Jump to content

மரணம் திரும்பிச் சென்றது - நிழலி


Recommended Posts

இருள் கலந்த சாலையில்
ஒரு சிறு வளைவில்
எனக்கான மரணம்
இன்று
காத்திருந்தது

ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது

பனியில் பெய்த மழையில்
வீதியின் ஓரத்தில்
மரணம் காத்திருந்ததையும்
என்னை பார்த்து புன்னகைத்ததையும்
பின் மனம் மாறி
திரும்பிச் சென்றதையும்
நானும் பார்த்திருந்தேன்


தூரத்தில் ஒலி எழுப்பும்
வாகனம் ஒன்றில் அது
ஏறி சென்றதையும்
ஏறிச் செல்ல முன்
தலை திருப்பி
மீண்டும் என்னை பார்த்ததையும்
நான் கண்டிருந்தேன்

எல்லாக் காலங்களிலும்
ஏதோ ஒரு புள்ளியில்
நானும் அதுவும் அடிக்கடி
சந்திக்க முயல்வதும்
பின்
சந்திக்காது பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது

 

-----------

இன்று புதிதாக திறக்கப்பட்ட வீதியில் மோசமாக போயிருக்க கூடிய விபத்தில் சிறு நொடி வித்தியாசத்தில் உயிர் தப்பினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் சோகத்தை மனம் கரையும் விதம் கவிதையாக்கிவதற்கும் ஒரு மனத் தைரியம் வேண்டும்......நீங்கள் நீடூழி வாழவேண்டும்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இருள் கலந்த சாலையில்
ஒரு சிறு வளைவில்
எனக்கான மரணம்
இன்று
காத்திருந்தது

ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது

பனியில் பெய்த மழையில்
வீதியின் ஓரத்தில்
மரணம் காத்திருந்ததையும்
என்னை பார்த்து புன்னகைத்ததையும்
பின் மனம் மாறி
திரும்பிச் சென்றதையும்
நானும் பார்த்திருந்தேன்


தூரத்தில் ஒலி எழுப்பும்
வாகனம் ஒன்றில் அது
ஏறி சென்றதையும்
ஏறிச் செல்ல முன்
தலை திருப்பி
மீண்டும் என்னை பார்த்ததையும்
நான் கண்டிருந்தேன்

எல்லாக் காலங்களிலும்
ஏதோ ஒரு புள்ளியில்
நானும் அதுவும் அடிக்கடி
சந்திக்க முயல்வதும்
பின்
சந்திக்காது பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது

 

-----------

இன்று புதிதாக திறக்கப்பட்ட வீதியில் மோசமாக போயிருக்க கூடிய விபத்தில் சிறு நொடி வித்தியாசத்தில் உயிர் தப்பினேன்.

Bildergebnis für thanks god

அட... நெருங்கிய மரணத்தை கூட, அழகிய கவிதையாக வடிக்க...  நிழலியால்  மட்டுமே முடியும்.
தலைப்பை பார்த்து விட்டு,  கவிதையை... வேகமாக வாசித்த போது, மனது ஒரு வித பதட்டத்தில் இருந்தது.

புதிதாக  போடப் பட்ட  வீதிகளில்... எண்ணைத் தன்மையுடன் கூடிய    வழுவழுப்பு  இருக்கும்.
நீங்கள், ஒரு  குடும்பத் தலைவன். அவர்களை வளர்த்து ஆளாக்கும் மட்டும்,  இவ்வுலகில் வாழ்ந்தே ஆக வேண்டும்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று நினைக்கின்றேன்.
ஆனால்.. இன்றைய நாளில், உங்களை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்ல,
அருகில் உள்ள கோவிலோ, தேவாலயமோ   எதுவாக இருந்தாலும்,
குடும்பத்துடன் சென்று வருவது, நல்லது என்பது... என் அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

மாபெரும் சோகத்தை மனம் கரையும் விதம் கவிதையாக்கிவதற்கும் ஒரு மனத் தைரியம் வேண்டும்......நீங்கள் நீடூழி வாழவேண்டும்.....!  

