Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது" : ரயில் ஊழியரின் தகாத நடவடிக்கையும், இனத்துவேசமும்

Featured Replies

"நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது" : ரயில் ஊழியரின் தகாத நடவடிக்கையும், இனத்துவேசமும்

இன்று யாழ்.நோக்கி சென்ற ரயிலில், ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்ட சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த ரயிலில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட ரயிலில் பணியாற்றுகின்ற சீட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த அங்கு நின்றவர்கள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்ட போது, தட்டி கேட்டவர்களை தாக்க முயற்சித்ததோடு, தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் என்று தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசியுள்ளார்.

train_incident.jpg

இதன் போது அங்கு சென்ற ஊடகவியாலாளர் ஒருவரையும் குறித்த ஊழியர் தாக்க முயற்சித்தார். இந்த சம்பவம் சாவகச்சேரி ரயில் நிலையத்தை அண்மித்த போது நடந்துள்ளது.

இதன் போது, "நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது", "பொலிசாராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது", "இங்கு நான் தான் பெரியவன்" என்று மிரட்டும் தொனியில் குறித்த ஊழியர் அனைவரையும் மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்த போது குறித்த ரயிலில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் எவரும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை. இதனால் பயணித்த அனைவரும் பயத்தில் உறைந்திருந்துள்ளார்கள்.

குறித்த ரயிலானது  யாழ்.பிரதான ரயில் நிலையத்தை வந்ததடைந்ததும், சம்பவம் தொடர்பில் யாழ்.ரயில் அதிபருக்கு குறித்த பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்துக்கான ஆதாரமாக காணொளியும் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் தான் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றை செய்வதாக யாழ்.ரயில் அதிபர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

http://www.virakesari.lk/article/33217

  • தொடங்கியவர்

யாழ்.ரயிலில் அடாவடிதனம் செய்த இரயில் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் கைது

யாழ்.ரயிலில் அடாவடிதனம் செய்த இரயில் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் கைது

யாழ். ரயிலில் பயணித்த பெண்ணொருவருடன் தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் இலங்கை இரயில் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் நடவடிக்கை தொடர்பாக மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் யாழ். இரயில் நிலைய அதிபரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டமையை அடுத்து, குறித்த ஊழியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.(15

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-ரயிலில்-அடாவடிதனம்/

  • தொடங்கியவர்

தமிழ் பெண்ணுக்காக குரல் கொடுக்குமாறு நாமல் கோரிக்கை

railway.png?resize=620%2C388
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் பெண் ஒருவரை கடுமையான வார்த்தைகளினால் திட்டிய புகையிரத பணியாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு – யாழ்ப்பாண புகையிரதத்தில் பயணம் செய்த பெண் ஒருவரை, புகையிரத பணியாளர் ஒருவர் மிக மோசமான வார்த்தைகளினால் தூற்றும் காட்சிகள் சமூக ஊடக வலையமைப்புக்களில் பரவி வருகின்றது. பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையிலும், தகாத வார்த்தைகளினாலும் குறித்த புகையிரத பணியாளர் திட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

துன்புறுத்தல்கள் துன்புறுத்தல்களாகவே பார்க்க வேண்டும், இனவாதம் இனவாதமாகவே பார்க்க வேண்டுமெனவும் இந்த சம்பவத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கை புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் குறித்த ஊழியர் ஒருவரின் நடவடிக்கை தொடர்பாக மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் யாழ். புகையிரத நிலைய அதிபரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டமையை அடுத்து, குறித்த ஊழியர் காவல்துறையினரால்; கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2018/78200/

  • தொடங்கியவர்

யாழ் பெண்ணிடம் அத்துமீறிய தொடருந்து ஊழியருக்கு பிணை!

Image

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில் குடும்பப் பெண் ஒருவருடன் அநாகரிகமாக அத்துமீறினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரயில்வே உத்தியோகத்தரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுத்து உத்தரவிட்டது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்த தொடருந்தில் பிரிட்டன் வாழ் தமிழ் குடும்ப பெண்ணொருவர் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார். இதன் போது அந்தத் தொடருந்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட ரயில்வே சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் அத்துமீற முயற்சித்தார்.

