Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு

Featured Replies

சுவிஸில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு

 

 
 

'அக்கினிப் பறவைகள்' என்ற சுவிட்சலாந்தில் செயற்படும் தமிழ் இளைஞர் அமைப்பினர் தமிழீழ அடையாள அட்டையை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

06.05.2018 அன்று சுவிஸ் நாட்டின் பேரண் மாநிலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விபரங்களை 'அக்கினிப் பறவைகள்' அமைப்பினர் வெளியிட்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தார்கள்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இது தொடர்பாக அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்:

01.01.2007 அன்று தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கோடு தமிழீழத்தில் தேசிய அடையாள அட்டை வெளியிடப்பட்டிருந்தது. 2009ம் ஆண்டு தமிழிறைமை பறிக்கப்பட்டதன் விளைவாக தமிழீழ தேசிய அடையாள அட்டையின் பயன்பாடு இல்லாமற் போனது.

இதனை மீளவும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் அக்கினிப் பறவைகளின் இந்த முயற்சி இன்றைய சூழ்நிலையில் தேவையானதா என்ற வினா எழுவது இயல்பானதே.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

2009ம் ஆண்டில் இடம்பெற்ற தமிழினத்திற்கெதிரான வல்லாதிக்க சக்திகளின் கூட்டுச்சதி நடவடிக்கையானது இனவழிப்பு என்பதையும் தாண்டி தமிழீழ நடைமுறை அரசையும் இல்லாமற்செய்துவிட்ட ஒரு தேசிய அழிப்பு நடவடிக்கையாகும். தமிழீழ நடைமுறை அரசின் அழிவோடு தமிழீழக் கோட்பாட்டின் நடைமுறைச் சாத்தியமும் வலுவிழந்துபோயிருப்பதும் வெளிப்படை. தற்போது தமிழீழம் என்பது பெரும்பாலும் வெறும் நினைவுகளில் வாழ்ந்து வருகின்ற ஒன்றாகவே காட்சியளிக்கிறது.

தமிழீழத் தேசியக்கட்டுமானம் என்பது நினைவுகளில் மட்டுமின்றி நடைமுறையிலும் பேணப்படவேண்டும். தமிழீழ இறைமையானது சரணாகதியடையவோ, தாரை வார்க்கப்பாடவோ இல்லை என்பதை நந்திக்கடல்வரை இடம்பெற்ற வீரம் செறிந்த மற்றும் பெரும் ஈகத்துடன்கூடிய போர் எமக்குப் புலப்படுத்தி நிற்கிறது.

தற்போதைக்கு தமிழீழத் தனியரசின் கட்டுமானங்களைத் தமிழீழத்தில் செயற்படுத்த முடியாத நிலை உள்ளபோதும், அதனை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப் பாடு உள்ளவர்களாக இருக்கிறோம்.

அந்த வகையில் தமிழீழத்தின் கட்டுமானங்களைப் புலம்பெயர்ந்த தேசங்களில் அந்நாடுகளின் சட்டங்களுக்கு அமைவாக நிறுவி அவற்றின் மூலம் தமிழீழத்தின் குடிமக்கள் என்ற நடைமுறை உணர்வில் தமிழர்கள் வாழ வழி சமைக்கவேண்டும். அதற்கான முதற்படியே இவ்வடையாள அட்டையின் மீள்வெளியீடாகும்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இவ்வடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு நபரும் பின்வரும் விடயங்களை முழுமையாகவும் மனப்பூர்வமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

- தமிழீழ மக்கள் ஒரு தேசிய இனம். இவர்கள் தமக்கென ஒரு பாரம்பரிய தாயகப் பிரதேசத்தைக் கொண்டவர்கள். தனியே ஒரு மொழி, பாரம்பரியம், கலை, பண்பாடு மற்றும் தனித்துவமான வரலாற்றைக் கொண்டவர்கள்.

- ஈழத்தமிழரின் வரலாற்று இறைமையின் பாலும் மற்றும் வட்டுக்கோடடைத் தீர்மானத்தின் பாலும் தமிழீழ மக்கள் முழு இறைமைக்கு உரித்தானவர்கள்

- மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் தமிழீழ இறைமை நிறுவப்பட்டது.

