Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் உண்டா?

Featured Replies

On 12/19/2018 at 1:26 AM, குமாரசாமி said:

கடவுள் பற்றிய எனது நிலை மிகவும் சிறியது.
அது ஒரு புறமிருக்க.... எல்லோரையும் போல் இருக்கும் இந்த மனிதனுக்கு  இவ்வளவு  சிறப்புகளும் மரியாதைகளும் ஏன் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?

 

 

எல்லா மனிதர்களை போலவும் இருக்கும் பிராமணர்களுக்கு  இந்துகளின் புனித நூல் மனு தர்மத்தில் ஏன் இவ்வளவு மரியாதையும் கெளரவும் என்று உங்களால் கூற முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

 

தமிழில் ஒருவரை மரியாதையாக 'அவர்', 'அவரை', 'என்பவரை', 'இருக்கிறார்' என்று எழுதுவோம்.

பெண்ணானாலும் ஆணானாலும் மரியாதையாக இவ்வாறே எழுதுவோம். அதிக மரியாதை கொடுக்க விரும்பினால் பன்மையில் 'அவர்கள்', 'இருக்கிறார்கள்' என்று எழுதுவோம்.

சண்டியர்கள், காடையர்கள் மற்றும் கொலைகார்களை பற்றி எழுதும் போது, ஆணாக இருந்தால், 'அவன்', 'என்பவனை', 'இருக்கிறான்' என்று எழுதுவோம். 

இந்த கடவுள் இப்படியான ஒரு மோசமான சண்டியன், கொலைகாரன், காடையன் என்பதில் குமாரசாமி அவர்களும் கொழும்பான் அவர்களும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் எழுத்தில் இருந்து தெளிவாகிறது. இந்த அளவு மோசமான சண்டியனுக்கு இவர்கள் மட்டுமல்ல உலகமே அஞ்சுவதை காணக்கூடியதாக இருக்கிறது. 

 

 

'

Edited by colomban

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, tulpen said:

கடவுள் பற்றி ஆலபேட் ஐன்ஸ்ரைனின் கூற்று எவ்வளவு நிதர்சனமானது என்பதை பாருங்கள். 

The word God is for me nothing more than the expression and product of human weaknesses, the Bible a collection of honourable, but still primitive legends which are nevertheless pretty childish.

- Albert Einstein

ஐன்ஸ்ரைன் கூறியது பைபிளை பற்றி மட்டும் ஆனால் நமது புராணங்களும் இதிகாசங்களும் அதை விடபெரிய புரட்டுக்களும் முட்டாள்த்தனங்களும் நிறைந்தவை. 

 

 மேற்கத்தையவர்கள் புராணங்களிலிருந்து பல விடயங்களை திருடியவர்கள். இன்றும் அவர்களே புராதன சிலைகளை திருடுகின்றார்கள். ஏன்??????????
விளங்கியவர்களுக்கு பல விளக்கங்களை கொடுக்கலாம்.
விளங்க மறுப்பவர்களுக்கு பாலும் நஞ்சாகத்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, Jude said:

அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ??  

கடவுள் ஆணா? எப்படி கண்டு பிடித்தீர்கள்? உங்களுக்கு மட்டும் தெரியப்படுத்தினாரா? 

 

அல்லாவை அவன் இவன் என்றுதான் அழைப்பார்கள்.
முருகனையும் அவன் இவன் என்றுதான் அழைப்போம்.
பெண் தெய்வங்களையும் அவள் இவள் என்றுதான் அழைப்போம்.
இவையெல்லாம் மனிதனால் வகுக்கப்பட்டது.
ஏன்? தங்கள் உண்மையான பெயர் கூட இன்னொருவரால் தான் சூடப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

காயமே கோவிலாகி....கடி,மனம்  அடிமையாகி....,

வாய்மையே தூய்மையாகி...,

மனம் மணி...இலிங்கமாகி...!

 

என்று எமது முன்னோர் கூறிச் சென்றனர்!

எல்லா உண்மைகளும் மேலுள்ள வார்த்தைகளுக்குள் புதைந்து கிடக்கின்றன!

நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கிறோம்!

