Jump to content

இன்றைக்கு முழுகப்போகிறோம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 நவநாகரீகமான உலகில் முழுகப்போகிறேன் என்றால் இவ்வளவு நேரமும் நன்றாக இருந்தவருக்கு இப்ப என்ன நடந்தது என்று யோசிப்பார்கள்.ஆனால் 1960 களிலும் அதற்கு முன்னரும் பிறந்தவர்களுக்கு முழுக்கைப் பற்றிய பெரிய பெரிய கதைகளே இருக்கும்.

ஊரில் இருந்த காலங்களில் குளித்தல், தோய்தல் ,முழுகுதல் என்று மூன்று வகைப்படுத்தியிருந்தனர்.

முதலாவதாக தலையிலே தண்ணீர் படாமல் அள்ளி ஊற்றிக்கொண்டே இருந்தால் குளித்தல்.

அடுத்து ஒரு செத்தவீடு போய் வந்தால் தலையிலே தோய் என்பார்கள்.

மூன்றாவது தான் முழுக்கு.எனது பதின்ம வயதுக்கு முதல் முழுக்கு எப்படி இருந்தது. உங்களுக்கும் முழுக்கைப் பற்றி நிறைய அனுபவம் இருக்கலாம்.ஆணாக இருந்தா என்ன பெண்ணாக இருந்தா என்ன வெட்கப்படாமல் எழுதுங்கள்.

அனேகமானவர்களுக்கு சனிக்கிழமை என்றால் முழுக்கு நாள் என்றே சொல்வார்கள்.எமக்கும் சனிக்கு சனி முழுக்கு தான்.கிராமப் புறங்களில் ஆட்டிறைச்சி வாங்குவதை விட பங்கு இறைச்சி தான் அதிகம்.எமது ஊரிலும் ஓரிவருக்கு சனிக்கிழமை என்றால் ஆடு அடிக்கிறது தான் வேலை.அப்பாவிடம் வந்து இன்றைக்கு ஆடடிக்கிறம் உங்களுக்கு  எத்தனை பங்கு என்றால் அவன் கந்தையா முதலே வந்து கேட்டான் ஒரு பங்குக்கு சொல்லி போட்டன்.சரி சரி பரவாயில்லை அடுத்த சனி நான் அடிக்கிறன்  எத்தனை பங்கு என்று அப்பாவுக்கு விருப்பமில்லாவிட்டாலும் ஓடர் எடுத்துவிடுவார்கள்.அவர்கள சொன்னது போலவே பனை ஓலையில் பெரிய ஒரு புனல் மாதிரி செய்து அதற்குள் ஆட்டிறைச்சி இருக்கும்.தொட்டுப் பார்த்தால் சுடும்.

அந்தக் காலத்தில் முழுககு என்றால் இரண்டே விதம்.ஒன்று அரப்பு வைக்கிறது மற்றது சீயக்காய் அவித்து அரைத்து முழுகுவது.பெண்களில் அனேகமானோர் சீயக்காய் தான் வைப்பார்கள்.இன்று வரை காரணம் தெரியவில்லை.

எமது வீட்டில் அப்பா அம்மா இரண்டு வயது மூத்தவரான அண்ணன் அடுத்து நான்.சிறிய குடும்பம்.சனிக்கிழமை என்றால் ஒரே சந்தோசம்.மிகவும் சிறுவர்களாக இருந்த காலத்தில் காலை9 ,10 மணிக்கே போட்டிருக்கிற காற்சட்டை எல்லாம் கழற்றிவிட்டு தலையில் இருந்து உள்ளங்கால் வரை நல்லெண்ணை போட்டு தேய் தேய் என்று அப்பா தேய்த்துவிடுவார்.தலையில் எண்ணெய் வைத்து தேய்க்கும் போது ம்ம்ம்ம்ம் என்று தொடர்ந்து சத்தம் போடுவோம்.இந்த சத்தம் ஒருவித் அனுங்கல் சத்தமாக வெளிவரும்.எண்ணை தேய்த்து முடிந்ததும் வளவு முழுக்க ஓடியாடி விளையாட்டு தான்.

