Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். களத்தில் கருத்துக் கணிப்பு: அடுத்த பிரதமர் யார்?

யாழ். களத்தில் கருத்துக் கணிப்பு: அடுத்த பிரதமர் யார்? 23 members have voted

  1. 1. எதிர் வரும் 14´ம் திகதி பாராளுமன்றம் கூடும் போது... பெரும்பான்மையை நிரூபித்து பிரதமர் ஆக யார் வருவார்?

    • ரணில் விக்கிரமசிங்க.
    • மஹிந்த ராஜபக்ச.
    • அன்று பாராளுமன்றத்தில்... இரு கட்சியினருக்கும், அமளி ஏற்பட்டு... புதிய தேர்தல் வைக்க சந்தர்ப்பம் உள்ளது.
  2. 2. இந்த வாக்கெடுப்பில்... தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு?

    • ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி.
    • மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.
    • நடு நிலைமை வகிப்பார்கள்.
  3. 3. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் யாருக்கு வாக்களிப்பார்கள்?

    • ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி.
    • மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி.
    • நடு நிலைமை வகிப்பார்கள்.

This poll is closed to new votes

Poll closed on 11/14/18 at 05:00

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto      Ãhnliches Foto  Ãhnliches Foto  

Bildergebnis für vote now gif

தற்போது... இலங்கையில் நடக்கும்,  பிரதமர் போட்டியில்..
யாழ். கள உறவுகளின் அரசியல் அறிவை நாடி பிடித்துப் பார்ப்பதற்கான  கருத்துக் கணிப்பு இது.
ஒரு கேள்விக்கு, ஒரு  வாக்கு மட்டுமே... போட முடியும்.

பொழுது போக்கான கருத்துக்  கணிப்பு என்பதால்... அனைவரும்  தயங்காமல் வாக்களிக்கலாம்.

இந்தக் கருத்துக் கணிப்பு... வரும்  14.11.18 அன்று,  ஐரோப்பிய நேரம் காலை ஆறு மணி வரை.. இடம் பெறும்.
உற்சாகமாக உங்கள் வாக்குகளை செலுத்தி, உங்கள்  கருத்துக்களையும்  எழுதுங்கள். 
regular.png

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின்....அரசியல் யாப்புப்படி....மகிந்தவின் நியமனம்....சட்டத்துக்குப் புறம்பானது!

எனவே...மகிந்த வெறும் பாராளுமன்ற உறுப்பினராக நின்று .... பெரும்பான்மையை நிரூபிப்பது தான் நியாயமானது!

அவர் வென்றால்...பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு....மக்களிடம் செல்வதே முறையானது!

அவர் பிரதமரானது.....சுப்பிரமணியன் சுவாமி...காட்டிய பின் வழி!

இப்படியான முன்னெடுப்புகள்...ஒரு இராணுவ ஆட்சிக்கே வழி வகுக்கும் என்பது எனது கருத்து!

இந்த விடயத்தில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற வேறு பாடின்றி....இலங்கையராக ஒன்று பட்டு...ஜனநாயககத்தைப் பலப் படுத்துவதே..காலத்தின் தேவையாகும்!

இந்த வாக்களிப்பில்...கலந்து கொண்டால்....மைத்திரியின் செயலை...ஆமோதிப்பது போலாகி விடும்! 

அதனால் வாக்களிக்கவில்லை!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இருவருமே தமிழர்களுடைய பிரதமர்கள் இல்லை. அதனால்தான் என்னவோ தீபாவளிக்கு சிறீ அவர்கள் கொழுத்தப்போட்ட சர வெடி சபபென்று ஆகிவிட்டதோ....? தீபாவளியும் தமிழர்களை இழிவுபடுத்தும் கொண்டாட்டம் என்று சொல்கிறார்களே.☹️  

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் எல்லாம் இலகுவாக இருக்கின்றன!

