Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்களோடு சண்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை ...தலைவர் மென் போக்கை கைப்பிடித்ததற்கு காரணம் அவருக்கு இதன் பார தூரம் தெரிந்திருந்தது 

  • Replies 315
  • Views 76.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் உங்களோடு சண்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை ...தலைவர் மென் போக்கை கைப்பிடித்ததற்கு காரணம் அவருக்கு இதன் பார தூரம் தெரிந்திருந்தது 

அவர் வடக்கு கிழக்கு என்று பார்க்கவில்லை எல்லாம் ஒன்றே என்று பார்த்தார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

ஆட்டுக்குள்,மாடடைக் கொண்டு வந்து செருகுவது என்பது இது தான் ?

இதற்குள் ஆடும் இல்லை. மாறும் இல்லை.

கருணா தனது சுயநலத்திற்காக பிரதேசவாதத்தைக் கையில் எடுத்தார். ஆனால் தலைவர் பிரபாகரனோ இயலுமானவரை மோதலைத் தவிர்க்கப்பார்த்தார். கருணா தலைவருக்கு மெய்ப்பாதுகாவலாராக இருந்து நம்பிக்கையைப் பெற்றது தலைவருக்கு கருணா எப்போதும் தமிழீழப் போராட்டத்திற்கு எதிரான நிலையையோ போராளிகளுக்கு எதிரான நிலையையோ எடுக்கமாட்டார் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது. அதுதான் பிரபாகரன் செய்த தவறு. காலம் கடந்த பின்னர் கருணா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது கடினமாகப் போய்விட்டது.

பொட்டம்மான் தலைவருக்கும் போராட்டத்திற்கும் போராளிகளுக்குக்கும் இறுதிவரை விசுவாசமாகவே இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

அவர் வடக்கு கிழக்கு என்று பார்க்கவில்லை எல்லாம் ஒன்றே என்று பார்த்தார் .

பெருமாள்,இதை பற்றி ஏற்கனவே நிறைய எழுதி ஒரு திரியையே பூட்டி விடடார்கள்...தலைவருக்கு எப்படி தமிழருக்கு என்று ஒரு நாடு இருக்க வேண்டும் என்ட ஆசை இருந்ததோ,அதே ஆசையும் கனவும் கருணாவுக்கும்,பொட்ட்ருக்கும்,கிழக்கில் இருந்து போன பல்லாயிரம் போராளிகளுக்கும் இருந்தது.

புலிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து சண்டையிடடதை விட  வன்னியிலும்,யாழிலும் தான் அதிகமாய் போரிடடார்கள்,இறந்தார்கள்... கருணா பிரதேசவாதம் பார்த்திருந்தால் அவ்வளவு கிழக்கு மாகாண போராளிகள் மடிந்திருக்க மாடடார்கள்.

ஆரம்பத்தில் கிழக்கு மாகாண போராளிகளுக்கு எந்த வித அடிப்படை வசதிகளோ,உரிமைகளோ வழங்கப்படவில்லை....அங்கவீனமான போராளிகளை கூட  வீட்டுக்குத் தான் அனுப்பி வைத்தார்கள் ....தமக்கான உரிமைகளை அவர்கள் தலைமையிடம் இருந்து போராடித் தான் பெற்றார்கள்....இது நடந்தது 90களின் ஆரம்பத்தில்...அப்ப கூட அவர்கள் பிரதேசவாதம் கதைக்கவில்லை...பிரிந்து போக நினைக்கவுமில்லை.

கடைசி பேச்சு வார்த்தையில் தான் திரு பாலசிங்கமும்,கருணாவும் சமஷ்ரி முறையிலான தீர்வை ஏற்கலாமே எனது தீர்மானித்த பின்னர் தான் முழுப் பிரச்சினையும் ஆரம்பமாகியது...சமசடியை ஏற்பது இறந்த போராளிகளுக்கு செய்யும் துரோகம் என தலைவர் நினைத்தார்...இனி மேல் போரிட்டு வெல்ல முடியாது என்று கருணா நினைத்தார்.

சுனா பானா போட்டுக் கொடுத்ததால் அவர் வன்னிக்கு போக முடியாது ...போட்டுத் தள்ளுவார்கள் அல்லது வீட்டுக் காவலில் வைப்பார்கள்...அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை...இந்தநேரத்தில் தான் எந்த நேரமும் பி.வா கதைக்கும் தாரக்கி,ராஜன் போன்றோர் ஓதிக் கொண்டு இருந்தார்கள்...மறுபக்கத்தில் ஜக்கிய தேசிய கடசியை சேர்ந்தவர்களது தூண்டுதல்கள்,,,எல்லாவற்றையும் விட பொட்டுவின் முட்ட்டாள்த்தமான நெருக்கடிகள்...புலனாய்ப் பிரிவு மட்டும் கொஞ்சசம் பொறுமையாய் இருந்திருந்தால் எல்லாத்தையும் தவிர்த்திருக்கலாம்...இதற்குத் தான்.இப்படியான பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சொந்த விருப்புகள்,வெறுப்புகள்,தனிப்படட கோப தாபங்களை மூட்டை கட்டி வைக்க வேண்டும் என சொல்வது 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

பெருமாள்,இதை பற்றி ஏற்கனவே நிறைய எழுதி ஒரு திரியையே பூட்டி விடடார்கள்...தலைவருக்கு எப்படி தமிழருக்கு என்று ஒரு நாடு இருக்க வேண்டும் என்ட ஆசை இருந்ததோ,அதே ஆசையும் கனவும் கருணாவுக்கும்,பொட்ட்ருக்கும்,கிழக்கில் இருந்து போன பல்லாயிரம் போராளிகளுக்கும் இருந்தது.

