Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதப் புதைகுழியில் வெளிவரும் மர்மம்- 21 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் மீட்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மனித புதை குழியிலிருந்து இது வரை 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

இந்தப் புதை குழியில் இருந்து இதுவரை 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கடந்த வாரம் அகழ்வு பணிகளில் சுமார் 2 மீற்றர் அளவில் சந்தேகத்திற்கு இடமான மனித எலும்பு மீட்கப்பட்டுள்ளது.

இது வரை அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 21 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

DSC_0080.jpgDSC_0079.jpgDSC_0077.jpgDSC_0084.jpg

https://newuthayan.com/story/17/மனிதப்-புதைகுழியில்-வெளிவரும்-மர்மம்-21-சிறுவர்களின்-எலும்புக்-கூடுகள்-மீட்பு.html

  • கருத்துக்கள உறவுகள்

பிழம்பு

மனிதப் புதைகுழியில் வெளிவரும் மர்மம்- 21 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் மீட்பு!!

நாளாந்தம் இப்படியான செய்திகளைப் பார்க்க கடும் கோபமாகவும் மிகுந்த வேதனையாகவும் இருக்கிறது.
வெளிநாடுகள் அரசமைப்பதில் உள்ள அக்கறை உயிர்களில் இல்லை.
தமிழருக்கு எதிராக குரல் கொடுத்த மனிதஉரிமை அமைப்புக்களும் மற்றைய அமைப்புக்களும் எங்கே?

அவர்கள் தான் போகட்டும் நாளாந்தம் பிள்ளைகளைக் காணவில்லை உறவுகளைக் காணவில்லை என்று போராடிக் கொண்டிருக்க அவர்களின் பிரதிநதிகள் காவலர்கள் தமிழருக்காக கஸ்டப்படுகிறோம் என்று சொல்லும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இன்னமும் இதைக் கண்டு கொள்ளவில்லை.இன அழிப்புக்கு இது எவ்வளவு பெரியதொரு சாட்சி.அரசமைக்க குத்தி முறிந்து கோடு கோடாக ஏறும் எமது தலைவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

ஈழப்பிரியன்,  நேற்று  (10. 12. ) உலகம் மனித உரிமை தினத்தை...  கொண்டாடியது.
இதில்... ஐ.நாவின் . பங்கு,  பூஜ்சியமே... 
எல்லாவற்றையும்... உன்னிப்பாக அவதானிக்கின்றோம்  என்று சொல்லி, நெடுக  அறிக்கை  விடுவார்கள்.
அவை... எல்லாம், பம்மாத்து அறிக்கைகள் என்று... காலம் கடந்து தான், எனக்கு தெரியும்.
ஐ.நா. மரணித்து.... பல வருடங்களாகி விட்டது.

நீங்கள்...  நியூ யோர்க்கில், உள்ள... ஐ.நா. கட்டிடத்தை  கடந்து செல்ல சந்தர்பப்பம் ஏற்பட்டால்,
காறித் துப்பி விட்டு... செல்லுங்கள்.

Edited by தமிழ் சிறி

23 minutes ago, ஈழப்பிரியன் said:

இனவழிப்புக்கு முக்கிய சாட்சியாக இவை அமைய வேண்டும் என்றால் அதற்கு பல படிகள் இன்னும் கடக்க வேண்டும். முக்கியமாக  எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படல் வேண்டும். அத்துடன் இவர்கள் இறந்த / கொல்லப்பட்ட ஆண்டு என்பனவற்றை அண்ணளவாகவேனும் கண்டறியப்படல் அவசியம். பின்னர் இவர்கள் எவரால் எந்த படையால் (இலங்கை அரச படை, இந்திய படை, தமிழ் இயக்கங்கள்) கொல்லப்பட்டவை என்பதும் கண்டறியப்படல் வேண்டும். இவ் எலும்புக்கூடுகளுக்கு உரியவர்கள் இறந்த / கொல்லப்பட்ட காலம் 20 வருடங்களுக்கு மேல் என்று சொல்லுகின்றனர்

