Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஞ்சாப்பை நிலைகுலைய வைத்த தசரா ரயில் விபத்து.. ரயில் மோதும் பரபரப்பு காட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப்பை நிலைகுலைய வைத்த தசரா ரயில் விபத்து.. ரயில் மோதும் பரபரப்பு காட்சிகள்

By
 nadunadapu
 -
October 19, 2018
 
பஞ்சாப் அமிர்தசரஸில் ரயில் மோதி ஏற்பட்ட விபத்து வீடியோவாக வெளியாகி உள்ளது.
 
 தசரா விழா பஞ்சாப்பில் சோகத்தில் முடிந்து இருக்கிறது. அங்கு விழா கொண்டாடிய மக்கள் மீது ரயில் மோதியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள ஜோரா பதாக் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பதான்கோட்டில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் தண்டவாளத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
 
ரயில் தண்டவாளத்திற்கு அருகே தசரா விழாவிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ராவண வதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
 
இதில் ரயில் பாதைக்கு அருகேயே வைத்து ராவண உருவத்தை கொளுத்தி இருக்கிறார்கள். நுற்றுக்கணக்கான மக்கள் அங்கு இருந்துள்ளனர்.
 
ரயில் தண்டவாளம் அருகே பல நூறு மக்கள் இருந்துள்ளனர். அப்போது அதில் இருந்து வெடிகள் வெடித்ததில் மக்கள் ரயில் பாதையை நோக்கி ஓடியுள்ளார்.
 
அந்த சமயம் பார்த்து ரயில் சரியாக அந்த இடத்திற்கு வந்துள்ளது. தண்டவாளத்தில் இருந் மக்கள் மீது ரயில் மோதியுள்ளது.
 
இந்த விபத்தில் 50 பேர் வரை சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை 30 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. மக்கள் வெடிக்கு பயந்து ஓடுவதும், அப்போது ரயில் வருவதும் வீடியோவாக பதிவாகி உள்ளது.

http://nadunadapu.com/?p=154434&fbclid=IwAR1KnqW4Xz6vFS0psDVrJFO_B12eRpJjKIUu7j2_TulOpdzYtkT2ejFDIX8

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையான நிகழ்வு..... கொஞ்சமும் முன் யோசனையின்றி செய்திருக்கின்றார்கள்......!

  • கருத்துக்கள உறவுகள்

புராணத்தை அப்படியே விடுங்கப்பா ..  வருடா வருடம் ராவண வதம் செய்வீனம் . உயிர் இழந்தோர் ஆன்மா சாந்தி அடையட்டும் ?

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலி

October 19, 2018

1 Min Read

Amritsar3.jpg?resize=660%2C450

பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்; பகுதியில் இடம்பெற்ற தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் இன்று தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் பகுதியில் தசரா விழா கொண்டாடப்பட்ட போது எதிர்ப்பாராத விதமாக ஏற்பட்ட இந்த புகையிரத விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்பதுடன் மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளன. சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்வதுடன், மீட்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Amritsar.jpg?resize=300%2C168

http://globaltamilnews.net/2018/99960/

  • கருத்துக்கள உறவுகள்

ராவணன் சாபம் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Nathamuni said:

ராவணன் சாபம் ?

தீபாவளிக்கு கிடாய் ஆடு அறுக்கத்தான் இருக்கு :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புராணத்தை அப்படியே விடுங்கப்பா ..  வருடா வருடம் ராவண வதம் செய்வீனம் . உயிர் இழந்தோர் ஆன்மா சாந்தி அடையட்டும் ?

2 hours ago, Nathamuni said:

ராவணன் சாபம் ?