இதனை அவதானித்த அங்கு நின்றவர்கள், அந்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள்? என கேட்ட போது, அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்தார். மேலும் தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் போன்று தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதன் போது அங்கு சென்ற ஊடகவியாலாளர் ஒருவரையும் அவர் தாக்க முயற்சித்தார். இந்த சம்பவம் சாவகச்சேரி ரயில் நிலையத்தை அண்மித்த போது நடந்து கொண்டிருந்தது.

“நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிஸாராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான்தான் பெரியவன் என்று மிரட்டும் தொனியில் அந்த ஊழியர் அனைவரையும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் தொடருந்து யாழ்.பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும், அந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்.ரயில் நிலைய அதிபருக்கு அந்தப் பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்துக்கான ஆதாரமாக காணொலியும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ரயில்வே ஊழியரைக் கைது செய்த யாழ்.பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவு பொலிஸார், சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று (9) பிற்பகல் முற்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், சந்தேகநபரை பிணையில் விடுவிக்க பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அதனால் அவரை நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://www.ibctamil.com/srilanka/80/100274

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு அப்பால், பிரித்தானியராயின், பிரித்தானியா தூதரகம் போய் ஒரு முறைப்பாடு செய்திருக்கணுமே.?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு  சாட்சி

சிறீலங்காவின்   உண்மை  முகமிது

இது  மாறணும்  முதலில்...

ஆனால் கண்ணுக்கெட்டிய  தூரம் வரை...................?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

இன்னொரு  சாட்சி

சிறீலங்காவின்   உண்மை  முகமிது

இது  மாறணும்  முதலில்...

ஆனால் கண்ணுக்கெட்டிய  தூரம் வரை...................?

நாய் வால்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

இன்னொரு  சாட்சி

சிறீலங்காவின்   உண்மை  முகமிது

இது  மாறணும்  முதலில்...

ஆனால் கண்ணுக்கெட்டிய  தூரம் வரை...................?

ஐயா! இனவாதத்தின்  முகம்  தெரிஞ்சுதானே போராட வெளிக்கிட்டார்கள். அதையெல்லாம் அரைகுறையில் கழுத்தறுத்து விட்டு...... இன்று கொட்டை எழுத்தில் தலையங்கம் போட்டு செய்தி போடுகின்றார்கள்.

"நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது" : ரயில் ஊழியரின் தகாத நடவடிக்கையும், இனத்துவேசமும்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

குளிர்  விட்டுப்போச்சண்ணா...

வேறு  ஒன்றுமில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, விசுகு said:

குளிர்  விட்டுப்போச்சண்ணா...

வேறு  ஒன்றுமில்லை

அங்கிருக்கும் மக்களுக்கு நிலமை தெரியும். வாழ்வதற்காக வாயை திறக்காமல் இருக்கின்றனர்.
ஆனால்..... தமிழன் என்று தலைநிமிர்ந்து நிற்க வைத்தவர்களை பார்த்து வசைபாடியவர்களை இன்று காணவில்லை. எங்கே ஒளிந்திருக்கின்றார்கள்? தேடுகின்றேன். இலங்கையின் இன்றைய அரசியலைப்பற்றி வாய் திறக்கின்றார்களே இல்லை. ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அங்கிருக்கும் மக்களுக்கு நிலமை தெரியும். வாழ்வதற்காக வாயை திறக்காமல் இருக்கின்றனர்.
ஆனால்..... தமிழன் என்று தலைநிமிர்ந்து நிற்க வைத்தவர்களை பார்த்து வசைபாடியவர்களை இன்று காணவில்லை. எங்கே ஒளிந்திருக்கின்றார்கள்? தேடுகின்றேன். இலங்கையின் இன்றைய அரசியலைப்பற்றி வாய் திறக்கின்றார்களே இல்லை. ஏன்?

வசை  பாடியவர்கள்

அழித்தொழிக்க  உதவியவர்கள்  உட்படத்தான்  போராட்டமே

இன்று அவர்களும்   வெட்கி  தலைகுனிந்து

தலை  நிமிர  போராடியவர்களை நினைந்தபடி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, விசுகு said:

வசை  பாடியவர்கள்

அழித்தொழிக்க  உதவியவர்கள்  உட்படத்தான்  போராட்டமே

இன்று அவர்களும்   வெட்கி  தலைகுனிந்து

தலை  நிமிர  போராடியவர்களை நினைந்தபடி...

அன்று முழுநேர தொழிலாக வசை பாடிக்கொண்டு திரிந்தவர்கள்.....