இவற்றை செய்வதற்கு இன்றிருக்கும் நிலையில் இலங்கை அரசால் தான் முடியும். சுயாதீன அமைப்பொன்று பொறுப்பெடுக்குமாயின் அது சர்வதேச அமைப்பொன்றால் தான் செய்ய முடியும். ஏனெனில் எலும்புகளை அடியாளம் காண்பதற்கு டி.என்.ஏ பரிசோதனை போன்ற பெரும் செலவில் அமையும் விடயங்களை செய்ய வேண்டி வரும். ஆனால் இலங்கை அரசு அதற்கு (சுயாதீன அமைப்புக்கு) சம்மதிக்காது.

இந்த அகல்வு வேலைகளை கூட களனி பல்கலைக்கழகத்தை சார்ந்த சில பேராசிரியர்களாலும், புத்த பிக்குகள் சிலராலும், சிங்கள அதிகாரிகளாலும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதை வாசித்த ஞாபகம்.

இந்த அகழ்வு கூட நல்லாட்சி என்று சொல்லப்பட்டு வந்த அரசின் காலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. மகிந்த வந்தால் கண்டிப்பாக இதற்கு இடையூறு செய்து இடை நடுவில் நிறுத்துவார் என்று நம்புகின்றேன்.

தமிழ் கட்சிகள், அமைப்புகள், சிங்கள தன்னார்வ அமைப்புகள், சர்வதேசம் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுக்கும் போதுதான் இவை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும். அத்துடன் இது தொடர்பாக சர்வதேசம் தொடர்ச்சியாக அவதானித்து வருகின்றது என்பதை சர்வதேச ஊடகங்கள் சிலவற்றில் வந்த செய்திகள் சொல்லுகின்றன. 

எனக்கு ஆச்சரியம் அளிப்பது என்னவென்றால் தமிழ் கட்சிகள் மட்டுமல்ல தமிழ் தன்னார்வ அமைப்புகள் கூட பெரியளவில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காதது ஏன் என்று. காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்காக போராடும் அமைப்புகள் கூட இதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்த மாதிரி தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

எனக்கு ஆச்சரியம் அளிப்பது என்னவென்றால் தமிழ் கட்சிகள் மட்டுமல்ல தமிழ் தன்னார்வ அமைப்புகள் கூட பெரியளவில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காதது ஏன் என்று. காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்காக போராடும் அமைப்புகள் கூட இதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்த மாதிரி தெரியவில்லை.

இது தான் எனது ஆதங்கமும்.தமிழர் தரப்பு இப்படி ஒன்று நடக்குதென்றே காட்டிக் கொள்ளவே இல்லை.வெற்றி தோல்விக்கப்பால் முயற்சி என்றாலும் செய்யக் கூடாதோ?
இப்படியே விட்டால் அத்தனையும் அழிக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

29 minutes ago, தமிழ் சிறி said:

No automatic alt text available.

ஈழப்பிரியன்,  நேற்று  (10. 12. ) உலகம் மனித உரிமை தினத்தை...  கொண்டாடியது.
இதில்... ஐ.நாவின் . பங்கு,  பூஜ்சியமே... 
எல்லாவற்றையும்... உன்னிப்பாக அவதானிக்கின்றோம்  என்று சொல்லி, நெடுக  அறிக்கை  விடுவார்கள்.
அவை... எல்லாம், பம்மாத்து அறிக்கைகள் என்று... காலம் கடந்து தான், எனக்கு தெரியும்.
ஐ.நா. மரணித்து.... பல வருடங்களாகி விட்டது.

நீங்கள்...  நியூ யோர்க்கில், உள்ள... ஐ.நா. கட்டிடத்தை  கடந்து செல்ல சந்தர்பப்பம் ஏற்பட்டால்,
காறித் துப்பி விட்டு... செல்லுங்கள்.

