Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் “காக்கா அண்ணன்” மௌனவிரதம்…

Featured Replies

முள்ளிவாய்க்காலில் “காக்கா அண்ணன்” மௌனவிரதம்…

Kakka1.jpg?resize=800%2C533

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் நேற்றைய(18.05.18) தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார். “தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது” என்று எழுதிய குறிப்பு ஒன்றையும்  கையில் ஏந்தியவாறு மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காக்கா அண்ணன் விடுதலைப் புலிகளின்  மூத்த பேராளி என்பதோடு, ஒரு மாவீரரின் தந்தை என்பதோடு, ஒரு மகனை முள்ளிவாய்க்காலில் இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kakka3.jpg?resize=800%2C533

Kakka2.jpg?resize=800%2C604

http://globaltamilnews.net/2018/79889/

  • தொடங்கியவர்

யார் இந்த காக்கா... ஏன் அவர் அழவேண்டும் ..? சிறைக் கைதி நண்பனின் பதிவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த பல களம் கண்ட மூத்த போராளி காக்கா அண்ணை அவர்களை பல்கலைக்கழக மாணவர்கள் புறந்தள்ளி ஒதுக்கி விட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் பலரது தாங்க முடியாத வேதனை உணர்வுகள் வெளிப்பட்ட வண்ணமுள்ளன.

அந்த வகையில் மூத்த போராளி காக்கா அண்ணையுடன் சிறையில் கூட இருந்த சு.பிரபா அவர்களது பதிவு பலரையும் பாதித்து கண்கலங்க வைக்கின்றது.

நான் காக்கா அண்ணையுடன் பூசா, வெலிக்கடையென 2 ஆண்டுகள் சிறைச்சாலையில் இருந்திருக்கிறேன்.

பசீர் காக்கா புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் தேசியத்தலைவர் பிரபாகரனின் நெருங்கிய சகா ஆரம்பகாலங்களில் இருவரும் ஒரே சைக்கிளில் பயணித்து புலிகள் அமைப்பை கட்டமைக்க பாடுபட்டவர்கள்.

ஒரே தட்டில் உணவுண்டவர்கள். காக்கா அண்ண போராளியாக இருந்த காலத்தில் பல்வேறு சண்டைகளில் பங்குபற்றிய களமுனை போராளி. அத்துடன் ஒரு மாவீரரின் தந்தை, ஒரு பிள்ளையை முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்தவர்.

இதைவிடவும் அவரைப்பற்றி விரிவாய் எழுத வியத்தகு சம்பவங்கள் இருக்கின்றன. அவரின் பாதுகாப்பு கருதி தவிர்க்கிறேன். அவற்றையும் எழுதினால் அவர் காலத்தால் மறக்கப்பட்டுவிட முடியா பொக்கிசம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவரை அறிந்தவர்கள், அதை அறிவார்கள்.

இதற்கு அப்பால் அன்று தொட்டு இன்றுவரை போராட்டத்தையும் மாவீரர்களையும் உயிராய் நினைப்பவர். சிறையில் இருந்த காலங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மற்றும் மாவீரர் நாளில் மெளன விரதம் இருப்பதை ஒரு கடனாக கடமையாக நினைத்து கடைபிடிப்பவர். அதை இன்றும் தொடர்பவர்.

விசாரணையில் கூட எதையும் ஒழித்தோ மறைத்தோ அவர் பேசியிருக்கவில்லை. நான் அவரிடம் சொல்வேன் காக்கா அண்ண நீங்கள் பழைய கதைகளையெல்லாம் சொல்லாமல் நான் ஈழநாதம் பேப்பரின் சாதாரண ரிப்போட்டர் என்று சொல்லிப்போட்டு வெளிய போயிருக்கலாம். ஆனால் ஒன்றுவிடாமல் எல்லாம் சொல்லிப்போட்டு இப்ப உள்ளுக்க இருக்கிறீங்க என்பேன்.

அதற்கு அவர் போடா இந்த சிங்களவனால் எனக்கு எந்த தண்டனையும் முழுமையா தரமுடியாது. ஆயுள் தண்டனை தந்தாலும் ஆகக்குறைஞ்சது 15 வருசம் இருக்கோனும். நான் 15 வருசம் இருப்பன் என்றதில எனக்கு நம்பிக்கை இல்ல, ஆகக்கூடினது 10 வருசம் அவ்வளவுதான் எனக்கான தண்டனை அது ஒரு பெரிய தண்டனையா என்று சிரித்துகொண்டே சொல்வார்.