24 minutes ago, குமாரசாமி said:

தீபாவளிக்கு கிடாய் ஆடு அறுக்கத்தான் இருக்கு :grin:

இலங்கை வேந்தன் இராவணனுக்கு.... கொண்டாட்டமா... வைக்கிறீங்க. நாசமாய்... போங்க.
நல்ல  காலம், நாங்கள்  இராமனுக்கு... ஒரு கொண்டாட்டமும்  வைக்கவில்லை. 
அதுகும்... விரைவில், வருமோ... என்ற, அச்சம்  உள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் கோர விபத்தில் மக்களை காப்பாற்ற முயன்ற ராவண வேடமிட்டவர் ரயிலில் சிக்கி பலி

amritsar-man-who-played-ravana-died-tryi

அமிர்தசரஸ்: பஞ்சாப் கோர விபத்தில் மக்களை காப்பாற்ற முயன்ற ராவண வேடத்தில் நடித்த தல்பீர் சிங் ரயில் மோதி இறந்தார்.பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள ஜோரா பதாக் பகுதியில் தசரா விழாவையொட்டி ராவண வதம் நடைபெற்றது.

அப்போது ராவணன் உருவபொம்மையை எரித்துக் கொண்டிருந்தனர்.இன்னொரு பக்கம் பட்டாசுகளும் வெடித்தன. அப்போது பெரிய பெரிய தீ வந்து விழுந்ததைப் பார்த்த மக்கள் பயந்து ஓடியுள்ளனர். அருகே இருந்த ரயில்வே தண்டவாளத்தின் மீது மக்கள் ஏறி ஓடியபோது, ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் அவர்கள் மீது மோதியது.இந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது. இந்த கோர விபத்து குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோரா பதாகில் ரயில்வே டிராக் அருகே நின்று கொண்டு ஏராளமானோர் தசரா விழாவையும் வாண வேடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ராவணன் வேடமிட்டவர் தல்பீர் சிங். இவர் தனது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பட்டாசு வெடிப்பதை பார்ப்பதற்காக ஜோதா பதாக் நோக்கி நடந்து சென்றார். அப்போது அங்கு ஒரு ரயில் வேகமாக வந்து கொண்டிருந்ததை கவனித்த தல்பீர் சிங், ரயில் வருவதை கண்டு கூச்சலிட்டார்.அதற்குள் அவர் ரயிலில் சிக்கி பலியாகிவிட்டார். விபத்தில் இருந்து மற்றவர்களை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை பற்றி கவலைப்படாமல் குரல் கொடுத்த தல்பீர் சிங்குக்கு மனைவியும் 8 மாதக் குழந்தையும் உள்ளனர்.தல்பீர் சிங்கின் தாய், தனது மருமகளுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தல்பீரின் தாய் கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளாக சுற்றியுள்ள கிராம மக்கள் ரயில்வே தண்டவாளத்துக்கு 50 மீட்டர் தொலைவில் உள்ள ஜோரா பதாக் பகுதியில் கூடி விழாவை பார்வையிடுவது வழக்கம் என்றார். அப்போது மனைவி கண்கலங்கினார்.

https://tamil.oneindia.com/news/india/amritsar-man-who-played-ravana-died-trying-save-people-332356.html

டிஸ்கி: சிங்குகளுக்கும் ராவணனுக்கும் என்ன சம்பந்தம் ரெல்..மீ ? எங்கயாவது குரு நானக் குறுத்துவாரா என்று போக வேண்டியா..

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு காலமும் வட இந்தியர்கள் இராவணன் செத்த நாளை தீபாவளியாக கொண்டாடுவார்கள் என்று நினைத்தேன் ?

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி என்றால் இருளின் மீதான ஒளியின் வெற்றியென்றல்லவா சொன்னார்கள் ? இதற்குள் ராமனும் இராவணனுன் எப்படி வந்தார்கள் ?

ஓ, புரிகிறது . இராமன், பார்ப்பணன் - ஒளி,            இராவணன், தமிழன்  - இருள்.

On 10/20/2018 at 3:19 AM, விசுகு said:

பஞ்சாப்பை நிலைகுலைய வைத்த தசரா ரயில் விபத்து.. ரயில் மோதும் பரபரப்பு காட்சிகள்

By
 nadunadapu
 -
October 19, 2018
 
பஞ்சாப் அமிர்தசரஸில் ரயில் மோதி ஏற்பட்ட விபத்து வீடியோவாக வெளியாகி உள்ளது.
 