மகிந்ததான் பிரதமர். ரணில், மேற்குநாடுகள், இந்தியா, கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் எல்லாம் தலையால் நடந்தாலும் வீசப்படும் நோட்டுக்களுக்கு முன்னால் நின்று தாக்குப்பிடிக்கமாட்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையாக வாக்களிப்பு நடந்தால் ரனிலுக்கு பெரும்பான்மை உண்டு இன்றளவில். 

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவின் அரசியலமைப்பின் படி.. ஒரு சிங்களவன் தான்.. பிரதமராகவும் வருவான்.. ஜனாதிபதியாகவும் வருவான். வருபவன் எவனுமே.. தமிழர்களுக்கு ஒரு சல்லிக் காசும் உரிமைன்னு தரமாட்டான்.

அதிலும்.. சர்வாதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கிறன் ஒழிக்கிறன் என்று சந்திரிக்காவில் இருந்து மைத்திரி வரை முழுப் பொய் பேசி ஆட்சிக்கு வந்ததும்.. அந்தப் பதவியை காலம் பூரா அலங்கரித்து மக்களுக்கு நாட்டுக்குச் செய்யக் கூடிய அதி உச்ச கொடுமைகளை கெடுதல்களை செய்துவிட்டு தான் போகிறார்கள். இன்னும் சர்வாதிகார ஜனாதிபதி முறை ஒழிஞ்சதாத் தெரியவில்லை. 

இதில.. எந்தச் சிங்களவன் வந்தாலும் எம் மக்களுக்கு எந்த விமோசனமும் இல்லை என்பதால்.. இந்த சொறீலங்காவின் அடுத்த பிரதமர் பற்றிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும் எண்ணமில்லை. ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆண்டுகள் ஐந்துமே ஆண்டாலும்

தமிழனுக்கு தீர்வு தரப் போவதில்லை

யுஎன்பி ஆண்டாலும் சுதந்திரக்கட்சி ஆண்டாலும்

தமிழர்கள் வாழ்வது கண்ணீரிலே

ஏமாறாதே ஏமாறாதே

தீர்வு தருவார்கள் என்று ஏமாறாதே

சம்பந்தா ஏமாறாதே.

எனது பொன்னான வாக்கு பொன்னையனுக்கல்ல 

மகிந்தவுக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

SL Parliament dissolved

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2018 at 8:42 PM, புங்கையூரன் said:

இந்த வாக்களிப்பில்...கலந்து கொண்டால்....மைத்திரியின் செயலை...ஆமோதிப்பது போலாகி விடும்! 

 அதனால் வாக்களிக்கவில்லை!

ஐயா நீங்கள் விரும்பினால் என்ன விரும்பாவிட்டா என்ன தேர்தல் தேர்தல் தானே!

அடுத்து ஜனநாயகத்தை நிலைநாட்ட இலங்கையில் எங்கே ஜனநாயகம் இருக்கிறது.உங்கள் ஜனநாயக நிலையை நினைக்க பின்பக்கத்தால தான் சிரிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு... வாக்கு  அளிக்காதவர்களின் ... குடியுரிமை.. பறிக்கப் படும்.  

இங்கனம், 
தமிழ் சிறி மைத்திரி பால ராஜபக்ச. ?
(சொறி லங்கா  தேர்தல் ஆணையாளர்) :grin:  ?

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2018 at 5:29 PM, தமிழ் சிறி said:

தற்போது... இலங்கையில் நடக்கும்,  பிரதமர் போட்டியில்..
யாழ். கள உறவுகளின் அரசியல் அறிவை நாடி பிடித்துப் பார்ப்பதற்கான  கருத்துக் கணிப்பு இது.
ஒரு கேள்விக்கு, ஒரு  வாக்கு மட்டுமே... போட முடியும்.

தற்போது சயித் பிரோமதாச தான் பிரதமர் வேட்பாளர் என்று வேறு கதை.