ஆக அவர் உள்ளே இருக்கும்போது கூட உறுதியோடுதான் இருந்தார் தான் விடுதலை ஆகமாட்டேன் என்ற கொள்கையோடுதான் இருந்தார். தினமும் ஏதாவது குறிப்புகள் எழுதி சேர்த்து வைத்து மாதம் ஒரு முறை பார்க்கவரும் மகளிடம் கொடுத்து ஆவணமாக்கி வைக்கச் சொல்வார்.

இன்று முள்ளிவாய்க்கால் நிகழ்வு செய்துவிட்டோம் என்று சட்டைக்கொலரை தூக்கிவிடும் தம்பிகளுக்கு ஒரு சின்ன விடயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நாம் 2009 ஆண்டுக்கு பின் பூசா, வெலிக்கடை, அனுராதபுரம், மகசின் என சிறைகளுக்குள் பல வருடங்கள் அடைபட்டுக்கிடந்தோம்.

அந்த கொடிய சிறைச்சாலைக்குள் கூட நாம் முள்ளிவாய்க்கால் நினைவுதினம், கரும்புலிகள் நாள், தியாகி திலீபன் நினைவுநாள், மாவீரர் நாள் என அனைத்து எழுச்சி நாட்களையும் நினைவுநாட்களையும் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியிலும் தடைகளுக்கு மத்தியிலும் கடைப்பிடித்தே வந்தோம்.

தியாகி திலீபன் நினைவுதினத்தில் உணவு தவிர்த்து உண்ணா நோன்பிருந்திருக்கிறோம். சிறைச்சாலைக்குள் உண்ணாநோன்பென்பது இலகுவான விடயமல்ல.

ஏனெனில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதென்றும் என்ன என்ன உணவு வழங்கப்பட்டதென்றும் உறுதிப்படுத்தி சிறைக்காவலர்கள் கையொப்பம் இட்டு பிரதான ஜெயிலரிடம் தினமும் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

நாம் உணவை எடுக்காதுவிட்டால் அது சீப் ஜெயிலர் வரைக்கும் போகும் அப்படிப்போய் அவர்கள் வந்து எம்மை வற்புறுத்தி உணவை பெற்றுக்கொள்ள சொல்லும் போதுகூட நாம் மறுத்துப்பேசி அதனால் பல அசெளகரியங்களையும் சந்தித்திருக்கிறோம்.

ஜெயில் மாற்றப்பட்டிருக்கிறோம், வெளியே திறந்துவிடப்படாமல் அறைகளின் உள்ளே அடைக்கப்பட்டிருந்திருக்கிறோம். மாதம் ஒருமுறை பார்க்க வரும் உறவினர்களை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பியிருக்கின்றனர்.

இவையெல்லாம் நாம் இந்த நிகழ்வுகளை கடைப்பிடித்ததால் அனுபவித்த துயர்கள் இதற்காக நாம் அவற்றில் இருந்து ஒதுங்கிவிடவோ அவற்றை கைவிட்டுவிடவோ இல்லை. இன்று சிறையில் இருப்பவர்கள் கூட இதை கடைப்பிடித்தே வருகின்றனர்.

நாம் இன்று முகநூலில் வந்துநின்று வீரம் பேசுபவர்கள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இம்முறை முள்ளிவாய்க்கால் நிகழ்வை நான் செய்வதா, நீ செய்வதா என்ற சண்டைகள் ஆரம்பித்த போது அதை சமரசமாக தீர்க்க அழுது தீர்க்கும் இடத்தை அரசியல் மேடையாக்காதீர்கள் என்று கண்ணீர் மல்க எல்லோரிடமும் கோரினார் காக்கா அண்ணா.

அத்துடன் நிற்காமல் இந்த வயதிலும் முள்ளிவாய்க்கால் மே - 18 நிகழ்வுக்காக முதல் நாளே அங்கு போய் நின்று எல்லா வேலைகளையும் ஏற்பாடுகளையும் உடனிருந்து செய்துவிட்டு 18 ஆம் திகதி வழமை போன்று மெளன விரதம் இருந்தார்.

