Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தாய் சாவு!!

Featured Replies

யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தாய் சாவு!!

 
யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தாய் சாவு!!
 

யாழ்ப்பாணம் அரியாலையில் தாய் ஒருவர் தனது 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி உயிரை மாய்த்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.

இரு ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

கடன் தொல்லையே தாய் தவறான முடிவெடுக்கக் காரணமாக அமைந்துள்ளது என் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பெண்ணின் கணவர் இரு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார் என்றும், அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தா் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/41170.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண சமூகம் வெட்கப்பட வேண்டிய சம்பவம்.

அயலவர்களுக்கு கூடவா மனிதாபிமானம் இல்லை.

  • தொடங்கியவர்

யாழில் பெரும் சோகம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை

யாழ்ப்பாணம் அரியாலை ஏ.வி. ஒழுங்கையில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

suicide.jpg

தனது நண்பர் கொடுத்த கடனை திருப்பித் தராத காரணத்தால்  கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்னா் கணவர் தற்காலை செய்துகொண்ட நிலையில் இன்று தாய் மற்றும் 3 பிள்ளைகள் இவ்வாறு நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

குறித்த நால்வரும் ஐஸ்கிறீமிற்குள் நஞ்சுமருந்தை கலந்துசாப்பிட்டே தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

குறித்த சம்பவத்தில் 28 வயதுடைய தாயாரான சுநேத்திரா, 2 வயதுடைய இரண்டைக் பிள்ளைகள் (மகன்மார் ), மற்றும் 4 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு நஞ்சருந்தி உயிரிழந்துள்ள நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.  கர்சா, சஜித், சரவணா பிள்ளைகளின் பெயர்கள் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொணடு வருவதாகவும் யாழ் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/26345

  • தொடங்கியவர்

யாழில் நடந்த கூட்டுத் தற்கொலை; இதுதான் நடந்தது; கதறியழும் உறவுகள்!

 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கடன் தொல்லையால் ஒரு குடும்பமே மொத்தமாக தற்கொலை செய்துள்ளது. யாழ்ப்பாணத்தை உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தின் பின்னால் மிகப்பெரிய துரோகத்தனம் உள்ளதாக அவர்களது குடும்ப உறவினர்கள் சொல்லியுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கணவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்து இன்றைய தினம் மனைவி தனது மூன்று மகள்களுடன் நஞ்சினை அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

நடந்தது என்ன?

மேற்படி பரிதாபகரமான தற்கொலைகள் நிகழ்வதற்கு கடன் கொடுத்து ஏமாற்றிய சம்பவம்தான் பிரதான பின்புலமாக உள்ளதாக இன்றைய தினம் பிள்ளைகளுடன் தற்கொலை செய்த பெண்ணின் சித்தி மற்றும் தாயார் ஆகியோர் கூறுகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட விடயங்களினை இங்கே தருகின்றோம்,

”அவர் (ஏற்கனவே தற்கொலை செய்தவர்) தனது குடும்ப சினேகிதனுக்கு ஒரு கோடியே பதினேழு லட்சம் ரூபா நம்பிக்கை அடிப்படையில் கடனாகக் கொடுத்தார்.

அந்த நம்பிக்கைக்கு காரணம், அவர்கள் இருவரதும் அப்பாமார் சினேகிதர்கள், அதே போலதான் இவர்களும் சினேகிதர்கள். அந்த வகையில் தான் நம்பிக்கை அடிப்படையில் இவ்வளவு பெரிய கடன் கொடுத்தது. ஆறு மாதத்தில் திருப்பித் தாருவேன் என்றுதான் கடன் வாங்கினார். ஆனால் கொடுக்கவில்லை. கேட்கப்போனால் ஏமாற்றுக் கதைகள் கதைத்து கடைசிவரை காசு கொடுக்கவில்லை.

காசு கடனாகக் கொடுக்கும்போது சினேகிதனின் மனைவி, தமையன் மற்றும் தமையனின் மனைவி ஆகிய மூன்று பேரும் நின்றுதான் வாங்கினார்கள். இதன்படி சினேகிதனின் தமையனின் பெயெருக்கு பத்து லட்சம் காசும் தம்பியாரின் பெயெருக்கு மிச்சத் தொகையும் கொடுத்தது.

ஆறு மாதத்துக்குப் பிறகு காசு குறித்துக் கேட்டபோது காசோலையிலிருந்து காசு திரும்பிவிட்டது. அவர் காசு போடவில்லை. இது குறித்து விசாரித்தபோது காசு வாங்கியவரை களவாக வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பிவிட்டார்கள்.