- தமிழ் மக்கள் மீது பல்வேறு வடிவங்களில் காலங்காலமாக நடத்தப்பட்டு வந்த மற்றும் நடத்தப்பட்டு வருகின்ற திட்டமிட்ட ஒடுக்குமுறைகள், தாக்குதல்கள் அப்பட்டமான இனவழிப்பு நடவடிக்கையே ஆகும்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

மேற்குறிப்பிட்ட விடயங்களை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தமிழீழ அடையாளத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்பவராகிறார்கள். இவ்வாறானதொரு மக்கள் தொகுதி உருவாவதன் மூலமாகத் தமிழீழத்தின் அடிப்படையான அடையாளம் நிறுவப்படுகிறது.

தமிழீழ அடையாள அட்டையின் மீள்வெளியீடு தமிழீழ அடையாளத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் ஒரு மக்கள் குழுவை நிறுவுகிறது. தமிழீழக் கட்டுமானங்களை அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக உருவாக்கி அவற்றின் மூலம் தமிழீழக் கோட்பாட்டை நிலைநிறுத்திப் பேணுவதுடன், அந்தந்த நாடுகளில் வசிக்கும் தமிழீழ மக்களின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள், தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் அக்கினிப் பறவைகள் அமைப்பு தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.

தமிழீழ மரபுவழித்தாயகம் ஆக்கிரமிப்புக்குள் இருந்தாலும் மற்றும் இனவழிப்பின் மூலமாகத் தமிழீழத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் , தமிழீழச் சித்தாந்தம் நிலைபெறுவதற்கும் மற்றும் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்குமான ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். இதுவே தமிழீழ தேசத்தின் இருப்புக்கான இன்றைய இன்றியமையாத தேவையாகும்.

இந்த அடிப்படையில் முன் முயல்வுகளை எடுத்துவரும் அக்கினிப் பறவைகள் அமைப்பின் முயற்சிகளுக்கு அனைத்துத் தமிழீழ மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அக்கினிப் பறவைகள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

http://www.ibctamil.com/ltte/80/100167

உங்களால் நிறுவப்படும் தரவுத்தளத்தின் பாதுகாப்பு என்ன .? எப்போதாவது எதிர்கள் கைகளில் சேகரிப்பட்ட தரவுகள் சென்றடைவதால் ஏற்படும் பாதிப்புகளை உணருவீர்களா.?

இந்த அடையாள அட்டை மூலம் பயன்பாடு என்ன .?

பிறப்பு நாடு குறித்த வரையறை என்ன .?

புலிகளின் தமிழீழ நிர்வாக கட்டமைப்பில் செய்வதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்கும்போது அடையாள அட்டையின் முக்கியதுவம் என்ன.?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. புலம்பெயர் இளைய சமூகம் இத்தகைய விடயங்களை ஒற்றுமையோடு முன்னெடுக்க வேண்டும். இலக்கு ஒன்று தான்.. தமிழீழம்.

ஆனால்... தரவுப் பாதுகாப்பு என்பது சர்வதேச தரத்துக்கு நிகராகப் பாதுக்காக்கபட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு  முதலில்  ஒரு அடையாள அடடை கொடுங்கோ
 

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட காலங்களில் தமிழீழத்திற்கு ஒரு பங்களிப்பென்றால், பொருளாதார ரீதியாக என்றாலும் சரி, வெகுஜன போராட்டரீதியில் என்றாலும் சரி  புலம் பெயர்ந்து வாழும் எந்த தமிழீழத்தவர் வாழும் தேசங்களினாலும் போட்டி போடமுடியாதபடி கெத்து காட்டிய சுவிஸ் புலம்பெயர் தேசத்தில்...

இந்த அடையாள அட்டை வெளியீட்டுக்கு வந்தவர்கள் எண்ணிக்கையே சொல்லுது ..

இது  எவ்வளவுமிக பெரிய நகைச்சுவை  என்பதை!