அன்று தொட்டு இன்று வரை தேசியத்தில் பற்றுறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்ட அந்த மூத்த மனிதனை ஒரு ஓரமாய் புறந்தள்ளிவிட்டு நேற்றைக்கு முதல்நாள் வடக்கு மாகாணதிற்கு வந்தவரும் எல்லா மாகாணசபை உறுப்பினரும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று சத்தியப்பிரமாணம் செய்ய தனக்கு அதில் உடன்பாடில்லையென்று கூறி தன் சிங்கள சம்பந்தி வாசுதேவ நாணயக்கார சகிதம் மகிந்தவின் காலடி தேடிச்சென்று மகிந்தவின் முன் நின்று சத்தியப்பிரமாணம் செய்த முதல்வர் விக்கினேஸ்வரனை கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் நினைவஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தது தமிழர் வரலாற்றில் ஒரு கறுப்பு தினம் என்றே சொல்ல வேண்டும்.

இறந்துபோன அந்த மக்களின் ஆத்மாக்கள் கூட இச்செயலை மன்னிக்காது. அரசியலுக்கு அப்பால்ப்பட்டு நிகழ்வை ஒழுங்கமைக்கிறோம் என்று கூறிய பல்கலைக்கழக வீரர்கள் அரசியலுக்கு அப்பால்ப்பட்ட மூத்தவர் காக்கா அண்ணாவைக் கொண்டு அந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்திருக்க வேண்டியதுதானே அறம்.

அவருக்கு என்ன தகுதி இருக்கவில்லை அந்த நிகழ்வை ஆரம்பித்து வைக்க? முதல்வருக்கு என்ன தகுதி இருந்தது ஆரம்பித்து வைக்க?

அவர் தன் பிள்ளையை முள்ளிவாய்க்கால் மண்ணில் இழந்தாரா? இல்லை இந்த தேசம் மீட்க போராடினாரா? இல்லை பலவருடங்கள் சிறையில் இருந்தாரா? என்ன தகுதி இருக்கிறது?

பல்கலைக்கழக மாணவர்கள் என்ற பெயரில் இனியும் இவ்வாறான கேலிக் கூத்துக்கள் ஆடுவதையும் அரங்கேற்றப்படுவதையும் எம் சமூகம் அனுமதிக்கக்கூடாது. எம் இனத்திற்காய் சிலுவை சுமந்தவர்களை புறந்தள்ளிவிட்டு மீட்சிகளை தேட முயற்சிக்க கூடாது.

இந்த நாட்டுக்காக போராடிய ஒவ்வொறுவனும் மதிக்கப்பட வேண்டியவனே இன்று நீங்கள் படிக்கவும் பண் எடுக்கவும் திரியும் வயதில் அவர்கள் பசி தூக்கம் மறந்து களத்தில் நின்றவர்கள் அவர்கள் ஒன்றும் அநாதைகள் அல்ல இந்த தேசத்தையும் இனத்தின் மாண்பையும் கட்டமைத்தவர்கள் இவர்களின் ஈகங்களால்தான் எங்கள் அடையாளம் இன்றுவரை நின்று நிலைக்கிறது.

மூத்தபோராளிகள் வெளியில் நிற்கவைத்துவிட்டு நேற்றுப்பிறந்தவர்கள் நாட்டாமை செய்ய வெளிக்கிடுவது காலப்பிழையென்றே கருதவேண்டியிருக்கிறது.

ஒரு போராளி கண்ணீர் விடுவது சாதாரண நிகழ்வல்ல அதுவோர் பெருந்துயர் அத்துயரில் அவர்களை ஆழ்த்தாதீர்கள் காலம் உங்களை மன்னிக்காது.

தம் எதிர்கால அரசியலுக்காக இவற்றையெல்லாம் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்த அரசியல்வாதிகளை கையாலாகாதவர்கள் என்றே நான் சொல்வேன் என காக்கா அண்ணனுடன் சிறையில் இருந்த சிறைக் கைதியான சு.பிரபா பதிவிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/community/01/183121?ref=home-latest

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில்  தன்னால் முடிந்த இதய பூர்வமான பங்களிப்பை தாயக போராட்டத்துக்காக அந்தகாலத்தில் இருந்தே...

சத்தமில்லாமல்   வழங்கிய பஷீர் காக்கா அண்ணர் ...பற்றி...

எதுவுமே பண்ணியிருக்காத இந்த இணைய தளங்கள் சத்தமாக அவர்பற்றி பேசி   விளம்பரம் தேடுது என்று சொல்லுங்கள்...

