Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழ்க்கை எப்படிப் போகின்றது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஆனால்  உங்கள்  வயதில்

நம்பிக்கை  ஒன்றுதான்  வாழ்வாக  இருக்கும்

இருக்கணும்

வாழ்க  வளமுடன்

நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
On 15/04/2018 at 10:16 PM, சண்டமாருதன் said:

பதிவுக்கு நன்றிகள் இன்னுமொருவன்..

எனது அனுபவத்தில் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்புவது, அர்த்தம் தருவது அல்லது அதை நாடிய முயற்சிகள் எனபது அவரவரோடு சேர்நத வாழ்விடமும் சேர்ந்தது.  ஊரில் வயதான ஒருவர் தனது காணியின் வேலிக்கு கதியால் போட்டு அடைத்துக்கொண்டிருப்பார்,  தனத காணியில் மரங்கள் நடுவார், பாராமரிப்பார் இப்படியே சதா தோட்டம் வயல்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வார். அவர் இயல்பாகவே அதைச் செய்வார், யாரும் அவருக்கு செய் என்று கட்டளை இடமாட்டார்கள். கட்டளைக்கு கட்டுப்பட்டு செய்வதை விட அதிகமாக வேலைகளை செய்வார். அதிலிருந்து தனது வாழ்வாதாரத்துக்கானதையும் எடுத்துக்கொள்வார். தொடர்ச்சியாக உயிர்வாழுதல் என்பது தான் அடிப்படை.  அதைத்தான் எல்லோரும் செய்கின்றார்கள். அதை எப்படி செய்வது என்பதில் தான் அர்த்தம் இருக்கின்றது அல்லது நிறைவு இருக்கின்றது.  வயதானவர் அவரது வழ்வை முடிந்தளவுக்கு அவரே தீர்மானிக்கின்றார். இங்கே எமது வாழ்வை நாம் தீர்மானிக்க முடியாது.  "நான்" என்பது வயதானவரை பொறுத்தவரை அவரது வளவு தோட்டம் மரங்கள் என்ற பெருவட்டத்தைக்கொண்டிருக்கும். அவர் தனியே ஒரு மனித உருவமாக மட்டும் அடயாளம் பெற மாட்டார். இங்கே "நான் " என்றால் எதுவும் இல்லை. எனது வட்டத்துக்குள் என்ன என்று பார்த்தால் ஒரு வீடு ஒரு கார் இரண்டும் எனக்கு சொந்தமா என்று பார்த்தால் அதற்கான கடனை கட்டும் வரை எனக்கு சொந்தமில்லை. கடன் எப்போ முடியும் என்று பார்த்தால் அண்ணளவாக எனது ஆயுள் முடியும் காலம் வரை அது இருக்கும். வேலை நிரந்தரமா என்று பார்த்தால் அதுவும் எப்போ என்ன நடக்கும் என்று தெரியாது. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் வயதானவரும் அவரது காணியை விட்டு விரட்டப்பட்டு விட்டார். 

மனிதன் ஒரு வேட்டை விலங்கு. இந்த உலகம் ஒரு வேட்டைக்காடு. இந்த அடிப்படைக்கு உள்ளகவே வழ்க்கை அமைகின்றது. எமது சந்தோசம், நிறைவு, அர்த்தம் ஆன்மீகம் கடவுள் என அனைத்தும் இந்த அடிப்படைக்கு உள்ளகவே தனது எல்லையை கொண்டிருக்கின்றது. அந்தவகையில் வாழ்வின் பொருள் அர்த்தம் நிறைவு என்பதை பெரிய விசயமாக உணர்வதில்லை. அவ்வப்போது கிடைக்கும் சின்ன சின்ன திருப்திகளை அனுபவிப்பது. வேணுமான தருணத்தில் நல்ல ஒரு தேத்தண்ணி உள்ளடங்கலாக. வாழ்க்கை போகுது... 
 
எங்கள் நிலமையை இட்டு நாங்கள் திருப்த்தி படுவதற்க்காக அந்த மனிதரும் விரட்டப்பட வேண்டி இருக்குது.:unsure:அவர் ஒரு தமிழர் அல்லாமல் வேறு நாட்டவராக இருந்தால் அவர் தொடர்ந்து சுதந்திரமாத்தான் வாழவார;

Edited by சுவைப்பிரியன்
பல தரம் பதியப்படடுவிட்டது

  • தொடங்கியவர்

நன்றி அனைவரின் கருத்துக்களிற்கும். 

கந்தப்பு நன்றி உங்கள் கருத்திற்கு. நீங்கள் கூறுகின்ற ‘நேரத்தைப் புறக்கணித்த, கணத்தில் வாழ்தல்” என்பது காலாதிகாலத்திற்கு மனிதனோடு ஒரு தேடலாக, கிழர்ச்சியாக இருந்து வருகின்றது. ‘காலபைரவன்’ மற்றும் ‘சும்மா இருப்பதே சுகம்” என்பதெல்லாம் இந்த வகையறா தான். இருப்பினும் இது எத்தனை பேரிற்கு நடைமுறைச்சாத்தியமாகிறது என்பது தெரியவில்லை. அனேகமாக நுகர்வோர் உலகில் சந்தை இதை அனுமதிக்hது பார்த்துக்கொள்வதில் கவனமாகவே இருக்கிறது.
 
