Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Featured Replies

சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

 
 

IMG_8954.jpg?resize=800%2C533

மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம் எமது மண்ணில் தொடரக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம, நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –
கடந்த 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி, மருதபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த சுதாகரன் என்பவரது மனைவி, கணவனின் பிரிவுத் துயரங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் 3 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டு, மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த சுதாகரின் 10 வயது பெண் குழந்தை தாயும் அற்ற நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபமும் எமது மண்ணில் நடந்தேறியிருக்கின்றது.

அதுமட்டுமன்றி புலிகள் இயக்கத்திற்கு வாகனங்களைப் பெற்றுக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வவுனியாவைச் சேர்ந்து 70 வயதுடைய சண்முகநாதன் தேவகன் என்ற முதியவரது வழக்கு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெற்று, கடந்த வருடம் இவருக்கு 2 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் இவர்மீது இன்னுமொரு வழக்கினை தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் நோய்வாய்ப் பட்டிருந்த இவர் கடந்த 12 ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, கடந்த 16ஆம் திகதி உயிரிழந்த பரிதாபச் சம்பவ சம்பவமும் நடந்துள்ளது.

இந்த நிலையில் 2 பேர் 22 வருடங்களாகவும், 3 பேர் 18 வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒரு சிலரது வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இவர்களது வழக்குகள் நடைபெறாதததன் காரணமாக அடுத்த கட்டமாக தங்களுக்கு என்ன நடக்கும் என்பது புரியாமலேயே தாங்கள் நிலை குழம்பிப் போயுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அத்துடன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு இடம்பெறுகின்ற பல்வேறு கெடுபிடிகள், சித்திரவதைகள் காரணமாக உள மற்றும் உடல் ரீதியில் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அக் கைதிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தங்களது வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு, முடிவுகள் ஏதேனும் வருமா? அல்லது நீதிமன்ற விசாரணைகள் இன்றிய நிலையில் எதுவுமே அறியக் கிடைக்காமல், வாழ் நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க நேரிடுமா? என்ற திக்கற்ற நிலையில் இந்த தமிழ் அரசியல் கைதிகள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே, தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைந்த சாதகமான ஏற்பாடுகள் தேவை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

வழக்குகள் தொடரப்படாமலும், வழக்குகள் தொடரப்பட்டு, கால தாமதங்கள் தொடரும் நிலைமையிலும், வழக்குகள் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும் பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம,; நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –  எமது நாட்டில் இதுவரையில் தீர்ப்புகள் வழங்கப்படாத நிலையில் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிய வருகின்றது. அதே நேரம், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு, வழக்குகள் தொடரப்படாமலும், வழக்குகள் தொடரப்பட்டு, கால தாமதங்கள் தொடரும் நிலைமையிலும், வழக்குகள் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும் பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நான் இங்கு தமிழ் அரசியல் கைதிகள் எனக் கூறுகின்றபோது, நீங்கள் ‘அப்படி எவரும் இல்லை’ எனக் கூறலாம். அது உங்களது அரசியல் சார்ந்த பிரச்சினையாக இருக்கலாம். அதுவல்ல இங்கு பிரச்சினை. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சுமார் 130 பேர் வரையில் இன்னும் தடுப்பில் இருப்பதாகவே தெரிய வருகின்றது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் மாத்திரம் 78 தமிழ் அரசியல் கைதிகள் தடுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இவர்களில் வழக்குத் தொடரப் படாதவர்களுக்கு வழக்கு தொடர்வதற்கோ, தொடரப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிவுறுத்துவதற்கோ நீங்கள் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைள் என்ன? எனக் கேட்க விரும்புகின்றேன்.