சோகம் எல்லாம் இல்லை...

இன்று தான் திறந்த புது றோட் என்பதால் வேகமாக காரை செலுத்திக் கொண்டு இருக்கும் போது, முன்னுக்கு போன பயபுள்ளை இடது பக்கம் இருக்கும் சிறு தெருவுக்கு திரும்புவதற்காக திடீரென்று நிறுத்தினார் (அவருக்கும் புது றோட் தானே).
நான் வழக்கமாக ஓடும் கார் சின்ன திருத்த வேலைக்காக கராஜில் நிற்பதால் இன்ஸூரன்ஸ் தந்த Ford Edge 2017 காரில் தான் நாலு நாட்களாக ஓடுகின்றேன். அந்த கார் இன்னும் சரியாக பழக்கப்படவில்லை.  எனக்கு கிடைத்த ஒரு நொடி அவகாசத்தில் சடுதியாக பிரேக் அடிக்க அது வழுக்கி கொண்டு போய் முன்னுக்கு நிறுத்திய காரை இடிக்க போக  தன்னிச்சையாக அடுத்த லேனுக்கு மாற்றும் போது அடுத்த Lane இல் வந்தவர் அரண்டு போய் ஹோர்ன் அடிக்க, இன்னும் கொஞ்சம் தள்ளி இருக்கும் Shoulder இற்கு காரை மாற்ற, அருகில் இருந்த மதிலில் வேகமாக மோதும் நிலைக்கு சென்று அரை அடி தள்ளி என் கார் நின்றது. இது எல்லாம் ஒரு நொடிக்குள் நிகழ்ந்து விட்டது. அது கொடுத்த அதிர்ச்சி சரியாக வர மூன்று மணி நேரத்துக்கு மேல் எடுத்தது. அந்த அதிர்ச்சி உணர்வுக்குள் தான் இந்த கவிதை(???) யை எழுதியது.

யோசிக்கும் போது நம் மூளை ஆபத்தில் இருந்து தன் உடலை காப்பாற் எவ்வளவு வேகமாக வேலை செய்கின்றது என ஆச்சரியமாக இருக்கு. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் முன்னைய அனுபவங்களை புரொஸஸ் செய்து முடிவுகளை மனித மூளை எடுக்கின்றது.

10 minutes ago, தமிழ் சிறி said:

Bildergebnis für thanks god

அட... நெருங்கிய மரணத்தை கூட, அழகிய கவிதையாக வடிக்க...  நிழலியால்  மட்டுமே முடியும்.
தலைப்பை பார்த்து விட்டு,  கவிதையை... வேகமாக வாசித்த போது, மனது ஒரு வித பதட்டத்தில் இருந்தது.

புதிதாக  போடப் பட்ட  வீதிகளில்... எண்ணைத் தன்மையுடன் கூடிய    வழுவழுப்பு  இருக்கும்.
நீங்கள், ஒரு  குடும்பத் தலைவன். அவர்களை வளர்த்து ஆளாக்கும் மட்டும்,  இவ்வுலகில் வாழ்ந்தே ஆக வேண்டும்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று நினைக்கின்றேன்.
ஆனால்.. இன்றைய நாளில், உங்களை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்ல,
அருகில் உள்ள கோவிலோ, தேவாலயமோ   எதுவாக இருந்தாலும்,
குடும்பத்துடன் சென்று வருவது, நல்லது என்பது... என் அபிப்பிராயம்.

என் மூளைக்குத் தான் ...

thank-you-.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

என் மூளைக்குத் தான் ...

thank-you-.jpg

நிழலி... உங்கள் மூளைக்கு... மட்டும்,  நன்றி, சொல்ல முடியாது. :grin:
நீங்கள்... சாப்பிட்ட,   ஆட்டு 🦌 மூளைக்கும்,  மாட்டு 🐂 மூளைக்கும்... சேர்த்தே...  நன்றி சொல்லி விடுங்கள். 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் வேலை செய்யும் இந்தியர் ஒருவரின் நண்பர் ரஜினியின் 2.0 படம் பின்னிரவில் காட்சி பார்த்துவிட்டு திரும்பும்போது motorway இல் மூன்று கார்களுடன் விபத்து ஏற்பட்டு மரணமாகிவிட்டதை இன்றுதான் சொன்னார். இறந்தவருக்கு 36  வயது. மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனராம். விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியாது. ஆனால் ஒரு குடும்பம் குலைந்துவிட்டது. ஒரு வினாடியில் உயிர்போகக்கூடும் என்பதால் கவனமாக கார் ஓட்டுவது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

என் மூளைக்குத் தான் ...

thank-you-.jpg

திரும்பிச் செல்லவில்லை.