நுணாவிலான் நீங்கள் இணைத்த பதிவு கூறுவதுபோல், மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கையில் இந்தப் பிரச்சினைகள் வருவதில்லைத் தான். தேடல் பெரிதென்பது தேடல் இல்லாமற்போதல் என்பதை நோக்கியதாக மட்டும் தான் இரு;கமுடியும் என்பது எனது அபிப்பிராயம்.

On 4/17/2018 at 6:35 PM, Kavallur Kanmani said:
..
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்...
 
On 4/18/2018 at 2:35 PM, Kavi arunasalam said:

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை ....

பாட்டுக்கள் போன்று கவித்துவமாகவே வாழ்க்கையினை அணுகுகின்றீர்கள் என்பது பார்;பதற்கு மகிழ்வாக இருக்கிறது. 

On 4/17/2018 at 10:02 AM, விசுகு said:

நல்லதொரு சுய  மீட்டல்

நீங்கள் மேலே  குறிப்பிட்டது போல

எல்லாவற்றையும்   இலகுவாக அடைந்துவிட  வாங்கிவிட முடிகிற  வாழ்க்கை

சுவையுள்ளதாக  இருக்குமா??

எம் முன்னோர்கள்  எப்பொழுதே  சொன்னார்களே

போதும்  என்ற  மனமே பொன் செய்யும் மருந்து என்று

இன்று  எதை  அடைந்த போதும்

அது போதுமானதாக

தனிப்பட

நான்  எனது  வாழ்வின்  இலட்சியங்களை

கனவு  கண்ட  வாழ்வை

நான்  வாழ  எண்ணிய வாழ்க்கையை

அடைந்தேனா  என்றால்  இல்லை  என்பது தான் பதிலாக  இருக்கும்

எல்லாம்  இருந்தும் ஏதோ  ஒன்றை  தொலைத்த  வெறுமை

பெரும் புத்தகமாக எழுதக்கூடிய அனுபவங்கள்

அடியெடுத்து வைத்தவை

அல்லது முயற்ச்சித்தவை  

அவற்றில்  வென்றவற்றை  பார்த்தால்????

எம்மை ஏமாற்றியவர்கள்

நம்பவைத்து கழுத்தறுத்தவர்கள்

இன்னும் இருவேடமிடும் சொந்தங்களுக்கு  மத்தியில்

இவற்றை அறவே துறந்து

இவன் மனச்சாட்சிப்பட  நடப்பவன் என்ற  நல்ல பெயரோடு

வாழ்ந்தால் இவர் போல  வாழணும்

இவர் போல பிள்ளைகளை  வளர்க்கணும் என நாலு பேர்  சொல்லும் அளவுக்கு

வாழ்ந்து முடித்திருப்பதே இப்போதைக்கு  என்னுடன்  கூடவே வருவது.

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களது முன்னைய பதிவுகளிலும் கவனித்துள்ளேன், நீங்கள் பதறாது கருமமாற்றும் பக்குவம் கொண்டுள்ளமை தெரிகிறது. மற்றையவரின் மதிப்பீடுகள் சார்;ந்து என்னதான் நாம் அதற்கு அப்பாற்பட்டவர்களாக வாழ முனையினும் சமூகம் என்பது மற்றையவர் மதிப்பீட்டைப் பல பங்கு உள்ளடக்கித் தான் நகர்கிறது என்பது மறுப்பதற்கில்லை.

ரதி, கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பது நமது மரபாக இருப்பது உண்மைதான். இருப்பினும் எனக்கு ஏனோ இறப்பின் உடல் என்பது சார்ந்து எந்தக் கரிசனையும் இல்லை. சுப்பர்மாக்கற்றில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோழி, மீன் மற்றும் இறைச்சி வகைககளிற்கும் இறப்பின் பின் மனிதனிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். ஆனால் இறப்பின் பின் உடல் அழகாக வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது, ஒருவேளை இதை நீங்கள் எழ்ழலாகக் கூறிநீர்களோ தெரியாது, உளவியல் சார்;ந்து தற்போதைய வாழ்வைப் பார்க்க உதவும். சுவாரசியமான முனை.

Edited by Innumoruvan

18 hours ago, சுவைப்பிரியன் said:

எங்கள் நிலமையை இட்டு நாங்கள் திருப்த்தி படுவதற்க்காக அந்த மனிதரும் விரட்டப்பட வேண்டி இருக்குது.:unsure:அவர் ஒரு தமிழர் அல்லாமல் வேறு நாட்டவராக இருந்தால் அவர் தொடர்ந்து சுதந்திரமாத்தான் வாழவார;

கருத்துக்கு நன்றி சுவைப்பிரியன் 

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து ஒருவர் மிச்சமில்லாமல் தமது வாழ்வாதாரத்தை விட்டு வெளியேறிய இறுதிப்போர்க்காலங்களை தவிர்த்துச் செல்லமுடியாது. வெளியேறியவர்களில் பாதிப்பேரும் திரும்பச் செல்லவில்லை. சனத்தொகை சரிபாதிக்கும் குறைந்துவிட்டது. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மண்ணுக்கும் அவர்களுக்குமான பிணைப்பின் குறுக்கே அச்சம் நம்பிக்கையின்மை என்ற பல விசயங்கள் வந்துவிட்டது.  வாழ்க்கை எதை நோக்கிப் போகின்றது என்ற கேள்வியின் கனதி எம்மை விட அவர்களுக்கு பல பத்து மடங்கு அதிகம். மேலும் தமிழர் அல்லாத வேறு நாட்டவர்கள் என்றாலும் அவர்கள் சுதந்திரத்தை தீர்மானிப்பதும் பணம் படைத்த முதலாளித்துவவாதிகளே ! 