இக் கைதிகளின் பிரச்சினைகளின் தீர்வினை விரைவுபடுத்தும் நோக்கில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளை இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை விசாரணைகளுக்கு உட்படுத்துவதற்கு உறுதி காணப்பட்டிருந்த போதிலும், அந்த வழக்குகள் ஒரு மாதத்திற்கு அல்லது ஒன்றரை மாதத்திற்கு ஒரு தடவை என்ற வகையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், அதுவும், முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்ற வகையில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படாமலும், விசாரணைகளை ஒத்தி வைக்கும் செயற்பாடுகளே தொடர்வதாகவும் தமிழ் அரசியல் கைதிகள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக வழக்குகள் தாக்கல் செய்யப்படாது, பல வருடங்கள் தடுப்பிலிருந்த அரசியல் கைதிகள், வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டும், தண்டனைப் பெற்றவர்களைப் போன்று தொடர்ந்தும் நீண்ட காலம் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைவான சாதகமான ஏற்பாடுகள் தேவை –

தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைந்த சாதகமான ஏற்பாடுகள் தேவை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அவர்கள் குற்றங்களுடன் தொடர்பு பட்டிருந்தால் அது குறித்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, துரித விசாரணைகள் நடத்தப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம, நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –
தமிழ் அரசியல் கைதிகளில் பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் கொழு;புக்கு வெளியிலுள்ள நீதி மன்றங்கள் பலவற்றிலும்; தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளிலிருந்து வெகு தொலைவிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைத் தவணைகளுக்காக கொண்டு செல்லப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகள், சில தினங்கள் அந்த நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட சிறைச்சாலைகளில் அல்லது மறியச்சாலைகளில் தடுத்து வைக்கப்படுகின்றபோது, ஏனைய கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்புபட்ட கைதிகளுடன் ஒன்றாக தடுத்து வைக்கப்படுகின்ற நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொள்கின்ற இடையூறுகள், கொடுமைகள் என்பன ஏராளம் என்றும் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நிலைமைகளில் பல்வேறு தாக்குதல்களுக்கு உட்படுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை என்று தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதிகளுக்கென தனியான ஏற்பாடுகள், பாதுகாப்பு என்பன இருந்தன என்றும், தற்போது அந்த நிலைமைகள் மாற்றப்பட்டு, ஏனைய குற்றவியல் வழக்குகளுடன் தொடர்புள்ள கைதிகளுடனேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம், மாலைத்தீவு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, மாலைத்தீவில் 9 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள மூவர் கடந்த 3 வருடங்களாக வெலிக்கடைச் சிறையில் எவ்விதமான வழக்குகளும் தாக்கல் செய்யப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிய வருகின்றது.

எனவே, தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைந்த சாதகமான ஏற்பாடுகள் தேவை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என அவர்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

இனவாதக் குரலுக்கு எடுபட்டுப் போனால் ‘திகன” பகுதியில் ஏற்பட்ட கதிக்கே முழு நாட்டுக்கும் ஏற்படும் –

வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல், தாக்கல் செய்யப்பட்ட வழக்ககளும் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் அரசியல் கைதிகளைப் பாரத்து ‘இவர்கள் பெரும் புலிகள், இவர்களை விடுதலை செய்யக் கூடாது’ என கூக்குரலிடும் தென்பகுதி பேரினவாதிகளின் போலி ஆட்டங்களுக்கு பயந்தே அரசு இந்த தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் வீண் காலதாமதங்களை ஏற்படுத்தி வருகின்றது என்றால், அது வேதனைக்குரிய விடயமாகும். வெட்கப்படக் கூடிய விடயமாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்
இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம, நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –
இனவாதக் குழுக்களின் குரலுக்கு எடுபட்டுப் போனதால் அண்மையில் அம்பாறை மற்றும் திகன போன்ற பகுதிகளில் ஏற்பட்ட கதிக்கே இந்த நாடு முழுமையாக ஆட்படக்கூடும் என்ற விடயத்தினையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இனவாதத்தையும், மத வாதத்தையும் தூண்டுவோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஓர் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென சுயாதீன ஆணைக்குழுக்களை இந்த அரசு அமைக்க முற்பட்ட காலத்திலேயே நாம் வலியுறுத்தியிருந்தோம என நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும் –