இன்று சினிமா நடிகைகளின் தொடைகளுக்கு லொல்ளு விட்டுக்கொண்டு திரிகின்றார்கள்.

  • தொடங்கியவர்

புகையிரத ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது சோடிப்பு – ரெமீடியஸ்..

 railway-1.jpg?resize=800%2C450
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

‘ புகையிரதத்தில் மூன்றாம் வகுப்பு ஆசனத்துக்கு கட்டணம் செலுத்திவிட்டு இரண்டாம் வகுப்பு ஆசனத்தில் அமர்ந்திருந்ததாலேயே பெண் பயணியிடம் புகையிரத ஊழியர் முரண்பட்டார். அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற விடயம் தவறானாது – சோடிப்பு.அவ்வாறு ஒன்றுமே நடக்கவில்லை’ என புகையிரத ஊழியர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணியும் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான மு.றெமிடியஸ் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த தொடருந்தில் பயணித்த பிரிட்டன் வாழ் குடும்பப் பெண்ணுடன் தகாத முறையில் நடந்துகொண்ட புகையிரத ஊழியர், யாழ்ப்பாணம் காவல்துறையினரால் நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் பின்னர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார்.

பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் புகையிரத ஊழியருக்கு எதிராக முதல் அறிக்கையை காவல்துறையினர் மன்றில் சமர்ப்பித்தனர். இதன்போதே சந்தேகநபரின் சட்டத்தரணி இந்த விடயத்தை மன்றில் தெரிவித்து, அவரைப் பிணையில் விடுவிக்க விண்ணப்பம் செய்தார். அதனை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

http://globaltamilnews.net/2018/78426/

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நவீனன் said:

அனே, மகே அம்மே...

மூன்றாம் வகுப்பு... டிக்கெட்டோட இரண்டாம் வகுப்பில இருந்தால்... கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு கம்முன்னு போவாரோ?

அங்கெல்லாம்.... அதிகாரம் உள்ளவர்கள்.... பயணியை கைதே செய்திருக்கலாம்....

வீடியோ பொய் சொல்லாது.... அதை பார்த்து தான் போலீசார் காது செய்தனர். ஸ்டேஷன் மாஸ்டரும் மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு தான் போலீசாரை அழைத்திருப்பார்... 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

நாதமுனி, பிழை... இங்கிலாந்தில் இருந்து, சென்றவர் மேலுள்ளதே....  ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

railway-1.jpg?resize=800%2C450

 தேட் கிளாஸ் பீப்பிளுக்கு இருக்கிற மாதிரி செக்கன்ட் கிளாஸ் பீப்பிளுக்கும் நெருக்கி நெருக்கி நிண்டு  எட்டி பிடிக்கிறதுக்கும் கட்டித்தொங்க விட்டிருக்கிறாங்கள்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

railway-1.jpg?resize=800%2C450

 தேட் கிளாஸ் பீப்பிளுக்கு இருக்கிற மாதிரி செக்கன்ட் கிளாஸ் பீப்பிளுக்கும் நெருக்கி நெருக்கி நிண்டு  எட்டி பிடிக்கிறதுக்கும் கட்டித்தொங்க விட்டிருக்கிறாங்கள்.:grin:

இங்கிலாந்தில் இருந்து போனவர்,  ஏன்... மூன்றாம் வகுப்பு  ரிக்கற்  எடுத்தவர்?
பிறகு...  ஏன் இரண்டாம் வகுப்பு ரயில்  பெட்டியில்  ஏறினவர்?
சில வேளை... முதலாம் வகுப்பு  பள்ளிக்கூடம்  கூட போகாதவரா இருப்பாரோ..... ?  ?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

இங்கிலாந்தில் இருந்து போனவர்,  ஏன்... மூன்றாம் வகுப்பு  ரிக்கற்  எடுத்தவர்?
பிறகு...  ஏன் இரண்டாம் வகுப்பு ரயில்  பெட்டியில்  ஏறினவர்?
சில வேளை... முதலாம் வகுப்பு  பள்ளிக்கூடம்  கூட போகாதவரா இருப்பாரோ..... ?  ?

அடிக்கடி பயணிப்பவர்களுக்கே தடுமாற்றம் வரும் போது புதிதாக வருபவர்கள் என்ன செய்வார்கள்?