 தசரா விழா பஞ்சாப்பில் சோகத்தில் முடிந்து இருக்கிறது. அங்கு விழா கொண்டாடிய மக்கள் மீது ரயில் மோதியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள ஜோரா பதாக் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பதான்கோட்டில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் தண்டவாளத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
 
ரயில் தண்டவாளத்திற்கு அருகே தசரா விழாவிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ராவண வதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
 
இதில் ரயில் பாதைக்கு அருகேயே வைத்து ராவண உருவத்தை கொளுத்தி இருக்கிறார்கள். நுற்றுக்கணக்கான மக்கள் அங்கு இருந்துள்ளனர்.
 
ரயில் தண்டவாளம் அருகே பல நூறு மக்கள் இருந்துள்ளனர். அப்போது அதில் இருந்து வெடிகள் வெடித்ததில் மக்கள் ரயில் பாதையை நோக்கி ஓடியுள்ளார்.
 
அந்த சமயம் பார்த்து ரயில் சரியாக அந்த இடத்திற்கு வந்துள்ளது. தண்டவாளத்தில் இருந் மக்கள் மீது ரயில் மோதியுள்ளது.
 
இந்த விபத்தில் 50 பேர் வரை சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை 30 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. மக்கள் வெடிக்கு பயந்து ஓடுவதும், அப்போது ரயில் வருவதும் வீடியோவாக பதிவாகி உள்ளது.

http://nadunadapu.com/?p=154434&fbclid=IwAR1KnqW4Xz6vFS0psDVrJFO_B12eRpJjKIUu7j2_TulOpdzYtkT2ejFDIX8

போங்கடா, போய் புள்ளைங்கள படிக்க அனுப்புங்கடா.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

நான் இவ்வளவு காலமும் வட இந்தியர்கள் இராவணன் செத்த நாளை தீபாவளியாக கொண்டாடுவார்கள் என்று நினைத்தேன் ?

தீபாவளி என்பது....நரகாசுரன் என்கின்ற....நம்ம...ஆளை..முருகன் கொன்ற நாள் !

அதனை...ஒரு விழாவாகக் கொண்டாடும் படி....நரகாசுரனே...முருகனிடம்...சாகும் தருவாயில் கொண்டாடும் படி...கேட்டுக்கொண்டதாக..ஐதீகம்!

சாகும் போதம்...நம்ம ஆள்...எவ்வளவு நல்லவனாகச் செத்திருக்கிறான் என்று பாருங்கள்!

தசரா விழா....விஜதசமியை ஒட்டிக் கொண்டாடப் படுகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

நரகாசுரன்  பூமாதேவியின்  மகன் புங்கை. சத்யபாமாதேவியின் உதவியுடன் கிருஷ்ணனே சக்கராயுதத்தால்  அவனை வதம் செய்தார். முருகன் அதுக்கு முன் வள்ளியை மனம் செய்து தெய்வானையுடன் புடுங்குபட்டுக்கொண்டு இருந்தவர்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நரகாசுரன்  பூமாதேவியின்  மகன் புங்கை. சத்யபாமாதேவியின் உதவியுடன் கிருஷ்ணனே சக்கராயுதத்தால்  அவனை வதம் செய்தார். முருகன் அதுக்கு முன் வள்ளியை மனம் செய்து தெய்வானையுடன் புடுங்குபட்டுக்கொண்டு இருந்தவர்.....!  tw_blush:

நன்றி, சுவியர்!

அப்போ முருகன் கொன்றது.பத்மாசுரன் போல உள்ளது! விளக்கீடு.,, இதனால் கொண்டாடப் படுகின்றது போல உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, புங்கையூரன் said:

நன்றி, சுவியர்!

அப்போ முருகன் கொன்றது.பத்மாசுரன் போல உள்ளது! விளக்கீடு.,, இதனால் கொண்டாடப் படுகின்றது போல உள்ளது!

நரகாசுர வதத்தை கொண்டாடுவது தீபாவளி.....!