இப்பவும் காலம் போகவில்லை கருணா கிழக்கு மக்களை அரசியல் மூலாமகத்தன்னும் காப்பாற்றுவதுக்கு செயல்படுவாரா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

இப்பவும் காலம் போகவில்லை கருணா கிழக்கு மக்களை அரசியல் மூலாமகத்தன்னும் காப்பாற்றுவதுக்கு செயல்படுவாரா ?

அவர் தேர்தலில் நின்றால் வண்டவாளம் தெரிந்துவிடும் என்பதால்தான் மகிந்தவுடன் சேர்ந்து தேசியப்பட்டியலூடாக வந்து முக்கிய புள்ளியாகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றார். மக்களைக் காப்பாற்றவேண்டும் என்பதெல்லாம் முக்கியமா என்ன!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

அவர் தேர்தலில் நின்றால் வண்டவாளம் தெரிந்துவிடும் என்பதால்தான் மகிந்தவுடன் சேர்ந்து தேசியப்பட்டியலூடாக வந்து முக்கிய புள்ளியாகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றார். மக்களைக் காப்பாற்றவேண்டும் என்பதெல்லாம் முக்கியமா என்ன!

பார்ப்பம் என்னதான் நடக்குது என்று .

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

இப்பவும் காலம் போகவில்லை கருணா கிழக்கு மக்களை அரசியல் மூலாமகத்தன்னும் காப்பாற்றுவதுக்கு செயல்படுவாரா ?

என்ட அண்ணா என்ன முட்டாளா  இந்த மக்களை நம்பி இனி மேலும் போராடுவதற்கு?...தலைவர்  தன் குடும்பத்தையே இந்த மண்ணுக்காய் கொடுத்து கண்ட பலன் என்ன

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

என்ட அண்ணா என்ன முட்டாளா  இந்த மக்களை நம்பி இனி மேலும் போராடுவதற்கு?...தலைவர்  தன் குடும்பத்தையே இந்த மண்ணுக்காய் கொடுத்து கண்ட பலன் என்ன

அதுதான் கிழக்கு  மக்களை வித்து சாப்பிடுவோம் என்று முடிவெடுத்தவர் போலை  என்ன...? அக்கோய் நீங்க எவ்வளவு தான் அண்ணைக்கு காவடி எடுத்தாலும் அண்ணையோட பருப்பு கிழக்கு மக்களிடம் வேகாது. கிழக்கு முழுக்க முஸ்லிம்களிடம் பறிபோகுது என்றால் உங்கடை அண்ணனும் அதற்கொரு முக்கிய காரணம் தான்  

Quote

தலைவருக்கு எப்படி தமிழருக்கு என்று ஒரு நாடு இருக்க வேண்டும் என்ட ஆசை இருந்ததோ,அதே ஆசையும் கனவும் கருணாவுக்கும்,பொட்ட்ருக்கும்,கிழக்கில் இருந்து போன பல்லாயிரம் போராளிகளுக்கும் இருந்தது.

புலிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து சண்டையிடடதை விட  வன்னியிலும்,யாழிலும் தான் அதிகமாய் போரிடடார்கள்,இறந்தார்கள்... கருணா பிரதேசவாதம் பார்த்திருந்தால் அவ்வளவு கிழக்கு மாகாண போராளிகள் மடிந்திருக்க மாடடார்கள்.

ஆரம்பத்தில் கிழக்கு மாகாண போராளிகளுக்கு எந்த வித அடிப்படை வசதிகளோ,உரிமைகளோ வழங்கப்படவில்லை....அங்கவீனமான போராளிகளை கூட  வீட்டுக்குத் தான் அனுப்பி வைத்தார்கள் ....தமக்கான உரிமைகளை அவர்கள் தலைமையிடம் இருந்து போராடித் தான் பெற்றார்கள்....இது நடந்தது 90களின் ஆரம்பத்தில்...அப்ப கூட அவர்கள் பிரதேசவாதம் கதைக்கவில்லை...பிரிந்து போக நினைக்கவுமில்லை.

அதுதான் எனது கேள்வியும் 90 களில் இது நடக்கைக்க உங்கள் அண்ணை மோட்டை வெறித்து பார்த்துகொண்டா இருந்தவர் 
அப்போது ஏன் கிழக்கு மாகாண போராளிகள் மேல் காதல் வரயில்ல...? போதாக்குறைக்கு வகை தொகையில்லாமல் வகுப்பிற்கு போன ,பாடசாலைக்கு போன இரண்டும் கெட்டான்களை பலவந்தமாக பிடித்து தரவைக்கும் கொக்கட்டிச்சோலைக்கும் ஏற்றுமதி செய்து  . எல்லா மொள்ளமாரித்தனத்தையும் செய்து போட்டு தனது சொந்த மொள்ளமாரித்தனம் பிடிபட்டவுடன் வந்தது காதல் அதுவும் கடும்  தெய்வீக  காதல்  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎1‎/‎2018 at 7:13 AM, அக்னியஷ்த்ரா said:

அதுதான் கிழக்கு  மக்களை வித்து சாப்பிடுவோம் என்று முடிவெடுத்தவர் போலை  என்ன...? அக்கோய் நீங்க எவ்வளவு தான் அண்ணைக்கு காவடி எடுத்தாலும் அண்ணையோட பருப்பு கிழக்கு மக்களிடம் வேகாது. கிழக்கு முழுக்க முஸ்லிம்களிடம் பறிபோகுது என்றால் உங்கடை அண்ணனும் அதற்கொரு முக்கிய காரணம் தான்  

அதுதான் எனது கேள்வியும் 90 களில் இது நடக்கைக்க உங்கள் அண்ணை மோட்டை வெறித்து பார்த்துகொண்டா இருந்தவர் 
அப்போது ஏன் கிழக்கு மாகாண போராளிகள் மேல் காதல் வரயில்ல...? போதாக்குறைக்கு வகை தொகையில்லாமல் வகுப்பிற்கு போன ,பாடசாலைக்கு போன இரண்டும் கெட்டான்களை பலவந்தமாக பிடித்து தரவைக்கும் கொக்கட்டிச்சோலைக்கும் ஏற்றுமதி செய்து  . எல்லா மொள்ளமாரித்தனத்தையும் செய்து போட்டு தனது சொந்த மொள்ளமாரித்தனம் பிடிபட்டவுடன் வந்தது காதல் அதுவும் கடும்  தெய்வீக  காதல்  

