Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு : சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
February 3, 2019

sumanthiran.jpg?zoom=1.5625&resize=715%2

இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நாளைய தினம் தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள சுதந்திரதின எதிர்ப்பு நிகழ்வுகளை நிராகரிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டித்து, தமிழ் மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ள அதேவேளை பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு இணங்க அனைவரும் கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சுதந்திரதினத்தை துக்க நாளாக கொண்டாடி, தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தப் போவதாக கேப்பாபுலவு மக்கள் அறிவித்துள்ளனர். தமது வாழிடங்கள், வாழக்க்கையை அரசாங்கம் பறித்துக்கொண்டு, தமது நிலங்களில் இராணுவத்தினர் வாழ்க்கையில், தமக்கு அது எவ்வாறு சுதந்திரதினமாக இருக்கும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இந்த எதிர்ப்புக்கள் தொடர்பில் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தேசிய உணர்வுகளை வைத்துக் கொண்டே இலக்குகளை வெற்றி கொள்ள வேண்டும் எனவும் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2019/112070/

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் 4 லட்சம் ரூபா கடன்- மஹிந்த

mahinda-amaraweera

இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு சிறு குழந்தையையும் 4 லட்சம் ரூபா கடனாளியாக காணப்படுவதாகவும், இதனால் மக்கள் இன்னும் முழுமையாக சுதந்திரம் அடையவில்லையெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபலஸ்ஸ, அபேசேகரகமவில் இன்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

மக்கள் சுதந்திரமடையாத நிலையில் இருக்கும் போது, தான் நாளைய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் இருந்த எந்தவொரு அரசாங்கத்துக்கும் மக்களின் பிரச்சினைகளை சரியாக விளங்கிக் கொள்ள முடிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. அவ்வாறு புரியப்பட்டிருந்தால் நாடு இவ்வாறு பாரிய வீழ்ச்சி நிலைக்குச் சென்றிருக்காது. சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆகின்றன.

நாம் வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்தோம். வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற சுதந்திரத்தை கறுப்பு வெள்ளைக்காரனிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டோம். வெள்ளையர்களின் காலத்தை விடவும் மக்கள் தற்பொழுது சில துறைகளில் வீழ்ச்சியடைந்துள்ளனர். நாட்டின் தேசிய வருமானம் கடனைச் செலுத்த போதாத நிலைக்கு மாறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

http://www.dailyceylon.com/177028

5 hours ago, பிழம்பு said:

இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டித்து, தமிழ் மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ள அதேவேளை பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு இணங்க அனைவரும் கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சுதந்திரதினத்தை துக்க நாளாக கொண்டாடி, தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தப் போவதாக கேப்பாபுலவு மக்கள் அறிவித்துள்ளனர். தமது வாழிடங்கள், வாழக்க்கையை அரசாங்கம் பறித்துக்கொண்டு, தமது நிலங்களில் இராணுவத்தினர் வாழ்க்கையில், தமக்கு அது எவ்வாறு சுதந்திரதினமாக இருக்கும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

5 hours ago, பிழம்பு said:

இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நாளைய தினம் தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள சுதந்திரதின எதிர்ப்பு நிகழ்வுகளை நிராகரிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

1948 முதல் திட்டமிட்ட தமிழின படுகொலைகளை தமிழின அழிப்புக்களை அரங்கேற்றிவரும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்திற்கு ஊழியம் செய்யும் ஒருவரே சுமந்திரன் என்பதை நிரூபிக்கும் கூற்று!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DyfsHELV4AAWl1j.jpg:large

  • கருத்துக்கள உறவுகள்

அமைதியாக இருந்திருக்கலாம் ..

Screenshot-3.png

இதற்கு பேர்தான் வாண்ட்டா வந்து வண்டில ஏறுவது .

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தென்மராட்சி கூட்டத்தின் பரிதாப காட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே வாக்குப்பாேட்டு வெத்திலை பாக்கு வைச்சு சுமந்திரனை தங்கள் பிரதிநிதியாக காெண்டு வந்தார்கள் எண்டு கனபேர் கதைவிட்டினம், இப்ப சுமந்திரனுக்கும் மக்களுக்கும் இடையில்உள்ள தூரம் வெகு தூரம். தன் மக்களின் தேவை என்ன, வேணவா என்ன என்று தெரியாமல் சிங்களவனுக்கு சாெறிவதே இலட்சியமாக காெண்டதெல்லாம் மக்கள் பிரதிநிதியாம். தமிழரை முட்டாள்களாக்குவதற்கென்றே சிங்களவனால் தமிழருக்குள் புகுத்தப்பட்ட முகவரே சுமந்திரன் என்பதை  ஏற்க இன்னும் பலர் மறுக்கிறார்கள். 

1 hour ago, satan said:

இரத்தினச் சுருக்கமாக சுமந்திரன்டை சுயரூபத்தை கூறியுள்ளீர்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.