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2018 at 1:48 PM, பகலவன் said:

உங்களால் நிறுவப்படும் தரவுத்தளத்தின் பாதுகாப்பு என்ன .? எப்போதாவது எதிர்கள் கைகளில் சேகரிப்பட்ட தரவுகள் சென்றடைவதால் ஏற்படும் பாதிப்புகளை உணருவீர்களா.?

இந்த அடையாள அட்டை மூலம் பயன்பாடு என்ன .?

பிறப்பு நாடு குறித்த வரையறை என்ன .?

புலிகளின் தமிழீழ நிர்வாக கட்டமைப்பில் செய்வதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்கும்போது அடையாள அட்டையின் முக்கியதுவம் என்ன.?

வேறு என்ன...

வெறும் விளம்பரம்...இல்லையென்றால்,புலம்பெயர்ந்தவர்கள் கட்டமைப்புக்கு  இப்போது இருக்கும் நெருக்கடியை இன்னும் சிக்கலாக்குவது..

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய செய்தியாக தமிழ்நாட்டில் இருபத்துநாஙு பொறியியல் கல்லூரிகள் இழுத்துமூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு அறிவித்தல் போய்ச்சேர்ந்துள்ளது. அதில் ஒரு கல்லூரியை புலம்பெயர்தமிழர்கள் விலைக்கு வாங்கி மேலைத்தேசங்களில் மிகவும் சிறந்த பல்கலக்கழகங்களுடன் இணைந்து அதனுடன் மேலதிக வசதிகளையும் ஏற்படுத்தி தாயகத்தில் வாழும் புலம்பெயர்ந்துவாழும் எமது இளையோருக்குத் தகுந்த பொறியியற் கல்வியைக் கொடுத்தால் இதைவிடச்சிறப்பாக இருக்கும்.

தவிர தாயகத்தில் இப்போது கவனிப்பாரற்றுக்காணப்படும் விவசாய நிலங்களை சரியான விதத்தில் திருத்தி பாரம்பரிய காய்கறி மற்றும் நெல் தவிர தானியங்களை இயற்கை முறையில் உற்பத்திசெய்தும் கால்நடைகளைப் பெருமளவில் வளர்த்து சுயசார்பிலான பொருளாதாரத்தை எமது மண்ணில் கட்டியெழுப்புவதன்மூலம் எமது வழத்தைப்பாதுகாப்பதுடனில்லாது ஏனையோருக்கும் முன் உதாரணமாகவும் விவசாயம் இலாபமூட்டும் தொழிலே என்பதை நாம் நிறுவலாம்.

தமிழீழக்கனவை நாம் வென்றெடுப்பதற்கான ஆரம்ப முயற்சியாக இவையே இருக்கும் அதைவிடுத்து அடையாள அட்டை கொடுக்கிறம் எனச்சொல்லிப்போட்டு அங்கினைக்க வருடத்துக்கு ஒரு தடவையாகுதல் ஊருக்கும்போய் வருகிறவயளையும் போகாமல் பண்ண பிளான் போடுகினம். 

ஊருடன் உறவாடும்போதே எமது தேசத்தை நாம் மீதவேண்டும் எனும் எண்ணம் எமது மனதில் நிலையாக நிற்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கென்று... நாடு இல்லை. எம்மை... ஆதரிக்கும் நாடுகளும் இல்லை.
ஊரில்.... உள்ள தமிழ்  கட்சிகளும், 30 வருடமாக உயிரை கொடுத்து நடந்த போராட்டங்களை மறந்து, 
போராட்டம்  ஆரம்பித்த  போது  இருந்த அரசியல் தளத்துக்கே வந்து, மீண்டும் எம்மை.. சினக்க வைக்கும் நிலையில்....
அடையாள அட்டை விடயம்,  அர்த்தமற்றது. சுவிஸ் இளையோர்களே... உங்களது  இந்த முடிவை, மீள்  பரிசீலனை செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் தமக்கான நிலமான இஸ்ரேலை பல நூற்றாண்டுகள் காத்திருந்துதான் அமைத்தார்கள். பற்பல நாடுகளில் புலம்பெயர்ந்திருந்தாலும் அவர்கள் சில விடயங்களில் உறுதியாக இருந்தார்கள். ஒன்று தமக்கான நிலத்தை எத்தனை தலைமுறை தாண்டியும் அமைத்தே தீர்வது ; இரண்டு தங்கள் மத அடையாளங்களான சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் எந்த சமரசமும் செய்யாமல் வாழ்வது ; மூன்று  அனைத்துத் துறைகளிலும் மேம்பட்டு நிற்பது.