உங்களுக்கு அவர் கிழக்கு மாகாணப் போராளிகளை[ஆண்,பெண்களை 
]தேவையில்லாமல்  பிடித்துக் கொண்டு போய் பலியிட்டு விடடார் என்று கோபம். ஆனால் மற்றவர்களுக்கோ அவர் இன்னும் ஆட்களை பிடிச்சு கொடுத்து,போராட்டத்தில் பங்கு எடுக்காமல் இடையில் விட்டுட்டு போயிடடார் என்று கோபம்...நீங்கள் எப்போதும் அவருக்கு நன்றியுள்ளவராய் இருக்க வேண்டும்.....அவர் விட்டுட்டுப் போன படியால்  தான் கொஞ்சசப் பேராவது தப்பினவை 

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபடவேண்டாம், சிறுவர்களைச் சேர்க்கவேண்டாம் என்றுதானே யுத்த நிறுத்த காலத்தில் புலிகளின் தலைமை கேட்டிருந்தது. அதை காதில் போடாமல் தனது பவரைக் காட்ட கருணா அம்மான் கோயில் திருவிழாக்களுக்குப் போனவர்களை எல்லாம் கட்டாயமாகப் பிடித்தார்.

இதற்காக வன்னியில் இறுதி யுத்தத்தில் கட்டாயமாக புலிகளில் இணைக்கப்பட்டதை நியாயப்படுத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள்.உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை...தலமை நிறுவனம் இப்படித் தான் நடக்க வேண்டும் என ரூல்ஸ் போடும்.ஏன் என்டால் ஏதாவது பிரச்சினை சடட சிக்கல் வந்தால் தான் தப்பிக்க கொள்வதற்கு...கிளை நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்க குறுக்கு வழிகளை கையாளும்...தலைமை கண்டும் காணாமலும் இருக்கும்...ஏதாவது பிரச்சினை வந்தவுடன் இவர்களை நோக்கி கை காட்டும் ...என்ட அண்ணரின் நிலைமையும் அது தான் 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறுவனங்களில் தலைமை போடும் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டாமல் குறுக்குவழியில் தான்தோன்றித்தனமாக நடப்பவர்கள் நீண்டகாலம் நிலைக்கமுடியாது.

HR, ethics, people survey என்று பலவழிகளில் கள்ளங்களைப் பிடித்துவிடுவார்கள். அதுபோலத்தான் புலிகள் அமைப்பிலும் புலனாய்வு, நிதி போன்ற பல்வேறு துறைகள் கருணா அம்மானின் கள்ளங்களை அறிந்திருந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

உங்கட கதையைப் பார்த்தால் கருணா பலவந்தமாய் சிறுவர்களை புலிகளில் சேர்த்தமையால் புலனாய்வுப் பிரிவு தண்டனை கொடுத்த மாதிரி இருக்குது.

வன்னியில் சுனா பானாவும்,இளந்திரையனும் சேர்க்காதா ஆள் சேர்ப்பா ?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

உங்கட கதையைப் பார்த்தால் கருணா பலவந்தமாய் சிறுவர்களை புலிகளில் சேர்த்தமையால் புலனாய்வுப் பிரிவு தண்டனை கொடுத்த மாதிரி இருக்குது.

வன்னியில் சுனா பானாவும்,இளந்திரையனும் சேர்க்காதா ஆள் சேர்ப்பா ?
 
நீங்கள் தொடரை வாசிக்கின்றீர்களா இல்லை இரண்டு வரியை வாசித்துவிட்டு மிச்சத்தை கற்பனையில் நீங்களாகவே நினைத்துக்கொள்கின்றீர்களா?? என்ன நடந்தது என்பதை விலாவாரியாக பீஸ்மர் எழுதியுள்ளார். 

கருணாதான் புலிகள் அமைப்பில் முதன்முதலாக கட்டாய ஆட்சேர்ப்பைச் செய்தவர். ஒலரா ஒட்டுண்ணு என்ற ஐ.நா. யுனிசெஃப் அதிகாரி வருகைதந்தபோது புலிகளின் தலைமை கட்டாய ஆட்சேர்ப்பைக் கைவிடச்சொல்லி கருணா அம்மானுக்குச் சொல்லியிருந்தார்கள். அவர் படைகட்டவேண்டுமென்று காதில் போட்டுக்கொள்ளவில்லை. இதெல்லாம் 2003இல் நடந்தவை.

வன்னியில் நடந்த கட்டாய ஆட்சேர்ப்பை நான் நியாயப்படுத்தவில்லை. அது 2005க்குப் பின்னர் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

கருணாவின் படைகளை கொண்டு போர் புரியக்குள்ளே தெரியவில்லையா?... ஜாநா,யுனிசெப் சொன்னது எல்லாம் ...விட்டுட்டுப் போன பிறகு அவர் செய்தது தப்பு 

2005 க்குப் பிறகு கடடாய ஆள் சேர்ப்பு நடந்தால் அது தப்பில்லை ?..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

2005 க்குப் பிறகு கடடாய ஆள் சேர்ப்பு நடந்தால் அது தப்பில்லை ?..

நான் தப்பில்லை என்று சொன்னேனா? Timelines ஐக் குழப்பி வரலாற்றையே குழப்பிக்கொண்டிருக்கின்றீர்கள். இது எல்லாம் நடந்தபோது நாமும் யாழில் கருத்துக்கள் எழுதிக்கொண்டுதான் இருந்தோம். பீஸ்மர் எங்களுக்குத் தெரிந்த பக்கத்தின் மற்றபக்கத்தைச் சொல்ல முயற்சிக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா செய்தது சரியென்று எண்ணும் ஒருவருக்கும் அவர் செய்தது துரோகம் என்று எண்ணும் பலருக்கும் இடையில் நடக்கும் விவாதம்.