நாட்டில் படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும். இந்த விடயங்களை நாம் இந்த நாடு குறித்த தூர நோக்குடைய பார்வையிலேயே வலியுறுத்தியிருந்தோம். அது குறித்து நீங்கள் உரிய அவதானங்களை செலுத்தவில்லை. அதன் விளைவு எத்தகையது என்பதை நாம் அண்மையில் அம்பாறையிலும், கண்டி, திகனயிலும் காணவில்லையா? என்பது குறித்து சிந்தித்துப் பாருங்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம,; நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –
படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கும், மக்கள்; தொகைக்கும் ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும் என்றும், படைகளிலும், பொலிஸ் துறையிலும் இன விகிதாசாரம் பேணப்படல் வேண்டும் என்பதையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தியிருந்தோம்.
இத்தகைய சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர், அவர் செய்தார், இவர் செய்தார், நான் செய்யவில்லை, அவர் செய்யவில்லை என்றெல்லாம் கருத்து தெரிவித்துக் கொண்டு திரிவதில் எவ்விதமான பயனும் இல்லை. நாம் ஏற்கனவே வலியுறுத்தி இருந்ததைப் போன்று இந்த நாட்டில் ஏற்பாடுகள் இருந்திருப்பின் இன்று அம்பாறை சம்பவம், கண்டி, திகன சம்பவம் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லாதிருந்திருக்கும் என்பதை இப்போதாவது ஏற்றுக் கொள்கின்றீர்களா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

வெறுப்புணர்வுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகளுக்கு எதிரான தடைச் சட்டமூலமொன்று கொண்டு வரப்படுவதாக இருந்தது. அது, கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும் என அதற்கு எதிராக செயற்பட்டவர்கள், அவர்கள் கூறிய அந்தக் கருத்துச் சுதந்திரத்தால் அண்மையில் அம்பாறையிலும், திகனயிலும் இழக்கப்பட்ட மனித உயிர்களுக்கும், எரிந்து முடிந்த சொத்துக்களுக்கும் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்? என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் இலங்கையின் தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமையின் வெளிப்பாடு என அமெரிக்காவின் முன்னாள் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தைக் கையாண்ட தூதுவர் ஸ்ரீபன் ரப் கூறியிருக்கின்றார என அவர் மேலம் தெரிவித்துள்ளார்.

சட்டமூலங்கள் எமது நாட்டுக்குப் பொருந்துவனவாக இருத்தல் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

தமிழ் மொழியில் மாத்திரமே பரிச்சயம் கொண்ட ஒரு நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுமிடத்து, தமிழ் மொழியில் பரிச்சயமற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் வாக்குமூலங்கள் பதியப்படுகின்ற நிலைமைகள் எமது நாட்டில் இல்லாமல் இல்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் பதிவு செய்யப்படுகின்ற வாக்குமூலங்கள் எந்தளவிற்கு உண்மைத் தன்மையுடையதாக, சரியானதாக இருக்குமென்பது கேள்விக்குறியாகும என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம,; நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –  நாங்கள் இயற்றுகின்ற சட்டமூலங்கள் எமது நாட்டுக்குப் பொருந்துவனவாக இருத்தல் வேண்டும். இந்த நாடு தேசிய நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகின்றது. எனவே பகைமைகள் மறுக்கப்பட வேண்டும். இனங்களிடையே சந்தேகங்கள் அகற்றப்பட்டு, பரஸ்பர நம்பிக்கைகள் வலுப்பெற வேண்டும். அதனை நோக்கிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனை தகர்க்கின்ற செயற்பாடுகளுக்கு எதிரான சட்ட மூலங்கள் வகுக்கப்பட வேண்டும்.

சட்டங்கள் கடுமையாக்கப்படுவதில் இருந்துதான் இந்த நாடு, இந்த நாட்டு மக்களது நலன் கருதிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்கின்ற பாடங்கள் இந்த நாட்டில் செயற்பாட்டு ரீதியில் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவை தொடர்பிலும் எமக்கு கேள்விகள் இல்லாமல் இல்லை. அதாவது, சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸாரினால் விசாரணை செய்யப்பட்டு, வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர்தான் அவர் சட்டத்தரணியின் உதவியை நாட முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.