சாமானிய எந்த மனிதனுக்கும் எம் நாகரிகத்தை எண்ணி எம்மீதே  காறி துப்ப தோன்றும்...!

  • கருத்துக்கள உறவுகள்

தேவையில்லாமல் தாயகத்தில் உள்ள நியாயமான முன்னாள் போராளிகள் முன்னுக்குப் போய் நின்று தம்மை தாமே இன்னும் இன்னும் துன்பத்தில் ஆழ்ந்திக் கொள்ளும் வகையில்.. எம் ஊடகங்கள் சில காட்டிக்கொடுப்புத் தனமாக எழுதுவதை தவிர்த்து.. அடக்கி வாசிப்பது நலம்.

இன்றைய சூழ்நிலையில்.. வடக்குமாகாண அரசும் முதலமைச்சரும்.. சிலவற்றை செயற்படுத்துவது தான்.. சர்வதேசத்தின் கவனத்தையும்.. சிங்கள இனவெறியர்களின் கவனத்தையும் ஈர்க்கும். 

வெறும் அஞ்சலி மட்டும் செய்வதால் மட்டும் எம் மக்களை கொன்று குவிக்க உதவிய சர்வதேசம்... எம் மக்களுக்கான நீதியை பெற்றுத் தராது. 

சர்வதேசம் மனச்சாட்சியை தட்டி எழுப்பும் வகையில் எமது செயற்பாடுகள் அமைவது.. மிக மிக அவசியமான இன்றைய காலத் தேவையும் ஆகும். 

விக்னேஸ்வரன் 5 வருடங்களுக்கு முன்னாள் செய்ததை இன்று பிடிச்சு வைச்சுக் கொண்டு கதைப்பதிலும்..மக்கள் மீதான புரிந்துணர்வை உள்வாங்கிக் கொண்டு அவரிடம் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு எழுதுவது மிகவும் அவசியம். இன்றைய காலத் தேவையும் ஆகும். ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை காலமும் அறியத்தராத ஒரு மூத்த போராளி காக்கா அண்ணன் பற்றிய செய்தியை தமிழ்வின் இணையம் அறியத் தந்திருப்பது பாராட்டுக்குரிய விடயம். அதேநேரம், இன்றுவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்நின்று நடாத்தியவர்கள் எவரையுமே விமர்ச்சிக்காத இந்த இணையம், முதல்வர் விக்னேசுவரன் அவர்கள் நடாத்தியதும் அவரை விமர்ச்சிக்க... அதுவும் மிக இழிவாக விமர்ச்சிக்க வேண்டிய காரணம் என்ன...?? மூத்த போராளி காக்கா அண்ணனை ஒரு பகடைக்காயாக பாவிக்க முயலும் அரசியல் விபச்சாரிகளைக் கொண்ட பின்னணி ஒன்று சு.பிரபா என்பவரையும் வைத்து இந்த இணையத்தையும் பாவித்திருப்பதாக, அல்லது தமிழ்வின் விலைபோய்விட்டது, எனவும் எண்ணத் தோன்றுகிறது.  
 
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Paanch said:

எல்லாம் சின்னக்கவுண்டரின் திருவிளையாடல்.... தன்னையும் தனது கட்சியையும் காட்சிக்கு வெளியே அனுப்பிய காண்டு....

17 hours ago, நவீனன் said:

யார் இந்த காக்கா... ஏன் அவர் அழவேண்டும் ..? சிறைக் கைதி நண்பனின் பதிவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த பல களம் கண்ட மூத்த போராளி காக்கா அண்ணை அவர்களை பல்கலைக்கழக மாணவர்கள் புறந்தள்ளி ஒதுக்கி விட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் பலரது தாங்க முடியாத வேதனை உணர்வுகள் வெளிப்பட்ட வண்ணமுள்ளன.

அந்த வகையில் மூத்த போராளி காக்கா அண்ணையுடன் சிறையில் கூட இருந்த சு.பிரபா அவர்களது பதிவு பலரையும் பாதித்து கண்கலங்க வைக்கின்றது.

நான் காக்கா அண்ணையுடன் பூசா, வெலிக்கடையென 2 ஆண்டுகள் சிறைச்சாலையில் இருந்திருக்கிறேன்.