இந்தச் செய்திகளை பார்த்து பார்த்தே மனிசருக்கு பிரசர் ஏறிவிடும்.

56 minutes ago, தமிழ் சிறி said:

No automatic alt text available.

ஈழப்பிரியன்,  நேற்று  (10. 12. ) உலகம் மனித உரிமை தினத்தை...  கொண்டாடியது.
இதில்... ஐ.நாவின் . பங்கு,  பூஜ்சியமே... 
எல்லாவற்றையும்... உன்னிப்பாக அவதானிக்கின்றோம்  என்று சொல்லி, நெடுக  அறிக்கை  விடுவார்கள்.
அவை... எல்லாம், பம்மாத்து அறிக்கைகள் என்று... காலம் கடந்து தான், எனக்கு தெரியும்.
ஐ.நா. மரணித்து.... பல வருடங்களாகி விட்டது.

நீங்கள்...  நியூ யோர்க்கில், உள்ள... ஐ.நா. கட்டிடத்தை  கடந்து செல்ல சந்தர்பப்பம் ஏற்பட்டால்,
காறித் துப்பி விட்டு... செல்லுங்கள்.

58 minutes ago, தமிழ் சிறி said:

பண்ணிட்டாப் போச்சு...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பழுவூர் கிழான் said:

பண்ணிட்டாப் போச்சு...

Bildergebnis für united nations headquarters in new york sri lanka flag

இன்னும்... நல்லதாய் போச்சு. பழுவூர் கிழான்.
நீங்களும்... நியூ யோர்க்கிலா  வசிக்கின்றீர்கள். 
உங்களது,  துப்பலிலியே...... ஐ.நா. கட்டிடம்  மூழ்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வு விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தமிழ்தரப்பு காலம்தாழ்த்தினால் சிங்கள அரசு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை மேலதிக ஆய்வுக்கு கொழும்பு எடுத்துசெல்வதாக கொண்டுசென்று அனைத்து தடையங்களையும் அழித்துவிடும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது. விடுதலைப்போர் நடந்த காலங்களில்  போராளிக்குழுக்களால் கொல்லப்பட்ட மக்களின் எலும்புக்கூடுகள்தான் அவை என்றோ அல்லது போராளிக்குழுக்களிடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்ட மக்கள் போராளிகளின் எலும்புக்கூடுகள் என்றோ கூறி விடயத்தைக் கிடப்பில் போடுவார்கள். மாறாக சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ்மக்கள் அல்லது இறுதிப்போரில் சரணடைந்த போராளிகள் என எலும்புக்கூடுகளை அடையாளம் காணுவதற்கு சிங்கள அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

நேற்று  (10. 12. ) உலகம் மனித உரிமை தினத்தை...  கொண்டாடியது.
இதில்... ஐ.நாவின் . பங்கு,  பூஜ்சியமே... 
எல்லாவற்றையும்... உன்னிப்பாக அவதானிக்கின்றோம்  என்று சொல்லி, நெடுக  அறிக்கை  விடுவார்கள்.
அவை... எல்லாம், பம்மாத்து அறிக்கைகள் என்று... காலம் கடந்து தான், எனக்கு தெரியும்.
ஐ.நா. மரணித்து.... பல வருடங்களாகி விட்டது.

ஏன் தூரத்துக்கு போவான்? 
தாங்கள் தான் ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநித்திகள் எண்டு சொல்லுற மூஞ்சையள் என்ன செய்துகொண்டு இருக்குதுகள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கலை சொல்லிக்கொண்டு கடந்து போக வேண்டிய நிலையில் தான் தற்போது பல பேரின் வாய்களும் ஏன் பத்திரிகைகள் கூட மெளனமாக கடந்து செல்கிறது உயிர் இல்லா எலும்புகளைப்பார்த்து 

ஆழ்ந்த இரங்கல்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துக்கமான விடயம். இறந்த‌ ஆத்துமாக்கள் கொலைகாரர்களை சும்ம விடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.