கருணா செய்தது சரியென்று ஒருவர் முடிவிற்கு வந்துவிட்டபின்னர், அவருடன் வாக்குவாதப்படுவதில் பயனில்லை. கருணா செய்தது துரோகம் என்று நாம் நம்புவதற்குப் பல காரணங்கள் இருப்பதுபோல ரதிக்கும் கருணா செய்தது சரியென்று எண்ணுவதற்கு நியாயங்கள் இருக்கலாம்.

ஆகவே, இதை இத்துடன் நிறுத்திக்கொண்டு, தொடரைத் தொடர்வது சரியென்று நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

இது நீங்கள் எண்ணும் ரகம்மும் இல்லை ....

வானம் நீலம் என்றால் ..... இல்லை என்றும் சொல்வதில்லை 
ஆம் என்றும் சொல்வதில்லை 
வானம் சிவப்பில்லை ..... பச்சை இல்லை என்று 
ஒருவித விரண்டா வாதம் செய்வது.

அப்படியே விட்டு விட்டால் நேரம் மிச்சம். 

எதோ நடந்ததெல்லாம் நாலு சுவருக்குள் நடந்த மாதிரி.
 
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Maruthankerny said:

இது நீங்கள் எண்ணும் ரகம்மும் இல்லை ....

வானம் நீலம் என்றால் ..... இல்லை என்றும் சொல்வதில்லை 
ஆம் என்றும் சொல்வதில்லை 
வானம் சிவப்பில்லை ..... பச்சை இல்லை என்று 
ஒருவித விரண்டா வாதம் செய்வது.

அப்படியே விட்டு விட்டால் நேரம் மிச்சம். 

எதோ நடந்ததெல்லாம் நாலு சுவருக்குள் நடந்த மாதிரி.
 
மருதர்,இந்த திரியையும் எல்லோரும் எழுதின கருத்தையும் வடிவாய் வாசித்து விட்டு உங்கள் கருத்தை எழுதி இருக்கலாம்...எவ்வளவு படிசிருந்தால் என்ன, வருடம் போகப் போக எப்படி வயசு போனால் என்ன,  ஒன்று உங்களால் முடியா விடடால் அவர்களை மட்டம் தட்டி கேவலப்படுத்த உங்களை போன்றவர்களால் தான் முடியும்....உங்களை போன்றவர்களுக்கும்  போரில் பெண் புலிகளை மான பங்கு படுத்தி கொண்ட ஆமிக்கும் ஒரு வித்தியாசமும்  இல்லை என நான் நினைக்கிறேன்.

நீங்கள் எப்படித் தான் உண்மையை பூட்டி வைச்சாலும் அது கண காலத்திற்கு தூங்காது...பொட்டு செய்தால் சரி கருணா செய்தால் பிழை என்பது உங்களது வாதம்...பொட்டு செய்தாலும் பிழை,கருணா செய்ததும் பிழை என்பது எனது கருத்து 

கருணா,இயக்கத்தை விட்டுப் பிரிந்ததால் தான் கிழக்கு மாகாணப் போராளிகள் அரைவாசிப் பேராவது  தப்பினவை....இல்லாட்டில் இந்த சண்டையில் முழுப் பேரையும் புலி கொடுத்து இருப்பார்கள்....வன்னி... புலிகள் தான் வேண்டும் என நம்பிப் போனவர்களையே இரக்கமில்லாமல் சுட்டவர்கள் தானே!....உண்மைகள் கொஞ்சம்,கொஞ்சமாய் வெளி  வர கோபம் பொத்துக் கொண்டு வருதாக்கும்.

ரகுவின் கருத்திற்கு மதிப்பு கொடுத்து தற்போதுதைக்கு இத் திரியில் இருந்து விடை பெறுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை சுருக்கமாக ..........
கடவுள் மனிதர்களை படைத்ததால்தான் 
பசி பட்டினி போர் என்று அவலங்கள் நடக்கிறது 

கடவுள் மனிதரை படைக்காது போயிருந்தால் 
இதுவொன்றும் ஆகியிருக்காது என்று சுருக்கி எழுதியிருக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!- இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 32

September 15, 2018
k11-6.jpg

பீஷ்மர்

விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கேணல் கருணா 2004 மார்ச் 03ம் திகதி திடீர் அறிவிப்பொன்றை விடுத்தார். “விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து, கிழக்கு மாகாண அணியினராகிய நாம் தனித்து செயற்பட போகிறோம்“ என்பதே அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பின் பின்னணி என்ன? அப்போது என்னென்ன சம்பவங்கள் நடந்தன? யார் யார் என்னென்ன பாத்திரங்கள் வகித்தார்கள்?

இதையெல்லாம் கடந்த பாகங்களில் விபரமாக குறிப்பிட்டுள்ளோம். கருணா பிளவை ஒரு தத்துவார்த்தமான பிளவாக சிலர் குறிப்பிடுவதுண்டு. வடக்கு கிழக்கு மோதல், கிழக்கு போராளிகள் மீதான மேலாதிக்கம் என பல கதைகள் கிளப்பப்பட்டன. உண்மையில் அதெல்லாம் கதைகள்தான். இந்த பிளவை நியாயப்படுத்த பின்னாளில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.

இப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதைகளின் பின்னால், பெரும் வலையமைப்பே இருந்தது. வடக்கு- கிழக்கு மோதலை தத்துவார்த்த பின்னணியில் உருவாக்கினால்தான், பிளவு வெற்றியடையுமென்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்திருந்தார்கள். அதே சமயத்தில் வடக்கு- கிழக்கு பிளவை வெறித்தனமானதாக மாற்றும் முயற்சியும் நடந்தது. அதாவது வடக்கை சேர்ந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அதை உணர்வுபூர்வமானதாக மாற்றி, இரத்தக்களரியை தோற்றுவிக்கும் முயற்சிக்கான விதை அது.