பத்து லட்சம் வாங்கிய தமையனிடம் கேட்டபோது என்னிடம் பத்து லட்சம் தானே நீ தந்தது, நீ செய்யிறத செய்துபார் என்று சொன்னார்.

காசு வாங்கியவரின் மனைவியிடம் சென்று, நீதானே பொறுப்பு நின்றாய் என்று கேட்டபோது, நான் நின்றதற்கு என்ன ஆதாரம் இருக்கு? நீ வாங்குறமாரி வாங்கிப்பார் என்று சொல்லியிருக்கிறார்.

இதன்பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு பத்து லட்சம் வாங்கிய தமையன் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து முடித்துவிட்டார். மிச்சம் கொடுக்கவில்லை. போன ஓகஸ்ட் முப்பதாம் திகதி வழக்குக்கு போய் வந்து முப்பத்தோராம் திகதி அவர் தற்கொலை செய்தவர்.

அப்போதே குடும்பத்தோடு சாகுற எண்டுதான் திட்டம்போட்டு, அதன்படி அவர் முதல் மருந்து குடித்துவிட்டார். அவர் முதல் குடிச்சதால் அவரின் பரிதாபத்தைக் கண்டு மனைவி அவரைக் காப்பாற்றும் முயற்சியில் தான் குடிக்கவில்லை. ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

பிள்ளைகளையும் தாயையும் மிகவும் கவனமாகப் பார்க்குமாறு வைத்தியசாலையில் எங்களிடம் மிகவும் வற்புறுத்திக் கூறி அனுப்பினார்கள். அப்படித்தான் இவ்வளவு நாளும் இவர்களைக் கவனமாகப் பார்த்துப் பார்த்துவந்து இன்றைக்கு நான் வேலைக்கு போன பிறகு இது நடந்திருக்கிறது.அவா தனது அம்மாவைப் படுக்குமாறு கூறிவிட்டே இந்த விபரீதம் முடிவினை எடுத்துள்ளா. இது அவர்களின் வீடுதான், நாங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறோம்” என்று கண்ணீரோடு கூறினார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Joint-suicide-in-jaffna-oct27

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி பல வற்றை சொன்னாலும் சனங்கள் திருந்தப்போவதில்லை ஒரு சின்ன வேலைப்பார்த்து முன்னுக்கு வராத சனம் நம்ம சனம் தொழில் செய்ய ஊக்கம் இல்லை யாராவது உதவி செய்வார்கள் என்ற நினைப்பு தற்போது அவனவன் குடும்பத்தை பார்க்கவே நேரமும் பணமும் போகிறது உழைப்பது அவ்வளவும் அப்படியே கரைகிறது ஒரு அரச ஊழியனுக்கு கூட அப்படியிருக்க அவசர நுண்கடன் , வட்டிக்கு கடன் பெற்று அதைக்கட்ட முடியாமல் அவலச்சாவுகள் நடந்து கொண்டு வருகிறது முந்த நாள் மட்டக்களப்பில் இன்று யாழில் என்ன செய்வது 

ஆழ்ந்த அனுதாபங்கள்  வாங்காதீர்கள் என்று சொன்னாலும் கேட்கிறார்கள் இல்லை அரச ஊழியர்கள் வங்கியில் கடனை வாங்கி அதை சம்பளத்தில் கழித்து கொள்கிறார்கள் .பாவம் ஏழை  மக்கள் வங்கியில்  கடன் இல்லை இப்படி நுண்கடனால் சீரழிந்து போகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இறந்தது கடன் கொடுத்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

யாழ்ப்பாண சமூகம் வெட்கப்பட வேண்டிய சம்பவம்.

அயலவர்களுக்கு கூடவா மனிதாபிமானம் இல்லை.

இப்ப எல்லாம் வீடு  பெரிய மதில் 7 மணிக்கு நாயை அவுட்டு போட்டு டீவி பார்ப்பது சொந்தங்கள் பந்தங்கள் உற்றார் சுற்றார் என்று எவனையும் கண்டு கொள்வது கிடையாது கிராமங்கள் கொஞ்சம் தப்பி பிழைச்சு இருக்கு அதையும் நகரம் ஆக்கிவிட்டால் ஊட்டுக்குள்ள செத்து கிடந்தாலும் தெரியாமல் போயிடும் 

8 minutes ago, MEERA said:

இங்கு இறந்தது கடன் கொடுத்தவர்கள்.