இதுவே கொஞ்சம் வளர்ந்த பின் உரிந்து போட்டு நிற்க கொஞ்சம் வெட்கம்.சரி இந்தா கோமணம் கட்டு என்று ஆரம்பத்தில் அப்பாவே கட்டிவிடுவார்.அந்தக் காலங்களில் அரைநாண் கயிறு இல்லாத ஆண்களையே பார்க்க முடியாது.இப்போ அரைநாணுடன் அந்த ஆணையும் பார்க்க முடியாது.ஆனாலும் எப்பவும் போல அவர்தான் எண்ணெய் தடவி தேய்த்துவிடுவார்.

12, 1 மணிபோல் இறைச்சி வீடு தேடி வந்து மறக்காமல் பணத்தையும் வாங்கிக் கொண்டு போவார்கள். நாங்கள் விளையாட்டுடன் நிற்க அப்பா இறைச்சி வெட்டி கொடுத்து சகல வேலைகளையும் முடித்து விட்டு அரப்பு வைக்க கூப்பிடுவார்.எண்ணெய் தேய்க்கிற மாதிரி அரப்பையும் தலையிலிருந்து கால் வரை தேய்த்துவிடுவார்.அரப்பு கண்ணுக்குள் போக எரியத் தொடங்கும்.அப்போ கொஞ்சம் திழுறினால் படார் என்று ஒன்று விழும்.இப்படி இருவருக்கும் மாறி மாறி தேய்த்து விட்டு ஏற்கனவே தொட்டியில் அடைத்திருந்த தண்ணீருக்குள் கொஞ்ச நேர விளையாட்டு முடியும் போது ஒவ்வொருவராக கூப்பிட்டு சுகம் சுகம் சுகம் என்று சொல்லி மூன்று வாளி.அவரே வந்து தலையை போட்டு ஒரு ஈரமும் இல்லாமல் துடைத்துவிடுவார்.நாங்களும் முழுகி முடிய இறைச்சி கறியும் வாசம் மூக்கi துளைக்கும்.எமது வீட்டில் இறம்பை இலை நிறைய இருந்தது.இதுவும் இறைச்சிக்கு புறும்பான சுவையும் மணமும்.

விறு விறு என்று வீட்டுக்குள் ஓடியதும் அம்மா ஒரு கையில் உடுப்படனும் மறு கையில் பவுடர் ரின்னுடம் நிற்பா.இப்போ கறுப்பாக இருந்த மயிரெல்லாம் வெள்ளளையாக தெரியும்.புட்டு குழல் மாதிரி பவுடர் ரின்னுகள் குட்டிகுறா திறிறோசஸ் என்று பெரிய பெரிய சைசில் இருக்கும்.அப்படியே  நேராக குசினி தான் இயன்றவரை சாப்பிட வேண்டியது தான்.இதற்கிடையில் அப்பாவும் முழுகிவிட்டு வந்து விடுவார்.

இப்போ வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு சும்மா இருக்க முடியுமோ?ஏதாவது விளையாட்டு என்று தொடங்கினால் எப்படா இவங்கள் பிழை விடுவாங்கள் என்று பார்த்து கொண்டிருக்கும் அப்பா ஏதாவது ஒரு சாட்டை வைத்து இருவரையும் கூப்பிட்டு இரண்டு மூன்று அடி போட கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்து விட்டு அப்படியே நித்திரையாகிவிடுவோம்.அன்று பிற்பகல் விளையாட்டே இருக்காது.அனேகமான சனிக்கிழமைகளில் முழுக்குடனே அந்த நாள் போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாதம் இருமுறை எண்ணை குளியல் இருந்தாலும் விழாக் காலங்களில் வரும் எண்ணை முழுக்கே சிறப்பு. பெரும்பாலும் அம்மா தான் குளிப்பாட்டி விடுவார்..

dsc_0490.jpg

இந்த எண்ணை முழுக்கு குளியல் தீபாவளியன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கிவிடும்..