பொலிஸாருக்கு முதலில் வழங்கும் வாக்குமூலமே அநேகமான வழக்குகளில் முக்கிய சாட்சியாக மாற்றம் பெறுகின்ற நிலைமைகள் இல்லாமல் இல்லை. இத்தகைய நிலையில், குற்றம் செய்யாதவர்கள்கூட குற்றவாளியாக்கப்படுகின்ற நிலைமைகள் உருவாகக் கூடும் என்பதால், இது தொடர்பில் மீள் பரிசீலனை அவசியமாகின்றது என்ற விடயத்தை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அந்த வகையில், இந்த நாட்டில் இருக்கின்ற குழப்பங்களையே இன்னும் தீர்க்க முடியாதுள்ள நிலையில், மேலும், மேலும் குழப்பங்களை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை முன்னெடுக்காமல், இந்த நாட்டில் நாம் கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து, இந்த நாட்டை சமூக, பொருளாதார மற்றும் ஆரோக்கியமான அரசியல் நோக்கி நகர்த்துகின்ற வகையிலான, எமது நாட்டுக்குப் பொருத்தமான செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, சிந்தித்து, செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/71748/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

10 வயது பெண் குழந்தை, தாயை இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம் எமது மண்ணில் தொடரக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

 இத்தனை பரிதாபத்துக்கும் காரணம் இது போன்ற தேசத் துரோகிகளே. இப்போ முதலைக் கண்ணீர் வடித்தால் நம்பிவிடுவோமாக்கும்.

 

1 hour ago, நவீனன் said:

நாட்டில் படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும்.

வடக்கில்  நடக்கிற அத்தனை அட்டூழியங்களுக்கும் பிதா இவர். பாதுகாப்பது போலீசும், ஆமியும். எப்பிடியெல்லாம் நடிக்கிறார். பேசுவது ஜனநாயகம். செய்வது அனிஞாயம். இவனுகளால் மட்டுந்தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

 இத்தனை பரிதாபத்துக்கும் காரணம் இது போன்ற தேசத் துரோகிகளே. இப்போ முதலைக் கண்ணீர் வடித்தால் நம்பிவிடுவோமாக்கும்.

 

அண்ணர்  எந்த காலத்தில
இருக்கிறியல்?
இன்னும் எல்லாரையும்
துரோகிகள் என்று
சொல்ற காலத்திலா?

நீங்க ஊரை விட்டுட்டு
வந்த பிறகு ஊர்
நிறைய மாறிட்டித்து அண்ண

இந்த முறை
உள்ளுராட்ச்சி தேர்தலில
டக்கிளஸ் கட்சிக்கு கிடைத்த
சபைகள் எத்தனை தெரியுமா?
எவ்வளவு சனம் வாக்கு போட்டு
இருக்கு அவையளுக்கு
என்று தெரியுமா?

பழைய
இத்துப்போன துரோகி
என்று முத்திரை குத்தும்
அரசியல் காலாவதியாகி
கன காலம் அண்ண


டக்கிளஸ்
கேட்டு ஒரு வேளை
சங்கீதாவின் அப்பாவை
மன்னிப்பு கொடுத்து
விடுவித்தால்
அவரையும் துரோகி
என்று சொல்வீர்களா அண்ணை

இங்கு எல்லாருமே
தவறு செய்தவர்கள் தான்
ஆனால்  அந்த
பேதங்களை மறந்து
எல்லாரும் இணைந்து
அரசியல் செய்ய வேண்டிய
களமும்
காலமும் இது என
அங்குள்ள சனத்துக்கு
புரிஞ்சு அதுக்கு ஏற்ப
நடக்குதுகள்

இதை
இனியாவது புரிந்து
கொள்ளுங்கள் அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்