இருக்கலாம் ஆனால் கடன் வாங்கியவர்களும் இறந்து  கொண்டு தான் இருக்கிறார்கள் 

_இன்றைய நிலை 
 லோனும் கிழிந்த பாவாடையும்!

சமுத்தி லோனும் சாராய பாறும்!

மட்டக்களப்பு மது பாவனையில் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் நுன் கடன் பெறுவதிலும் மட் மக்கள் முதலிடம் வகிக்கின்றனர்.
கண்ட கண்ட நிறுவனங்களில் எல்லாம் லோன் லோனாய் எடுத்துவிட்டு கதறி திரியும் எம் இனப்பெண்கள்.

முன்பெல்லாம் கணவன் உழைத்துவரும் பணத்தில் பக்குவுமாய் சிலவு செய்து மிச்சம் பிடித்த குடும்ப குத்துவிளக்குகள் இப்போ கஸ்டப்பட்டு குடும்பத்துக்காய் உழைக்கும் கணவனுக்கோ பிள்ளைகளுக்கோ நல்ல கறியுடன் சோறு கொடுப்பதில்லை. நல்ல உடுதுணி வாங்குவதில்லை பிள்ளைகளுக்கு கல்விக்கு கூட காசு சிலவழிப்பதில்லை காரணம்? 
அவ்வளவு லோன் 
ஒவ்வொரு சீதேவிகளும் கிழமை லோன், மாத லோன் என்று பல லோன்களை எடுத்தது போதாமல் மற்றவர்கள் மூலமும் லோன்களை எடுத்துள்ளனர். 
இரவுல தூக்கமும் இல்ல. விடிஞ்சா லோன் காசு கட்டனும். யாருட்ட மாறலாம் என்ற நினைப்புடன் தூங்க முடியாமல் தவிக்கிறதும் .அப்பிடி தூங்கினா கனவிலை லோன் காறன் கோன் அடிக்கிறமாதிரி கேக்கும். திடுக்கிட்டு எழும்பினா அது கனவு!
அதுக்கப்புறம் எப்படி வரும் நித்திரை ? கடவுளே விடிய கூடாது விடிய கூடாது என்றால் விடியாமல் விடுமா?

விடிஞ்சா இருக்கின்ற காசு லோன் கட்ட காணாது பானைக்குள்ள அரிசியும் இல்லை! பக்கத்து வீட்டு காறியை வேலியால கூப்பிட்டா அவளும் இல்லை!

பாவம் அவள். இவள விட அவளுக்கு லோன் கூடுதல். கத்திக் கத்தி கூப்பிட்டுத்து வேலியால பூந்தா பாழாப்போன வேலிக் கம்பி பாவாடையில அரைவாசிய பறித்தே எடுத்திடும்.வேலிக்கு தெரியுமா இவள் பட்ட கடன்?
லோன் கட்டுவதற்க்கு ஐந்தே நிமிடம் இருக்கு அதுக்குள்ள காசுபிரட்டனும் கிழிஞ்ச பாவாடைய பாக்கிறதா காசை தேடுறதா? இப்படி அவள் ஓடி திரியுறது
ஒரு புறம் இருக்க, நம்மட ஆண் சிங்கங்கள் சொல்லவா வேனும் 
பொண்டாட்டி என்ன லோன் எடுத்தாலும் சரி அன்று இரவைக்கு வுறைலர் கோழியும் சப்பட்ட போத்தலுமா. மச்சானுக்கு அன்றைக்கு குஷிதான் அன்று இரவு அவருதான் ஹீரோ. 
இப்படியே போனா ஏற்க்கனவே காதில கழுத்தில எதுவுமே இல்லை எல்லாம் நக கடை லொக்கருல பத்திரமா இருக்கு. படுக்க பாயும் இல்லை. வீட்டு உறுதியும் வட்டி காறிட வீட்டு பொட்டிக்குள்ள!
வீட்டுல நிம்மதியில்லை பிள்ளைகளுக்கு சாப்பாடும் இல்லை. லோன் காறன் வீட்டு வாசல்வர வந்துட்டான். ஊரு முழுக்க கடன். இருப்பது ஒரே வழி?
நான்கு சான் கயிறு!
அதுவாங்கவும் பணம் இல்லை. கை கொடுத்தது இந்தியனிடம் கடனுக்கு வாங்கின சாறி!

மறு நாள் செய்தி:- கடன் தொல்லையால் ஐந்து பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை!

