Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்படுகொலையாளியுடன் கம்சாஜினி குணரத்னம் சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனப்படுகொலையாளியுடன் கம்சாஜினி குணரத்னம் சந்திப்பு! 

நோர்வே வாழ் தமிழீழ மக்களின் வாக்குகாளால் ஒஸ்லோவில் அரசியலுக்கு வந்த கம்சாஜினி குணரத்னம் நேற்றைய தினம் இனப்படுகொலையாளிகளில் ஒருவரான மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

DwLwsi6VAAAxqZh.jpg

தமிழீழ மக்கள் வரலாறு காணாத சோகத்தைச் சுமந்து, அழுவதற்கும் விதி அற்றவர்களாக, நில மீட்பு போராட்டங்களை நடத்திக்கொண்டும், காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒருவருடமாக வீதியில் போராடியும் கொண்டு இருக்கும் இவ் வேளையில் கம்சாஜினி குணரத்னம் இனப்படுகொலையாளிகளில் ஒருவரான மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

நீயா தமிழனின் பிள்ளை?

சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! – நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! – அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! – அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! – அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!

-காசி ஆனந்தன்-

https://www.thaarakam.com

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் நிற்கும்போது மட்டும் ஈழப்பெண்... வென்று வந்தவுடன் நான் பொதுவானவன்....இவ வெளிக்கிட முன்னமே சொன்னவ வட- கிழக்கில் 3 சம்முகத்தையும் சந்திப்பன் என்றூ...இப்ப தலையே சந்திச்சிட்டா...ஒரு  சாதாரண்  உதவி மேயருக்கு உந்த கொழுப்பு...ம்தன் மந்திரி என்றால் ..எப்படி இருப்பா...கனடாவில் இப்படி பல பேர் இருக்கினம்...அதிலை ஒருத்தி படு பாதாளத்தில் விழுந்திட்டா...

54 minutes ago, குமாரசாமி said:

நோர்வே வாழ் தமிழீழ மக்களின் வாக்குகாளால் ஒஸ்லோவில் அரசியலுக்கு வந்த கம்சாஜினி குணரத்னம் நேற்றைய தினம் இனப்படுகொலையாளிகளில் ஒருவரான மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

தமிழினப் படுகொலைகாரர்களில் ஒருவரான மைத்திரியை சந்திக்கட்டும்; ஆனால்,
எதற்காக சந்தித்தார்?
எலும்புத் துண்டுக்கு அலையும் கேவலமான மனநிலையில் தமிழினப் படுகொலைகாரர்கள் வழமையாக வழங்கும் அன்பளிப்புகளைப் பெறுவதற்கு சந்தித்தாரா?
போர்க்குற்றவாளிகளை  சர்வதேச நீதிமன்றில் விசாரித்து தண்டிப்பது பற்றி வலியுறுத்த சந்தித்தாரா?
சரவணபவன் போல பிறந்தநாளில் கேக்வெட்ட அழைப்பு வழங்க சந்தித்தாரா?
இது போன்ற பல வினாக்களுக்கு தெளிவான பதிலைச் சொல்லவேண்டிய கடமை இவருக்கு உள்ளது.

மேலும்,
காணாமற்போனோர் சங்கத்தினரை ஏன் சந்திக்கவில்லை?
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதிப்படுத்திய முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்றவர்களை ஏன் சந்திக்கவில்லை?
ஒரு பெண்ணாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனந்தி சசிதரன் போன்றவர்களை ஏன் சந்திக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சந்தித்தார்? என்ன கதைத்தார்? என்று ஒன்னும் தெரியாது 
ஏன் இப்படி தலையங்கங்கள்/விமர்சனங்கள்? இப்படி முத்திரை குத்துகின்றோம்
 

10 hours ago, colomban said:

ஏன் சந்தித்தார்? என்ன கதைத்தார்? என்று ஒன்னும் தெரியாது 
ஏன் இப்படி தலையங்கங்கள்/விமர்சனங்கள்? இப்படி முத்திரை குத்துகின்றோம்
 

..30 வருடங்களுக்கும் மேலாக எல்லாரையும் துரோகி ஆக்கி, எல்லாரையும் எதிரியாக்கி, எல்லாரையும் விரோதித்து பழகிய பழக்கங்களை இலகுவாக கைவிட முடியாது அல்லவா?

இப்படி சொல்கின்றவர்கள் புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, போராட்டத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நாடுகளில் இருப்பவர்கள்.

ஆனால் உலகமும் சரி, ஊர் சனங்களும் சரி, இப்படியானவர்களை கிஞ்சித்தும் கணக்கெடுப்பதில்லை என்பது தான் சந்தோசம் தரும் விடயம்.