பசீர் காக்கா புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் தேசியத்தலைவர் பிரபாகரனின் நெருங்கிய சகா ஆரம்பகாலங்களில் இருவரும் ஒரே சைக்கிளில் பயணித்து புலிகள் அமைப்பை கட்டமைக்க பாடுபட்டவர்கள்.

ஒரே தட்டில் உணவுண்டவர்கள். காக்கா அண்ண போராளியாக இருந்த காலத்தில் பல்வேறு சண்டைகளில் பங்குபற்றிய களமுனை போராளி. அத்துடன் ஒரு மாவீரரின் தந்தை, ஒரு பிள்ளையை முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்தவர்.

இதைவிடவும் அவரைப்பற்றி விரிவாய் எழுத வியத்தகு சம்பவங்கள் இருக்கின்றன. அவரின் பாதுகாப்பு கருதி தவிர்க்கிறேன். அவற்றையும் எழுதினால் அவர் காலத்தால் மறக்கப்பட்டுவிட முடியா பொக்கிசம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவரை அறிந்தவர்கள், அதை அறிவார்கள்.

இதற்கு அப்பால் அன்று தொட்டு இன்றுவரை போராட்டத்தையும் மாவீரர்களையும் உயிராய் நினைப்பவர். சிறையில் இருந்த காலங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மற்றும் மாவீரர் நாளில் மெளன விரதம் இருப்பதை ஒரு கடனாக கடமையாக நினைத்து கடைபிடிப்பவர். அதை இன்றும் தொடர்பவர்.

விசாரணையில் கூட எதையும் ஒழித்தோ மறைத்தோ அவர் பேசியிருக்கவில்லை. நான் அவரிடம் சொல்வேன் காக்கா அண்ண நீங்கள் பழைய கதைகளையெல்லாம் சொல்லாமல் நான் ஈழநாதம் பேப்பரின் சாதாரண ரிப்போட்டர் என்று சொல்லிப்போட்டு வெளிய போயிருக்கலாம். ஆனால் ஒன்றுவிடாமல் எல்லாம் சொல்லிப்போட்டு இப்ப உள்ளுக்க இருக்கிறீங்க என்பேன்.

அதற்கு அவர் போடா இந்த சிங்களவனால் எனக்கு எந்த தண்டனையும் முழுமையா தரமுடியாது. ஆயுள் தண்டனை தந்தாலும் ஆகக்குறைஞ்சது 15 வருசம் இருக்கோனும். நான் 15 வருசம் இருப்பன் என்றதில எனக்கு நம்பிக்கை இல்ல, ஆகக்கூடினது 10 வருசம் அவ்வளவுதான் எனக்கான தண்டனை அது ஒரு பெரிய தண்டனையா என்று சிரித்துகொண்டே சொல்வார்.

ஆக அவர் உள்ளே இருக்கும்போது கூட உறுதியோடுதான் இருந்தார் தான் விடுதலை ஆகமாட்டேன் என்ற கொள்கையோடுதான் இருந்தார். தினமும் ஏதாவது குறிப்புகள் எழுதி சேர்த்து வைத்து மாதம் ஒரு முறை பார்க்கவரும் மகளிடம் கொடுத்து ஆவணமாக்கி வைக்கச் சொல்வார்.

இன்று முள்ளிவாய்க்கால் நிகழ்வு செய்துவிட்டோம் என்று சட்டைக்கொலரை தூக்கிவிடும் தம்பிகளுக்கு ஒரு சின்ன விடயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நாம் 2009 ஆண்டுக்கு பின் பூசா, வெலிக்கடை, அனுராதபுரம், மகசின் என சிறைகளுக்குள் பல வருடங்கள் அடைபட்டுக்கிடந்தோம்.

அந்த கொடிய சிறைச்சாலைக்குள் கூட நாம் முள்ளிவாய்க்கால் நினைவுதினம், கரும்புலிகள் நாள், தியாகி திலீபன் நினைவுநாள், மாவீரர் நாள் என அனைத்து எழுச்சி நாட்களையும் நினைவுநாட்களையும் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியிலும் தடைகளுக்கு மத்தியிலும் கடைப்பிடித்தே வந்தோம்.

தியாகி திலீபன் நினைவுதினத்தில் உணவு தவிர்த்து உண்ணா நோன்பிருந்திருக்கிறோம். சிறைச்சாலைக்குள் உண்ணாநோன்பென்பது இலகுவான விடயமல்ல.

