Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் லண்டனில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் மூவர் பிரித்தானிய காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை உயர்தானிகர் ஒருவர் வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே பிரித்தானிய காவற்துறை இவர்களை கைது செய்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிரித்தானியாவுக்கு வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று இரவு 8 மணிக்கு ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றினார். இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினை ஏந்தியவாறு, “தமிழின படுகொலை சிங்கள பிரதமரே வெளியேறு” என்றவாறு கோசமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை அங்கு வந்திருந்த இலங்கை உயர்தானிகர் ஒருவர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவற்துறையினருக்கு பயங்கரவாதிகளின் கொடியினை ஏந்தியுள்ளார்கள் என்ற தகவலை வழங்கியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

uk-arrest2.jpg?resize=800%2C524

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் புலிக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை, பிரித்தானிய காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மாலை 19.00 மணிமுதல் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய இனப்படுகொலை புரிந்த இலங்கை இராணுவத்தினரை யுத்தக்குற்றசாட்டிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாத்து வருகிறார்.

நாட்டின் பிரதமர் என்றவகையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது, அது குறித்து எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனம் காத்துவருகிறார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இதுவரையில் எந்தவொரு தீர்வினையும் வழங்கவில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் அங்கு தனது உரையின் போது ‘ 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்கள் எவரும் உயிருடன் இல்லை என தெரிவித்திருந்தார்.

சரணடைந்தவர்கள் உயிருடன் இல்லையெனில் அவர்கள் கொல்லப்பட்டார்களா? அல்லது என்ன ஆனார்கள் என்பது தொடர்பில் ரணில் எந்தவொரு கருத்தையும் சொல்வதை தவிர்த்து வருகிறார்.

என்ற குற்றச்சாட்டுக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினர் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் ரணிலுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்காளல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.com/

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் இல் இவரது சகோதரனே ரணிலின் கூட்டம் ஒன்முறை முன்னர் ஒழுங்குபடுத்தியவர். 

ஆமா எந்த தேர்தலில் நின்று எத்தனை வாக்கு வாங்கி இவர் அமைச்சர் ஆனவர்?

  • கருத்துக்கள உறவுகள்

8 hours ago, பிழம்பு said:

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர்

பு.மக்களே, (புலம்பெயர் மக்களே)  இதே ரணில், விஜயகலா, ரேஜினாலட் குறே போன்றவர்களையே, யாழில் தாயக மக்கள் பாடசாலை நிகழ்வுகள், கலை விழாக்கள், சமூக நிகழ்வுகள், திருவிழாக்கள் போன்றவற்றிற்கு அழைக்கின்றார்கள், மதிப்பு கொடுக்கின்றார்கள், ஏன் அவர்கள்  தேர்தலில் வாக்கு கேட்கும்போது அள்ளிப், புள்ளடி போடுகின்றார்கள். தாங்கள் தலைவனாகவும் ஏற்றுக் கொள்கின்றார்கள். 

அவர்களே அப்படி ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் ஏன் இப்படி கத்தி குளருகின்றீர்கள்? ஏன் இந்த குளிரில் குத்தி முறிகின்றீர்கள்?  ஊழையிடுகின்ரீர்கள்? இதால என்ன கிடைக்கின்றது? ஒரே சமூகத்தை சேர்ந்த தமிழர்களில் உள்ளூரில் வாழ்பவர்கள் ரணிலை தலைவனாக ஏற்குக்கொள்கின்றார்கள்? அதேவேளை, வெளினாட்டு பு.மக்கள் எதிர்ர்கின்றார்கள்? என்ன முரண்பாடு?

Edited by colomban

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, colomban said:

பு.மகனே(புலம்பெயர் மகனே) அங்கிருக்கும் தமிழ் மக்கள் ஏதோ ஒரு உறுத்தலுடனேயே வாழ்கின்றார்கள். எதிர்த்து கதைத்தால் என்ன ஆகுமென்று அவர்களுக்கே தெரியாத நிலையில் வாழ்கின்றார்கள். ஆக மிஞ்சி கதைத்தால் வாள்வெட்டு கும்பலுக்கும் முகம் கொடுக்க வேண்டி வரும். ஊரோடு ஒத்து போகவேண்டு என்ற நிலையிலையே மக்களின் மனப்பான்மை இருக்கின்றது.