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அல்லாவை அவன் இவன் என்றுதான் அழைப்பார்கள்.
முருகனையும் அவன் இவன் என்றுதான் அழைப்போம்.
பெண் தெய்வங்களையும் அவள் இவள் என்றுதான் அழைப்போம்.
இவையெல்லாம் மனிதனால் வகுக்கப்பட்டது.

நானும் நீங்களும் இவற்றில் உடன்படுகிறோம். 

நாம் ( மனிதர்கள்) ஏன் இந்த கடவுள்களை அவன் இவன் என்று மரியாதை இல்லாத வகையில் பயன்படுத்தும் ஒருமையில் அழைக்கிறோம் என்பது தான் எனது கேள்வி. அதற்கு பதிலாக நான் நினைப்பது, கடவுளை சண்டியனாக நாம் பார்க்கிறோம் என்பது தான். ஒரு கொடூரமான சர்வ வல்லமை கொண்ட ஒரு சண்டியனை நாம் அவன் இவன் என்று அழைப்போம். ஆனால் அவனுக்கு மிகவும் அஞ்சி அவனை அமைதிப்படுத்தி அவனின் கருணையை பெற முயற்சி செய்வோம் இல்லையா? இதை தானே நாம் கடவுளுக்கும் செய்து கொண்டு கடவுளை அவன் இவன் என்று அழைக்கிறோம்?

கடவுள் உண்டா இல்லையா என்ற வாதம் முடிவின்றி பல நூற்றாண்டுகளாக தொடர்கின்றது. 

இந்த விவாத்திற்கு சில ஒப்பீடுகள் ஒரு நிலைப்பாட்டினை எடுப்பதற்கு உதவக் கூடும்.

கடவுள் உண்டு என்று நம்மி அதை பன்பற்றும் சமூகத்தின் தற்போதைய வளர்ச்சியையும் 

கடவுள் இல்லை அல்லது அதைப்பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றுள்ள சமூகத்தின் இன்றைய வளர்ச்சியைபும் 

ஒப்பிட்டுப் பார்ப்பின் 

இவ் இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான பாெருளாதார,  தொழில்நுட்ப, மனித நாகரீக பண்பாட்டு வளர்ச்சியில் பாரியளவு ஏற்றந் தாழ்வுகள் உள்ளதை தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும். 
 

14 hours ago, குமாரசாமி said:

 மேற்கத்தையவர்கள் புராணங்களிலிருந்து பல விடயங்களை திருடியவர்கள். இன்றும் அவர்களே புராதன சிலைகளை திருடுகின்றார்கள். ஏன்??????????
விளங்கியவர்களுக்கு பல விளக்கங்களை கொடுக்கலாம்.
விளங்க மறுப்பவர்களுக்கு பாலும் நஞ்சாகத்தான் தெரியும்.

நான் மேற்கோள் காட்டியது ஐன்ஸ்ரைன் என்ற அறிவியல் மேதையின. கூற்றை மட்டுமே. அதற்கும் உங்கள் பதிலுக்கும் என்ன தொடர்பு என்றே தெரியவில்லை. 

மேலும் எம்மை முட்டாள்களாக்கிய புராண இதுகாசங்கள்களை மேற்கத்தயவர்கள் திருடினார்களா? உதவாக்கரை புராண இதிகாசங்களை திருடி அவர்களுக்கு என்ன பிரயோசனம்?

சிலைத்திருட்டு புராதன கலைப்பொருட்கள் திருட்டு உலகம் முழுவதும் நடைபெறும் குற்றச்செயல்.நீம்அதுபற்றி இங்கு விவாதிக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்கட்டத்தில் இருக்கு என்று பார்த்திட்டு போக வந்தன் தலைப்பும் கருத்துக்களும் :unsure:

  • தொடங்கியவர்
கடவுள் இருக்கின்றார் அல்லது இல்லை அல்லது எங்கயாவது போய்விட்டார் என்பதுக்கு அப்பால் சமயம் அது சார்ந்து மொழி பண்பாடு கட்டிடக்கலை வரலாறு சித்தர்கள் இயற்க்கை மருத்துவம் அறநெறிகள் போன்ற பல விசயங்கள் கடவுள் என்ற கருவைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. அதே நேரம் சாதியம் ஏற்றதாழ்வுகள் மூட நம்பிக்கைகள் போன்ற பல எதிர்மறை விசயங்களும் பின்னப்பட்டுள்ளது. கடவுள் உண்டா இல்லையா அவரை நேசிப்பதா வெறுப்பதா என்ற அணுகுமுறை பொருந்தாது. மாறாக இக்கேள்விகளுடன்  கடவுள் என்ற ஒரு விசயத்தை நன்மைக்காக பயன்படுத்துவது ஆரோக்கியமானது. 

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
     ஏதனை மூடனை ...... நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
     ஏழையை மோழையை ...... அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
     வாய்மையி லாதனை ...... யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
     வாழ்வுற ஈவது ...... மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
     நாரத னார்புகல் ...... குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
     நாயக மாமயி ...... லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
     தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
     சீரலை வாய்வரு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஏவினை நேர்விழி ... அம்பினை நிகர்க்கும் கண்களை உடைய

மாதரை மேவிய ஏதனை ... மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை,

மூடனை நெறி பேணா ஈனனை ... மூடனை, ஒழுக்கம் இல்லாத
இழிந்தோனை,

ஏடெழு தாமுழு ஏழையை ... படிப்பே இல்லாத முழு ஏழையை,

மோழையை ... மடையனை,

அகலா நீள் மாவினை மூடிய ... என்னைவிட்டு நீங்கா தீவினை
மூடியுள்ள

நோய்பிணி யாளனை ... நோயும் பிணியும் கொண்டவனை,

வாய்மை யிலாதனை ... உண்மை இல்லாதவானை,

இகழாதே ... இகழ்ந்து ஒதுக்காமல்

மாமணி நூபுர சேதள தாள் ... சிறந்த மணிகளாலான சிலம்புள்ள
உன் பாதங்களை,

தனி வாழ்வுற ... ஒப்பற்ற வாழ்வை (முக்தியை) யான் பெற

ஈவதும் ஒருநாளே ... தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ?

நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் ... புலவர்கள் பாடிய
நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர்

புகல் குற மாதை ... முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை

நாடியெ கானிடை கூடிய சேவக ... விரும்பிச் சென்று காட்டிலே
கூடிய வீரனே

நாயக மாமயில் உடையோனே ... தலைவனே சிறந்த மயில்
வாகனனே

தேவி மநோமணி ஆயிப ராபரை ... தேவி, மனோன்மணி,
அன்னை, பராபரை,

தேன்மொழி யாள்தரு சிறியோனே ... தேன் மொழியாள் உமையின்
சிறுமகனே

சேணுயர் சோலையின் ... விண்வரை உயர்ந்த சோலைகளின்

நீழலி லேதிகழ் ... நிழலினிலே வளங்கும்

சீரலை வாய் வரு பெருமாளே. ... திருச்செந்தூரில் அமர்ந்த
பெருமாளே.
(மூலம்: http://www.kaumaram.com/thiru/nnt0036_u.html)

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/7/2018 at 3:42 AM, சண்டமாருதன் said:

 Stephen Hawking | Brief Answers to the Big Questions

 

 

 

6 hours ago, குமாரசாமி said:

 

 

ஒரு அசுரன் பூமியை பாயாய் சுருட்டி கடலுக்கு அடியில் கொண்டு போய் வைக்க விஷ்ணு வராக அவதரம் எடுத்து பூமியை மீட்டு வந்தார்”’ என்பது போன்ற அடி முட்டாள் கதைகளை கூறி மக்களை ஏமாற்றி மக்களை கல்வி கற்க விடாமல்  செய்த ஒரு கூட்டம் இப்போது  மக்கள் எதிர்க்கேள்வி  கேட்க  தொடங்கியவுடன் மற்றவர்கள் கண்டுபிடித்த அறிவியல் விடயங்களை தமது உதவாக்கரை புராணங்கள் கண்டு பிடித்ததாக எந்த ஆதாரங்களும் இன்றி பிதற்ற தொடங்கி உள்ளார்கள்.அதன்வெளிப்படே இந்த பைத்தியக்கார காணொளி. 