எச்சரித்து சென்றுள்ளது.... இன்றுபோய்.... இன்னொருநாள் வருகிறேன் என்று....

அது ஒரு தீர்மானத்துடன் வந்திருந்தால், உங்கள் மூளை ஒன்றும் செய்திருக்க முடியாது. 

கவனம் எடுங்கள்...

https://www.thesun.co.uk/archives/news/710808/bskyb-executive-dies-in-tragic-accident-with-his-daughter/

நான் நேர்முகத்துக்கு போனபோது, வந்த இந்த தகவலால், நேர்முகம் ரத்தானது.

ஒரு நினைத்துப் பார்க்க முடியாத விபத்து. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே ஒரு அருமையான சான்ஸ் மிஸ்சாகி விட்டது😟 இதை சாட்டியாவது நானும்  ஒரு கவிதை நானும் எழுதி பழகி  இருப்பன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சே ஒரு அருமையான சான்ஸ் மிஸ்சாகி விட்டது😟 இதை சாட்டியாவது நானும்  ஒரு கவிதை நானும் எழுதி பழகி  இருப்பன்

ஊருக்கு போனை  போட்டு.... வெட்டித்  தாக்குறதா , பெட்டிக்குள்ள  போட்டு அனுப்புறதா எண்டு கேட்க வைக்கிற வேலை மிஸ் ஆயிருச்சு... :grin:   

Link to comment
Share on other sites

On ‎12‎/‎21‎/‎2018 at 2:56 PM, Nathamuni said:

திரும்பிச் செல்லவில்லை.

எச்சரித்து சென்றுள்ளது.... இன்றுபோய்.... இன்னொருநாள் வருகிறேன் என்று....

அது ஒரு தீர்மானத்துடன் வந்திருந்தால், உங்கள் மூளை ஒன்றும் செய்திருக்க முடியாது. 

கவனம் எடுங்கள்...

https://www.thesun.co.uk/archives/news/710808/bskyb-executive-dies-in-tragic-accident-with-his-daughter/

நான் நேர்முகத்துக்கு போனபோது, வந்த இந்த தகவலால், நேர்முகம் ரத்தானது.

ஒரு நினைத்துப் பார்க்க முடியாத விபத்து. 

 

ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது

என்று அதைத்தானே நானும் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றேன். இப்படி எச்சரிக்கை செய்தது இதுவே முதல் தடவை அல்ல. ஒரு முறை நீரில் மூழ்கி Lifeguards இனால் காப்பாற்றப்பட்டும் இருக்கின்றேன்.

On ‎12‎/‎21‎/‎2018 at 3:35 PM, ரதி said:

சே ஒரு அருமையான சான்ஸ் மிஸ்சாகி விட்டது😟 இதை சாட்டியாவது நானும்  ஒரு கவிதை நானும் எழுதி பழகி  இருப்பன்

சான்ஸ் கிடைக்கவில்லை என்ற கவலையில் ஒரு கவிதை எழுதலாம் தானே

Link to comment
Share on other sites

22 hours ago, Nathamuni said:

ஊருக்கு போனை  போட்டு.... வெட்டித்  தாக்குறதா , பெட்டிக்குள்ள  போட்டு அனுப்புறதா எண்டு கேட்க வைக்கிற வேலை மிஸ் ஆயிருச்சு... :grin:   

நானும் மனைவியும் எங்கள் உடம்பை donate பண்ண எழுதி கொடுத்து இருக்கின்றம் என்பதால் இந்த பிரச்சனை இல்லை. எனக்கு மத சடங்கு எதுவும் செய்ய கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருப்பதால் ஒரு நாளைக்கு வைச்சு விட்டு அனுப்பி விடுவினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா....வருஷம் முடிய போகுதே...! நம்ம நிழலி மரணத்தைப் பற்றி..இந்த வருஷம் கதைக்கவே இல்லையே என்று குழம்பிப் போயிருந்த நேரத்தில் நிழலியின் பதிவு வந்திருக்கின்றது!