சில மாதங்களின் பின்- கணவன் புது மாப்பிள்ள[ அடுத்த கல்யாணம்]
பிள்ளைகள் றோட்ல!
இதுதான் இன்றய நிலை

முகநூலில் படித்தது 

Edited by தனிக்காட்டு ராஜா

  • தொடங்கியவர்

 இறுதி வரை போராடினோம் – முடியவில்லை – போகின்றோம் – அரியாலையில் தவறான முடிவால் உயிரை மாய்த்த குடும்பம்.

suicide44.gif

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.அரியாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளனர். அரியாலை எ.வி.ஒழுங்கையை சேர்ந்த தாய் , இரு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளை அடங்கலாக நால்வரும் தவறான முடிவால் உயிரை மாய்த்துள்ளனர்.
 
தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் உயிரிழப்பு. 
 
உயரிழந்தவர்கள் அதே இடத்தை சேர்ந்த கிருஷாந்தன் சுநேந்திரா (வயது 28) மூத்த மகளான கிருஷாந்தன் ஹர்ஷா (வயது 04) இரண்டவாது மகனான கிருஷாந்தன் சஜித் (வயது 02) மற்றும் மூன்றாவது மகனான கிருஷாந்தன் சரவணா (வயது 01) ஆகிய மூவருமே உயரிழந்தவர்கள் ஆவார்கள்.
 
கணவன் 58 நாட்களுக்கு முன்னர் தற்கொலை. 
 
இவர்களின் குடும்ப தலைவரான கணவன் இராமன் கிருஷாந்தன் கடந்த 03. 09. 2017ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன் உயிரிழந்த சோகத்தில் இதுவரை காலமும் வாழ்ந்தவர்கள் இன்று தவறான முடிவெடுத்து தனது பிள்ளைகளுடன் மனைவி உயிரை மாய்த்துள்ளார்.
 
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,
 
1 கோடியே 17 இலட்சம் கடன் கொடுப்பு. 
 
இக் குடும்பத்தின் தலைவரான கணவன் கிருஷாந்தன் தனது குடும்ப நண்பர் ஒருவரிடம் ஒரு கோடியே 17 இலட்ச ரூபாய் பணத்தினை கடனாக  கொடுத்துள்ளார். அக் கடன் தொகையை நண்பர் கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில் பெருமளவான கடன் கொடுத்த காரணத்தால் கணவன் பூர்விக சொத்துக்கள் சிலவற்றை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
 
ஏமாற்றம்.
 
தனது நண்பனுக்கு கடன் கொடுக்கும் போது சாட்சியமாக நண்பனின் மனைவி மற்றும் நண்பனின் தம்பி ஆகியோர் நின்று இருந்தனர். கடன் எந்த விதமான பொறுப்புக்களும் இல்லாமல் நட்பின் அடிப்படையில் , நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு உள்ளது.
 
கடனை ஆறு மாத காலத்திற்கு பின்னர் திருப்பி கேட்ட போது , காசோலையை வழங்கியுள்ளார். குறித்த காசோலையை வங்கியில் வைப்பு செய்ய போது , வங்கியில் பணம் இல்லாமல் அது திரும்பியுள்ளது.
 
கடனை திருப்பி கொடுக்க மறுப்பு. 
 
அதன் பின்னர் கடனை கேட்க நண்பன் , நண்பனின் , மனைவி மற்றும் நண்பனின் தம்பியிடம் சென்ற போது வாங்கிய கடனை கொடுக்காது ஏமாற்றியதுடன் முடிந்தால் பணத்தினை வாங்கி பார் என சவால் விட்டுள்ளனர். அத்துடன் தம்பியையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
 
10 இலட்சம் திருப்பி கொடுப்பு. 
 
அதன் பின்னர் கடன் தொகை திருப்பி தராது ஏமாற்றியமை தொடர்பில்  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் பின்னர் பத்து இலட்ச ரூபாய் பணத்தினை சிறிது சிறிதாக கடனை பெற்றவர் கொடுத்துள்ளார். மிகுதி பணம் கொடுக்கவில்லை.
 
குடும்பமாக உயிரை மாய்க்க முயற்சி. 
 
அந்நிலையில் கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி வழக்குக்காக நீதிமன்றுக்கு சென்று வந்த பின்னர் மறுநாள் 31ஆம் திகதி குடும்பத்துடன் உயிரை மாய்த்து கொள்வதற்கு முயற்சித்துள்ளார்கள். முதலில் கணவன் மருந்தை குடித்துள்ளார். அவர் மருந்தை குடித்து அவஸ்தைப்பட்டத்தை பொறுக்க முடியாத மனைவி தானும் மருந்தை அருந்தாது தனது பிள்ளைகளுக்கும் மருந்தை அருந்த கொடுக்காது கணவனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக கணவனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்று அவரை காப்பாற்றும் முயற்சித்துள்ளார்.
 