வாரத்தைக்கு வாரத்தை தமிழரின் கடவுள் . எற்று கூறும் இந்த காணொளியை உருவாக்கிய தமிழரை ஏமாற்றும் பேர்வளி   இவ்வுலகின் பெரும்பான்மையான மற்றய மனிதர்களை கிண்டல் அடிக்கிறார். மற்றைய மதங்கள் எல்லாத்தையும் விட தமிழரின் கடவுள்தான்  உயர்ந்தவர் உண்மையானவர் என்ற பொருள்பட பிதற்றும் இவரால் கிண்டல் அடிக்கப்படும் அவர்கள்  அறிவியல் பொருளாதார அரசியல் முன்னேற்றத்துடன் வாழும் அதேவேளை தமிழரின் கடவுள் மட்டும் ஏன் தமிழரை இன்னமும் அடிமைகளாக வைத்திருக்கிறார் . என்பதை மட்டும் கூறவில்லை. அதைக்கேட்டால்  இதைப்போலவே ஒரு அடிமுட்டாள் கதையை கூறி தமிழரை ஏமாற்றுவார். என்று நினைக்கிறேன். 

க‍டவுள் பற்றி கூறும்  தமிழருக்கு பாடம் எடுக்கும் இந்த ஏமாற்று ஆன்மீகவாதி, அதேவேளை ராமசாமி நாயக்கர் என்றும் தெலுங்கன் என்றும் ஒருவரை சாதி சொல்லி திட்டுகிறார். மற்றய இன மக்களை திட்டுகிறார்.  இவர் திட்டும் மற்றய இன மக்களை தமிழரின் கடவுள் மனிதர்களாக பார்க்கவில்லையா?  தமிழர் கண்டு பிடித்ததை நியூட்டன் திருடினார் என்று புலுடா வேறு.  விஷ்ணு ஒரு சிறந்த விஞ்ஞானி என்று பைத்தியகார பிதற்றல் ஒரு பக்கம். புவியீர்ப்பை விசையை கடந்து தமிழரின் கடவுள் இந்திரன் பறந்தான் என்று பிதற்றும் இவர் அந்த இந்திரன் அப்படி பறந்து  மனித குலத்திற்கு என்ன செய்து கிழித்தான் என்பதை கூறவில்லை. இனித்தான் கற்பனை செய்ய வேண்டும் போல் இருக்கிறது.  தமிழர் பழம்பெருமை, கடவுள், புராணம் என்று எதை பிதற்றினாலும்  முட்டாள் தமிழர்கள் அதை கேள்வி கேட்காமல் எற்றுக்கொள்வார்கள் என்ற தைரியத்தில் இவ்வாறு பிதற்றி உள்ளார்.

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On 12/22/2018 at 7:04 AM, குமாரசாமி said:

வென்றவர்கள் சரித்திரம் என்றால்.....நான் இணைத்த காணொலியில் வந்தவரும் சரித்திரத்தில்  இணைந்து விடுவார். எனவே கேள்விகள் நூறு வருடங்கள்  சென்ற பின்னரும் கேட்கப்படும்.

நான் குறிப்பிட்டது இவர்கள் முன்னோர்கள் வென்றவர்கள், ஆதலால் அவர்களுக்கு அமெரிக்கா என்ற நிலபரப்பு கிடைத்திருக்கிறது என்றேன்...

ஐம்பது வருடம் கழிந்து எப்படி எலும்பு கூடு ஃப்ளைட்டில் கை அசைத்து கொண்டு இறங்குமா...

On 12/22/2018 at 2:24 PM, Jude said:

 

தமிழில் ஒருவரை மரியாதையாக 'அவர்', 'அவரை', 'என்பவரை', 'இருக்கிறார்' என்று எழுதுவோம்.

பெண்ணானாலும் ஆணானாலும் மரியாதையாக இவ்வாறே எழுதுவோம். அதிக மரியாதை கொடுக்க விரும்பினால் பன்மையில் 'அவர்கள்', 'இருக்கிறார்கள்' என்று எழுதுவோம்.