 உதாரணமாக இந்தியா எங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பழங்குடிகளின் வாழ்வாதரம் பறிக்கப்படுவதானாலும் சரி.. நாம் முகநூலை பயன்படுத்துகின்றோம்  அதன் மூலம்  அதன் நிறுவனர் பல பில்லியன் சம்பாதிக்கின்றார். அமரிக்காவின் ஹவாயில் அவர் நூறு மில்லியன் டொலரில் நிலம் வாங்குகின்றார். அங்கு இருக்கும் அந் நிலத்துக்கே சொந்தமான விவசாயிகள் விரட்டியடிக்கப்படுகின்றார்கள். அவர்கள் தம் வாழ்வு எப்படிப் போகின்றது என்று கேட்கின்றார்கள். 

உங்கள் கருத்து ஒரு நெருடலை ஏற்படுத்துகின்றது.  இருந்தும் எமக்குத் தெரியாது நாம் உலகில் எங்கோ இருக்கும் என்னுமொருதனின் வாழ்வு சிதைக்கப்படுவதற்கு  சிறு துளி பெருவெள்ளமாக காரணமாக இருக்கின்றோம் என்பது. 

இதே தேடலை தான் நான் இன்னும் தேடி கொண்டிருக்கிறேன். வாழ்க்கை என்றால் என்ன .?  அதில் "நான்" என்ற கதாபாத்திரத்துக்கு என்ன பங்கு.? இது ஒரு விடைகாணா கேள்வியாக படிந்துவிட்டது. 

இந்த கட்டுரை அதன் பின்னரான பதிவுகள் அந்த தேடலை இன்னும் ஊக்கபடுத்தியுள்ளது. தேடல் பரப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது. ஒரே ஆறுதல் நான் மட்டும் மல்ல "வாழ்க்கையை" இன்னும் நிறையப்பேர் (என் சார்ந்தவர்கள்) தேடுகிறார்கள் என்பதே.

நவீன தத்துவவாதிகளின் "எல்லாமே ஒன்றுமே இல்லை"(Everything is Nothing or Nothing is Everything) என்ற கருத்தை உள்வாங்கி வாழுவோம் என்றால் இந்த உலக அமைப்பு/ சமூக அமைப்பு அதற்கு உடன்பாடானதாக இல்லை. 

"புக்காரஸ்டில்" எனது ரொமேனிய பயிற்சியாளன் சொல்லுவான் இமையமலையில்(தனிமையில்) போய் தவமிருப்பதை காட்டிலும் கடினமானது இந்த சமூக கட்டமைப்பில்  "எல்லாமே ஒன்றுமே இல்லை" என்று வாழ்வது.

அவனிடம் சரி அப்போ எப்படித்தான் வாழ்வது என்று கேட்டுப்பார்த்தேன்.

உனக்கு பிடித்தமானதை செய் அல்லது உனக்கு பிடித்தாமனதாக வாழு. ஆனால் அதை இதைவிட யாராலும் சிறப்பாக செய்ய/வாழ முடியாது என்று சொல்லுமளவிற்கு செய்/வாழு.

அது பிடிக்கவில்லையா வேறு எது பிடிக்கிறதோ அதை செய். அதையும் உன்னை வென்றுவிடாத அளவிற்கு சிறப்பாக செய். இது தான் வாழ்க்கை என்றான்.

புரிந்த மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. என்றாலும் எதையாவது அவன் சொன்னமாதிரி செய்து பார்த்துவிட்டு தீர்மானிப்போம் என்று இருக்கிறேன்.

இன்னும் பயிற்சிகள் இருப்பாதால் தொடர்ந்தும் விவாதிக்க சந்தர்ப்பம் இருக்கு..

யாழில் அதற்கான ஒரு வெளி உருவாக்கிய இன்னுமொருவனுக்கும் இங்கு கருத்துகளை பதிவிடும் உறவுகளுக்கும் நன்றிகள்.

நாங்கள் ஒரே படகில் பயணிக்கிறோம் என்ற உணர்வு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி கீறலை ஆழ்மனதில் உருவாக்கி இருக்கிறது.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்,இறந்த பின் மனிதர்களாயினும் சரி,மிருகங்கள் ஆயினும் சரி சதைப் பிண்டங்கள் தான்...உயிரோடு இருக்கும் போது இப்படித் தான் வாழ வேண்டும்  என்று நினைக்கிறீர்களா அல்லது எப்படியும் வாழலாம் என்று வாழும் வாழ்க்கை சரியா
 
இன்னுமொருவன் / சுகன் / பகலவன்/ கிருபன்  மற்றும் எல்லோரிடமும் நான் கேட்க நினைக்கும் கேள்வி

நாம் வாழ்க்கையில் ஏன் 'அர்த்தத்தை' தேட வேண்டும்? வாழ்க்கையில் ஏன் 'தேடல்' அவசியம் என்று நினைக்கின்றீர்கள்?