ஏனெனில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதென்றும் என்ன என்ன உணவு வழங்கப்பட்டதென்றும் உறுதிப்படுத்தி சிறைக்காவலர்கள் கையொப்பம் இட்டு பிரதான ஜெயிலரிடம் தினமும் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

நாம் உணவை எடுக்காதுவிட்டால் அது சீப் ஜெயிலர் வரைக்கும் போகும் அப்படிப்போய் அவர்கள் வந்து எம்மை வற்புறுத்தி உணவை பெற்றுக்கொள்ள சொல்லும் போதுகூட நாம் மறுத்துப்பேசி அதனால் பல அசெளகரியங்களையும் சந்தித்திருக்கிறோம்.

ஜெயில் மாற்றப்பட்டிருக்கிறோம், வெளியே திறந்துவிடப்படாமல் அறைகளின் உள்ளே அடைக்கப்பட்டிருந்திருக்கிறோம். மாதம் ஒருமுறை பார்க்க வரும் உறவினர்களை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பியிருக்கின்றனர்.

இவையெல்லாம் நாம் இந்த நிகழ்வுகளை கடைப்பிடித்ததால் அனுபவித்த துயர்கள் இதற்காக நாம் அவற்றில் இருந்து ஒதுங்கிவிடவோ அவற்றை கைவிட்டுவிடவோ இல்லை. இன்று சிறையில் இருப்பவர்கள் கூட இதை கடைப்பிடித்தே வருகின்றனர்.

நாம் இன்று முகநூலில் வந்துநின்று வீரம் பேசுபவர்கள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இம்முறை முள்ளிவாய்க்கால் நிகழ்வை நான் செய்வதா, நீ செய்வதா என்ற சண்டைகள் ஆரம்பித்த போது அதை சமரசமாக தீர்க்க அழுது தீர்க்கும் இடத்தை அரசியல் மேடையாக்காதீர்கள் என்று கண்ணீர் மல்க எல்லோரிடமும் கோரினார் காக்கா அண்ணா.

அத்துடன் நிற்காமல் இந்த வயதிலும் முள்ளிவாய்க்கால் மே - 18 நிகழ்வுக்காக முதல் நாளே அங்கு போய் நின்று எல்லா வேலைகளையும் ஏற்பாடுகளையும் உடனிருந்து செய்துவிட்டு 18 ஆம் திகதி வழமை போன்று மெளன விரதம் இருந்தார்.

அன்று தொட்டு இன்று வரை தேசியத்தில் பற்றுறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்ட அந்த மூத்த மனிதனை ஒரு ஓரமாய் புறந்தள்ளிவிட்டு நேற்றைக்கு முதல்நாள் வடக்கு மாகாணதிற்கு வந்தவரும் எல்லா மாகாணசபை உறுப்பினரும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று சத்தியப்பிரமாணம் செய்ய தனக்கு அதில் உடன்பாடில்லையென்று கூறி தன் சிங்கள சம்பந்தி வாசுதேவ நாணயக்கார சகிதம் மகிந்தவின் காலடி தேடிச்சென்று மகிந்தவின் முன் நின்று சத்தியப்பிரமாணம் செய்த முதல்வர் விக்கினேஸ்வரனை கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் நினைவஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தது தமிழர் வரலாற்றில் ஒரு கறுப்பு தினம் என்றே சொல்ல வேண்டும்.

இறந்துபோன அந்த மக்களின் ஆத்மாக்கள் கூட இச்செயலை மன்னிக்காது. அரசியலுக்கு அப்பால்ப்பட்டு நிகழ்வை ஒழுங்கமைக்கிறோம் என்று கூறிய பல்கலைக்கழக வீரர்கள் அரசியலுக்கு அப்பால்ப்பட்ட மூத்தவர் காக்கா அண்ணாவைக் கொண்டு அந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்திருக்க வேண்டியதுதானே அறம்.

அவருக்கு என்ன தகுதி இருக்கவில்லை அந்த நிகழ்வை ஆரம்பித்து வைக்க? முதல்வருக்கு என்ன தகுதி இருந்தது ஆரம்பித்து வைக்க?

அவர் தன் பிள்ளையை முள்ளிவாய்க்கால் மண்ணில் இழந்தாரா? இல்லை இந்த தேசம் மீட்க போராடினாரா? இல்லை பலவருடங்கள் சிறையில் இருந்தாரா? என்ன தகுதி இருக்கிறது?