கணவன் உயிரிழப்பு. 
 
மருத்துவ மனையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் கணவனான இராமன் கிருஷாந்தன் கடந்த மாதம் 03ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கணவன் சிகிச்சை பெறும் வேளையில் வைத்திய சாலையில் வைத்து தாய் , மற்றும் சிறிய தாயிடம் தான் உயிரிழந்தால் , தனது மனைவி பிள்ளைகளை கவனமாக பார்க்குமாறு உறுதி வாங்கியுள்ளார்.
 
மனைவி பிள்ளைகள் உயிரிழப்பு. 
 
கணவனின் உயிரிழப்பின் பின்னர் மனைவி பிள்ளைகளை உறவினர்கள் பாதுகாப்பாக பார்த்துகொண்ட நிலையில் இன்றைய தினம் வீட்டில் தாயார் மட்டும் இருந்த நிலையில் அவரை தூங்க வைத்த பின்னர் தனது பிள்ளைகளின் உயிரை மாய்த்த பின்னர் , தானும் மாய்த்துள்ளார் சுநேந்திரா எனும் குடும்ப பெண்.
 
அவர் தனது உயிரை மாய்த்து கொள்ள முதல் , யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் தனது குடும்பத்தினருக்கு இரு கடிதங்களை எழுதி வைத்துள்ளார்.
 
மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் , 
 
” எனது கணவர் கடன் கொடுத்து ஏமாந்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். அவர் இல்லாத வாழ்க்கையை வாழ முடியவில்லை.  பிள்ளைகளுக்காக வாழலாம் என நினைத்தால் , அப்பா எப்ப வருவார் ? அப்பா கண் துறந்துட்டாரா ? எப்ப பார்ப்பார் ? ஏன் வரவில்லை ? போன்ற கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை.
 
எனது கணவரின் தற்கொலைக்கு ஸ்ரீசங்கர் அவர் மனைவி சுகன்ஜா மற்றும் ஸ்ரீசங்கரின் தம்பி ஸ்ரீதரன் ஆகியோரே காரணம் தவறு செய்பவனை விட தவறு செய்ய தூண்டுபவனே குற்றவாளி என்பது போல நாங்கள் இந்த நிலைக்கு வர இவர்களே காரணம்.
 
உயிரை விட மேலானது எதுவுமில்லை எங்கள் பக்க நியாயத்தை நிரூபிக்க , கடவுள் ஒரு சிலரையே சத்தியத்தை காப்பாற்ற இந்த பூவுலகத்தில் படைத்துள்ளார். அந்த வகையில் நாங்கள் உங்களை நினைக்கின்றோம். இந்த வழக்கை தங்களின் பார்வையின் கீழ் எடுத்து நியாயத்தை பெற்றுக்கொடுங்கள். என அக்கடிதத்தில் எழுதப்பட்டு உள்ளது.
 
 
அதேவேளை தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில் , 
 
என்னை மன்னித்து விடுங்கள் பிறந்தவர்கள் யாவரும் இறப்பவர்களே .. ஒன்றை மட்டும் நினைத்து ஆறுதல்படுத்துங்கள். உங்கள் பிள்ளையின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி உள்ளீர்கள். என் புருஷன் தந்த வாழ்வும் நிறைவானதே.
 
நாங்கள் குடும்பமாக நீடித்த காலம் வாழ ஆசைப்பட்டோம். இறுதி வரை அதற்காக போராடினோம். முடியவில்லை. போகின்றோம். என்னுடையதும் என் பிள்ளைகளினதும் , இறுதி சடங்கை என் வீட்டார் நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் என் கணவன் வீட்டு பகுதிக்கு கொடுக்க வேண்டாம். இதுவே என் விருப்பம்.  எம் மரண வீட்டை மிகவும் எளிமையாக மேளம் போஸ்மார்ட்டம் இல்லாமல் உடனடியாக எடுக்கவும். என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 2222222-3.jpg

http://globaltamilnews.net/archives/47190

  • தொடங்கியவர்

மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை; எழுதிவைத்த கடிதங்கள் சிக்கின

 

 

“உயிரிழந்த  தந்தை குறித்து  எனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை.  அப்பா எப்ப வருவார்? அப்பா கண்திறந்திட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை?  போஸ்மோட்டத்தில்  தந்தையைப் பார்த்துவிட்டு  எங்கட அப்பா  வெள்ளைதானே ஏன் கறுத்தவர்?  வெள்ளையா வருவாரா?  அப்பா வர நாங்கள்  பாக்குக்கு போவோம் என்று  அடுக்கடுக்காக என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. எத்தனை காலம் ஏமாற்றுவது?” என, சுனித்ரா எழுதிய கடிதம் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.

download__1_.jpg

யாழ்ப்பாணம், அரியாலையில் மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் எழுதிய கடைசிக் கடிதம் பொலிஸில் சிக்கியுள்ளது. தனது பெற்றோருக்கும் நீதிபதிக்கும் என தனித்தனியே இரண்டு கடிதங்களை அவர் எழுதி வைத்திருக்கிறார்.