வாள்வெட்டு, அடாவடி இன்னும் தொடருது. அன்று இரவோடு இரவாக கடத்தப்பட்டு விடியலில் பிணமாக மீட்கப்பட்ட வரலாறு இப்போ வேறு விதமாக தொடர்கிறது. உங்களுக்கு தெரியார்த்தற்காக எல்லாம் மாறி விட்ட்டது  என்றாகாது. இவர்  ஆசீர்வாதத்தோடு  நடக்கும் அடாவடிகளில் வயிறு வழக்கும் கூட்ட்டம் அவருக்குதான் வோட்டு போடும் என்பது யாவருக்கும் புரியும். குழந்தையையும் கிள்ளி தொட்டிலயும் ஆட்டினால் குழந்தயை கிள்ளியது வெளியில் வராது தன்னை நம்பி விடுவார்கள் என்கின்ற எண்ணம் பலருக்கு. 

9 hours ago, வைரவன் said:

எல்லாரும் இணைந்து
அரசியல் செய்ய வேண்டிய
களமும்

 இணைஞ்சு தக்க நேரத்தில் கழுத்தறுக்க. மாறாதய்யா மாறாது மணமும் குணமும் மாறாது.

விரைவில் அப்பாவுடன் பிள்ளைகள் இணைந்துகொள்ள வேண்டும். சிறை வாழ்க்கை கொடியது, அப்பாவின் சிறை வாழ்க்கையால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது. தமிழ் அரசியல் வாதிகள் இதற்கு குரல் கொடுப்பது நல்லவிடயம்.

On 3/21/2018 at 2:37 PM, satan said:

 இத்தனை பரிதாபத்துக்கும் காரணம் இது போன்ற தேசத் துரோகிகளே. இப்போ முதலைக் கண்ணீர் வடித்தால் நம்பிவிடுவோமாக்கும்.

வடக்கில்  நடக்கிற அத்தனை அட்டூழியங்களுக்கும் பிதா இவர். பாதுகாப்பது போலீசும், ஆமியும். எப்பிடியெல்லாம் நடிக்கிறார். பேசுவது ஜனநாயகம். செய்வது அனிஞாயம். இவனுகளால் மட்டுந்தான் முடியும்.

இச் செய்தியை படித்ததும் இதே எண்ணம் தான் என்னுள்ளும் ஏற்பட்டது!

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2018 at 2:56 AM, வைரவன் said:

டக்கிளஸ்
கேட்டு ஒரு வேளை
சங்கீதாவின் அப்பாவை
மன்னிப்பு கொடுத்து
விடுவித்தால்
அவரையும் துரோகி
என்று சொல்வீர்களா அண்ணை

 இரண்டாம் உலகப்போரின் பின் ஏற்பட்ட    நிதி நெருக்கடி, படைகளை பராமரிக்க முடியாத நிலைபோன்ற பல காரணங்களால் இந்தியாவை விட்டு ஆங்கிலேயர் வெளியேற காந்திதான் காரணம் என்று காந்தியவாதிகள் கொண்டாடுவதுபோல டக்கிலஸின் எடுபிடிகள் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.