பல்கலைக்கழக மாணவர்கள் என்ற பெயரில் இனியும் இவ்வாறான கேலிக் கூத்துக்கள் ஆடுவதையும் அரங்கேற்றப்படுவதையும் எம் சமூகம் அனுமதிக்கக்கூடாது. எம் இனத்திற்காய் சிலுவை சுமந்தவர்களை புறந்தள்ளிவிட்டு மீட்சிகளை தேட முயற்சிக்க கூடாது.

இந்த நாட்டுக்காக போராடிய ஒவ்வொறுவனும் மதிக்கப்பட வேண்டியவனே இன்று நீங்கள் படிக்கவும் பண் எடுக்கவும் திரியும் வயதில் அவர்கள் பசி தூக்கம் மறந்து களத்தில் நின்றவர்கள் அவர்கள் ஒன்றும் அநாதைகள் அல்ல இந்த தேசத்தையும் இனத்தின் மாண்பையும் கட்டமைத்தவர்கள் இவர்களின் ஈகங்களால்தான் எங்கள் அடையாளம் இன்றுவரை நின்று நிலைக்கிறது.

மூத்தபோராளிகள் வெளியில் நிற்கவைத்துவிட்டு நேற்றுப்பிறந்தவர்கள் நாட்டாமை செய்ய வெளிக்கிடுவது காலப்பிழையென்றே கருதவேண்டியிருக்கிறது.

ஒரு போராளி கண்ணீர் விடுவது சாதாரண நிகழ்வல்ல அதுவோர் பெருந்துயர் அத்துயரில் அவர்களை ஆழ்த்தாதீர்கள் காலம் உங்களை மன்னிக்காது.

தம் எதிர்கால அரசியலுக்காக இவற்றையெல்லாம் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்த அரசியல்வாதிகளை கையாலாகாதவர்கள் என்றே நான் சொல்வேன் என காக்கா அண்ணனுடன் சிறையில் இருந்த சிறைக் கைதியான சு.பிரபா பதிவிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/community/01/183121?ref=home-latest

தமிழ்வின்  வியாபார நோக்கில் இயங்கும் இணையம்.  அதற்கு தேசீயம் போராட்டம் நினைவேந்தல் சினிமா எல்லாம் செய்திதான் எனபது எல்லோரும் அறிந்தது. 

நினைவேநதல் நிகழ்வுக்கு முன்னாள் போராளிகள் தலமை தாங்கவேணும் அல்லது அரசியல்வாதிகள் அல்லது மாணவர்கள் என எந்த பாகுபாடும் தேவையில்லை. தலமையே இதற்குத் தேவையில்லை. மக்களே சென்று விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதே முறை.  முன்னாள் போராளிகளோ அரசியல்வாதிகளே மக்களாகவே சென்று அஞ்சலி செலுத்தவேண்டியதுதான் ஆனல் இங்கே நினைவேந்தலைவைத்து அடயாளம் தேட முற்படுகின்றார்கள். இவ்வாறு புலம்பெயர் தேசங்களில் அடயாளம் தேடி ஒரே இடத்தில் நாலு மாவீரர் தினம் வைப்பதும் பத்துபேர் மாவீரர் தின உரை வெளியிடுவதும் என்று போட்டி போட்டு இப்போது மாவீரர் தினமோ அல்லது வேறு தினங்களோ முன்புபோல் இல்லை. அவற்றை விட்டு மக்கள் அந்நியப்பட்டுவிட்டார்கள். அதேதான் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும். நினைவேநதலை விட அதற்கு தலமைதாங்கும் போட்டியானது நினைவேந்தலை நீர்த்துப்போகச் செய்யும். காலப்போக்கில் கொல்லப்பட்ட மக்களுக்கு சிங்கள ராணுவமே விளக்கேத்தி அஞ்சலி செலுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

போராட்டத்திலும் தமிழன் ஒன்றாக இல்லை போரடிச் செத்தவனுக்கு விளக்கு வைப்பதிலும் ஒன்றாக இல்லை ஆனால் விடுதலைவேண்டும் !!  எல்லாம் கைவிட்டுப்போய் நினைவுதினங்கள் தான் மிச்சம் இருக்கின்றது, எரியிறவீட்டில் புடுங்குவதுவரை லாபம் என்று அதையும் வைத்து அடயாளம் தேடி பிழைப்புநடத்தவேண்டியதுதான். 

