Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உவகை (மணமக்கள் இணைப்பு)

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு தகவல் பரிமாற்றம்

உவகையுடன் தொடர்புகளை மேற்கொள்ள உவகை நிலைகொண்டுள்ள  இடத்திலிருந்து தொலைவில் இருப்பவர்கள் தங்கள் தொடர்புகளை மேற்கொள்ள இலகுவான வழி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான லிங்கை இங்கு இணைக்கிறேன். உவகையுடனான தகவல் பரிமாற்றங்கள் இரகசியம் பேணப்படும். இணைய வெளிகளில் தோன்றாது. இந்த லிங் உங்களுக்கும் உதவலாம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவலாம்  கவனத்தில் கொள்க.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfVLzf396sA9Kq9Pak9-9VfL-REq7l17yiVfWsHYJqP7nGMzw/viewform?usp=sf_link 

ஜிமெயில் மூலமாகவே இந்த லிங்கை கையாளலாம். நேரடியாக வினாக்களுக்கான பதில்களை பதிவிடலாம்

Edited by வல்வை சகாறா

  • Replies 68
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு, நன்றி... வல்வை சகாறா. :)
நல்ல  பொருத்தமான இடமாக... ஜேர்மனியில், எனது மாகாணத்தில்.... வரன்  வந்தால்...
எனக்காக... ரிசர்வ் பண்ணி வையுங்கள். 

நாம்.. எமது பிள்ளைகளை,  அந்நிய நாட்டவரையோ... 
வேறு  நாட்டுக்கோ அனுப்பி வைக்கும், எண்ணம் எமக்கு இல்லை.
மருமக்கள் எமது அயலில்.. இருக்க வேண்டும் என்பதையே... விரும்புகின்றோம்.

எமது தாய், தந்தையர்... எம்மை, இங்கு  அனுப்பி வைத்து விட்டு,
பிள்ளைகளை.. பிரிந்த துயரை, தாங்கும் சக்தி... எமக்கு  இல்லை.

Edited by தமிழ் சிறி

ஏன் சிறி அண்ணா நாட்டில இருந்து வரன் பார்த்த்து உங்களிற்கு பக்கத்தில் கூப்பிட்டு வைத்திருக்கலாம் தானே

அக்கா மடல் போட்டிருக்கன் பாருங்க 

Edited by அபராஜிதன்

  • 7 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

42505239_10155691859721551_5225543493358

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் தாயகத்தில் இருக்கும் உறவுகளும் இலகுவாக இணைய கீழ்க்காணும் தொடுப்பை அழுத்தி gmail மூலம் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfVLzf396sA9Kq9Pak9-9VfL-REq7l17yiVfWsHYJqP7nGMzw/viewform

முக்கியமான விடயத்திற்கு வாறன்...........................

  "உவகை" மணமக்கள் இணைப்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் உறவுகள் தொடர்பு சார்ந்து சரியான தகவலையும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள சரியான தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல்களையும் பதிவிட தவறவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகாறா அக்கா,

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 "உவகை" மணமக்கள் இணைப்பு... மூலமாக,
வல்வை  சகாறாவிடம், சில நிமிடங்களுக்கு முன்,
நானும், மனைவியும்... தொலை பேசியில்.. உரையாடினோம்.
மிகவும்... பயன் உள்ள, உரையாடலாக,  இருந்தமையையிட்டு... மகிழ்ச்சி  அடைகின்றேன். ❤️

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

 "உவகை" மணமக்கள் இணைப்பு... மூலமாக,
வல்வை  சகாறாவிடம், சில நிமிடங்களுக்கு முன்,
நானும், மனைவியும்... தொலை பேசியில்.. உரையாடினோம்.
மிகவும்... பயன் உள்ள, உரையாடலாக,  இருந்தமையையிட்டு... மகிழ்ச்சி  அடைகின்றேன். ❤️

இன்று வெள்ளிக்கிழமை யாழில் உலாவும் இலையான் கில்லர் யாழிற்கு விடுதலை கொடுத்துவிட்டு என்னோடு உரையாடினார். மகிழ்ச்சி. யாழ் நண்பர்கள் சகிதம் லொலிப்பொப் பார்ட்டி வைப்போம். அதுவரை இலையான் கில்லரின் இரகசியத்தை பாதுகாப்பதாக உறுதி எடுக்கிறேன் 😉

உவகை மூலமாக யாழின் கருத்துக்கள நண்பர்கள் மட்டுமல்ல யாழைத் தொடர்ந்து வாசிக்கும் வாசக வட்டத்தினரும் தொடர்புகளை ஏற்படுத்தி வருகை தந்துள்ளார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் எல்லோருடைய எழுத்துக்களையும் எமக்கு அப்பால் இன்னொரு உலகம் பார்த்தும், படித்தும் இரசித்தும் வருவதை அவர்கள் வாயிலாக அறிய முடிந்தது. முகம் தெரியாமலே நம்மை நேசிக்கவும் பலர் உள்ளனர். நண்பர்களே எனக்கு மட்டுமில்லை இங்குள்ள கிண்டல் மன்னர்களுக்கு அதிகம்....