 

அவசரப்பட்ட பதிவுகள் மற்றும் ஊக அடிப்படையில் கருத்துக்களை முன்வைப்பதும், ஆயுதப் போராட்டத்தின் போது சில பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்து நிழல் அரசை நடத்திய காலத்தில் எழுதிய பாடலை இதனோடு தொடர்புபடுத்துவதும் மிக அபத்தமானது. இன்றய காலத்தில் சிங்களத்தின் முழு கட்டுப்பாட்டில் தமிழர்தேசம் முழுவதும் உள்ளது. ஒரு வெளிநாட்டு அரசின் அங்கமான தமிழ் பிரதிநிதி இலங்கை அரசை அலட்சியப்படுத்தி பாதிக்கப்பட்ட தமிழர்களை  நேரடியாக சந்திப்பது இரு நாடுகளுக்கு இடையில் பிரச்சனையை உண்டாக்கவல்லது. வாக்களித்தவர்களின் எதிர்பார்புபோல் நாடுகளின் சட்டதிட்டங்கள் இருப்பதில்லை. அரசியல் சூழல் இருப்பதில்லை. 

அதே நேரம் தாம் பதவிக்கு வந்தால் தாயக மக்களின் பிரச்சனைகளை பேசுவோம் என்றும் இதனடிப்படையில் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தமது சமூகத்தில் இருந்து ஒரு அரசியல் பிரதிநிக்கு வாக்களிப்பது தாயக மக்களின் துயருக்கு முடிந்தளவு குரலை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே. இவ்வாறான வாக்குகளை தமது அடயாள அந்தஸ்த்தை நிலைநாட்ட பயன்படுத்தும் சுயநலவாதிகளளை  நம்பிக்கைத் துரோகிகளாக வாக்களித்தவர்கள் விமர்சிப்பதுக்கும் உரிமை உண்டு. 

இவ்வாறான நிகழ்வுகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட நபர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்ததை தொடர்ந்து அவலப்பட்ட மக்களை சந்திக்கின்றாரா அவர்கள் பிரச்சனைகள் சார்நத கருத்துக்களை அவரது பதவிக்காலத்தில் தனது அதிகாரத்துக்கு உட்பட்டளவில் வெளிப்படுத்துகின்றாரா இல்லை அடயாள அந்தஸ்த்து தேடலுக்கு பயன்படுத்துகின்றரா என்பதை பொறுத்திருந்து பார்த்துதான் விமர்சனத்தை முன்வைக்க முடியும் தவிர ஒரு சந்திப்பை வைத்தல்ல. 

கனடாவைப் பொறுத்தவரை மக்கள் வாக்களித்து அரசியலுக்குள் நுழைந்தவர்கள் தாயக மக்களின் அவலத்திற்காக அரும்பணியாற்றியுள்ளார்கள், ஆற்றிககொண்டுமிருக்கின்றார்கள். கொட்டும் பனியிலும் வியர்வை சிந்தி உழைக்கின்றார்கள், உழைத்தார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்லோ நகர உதவி மேயர் கம்சாஜினி குணரத்னம் ஜனாதிபதி சிறிசேனவை சந்தித்தார்.

 
safe_image.jpg
நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரின் உதவி மேயராக இருக்கும் கம்சாஜினி குணரத்னம் ஜனாதிபதி சிறிசேனவை சந்தித்துள்ளார்.  ஜனாதிபதி செயலகத்தில் இந்நத சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  கம்சாஜினிக்கு ஜனாதிபதி சிறிசேனவினால் ஞாபகார்த்த அன்பளிப்பு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

கம்சாஜினியின் சிறிசேனவுடனான சந்திப்பை ஒரு சில சிங்கள இணையதளங்கள் தமிழ் டயஸ்போராவுடனான சிறிசேனவின் சந்திப்பு எனவும் வர்ணித்துள்ளன. குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் கம்சாஜினி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்ய இருப்பதாகவும் அறியவருகிறது.

நோர்வே நாட்டில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் நோர்வே தொழிலாளர் கட்சி சார்பாக அதன் தலைநகர் ஒஸ்லோவில் போட்டியிட்டு துணை மேயராக இலங்கையரான கம்சாஜினி தெரிவாகியது குறிப்பிடத்தக்கது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நிழலி said:

..30 வருடங்களுக்கும் மேலாக எல்லாரையும் துரோகி ஆக்கி, எல்லாரையும் எதிரியாக்கி, எல்லாரையும் விரோதித்து பழகிய பழக்கங்களை இலகுவாக கைவிட முடியாது அல்லவா?

இப்படி சொல்கின்றவர்கள் புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, போராட்டத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நாடுகளில் இருப்பவர்கள்.