உண்மையென்றால் மேலே உள்ள வேட்பாளர்களை மாற்ற வேண்டுமே?

சனி ஞாயிறு தேர்தல் எல்லோரையும் பிசியாக வைத்திருக்கப் போகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தற்போது சயித் பிரோமதாச தான் பிரதமர் வேட்பாளர் என்று வேறு கதை.

உண்மையென்றால் மேலே உள்ள வேட்பாளர்களை மாற்ற வேண்டுமே?

சனி ஞாயிறு தேர்தல் எல்லோரையும் பிசியாக வைத்திருக்கப் போகிறது.

ஈழப்பிரியன்... உங்கள் ஆதங்கம் புரிகின்றது.
ஆனால்... பலர், வாக்குப் போட்ட  பின், அதனை மாற்றி அமைப்பது சாத்தியமற்றது.

அடுத்த பொதுத்  தேர்தலுக்குள்... இன்னும்  எத்தனை குத்துக் கரணம் நடக்கப் போகுது.
அது வரை... பொறுமையாக, நிலைமையை.... அவதானிப்போம்.

அடாது மழை பெய்தாலும்,  ஆமிக் காரன் வந்தாலும்...  இப்போ உள்ள,  வாக்களிப்பு நிலையம்,
14.11.18 அன்று,  ஐரோப்பிய நேரம் காலை ஆறு மணி வரை.. தொடர்ந்து  நடை பெறும். :grin:

யாரும் எதிர் பாராத, இந்தக்  கருத்துக் கணிப்பில்... இன்னும், உங்கள் தெரிவுகளை செய்யக் கூடிய சாத்தியங்கள் உள்ளதால்...
உங்கள்... வாக்குகளையும், கருத்துக்களையும் பதியுங்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

3. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் யாருக்கு வாக்களிப்பார்கள்?

என்ன யோசினையிலை இந்த கேள்வியை எழுதினனீங்கள் சிறித்தம்பி?

சிறிலங்கன் முஸ்லீம் ஆர்ரை பக்கம் நிக்குமெண்டு அந்த  அல்லாவுக்கே தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்ன யோசினையிலை இந்த கேள்வியை எழுதினனீங்கள் சிறித்தம்பி?

சிறிலங்கன் முஸ்லீம் ஆர்ரை பக்கம் நிக்குமெண்டு அந்த  அல்லாவுக்கே தெரியாது.

குமாரசாமி அண்ணை..   நீங்கள் இப்படியான, கேள்வி  கேட்க வேண்டும்..  என்ற  ஆசையில், தான் கேட்டேன். :grin:
இதை...  "நூல் விட்டு, நோட்டம்  பார்க்கிறது"  என்று  ஊரில் சொல்வார்கள். ?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

இங்கு... வாக்கு  அளிக்காதவர்களின் ... குடியுரிமை.. பறிக்கப் படும்.  

இங்கனம், 
தமிழ் சிறி மைத்திரி பால ராஜபக்ச. ?
(சொறி லங்கா  தேர்தல் ஆணையாளர்) :grin:  ?

அப்பாடா... இதுவரை 6 நாட்களே கடவுளை அமைதியோடும் பக்தியோடும் வணங்கமுடிந்த சிறித்தம்பியின் இல்லத்தரசிக்கு, இனிமேல் 7  நாட்களும்.... அதாவது வெள்ளிக்கிழமை விரதத்துடன் கடவுளை அமைதியோடும் பக்தியோடும் வணங்க வழி பிறந்துவிட்டது.  ☺️

சிறியரின் குடியுரிமையும் பறிக்கப்படும் அவர் தானும் வாக்களிக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டதாக வருந்தினார். ?

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இரண்டாவது கேள்வியில் கனபேர் தடக்குப்பட்டு விழப்போகினம், இதுவரை நான் மட்டும்தான் சரியான பதில் சொல்லி இருக்கிறன்......!  ☺️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.