விளக்கீடு என்பது விஷ்ணுவும் பிரம்மாவும் தாங்கள்தான் பெரியவர் என்று அடக்கமின்றி அடம் பிடிக்க ஆதிசிவன் ஆஜராகி விண்ணுக்கும் மண்ணுக்கும் ஜோதியாய் உயர்ந்து  நிக்க பிரம்மா அன்னமாக வானுக்கும், விஷ்ணு வராகமாகவும் பூமிக்கும் சென்று அடிமுடி காணாது திரும்பி வந்து நின்ற நாள் விளக்கீடு என்று சொல்லுவர் ......!

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்ஷத்திரத்தில் பவுர்ணமியில் திருவண்ணாமலையில் தடபுடலாக தீபம் ஏற்றப்படும்......!

ஆறு பிள்ளைகளாய் கார்த்திகை நட்ஷத்திரத்தில் பிறந்த முருகனை ஆறு கார்த்திகை பெண்கள் வளர்க்க  அன்னை உமாதேவி வந்து சேர்த்தணைத்து ஒரு திரு முருகனாய் ஆகியதும் அந்நாளே. அதனால் குமராலய தீபம் என்று முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும்......!  tw_blush:

( பத்மாசுரன் சூரனின் பிரதர். அவரைக் கொன்றது சம்பவம், மேலே சொன்னது சரித்திரம்......! ).

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தசரஸ் விபத்து: கடைசி உரையாடலும், 58 பேர் மரணமும் - முழுமையான தொகுப்பு

அமிர்தசரஸ் விபத்து: இது வரை நடந்தது என்ன?படத்தின் காப்புரிமை NARINDER NANU

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ராம்லீலா கொண்டாட்டத்தின் போது ராவண தகன நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் 58 பேர் பலியாகி உள்ளதாக அமிர்தசரஸ் காவல்துறை துணை ஆணையர் கமல்தீப் சிங் சங்கா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சுமார் ஆறரை மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற தண்டவாளம்

முன்னதாக இந்த விபத்தில் 62 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின் 59 என்று கூறப்பட்டது. இப்போது இந்த எண்ணிக்கை 58 ஆக குறைந்துள்ளது.

விபத்து எப்படி நடந்தது?

தோபி காட் அருகில் ராவண உருவ பொம்மையை எரித்த போது, எதிர்பாராத விதமாக அது கீழே விழந்தது. அந்த இடத்திற்கு அருகில் ரயில்வே கேட் இருந்தது. நெருப்பில் இருந்து தப்பிக்க ரயில்வே கேட் பக்கமாக மக்கள் ஓடியபோது, அங்கு ரயில் வந்ததில் அதில் அடிபட்டு பலரும் உயிரிழந்ததாக பிபிசி செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின் தெரிவிக்கிறார். ரயில் தடத்தில் பலரின் உடல்கள் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமிர்தசரஸ் விபத்து: இது வரை நடந்தது என்ன?படத்தின் காப்புரிமை Getty Images

கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமிர்தசரஸ் விபத்து: இது வரை நடந்தது என்ன?படத்தின் காப்புரிமை Getty Images

ராவணனாக நடித்தவரும் இறந்தார்

ராவணன் உருவம் எரிந்த அதே நேரத்தில் ராவணனாக நடித்தவரும் இறந்துள்ளார்.

ராவணனாக நடித்த தல்பிர் சிங்

வழக்கமாக, ராமனாக நடித்த தல்பிர் சிங், அவரது நண்பர்களின் வற்புறுத்தலின்பேரில் இந்த ஆண்டு ராவணன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

நடித்து முடித்த பின்னர், மக்களை நோக்கி குனிந்து வணங்கிய அவர், ராணவனின் உருவம் தீயில் எரிவதை பார்ப்பதற்கு தண்டவாளத்திற்கு அருகிலுள்ள கூட்டத்தோடு வந்து சேர்ந்துள்ளார்.

அனுமதி பெற்று நடந்ததா தசரா விழா?