இயற்கையில் இருக்கும் எதுவும், வேறு எந்த உயிரினமும் இப்படி தன் வாழ்க்கையில் அர்த்தத்தை அல்லது 'நான் எனும் கதாபாத்திரத்தின் அர்த்தம் என்ன', 'எது மெய் உணர்வு' 'எது உண்மையான சந்தோசம்' என்று எல்லாம் அலட்டிக் கொண்டு இருக்காமல் அந்த நாயை போல மகிழ்வாக இருக்கும் போது நாம் மட்டும் ஏன் இப்படி குறுக்கு கேள்விகளுடன் அலைய வேண்டும்?

(இந்த திரிக்கு தாமதமாக வந்து விட்டேன் என நினைக்கின்றேன். நேரம் கிடைக்கவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

மீளவும்இவ்விடத்தில் இன்னுமொருவனின் தேடலில்

எங்கிருந்து ஆரம்பிப்பது எப்படி நகர்த்துவது தீர்மானம் இல்லாத அலைக்கழிவைஒவ்வொரு வினாடியும் எதிர் நோக்குவதே நிகழ்வாக அமைகிறது. எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருப்போம் சற்றும் எதிர்பாராத திருப்பு முனைகளைச் சந்திப்போம். சில சமயங்களில் திகைப்பில் இருந்து விடுபட முடியாமலே தேடல் சறுக்கிவிடும். மாறிக் கொண்டிருக்கும் ஓட்டத்திற்குள் முனைப்பெடுத்து திட்டமிட முடியாமல் வாழ்க்கை நழுவிக்கொணடிருக்கும்.இந்த மனித உடல் எடுத்த பாத்திரத்திற்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டு நடித்து முடித்து விடைபெறும்வரை தேடல்களுக்கும் பஞ்சம் இருக்காது. நிறைய எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. மீளவும் எழுதுவேன்.

நன்றி இன்னுமொருவன்

4 hours ago, நிழலி said:

இன்னுமொருவன் / சுகன் / பகலவன்/ கிருபன்  மற்றும் எல்லோரிடமும் நான் கேட்க நினைக்கும் கேள்வி

நாம் வாழ்க்கையில் ஏன் 'அர்த்தத்தை' தேட வேண்டும்? வாழ்க்கையில் ஏன் 'தேடல்' அவசியம் என்று நினைக்கின்றீர்கள்?

இயற்கையில் இருக்கும் எதுவும், வேறு எந்த உயிரினமும் இப்படி தன் வாழ்க்கையில் அர்த்தத்தை அல்லது 'நான் எனும் கதாபாத்திரத்தின் அர்த்தம் என்ன', 'எது மெய் உணர்வு' 'எது உண்மையான சந்தோசம்' என்று எல்லாம் அலட்டிக் கொண்டு இருக்காமல் அந்த நாயை போல மகிழ்வாக இருக்கும் போது நாம் மட்டும் ஏன் இப்படி குறுக்கு கேள்விகளுடன் அலைய வேண்டும்?

(இந்த திரிக்கு தாமதமாக வந்து விட்டேன் என நினைக்கின்றேன். நேரம் கிடைக்கவில்லை)

survival

தொடர்ச்சியான உயிர்வாழ்தலுக்கான போராட்டம், அர்த்தம் அதன் நிமர்த்தமானதே. அல்லது போராட்டத்தின் களைப்பில் நிம்மதி சார்ந்ததே. ஐயத்தில் இருந்து தப்பித்தல் சார்ந்து.. 

உண்மையில் ஒரு நாயின் வாழ்வை விட ஆயிரம் மடங்கு சிக்கலானது மானுடத்தின் வாழ்வு. நான் சில வருடங்களுக்கு முன்னர் பிறவியில் மனவளம் உடல்வளம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடத்தில் வேலை செய்தேன். அதில் பலருக்கு எந்த உணர்வும் இல்லை. நாய்க்கான தற்காப்பு உணர்வு கூட இல்லை. நாய் ஒருவரை சார்ந்து அவருக்கு நன்றியுடன் இருக்கும் ஆனால் இவர்களுக்கு அந்த இயல்புகூட இல்லை. அவ்விடத்தில் ஒரு பாதிக்கப்பட்டவருக்கு குறைந்தது 12 இல் இருந்து 15 பேர் வேலை செய்கின்றார்கள். மூன்று சிப்ட் வேலை. வைத்தியர், தாதிகள் பராமரிப்பாளர்கள், உணவு வழங்கல் பிரிவு, என்று ஒரு பக்கம், பொறியிலாளர்கள் கட்டட பராமரிப்பு என்று அது ஒரு பக்கம், நிர்வாகம், வாகன ஓட்டுனர்கள், இப்படியே ஒரு பெரிய லிஸ்ட் போடலாம். ஆரம்பத்தில் நான் நினைத்தேன் இந்த இடத்தில் வேலை செய்வதில் ஒரு திருப்தியும் ஒரு அர்த்தமும் இருக்கின்றது என்று ஆனால் பின்னர் தான் எனக்கு புரிந்தது அவர்களால் நான் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஒரு பாதிக்கப்பட்டவர் 15 பேருக்கு வேலைகொடுத்துக்கொண்டிருக்கின்றார். (இவர்களுக்கான பொருட்களை சப்பிளை செய்பவர்களும்  இவர்களால் பிழைத்துக்கெண்டிருக்கின்றார்கள்) அவர்கள் வாழ்வு அர்த்தமுள்ளது என்றால் அதை அவர்களால் உணரமுடியவில்லை, நான் அங்கு வேலை செய்வது அர்த்தம் உள்ளது என்றால் அதில் உண்மையும் இல்லை. 