யாழ்ப்பாணம் அரியாலை  ஏ.வி.  ஒழுங்கையைச் சேர்ந்தவர். கிருஷாந்தன்  சுனித்திரா (வயது 28)   இவரது பிள்ளைகள் ஹர்ஷா (4),  இரட்டையர்களான  தஜித், சரவணன் (2).

சுனித்ராவின் கணவர் கிருஷாந்தன் கடந்த மாதம் மூன்றாம் திகதி கடன் தொல்லை தாங்க முடியாது தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சுனித்ராவும் பிள்ளைகளும் அவரது பெற்றோருடனேயே வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையிலேயே அவரது மனைவியும் மூன்று குழந்தைகளுக்கும் நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்டனர். ஐஸ்கிறீமில் நஞ்சைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்த பின் தானும் அருந்தி சுனித்ரா உயிரிழந்துள்ளார்.

குடும்ப நண்பர் ஒருவருக்கு 1கோடியே 17 இலட்சம் ரூபாவைக் கடனாக கொடுத்ததாகவும், அதனை மீளப்பெற முடியாத நிலையிலேயே கிருஷாந்தன் தற்கொலை செய்துகொண்டதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. கணவனை இழந்த மனைவி  கடந்த ஒருமாத காலமாக பெரும் கவலையுடன் வாழ்ந்துவந்த நிலையிலேயே  இந்த  துயரமான முடிவுக்கு  வந்துள்ளதாக   தெரிவிக்கப்படுகிறது. 

download__2_.jpg

தற்கொலை செய்துகொண்ட  இந்த இளம்பெண்  தனது அம்மா, அப்பா,  அண்ணா, தம்பி ஆகியோரை விழித்து  எழுதியுள்ள  கடிதத்தில்  தான்  தற்கொலை செய்வதற்கான  காரணத்தை   தெரிவித்துள்ளார். 

“என்னை மன்னியுங்கள். பிறந்தவர்கள் யாவரும்  இறப்பவர்களே! ஒன்றை மட்டும் நினைத்து மனதை ஆறுதல்படுத்துங்கள்.  உங்கள் பிள்ளையின்  எல்லா ஆசைகளையும்  நிறைவேற்றியுள்ளீர்கள்.  வாழ்ந்த வருட காலம் குறைவானாலும் நான் இறைவனின்  அனுக்கிரகத்தைப் பெற்றவள். நான் உங்களுடன்  வாழ்ந்த வாழ்வும் நிறைவானதே. ஆயிரம் குறைகள் சூழ இருந்தும் அவை யாவும்  ஒரு தூசிக்கு சமனாக வைத்து மேலோங்கிய அன்பைத் தந்து என் புருஷன் தந்த வாழ்வும் நிறைவானதே. ஒரேயொரு கவலைதான். நாங்கள்  குடும்பமாக நீடித்த காலம் வாழ ஆசைப்பட்டோம். இறுதிவரை அதற்காக  போராடினோம்.  ஆனால் முடியவில்லை. போகின்றோம்.  என் அம்மாவை  கவனித்துக்கொள்ளுங்கள்,  என்னைவிட  என் புருஷன்  அவாவை  இறுதிக்காலம் வைத்து பார்க்க ஆசைப்பட்டார். அதுவும் முடியவில்லை.  நாங்கள் போகின்றோம்” என்று எழுதப்பட்டுள்ளது. 