கிழக்கு பிளவிற்கு தத்துவார்த்த அர்த்தம் கற்பிக்கும் முயற்சியும் நடந்தது. இதன் பின்னணி யார் என்பதை நாம் கூறப்போவதில்லை. ஆனால் நாம் தரும் தகவல்களில் இருந்து நீங்கள் விசயங்களை ஊகித்துக்கொள்ளலாம்.

Karuna-250_23092008.jpg

2004 மார்ச்சில் கருணா தனது பிரிவை அறிவித்ததும், தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள பத்திரிகையாளர்- பெண்மணி- கருணாவின் அணிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முகாமொன்றில் வந்து தங்கியிருந்தார். கருணா அணியின் தகவல்களையும், அறிக்கைகளையும் உடனுக்குடன் இலங்கை மற்றும் வெளிநாடுகளிற்குள் பரப்புவதுதான் அவரது வேலை. அவரை யார் அங்கு அனுப்பி வைத்தார்கள்?

அதையும் நாம்தான் உங்களிற்கு சொல்லி புரிய வைக்க வேண்டுமா என்ன?

மட்டக்களப்பில் இருந்த வடக்கை சேர்ந்தவர்களை கருணா குழு சுட தொடங்க, பதிலுக்கு புலிகளும் கருணா குழுவை சேர்ந்தவர்கள் மீது சுட தொடங்க, கிழக்கே கலவர பூமியானது. ஒவ்வொரு நாளும் கொலை விழுந்த நாட்கள் அவை.

இந்த சமயத்தில் மீண்டும் கருணாவுடன் இடைத்தரகர்கள் ஊடாக பேச்சுவார்த்தை நடத்த புலிகள் முயன்றனர். கருணாவை சமரசமாக கிழக்கை விட்டு வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதே புலிகளின் பிரதான நோக்கமாக இருந்தது. கருணாவுடன் மோத முடிவெடுப்பது, வீணாண அழிவு, பின்னடைவு ஏற்படுமென்பது புலிகளிற்கு தெரிந்திருந்தது. ஆனால், கருணா அதற்கு சம்மதிக்கவில்லை. ஐயாயிரம் போராளிகள் தன்னிடமிருந்ததால், கிழக்கில் தனியான நிர்வாகம் அமைக்கலாமென அவர் நினைத்தார்.

ஆனால்….. இந்த இடத்தில் உங்களிற்கு ஒரு பிளாஷ்பேக் அவசியம். கருணா விவகாரத்தை எழுத தொடங்கியபோது, ஒரு விசயத்தை சொல்லியிருந்தோம். கருணா படித்த பாடசாலையில் ஹெட்மாஸ்ரர் பிரபாகரன்தான் என!

போர்த்தந்திரங்களில் பிரபாகரனா, கருணாவா சிறந்தவர் என கேட்டால், சந்தேகமேயில்லாமல் பிரபாகரன்தான் என சொல்லலாம். அதற்கு ஆதாரம்- கருணா கிளர்ச்சியை அவர் கட்டுப்படுத்திய விதத்தை சொல்லலாம்!

கருணா பிரிவில் இடையில் கட்டாயம் சொல்ல வேண்டிய இன்னொரு விவகாரம்- திருகோணமலை தளபதியாக இருந்த பதுமன் கைது செய்யப்பட்டது. அதை இப்பொழுது குறிப்பிடுகிறோம். இதை தொடர்ந்து, கருணாவை விட போர்த்தந்திரத்தில் பிரபாகரன் ஏன் சிறந்தவர் என்பதற்கான ஆதாரங்களை குறிப்பிடுகிறோம்.

கருணா பிரிவு விவகாரத்தில் கிழக்கின் இன்னொரு தளபதியாக இருந்த பதுமன் புலிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் திருகோணமலை தளபதியாக இருந்தார்.

கருணா பிரிவை பதுமன் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். ஆனால் அதில் நேரடி தொடர்பை வைத்திருக்கவில்லை. கருணா பிளவை பதுமன் அறிந்து வைத்திருக்கிறார், இரண்டு தளபதிகளிற்கிடையிலும் நெருக்கம் உள்ளது போன்ற தகவல்களை புலிகள் அறிந்து வைத்திருக்கவில்லை. எதிர்பாராதவிதமாக நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றின் மூலமே, புலிகள் இதை அறிந்து கொண்டார்கள்.

கிழக்கில் கருணா பிரிந்தபோது, ஜெயந்தன் படையணியின் அணியொன்று வடக்கில் நிலைகொண்டிருந்தது. அந்த அணியின் தளபதியாக ஜெனார்த்தனன் இருந்தார். இப்போது பிரித்தானியாவில் வசிக்கிறார். அவருடன் சுமார் நானூறு வரையான போராளிகள் இருந்தார்கள். அந்த அணி நாகர்கோவிலில் நிலைகொண்டிருந்தது.

கிழக்கிலிருந்த கருணா அணியிடமிருந்து ஜெனார்த்தனனை பலமுறை தொடர்பு கொண்டனர். அவரது அணியையும் கூட்டிக்கொண்டு உடனடியாக மட்டக்களப்பிற்கு வரும்படியும், அதற்கான ஏற்பாட்டை தாங்கள் செய்வதாகவும் கூறினார்கள்.

dcp54646646-1-300x212.jpg பிரபாகரன்- சொர்ணம்

ஜெனார்த்தனன் விடுதலைப்புலிகள் அமைப்பில் விசுவாசமாக இருந்தவர். அவருக்கு இதில் உடன்பாடிருக்கவில்லை. உடனடியாக தனது மேலதிகாரிகளிடம் விசயத்தை சொன்னார். அது பொட்டம்மானிற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. பொட்டம்மான் இந்த விசயத்தை கையில் எடுத்தார்!