அப்படி ஒரு நெருக்கம், நிழலிக்கும்...நிழலின் கவிதைகளுக்கும்!

ஏதோ மகாத்மா காந்தி சத்திய சோதனை செய்த்து மாதிரி எழுதியிருக்கிறார்!

பொதுவாக மனித மூளை...நாம் திரும்பத்திரும்ப செய்யும் செயல்களை ஓட்டோ பைலட்டில் விட்டு விடட்டுப் பேசாமல்...பார்த்துக்கொண்டு இருக்கும்!

அவசியம் ஏற்படும் போது உடனேயே தலையிடும்! இந்தக் கால இடைவெளி ஒருவருக்கொருவர் வேறு படும்!

வயது, மனநிலை, தூக்கம், அசதி போன்றவை  காரணங்களாக இருக்கும்!

ஏதோ ...தலைக்கு வந்தது....தலைப்பாகையோடு போனதாக இருக்கட்டும்!

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

நானும் மனைவியும் எங்கள் உடம்பை donate பண்ண எழுதி கொடுத்து இருக்கின்றம் என்பதால் இந்த பிரச்சனை இல்லை. எனக்கு மத சடங்கு எதுவும் செய்ய கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருப்பதால் ஒரு நாளைக்கு வைச்சு விட்டு அனுப்பி விடுவினம்

நண்பர்களுடனான பாட்டி ஒன்றுக்கு, வேர்க்க, விறுவிறுக்க வந்த நண்பர்.... மிகவும் அதிர்வுடன் காணப்பட்டார். 

என்ன மச்சான் விசயம் என்று கேட்டபோது, கொஞ்சம் பொறு.... டென்ஷன் அடங்கட்டும் என்று சொன்னார்.

பிறகு, சொன்னார்... பெரும் தெரு ஒன்றில் வேகமாக வந்தபோது, முன்னே போன வாகனம் தீடீர் பிரேக் போட்டதால், இவரும் போட, மூன்று முறை வாகனம் வேகமாக சுழன்று வந்து நின்று இருக்கிறது. பின்னால் ஒரு வாகனமும் வராததால் தப்பித் பிழைத்தார்.

அவரது டென்ஷனை போக்க இன்னொரு நண்பர் சொன்ன அந்த வார்த்தைகள், சிரிப்பை வரவழைத்து.... அவரது டென்ஷனைக் குறைத்து 'ஊத்து மச்சான் விஸ்கியை' என்றார். 

நீங்களும் அதில் உள்ள, வேடிக்கையை மட்டும் பார்த்திருப்பீர்கள், டென்ஷன் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை விட்டுச்சென்று இருக்கிறது பஸ் மாறிப்பயணம் செய்வது  போலத்தான் றூட் மாறி வந்திருக்கிறது ஆனால் எல்லோரையும் விரும்பம் இல்லாவிட்டாலும் அழைத்து செல்லும் சிலரை விட்டுப்பிடிக்கும் சிலரை எட்டிப்பிடிக்கும் பிடியும் ஒன்றுதான் தப்ப முடியாது 

Link to comment
Share on other sites

 பல்லாண்டு வாழிய நழலி.. 30 தடவையாவது மரனத்தை சந்தித்த அனுபவத்தால்  எனக்கு புரிகிறது உங்கள் கவிதையின் உள்ளும் புறமும்.

து பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது

மரணத்தை எழி

லுடன் சொல்லும் கவிதை வடிவம் மெச்சப்படவேண்டியது. தைமாதம் கனடா வரக்கூடும். சந்திப்போம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.