Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களுக்காக எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் தயார்! – விஜயகலா மகேஸ்வரன்

Featured Replies

மக்களுக்காக எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் தயார்! – விஜயகலா மகேஸ்வரன்

 

 

வடக்கிலே மக்கள் பல துன்பங்களுக்கிடையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்ட 10 கோடி ஏற்றுமதி பயிர் நடுகைச் செயற்றிட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கிலே 90 ஆயிரம் குடும்பங்கள் பெண்களைத் தலைமைத்துவமாக் கொண்டு இருக்கின்றார்கள். அதிலும் வடக்கில் 50 ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறார்கள். இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுக்கும்போது பெண்களைப் பிரதிநிதித்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்த மஹிந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் பல உதவிகளைச் செய்துள்ளது. அதற்கு நான் நன்றி கூறுகின்றேன்.

இதேவேளை இன்று தெற்கிலே பரபரப்பாகப் பேசப்படுவது இனவாதமே. நாம் எமது பிரதேசத்திலே எங்களுடைய மக்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பதை எடுத்துக்கூறுவோமாக இருந்தால் நாம் தமிழீழ விடுதலைப்புலிகளாக முத்திரை குத்தப்படுகின்றோம்.

இன்று வடக்கு கிழக்கிலே இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களைப் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. அதேபோல் கடந்த வாரத்திலே யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனை துன்பங்களுக்கிடையில் எமது மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

என்னுடைய மக்களை நான் காப்பாற்ற வேண்டும். அதற்காக அமைச்சுப் பதவியை இழந்ததில் எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன். எதற்கும் பயப்பட மாட்டேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/?p=700285-மக்களுக்காக-எந்த-எதிர்ப்பையும்-சந்திக்கத்-தயார்!-–-விஜயகலா-மகேஸ்வரன்

  • கருத்துக்கள உறவுகள்

36671137_1970838092960441_42381744709985

  • கருத்துக்கள உறவுகள்

இந்தம்மா 'மண்ணெண்ணை' மகேஸ்வரனோட சம்சாரம்தானே..?

இதென்ன திடீரென புலிகள் மீண்டும் வரவேண்டுமென கூவுது..?

யுஎன்பி கட்சி தமிழர்களை அழிக்க முதலில் நின்ற கட்சியாயிற்றே..?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

இந்தம்மா 'மண்ணெண்ணை' மகேஸ்வரனோட சம்சாரம்தானே..?

இதென்ன திடீரென புலிகள் மீண்டும் வரவேண்டுமென கூவுது..?

யுஎன்பி கட்சி தமிழர்களை அழிக்க முதலில் நின்ற கட்சியாயிற்றே..?

அரசியலில்  இதெல்லாம்  சகசமுங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

இதென்ன திடீரென புலிகள் மீண்டும் வரவேண்டுமென கூவுது..?

புலிகள் இருக்கும் போது எந்த ஒரு வயசுப் பெண்ணும் எவ்வளவு நகை போட்டுக் கொண்டும் இரவு பகல் எந்த நேரமானாலும் நடமாடக் கூடிய நிலைமை இருந்தது.

இதை பிபிசி தொடக்கம் பல்வேறு ஊடகங்கள் அப்பப்ப சொல்லிக் கொண்டே வந்தன.

சண்டை முடிந்த பின் எல்லோருமே வாயை மூடிக் கொண்டார்கள்.ஆனால் எல்லோருக்குமே பழைய காலத்தை கண்ணால் பார்த்துவிட்டு நிகழ்காலத்தில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது புலிகளைப் பிடிக்காதவர்கள் கூட தங்களையும் தங்கள் சமூகத்தையும் காப்பாற்ற புலிகள் தான் சரி என்று எண்ணுகின்றனர்.

இன்னமும் அடக்கு முறைக்குள் இருக்கும் ஒரு இனத்தால் கண்ணால் கூட ஜாடை காட்டக் கூடாத நிலைமை.

இந்த அம்மா பழைய நிலையை ராஜதந்திர ரீதியாக சொல்லாமல் கள்ளுக்கடையில் பேசுவது போல் பேசிவிட்டா.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு எது தேவையோ அதை செய்வதை மறந்துவிட்டு இல்லையென்றால் மக்களின் தேவையை அரசாங்கத்தில் முன் வைத்து அது நிறைவேற்ற தவறிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறி இருப்பாராக இருந்தால் சொல்லி இருக்கலாம் மக்களுக்காக பதவியை துறந்தார் என்று சொல்லி ஆனால் அம்மணியோ யாரோ ஒருவரின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால நிற்கிறார் போல பட்சி சொல்லுது:35_thinking: 

  • கருத்துக்கள உறவுகள்

 

10 minutes ago, ஈழப்பிரியன் said:

புலிகள் இருக்கும் போது எந்த ஒரு வயசுப் பெண்ணும் எவ்வளவு நகை போட்டுக் கொண்டும் இரவு பகல் எந்த நேரமானாலும் நடமாடக் கூடிய நிலைமை இருந்தது.

ம்ம்..கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்! ஒரு பயனும் இல்லை!!

1 hour ago, ஈழப்பிரியன் said:

புலிகள் இருக்கும் போது எந்த ஒரு வயசுப் பெண்ணும் எவ்வளவு நகை போட்டுக் கொண்டும் இரவு பகல் எந்த நேரமானாலும் நடமாடக் கூடிய நிலைமை இருந்தது.

இதை பிபிசி தொடக்கம் பல்வேறு ஊடகங்கள் அப்பப்ப சொல்லிக் கொண்டே வந்தன.

இது கொஞ்சம் ஓவர் அண்ணை

புலிகள் பவுன் தரவில்லை என்று காதையே வெட்டி நகையை திருடியதையும் நாம் அறிவோம் + அந்த பெண்ணையும் நாம் அறிவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

இது கொஞ்சம் ஓவர் அண்ணை

புலிகள் பவுன் தரவில்லை என்று காதையே வெட்டி நகையை திருடியதையும் நாம் அறிவோம் + அந்த பெண்ணையும் நாம் அறிவோம்.

அது எவ்வாறு  திருட்டு என்று கருதப்படலாம்?

ஒரு வகையான வரி தானே.

அது செய்யப்பட்ட முறையில் ஆயிரம் குறைகள், பிழைகள் கண்டுபிடிக்கலாம் அல்லது சம காலத்தில் பின்பற்றப்படும் வரி வசூலிப்பு  முறையோடு ஒத்து வராதது மிகவும் கொடூரமானதாக இருக்கலாம்.

அதற்காக, புலிகள் அப்படி தங்கம் எடுத்ததை நியாயப்படுத்த வரவில்லை. அதை திருட்டு என்பதை ஏற்ற முடியாது என்றே கருதுகிறேன்.

Tax in its own  form is an extortion.  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

இது கொஞ்சம் ஓவர் அண்ணை

புலிகள் பவுன் தரவில்லை என்று காதையே வெட்டி நகையை திருடியதையும் நாம் அறிவோம் + அந்த பெண்ணையும் நாம் அறிவோம்.

இப்படி முட்டையிலை முடி தேடித்தான் கோவணத்துடன் நிக்கிறம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.