ஜெனார்த்தனனை கிளிநொச்சியிலுள்ள புலனாய்வுத்துறையின் ஒப்ரேசன் மையமொன்றிற்கு அழைத்த பொட்டம்மான், அவரை சில விசயங்களிற்காக தயார்படுத்தினார். அதாவது, கிழக்கு அணியுடன் இணக்கமாக பேசி, தகவல்களை கறக்க வேண்டும்!

ஜெனார்த்தனன் அதை கச்சிதமாக செய்தார். “கிழக்கு விவகாரங்கள் உங்குள்ள ஜெயந்தன் படையணி போராளிகளிற்கு தெரியுமா?“ என கருணா அணியினர் கேட்டனர்.

”ஆம்… அனைத்து தகவல்களும் ஓரளவுக்கு தெரிந்துள்ளது. புலிகள் பயங்கரமான தணிக்கை நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ளனர். புலிகளின் குரல் வானொலி மட்டுமே கேட்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், விசயத்தை தெரிந்துள்ள என்னைப்போன்ற சிலர் மூலம் ஓரளவு விசயங்கள் போராளிகளிடம் சென்றுள்ளது“

“ஓஹோ… போராளிகள் என்ன சொல்கிறார்கள்? வன்னியை விட்டு மட்டக்களப்பிற்கு வர தயாராக இருக்கிறார்களா?“

“யாரும் வெளிப்படையாக பேசவில்லை. அவர்களிற்கு பயமாக இருக்குமென நினைக்கிறேன். யார் யாருடைய ஆட்களென்பதை கண்டுபிடிக்க முடியாதல்லவா?. ஆனால் மேலோட்டமாக பேசியதில் பல போராளிகள் மட்டக்களப்பிற்கு வர தயாராக இருக்கிறார்கள். மிகச்சிலர் விரும்பாமலிருக்ககூடும். ஆனால், அனைவரையும் மட்டக்களப்பிற்கு கொண்டு வரலாம்“

“சரி… தொடர்பில் இருங்கள். அதுபற்றி பின்னர் தகவல் தருகிறோம்“

இந்த உரையாடல் ஜெனார்த்தனனிற்கும், புலிகளிலிருந்து பிரிந்த கிழக்கின் முக்கிய தளபதியொருவரிற்குமிடையில் நடந்தது. இந்த உரையாடலை ஜெனார்த்தனனுடன் இருந்து பொட்டம்மானும் கேட்டுக்கொண்டிருந்தார்!

இந்த உரையாடலை பொட்டம்மான் அவதானித்துக் கொண்டிருப்பதை கருணா குழு அறிந்திருக்கவில்லை. ஜெனார்த்தனன் உண்மையிலேயே மட்டக்களப்பிற்கு வர தயாராக இருக்கிறார் என்றுதான் கருணா குழு நம்பியது.

மட்டக்களப்பிற்கு வருவதானால், எப்படி வருவதென்று கருணாகுழுவிடம் கேட்கும்படி பொட்டம்மான் கூறியிருந்தார். அடுத்த உரையாடலில் ஜெனார்த்தனன் கேட்க, மறுமுனையில் பேசிய முக்கியஸ்தர் திட்டத்தை புரியவைத்தார்.

“இப்பொழுது நீங்கள் நாகர்கோவில் முன்னரணில் நிலைகொண்டிருக்கிறீர்கள். கடற்கரையோரமாக கண்ணிவெடிகளை அகற்றி ஒரு பாதையை தயார் செய்யுங்கள். நீங்கள் தயார்செய்யும் பாதையை இராணுவத்தினர் பார்த்தால், அதற்கு நேராக அவர்களும் ஒரு பாதையை தயார்செய்து தருவார்கள். இந்த பாதையால் நாகர்கோவில் முகாமிற்கு போங்கள். அவர்கள் அங்கிருந்து கப்பலில் வாகரையில் இறக்கிவிடுவார்கள். எங்களுடன் வந்து சேரலாம். முக்கியமான ஒரு விசயம்- நாகர்கோவிலில் இராணுவ முகாமிற்கு போகும்போது, துப்பாக்கிகள் எதையும் கொண்டுபோக வேண்டாம். அனைத்து ஆயுதங்கள், கைக்குண்டுகளையும் அப்படியோ போட்டுவிட்டு செல்லுங்கள்“

இந்த உரையாடலை அவதானித்துக் கொண்டிருந்த பொட்டம்மானிற்கு பொறி தட்டியது. ‘வாகரையில் இராணுவம் இறக்கிவிடுவார்களா? அந்த பகுதி திருகோணமலை மாவட்ட அணியின் செல்வாக்குள்ள இடமாயிற்றே’. உடனே இன்னொரு கேள்வியை கேட்கும்படி ஜெனார்த்தனனிடம் எழுத்துமூலம் கொடுத்தார். அந்த கேள்வி- “வாகரையிலா எங்களை தரையிறக்குவார்கள்? அங்கு பதுமன்ணையின் ஆட்கள் (திருகோணமலை அணி) இருக்குமே? நாங்கள் ஆயுதங்கள் இல்லாமல் வருகிறோம். எங்களை சுட்டுத்தள்ளி விடுவார்களே?“.

“அதைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை. பதுமனுடன் அனைத்தும் பேசியாயிற்று. அவரும் நமக்கு வேண்டியவர்தான். அவருக்கு எல்லாம் தெரியும். திருகோணமலை ரீமால் எந்த சிக்கலும் வராது“

உடனடியாகவே நாகர்கோவில் இராணுவ முன்னரணில் சரணடைவதாக ஜெனார்த்தனன் கூறியிருந்தார். அந்த செய்திக்காக கருணா அணி காத்திருந்தது.  கடைசிவரை நாகர்கோவில் இராணுவத்திடம் கையை உயர்த்திக்கொண்டு புலிகள் யாரும் செல்லவேயில்லை. ஆனால், இலங்கை இராணுவ உலங்கு வானூர்தியில் புலிகளின் தளபதியொருவர் திருகோணமலைக்கு சென்றார்.