ஒரு மத அடையாளத்தைக் கொண்டவர்களுக்கே இவ்வளவு உறுதியென்றால், அதை விட மேன்மையான மொழியினப் போராளிகளின் சிறப்பை என்னவென்று சொல்வது ! ஈழம் பிரிவினைவாதமல்ல. சிங்களப் பேரினவாதம் அடிமட்டம் வரை வேரூன்றியதை நாம் உணர்ந்ததன் வெளிப்பாடு.

 அடையாள அட்டையும் ஒற்றுமைக்கான ஒரு  குறியீடே . ஒருமுகப் படுத்துதலுக்கான எந்தவொரு முயற்சியிலும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. கூட்டம் சேரவில்லை என்பதற்காக சோர்வும் தேவையில்லை. இதையெல்லாம் எதிர்பார்க்காமலா ஒரு போராளி களத்தில் இறங்குகிறான் ?

எனவே போராட்டத்தின் அனைத்து வடிவங்களுக்கும் தோள் கொடுப்போம் தோழா ! உனக்குத் துரோகம் இழைத்த எல்லையிலிருந்தே உனக்கு நான் பாடும் பரணி - 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப'. உன் போரில் தோள் கொடுக்கும் காலம் அமையுமானால், அதைவிட இப்பூவுலகில் வேறு என்ன பேறு ?

  மேற்கூறியவை வெறும் உணர்வு வடிவாய்த் தோன்றலாம். போர்க்களத்தில் உணர்வே எல்லாம் இல்லை. ஆனால் உணர்வு இல்லாமலும் இல்லை.

45 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

யூதர்கள் தமக்கான நிலமான இஸ்ரேலை பல நூற்றாண்டுகள் காத்திருந்துதான் அமைத்தார்கள். பற்பல நாடுகளில் புலம்பெயர்ந்திருந்தாலும் அவர்கள் சில விடயங்களில் உறுதியாக இருந்தார்கள். ஒன்று தமக்கான நிலத்தை எத்தனை தலைமுறை தாண்டியும் அமைத்தே தீர்வது ; இரண்டு தங்கள் மத அடையாளங்களான சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் எந்த சமரசமும் செய்யாமல் வாழ்வது ; மூன்று  அனைத்துத் துறைகளிலும் மேம்பட்டு நிற்பது.

ஒரு மத அடையாளத்தைக் கொண்டவர்களுக்கே இவ்வளவு உறுதியென்றால், அதை விட மேன்மையான மொழியினப் போராளிகளின் சிறப்பை என்னவென்று சொல்வது ! ஈழம் பிரிவினைவாதமல்ல. சிங்களப் பேரினவாதம் அடிமட்டம் வரை வேரூன்றியதை நாம் உணர்ந்ததன் வெளிப்பாடு.

 அடையாள அட்டையும் ஒற்றுமைக்கான ஒரு  குறியீடே . ஒருமுகப் படுத்துதலுக்கான எந்தவொரு முயற்சியிலும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. கூட்டம் சேரவில்லை என்பதற்காக சோர்வும் தேவையில்லை. இதையெல்லாம் எதிர்பார்க்காமலா ஒரு போராளி களத்தில் இறங்குகிறான் ?

எனவே போராட்டத்தின் அனைத்து வடிவங்களுக்கும் தோள் கொடுப்போம் தோழா ! உனக்குத் துரோகம் இழைத்த எல்லையிலிருந்தே உனக்கு நான் பாடும் பரணி - 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப'. உன் போரில் தோள் கொடுக்கும் காலம் அமையுமானால், அதைவிட இப்பூவுலகில் வேறு என்ன பேறு ?