சனநாயகம்/பத்திரிகை சுதந்திரம் இல்லாத நாட்டில் மக்கள் வாய்திறக்க முடியாமல் இருக்கும் போது......சனநாயக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தம் உறவுகளுக்காக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். இதில் பு.மகனான(புலம் பெயர்ந்த மகன்) உங்களுக்கேன் வருடுகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

பு.மக்களே, (புலம்பெயர் மக்களே)  இதே ரணில், விஜயகலா, ரேஜினாலட் குறே போன்றவர்களையே, யாழில் தாயக மக்கள் பாடசாலை நிகழ்வுகள், கலை விழாக்கள், சமூக நிகழ்வுகள், திருவிழாக்கள் போன்றவற்றிற்கு அழைக்கின்றார்கள், மதிப்பு கொடுக்கின்றார்கள், ஏன் அவர்கள்  தேர்தலில் வாக்கு கேட்கும்போது அள்ளிப், புள்ளடி போடுகின்றார்கள். தாங்கள் தலைவனாகவும் ஏற்றுக் கொள்கின்றார்கள். 

அவர்களே அப்படி ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் ஏன் இப்படி கத்தி குளருகின்றீர்கள்? ஏன் இந்த குளிரில் குத்தி முறிகின்றீர்கள்?  ஊழையிடுகின்ரீர்கள்? இதால என்ன கிடைக்கின்றது? ஒரே சமூகத்தை சேர்ந்த தமிழர்களில் உள்ளூரில் வாழ்பவர்கள் ரணிலை தலைவனாக ஏற்குக்கொள்கின்றார்கள்? அதேவேளை, வெளினாட்டு பு.மக்கள் எதிர்ர்கின்றார்கள்? என்ன முரண்பாடு?

பு.மக்களே....என்று விழிக்குமளவுக்கு.....எவ்வளவு வக்கிரம்....அவர்கள் மீது உங்களுக்கு உள்ளது என்பது புலனாகின்றது, கொழும்பான்!

முன்பு ஒருவர் இப்படித்தான் புலம் பெயர் தமிழர்களை...விழிக்கும் போது...புலன் பெயர் தமிழர் என்று விழிப்பார்!

அவரிடமும் அவ்வாறு அழைப்பது தவறு என்று சுட்டிக்காட்டியிருந்தேன்!

என்ன செய்வது....எல்லாருக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாக...வாழவேண்டியது தமிழனின் விதி...!

பு.மக்களின் மீது எதற்காக உங்களுக்கு....இவ்வளவு கோபம்!

புலம் பெயர்ந்தது அவர்களின் தெரிவல்ல.....அவர்கள் மீது புலம் பெயர்வு திணிக்கப்பட்டது என்பது தான் உண்மை!

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை

3 hours ago, colomban said:

பு.மகனே, (புலம்பெயர் மகனே) அங்கு இருப்பவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதில்லையா? விக்கினேஸ்வரன் உட்பட சம்பந்தன் சுமந்திரனுக்கு எதிராக கூட ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளது. அப்போ அவர்கள் ஏன் குத்தி முறிகிறார்கள்.

பு.மகனே சற்று சிந்திக்கவும் பழகணும் பு.மகனே

  • கருத்துக்கள உறவுகள்

Colomban அவர்களே, நீங்கள் நினைக்கும் அடையவேண்டும் என்பதை தான் சொறி சிங்கள   அரசு, ஏன் கிந்தியா உட்பட சர்வதேச சக்திகள் எதிர்பார்க்கின்றன.

அதாவது, ஈழத்தமிழர்கள் இடம் உள்ள கட்டமைப்பு மற்றும் அறிவு அடிப்படையில் ஓர் வெற்றிடத்தை ஏற்ப்படுத்தி,   புலம் பெயர் தமிழர்கள் என்ற அடையாளத்தை கொடுத்து இலங்கைத் தீவின் பூர்வீக்கத்தி தமிழ் தேசத்தை புவியலால் இரு கூறாகப் பிரித்து, அந்த இரு மக்கட் தொகுதிக்கும் வேவேவ்று நலன்களும், தேவைகளும் உண்டு, ஆதலால் புலம் பெயர் தமிழர்கள் இலங்கைதீவில் உள்ள ஈழத்து தமிழ் தேசத்தை பிரதிபலிக்க முடியாது என்பதை அடைவாதத்திற்கு பகீரதப் பிரயத்தனம் செய்தார்கள்.  

உண்மையில், புலிகளின் அழிவுதான் அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்தார்கள் (counter insurgency basis) எல்லாம் அடங்கி விடும் என்று.   இதில் முக்கியமாக ICG.

ஆனால், மே 2009 இல் இருந்து அடுத்த மாவீரர் தினத்திற்குள் நீங்க சொல்லும் புலம் பெயர் தமிழர்கள் இரு கட்டமைப்பு, கோட்பாடு  அடிப்படையிலான உரிமனுக்கான போராட்ட வடிவத்தை, எவ்வளுவு பலவீனமானதாக இருப்பினும் செய்து முடித்தார்கள்.  

