Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் சம்பந்தன் சுமந்திரனுக்கு முச்சந்தியில் இறுதிக்கிரியை!

Featured Replies

வவுனியாவில் சம்பந்தன் சுமந்திரனுக்கு முச்சந்தியில் இறுதிக்கிரியை!

வவுனியாவில் சம்பந்தன் சுமந்திரனுக்கு முச்சந்தியில் இறுதிக்கிரியை!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது. கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஒரு வருட நிறைவு நாள் இன்று(24-02-2018) கவனயீர்ப்பு போராட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் ஆலயத்தின் முன்பாக ஒன்றுகூடி பதாதைகளில் பொறிக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளின் புகைப்படங்களை பார்த்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

வவுனியாவில் சம்பந்தன் சுமந்திரனுக்கு முச்சந்தியில் இறுதிக்கிரியை!

இதனையடுத்து கோவிலுக்கு முன்பாக இருந்து கடை வீதி வழியாக ஊர்வலமாக வந்த உறவுகள் தாம் போராட்டத்தில் ஈடுபடும் இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் உருவப்பொம்மைகளை தாங்கியவாறு முச்சந்தி நோக்கி சென்ற அவர்கள் அங்கு வைத்து இறுதிக்கிரியைகளை இரு உருவப்பொம்மைகளுக்கும் முன்பாக செய்தனர்.

இந் நிலையில் போராட்ட தளத்திற்கு அருகாமையிலும் நகர்ப்புறத்தில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் முச்சக்கர வண்டி சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில் கிறிஸ்தவ மதகுருமார் பேராட்டத்திற்கு ஆதரவான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் சம்பந்தன் சுமந்திரனுக்கு முச்சந்தியில் இறுதிக்கிரியை!

வவுனியாவில் சம்பந்தன் சுமந்திரனுக்கு முச்சந்தியில் இறுதிக்கிரியை!

https://news.ibctamil.com/ta/internal-affairs/vavuniya-missing-people-protest-24

  • கருத்துக்கள உறவுகள்

அவலத்துக்குள்ளான மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சமமந்தமே இல்லாத அரசியல் முன்னெடுப்புகள். ஒட்டுமொத்தமாக முள்ளிவாய்க்கால் பேரளிவுக்குப் பின்னர் தமிழ அரசியல் தலமைகள் பதிவு செய்தது "நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை" என்ற ஒன்றைத்தான்.. அவலப்பட்ட மக்களை சநதிப்பதோ அவர்கள் போராட்டத்துக்கு தோழோடு தோழ் நிற்பதோ கிடையாது. பேரினவாதிகள் சொல்கின்றார்கள் தமிழீழம் தரமாட்டோம் என்று. தமிழ் அரசியல் தலமைகள் சொல்கின்றது எங்களுக்கு வேண்டாம் என்று. பேரினவாதத்திற்கும் மையவாதத்திற்கும் இடையிலான பிரச்சனை தீர்ந்துவிட்டது. ஆனால் அவலப்பட்ட மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. இயலாமையால் உருவ பொம்மைகளுக்கு இறுதிக்கிரியையை செய்கின்றார்கள்!!  

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் வலி  எங்கள் இனத்தின் ஒவ்வொருவர் வீட்டிலும் மனத்திலும் உள்ள வலி, ஆனால் சம்பந்தனுக்கும் , சுமந்திரனுக்கும் இறுதி கிரியை செய்வதால் அவர்களால் இதற்கு தீர்வை பெற்று தரவும் முடியாது தீர்த்து வைக்கவும் முடியாது, 

காணாமல் போனவர்களிற்கு என்ன ஆனது என்பதுபற்றி, மாறி மாறி வந்த பிரேமதாஸ-ரஞ்சன் விஜேரட்ண, சந்திரிக்கா-அனுரத்த ரத்வத்த, மஹிந்த-பொன்சேகா&  கோத்தபாய கோஷ்டிகளுக்கு மட்டுமே பெரும்பாலும் தெரிந்திருக்கும்,

மற்றும்படி இன்றைய ஆட்சியாளரில் சிலருக்கோ , எமது பகுதி அரசியல்வாதிகள் எவருக்குமோ தெரிந்திருக்கவோ, தீர்வை பெற்று தரவோ வாய்ப்பில்லை,வேண்டுமானால் ஒவ்வொரு தேர்தலிலும் ‘முயற்சிக்கிறோம்’ என்று சொல்லி காணாமல் போனவர்களின் உறவுகளை காலம் காலமாய் ஏமாற்ற  முடியும்,மீண்டும் மீண்டும் பதவிக்கு வரமுடியும்!

இப்போ நீங்கள் காட்டும் இந்த இறுதிகிரியை போராட்டம்கூட, தங்களுக்கிடையேயான அரசியல்போட்டிகளுக்காக உங்களை யாரோ இவர்களின் எதிர் அரசியல் கோஷ்டி பயன்படுத்துகிறார்கள் என்று பலருக்கு எண்ண தோன்றும்!