சண்டியர்கள், காடையர்கள் மற்றும் கொலைகார்களை பற்றி எழுதும் போது, ஆணாக இருந்தால், 'அவன்', 'என்பவனை', 'இருக்கிறான்' என்று எழுதுவோம். 

இந்த கடவுள் இப்படியான ஒரு மோசமான சண்டியன், கொலைகாரன், காடையன் என்பதில் குமாரசாமி அவர்களும் கொழும்பான் அவர்களும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் எழுத்தில் இருந்து தெளிவாகிறது. இந்த அளவு மோசமான சண்டியனுக்கு இவர்கள் மட்டுமல்ல உலகமே அஞ்சுவதை காணக்கூடியதாக இருக்கிறது. 

 

 

நான் வள்ளுவன், பிரபாகரனை போன்றவர்களை அவன் இவனென்று தான் குறிப்பிடுவதுண்டு...

இதற்க்கு என்ன காரணமாக இருக்கும் என கூற முடியுமா...

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தேவை !
(இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் )
...........................................................
புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் 
ஒரு மதத்திற்கு 
நல்ல கடவுள் 
தேவைப்படுகின்றார்

விண்ணப்பிப்பவர் ....

மூட நம்பிக்கைகளை 
மக்களிடம் 
விதைக்காதவராக 
இருக்க வேண்டும்

அர்ச்சனை என்ற 
பெயரில் 
பணம் வசூலிக்காதவராக 
இருக்கவேண்டும்

நேர்த்திக்கடன் 
வாங்காமலேயே 
வேண்டுதலை 
நிறைவேற்றுபவராக 
இருக்க வேண்டும்

பாதுகாப்பு என்ற 
பெயரிலேயே 
பெண்களை 
பேய்களைப்போல 
ஒட்டுமொத்தமாக 
மூடிக்கொண்டு திரியவேண்டும் 
என்று அறிவுரை 
வழங்குவதைவிட்டு 
பெண்களை சக 
மனுஷியாக மதிக்கும் 
ஆண்களைப் படைக்க
வேண்டும்

ஆட்டு மந்தைக் 
கூட்டம்போல 
ஒருவன் பல பெண்களைக் 
கட்டலாம் என்று 
சொல்லாமல் 
ஒருவனுக்கு ஒருத்தி 
என்று நல்ல 
மனதுடைய 
ஆண்களை படைப்பவாராக 
இருக்க வேண்டும் 
(உபரி - ஆண்கள் பெண்களைவிட 
குறைவாகத்தானே
உள்ளார்கள் என்று 
நொண்டிச்சாட்டு 
சொல்லாமல் 
ஆண்களையும் 
பெண்களையும் 
சம அளவில் படைக்கும் 
வல்லமை பெற்றவராக 
இருக்க வேண்டும்)

ரஜனிக்காந்த் அரசியலுக்கு 
வருவதைப்போல 
அப்போ வருகின்றார் 
இப்போ வருகின்றார் 
என்று பூச்சாண்டி 
காட்டாமல் சொன்னால் 
சொன்னபடி வந்து 
இரட்ச்சிப்பவராக 
இருக்க வேண்டும்

பாவ மன்னிப்பு 
கொடுப்பதைவிட்டு
பாவங்களைத் தடுப்பவராக
இருக்க வேண்டும்

தன் துறவிகள்
மற்ற மத 
வழிபாட்டுத் தளங்களை
உடைக்கும் போதும் 
மற்ற மதத்தவரைத் 
தாக்கும் போதும்
புதினம் பார்த்துக் 
கொண்டிருப்பவராய்
இருக்கக் கூடாது

எந்தக் கடவுள்
சிறந்தவர் 
என்ற போட்டியில் 
தன் பக்தர்களைத் 
தூண்டி விடாமல் 
தேவை எற்பட்டால் 
தானே மற்ற கடவுள்களோடு 
போட்டிபோடும் 
வீரம் நிரம்பியவராய் 
இருக்க வேண்டும்

