Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
November 20, 2018
6943-2.jpg?zoom=1.2100000262260437&resiz
 

யாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் – புகையிரத விபத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்துடன் கந்தர்மட பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கார் விபத்துக்குள்ளானது.  மதியம் 1.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காரினை செலுத்தி சென்ற யாழில் உள்ள பிரபல வர்த்தகரான பாலா என்பவரே படுகாயமடைந்துள்ளார்.  படுகாயமடைந்த குறித்த வர்த்தகர் ஆபத்தான முறையில் மீட்கப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

http://globaltamilnews.net/2018/103987/

  • கருத்துக்கள உறவுகள்

இந்து லேடீஸ் லேன் தான் பாதுகாப்பு அற்றது என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இந்து லேடீஸ் லேன் தான் பாதுகாப்பு அற்றது என்று நினைக்கிறேன்.

என்ன நாதம் மகளீர் கல்லூரியையே தூக்க வேண்டுமென்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் எடுத்தவர்கள் எல்லாம் இப்படித்தான் அடிபடுவினம். வகன, சாலைப்போக்குவரத்து ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிக்காமை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பிப்பாக்காமை வாகனத்திலுள்ள ஒலிபெருக்கியை அதி உச்ச சத்தத்தில் வைத்து இந்துமகளீர் பாடசாலைப்பிள்ளைகளுக்கு கெத்துக்காட்டியிருப்பார் மோதுப்பட்டுப்போனார் . லைற்றா தண்ணியும் அடிச்சிருப்பார்போலக்கிடக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

கள்ள வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் எடுத்தவர்கள் எல்லாம் இப்படித்தான் அடிபடுவினம்

அதெப்படி கள்ளவாகனம் ஓட்டுபவர்கள் தான் அப்படி செய்வார்கள் என்று சொல்கிறீர்கள்.

1 hour ago, Elugnajiru said:

கள்ள வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் எடுத்தவர்கள் எல்லாம் இப்படித்தான் அடிபடுவினம். வகன, சாலைப்போக்குவரத்து ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிக்காமை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பிப்பாக்காமை வாகனத்திலுள்ள ஒலிபெருக்கியை அதி உச்ச சத்தத்தில் வைத்து இந்துமகளீர் பாடசாலைப்பிள்ளைகளுக்கு கெத்துக்காட்டியிருப்பார் மோதுப்பட்டுப்போனார் . லைற்றா தண்ணியும் அடிச்சிருப்பார்போலக்கிடக்கு. 

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இப்படி சகட்டு மேனிக்கு, ஒரு பொதுத் தளத்தில் குற்றம்சாட்டுவதுக்கு கண்டனங்கள்.   செய்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கு இது ஒரு பாதுகாப்பற்ற கடவை என்று. அப்படி இருந்தும்  பாதிப்பட்டவரையே குற்றம் சொல்லுவது எந்த வகையில் சரியானதாக இருக்கும்?
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவப்பு கோட்டுக்கை நிக்கிறது அமெரிக்கனா? :cool:

wfq5c3onm.jpg

wfq5c3onm.jpg

தமிழர் பகுதியிலுள்ள பெரும்பாலான தொடரூந்து கடவைகள் பாதுகாப்பற்ற ஆட்கொல்லிப் பொறிகள் என்பதைத் தெரிந்தும் கவனயீனமாக செல்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியது தான்.

இந்தக் கடவையில் இரண்டு பக்கமும் கணிசமான தூரத்தை பார்க்க முடியும்.

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சிவப்பு கோட்டுக்கை நிக்கிறது அமெரிக்கனா? :cool:

wfq5c3onm.jpg

wfq5c3onm.jpg

இப்ப ஊரில ஐயப்ப சுவாமிக்கு மாலை போடுற  ட்ரென்ட்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்கூட எமது உறவுகளைப்பற்றித் தவறாக எழுதுவது விருப்பமில்லைத்தான் ஆனால் கிரமமாக நீங்கள் ஊருக்குப் போபவராகவிருந்தால் அங்கத்தை நடவடிக்கைகளை அறிந்துகொள்ளலாம் மழைகாலத்தில் மழையும் வெயில்காலத்தில் வெயில்ய்ன் வாடை சோழகக்காற்றுக்காலத்தில் அதிகமான காற்றும் பருவநிலைக்கேற்ப வருவது தாயகத்தில் இயற்கை அதையே ஏதோ பிரச்சனைக்குறிய விடையமாகக் கருதும் ஒரு சமூகக்கூட்டமாகவும் கண்டதை எல்லாம் வாங்கிப்போட்டு கடன் கட்டுவதற்கு வழியில்லாத கூட்டமாகவும் ஈரொட்டி வியாபாரம் செய்யும் ஒருவரை தொழில் அதிபர் என விழிக்கும் நடைமுறையும் அதைப்பார்த்து அவர் மயங்கி காரில் பயணம் செய்வதும் அங்கு சாதாரணம் 