குளித்துவிட்டு  காலை ஆறு மணிக்கு முன்பாக சாமிக்கு ஆட்டுக்கறி, கோழிக்கறி குழம்புகளுடன், பலகாரங்களின் அணிவகுப்போடு படையல் செய்து சாமி கும்பிட்டுவிட்டு, புது உடுப்பகளை அணிந்து பட்டாசுக் கட்டுகளோடு நண்பர்களின் துணையோடு வீதிகளை வெடிகளால் அதிர வைத்த அந்த இனிமையான நாட்களை நினைவுபடுத்திச் சென்றது உங்கள் பதிவு, ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாம் சரி ஒன்றை விட்டு விட்டீர்கள்..... அடுப்பு தணலுக்குள் உள்ளி போட்டு சுட சுட உரித்து சாப்பிடுவோம் (வாயுவுக்கு மருந்து) சொல்லி வேல இல்லை.....! இன்னும் நிறைய இருக்கு....ம்......!  tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ராசவன்னியன் said:

என்னையா எனது படம் எப்படி உங்களுக்கு கிடைத்தது?அந்ததந்த கதைகளுக்கு ஏற்ப படங்கள் போடுவதற்கு உங்களையும் தமிழ்சிறியையும் பாராட்டியே தீரவேண்டும்.

இலங்கையில் கோவில்களில் ஆடு வெட்டுவார்கள்.ஆனால் சாமிக்கு படைத்து இன்னமும் பார்க்கவுமில்லை.கேள்விப்படவுமில்லை.
நன்றி வன்னியர்.

3 hours ago, suvy said:

எல்லாம் சரி ஒன்றை விட்டு விட்டீர்கள்..... அடுப்பு தணலுக்குள் உள்ளி போட்டு சுட சுட உரித்து சாப்பிடுவோம் (வாயுவுக்கு மருந்து) சொல்லி வேல இல்லை.....! இன்னும் நிறைய இருக்கு....ம்......!  tw_blush: 

சுவியர் உண்மையிலேயே மறந்தேவிட்டேன்.முழுக்கில் உள்ளி சுட்டு தின்பது முக்கியமானது.ஞாபகப்படுத்தியதிற்கு மிகவும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னையா எனது படம் எப்படி உங்களுக்கு கிடைத்தது?அந்ததந்த கதைகளுக்கு ஏற்ப படங்கள் போடுவதற்கு உங்களையும் தமிழ்சிறியையும் பாராட்டியே தீரவேண்டும்.

இலங்கையில் கோவில்களில் ஆடு வெட்டுவார்கள்.ஆனால் சாமிக்கு படைத்து இன்னமும் பார்க்கவுமில்லை.கேள்விப்படவுமில்லை.
நன்றி வன்னியர்.

இடுப்பில் அரைஞான் கயிறோடு மர மேடையில் உட்கார்ந்துகொண்டு, அம்மா தேய்க்கும் எண்ணையில் மூன்று சொட்டுகள் மேனியில்பட்டு வழிய, முன்முறுவலோடு எண்ணை முழுக்கை ஏற்கும் சிறுவன், அப்படியே எம்மின் அக்காலத்தை அப்படியே பிரதிபலிக்கிறான்..

காலையில் அலுவலகத்தில் உங்கள் ஆக்கத்திற்கும், எனது நினைவுகளுக்கும் பொருத்தமாக இணையத்தில் தேடியபோது இந்தப் படம் என்னை வெகுவாக கவர்ந்தது, சுட்டுப் போட்டேன்..!

%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%R+049.jpg

தீபாவளியன்று சாமிக்கு படையல் இப்படித்தான் இருக்கும்..

குடும்பத்தவர்களுக்கு புது துணிகள், பட்டாசு, இலையில் பலகாரங்கள், கறிக்குழம்பு வகைகள், இனிப்பு, கார வகைகள் என தூள் பறக்கும்.

மிக மிக முக்கியமாக, புத்தாடை உடுத்தி அம்மா, அப்பாவை வணங்கும்போது அப்பா கைநிறைய பணம் கொடுப்பார்.. அப்பணத்தில் நமக்கு விரும்பியவற்றை வாங்கிக்கொள்ள அனுமதிப்பார்கள்..

சிறுவயதில் பெற்றோரிடமிருந்து பெரும்தொகை தீபாவளியன்றே கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ராசவன்னியன் said:

 புது துணிகள், பட்டாசு, இலையில் பலகாரங்கள், கறிக்குழம்பு வகைகள், இனிப்பு, கார வகைகள் என தூள் பறக்கும்.