சம்பளமாக
அபிஷேகம் 
நோன்பிருத்தல் 
பிரித் ஓதுதல் 
தேவாலய வழிபாடுகள் 
என்பவற்றில் 
விரும்பியவை 
கொடுக்கப்படும்

தகுதிவாய்ந்த
கடவுள்கள் 
விண்ணப்பிக்கலாம்

நன்றி முகனூல்

  • கருத்துக்கள உறவுகள்
On 12/22/2018 at 2:54 AM, Jude said:

 

தமிழில் ஒருவரை மரியாதையாக 'அவர்', 'அவரை', 'என்பவரை', 'இருக்கிறார்' என்று எழுதுவோம்.

பெண்ணானாலும் ஆணானாலும் மரியாதையாக இவ்வாறே எழுதுவோம். அதிக மரியாதை கொடுக்க விரும்பினால் பன்மையில் 'அவர்கள்', 'இருக்கிறார்கள்' என்று எழுதுவோம்.

சண்டியர்கள், காடையர்கள் மற்றும் கொலைகார்களை பற்றி எழுதும் போது, ஆணாக இருந்தால், 'அவன்', 'என்பவனை', 'இருக்கிறான்' என்று எழுதுவோம். 

இந்த கடவுள் இப்படியான ஒரு மோசமான சண்டியன், கொலைகாரன், காடையன் என்பதில் குமாரசாமி அவர்களும் கொழும்பான் அவர்களும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் எழுத்தில் இருந்து தெளிவாகிறது. இந்த அளவு மோசமான சண்டியனுக்கு இவர்கள் மட்டுமல்ல உலகமே அஞ்சுவதை காணக்கூடியதாக இருக்கிறது. 

 

 

ஒரு மூன்றாம் ஆளுக்கும் 
உருத்துடையவனுக்கும் இடையிலும் இப்படித்தான் பேசுவோம்.

அறிமுக நாட்களில் காதலர்கள் 
வாங்கோ போங்கோ என்றுதான் பழுகுவார்கள்.

அதுவே எனதானவன் உரித்து உடையவன் என்று வந்துவிட்டால் 
வாடா போடா என்றுதான் பேசுவோம் 

இது ஒரு நெருக்கத்தையும் உரிமையையும் கொடுக்கிறது. 

கந்தன் வருவான் 
கண்ணன் வருவான் போன்ற சொற்பதங்கள் இப்படியான ஒரு உரிமையை பாராட்டி வருவது.

அதுவே அவர்களை தொழுத பாடிய நாணயனர்கள் என்றால் 
திருநாவுக்கு அரசு பாடினான் 
சம்மந்தன் பாடினான் என்று பேசுவதில்லை ... அவர்கள் மூன்றாம் நபர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஒரு மூன்றாம் ஆளுக்கும் 
உருத்துடையவனுக்கும் இடையிலும் இப்படித்தான் பேசுவோம்.

அறிமுக நாட்களில் காதலர்கள் 
வாங்கோ போங்கோ என்றுதான் பழுகுவார்கள்.

அதுவே எனதானவன் உரித்து உடையவன் என்று வந்துவிட்டால் 
வாடா போடா என்றுதான் பேசுவோம் 

இது ஒரு நெருக்கத்தையும் உரிமையையும் கொடுக்கிறது. 

கந்தன் வருவான் 
கண்ணன் வருவான் போன்ற சொற்பதங்கள் இப்படியான ஒரு உரிமையை பாராட்டி வருவது.

அதுவே அவர்களை தொழுத பாடிய நாணயனர்கள் என்றால் 
திருநாவுக்கு அரசு பாடினான் 
சம்மந்தன் பாடினான் என்று பேசுவதில்லை ... அவர்கள் மூன்றாம் நபர்கள் 

விளக்கத்துக்கு நன்றி. முக்கியமாக முஸ்லிம்கள், நபிகள் நாயகத்தை அவர்கள் என்றும், அல்லாஹ்வை அவன் என்றும் விழிப்பது எனக்கு ஏன் என்று புரியவில்லை. உங்கள் விளக்கம் தான் அதை புரிய வைத்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.