அண்மையில் ஒருநாள் ஒரு அறிவித்தலை குடியிருப்பாளர் கதவில் ஒட்ட வேண்டியிருந்தது. நான் கதவடியில் சென்றதும் உள்ளிருந்த நாய்குட்டி வீட்டுகாரர் தான் வந்துவிட்டர் கதவை திறக்கின்றார்  என்று கதவை பிராண்டி உள்பக்கமாக பரிதவித்துக்கொண்டிருந்தது. வீட்டுக்காரர் வேலைக்கு சென்றுவிட்டார் அது தனிமையில் வாடுகின்றது. 

இன்றிலிருந்து 300 வருடங்களுக்கு முன்பு நான் எங்கிருந்தேன் 300 வருடங்களுக்கு பின்பு எங்கிருப்பேன் என்று ஒரு கேள்வி கேட்கும் போது ஒன்றின் மீதான பிடிவாதம் தளர்ந்து போகின்றது. 

லட்சியம், அர்த்தம், தேடல் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றது. அதன் கனதி வேறுபடுகின்றது. 

உங்கள் கேள்விகளுக்கான விடை  கேள்விக்கு சாதகமானதாகவே இருக்கும். அர்த்தம் தேடல் என்பது ஒன்றுமில்லை என்றுதான் இறுதியில் முடியும்.

  • தொடங்கியவர்
17 hours ago, நிழலி said:

உங்கள் கேள்விக்கு ஏகப்பட்ட கோணத்தில் பதிலளிக்கத் தோன்றுகின்றது. நேரம் போதவில்லை. சிலவற்றை இப்போ பதிவிடுகிறேன்.

1)    மனிதன் “எதையாவது தேடுவோம்” என்று றூம் போட்டு சிந்திப்பதில்லை. தேடல் இயல்பாகப் பிறக்கின்றது. மூச்சிரைக் ஓடிக்கொண்டிருத்தல், வாழ்வாதரப் போராட்டம் மூச்சுவிட முடியாதபடி வைத்திருத்தல், பயம், போதை, மயக்கம், கோபம் போன்று ஏகப்பட்ட விடயங்கள், தேடல் உள்ளதை தற்காலிகமாக மறைத்து வைப்பினும், தேடல் மனிதனின் இயல்பு. எப்ப வரும், எப்பிடி வரும் வந்தால் எப்படிப் புரியப்படும் என்பதற்கெல்லாம் அப்பால் தேடல் அற்ற மனிதன் இயல்பு நிலையில் இல்லை. அந்த வகையில், நீங்கள் சொல்வது போன்றே பார்த்தாலும், வாழ்வைப் பிரித்தாராயாது அதன்பாட்டில் எடுத்தாலும், வாழ்வின் இயல்பான அங்கமான இந்தத் தேடல் இயல்பாய்த் தானே பிறக்கிறது. குகைமனிதன் காலம் தொட்டே மனிதன் தேடிக்கொண்டு தான் இருந்தான்.

2)    மிருகங்களின் உளவியல் பற்றி எமக்கு இன்னமும் போதிய புரிதல் இல்லை என்பது எனது அபிப்பிராயம். செயற்கை அறிவின் முனைப்பில் இது புரியப்படும் என்பது எனது அனுமானம். அதுவரைக்கும், மிருகங்களிற்குத் தேடலில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஏன் மனிதனிற்கு மட்டும் இந்தத் தேடல் என்ற கேழ்வி மட்டுமல்ல, இது போன்று பல கேள்விகள் உள்ளன. உதாரணமாக, ஏன் காட்டு விலங்குகளிற்கு ஒபீசிற்றி பிரச்சினையில்லை மனிதனிற்கு மட்டும் தான் இந்த உடல் பருமன் பிரச்சினை என்ற கேள்வியினை எடுக்கலாம். இப்பிடி நிறைய கேழ்விகள் வரும் போதும் அவற்றிற்கான விடைகள் உள்வாங்கப் படுகின்றனவா என்பது கேள்விக்குரியதாகவே தொடர்கிறது.

இப்போ காட்டு விலங்குக்கு இல்லாத ஒபீசிற்றி ஏன் மனிதனிற்கு இருக்கு என்ற கேழ்விக்கு “சந்தை” என்ற ஒரு சொல்லு பதிலாகும். ஆனால் அது புரியப்படாது. மாக்ஸ் மட்டுமல்ல அதற்கு முன்னரும் பின்னரும் மனிதன் தானும் ஒரு விலங்கு என்பதை மறந்து, புறம்பாகத் தள்ளி நின்று விலங்கோடு தன்னை ஒப்பிட்டு கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறான். எனது அபிப்பிராயம், மனிதன் செய்யும் அனைத்துமே அவனது விலங்குத் தன்மையின் இயல்பின் வெளிப்பாடுகள் தான். முதல் விலங்கு பில்லியன்களான ஆண்டுகள் சுவாசித்ததால் வழி மண்டலம் உருவானது, மனிதனின் நகர்ச்சி என்ன என்பது ஒரு வேளை இப்போதைக்குத் தெளிவின்றி இருப்பினும், மனிதனும் இயற்கையின் உருவாக்கமே. எதேச்சையானதா, திட்டமிடப்பட்டதா என்ற கேள்விக்கு அப்பால் மனிதன் என்ற விலங்கின் இயல்பையே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த இயல்பில் தேடல் அடக்கம். 
 