மிக மிக முக்கியமாக, புத்தாடை உடுத்தி அம்மா, அப்பாவை வணங்கும்போது அப்பா கைநிறைய பணம் கொடுப்பார்.. அப்பணத்தில் நமக்கு விரும்பியவற்றை வாங்கிக்கொள்ள அனுமதிப்பார்கள்..

சிறுவயதில் பெற்றோரிடமிருந்து பெரும்தொகை தீபாவளியன்றே கிடைக்கும்.

படங்கள் இணைப்புக்கு மிக்க நன்றி வன்னியர்.
உங்களது தீபாவளி கொண்டாட்டம் வித்தியாசமானதாகவே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சனிக்கிழமை முழுக்கு நன்றாகத்தான் இருக்கின்றது. எங்களுக்கும்  நல்லெண்ணெயை உடம்பில் பூசி காலை இளவெய்யிலில் இருத்திவிட்டிருந்தனர். அரப்பு கண்ணுக்குள் போவதுதான் பிடிக்காமல் இருந்தது.

நண்பன் ஒருவனின் தந்தை சில சனிக்கிழமைகளில்  “ஆடடித்துத்தான்” முழுக்கைக் கொண்டாடுவார். ஆடடிக்கும்போது அதிகம் மருந்தையும் பாவிப்பதால் ஆட்டுக்கறி சாப்பிட தயாராகும்போது சில நேரம் அவரது அடி உதைகளுக்குப் பயந்து வீட்டு மாமரத்தில் ஏறி ஒளிந்ததாக நண்பன் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, கிருபன் said:

கிருபன் அரப்பு கண்ணுக்குள் போனால் மணிக்கணக்காக அதன் வலி இருக்கும்.உருட்டிக்கொண்டே இருக்கும்.

எனது தகப்பனார் மது பாவிக்காததால் அதனால் ஏற்படும் துன்பதுயர அனுபவம் இல்லை.மற்றைய நாட்களை விட சனிக்கிழமை தான் கள்ளுக்கடைகளில் சண்டை நடப்பதாக கேள்விப்பட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழைய நினைவை மீளக் கொண்டுவந்து விட்டீர்கள் ஈழப்பிரியன். பெண்களுக்கும் அரப்பும் எலுமிச்சங்காயும்  சேர்த்து அவித்துப் பூசுவார்கள். பொடுகு வராமல் இருக்கத்தான் எழுமிச்சை. எங்கள் அயலில் குமாரசாமி என்று ஒருவர் தான் ஆடு ஒன்றுவிட்ட கிழமை ஆடு அடிப்பது. சிறியவர்களாக இருந்தபோது அவர் பங்கு போடுவதை நாமும் நின்று பார்ப்போம். பச்சை  இறைச்சியைப் பார்க்கவே ஒரு பரவசம் தான். ஆடு இல்லாத சனிக்கிழமைகளில் அம்மா நிறைய மீன் பொரித்துக் கறியும் வைப்பார். இப்ப நினைத்தால் எப்பவுமே மீண்டும் கிடைக்க முடியா நினைவு நெஞ்சை எதோ செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் அனுபவித்த மாதிரி இனிவரும் காலங்களில் யாருமே அனுபவிக்க போவதில்லை.

Posted

சின்ன வயதில் அரப்பு வைத்து முதல் இரண்டு மூன்று வாளி அப்பா அல்லது அம்மா ஊற்ற மிச்சம் துலா போட்டு கிணற்றில் தண்ணீர் அள்ளி முழுகின நினைவுகளை அருட்டி விட்டது உங்கள் ஆக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, நிழலி said:

சின்ன வயதில் அரப்பு வைத்து முதல் இரண்டு மூன்று வாளி அப்பா அல்லது அம்மா ஊற்ற மிச்சம் துலா போட்டு கிணற்றில் தண்ணீர் அள்ளி முழுகின நினைவுகளை அருட்டி விட்டது உங்கள் ஆக்கம்.