ஆனால் உலகமும் சரி, ஊர் சனங்களும் சரி, இப்படியானவர்களை கிஞ்சித்தும் கணக்கெடுப்பதில்லை என்பது தான் சந்தோசம் தரும் விடயம்.

 

அது பாதிக்கப்பட்டவர்களின் ஒரு சாதாரண எதிர்ப்பு செய்தி அல்லது கருத்தாகவும் இருக்கலாம்.
நீங்கள் 30 வருடங்களுக்கு மேலாக என்று விழித்ததை ஆயுத போராட்டகாலங்கள் என  நினைக்கின்றேன்.
நீங்கள் குறிப்பட்ட அந்த 30 வருடங்களுக்கு முன் தமிழ் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?  

இன்றைய அரசியல் சுகமாக தெரியும் போது....பொறுமை வேண்டும் என தெரியும் போது ஏன் அன்று தமிழ் மக்களிடம் இனவிரோத எழுச்சிகளை மக்களிடம் விதைத்தீர்கள்.படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள் என்று சொல்லித்தானே மக்கள் உங்களைப்போன்றவர்களை தேர்ந்தெடுத்தார்கள்.

இன்று அதற்கு நன்றிக்கடன் புலம்பெயர் தீவிரவாத தமிழர் பட்டம்.
இனக்கலவரங்கள் வந்த போதும் தமிழ்மக்கள் மோட்டுச்சிங்களவன் என்று சொல்லியே செல்வச்செழிப்பாகத்தானே வாழ்ந்தார்கள் ....
 

பாதிக்கப்பட்டவர்களின் அவதிகள் பாதிப்புகளை ஒரு குப்பையில் போட்டு விடுவோம்.
2009 க்கு பின் இதுவரைக்கும் அரசியல் ரீதியாக என்ன முன்னேற்றங்கள் நடந்துள்ளன? அல்லது பொருளாதார ரீதியாக தமிழர் பிரதேசத்தில் எப்படி என்ன நடந்துள்ளது?

ஏ9 வீதி அபிவிருத்தி,அகலமாக்கல்   கணக்கிலெடுக்கப்பட மாட்டாது. ஆமி பெண் பிள்ளைகளுடன் சகவாசமாக பழகுவதையும் ஏற்க முடியாது

புலிகளை பயங்கரவாதிகள் என்று குத்தினால் ஏன்  அவர்களுடன் இவ்வளவு பேச்சுவார்த்தைகள் நடந்தது? ஒவ்வொரு பேச்சுவார்தையின் முடிவிலும் எரிக் சோல்கைம் டெல்லிக்கு சென்று வந்தது ஏன்?

ஒவ்வொரு முறையும் எமக்குள் நாமே எம்மை தாழ்த்தி மற்றவனுக்கு மிண்டு கொடுப்பது சம்பிரதாயமாக போய் விட்டது. இதில் தப்பி பிழைப்பவர்கள் எமது தமிழ்  அரசியல்வாதிகள் மட்டுமே.

தமிழினம் கழுத்தளவு தண்ணிரில் நிற்பது சிங்களத்திற்கும் கிந்திக்கும் சந்தோசம். அதை கிஞ்சித்தும் பார்க்காத உங்களுக்கும் சந்தோசம் என்றால் விதியை யாரால் மாற்ற முடியும்.

சிங்களம் ஒரு காலமும் தன்னிலை மறந்தும் தன்னை மறவாது,மாற்றாது என்பதற்கு சான்று...

 

  • கருத்துக்கள உறவுகள்

சரி பாவம், அவர்களைத் திட்டவாவது விடுங்கள்! ஊரில் தேர்தலில் எதுவும் செய்ய முடியாது, வெளிநாட்டிலும் ஒன்றும் செய்ய இயலாது! எல்லா இடத்திலும் ஓரங்கட்டப் படுகிறார்கள்! இதையாவது செய்யட்டும்! 

1 hour ago, Justin said:

சரி பாவம், அவர்களைத் திட்டவாவது விடுங்கள்! ஊரில் தேர்தலில் எதுவும் செய்ய முடியாது, வெளிநாட்டிலும் ஒன்றும் செய்ய இயலாது! எல்லா இடத்திலும் ஓரங்கட்டப் படுகிறார்கள்! இதையாவது செய்யட்டும்! 

