Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒத்துழைக்கவில்லை- அமெரிக்காவில் சுமந்திரன்

Featured Replies

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒத்துழைக்கவில்லை- அமெரிக்காவில் சுமந்திரன்

 

முதலமைச்சர் விக்னேஸ்வரனை மாற்றி வேறு மிதவாத தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் அமெரிக்காவில் கூறியதாக அறிய முடிகின்றது.

விக்னேஸ்வரன் கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் அடுத்து நடைபெறவுள்ள வடமாகாண மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட அனுமதிக்க முடியாது எனவும் சுமந்திரன் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒத்துழைக்கவில்லை- அமெரிக்காவில் சுமந்திரன்

நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற சுமந்திரன், அங்கு அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளை சந்தித்து சமகால அரசியல் செயற்பாடுகள் குறித்து உரையாடும்போது இவ்வாறு தெரிவித்தார் என்று அங்குள்ள தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைத்து பணியாற்றக்கூடிய முறையில் வடமாகாண முதலமைச்சர் செயற்பட வேண்டும் என்றும் அதற்கேற்ப அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுமந்திரன் கேட்டுக் கொண்டதாக அறிய முடிகின்றது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விஜித ஹேரத், ரவீந்திர சமவீர, உள்ளிட்ட ஆறுபேர் அடங்கிய குழு ஒருவாரகால பயணம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்தது. இந்த குழுவுடன் சுமந்திரனும் சென்றிருந்தார். கடந்த மாதம் 29 ஆம் திகதி வரை அங்கு நின்ற குழுவினர் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்கள், குறிப்பாக புதிய அரசியல் யாப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ளதாக ஐ.பி.சி. தமிழ் செய்தியாளர் கூறினார்.

இதேவேளை வொஷிங்டனில் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு நியூயோர்க் சென்றுள்ள சுமந்திரன் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட இராஜதந்திரிகளை சந்தித்து வருவதாகவும் அங்குள்ள தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார். சுமந்திரன் எதிர்வரும் ஆறாம் திகதி கொழும்புக்கு திரும்பவுள்ளார்.

அதேவேளை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முன்னாள் நிதியரசர் ஸ்ரீபவன், தற்போதைய அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோரில் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பது குறித்து ஆலோசிப்பதாக தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 

https://news.ibctamil.com/ta/politics/-Complaint-in-the-US

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா முடிஞ்சு அமெரிக்காவுக்கு போயாச்சு கோள் மூட்ட. இவை   இணக்க அரசியல் செய்ய முதலமைச்சர் தடை. அடுத்த தேர்தலில் உந்த சொண்டு காவியை வீட்டுக்கு அனுப்ப வேணும். கள்ள வோட்டு போடுற பிளானில் இப்பவே பல திட்டங்களும்,சிபாரிசுகளும் போடுது. எங்கை போய் எது பேசுறது எண்டு தெரியாதது இதெல்லாம் ஒரு அரசியல் செய்யுது. தமிழர் பிரச்சினை கதைக்க ஜெனீவாவுக்கு போக மாட்டேன் எண்டது முதலமைச்சரை விழுத்த நாடுநாடாய் அலையுது. 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாளும் எதிர் அறிக்கை ஒன்று விடும் இதுதான் தமிழர் நிலை 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாளை ஒரு கையாலாகாதவன் ஆக்கிப்போட்டுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன பைத்தியகாரத்தனம் அமெரிக்காகாரன் வோட்ப் போட்டா முதலமைச்சரைத் தெரிவு செய்யப் ப் போகிறார்கள். முதலில் இந்த சுமத்திரனை அரசியல் அரங்கிலிருந்தே நீக்க வேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஓளிந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு வீரெதாமாக செயற்படும் இவரைத் தெரிவு செய்து தமிழ்மக்கள் உண்மையில் வெட்கப்பட வேண்டும். வடமாகாண சபையின் அனைத்துக் குமப்பங்களுக்கும் சூத்திரதாரி இவர்தான்.விக்கினேஸ்வரன் அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படத் தடையாக இருக்கிறார் என்றால் சுமத்திரன் பேசாமர் சிங்களக் கட்சியுடன் இநை;து கொண்டு அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லைங்க இந்த ஆட்காட்டி குருவி போனதே அங்கு நாடிபிடித்து பார்க்க கிட்டடியில் அமரிக்காவுக்கு மைத்த்ரீ  கூட்டம் போனது அம்பாந்தோட்டை சைனாவிடம் போனதுக்கு எதிர்மாறா தமிழர் பிரச்சனையை பற்றி கழுகு கதைத்து இருக்கும் அத்துடன் உலகசூழல் சுயநிர்ணயம்  என்று ஆடுதுகள் எல்லாத்துக்கும் சேர்த்து சந்திரனுக்கு லைக்கா அனுப்பியதை போல் இவர் சிங்களத்துக்கு வக்காளத்து வாங்க போயிருப்பார் அப்படியே அமெரிக்க ஓநாய் தமிழர் பிரச்சனை தீரவில்லை என்று எகிறியிருக்கும் இவரும் பதிலுக்கு cvயை கைகாட்டி குரைத்து விட்டுள்ளார் (மொத்தத்தில் யாருக்கும் எமது பிரச்சினை முடிக்க விரும்பவில்லை அதை சிங்களம் நன்குணர்ந்து எல்லாருக்கும் போக்கு காட்டிக்கொண்டு இருக்கிறது ) 