On ‎4‎/‎30‎/‎2018 at 10:40 PM, சண்டமாருதன் said:

நீங்கள் எதை ' வாழ்க்கையின்அர்த்தம்' என்று குறிப்பிடுகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் தடுமாறுகின்றேன். ஒருவர் பலரின் வாழ்வாதாரத்துக்கு தேவையான விடயங்களை பெற்றுக் கொள்வதில் முக்கியகர்த்தாவாக இருந்தால் அவர் வாழ்வு அர்த்தம் நிறைந்ததாக ஏற்றுக் கொள்கின்றீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் குறிப்பிடும் 'அர்த்தம்' என்பதன் அர்த்தம் இதுவா?

அப்படியாயின், எவருக்கும் எந்தவிதமான வாழ்வாதாரத்தையும் தர வசதியற்றவர்களாக எம் வாழ்வு போனால் அது அர்த்தம் அற்றதாகி விடுமா? எவருக்கும் உதவ முடியாது அதே வேளை தன்னளவில் திருப்தியும் வேறு எவருக்கும் சிரமமும் கொடுக்காது வாழ்ந்து போகின்றவர்களின் வாழ்வு அர்த்தம் அற்றதாகி விடுமா?

நீங்கள் குறிப்பிடும் தேடல் என்பது  'நான் முன்பு எங்கிருந்தேன் இன்னும் 300 வருடங்களுக்கு பின் எங்கிருப்பேன்' என்பதை அறிந்து கொள்வது பற்றியது என நம்புகின்றேன் (இன்னுமொருவன் தேடல் எனச் சொல்வது இதை அல்ல என நினைக்கின்றேன்). அப்படியாயின் அதை ஏன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு வினாடியில் உயிராக உருவான நாம் இன்னொரு வினாடி ஒன்றில் இறந்து விடுகின்றோம். முன்னரும் நாம் இருக்கவில்லை, பின்னரும் நாம் இருக்க போவதில்லை. உண்மை இப்படி இருக்க ஏன் மனசை வீணாக அலைக்கழிப்பான்?

அண்மையில் இறந்த என் மாமி (மனைவியின் அம்மா) இறுதி நாட்களில் உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடன் தான் உயிரை பிடித்துக் கொண்டு இருந்தார். மருத்துவமனையில் என்னைக் காணும் நேரம் முழுதும் 'நான் எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து விட்டேன்..இனி காணும் ஏன் இன்னும் வைத்து இருக்கின்றீர்கள்.... உதை கழட்டி விடுங்கள்' என கேட்டுக் கொண்டே இருந்தார். ஈற்றில் தாதிகள் ஒரு வினாடி அசந்த நேரம் பார்த்து கைகளை கட்டி வைத்து இருப்பினும் கூட எப்படியோ முயன்று மூச்சை வழங்கி கொண்டு இருந்த குழாய்களை இழுத்து எறிந்து வெளியே எடுத்து விட்டார். மீண்டும் தாதிகளை தனக்கருகில் வர விடவும் இல்லை. சரியாக 15 நிமிடங்களில் இதயம் அடங்கி விட்டது. என்னைப் பொறுத்தவரைக்கும் 'இனி காணும் போவம்' என்ற சிந்தனை ஒரு முழுமையான சிந்தனையாக தென்படுகின்றது. தான் ஏன் இங்கே வந்தேன் எங்கு போகப் போகின்றேன் என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் வாழ்வு முழுமையாக வாழ்ந்திட்டன் என்ற மனத் திருப்தி தான் நிறைவான வாழ்க்கை என் எண்ணுகின்றேன். விடையே கண்டு பிடிக்க முடியாத விடயங்களை பற்றி சிந்திப்பதை விட வாழ்கின்ற வாழ்க்கையை திருப்தியாக வாழ்வது தான் சிறந்தது?

On ‎5‎/‎1‎/‎2018 at 10:30 AM, Innumoruvan said:

குகை மனிதனின் காலத்தில் இருந்து இன்று வரைக்குமான மானுட வளர்ச்சி என்பது இயற்கையை வெல்லுதல் என்பதன் அடிப்படையில் உருவானது. இயற்கையை வெல்லுதல் என்பது மனிதனின் அடிப்படை குணங்களில் ஒன்று. அப்படி இயற்கையை வெல்ல முயற்சிக்காத  மிச்ச விலங்குகளில் இருந்து அவன்/ள் தன்னை வேறுபடுத்தி பார்க்கும் போதே தன்னை உயர் பிறவியாக நினைக்கின்றான்/ள். இந்த வளர்ச்சியையும் வளர்ச்சி நோக்கிய அவன்/ள் முயற்சியையா தேடல் என்கின்றீர்கள்? தட்டையாக சொல்வது என்றால் தன் வாழ்வாதார வசதிகளை பெருக்குது, ஒன்றை அடைந்த பின் இன்னொன்றுக்கு ஆசைப்படுவது, அது கிடைத்த பின் இன்னொன்றை நோக்கி ஓடுவது என்ற பொதுவான மனித குணத்தின் இயல்பையா தேடல் என்கின்றீர்கள்?