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

 "உவகை" மணமக்கள் இணைப்பு... மூலமாக,
வல்வை  சகாறாவிடம், சில நிமிடங்களுக்கு முன்,
நானும், மனைவியும்... தொலை பேசியில்.. உரையாடினோம்.
மிகவும்... பயன் உள்ள, உரையாடலாக,  இருந்தமையையிட்டு... மகிழ்ச்சி  அடைகின்றேன். ❤️

ஆகா பிள்ளைகள் படிப்பு முடிந்த கையோடு ஆக்களை அமுக்கிற பிளான் போல.
நடக்கட்டும் நடக்கட்டும்.

28 minutes ago, வல்வை சகாறா said:

அதுவரை இலையான் கில்லரின் இரகசியத்தை பாதுகாப்பதாக உறுதி எடுக்கிறேன் 😉

இன்னும் என்ன ரகசியம்?எல்லாம் தெரிந்தது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்பு தொழில்நுட்பம் எங்கேயோ போயிட்டுது நீங்கள் கூகிள் படிவத்தைதான் (Google forms)  இப்போதும் நிரப்பசொல்லி கேட்கிறீங்க. கைத்தொலைபேசியில் பயன்படுத்த அப் (smartphone apps) ஏதாவது தயாரித்தால் நன்கு உதவுமே. அப்படி ஏதும் இருக்கா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்னும் என்ன ரகசியம்?எல்லாம் தெரிந்தது தானே.

இலையான் கில்லர் முதுமையில் பேச்சுத்துணைக்கு பாட்னர் வேணும் என்று சொன்னதை நான் யாருக்கும் சொல்லேல்லையே.... யாரு சொல்லியிருப்பா??????🙄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vanangaamudi said:

தொடர்பு தொழில்நுட்பம் எங்கேயோ போயிட்டுது நீங்கள் கூகிள் படிவத்தைதான் (Google forms)  இப்போதும் நிரப்பசொல்லி கேட்கிறீங்க. கைத்தொலைபேசியில் பயன்படுத்த அப் (smartphone apps) ஏதாவது தயாரித்தால் நன்கு உதவுமே. அப்படி ஏதும் இருக்கா?

யோவ் வணங்காமுடி இதையே இன்னும் நிரப்பத்தெரியாமல் நம்மாட்கள் அல்லாடுறாங்க ஸ்மார்ட் போனில் 'அப்"  :) சுத்தம்

இந்தமாதிரி யோசனை நல்லாத்தான் இருக்கு ஆனா நடைமுறைக்கு நம்மவர்களிடம் இப்போதைக்கு சாத்தியம் ஆகாது. இப்பவே திருமண  வெப் மூலம் தமக்கான வரன்களைத்தேடிய பலரும் பல சங்கடங்களோடு என்னிடம் பதிவு செய்கின்றனர். இதில் திருமண வெப்புகள் மூலம் குழப்பமானர்வர்கள் உவகை மூலம் குழப்பங்கள் விலக்கப்பட்டு வரும் சம்பவங்களும் நடக்கின்றன. இணையவெளிப் பரிச்சயம் குறைந்தவர்கள் அதனைப்பயன்படுத்தத் தெரியாமல் தொடர்ந்தும் முயற்சி செய்யமுடியாமலும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு அவசியப்பேச்சை ஏற்படுத்த தகுந்த சூழல் இணைப்பாளர் இல்லாமல் அரைகுறையாக விடுபட்டு செய்வதறியாது நிற்கின்றனர். அநேகமாக பெற்றோர்தான் பிள்ளைகளுக்கான வரன்களைத் தேடுகிறார்கள். எல்லாப் பெற்றோர்களும் இணைய வெளியில் சுழியோடுபவர்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதில். வாஸ்த்தவம்தான் ஏத்துக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/29/2018 at 3:56 AM, வல்வை சகாறா said:

இலையான் கில்லர் முதுமையில் பேச்சுத்துணைக்கு பாட்னர் வேணும் என்று சொன்னதை நான் யாருக்கும் சொல்லேல்லையே.... யாரு சொல்லியிருப்பா??????🙄