தேர்தல் காலங்களில் சிங்கள கூலிப்படைகள் காணி அளக்கிறோம், பிடிக்கிறோம் என்று நாடகமாட, டக்கிளஸ் வந்து நிக்க, ஒத்திகைப்படி படை பின்வாங்க, படம் பிடிக்க.... என்ன ஒரு நாடகம். இது செய்ய இவரால் முடிந்தால் ஏன் இந்த மக்கள் மழையிலும், வெயிலிலும் மாதக்கணக்காய் அலைய வேணும்? ஏன் இத்தனை பெண்கள், பிள்ளைகள் உறவுகளுக்காக, தங்கள் சொந்தக் காணிகளுக்காக காத்திருக்க வேணும்? அதையும் பெற்றுக் கொடுத்திருக்கலாமே?  இந்த எடுபிடியின் இருப்பும், வளர்ச்சியும் சிங்களத்துக்கு அதிகம் தேவைப்படுவதால்தேர்தல் காலங்களில் இவரை  கதா நாயகனாகமக்களிடத்தில்   காட்டி தன் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய  தேவை சிங்களத்துக்கு,   இத்தனை சில்லரைக் கூத்துக்கள் அரங்கேறுகிறது . தமிழர்களின் அதிக வாக்குகளால் வென்று, அரசுக்கு முட்டுக்குடுத்து பதவியில் அமர்த்திய கட்சிகளாலேயே  ஆட முடியாத நாடகத்தை இவரால் நடத்த முடியுதென்றால் இவர் யார்? எப்படி முடியுது ??? இப்படி  பல கேள்விகள் எழுகுது. வடக்கில் பல நிர்வாகங்களில் இவரின் ஆட்கள் இலஞ்சம் மூலம் புகுத்தப்பட்டு அந்தந்த துறைகள் முன்னேற முடியாமல் தடுக்கப்பட்டு இலஞ்சம் பெருகி, அணிஞாயம் ஊதிப்பெருத்து நீதியை பெறமுடியாத நிலை. சட்டத்தையும் நீதியும் நிலை நாட்ட வேண்டிய காவற்துறை ஏன் இவரைப் பாதுகாக்குது.  அவர்களின் ஆணையை இவர் நிறைவேற்றுவதால்.  இவர் எங்கே, எப்படி ஓடினாலும் தர்மத்தின் முன் இவரது நாடகமும், ஆட்களும் எடுபடாது என்ற உண்மை தெரியாமல் ஆடுறார். 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2018 at 11:56 AM, வைரவன் said:

அண்ணர்  எந்த காலத்தில
இருக்கிறியல்?
இன்னும் எல்லாரையும்
துரோகிகள் என்று
சொல்ற காலத்திலா?

நீங்க ஊரை விட்டுட்டு
வந்த பிறகு ஊர்
நிறைய மாறிட்டித்து அண்ண

இந்த முறை
உள்ளுராட்ச்சி தேர்தலில
டக்கிளஸ் கட்சிக்கு கிடைத்த
சபைகள் எத்தனை தெரியுமா?
எவ்வளவு சனம் வாக்கு போட்டு
இருக்கு அவையளுக்கு
என்று தெரியுமா?

பழைய
இத்துப்போன துரோகி
என்று முத்திரை குத்தும்
அரசியல் காலாவதியாகி
கன காலம் அண்ண


டக்கிளஸ்
கேட்டு ஒரு வேளை
சங்கீதாவின் அப்பாவை
மன்னிப்பு கொடுத்து
விடுவித்தால்
அவரையும் துரோகி
என்று சொல்வீர்களா அண்ணை

இங்கு எல்லாருமே
தவறு செய்தவர்கள் தான்
ஆனால்  அந்த
பேதங்களை மறந்து
எல்லாரும் இணைந்து
அரசியல் செய்ய வேண்டிய
களமும்
காலமும் இது என
அங்குள்ள சனத்துக்கு
புரிஞ்சு அதுக்கு ஏற்ப
நடக்குதுகள்

இதை
இனியாவது புரிந்து
கொள்ளுங்கள் அண்ணை 

உவர் அமைச்சராய் இருந்த போது இப்படி ஏதும் திருவாய் மலர்ந்ததாக தெரியவில்லை. ஆக தருணத்துக்கு ஏற்றாற் போல் பிளேட்டை மாத்துகிறார் என கொள்ளலாம்.
சனம் வாக்களித்தது என்கிறீர்கள். மகிந்தவுக்கும் வடக்கில் வாக்களிச்சு இருக்கினம். அதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, nunavilan said:

இந்த முறை
உள்ளுராட்ச்சி தேர்தலில
டக்கிளஸ் கட்சிக்கு கிடைத்த
சபைகள் எத்தனை தெரியுமா?
எவ்வளவு சனம் வாக்கு போட்டு
இருக்கு அவையளுக்கு
என்று தெரியுமா?