ஏனெனில், கிந்தியா மேற்கிடம்  பொதுவாக சொன்னது, புலிகளே தீர்விட்ற்கு தடையாக உள்ளனர் என்று.

இலங்கைத் தீவிலும், தமது சொல்லிற்கு ஆடக கூடியவர் என்று நினைத்தே சி.வி இ கொண்டு வந்தார்கள். அவரும் மென்போக்கில் தொடங்கி தற்போதைய  நிலைக்கு வந்துள்ளார்.

இழந்த ஆயுத பலத்தை கூட கட்டி எழுப்பலாம். ஏனெனில், ஆயுத பழத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கம் மிக கூடியயழுவு உள்ளதால்.

ஆயினும், நிறுவனமயமப்படுத்தப்பட்ட வன் வலுவை பிரயோகிப்பதத்திற்கான  அனுபவ ஆற்றல் உள்ள மனித வலுவை இழந்ததே மிகப் பெரிய இழப்பாகும். அதை ஈடு செய்வதே மிக கடினம், ஆனால் மனம் வைத்தால் முடியும், புற சூழ்நிலைகள் பொருந்திவருமிடத்து.  

ஆனால், நீங்கள் சொல்லும் முறையில் (அதுவென்றே என்னக்கு விளக்கமாக உள்ளது) வெவேறு அடையாளம், நலன்கள், என்ற முறையில் ஈழ தமிழ் தேசம் பிரிக்கப்பட்டால் அது ஏறத்தாழ மீட்க முடியாது ஆகும்.

எனவே புலம் பெயர் தமிழர்கள் என்று வகைப்படுத்துவதை இயலுமானவரை கைவிடுங்கள்.

விக்யரின் அணுகுமுறையை வதனித்து பாருங்கள், அவர் எல்லோரும் ஓர் தேச  மக்களே என்பதை செயல் வடிவம் கொடுப்பதத்திற்கு தன்னாலான முயறசிகள்;ஐ செய்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

பு.மக்களே....என்று விழிக்குமளவுக்கு.....எவ்வளவு வக்கிரம்....அவர்கள் மீது உங்களுக்கு உள்ளது என்பது புலனாகின்றது, கொழும்பான்!

முன்பு ஒருவர் இப்படித்தான் புலம் பெயர் தமிழர்களை...விழிக்கும் போது...புலன் பெயர் தமிழர் என்று விழிப்பார்!

அவரிடமும் அவ்வாறு அழைப்பது தவறு என்று சுட்டிக்காட்டியிருந்தேன்!

என்ன செய்வது....எல்லாருக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாக...வாழவேண்டியது தமிழனின் விதி...!

பு.மக்களின் மீது எதற்காக உங்களுக்கு....இவ்வளவு கோபம்!

புலம் பெயர்ந்தது அவர்களின் தெரிவல்ல.....அவர்கள் மீது புலம் பெயர்வு திணிக்கப்பட்டது என்பது தான் உண்மை!

புங்கையூரான்,

மன்னிக்கவும். நீங்கள் நல்லதொரு கருத்தாளர் நான் எதுவித வக்கிரமும் இன்றிதான எழுதினேன். இத்தகைய வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியுருந்தால் மன்னிக்கவும் இனிமேல் இத்தகைய வார்த்தைகளை தவிர்க்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களோடு கதைத்து அவர்களை நம் பக்கம் மாத்துவதை விட்டுட்டு இப்படி எத்தனை நாளைக்கு எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப் போயினம் ?...செய்து என்னத்தை கண்டினம் ?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2018 at 1:19 AM, colomban said:

புங்கையூரான்,

மன்னிக்கவும். நீங்கள் நல்லதொரு கருத்தாளர் நான் எதுவித வக்கிரமும் இன்றிதான எழுதினேன். இத்தகைய வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியுருந்தால் மன்னிக்கவும் இனிமேல் இத்தகைய வார்த்தைகளை தவிர்க்கின்றேன். 

கொழும்பான்... இப்போது நீங்கள் எழுதிய இந்த வார்த்தைகள் "இத்தகைய வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியுருந்தால் மன்னிக்கவும் இனிமேல் இத்தகைய வார்த்தைகளை தவிர்க்கின்றேன்"

மனதை எவ்வளவு இலகுவாக்குகிறது தெரியுமா?
நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...சசி வர்ணம்!

தவறுகள் விடுபவன்...மனிதன்!

அது தவறு என்று தெரிந்ததும்...அதற்காக மனம் வருந்துபவன்....மா மனிதன்!

அது தவறு என்று தெரிந்தும்...அதை நியாயப் படுத்துபவன்....தமிழ் அரசியல் வாதி.!?

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான்...மா மனிதன்! ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.