எனக்குத் தெரியும். வாங்கிற பேச்சு காணாது எண்டு இணையம் மூலமாகவும் பேச்சு வாங்க ஆள் தேடுகிறார். அவற்ர ராசி அப்படி.....! 😁

அது கிடக்கட்டும்,இப்பவும் அந்தமாதிரி பார்ட்னர் இருக்கிறார்களா,சும்மா பேச்சு துணைக்குத்தான்....! 😋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

எனக்குத் தெரியும். வாங்கிற பேச்சு காணாது எண்டு இணையம் மூலமாகவும் பேச்சு வாங்க ஆள் தேடுகிறார். அவற்ர ராசி அப்படி.....! 😁

அது கிடக்கட்டும்,இப்பவும் அந்தமாதிரி பார்ட்னர் இருக்கிறார்களா,சும்மா பேச்சு துணைக்குத்தான்....! 😋

சிலருக்கு அப்படி ஒரு ராசி ஆனா ஒன்று அதிகமான ஆண்கள் இப்படி பேச்சு வாங்குவதே சொர்க்கம் என்று இருக்கிறார்கள்... இவரும் அந்த ரகம்தான் விட்டுவிடுவம்...

ஆமா உங்களுக்கும் பேச்சுத்துணைக்கா??????? வேறு ஒன்றுக்கும் இல்லைத்தானே...கொஞ்சம் சந்தேகமாக்கிடக்கு துருச்சாமி குறுநாவலை நீங்கள்தானே எழுதினீர்கள்....😋 சாமிகளே திருந்தினால் பித்தலாட்டம் குறைந்துவிடும். சரி பரவாயில்லை உங்களுக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் வேணுமென்றால் ஒரு 60 ஐ தாண்டியவர் ஓகேயா? மணமக்கள் லிஸ்டில் 55 வயதுவரை பதிவில் இருக்கிறார்கள் அதனால் 60 இற்கு குறைந்தவர்கள் பேச்சுத்துணைக்கு சாத்தியப்படமாட்டார்கள்..... அத்தோடு பேச்சுத்துணைக்கு எதிர்ப்பாலர் தேவையில்லைத்தானே... உங்களுக்கான விண்ணப்பக்கட்டணம் டபிளாக இருக்கும் பரவாயில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வல்வை சகாறா said:

மன்னிக்கவும் சகோதரி, நான் பேச்சுத் துணை  என்பதை  நீங்கள் பார்மஸி துணை என புரிந்து கொண்டீர்களோ என விசனப்படுகிறேன். வேளாவேளைக்கு மருந்துகள் எடுத்து குடுத்து ,கை கால் அமுக்கி விட்டு ........அது சரிவராது.  சராசரி  25ல் இருந்து 20 க்குள் பரவாயில்லை என நினைக்கிறன்...... அதுக்கும் குறைவு எண்டால் வேண்டாம். ஜெயிலில  களி தின்ன இப்ப உடம்பு ஒத்துழைக்காது.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

மன்னிக்கவும் சகோதரி, நான் பேச்சுத் துணை  என்பதை  நீங்கள் பார்மஸி துணை என புரிந்து கொண்டீர்களோ என விசனப்படுகிறேன். வேளாவேளைக்கு மருந்துகள் எடுத்து குடுத்து ,கை கால் அமுக்கி விட்டு ........அது சரிவராது.  சராசரி  25ல் இருந்து 20 க்குள் பரவாயில்லை என நினைக்கிறன்...... 

ஸ்ஸப்பா... ரொம்பக் கஷ்டம்.. ! (உங்கள் துணைவியருக்கு..:))

இந்த வயதிலும் லொள்ளு..!! exhorbite-1.gif

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வல்வை சகாறா said:

அத்தோடு பேச்சுத்துணைக்கு எதிர்ப்பாலர் தேவையில்லைத்தானே... உங்களுக்கான விண்ணப்பக்கட்டணம் டபிளாக இருக்கும் பரவாயில்லையா?

இதைவிட யாழே பரவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/30/2018 at 12:51 PM, suvy said:

😁

அது கிடக்கட்டும்,இப்பவும் அந்தமாதிரி பார்ட்னர் இருக்கிறார்களா,சும்மா பேச்சு துணைக்குத்தான்....! 😋

சுவியர் பேசாமல் ஒரு கிளியை வாங்கி வளவுங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

சுவியர் பேசாமல் ஒரு கிளியை வாங்கி வளவுங்கோவன்.

அது பறந்திட்டுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.