புலிகள் இல்லையென்றால் அரசியல்/வியாபாரம் நடாத்தமுடியாத வறட்சிக்கு கட்சிகளும், ஊடகங்களும், பொது அமைப்புகளும், முகநூல் பதிவர்களும் வந்து நிறைய காலமாயிட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
எஸ். ஹமீத்.
 
முந்தாநாள்  (18-05-2018) முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. அந்நிகழ்வின் போது ஓர் ஓரமாக மௌன விரதம் அனுஷ்டித்தபடி அழுது கொண்டிருந்த பசீர் காக்கா பற்றித் தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
 
பசீர் காக்கா புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனோடு ஒரே சைக்கிளில் பயணம் செய்து அந்த அமைப்பைக் கட்டமைக்கப் பாடுபட்டவர். பிரபாகரனோடு ஒன்றாய் உண்டு, உறங்கியவர். போராளியாக இருந்து பல களங்களில் நின்று போர் செய்தவர். ஒரு மாவீரரின் தந்தை. முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது ஒரு பிள்ளையைப் பறி கொடுத்தவர்.
 
2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பூசா, வெலிக்கடை, மகசின், அனுராதபுரம்  சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடந்தவர் பசீர் காக்கா.
 
வழக்கம் போல இம்முறையும் பசீர் காக்கா முள்ளிவாய்க்காலுக்கு முதல் நாளே சென்று, ஏற்பாடுகளில் பூரண பங்கெடுத்தார். மறுநாள், ஓர் ஓரமாக உட்கார்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
 
இந்நிலையில் அஞ்சலி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வெளியேறிய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்செயலாக பசீர் காக்காவைக் கண்டார். அவரை நோக்கிச் சென்று அவரைக் கட்டித் தழுவி, தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்.
 
தமிழ் இணையத் தளங்கள் பலவும் பசீர் காக்காவின் செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனாலும், பல செய்திகளில் பசீர் காக்காவின் உண்மையான பெயரோ, ஊரோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
 
பெயரைப் பார்த்து பசீர் காக்கா ஒரு முஸ்லிம் என்று பலரும் நினைத்திருக்கலாம். அதுபற்றிய விமர்சனங்களை முன்வைத்திருக்கலாம். சிங்கள இனவாதிகள் கூட மேலோட்டமாக அர்த்த்தப்படுத்திக் கொண்டு கருத்துகளைப் பகிரலாம்.
 
உண்மையில் பசீர் காக்கா அல்லது காக்கா அண்ணை எனப்படுபவர் ஒரு முஸ்லிம் அல்ல. அவரது சொந்தப் பெயர் முத்துக்குமார் மனோகர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
 
ஒரு தெளிவுக்காகவே இந்தச் செய்தி!
 
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, colomban said:

ரெம்ப முக்கியம்,

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, colomban said:

ஆடான ஆடெல்லாம் தான் வந்து  தொலைக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

45 minutes ago, nunavilan said:

இணைப்பிற்கு நன்றிகள்..

முள்ளிவாய்க்கால் தமிழர்களின் பெரும் துயரம். நீண்ட விடுதலைப் பயணத்தின் முடிவு அடயாளம் எல்லாமும் ஆகும். அங்கிருந்துதான் புதிதாக எதுவும் ஆரம்பமாக முடியும் என்பதை எவராயினும் உணர்ந்து ஒற்றுமையுடன் எதிர்வரும் காலங்களில் முன்னெடுப்பது அவசியமாகின்றது. இது நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு கவிதை வாசிப்பு உரையாற்றுவது நாட்டியமாடுவது நன்றியுரை வாசிப்பது என வழமையான பாணியில் அணுகுவது ஆரோக்கியமாக இருக்காது. அக் கடசி நாடகளை அதே போன்ற உணரவோடு தக்கவைக்கவேணும். அதில் தான் இவ் நினைவேந்தலுக்கு அர்த்தம் இருக்கின்றது. இத் துயரம் எக்காலத்திலும் உலகால் மறக்க முடியாதவாறு அமையவேணும். அதற்கு தாயகத்தில் இருக்கும் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் ஒவ்வொருவரின் பொறுப்பு சார்ந்தது என்ற உண்மையை உணரவேணும் இந் நிகழ்வுக்கு தலமை என்று எதுவும் அமையமுடியாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.