 

ஈழத் தமிழர் ஒப்பீட்டளவில் சிறு சமூகமாக இருந்தாலும் அச் சமூகம் இயங்கும் அரசியல் தளம் பல்வேறானது. ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு வகையான பலம் உண்டு. தாயகத்தில் நடந்த கடந்த இரு மாவீரர் தினமும் எந்த ஒரு அரசியல் கட்சிகள் மற்றும்  செயறபாடடாளர்களின் உந்துதலின் பின்னணியில் மக்கள் ஒன்றுதிரளவில்லை. ஒன்று திரண்ட மக்கள் சக்தியோடு அரசியல் செயற்பாட்டாளரகள் ஒட்டிக்கொண்டார்கள். வேறு வழியில்லை. முள்ளிவாய்க்கால் ஒன்று கூடலில் பல்கலைக் கழகமும் அரசியல் செயற்பாட்டாளர்களும் ஒட்டிக்கொண்டதும் தலமை தாங்க முற்பட்டதும் மக்கள் திரட்சிக்கு பின்னால் தவிர அவர்கள் ஒன்று கூடலுக்கு மக்களை திரட்டவில்லை. அவ் மக்கள் சக்தியே பிரதானமானது. ஆனால் அவர்களுக்கும் கூட்டமைப்பு அரசியல்வாதிகளுக்கும் இடையில் அந்நியோன்ய உறவு கிடையாது இதற்கு மேட்டுக்குடி மனோபாவம், பூசுவாத்தனம், ஆட்சியாளர்களை அண்டிப்பிழைக்கும் பாரம்பரியம் என பல அடிப்படைக் காரணங்கள் எப்போதும் இருக்கின்றது. மக்களும் இவர்களால் தாம் விடுதலை பெறுவோம் என்று நம்பி வாக்களிப்பதில்லை வேறு தெரிவற்ற நிலையில் வாக்களிக்கின்றார்கள். புலம்பெயர் தேசத்தில் பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் நீங்கள் மேலே குறிப்பிட்ட திட்டுபவர்கள் சார்ந்த பிரிவே பலமானது. அவர்களின் வாக்குகள் இன்றி புலம்பெயர் தேசங்களில் யாரும் அரசியல் பதவிகளை அடய முடியாது அதே நேரம் பல்வேறு விதமானவர்கள் தாயக மக்களுக்கு உதவி செய்தாலும் இப் பிரிவினரே அதிக உதவிகளை செய்தவர்களாக எக்காலத்திலும் இருப்பார்கள். 

போராட்டத்தில் நேரடியாக பங்குபெற்றவர்கள் தாயகத்தில் இருந்து அதற்கு தோழ்கொடுத்தவர்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்து ஆதரித்தவர்கள் இவர்களே ஈழத்தமிழரின் நிரந்தர பிரதான அரசியல் சக்தி. இச் சக்தியை பயங்கரவாதமாக்க  நேற்று கதிர்காரமர் பாடுபாட்டதானாலும் சரி இன்று புலம்பெயர் தீவிரவாதத் தமிழர் என்று சுமந்திரன் சம்மந்தன் முக்குவதானாலும் சரி அது பேரினவாதத்திற்கு சார்பானதேயன்றி தமிழர்நலன் சார்ந்தது இல்லை ஏனெனில் இவ்வாறான பிரிவினை விதைப்பு  அவசியங்களும் தேவைகளும் பேரினவாதத்திற்கே உள்ளது தவிர தமிழர்களுக்கு இல்லை. 

பிரித்தாளும் சதிகள் எமக்கு புதியவையில்லை. இயக்கங்களுக்கு இடையில் இந்திய ஆதிக்கம், கதிர்காரமர் வகையறா புரட்டஸ்தாந்து மற்றும் மேட்டுக்குடிகளுக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் இடையிலான பிரிவினையில் பேரினவாத ஆதிக்கம், இந்து இஸ்லாம் பிரிவினை, வடக்கு கிழக்கு பிரதேசவாத பிரிவினை, இவ்வாறான பல பிரிவினைகளின் நீட்சியிலேயே புலம்பெயர் தமிழர் தாயகத்தமிழர் என்பதும் வருகின்றது. அரசின் இராணுவ வெற்றிகளும் வெலியோயா திட்டத்தின் ஊடாக வடகிழக்கு துண்டிப்பு தொடக்கம் தீவகங்கள் யாழ் தொடர்பு துண்டிப்பு , வன்னியாழ் தொடர்பு துண்டிப்பு வன்னி கிழக்கு தெடர்பு துண்டிப்பு என்ற புவியியல் அடிப்படையிலான பிரித்தாளும் யுத்திகளூடாகவே அமைந்தது. 

தமிழர்களை அரசியல் ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் எவ்வளவு சிதைக்க முடியுமோ அவ்வளவு சிதைக்கின்றனர். அதன் பிறகு தனிநாடு என்ன சமஷ்டி மாகாண சபை மாவட்ட பஞ்சாயத்து அதிகாரம் என எதற்கும் அவசியம் இருக்காது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.