சாதாரணமாக பார்த்தால் இரண்டுக்குமே வித்தியாசம் புரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் ரெயில் விட்டது தமிழன் பிரயாணம்  செல்வதற்கல்ல.
தனது குடிப்பரம்பலை  அகலப்படுத்தவே என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

இங்கிலாந்தில் இருந்து போனவர்,  ஏன்... மூன்றாம் வகுப்பு  ரிக்கற்  எடுத்தவர்?
பிறகு...  ஏன் இரண்டாம் வகுப்பு ரயில்  பெட்டியில்  ஏறினவர்?
சில வேளை... முதலாம் வகுப்பு  பள்ளிக்கூடம்  கூட போகாதவரா இருப்பாரோ..... ?  ?

23 hours ago, குமாரசாமி said:

அங்கிருக்கும் மக்களுக்கு நிலமை தெரியும். வாழ்வதற்காக வாயை திறக்காமல் இருக்கின்றனர்.
ஆனால்..... தமிழன் என்று தலைநிமிர்ந்து நிற்க வைத்தவர்களை பார்த்து வசைபாடியவர்களை இன்று காணவில்லை. எங்கே ஒளிந்திருக்கின்றார்கள்? தேடுகின்றேன். இலங்கையின் இன்றைய அரசியலைப்பற்றி வாய் திறக்கின்றார்களே இல்லை. ஏன்?

அவர்கள் இரெண்டாம் வகுப்பில் இருந்து வசை பாடுகிறார்கள். நீங்கள் முதலாம் வகுப்பில் இருந்தால் எப்படி வசை பாடுவது கேட்கும்? இரெண்டாம் வகுப்பு சோதனை தோற்றுப் போனதா?

17 hours ago, வாத்தியார் said:

சிங்களம் ரெயில் விட்டது தமிழன் பிரயாணம்  செல்வதற்கல்ல.
தனது குடிப்பரம்பலை  அகலப்படுத்தவே என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி

நீங்கள் மூன்றாம் வகுப்பா அல்லது முதலாம் வகுப்பா? இரெண்டாம் வகுப்பில் நடப்பது தெரியாமல் கதைக்கிறீர்களே?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வாத்தியார் said:

சிங்களம் ரெயில் விட்டது தமிழன் பிரயாணம்  செல்வதற்கல்ல.
தனது குடிப்பரம்பலை  அகலப்படுத்தவே என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி

உதுக்கெல்லாம் ரயில் விட்டு காசை செலவளிக்க வேண்டிய தேவை சிங்களத்திற்க் இல்லை.எங்களை சுலபமாக வெளியேற விட்டதே அவனுக்கு கானும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2018 at 6:00 PM, குமாரசாமி said:

அங்கிருக்கும் மக்களுக்கு நிலமை தெரியும். வாழ்வதற்காக வாயை திறக்காமல் இருக்கின்றனர்.
ஆனால்..... தமிழன் என்று தலைநிமிர்ந்து நிற்க வைத்தவர்களை பார்த்து வசைபாடியவர்களை இன்று காணவில்லை. எங்கே ஒளிந்திருக்கின்றார்கள்? தேடுகின்றேன். இலங்கையின் இன்றைய அரசியலைப்பற்றி வாய் திறக்கின்றார்களே இல்லை. ஏன்?

உறங்கு நிலைக்கு சென்று விட்டார்கள் போல, பேச்சு மூச்சை காணவில்லை. கொழும்பில் பட்டாசு சத்தம் கேட்டாலே, துண்டைக்  காணோம், துணியை காணோம் என்று ஓடியவன் எல்லாம் ...... என்னத்தை சொல்ல .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

உதுக்கெல்லாம் ரயில் விட்டு காசை செலவளிக்க வேண்டிய தேவை சிங்களத்திற்க் இல்லை.எங்களை சுலபமாக வெளியேற விட்டதே அவனுக்கு கானும்.

இலங்கையிலிருந்து தமிழர்கள் வெளியேறாவிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2018 at 12:02 AM, குமாரசாமி said:

இலங்கையிலிருந்து தமிழர்கள் வெளியேறாவிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?  :rolleyes:

அங்கு தமிழர்களின் எண்ணிக்கi அதிகமாக இருந்நிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அங்கு தமிழர்களின் எண்ணிக்கi அதிகமாக இருந்நிருக்கும்.

தமிழ் மக்கள் எண்ணிக்கை அதிகமாயிருந்திருந்தால்.....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.