை செய்து அவர்கள் புதைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்படியாயின் இந்த ஆயுதங்கள் யாரை குறிவைக்கின்றன என்ற கேள்வி எழுகின்றது.

 தற்போது வாள்வெட்டு தொடர்ந்து வருகின்றது. எமது நீதிபதி அவர்களுக்கு அச்ச நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் பொலிஸ் அதிகாரிகள் சரியான விசாரணையை நடத்தி இதுகுறித்து தெளிவுபடுத்தவேண்டும். இவ்வாறு வடக்கில் அச்சநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தீ சக்திகளினால் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு செய்யப்படும் கைங்கரியமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

 கடந்தகால அரசாங்கம் ஆயுதமுனையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டிருந்தது. யாழ். மாவட்டத்தில் கிறீஸ் பூதம் என்ற பெயரில் மக்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வந்தனர். அந்த வேளையிலும் சம்பவ இடத்திற்கு சென்று நான் நடவடிக்கை எடுத்திருந்தேன்.

 இத்தகைய நிலையிலிருந்து மாறுவதற்காகவே புதிய ஜனாதிபதியை நாம் உருவாக்கியிருந்தோம். தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நாம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அவர்களுக்கு ஒத்துழைக்கவேண்டும். இனவாதத்தை தூண்டுவதன் மூலம் நாம் எதனையும் சாதித்துவிடமுடியாது. தற்போது மக்கள் அச்சத்துடன் வாழும் நிலையில் ஒருசில அரசியல்வாதிகள் மக்களை வீதிக்குக் கொண்டுவரும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இரணைதீவு மக்களும் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. கொழும்பிலிருந்து வந்த இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன இருவாரங்களுக்குள் தீர்வைப் பெற்றுத்தருவதாக கூறினார். ஆனால் இன்னமும் அந்தத் தீர்வு வழங்கப்படவில்லை. இந்த மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டுசெல்ல முடியாது கஷ்டப்படுகின்றனர். அரசாங்கம் வாக்குறுதிகளைக் கொடுத்தால் அதனை உரியவகையில் செய்யவேண்டும். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாம் படுகுழிக்குள் செல்லவேண்டிய நிலை ஏற்படும். நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக இரணைதீவு மக்களை மீளக்குடியேற்ற நாம் நடவடிக்கை எடுப்போம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-14#page-1

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் தீயசக்திகளான சிங்களப் படைகளின் வெளியேற்றமே வட-கிழக்கில் அச்சமற்ற சூழலுக்கான ஏதுநிலையாகும். இதனைப்புரிந்துகொள்ளாது ஐ.தே.க வின் ஊதுகுழல் ஊதுவதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை. 

தமிழினத்தின் தீயசக்திகளான சிங்களப் படைகளின் வெளியேற்றமே வட-கிழக்கில் அச்சமற்ற சூழலுக்கான ஏதுநிலையாகும். இதனைப்புரிந்துகொள்ளாது ஐ.தே.க வின் ஊதுகுழல் ஊதுவதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை. 

தமிழினத்தின் தீயசக்திகளான சிங்களப் படைகளின் வெளியேற்றமே வட-கிழக்கில் அச்சமற்ற சூழலுக்கான ஏதுநிலையாகும். இதனைப்புரிந்துகொள்ளாது ஐ.தே.க வின் ஊதுகுழல் ஊதுவதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை. 

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் தாங்கிக்கொண்டு ஈழத்தமிழினம். tw_dissapointed_relieved:

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழரசு said:

இதையெல்லாம் தாங்கிக்கொண்டு ஈழத்தமிழினம். tw_dissapointed_relieved:

எங்களுக்கென்னவோ இதெல்லாம் பழகிட்டுது ஒட்டு மொத்த அரசியல் வாதிகளையும் அதில் தமிழ் சிங்களம் முஸ்லீம் என்ற பாகுபாடில்லை 

நாளை இவர்கள் விடுதலைப்புலிகள் என்றால்  யார் அவர்கள்  தீவிரவாதிகள் தான்     என்று சொல்ல நாட்கள் எடுக்காது 

Edited by தனி ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனி ஒருவன் said:

எங்களுக்கென்னவோ இதெல்லாம் பழகிட்டுது ஒட்டு மொத்த அரசியல் வாதிகளையும் அதில் தமிழ் சிங்களம் முஸ்லீம் என்ற பாகுபாடில்லை 

நாளை இவர்கள் விடுதலைப்புலிகள் என்றால்  யார் அவர்கள்  தீவிரவாதிகள் தான்     என்று சொல்ல நாட்கள் எடுக்காது 

ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்கள் சாதி மதமின்றி ஒரே இலட்ச்சியத்தோடு  விடுதலைக்காக போராடி வீழ்ந்து விதையாக போனது 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழரசு said:

ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்கள் சாதி மதமின்றி ஒரே இலட்ச்சியத்தோடு  விடுதலைக்காக போராடி வீழ்ந்து விதையாக போனது 

இன்று சுட்டு த்தள்ளுங்கள் என்ற நிலைக்கு வந்துள்ளது மக்கள் தான் சிந்திக்க வேணும்  அடுத்த தேர்தலில் என்ன செய்ய வேண்டும்  எய்தவனையா அம்பையா நோவது  பாவம் மக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நவீனன் said:

“புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம்.”

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

மகேசுவரன் எப்படியோ! ஆனாலும் அவரை இனம்கண்டுதான் நாங்கள் போட்டுத் தள்ளினோம் என்று டக்ளசுகூட்டம் தங்களை நியாயப்படுத்திக் கூறுவதற்கு விசயகலா நல்லதொரு சந்தர்ப்பதை அவர்களுக்கு வழங்கியுள்ளார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்

அதுக்கு  கூட  லாயக்கில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனி ஒருவன் said:

இன்று சுட்டு த்தள்ளுங்கள் என்ற நிலைக்கு வந்துள்ளது மக்கள் தான் சிந்திக்க வேணும்  அடுத்த தேர்தலில் என்ன செய்ய வேண்டும்  எய்தவனையா அம்பையா நோவது  பாவம் மக்கள் 

இன்று மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போன்றே மக்களின் நிலை. இதில் அம்பையோ வில்லையோ தேடுவது 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ்மக்கள் தமிழர்களைத்தான் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனாலும் அந்தத் தமிழர்கள், தலைவர்களாகியவுடன் ஈனத் தலைவர்களாக மாறிவிடுகிறார்கள். இதனை அறிந்துதான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் பிற மானிலத்தவர்களை தங்களுடைய தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்களோ.... !! :shocked: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.