சர்வதேச கடும் அழுத்தம் ஒன்றை தவிர காணாமல்போனவர்கள் பற்றியதான கேள்விக்கு சிங்களம் ஒருபோதும் பதில் சொல்லபோவதில்லை,

சர்வதேசம் அழுத்தம்   கொள்ளுமளவிற்கு செயலாற்ற சிங்களவனோடு ஒட்டி உறவாடும் எமது தமிழ் தலைமைகளால்  எந்த அளவு முடியும் என்பது எண்ணியே பார்க்கமுடியாத கேள்வி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வவுனியாவில் சம்பந்தன் சுமந்திரனுக்கு முச்சந்தியில் இறுதிக்கிரியை!

அப்பிள் தோடம்பழம் விக்கிற விலையிலை தேவையில்லாததுகளுக்கு அநியாயமாக்கிப்போட்டினம்.

நானெண்டால் தோடம்பழ தோல் கூட படைச்சிருக்கமாட்டன்.tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

உங்களின் வலி  எங்கள் இனத்தின் ஒவ்வொருவர் வீட்டிலும் மனத்திலும் உள்ள வலி, ஆனால் சம்பந்தனுக்கும் , சுமந்திரனுக்கும் இறுதி கிரியை செய்வதால் அவர்களால் இதற்கு தீர்வை பெற்று தரவும் முடியாது தீர்த்து வைக்கவும் முடியாது, 

முடியாது என்று தெரிந்தவர்கள் ஏன் போலி வாக்குறுதி குடுத்து தேர்தலில் வென்று பதவி சுகம் அனுபவிக்கிறார்கள் ?

முடியவில்லையா ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வீடுபோய் படுக்க வேண்டியதுதானே ?

7 hours ago, valavan said:

காணாமல் போனவர்களிற்கு என்ன ஆனது என்பதுபற்றி, மாறி மாறி வந்த பிரேமதாஸ-ரஞ்சன் விஜேரட்ண, சந்திரிக்கா-அனுரத்த ரத்வத்த, மஹிந்த-பொன்சேகா&  கோத்தபாய கோஷ்டிகளுக்கு மட்டுமே பெரும்பாலும் தெரிந்திருக்கும்,

இவர்களை ஐநாவில் வாய்திறக்க பண்ணுவம் எண்டுதானே பதவி பெற்றவர்கள் இப்ப என்ன ஆச்சு ?

7 hours ago, valavan said:

மற்றும்படி இன்றைய ஆட்சியாளரில் சிலருக்கோ , எமது பகுதி அரசியல்வாதிகள் எவருக்குமோ தெரிந்திருக்கவோ, தீர்வை பெற்று தரவோ வாய்ப்பில்லை,வேண்டுமானால் ஒவ்வொரு தேர்தலிலும் ‘முயற்சிக்கிறோம்’ என்று சொல்லி காணாமல் போனவர்களின் உறவுகளை காலம் காலமாய் ஏமாற்ற  முடியும்,மீண்டும் மீண்டும் பதவிக்கு வரமுடியும்!

இதை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் கூற என்ன தயக்கம் ? (பின்பக்கத்தால் வேண்டின காசு தடுக்குதாக்கும் )

7 hours ago, valavan said:

இப்போ நீங்கள் காட்டும் இந்த இறுதிகிரியை போராட்டம்கூட, தங்களுக்கிடையேயான அரசியல்போட்டிகளுக்காக உங்களை யாரோ இவர்களின் எதிர் அரசியல் கோஷ்டி பயன்படுத்துகிறார்கள் என்று பலருக்கு எண்ண தோன்றும்!

தோன்றினால் ஒன்றும் குடி முழுக வேண்டியதில்லை அவ்வளவுக்கு இருவரும் சுத்தமானவர்களும் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

முடியாது என்று தெரிந்தவர்கள் ஏன் போலி வாக்குறுதி குடுத்து தேர்தலில் வென்று பதவி சுகம் அனுபவிக்கிறார்கள் ?

முடியவில்லையா ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வீடுபோய் படுக்க வேண்டியதுதானே ?

இவ்வளவு காலமும் வாக்குறிதியைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்.

போடு புள்ளடி வீட்டுக்கு நேரே என்றால் போட்டுடுட்டு போய்விடுவார்கள்.

இப்போ இளைஞர்கள் விழித்துக் கொண்டதாலேயே பிரச்சனை.

இனப்படுகொலைகாரர்களிடம் உறவுகளை இழந்து தவிக்கும் மக்களின் ஜனநாயக முறையிலான வெளிப்பாடுகள், போராட்டங்கள் மதிக்கப்பட வேண்டும்!

365 நாட்கள் 2 மணிநேரம் தமது உரிமைகளுக்காக தமக்கு தெரிந்த வழிகளில் இந்த மக்கள் நடத்தும் போராட்டம் மிகவும் உன்னதமானது, மதிக்கப்பட வேண்டியது. இதில் கற்பனைகளை சேர்த்து அரைகுறை மேதாவித்தனத்தை காட்டுவது அழகல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

வவுனியாவில் சம்பந்தன் சுமந்திரனுக்கு முச்சந்தியில் இறுதிக்கிரியை!

அப்பிள் தோடம்பழம் விக்கிற விலையிலை தேவையில்லாததுகளுக்கு அநியாயமாக்கிப்போட்டினம்.

நானெண்டால் தோடம்பழ தோல் கூட படைச்சிருக்கமாட்டன்.tw_glasses:

இவர்களை ஒன்றுமே பண்ண முடியாது... நாய் கடித்தாலும் நாய்தான் சாகும்.

Bildergebnis für தூ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.