அவர்- தளபதி சொர்ணம்!

பிரபாகரனின் மிக நம்பிக்கையான தளபதி. திருகோணமலையை சேர்ந்தவர். விடுதலைப்புலிகளின் இரண்டு பிரதான பிளவின்போதும், பிரபாகரனின் மிக நம்பிக்கையை வென்றவர். இரண்டு சமயத்திலும், பிளவில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது சொர்ணம்தான்.

சொர்ணம் கைது செய்த முதலாவது கிளர்ச்சியாளர் மாத்தையா!

1994 இல் புலிகளிற்குள் ஏற்பட்ட பிளவையடுத்து மாத்தையா கைதானார். கொக்குவிலில் இருந்த மாத்தையாவின் முகாமிற்கு இம்ரான் பாண்டியன் படையணியுடன் சென்று, மாத்தையாவின் கையில் விலங்கிட்டது சொர்ணம்தான். அந்த அணியில் பொட்டம்மானும் இருந்தபோதும், சொர்ணம்தான் அனைத்தையும் வழிநடத்தினார்.

கருணா பிளவின்போது, பதுமனை கைது செய்ய சென்றதும் சொர்ணம்தான்.

சொர்ணம் திருகோணமலைக்கு போய், பதுமனை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். பதுமனிற்கு புலிகளை விட்டு செல்லும் எண்ணமிருக்கவில்லை. அதனால்தான் சுலபமாக சரணடைந்திருக்கிறார். அவரை வன்னிக்கு கொண்டு செல்ல வேண்டும். எப்படி கொண்டு செல்வது?

உலங்கு வானூர்தியில்- அதுவும் அரசாங்கத்தின் உலங்கு வானூர்தியில் கொண்டு செல்ல முடிவெடுத்தனர். கருணா பிளவின் பின்னணியில் அரசாங்கம் இருக்கிறது என்கிறீர்கள், எப்படி அவர்களின் உலங்கு வானூர்தியில் பதுமனை வன்னிக்கு கொண்டு செல்ல புலிகள் முடிவெடுத்தார்கள் என நீங்கள் நினைக்கலாம்.

அந்த சமயத்தில் புலிகளின் தேவைகளிற்காகவும் உலங்கு வானூர்திகளை அரசாங்கம் வழங்கியது. சமாதான பேச்சுக்களிற்காக செல்லவும், கிழக்கு பயணங்களிற்கும் சமாதான செயலகம் ஊடாக உலங்கு வானூர்திகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற ஏற்பாடு இருந்தது. இதன்படி உலங்கு வானூர்தியை பெற்று  பதுமனை வன்னிக்கு கொண்டு வர திட்டமிட்டனர். உங்களிற்கு வந்த சந்தேகம் புலிகளிற்கும் வந்தது. ஒருவேளை உலங்குவானூர்தியில் பதுமனை ஏற்றிய பின்னர், கொழும்பிற்கோ அல்லது வேறு இராணுவத்தளத்திற்கோ கொண்டு சென்று தரையிறக்கி விடுகிறார்களோ தெரியாதே!

இந்த சந்தேகம் சொர்ணத்திற்கும் இருந்தது. திருகோணமலையில் இருந்து பதுமனை அழைத்துக்கொண்டு புறப்பட்ட இரண்டு போராளிகளிற்குமிருந்தது. அதற்கு சொர்ணம் ஒரு தீர்வை சொன்னார். “இடைவழியில் எங்காவது குழப்படி விட்டால், அல்லது ஹெலிகொப்டர் வேறு எங்காவது போகிறது என தெரிந்தால், பதுமனையும் கட்டிப்பிடித்துக்கொண்டு கீழே குதித்து விடுங்கள்“!

பதுமன் வன்னிக்கு அழைத்து வரப்பட்டு, புலிகளால் விசாரிக்கப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். யுத்தத்தின் இறுதிநாட்களில்தான் விடுவிக்கப்பட்டார். இப்பொழுது சாதாரண குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

பதுமன் விவகாரம் இவ்வளவுதான்.

போர்த்தந்திரத்தில் பிரபாகரனா, கருணாவா சிறந்தவர் என்பதை, இனி நான் குறிப்பிடும் தகவல்களை வைத்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

ஏப்ரல் 09ம் திகதி. அதாவது கருணா பிளவு நடந்து ஒரு மாதத்தின் பின்னர், மட்டக்களப்புக்கு புலிகள் அணிகள் நகர்த்தப்பட்டு, கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்து பிரதேசம் மீட்கப்பட்டது. அது ஒரு பெரிய வெள்ளிநாள்.

புலிகள் மட்டக்களப்பு மீது படையெடுப்பார்கள் என கருணா எதிர்பார்த்திருந்தார். அவர் நினைத்தார் வெருகல் ஆற்றைக்கடந்துதான் புலிகள் வருவார்கள் என. வெருகல் ஆற்றை கடக்காதவாறு பலமான அரண் அமைத்தால் சரி, புலிகளை கட்டுப்படுத்தி விடலாமென நினைத்தார். தன்னிடமிருந்த 600 போராளிகளை 30 அணிகளாக பிரித்து, ஆற்றின் தெற்கு பக்கமாக நிலைகொள்ள வைத்தார். (இதில் கணிசமான புதிய பெண் போராளிகளும் இருந்தனர். ஆண், பெண் போராளிகளை ஒன்றாகவே நிலைகொள்ள வைத்தனர். அது ஏற்படுத்திய விளைவுகள் பின்னாளில் பூதகாரமாக எழுந்தது. அதைப்பற்றி பின்னர் குறிப்பிடுகிறோம்)

இந்த படையணிகளிற்கு சூட்டாதரவு வழங்க, சுமார் எட்டு 120mm பீரங்கிகள் காட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வெருகலில் நிலைகொண்டிருந்த கருணா அணிக்கு தலைமைதாங்கியவர் ரெஜி. கருணாவின் மூத்த சகோதரர்.