அல்லது சுகன் குறிப்பிடுவது போன்று, நான் நேற்று எங்கிருந்தேன் நாளை எங்கு போகப் போகின்றேன் என விடை காண முற்படுவதையா தேடல் என்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

நீங்கள் எதை ' வாழ்க்கையின்அர்த்தம்' என்று குறிப்பிடுகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் தடுமாறுகின்றேன். ஒருவர் பலரின் வாழ்வாதாரத்துக்கு தேவையான விடயங்களை பெற்றுக் கொள்வதில் முக்கியகர்த்தாவாக இருந்தால் அவர் வாழ்வு அர்த்தம் நிறைந்ததாக ஏற்றுக் கொள்கின்றீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் குறிப்பிடும் 'அர்த்தம்' என்பதன் அர்த்தம் இதுவா?

அப்படியாயின், எவருக்கும் எந்தவிதமான வாழ்வாதாரத்தையும் தர வசதியற்றவர்களாக எம் வாழ்வு போனால் அது அர்த்தம் அற்றதாகி விடுமா? எவருக்கும் உதவ முடியாது அதே வேளை தன்னளவில் திருப்தியும் வேறு எவருக்கும் சிரமமும் கொடுக்காது வாழ்ந்து போகின்றவர்களின் வாழ்வு அர்த்தம் அற்றதாகி விடுமா?

நீங்கள் குறிப்பிடும் தேடல் என்பது  'நான் முன்பு எங்கிருந்தேன் இன்னும் 300 வருடங்களுக்கு பின் எங்கிருப்பேன்' என்பதை அறிந்து கொள்வது பற்றியது என நம்புகின்றேன் (இன்னுமொருவன் தேடல் எனச் சொல்வது இதை அல்ல என நினைக்கின்றேன்). அப்படியாயின் அதை ஏன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு வினாடியில் உயிராக உருவான நாம் இன்னொரு வினாடி ஒன்றில் இறந்து விடுகின்றோம். முன்னரும் நாம் இருக்கவில்லை, பின்னரும் நாம் இருக்க போவதில்லை. உண்மை இப்படி இருக்க ஏன் மனசை வீணாக அலைக்கழிப்பான்?

அண்மையில் இறந்த என் மாமி (மனைவியின் அம்மா) இறுதி நாட்களில் உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடன் தான் உயிரை பிடித்துக் கொண்டு இருந்தார். மருத்துவமனையில் என்னைக் காணும் நேரம் முழுதும் 'நான் எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து விட்டேன்..இனி காணும் ஏன் இன்னும் வைத்து இருக்கின்றீர்கள்.... உதை கழட்டி விடுங்கள்' என கேட்டுக் கொண்டே இருந்தார். ஈற்றில் தாதிகள் ஒரு வினாடி அசந்த நேரம் பார்த்து கைகளை கட்டி வைத்து இருப்பினும் கூட எப்படியோ முயன்று மூச்சை வழங்கி கொண்டு இருந்த குழாய்களை இழுத்து எறிந்து வெளியே எடுத்து விட்டார். மீண்டும் தாதிகளை தனக்கருகில் வர விடவும் இல்லை. சரியாக 15 நிமிடங்களில் இதயம் அடங்கி விட்டது. என்னைப் பொறுத்தவரைக்கும் 'இனி காணும் போவம்' என்ற சிந்தனை ஒரு முழுமையான சிந்தனையாக தென்படுகின்றது. தான் ஏன் இங்கே வந்தேன் எங்கு போகப் போகின்றேன் என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் வாழ்வு முழுமையாக வாழ்ந்திட்டன் என்ற மனத் திருப்தி தான் நிறைவான வாழ்க்கை என் எண்ணுகின்றேன். விடையே கண்டு பிடிக்க முடியாத விடயங்களை பற்றி சிந்திப்பதை விட வாழ்கின்ற வாழ்க்கையை திருப்தியாக வாழ்வது தான் சிறந்தது?

எனக்கு உங்கட மாமியைப் பற்றித் தெரியாது...சில நேரம் உயிரோடு படுக்கையில் இருந்து மற்றவர்களுக்கு கரைச்சல் கொடுக்க கூடாது என்பதாக கூட இருக்கலாம்.{ உங்கள் பெரியவர் உரையாடலில் தலையைப் போட்ட்திற்கு மன்னிக்கவும் }
 
8 hours ago, நிழலி said:

நீங்கள் எதை ' வாழ்க்கையின்அர்த்தம்' என்று குறிப்பிடுகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் தடுமாறுகின்றேன். ஒருவர் பலரின் வாழ்வாதாரத்துக்கு தேவையான விடயங்களை பெற்றுக் கொள்வதில் முக்கியகர்த்தாவாக இருந்தால் அவர் வாழ்வு அர்த்தம் நிறைந்ததாக ஏற்றுக் கொள்கின்றீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் குறிப்பிடும் 'அர்த்தம்' என்பதன் அர்த்தம் இதுவா?