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், குடும்ப நண்பருக்கு கடன் கொடுத்த விடயத்தினால்  கணவர்  தற்கொலை செய்துகொண்டதாகவும் இதனால்  கணவன் இல்லாத வாழ்க்கையை வாழ முடியவில்லை  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உயிரிழந்த  தந்தை குறித்து  எனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை.  அப்பா எப்ப வருவார்? அப்பா கண்திறந்திட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை?  போஸ்மோட்டத்தில்  தந்தையைப் பார்த்துவிட்டு  எங்கட அப்பா  வெள்ளைதானே ஏன் கறுத்தவர்?  வெள்ளையா வருவாரா?  அப்பா வர நாங்கள்  பாக்குக்கு போவோம் என்று  அடுக்கடுக்காக என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. எத்தனை காலம் ஏமாற்றுவது? என் கணவரின் இறுதிக்கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளதுடன்  தாம்  கடன் கொடுத்தவரின்  பெயர் விபரங்களும்  அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நால்வரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ். பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

http://www.virakesari.lk/article/26361

கடந்த வாரம் தமிழகத்தில் கந்து வட்டிக் கொடுமையால் தாமும் தன் பிள்ளைகள் இருவரையும் தீக்குளிக்க வைத்து ஒரு குடும்பமே மாண்டு போனது

இன்று யாழ்ப்பாணத்தில் கடன் கொடுத்தவர் ஏமாற்றியதால் இரு சிறுபிள்ளைகள் உட்பட நால்வர் கொண்ட குடும்பம் மாண்டுள்ளது.

பிள்ளைகளை நினைக்கும் போது நெஞ்சு பதறுகின்றது. அம்மா ஐஸ்கிரீம் தருகின்றா என நினைச்சு எவ்வளவு சந்தோசப்பட்டு சாப்பிட்டு இருப்பினம்...

போரால் கணவனை கண்ணுக்கு முன்னால் பறிகொடுத்த பின்னும், கணவன் காணாமல் போன பின்னும் வாழும் எத்தனையோ பெண்களை கண்ட பின்னும் இந்த தாய் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கின்றாரே.....

  • தொடங்கியவர்

நிழலி,   2 பிள்ளைகள் அல்ல 3 பிள்ளைகளும் தாயும் இன்று. 2 மாதத்திற்க்கு முன் தகப்பன்.

9 minutes ago, நிழலி said:

கடந்த வாரம் தமிழகத்தில் கந்து வட்டிக் கொடுமையால் தாமும் தன் பிள்ளைகள் இருவரையும் தீக்குளிக்க வைத்து ஒரு குடும்பமே மாண்டு போனது

இன்று யாழ்ப்பாணத்தில் கடன் கொடுத்தவர் ஏமாற்றியதால் இரு சிறுபிள்ளைகள் உட்பட நால்வர் கொண்ட குடும்பம் மாண்டுள்ளது.

பிள்ளைகளை நினைக்கும் போது நெஞ்சு பதறுகின்றது. அம்மா ஐஸ்கிரீம் தருகின்றா என நினைச்சு எவ்வளவு சந்தோசப்பட்டு சாப்பிட்டு இருப்பினம்...

போரால் கணவனை கண்ணுக்கு முன்னால் பறிகொடுத்த பின்னும், கணவன் காணாமல் போன பின்னும் வாழும் எத்தனையோ பெண்களை கண்ட பின்னும் இந்த தாய் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கின்றாரே.....

 

பாவம் அந்த பிள்ளைகள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள்tw_cry:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சோகமாக உள்ளது .........
நம்பிக்கை துரோகம் ஒரு குடும்பத்தை கொன்று போட்டு உள்ளது 

அவசரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் 
இது உண்மையில் தற்கொலை தானா ? என்ற முழு மருத்துவ பரிசோதனையும் 
முக்கியம் .......... கொலையாக கூட இருக்கலாம். 

எங்கள் விரலுக்கு ஏற்ற வீக்கத்துக்குள் இருக்க பழக வேண்டும் 
கடன் கொடுப்பது 
வாங்குவது எனது என்றாலும் எங்கள் வருமானத்துக்குள் உள் பட்டு 
இருக்க வேண்டும். 
ஆடம்பர பகடை வாழ்க்கை தமிழனுக்கு ஊறிப்போன ஒன்று ..... இன்னொரு மனிதனை 
கீழே தள்ளி தான் உயர் சாதி என்று நெஞ்சு நிமித்த துணிந்த மனிதனிடம் .... மனிதம் இருக்கவே 
இருக்காது என்ற எண்ணம் பலருக்கு மறந்து போகிறது. 