அவ்வளவு அணிஞாயம் மலிந்து போயிருக்குது என்று தெரியுது.

 

50 minutes ago, nunavilan said:

டக்கிளஸ்
கேட்டு ஒரு வேளை
சங்கீதாவின் அப்பாவை
மன்னிப்பு கொடுத்து
விடுவித்தால்

இவர் இதுவரை கேட்கவில்லை என்று அவர்கள்  விடுவிக்கவில்லை. இவர் மஹிந்தவோடு கூத்தடிக்கேக்கை அரசியல் கைதிகள் என்று யாருமே இலங்கையில் இருக்கவில்லை, அப்படி ஒன்றையும் அறிந்திருக்கவுமில்லை. இப்ப கேட்டிட்டார் இனி நடக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

உவர் அமைச்சராய் இருந்த போது இப்படி ஏதும் திருவாய் மலர்ந்ததாக தெரியவில்லை. ஆக தருணத்துக்கு ஏற்றாற் போல் பிளேட்டை மாத்துகிறார் என கொள்ளலாம்.
சனம் வாக்களித்தது என்கிறீர்கள். மகிந்தவுக்கும் வடக்கில் வாக்களிச்சு இருக்கினம். அதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்??

தமிழ் இனத்திற்குள் களைகள் ஓங்கி வளர்ந்துவிட்டது தெரிகிறது. :shocked::(

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2018 at 10:39 AM, Paanch said:

தமிழ் இனத்திற்குள் களைகள் ஓங்கி வளர்ந்துவிட்டது தெரிகிறது. :shocked::(

நீங்கள் யாரை சொல்லுகிறீர்கள்? டக்ளசையா  அல்லது மேலே துதிபாடுவோர்களையா?:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு போர் ஓய்ந்த பின்னும்.. அரசியல் கைதிகள் என்று எவரையும் வைச்சிருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலையில்.. ஐநா கூட விடுதலைக்குப் பரிந்துரைத்திருந்த நிலையில்... பயங்கரவாத சந்தேக நபர்களே உள்ளனர்.. அரசியல் கைதிகள் யாரும் இல்லை என்று சொன்ன...  காட்டிக்கொடுப்பு அராஜக ஆயுத அரசியல் மூலம்.. தமிழ் மக்களின் உயிர்குடித்து.. ஊதிப் பெருத்த இந்த முதலை.. இப்போது வடிக்கும் மனிதாபிமானக் கண்ணீரை.. ஏன் நிமலராஜனுக்கு வடிக்கவில்லை.. அற்புதனுக்கு வடிக்கவில்லை.. இப்படி இன்னோரென்ன அப்பாவிகளை கொன்று குவித்த போது வடிக்கவில்லை..

வடக்கில் பிடிச்சுக் கொடுத்திட்டு.. தெற்கில் மகேஸ்வரிக்கு சட்ட வியாபாரம் செய்ய வழிகாட்டிய போது வடிக்கவில்லை...??!

இந்த முதலைகளின் கண்ணீருக்கு அப்பால்..

எல்லா அரசியல் கைதிகளும் பாரபட்சமின்றி ஐநா பரிந்துரைக்கு அமைவாக பொதுமன்னிப்பளித்து விடுவிக்கப்பட வேண்டும்.

அதுவே இந்த நீண்ட துயரங்களுக்கு முடிவாக அமைய முடியும்.

இந்த முதலைகள் வடிக்கும்.. சந்தர்ப்பவாத நீலிக்கண்ணீர் பற்றி உலகம் நன்கறியும். எனியும் உலகம் இவர்களிடம் ஏமாறத் தயார் இல்லை. :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

நீங்கள் யாரை சொல்லுகிறீர்கள்? டக்ளசையா  அல்லது மேலே துதிபாடுவோர்களையா?:unsure:

தமிழீழப் போராட்டத்தைக் கரு அறுத்தபல்லி, ஓணான், முதலைகளையும் அதுகளை ஆதரிக்கும் தமிழர் என்று சொல்லிக் கொள்பவர்களையும் சொன்னேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.