  • கருத்துக்கள உறவுகள்

தன்ர பணியை சிறப்பாக செய்கிறார் சுமந்து

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் விக்கியர்
த.தே.கூ வில் இருந்து விலகி
தனிச்சோ அல்லது
சைக்கிள் பெடியள்களுடனோ
வெத்து வேட்டு பேரவையின்
ஆதரவுடனோ
போட்டியிட்டு வென்று காட்டட்டும்

கட்டுக் காசு கிடைச்சால்
சந்தோசம்

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணி எதிர்க்கட்சியாக இருந்து அரசுக்கு சேவை செய்வதை விட அரசுடன் சேர்ந்து மந்திரி பதவி எடுத்து தமிழ் மக்களுக்கு நிறையவே செய்திருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

சுமேந்திரனையும் அவரது ஆசிரியரான விக்னேஸ்வரனையும் மோதல் தவிர்ந்த அரசியலில் ஈடுபட ஒரு உடன்பாட்டுக்கு வர  புலம் பெயர்ந்த மக்கள் உதவ வேண்டும். அதை விடுத்து பக்க சார்பான நிலை எடுத்து இவர்களின் மோதலை மேலும் ஊக்குவிப்பதால் யாருக்கு பயன்?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Jude said:

சுமேந்திரனையும் அவரது ஆசிரியரான விக்னேஸ்வரனையும் மோதல் தவிர்ந்த அரசியலில் ஈடுபட ஒரு உடன்பாட்டுக்கு வர  புலம் பெயர்ந்த மக்கள் உதவ வேண்டும். அதை விடுத்து பக்க சார்பான நிலை எடுத்து இவர்களின் மோதலை மேலும் ஊக்குவிப்பதால் யாருக்கு பயன்?

சுமந்திரனின் சில நடவடிக்கைகள் மக்களூக்கு பிடிக்க வில்லை  இது சகலரும் அறிந்த உன்மை

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் நீலனின் மறுவடிவம். எப்படியவர் தமிழரது நலன் குறித்துச் சிந்திப்பார். 

https://ta.wikipedia.org/wiki/ம._ஆ._சுமந்திரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Jude said:

சுமேந்திரனையும் அவரது ஆசிரியரான விக்னேஸ்வரனையும் மோதல் தவிர்ந்த அரசியலில் ஈடுபட ஒரு உடன்பாட்டுக்கு வர  புலம் பெயர்ந்த மக்கள் உதவ வேண்டும். அதை விடுத்து பக்க சார்பான நிலை எடுத்து இவர்களின் மோதலை மேலும் ஊக்குவிப்பதால் யாருக்கு பயன்?

முதல்லை தனக்கு நாலுபக்கத்து விசயங்களும் தெரியும் எண்ட மமதையில் திரியும் சுமந்திரம்  நாலுவிதமான  கொள்கைகளோடை இருக்கிற  தமிழ்மக்களோடை சமமாக சரளமாக கதைக்கச்சொல்லுங்கோ.......புலம்பெயர் தமிழரை கோஷ்டியள் எண்டுறது...எச்சரிக்கிறன் எண்டுறது...எப்ப பாத்தாலும் சண்டித்தன கதையள்.....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வைரவன் said:

முடிந்தால் விக்கியர்
த.தே.கூ வில் இருந்து விலகி
தனிச்சோ அல்லது
சைக்கிள் பெடியள்களுடனோ
வெத்து வேட்டு பேரவையின்
ஆதரவுடனோ
போட்டியிட்டு வென்று காட்டட்டும்

கட்டுக் காசு கிடைச்சால்
சந்தோசம்

முடிந்தால் உங்கள் சம்சும் தமிழ்மக்கள் கூடும் இடங்களுக்கு பாதுகாப்பு ஏதுமின்றி அரசியல் கதைக்க போகட்டும் அதன்பின் சேதாரமின்றி உங்க ஆட்கள் வந்தால் நான் உங்கள் கூற்றை ஒப்புகொள்கிரன் ஏன் தமிழரசு கட்சி பற்றி எதிராக எழுதுவதை நிறுத்தி கொள்கிறன் இதுக்கு ஓகேயா ?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வைரவன் said:

முடிந்தால் விக்கியர்
த.தே.கூ வில் இருந்து விலகி
தனிச்சோ அல்லது
சைக்கிள் பெடியள்களுடனோ
வெத்து வேட்டு பேரவையின்
ஆதரவுடனோ
போட்டியிட்டு வென்று காட்டட்டும்

கட்டுக் காசு கிடைச்சால்
சந்தோசம்

தாங்கள் தனித்து நின்றால் தோத்துவிடுவோம் என்றுதானே சும்மா இருந்த விக்கியரை இழுத்துக்கொண்டு வந்தவை. தேர்தலில்  வென்றவை. தேர்தல்  முடிய அவரை கைகழுவுகினம். நீங்கள் எங்கிருந்து இப்ப  வருகிறீர்கள். ஏதோ புதுக்கதை சொல்கிறீர்கள். பாவம் உங்களுக்கு விடிந்தது பொழுது பட்டது ஒன்றும் தெரியேல்லைப்போல. இந்த வசன நடையை பார்த்தால் சுமந்திரனின் அறைகூவல் போலத்தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.