  மேற்கூறியவை வெறும் உணர்வு வடிவாய்த் தோன்றலாம். போர்க்களத்தில் உணர்வே எல்லாம் இல்லை. ஆனால் உணர்வு இல்லாமலும் இல்லை.

நல்ல விடயம்

ஆனால் இதை வைத்து என்ன செய்யலாம் - நாக்குத்தான் வழிக்கலாம்

இந்த அடையாள அட்டையை பெற்றவனே வெளியில அதை சொல்ல ம,மாட்டான்

நீங்க வேற காமடி பண்ணிக்கிட்டு 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுப சோமசுந்தரன் அவர்களது கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்
இளையோர்களே நீங்கள் உங்களுக்களுக்கியலுமான வழிவகையில் தமிழீழம் நோக்கிய செயற்பாட்டை எப்படிக்கொண்டுபோக முடியுமோ அப்படியே செய்யுங்கள் ஈஈசெய்தி தொடர்பாக நான் ஏற்கனவே கூறிய கருத்தையொட்டி, நான் இப்படி எழுதியது சரியானதா நாம் ஏமாற்றத்தின் காரணமாகவும் தோல்விகளின் காரணமாகவும் எதையாவதை எழுதப்போய் உங்களது மனத்தைக்  கோணப்பண்ணலாம் தயவுசெய்து அப்படியான சந்தர்ப்பங்களில் எங்களை மன்னித்துவிடுங்கள். 

எம்மை அறியாமலேயே நாம் விரக்தியின் விளிம்புக்குச் சென்றுவிட்டு ஏனையோரைக் குறைகூறுகிறோம் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் அடி ஆழம் வரை சென்று பார்த்தவர்கள் ஈழத்தமிழர்கள் 
எதை யார் தொடங்கினாலும்  100 கேள்வி வரும் அதில் தவறும் இல்லை.
கடவுள் இனி பூமிக்கு வந்தாலும் யாரும் அவரை நம்ப போவதில்லை 
கடவுளின் பெயரால் அந்த அளவில் மோசடி இருக்கிறது.

"அடையாள" அட்டை  என்பது என்னை தமிழ் ஈழத்தவனாக அடையாளம் 
காண  இனொரு படிவம்தான்.
அது எல்லா ஈழ தமிழரிடமும் இருக்கும்போது ... சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியாது 
அதை கையில் கொண்டு திரியும் ஒரு மட்டை போல் இல்லது 
டிஜிட்டல் வடிவிலேயே வைத்திருக்க முடியும்.

கேள்வி இந்த தரவுகளை எப்படி பாதுகாப்பது என்பதே?
தவிர தொடங்கியவர்கள் பற்றிய நம்பிக்கை சார்பு நிலை.

ஆனால் இனி என்ன செய்ய போனாலும் புல்லுருவிகள் ..... எப்படி 
ஈழத்துக்குள் வந்து ஊடு உருவிச்சுதுகளோ தெரியாது. எதையும் ஆக்க பூர்வமாக 
செய்யவிட போவதில்லை.

புலி ... எலி ... என்று பூச்சாண்டி காட்டி ....
காட்டி கொடுப்பில் சுகம் கண்டு வாழ்ந்து ருசித்த்வர்கள் 
சும்மா படுக்க போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2018 at 2:23 PM, ஜீவன் சிவா said:

நல்ல விடயம்

ஆனால் இதை வைத்து என்ன செய்யலாம் - நாக்குத்தான் வழிக்கலாம்

இந்த அடையாள அட்டையை பெற்றவனே வெளியில அதை சொல்ல ம,மாட்டான்

நீங்க வேற காமடி பண்ணிக்கிட்டு 

 

 

தானும் படான் தள்ளியும் படான் என்று சும்மாவா சொன்னார்கள்.

f6401c0e74d3b6c8617e64c51bec074e.jpg

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.