அமிர்தசரஸ் விபத்து ஏற்பட்டதையடுத்து, தோபி காட் பகுதியில் தசரா நிகழ்ச்சி கொண்டாட அந்த ஒருங்கிணைப்பாளர்கள், காவல்துறை மற்றும் நகராட்சியிடம் உரிய அனுமதி பெற்றார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமிர்தசரஸ் விபத்து: இது வரை நடந்தது என்ன?படத்தின் காப்புரிமை Getty Images

இந்த சம்பவம் நடைபெற்றவுடன், தோபி காட்டில் தசரா நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து அமிர்தசரஸ் காவல்துறையினர் தெளிவான பதில் கொடுப்பதை தவிர்த்து வருகின்றனர்.

எனினும், அந்த நிகழ்ச்சிக்கு பா

துகாப்பு வழங்க தனது அலுவலகம் அனுமதி வழங்கியதாக இணை ஆணையர் அம்ரிக் சிங் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறாத பட்சத்தில் காவல்துறையின் அனுமதி செல்லாமல் போய்விடும்.

"தசரா குறித்து உரையாடியதே நான் என் அக்காவுடன் பேசிய கடைசி பேச்சு"

அமிர்தசரஸில் 58 உயிர்களை பலிவாங்கிய சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் ராகுல் டோக்ரா அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.

சம்பவம் நடந்த இடமான ஜோரா ரயில் தண்டவாள பாதையில் தசரா விழாவை காணச் சென்ற தனது அக்கா மற்றும் அவரது குடும்பத்தினரை இரவு முழுவதும் தேடியுள்ளார் ராகுல். இன்று காலை சிவில் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்தியில் தனது மாமா, 7 வயதுடைய தனது அக்கா மகள் மற்றும் 12 வயதுடைய அக்கா மகன் ஆகியோரின் உடலை அடையாளம் கண்டுள்ளார். இருப்பினும் அவரது அக்காவை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

"வெள்ளிக்கிழமை மாலை, நான் எனது சகோதரியின் வீட்டிற்கு சென்றேன். அவர்கள் தசரா விழாவை காண தயாராகிக் கொண்டிருந்தனர். அதுகுறித்த எனது பேச்சுதான் அவர்களுடன் நான் கடைசியாக பேசப்போவது என்பது எனக்கு தெரியாது" என மருத்துவமனையில் உடல்களை அடையாளம் கண்ட ராகுல் தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-45938994

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

நரகாசுர வதத்தை கொண்டாடுவது தீபாவளி.....!

விளக்கீடு என்பது விஷ்ணுவும் பிரம்மாவும் தாங்கள்தான் பெரியவர் என்று அடக்கமின்றி அடம் பிடிக்க ஆதிசிவன் ஆஜராகி விண்ணுக்கும் மண்ணுக்கும் ஜோதியாய் உயர்ந்து  நிக்க பிரம்மா அன்னமாக வானுக்கும், விஷ்ணு வராகமாகவும் பூமிக்கும் சென்று அடிமுடி காணாது திரும்பி வந்து நின்ற நாள் விளக்கீடு என்று சொல்லுவர் ......!

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்ஷத்திரத்தில் பவுர்ணமியில் திருவண்ணாமலையில் தடபுடலாக தீபம் ஏற்றப்படும்......!

ஆறு பிள்ளைகளாய் கார்த்திகை நட்ஷத்திரத்தில் பிறந்த முருகனை ஆறு கார்த்திகை பெண்கள் வளர்க்க  அன்னை உமாதேவி வந்து சேர்த்தணைத்து ஒரு திரு முருகனாய் ஆகியதும் அந்நாளே. அதனால் குமராலய தீபம் என்று முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும்......!  tw_blush:

( பத்மாசுரன் சூரனின் பிரதர். அவரைக் கொன்றது சம்பவம், மேலே சொன்னது சரித்திரம்......! ).

நன்றி....சுவியர்!

நான் இப்ப என்ன நினைக்கிறன் எண்டால்.....,

நான் ஒரு நிறம் மாறாத 'அவுஸி'....ஆகிக் கொண்டு வாறன் போல கிடக்குது...!?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.