அதிகாலை 1.30 அளவில் புலிகளின் ஒப்ரேசன் தொடங்கியது. கடல்வழியாக வந்த புலிகளின் அணியொன்று, வெருகல் முகத்துவாரத்தின் தென்பகுதியில் இறங்கி, உள்பக்கமாக இரகசியமாக நகர்ந்தது.

இன்னொரு அணி வெருகல் ஆற்றங்கரையின் மறுபக்கம் வந்தது. அந்த சமயத்தில் மட்டக்களப்பின் மூத்த உறுப்பினர்கள் தொலைத்தொடர்பு கருவிகளின் மூலம், கருணாவின் ஆட்களுடன் தொடர்புகொண்டு, மீண்டும் அமைப்பிற்குள் வருமாறு கேட்டுக்கொண்டிருந்தனர். வெருகல் ஆற்றோரம் நின்ற அணி, வேறுவிதமாக பேசியது. தாங்கள் சரணடைய போவதாக கேட்டார்கள். வாருங்கள் என சந்தோசமாக அழைத்தனர் கருணா அணியினர்.

சரணடைய வந்தவர்கள் திடீரென துப்பாக்கிகளை எடுத்து சுட ஆரம்பித்தனர். அதேநேரம் பால்சேனையில் இன்னொரு தரையிறக்கம் நடந்தது. கருணா அணியை எதிர்பாராக விதமாக புலிகள் சுற்றிவளைத்தனர். கதிரவெளியில் தரையிறங்கிய அணிகள், கருணா குழுவின் பின்பக்கமாகவும் வந்து தாக்க தொடங்கினார்கள்.

இதற்குள் இன்னொரு சுவாரஸ்யம். புலிகளிற்கு எதிராக, 120mm பீரங்கிகளை கருணா நிறுத்தி வைத்திருந்தார் அல்லவா, அவற்றிலிருந்து ஒரு செல் கூட புலிகளிற்கு எதிராக அடிக்கப்படவில்லை. காரணம், கொமாண்டோ தாக்குதல் ஒன்றின் மூலம், அந்த பீரங்கிகளை புலிகள் கைப்பற்றினர்.

131-1-300x199.jpg கருணா பிளவையடுத்து கிளிநொச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரமணன், கரிகாலன், ரமேஷ், பதுமன், தமிழ்செல்வன், கௌசல்யன்

எல்லா திட்டங்களும் குழம்பியதால், கருணா குழுவினர் நிலைகுலைந்து போனார்கள். அடுத்தது என்ன செய்வதென தெரியாமல், திண்டாடினார்கள். பால்சேனையில் தரையிறங்கிய புலிகள், வடக்கு மற்றும் தெற்கு பக்கமாக முன்னேற தொடங்கினார்கள். இந்த அணிகளிற்கு ரமேஷ் தலைமைதாங்கினார்.

ஒரு அணி கதிரவெளியை கைப்பற்ற, மற்ற அணி வாகரைக்கு பக்கத்திலிருந்த கண்டலடி முகாமை கைப்பற்றினர். கருணாவின் சகோதரர் ரெஜி அங்கிருந்துதான் கட்டளைகள் வழங்கிக் கொண்டிருந்தார். அவருக்கும் காயம் ஏற்பட்டது. காயத்துடன் தப்பியோடி விட்டார். மொத்தத்தில் சில மணித்தியாலத்தில் பெரும் உயிர் சேதமின்றி கருணா அணியை புலிகள் முறியடித்தனர்.

இப்பொழுது சொல்லுங்கள், கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட்மாஸ்டர் என்பது சரிதானே!

(தொடரும்)

http://www.pagetamil.com/16163/

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் சுவாரஸ்யமாக போகிறது  30 வருட கால போராட்டம்  எழுத்துக்களால் மட்டுமே .........................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தொடர் சுவாரஸ்யமாக போகிறது  30 வருட கால போராட்டம்  எழுத்துக்களால் மட்டுமே .........................

ஒரு விடயத்தை சொல்லும் கோணம் உண்மையை சொன்னால் ரசிக்கபட மாட்டாது கொஞ்சம் மசாலா கலந்து சிலதை மறைத்து பெரும்பான்மை வாசகர்களை திருப்தி படுத்தும் விதமாக எழுதியுள்ளார் .சிலரின் புனை பெயரை வைத்து குணநலன்கள் சொல்லிவிடலாம் என்பார்கள் .இங்கு மறைந்த விரிவுரையாளர் சிவத்தம்பி அவர்கள் வீரகேசரியில் பீஸ்மர் எனும் பெயரில் எழுதிய புனைபெயரை இந்த கட்டுரை ஆசிரியர் தனதாக்கியுள்ளார் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

ஒரு விடயத்தை சொல்லும் கோணம் உண்மையை சொன்னால் ரசிக்கபட மாட்டாது கொஞ்சம் மசாலா கலந்து சிலதை மறைத்து பெரும்பான்மை வாசகர்களை திருப்தி படுத்தும் விதமாக எழுதியுள்ளார் .சிலரின் புனை பெயரை வைத்து குணநலன்கள் சொல்லிவிடலாம் என்பார்கள் .இங்கு மறைந்த விரிவுரையாளர் சிவத்தம்பி அவர்கள் வீரகேசரியில் பீஸ்மர் எனும் பெயரில் எழுதிய புனைபெயரை இந்த கட்டுரை ஆசிரியர் தனதாக்கியுள்ளார் .

எல்லாப்பொருளுக்கும் கவர்ச்சிதான் தேவைப்படுகிறது அது புத்தகமாகட்டும் கட்டுரையாகட்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.