1990களில் ஐரோப்பாவில் சீட்டு எடுத்துக்கொண்டு ஓடுவது 
இப்படி கடன் வாங்கி கொண்டு ஓடுவது என்பது இயல்பாக இருந்தது 
இப்போ ஒரே நாட்டில் கால் ஊன்றி பாஸ்போர்ட் விசா என்பதால் 
குறைந்து விட்ட்து என்று நினைக்கிறேன். 
அப்படி கடன் கொடுத்து ஏமாந்த சிலரை எனக்கு தனிப்பட தெரியும் 
அவர்கள் இன்னமும் மீளவில்லை... 
இவர்களும் கலர் காட்டத்தான் அவரிடம் இவரிடம் மாறி கொடுப்பது 
உன்னால் மட்டும்தான் இது முடியும் என்றால் ........ இவர்களுக்கு சொர்க்கத்துக்கு 
போன மாதிரி ஒரு உணர்வு வருகிறது என்று நினைக்கிறேன்.

இவளவு தொகையை கொடுக்கும்போது ...
ஏன் வேண்டுகிறார்கள் ...... ? அது சரியாக போகாது போனால் 
எப்படி திருப்பி தருவார்கள் ? 
என்ற கேள்விகள் வேண்டாமா ? 

  • கருத்துக்கள உறவுகள்

suicide44.gif

இந்த,  மண்ணில் பிறந்த  பிள்ளைகள்... என்ன பாவம் செய்தார்கள்? மனது வலிக்கின்றது.

இந்தப் படத்தில்,  தாயின்... கழுத்தில்,  காதில்  கூட  ஒரு நகையும் இல்லை.
அப்படி இருக்க.... இவர்கள்,  1 கோடி 17   இலட்சம் ரூபாயை.... எப்படி,  கடன் கொடுக்க... மனம் வந்தது? 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சோகமாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தமாக சேர்த்து தருகிறேன் என்றுதான் சிறுக சிறுக வாங்கி கொள்கிறார்கள் மொத்தமாக வந்த பின்  ஆதாரம் இருக்கிறதா என கேட்டவர்களூம் இருக்கிறார்கள் 

நம்பிக்கை துரோகம் மட்டும் நடக்கிறது நான் அறிந்த வகையில் 

45 minutes ago, நவீனன் said:

நிழலி,   2 பிள்ளைகள் அல்ல 3 பிள்ளைகளும் தாயும் இன்று. 2 மாதத்திற்க்கு முன் தகப்பன்.

 

பாவம் அந்த பிள்ளைகள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள்tw_cry:

ஓம் நவீனன் 3 பிள்ளைகள் என்றது சரி ..

  • கருத்துக்கள உறவுகள்

download__2_.jpg

 

இறுதிக் கடிதத்தை,  பார்க்க...
"அல்லி லூயா",   "யகோவா"  போன்ற... மதத்தவுடன்  சம்பந்தப் பட்டவர்கள்  போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

suicide44.gif

இந்த,  மண்ணில் பிறந்த  பிள்ளைகள்... என்ன பாவம் செய்தார்கள்? மனது வலிக்கின்றது.

இந்தப் படத்தில்,  தாயின்... கழுத்தில்,  காதில்  கூட  ஒரு நகையும் இல்லை.
அப்படி இருக்க.... இவர்கள்,  1 கோடி 17   இலட்சம் ரூபாயை.... எப்படி,  கடன் கொடுக்க... மனம் வந்தது? 

பணத்தின் பெறுமதி அறியாத இந்த சின்னனுகளை கொன்றுவிட்டார்களே !  பணத்தை வாங்கி எமத்தியவர்கள் இந்த குழந்தைகளுக்கு என்ன பதில் வைத்துள்ளார்களோ தெரியாது. இவ்வளவு பெரிய தொகை எப்படி கைமாற்ற முடிந்தது என்பது குழப்பமானது. 

இந்த உலகில் மனதில் குணத்தில் மாற்றத்தைச் செய்வதில் பணத்திற்கு நிகர் வேறு ஒன்றும் இல்லை.சந்தோசம் கவலை என்பதில் பணம் ஏற்படுத்தும் தாக்கம் வலியது. கையில் பணம் உள்ளபோதும் இல்லத போதும் மனம் எவ்வளவு மாறுதலுக்கு உட்படுகின்றது. ! சொத்துக்காக அண்ணன் தம்பிகளை சாகடிப்பது தாய்தந்தையரை கொல்வது. காப்பீட்டுப் பணத்திற்காக பெற்றவர்களையே கொன்ற பிள்ளைகள் இருக்கின்றார்கள். நண்பன் எம்மாத்திரம் !! மனித மனம் இரக்கம் அன்பு காதல் காமம் விரேதம் குரோதம் விசுவாசம் நம்பிக்கைத் துரோகம் என எல்லாம் கலந்த கலவை என்ற அறிவு எல்லா உறவு நிலைக்கும் அவசியம். நம்பிக்கை அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் செய்பவர்களுக்கு இந்த சம்பவத்தில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.