அப்படியாயின், எவருக்கும் எந்தவிதமான வாழ்வாதாரத்தையும் தர வசதியற்றவர்களாக எம் வாழ்வு போனால் அது அர்த்தம் அற்றதாகி விடுமா? எவருக்கும் உதவ முடியாது அதே வேளை தன்னளவில் திருப்தியும் வேறு எவருக்கும் சிரமமும் கொடுக்காது வாழ்ந்து போகின்றவர்களின் வாழ்வு அர்த்தம் அற்றதாகி விடுமா?

நீங்கள் குறிப்பிடும் தேடல் என்பது  'நான் முன்பு எங்கிருந்தேன் இன்னும் 300 வருடங்களுக்கு பின் எங்கிருப்பேன்' என்பதை அறிந்து கொள்வது பற்றியது என நம்புகின்றேன் (இன்னுமொருவன் தேடல் எனச் சொல்வது இதை அல்ல என நினைக்கின்றேன்). அப்படியாயின் அதை ஏன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு வினாடியில் உயிராக உருவான நாம் இன்னொரு வினாடி ஒன்றில் இறந்து விடுகின்றோம். முன்னரும் நாம் இருக்கவில்லை, பின்னரும் நாம் இருக்க போவதில்லை. உண்மை இப்படி இருக்க ஏன் மனசை வீணாக அலைக்கழிப்பான்?

அண்மையில் இறந்த என் மாமி (மனைவியின் அம்மா) இறுதி நாட்களில் உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடன் தான் உயிரை பிடித்துக் கொண்டு இருந்தார். மருத்துவமனையில் என்னைக் காணும் நேரம் முழுதும் 'நான் எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து விட்டேன்..இனி காணும் ஏன் இன்னும் வைத்து இருக்கின்றீர்கள்.... உதை கழட்டி விடுங்கள்' என கேட்டுக் கொண்டே இருந்தார். ஈற்றில் தாதிகள் ஒரு வினாடி அசந்த நேரம் பார்த்து கைகளை கட்டி வைத்து இருப்பினும் கூட எப்படியோ முயன்று மூச்சை வழங்கி கொண்டு இருந்த குழாய்களை இழுத்து எறிந்து வெளியே எடுத்து விட்டார். மீண்டும் தாதிகளை தனக்கருகில் வர விடவும் இல்லை. சரியாக 15 நிமிடங்களில் இதயம் அடங்கி விட்டது. என்னைப் பொறுத்தவரைக்கும் 'இனி காணும் போவம்' என்ற சிந்தனை ஒரு முழுமையான சிந்தனையாக தென்படுகின்றது. தான் ஏன் இங்கே வந்தேன் எங்கு போகப் போகின்றேன் என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் வாழ்வு முழுமையாக வாழ்ந்திட்டன் என்ற மனத் திருப்தி தான் நிறைவான வாழ்க்கை என் எண்ணுகின்றேன். விடையே கண்டு பிடிக்க முடியாத விடயங்களை பற்றி சிந்திப்பதை விட வாழ்கின்ற வாழ்க்கையை திருப்தியாக வாழ்வது தான் சிறந்தது?

மனசை அலக்களிக்காமல் வைத்திருப்பது, நிம்மதியாக திருப்தியாக நிறைவாக வாழ்வது சாத்தியமில்லை.  எமது வாழ்க்கையை நாம் தீர்மானிப்பது போல் தான் எமக்கு தோன்றும் ஆனால் அது உண்மை இல்லை. நான் எவ்வளவு நேரம் நித்திரை கொள்ளவேண்டும் எத்தனை மணிக்கு எழும்ப வேண்டும் எவவளவு நேரம் வேலை செய்யவேண்டும் எவ்வளவு நேரத்துக்குள் காலை மதிய உணவுகளை உண்ணவேண்டும் என்பது முதல் இருப்பிடம் உணவு அதற் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பது  அடங்கலாக பெரும்பகுதி மற்றவர்களால் தீர்மானிக்கப்படுகின்து. எம் கண்ணுக்கு புலப்படாமல் எம் கை கால்களில் இருக்கும் விலங்குகளுடன்  நிம்மதியான வாழ்வு சாத்தியமில்லை. 

இன்று காலை நீங்கள் சந்தோசமாக இருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம், மாலை கணனியை திற்கும் போது தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் அவல நிலையை காணநேருகின்றது. சீரளிக்கப்பட்ட ஒரு சிறுமி குறித்த செய்தி பாரக்க நேரிடுகின்றது.. இவ்வாறு பல.. சமூகம் சார் சிந்தனை அக்கறை உள்ளவருக்கு நிம்மதி  நிறைவு என்பது சாத்தியமில்லை. முடிந்தவரை போராடுவதே நிறைவாக மாறும். 

அக புற நிலை அழுத்தங்கள்,  அது சார்ந்த மன அழுத்தம் இரத்த அழுத்தம் என வாழ்வின் சிக்கலை சமநிலை நோக்கி நகர்த்தும் ஒரு உத்தியாகவே 300 வருடங்களுக்கு முன்னரும் பின்னருமான வாழ்க்கை குறித்த கற்பனை. 

தேடல் அர்த்தம் என்பது திருப்தியான நிறைவான வாழ்க்கைநோக்கிய போராட்டம்தான் என எண்ணுகின்றேன்.அத்தேடலில் கிடைக்கப்போவது ஒன்றும் இல்லை.. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.