என் கண்முன்பே ஒரு நிதி நிறுவனத்தின் முகவர் ஒரு கிராமத்தின் சில்லறைக்கடை வாசலுக்கு வந்து மூன்று இலட்சம் ரூபாய் கடனுக்கான ஒப்பந்த நகலை அந்தக்கடைக்காரருக்குப் புரியாத ஆங்கிலத்தில் கையொப்பம் இடச்செய்து ஒருவாரத்தில் உங்கள் வங்கிக்கணக்குக்கு காசுவரும் எனக்கூறும்போது ஆர்வமிகுதியால் நான் கேட்டேன் இந்த பத்திரத்தின் பிரதி ஒன்றை அவருக்குக்கொடுக்கலாம்தானே என அவர் கூறினா அந்த நடைமுறை இங்கு இல்லை என இன்னுமொருகேள்வி கேட்டார் நீங்கள் வெளிநாட்டிலிருந்தோ வந்தனீங்கள் என  

நேற்று அடிபட்ட கார்போல நிறையக்கார்கள் ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் இரண்டுவீதம் கடனுக்கு வாங்கிப்போட்டு தூசி பிடித்து நிக்குது தெருவில் கார்வாங்கியவர் மாதம் முப்பதாயிரம் ரூபாய் தவணை கட்டுறார் அவரது சம்பளம் நாற்பத்தெட்டாயிரம்.

இந்த நிலையில் இப்படியான செய்திகளை வாசிச்சால் கொதிப்பு வருமோ இல்லையோ. 

சந்திக்குச் சந்தி வாகனத்திலிருந்து இறங்கி போக்குவரத்துப் போலீசிடம் கைகட்டி சரத்தைத் தளர்த்திவிட்டு பொக்கேற்றுக்கை இருக்கிறதை அவனுக்கு லஞ்சமாகக் கொடுப்பதை நான் நேரில் பார்த்தபடியால்தான் இப்படி எழுதுகிறன்.

படிதவர்கள் எனத் திமிராகச் சொல்லும் அரச உத்தியோகத்தர்களில் அனேகர் நான் அறிய வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனம் ஓட்டுவதை அறிந்ததாலேயே இப்படி நான் எழுதுகிறேன்.

15 hours ago, நிழலி said:

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இப்படி சகட்டு மேனிக்கு, ஒரு பொதுத் தளத்தில் குற்றம்சாட்டுவதுக்கு கண்டனங்கள்.   செய்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கு இது ஒரு பாதுகாப்பற்ற கடவை என்று. அப்படி இருந்தும்  பாதிப்பட்டவரையே குற்றம் சொல்லுவது எந்த வகையில் சரியானதாக இருக்கும்?
 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்கள்.ஆனால் நாமும் அவதானமாக இருக்க வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, சுவைப்பிரியன் said:

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்கள்.ஆனால் நாமும் அவதானமாக இருக்க வேணும்.

எல்லா நாடுகளிலையும் வாகனம் ஓட்டுறதுக்கு லைசன்ஸ் எடுக்கேக்கை ரயில் கடவையிலை அங்காலை இஞ்சாலை  பாத்து தான் அவதானமாய் கடந்து போகோணும் எண்டது ஒரு சட்டம் எண்டு சொல்லாமல் அவதானமாய் இருக்கோணும் எண்டதை படிப்பிச்சு இருப்பினம்...

இல்லையோ ஓமோ :cool:

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் 50 மீற்றருக்கு முன்னாலேயே ஒரு எச்சரிக்கை  பலகை இருக்கும். சிலர் அதைக் கவனிப்பதில்லை.

Résultat de recherche d'images pour "the signal of railway crossing without gate"

முக்கியமாக இதுபோன்ற கடவைகளில் புகையிரதம் வராவிட்டாலும் கூட கடவைக்கு முன்பாக வண்டியை நிறுத்தி முதலாவது கியர் போட்டுத்தான் அதைக் கடந்து போகவேண்டும்......!

முதலாவது கியர் போடுவதன் காரணம் கடவைக்கு மேலே போகும்போது எஞ்ஜின் நின்றுவிட்டாலும் கூட அப்படியே ஸ்ராட்டரை குடுக்க வண்டி மெதுவாக கடவையை கடந்து விடும். ஏனைய கியர்களில் அது சரிவராது......!  tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

 646339-speedbreakers-013018.jpg

ஆள் இல்லா ரயில்  கடவைக்கு இந்தபக்கமும் அந்தபக்கமும் இப்படியான இரண்டு (அ ) மூன்று அடுக்கு வேகதடை  அங்கிட்டும் இருக்கும் தானே ? ?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.