நிழலி எங்களுக்கு ஏற்கனவே தொட்டியில் தண்ணீர் நிறைத்திருக்கும்.அள்ளிக் குளிக்க வெளிக்கிட்டதெல்லாம் வளர்ந்த பின் தான்

இப்போதெல்லாம் சம்போவோடு பொழுது போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழப்பிரியன், உங்கள் நீராடல் பழைய பல சம்பவங்களை மீட்டிப்பார்கக உதவியது. நல்லதொரு பதிவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்ன வயதில் அப்பா தொட்டி நிறைய தண்ணீரை துலாவால் இழுத்து நிறைத்து விடுவார். அவரின் கஸ்ரம்  எதுவும்  உணர முடியாத வயதில் எவ்வித கவலையும் இல்லாமல் நாங்கள் அள்ளி அள்ளி தலையில் ஊற்றுவோம். இப்பொழுது நினைக்க எம் பெற்றவர்கள் எமக்காகப் பட்ட துன்பமெல்லாம் மனதை கனக்க வைக்கிறது. நல்லதொரு நினைவு மீட்டல் நன்றிகள் ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல ஒரு அருமையான அனுபவப் பகிர்வு, ஈழப்பிரியன்!

முழுக்கடிச்சுப் போட்டுத்...தலைமயிர் காத்தில பறக்க...கண்ணும் சிவந்த படி..இருந்து ஓய்வெடுக்கிறதே ..ஒரு அனுபவம் தான்!

மத்தியானம்..ஒரு உறைப்பான ரசமும்..அண்டைக்கு வைப்பினம்!

மூக்கு...நாக்கு.. எல்லாமே சனிக்கிழமையோட...கிளீன்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/22/2018 at 10:48 AM, Kavi arunasalam said:

ஈழப்பிரியன், உங்கள் நீராடல் பழைய பல சம்பவங்களை மீட்டிப்பார்கக உதவியது. நல்லதொரு பதிவு.

சாப்பாட்டில் இருந்து பழையவை எல்லாமே நினைக்க நினைக்க மனதுக்கு இதமானவைகளே.

On 2/25/2018 at 6:54 PM, Kavallur Kanmani said:

சின்ன வயதில் அப்பா தொட்டி நிறைய தண்ணீரை துலாவால் இழுத்து நிறைத்து விடுவார். அவரின் கஸ்ரம்  எதுவும்  உணர முடியாத வயதில் எவ்வித கவலையும் இல்லாமல் நாங்கள் அள்ளி அள்ளி தலையில் ஊற்றுவோம். இப்பொழுது நினைக்க எம் பெற்றவர்கள் எமக்காகப் பட்ட துன்பமெல்லாம் மனதை கனக்க வைக்கிறது. நல்லதொரு நினைவு மீட்டல் நன்றிகள் ஈழப்பிரியன்

உங்கள் பெற்றோர் உங்களுக்கு செய்ததை பிள்ளைகளுக்கு செய்யுங்கள்.

எனது பிள்ளைகளுக்கு பதின்ம வயது முடியும் வரை அமெரிக்காவில் இருந்தாலும் சனிக்கு சனி எண்ணெயால் குளிப்பாட்டுவேன்.

On 2/25/2018 at 7:49 PM, புங்கையூரன் said:

நல்ல ஒரு அருமையான அனுபவப் பகிர்வு, ஈழப்பிரியன்!

முழுக்கடிச்சுப் போட்டுத்...தலைமயிர் காத்தில பறக்க...கண்ணும் சிவந்த படி..இருந்து ஓய்வெடுக்கிறதே ..ஒரு அனுபவம் தான்!

மத்தியானம்..ஒரு உறைப்பான ரசமும்..அண்டைக்கு வைப்பினம்!

மூக்கு...நாக்கு.. எல்லாமே சனிக்கிழமையோட...கிளீன்!

புங்கை இதுவே கொஞ்சம் வளர்ந்த பின் முழுகி சாப்பிட்டு சந்திக்கு போய் ஒரு சிகரட் அதுவும் களவாக அடிக்கும் போது எப்படி இருக்கும்.?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னுடன் சேர்ந்து நீராடிய உறவுகள் எல்லோருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, கந்தப்பு said:

நல்லதொரு அனுபவப்பதிவு. 

நீண்ட நாட்களின் பின் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.